• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • தண்ணியில் விழுந்ததாக கூறினாலும் யன்னலால் பக்கத்து அறைக்கு தாவும் போதே விழுந்ததாக கூறினார்கள்.பக்கத்து அறை யாரோ பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாம். எனினும் இந்த செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.
    • -க. அகரன் “தலை முழுகுற அளவுக்கு நிலைமைகள் மாறும்” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வொன்று, இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில்  நடைபெற்றது. இந்‌நிகழ்வில்‌  கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இப்பொழுது தேர்தல் முடிந்திருக்கிறது. இந்த நாட்டிலே இரண்டு சமூகங்கள் வேறு  வேறு நிலைப்பாட்டை கொண்டவர்களாக  இருக்கிறார்கள். ஒன்று பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவருக்கு தமிழ் சமூகம் தேசிய இனம் வாக்களித்தது. “அதே நேரத்திலே பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவருக்கு சிங்கள தேசம் வாக்களித்தது. நாங்கள் இனத்துவேசம் கொண்டவர்கள் அல்ல என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். “நாங்கள் எங்களுடைய தேசத்திலே நடைபெற்ற அத்தனை பிரச்சனைகளையும்  மறக்க முடியாத வடுக்களாக எங்களுடைய நெஞ்சங்களிலே நாங்கள் இன்றைக்கும் சுமந்திருக்கிறோம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலிலே நீங்கள் அச்சப்படத்தேவையில்லை. “தேர்தல் முடிந்து என்ன நடக்கும் என்ற ஒரு அச்சத்தோடு நாங்கள் எங்களுடைய மக்கள் வாழுகிறார்கள். அச்சப்பட வேண்டாம். அச்சப்படத்தேவையில்லை. “எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தவர்கள் நாங்கள். எவ்வளவு வடுக்களை இன்றைக்கும் சுமந்து கொண்டு இருக்கின்ற இனம் எங்களுடைய இனம். தமிழ் பேசுகின்ற இனம். ஆகவே, அந்த நிலைக்கும் அதுக்கு மேல் தலை முழுகுற அளவுக்கு நிலைமைகள் மாறும்” எனவும் அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/வன்னி/தலை-முழுகுற-அளவுக்கு-நிலைமைகள்-மாறும்/72-241378
    • ’எத்தடைகள் வந்தாலும் எமது இலக்கும் பணிகளும் தொடரும்’ -எஸ்.றொசேரியன் லெம்பேட் மாவீரர் மற்றும் போராளிகளின் குடும்பங்களுக்கு மன்னார் நகர சபையின் தலைவரினால் சலுகைகள் மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கப்படுவதாகவும், குறித்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரி 'இலங்கையன்' எனும் பெயரில் கடிதம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மன்னார் நகர  முதல்வர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தெரிவித்தார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மன்னார் நகர சபையில் தற்போது மாவீரர் மற்றும் போராளிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிகலவான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாக அறிகின்றோம். சிறுவர் பூங்கா உட்பட பல பொது இடங்களில் புலிகளின் தேசிய கலரான சிவப்பு, மஞ்சல் பூசப்பட்டுள்ளது. “மன்னார் மக்கள் வங்கிக்கு பின் புறமாக தற்போது கட்டப்பட்டு வரும் கடைகளில் பல கடைகள், மாவீரர் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன. “இவ்வாறான செயல்கள் இனியும் தொடரக் கூடாது.மாவீரர் மற்றும் போராளி குடும்பங்களுக்கு சலுகைகள் மற்றும் அன்பளிப்புகள் முன்னுரிமைகள் அளிக்கப்படக்கூடாது. நிறுத்தப்பட வேண்டும். “உங்களுக்குறிய அரச கடமையை மட்டும் சரியாக செய்யவும்.உங்கள் அனைவரையும் பற்றி தகவல்கள் சேகரிக்கப்படுகின்றது” என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தெரிவிக்கையில், “மக்களுக்கான பணிகளை நாங்கள் நேர்மையாகவும், கன்னியமாகவும், கட்டுக்கோப்புடனும் மேற்கொண்டு வருகின்றோம்.நாங்கள் எந்தவித அச்சுருத்தல்களுக்கும் அடி பணியப் போவதில்லை. எத்தடைகள் வந்தாலும் எமது இலக்கும்,எமது பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/வன்னி/எத்தடைகள்-வந்தாலும்-எமது-இலக்கும்-பணிகளும்-தொடரும்/72-241377
    • -எஸ்.நிதர்ஷன் யாழ். இராமநாதன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி கமலராணி கிருஸ்ணபிள்ளையின் மணி விழா நிகழ்வு, இன்று காலை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி ஊமாவதி ரவிகரன் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது, “கமலம்” எனும் மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சொஞ்செற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் வாழ்த்துரையை வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் யாழ். பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/jaffna/71
    • தமிழ்மக்கள் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு அமைய இனியாவது சிந்திக்க வேண்டும் என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (22) விடுத்துள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த ஜனாதிபதித்தேர்தல், தமிழ்மக்களுக்கு ஒரு படிப்பினையைத் தந்துள்ளது. 30வருடகால யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள், இறுதியுத்தம் நடந்த நேரத்தில் நடந்தேறிய அவலங்கள், தொடர்ந்து யுத்தம் நடந்து முடிந்து 10வருடங்ளுக்கு மேலாகியும் எமது மக்களின் அபிலாசைகள், எதிர்பார்ப்புகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் போன்றவற்றில் நாம் கண்ட பலாபலன்கள் என்ன? ஏன் எதுவும் முறைப்படி நடக்கவில்லை! இனியாவது சிந்திப்போமா? “எமது மக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட மாறிமாறிவந்த அரசுகளால் தட்டிக் கழிக்கப்பட்டன. சர்வதேச சமூகம் கண்டுகொள்ளவேயில்லை. இவைகளை முறைப்படி தட்டிக்கேட்பதற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனநாயக அமைப்பு கிடையாது என்பதே முக்கியமான காரணமாகும். “2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் நியமனப் பத்திரத்தைக் கையளிக்கும்போது, விடுதலைப் புலிகளின் சார்பிலேயே கையளிக்கின்றோம் என திருவாளர். சம்பந்தன் திருவாய் மலர்ந்தருளினார். அதன்மூலம் விடுதலைப் புலிகள் ஜனநாயக அமைப்புக்குள் வந்தார்களா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டதா? என்பது இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஒரு குழப்பமான நிலையை உருவாக்கிவிட்டது. “2004 - 2009 வரை இறுதியுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் நடந்த படுகொலைகள், ஆள்கடத்தல்கள், சிறுவர்களை யுத்தத்தில் இணைத்தல் போன்றவற்றில் கூட்டமைப்பு பாராமுகமாய் இருந்தது. அதுமட்டுமல்ல அதில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 40,000 சவப்பெட்டிகளை வடக்கிலிருந்து அனுப்புவோம் எனக் கூறியிருந்தார். இவைகளை கூட்டிக்கழித்து கணக்குப் போட்ட சர்வதேச சமூகமும், இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உள்வாங்கப்பட்டு அவர்களின் கொள்கைகளுக்கு ஏதுவாக செயற்படுகிறார்கள் என்ற முடிவுக்கு வந்தன. “அதனால்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டபோது, கூட்டமைப்பின் குரல்கள் விடுதலைப் புலிகளின் குரல்களாகவே சர்வதேச சமூகத்தாலும் இலங்கை அரசாலும் பார்க்கப்பட்டன. இல்லாவிடில் 1987ஆம் ஆண்டு வடமாராட்சித் தாக்குதலின்போது பதவிகளைத் துறந்துவிட்டு வெறுமனேயிருந்த அமரர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் குரலுக்கு செவிசாய்த்து அன்றைய இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடியாக விமானத்தில் உணவுப்பொதிகளை வழங்கி தமிழர்களுக்கு நாங்கள் இருக்கின்றோம் என்று உதவிக்கு வந்தன. ஆனால், இந்திய அரசு முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது கண்டும் காணாமல் இருந்தது ஏன்? தமிழர் விடுதலைக் கூட்டணியின் குரல் ஒரு ஜனநாயக குரலாக பார்க்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குரல் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு அமைப்பின் குரலாகவே பார்க்கப்பட்டது இதுவே யதார்த்தமான உண்மை!  “2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 49மூ% சிங்கள மக்கள் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் சமஷ்டி முறையான அமைப்பை ஏற்று ஆதரவாக வாக்களித்தார்கள். அன்று கூட்டமைப்பு தமிழ்மக்களை வாக்களிக்காது தடுத்து, பகிஷ்கரிக்க கோரியது தமிழ் மக்களுக்குச் செய்த மிகப் பெரிய துரோகமும் வரலாற்றுத் தவறுமாகும். “2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளை பூண்டோடு அழித்து விட்டேன் என்று கொக்கரித்த சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்கக்கோரி தமிழ் மக்களுக்கும், தங்களின் தியாகங்கள் மூலம் பதவிகளை பெற்றுக் கொடுத்த விடுதலைப் புலிகளுக்கும் மீண்டும் துரோகம் செய்தார்கள். “2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நல்லிணக்க அரசில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்டு அளவுக்கு மிஞ்சிய சலுகைகளை அனுபவித்துவிட்டு, தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்யாது மைத்திரிபால சிறிசேனா எங்களை ஏமாற்றிவிட்டார் என்று சோரம்போனார்கள்! “2019ல் சஜித் பிரோமதாசாவுக்கு வாக்களிக்கக்கோரி, வீர வசனங்கள் பேசி, அன்று சமஷ்டியை ஏற்று வாக்களித்த சிங்கள மக்கள், நாம் இனி எவருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று ஒரு பக்கம் சார்ந்து வாக்களித்து விட்டார்கள். இதன்மூலம் தமிழ்மக்களை மேலும்மேலும் அனாதைகள் ஆக்கி நட்டாற்றில் விட்டுவிட்டார்கள். இதுதான் கூட்டமைப்புச் செய்த இமாலய சாதனை! இனியாவது சுயநலம் கொண்டு பதவிகளுக்காக சோரம்போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வார்த்தை ஜாலங்களுக்கு மயங்காது, அனைவரும் சிந்தித்துச் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்” என்று  அவருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/தமழ-மககள-சநதககவணடம/175-241373