யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பிழம்பு

கறிவேப்பிலை சட்னி

Recommended Posts

1548330553-1181.jpg
 
 
கறிவேப்பிலை துவையல் இட்லி, தோசை, உப்புமா, மற்றும் பணியாரம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். தவிர சூடான சாதத்துடன்  இதனை கலந்து நெய் விட்டு சாப்பிடலாம். மேலும் கறிவேப்பிலை துவையல் தயிர்சாதத்துடன் சுவையாக இருக்கும்.
 
தேவையான பொருட்கள்:
 
கறிவேப்பிலை - 1 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வர மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
 
செய்முறை:
 
வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும். பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும்.
 
பின்னர் நன்கு கழுவிய கருவேப்பிலையை சேர்த்து வறுக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். சிறிய துண்டு புளி கலந்து  அடுப்பை அணைத்து விடவும்.
 
ஆறவைத்த கலவையை உப்பு சேர்த்து  மிக்ஸியில் மைய அரைக்கவும், மிகவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து துவையலுடன் கலந்து இட்லி, தோசை, அல்லது சாதத்துடன்  பரிமாறலாம்.

Share this post


Link to post
Share on other sites

க...கா.... க..... கறிவேப்பிலை

இதுக்கு செலவளிக்கிற காசுக்கு, ஒரு நல்ல நகை, நட்டை வாங்கிப் போடலாம். 

Share this post


Link to post
Share on other sites

அநேகமாக சட்னியில் கறிவேப்பிலையை வதக்கி சேர்ப்பதுண்டு பக்கவாத்தியமாக ,  அதுவே மெயினாக வந்தால் சாப்பிடுவது கொஞ்சம் சிரமம்தான்.....!  😁

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, பிழம்பு said:

கறிவேப்பிலை துவையல்

என்ரை தகுதிக்கும் வருமானத்துக்கும் கறிவேப்பிலைக்கு பதிலாய் கொத்தமல்லி கீரையை பாவிச்சு பாக்கலாமெண்டு பிளான் பண்ணியிருக்கிறன்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு