Jump to content

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: விண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: விண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள்

Eng-720x450.jpg

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் விண்டீஸ் அணி, எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ஓட்டங்களை பெற்றுள்ளது.

விண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, பிரிட்ஜ்டவுனில் நேற்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று விண்டீஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

போட்டியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய பிராத்வைட் மற்றும் அறிமுக வீரர் கேம்ப்பெல் ஆகியோர் முறையே 40, 44 என்ற ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அதேபோல் ரோஸ்டன் சேஸ் 54 ஓட்டங்களையும், ஹெட்மையர் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும் விளாசினர்.

இவ்வாறாக முதல்நாள் ஆட்ட நிறைவில் விண்டீஸ் அணி 89.2 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்களை பெற்றது. ஹெட்மையர் 56 ஓட்டங்களுடன் தொடர்ந்தும் களத்தில் உள்ளார்.

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் அண்டர்சன் 4 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

 

http://athavannews.com/இங்கிலாந்துக்கு-எதிரான-ம/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.