Jump to content

நியுசிலாந்தை வீழ்த்தி இலகுவாக வெற்றியினை சுவைத்தது இந்தியா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்தை வீழ்த்தி இலகுவாக வெற்றியினை சுவைத்தது இந்தியா!

dm_190123_INET_CRIC_highlight_NZ_v_IND_1st_ODI_Yadav_catch_US_ONLY.jpg

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய நியுசிலாந்து அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 157 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கட்டுக்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கட்டுக்களையும், சஹால் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர். துடுப்பாட்டத்தில் நியுசிலாந்து அணி சார்பில் அணித்தலைவர் வில்லியம்சன் அதிகபட்சமாக 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 158 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. இதன்போது 10 ஓவர் வீசப்பட்டிருந்த நிலையில் சூரிய ஒளியால் போட்டி அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்திய அணிக்கு 49 ஓவரில் 156 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ரோகித் சர்மா 11 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தவான் அரைசதம் அடிக்க, இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை 132 ஆக இருக்கும்போது விராட் கோலி 45 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்தியா 34.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்று 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி பெற்றிருந்தது.

6 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகனாக தெரிவானார்.

இதன்போது இந்திய அணி சார்பில் இரண்டு புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன. நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஆட்டமிழக்கச் செய்தார். இதன்போது நியூசிலாந்து வீரர் மார்டின் குப்திலின் விக்கட், முகமது சமிக்கு 100-வது விக்கட்டாக அமைந்திருந்தது.

இதன் மூலம், குறைந்த போட்டியில் 100 விக்கட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை முகமது சமி பெற்றுள்ளார். தனது 56-வது ஒருநாள் போட்டியில் முகமது சமி 100-வது விக்கட்டை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக, 59 ஒருநாள் போட்டிகளில் இர்பான் பதான், 100 விக்கட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. ஜாகீர் கான் 65 போட்டிகளில் 100 விக்கட்டை எட்டியிருந்தார்.

அதேபோன்று  தவான் இந்த போட்டியில் 10 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஐயாயிரம் ஓட்டங்களை கடந்திருந்தார். 19 ஒருநாள் போட்டியில் 118 இன்னிங்சில் தவான் ஐயாயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் ஐயாயிரம் ஒட்டங்கள் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாராவுடன் இணைந்து பெற்றார்.

ஹசிம் அம்லா101 இன்னிங்சிலும், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் விராட்கோலி ஆகியோர் 114 இன்னிங்சிலும் ஐயாயிரம் ஓட்டங்களை இதற்கு முன்னர் கடந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/நியுசிலாந்தை-வீழ்த்தி-இல/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.