Jump to content

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி: தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி: தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.

முதலாவது போட்டியில் தோல்வியடைந்த தென்னாபிரிக்க அணி நேற்றைய (செவ்வாய்க்கிழமை) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு கட்டத்தில் அவ்வணி 112 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தபோது 9ஆவது விக்கெட்டுக்காக அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹமட்டுடன் இணைந்த பந்து வீச்சாளர் ஹசன் அலி அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த ஓட்ட பிரதியை பதிவு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

சொந்த மண்ணில் 204 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு இலகுவானதாக இருந்த போதும் அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் 18 வயது இளம் வேகப் பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி 29 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி தென்னாபிரிக்க அணியை நிலைகுலையச் செய்தார்.

ஆனால், தொடர்ந்து அபாரமாக விளையாடிய தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமப்படுத்தப்பட்டது. தொடரின் மூன்றாவது போட்டி நாளைமறுதினம் நடைபெறவுள்ளது.

 

http://athavannews.com/பாகிஸ்தானுக்கு-எதிரான-2ஆ/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.