Jump to content

மம்தா பானர்ஜியினால் மாத்திரமே நாட்டை வழிநடத்த முடியும்: குமாரசாமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mamtha-720x450.png

மம்தா பானர்ஜியினால் மாத்திரமே நாட்டை வழிநடத்த முடியும்: குமாரசாமி

நாட்டை வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு உள்ளதென கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே குமாரசாமி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“மம்தா பானர்ஜி மிக எளிமையாகவும், சிறந்த நிர்வாகியாகவும் காணப்படுகின்றார். அந்தவகையில் நாட்டை தலைமை தாங்கி வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் அவரிடம் இருப்பதாக நம்புகிறேன்.

மேற்கு வங்காளத்தில் என்றுமில்லாதளவு சிறந்த ஆட்சியை நடத்தி, மம்தா பானர்ஜி அதனை நிரூபித்துள்ளார்.

இதேவேளை தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த பாரிய கூட்டணி, தேசிய கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும். இதனை நடைபெறவுள்ள தேர்தலில் அவதானிக்க முடியும்” என குமாரசாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://athavannews.com/மம்தா-பானர்ஜியினால்-மாத்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.