Jump to content

90 ஓட்டத்தால் பணிந்தது நியூஸிலாந்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

90 ஓட்டத்தால் பணிந்தது நியூஸிலாந்து!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

india.jpg

இன்று காலை 7.30 மணிக்கு நியூஸிலாந்தின், மவுண்ட் மன்கன்யில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 324 ஓட்டங்களை பெற்றது.

325 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணியின் முதல் விக்கெட் 23 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. அதன்படி மார்டீன் குப்டீல் 15 ஓட்டத்துடன் புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்காக அதை் தலைவர் களமிறங்கி முன்றோவுடன் ஜோடி சேர்ந்தாட நியூஸிலாந்து அணி 8 ஆவது ஓவருக்காக மெஹாமட் ஷமி பந்துப் பறிமாற்றம் மேற்கொள்ள வில்லியம்சன் அந்த ஓவரில் 2 ஆறு ஓட்டங்களையும் ஒரு நான்கு ஓட்டத்தையும் விளாசித் தள்ளினார். 

எனினும் அவர் அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் நியூஸிலாந்து அணி 7.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து ரொஸ் டெய்லர் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க முன்ரோ 14.1 ஆவது ஓவரில் 31 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, டொம் லெதம் ஆடுகளம் நுழைந்தாட நியூஸிலாந்து அணி 17 ஓவர்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து நிலையில் 100 ஓட்டங்களை பெற்றது.

இதன் பின்னர் நியூஸிலாந்து அணியின் விக்கெட்டுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக சரிய ஆரம்பிக்க நியூஸிலாந்து அணி 166 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது.

டெய்லர் 22 ஓட்டத்துடனும், டொம் லெதம் 34 ஓட்டத்துடனும், கொலின் டி கிராண்ட்ஹாம் 3 ஓட்டத்தையும், ஹென்றி நிக்கோலஷ் 28 ஓட்டத்தையும், ஈஷ் சோதி எதுவித ஓட்டமுமின்றி ஆட்டமிழந்தர்.

இந் நிலையில் 8 ஆவது விக்கெட்டுக்காக பிரிக்வெல் மற்றும் லொக்கி பெர்கசன் ஜோடி சேர்ந்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கை விடாது போராட நியூஸிலாந்து அணி 39 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 224 ஓட்டங்களை குவித்தது.

nz.jpg

எனினும் 39.2 ஆவது ஒவரில் பிரிக்வெல் 57 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க 40.2 ஆவது ஓவரில் லொக்கி பெர்கசனும் 12 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக நியூஸிலாந்து அணி 40.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 90 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் இந்திய  அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர் குமார், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், கேதர் யாதவ் மற்றும் மெஹாம் ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 

http://www.virakesari.lk/article/48776

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் ஒவ்வொரு தொடர்களையும் ஒரே திரியில் பகிரலாமே? IND VS NEW, AUS VS SRI, ENG VS WI.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

கிரிக்கெட் ஒவ்வொரு தொடர்களையும் ஒரே திரியில் பகிரலாமே? IND VS NEW, AUS VS SRI, ENG VS WI.

நான் இதை ஆமோதிக்கிறேன் , ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னார் ஏராளன்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கிரிக்கெட் ஒவ்வொரு தொடர்களையும் ஒரே திரியில் பகிரலாமே? IND VS NEW, AUS VS SRI, ENG VS WI.

அப்படியும் செய்யலாம். ஆனால் விளையாட்டுச் செய்திகள் முகப்பில்  வரவேண்டுமென்றால் புதிய தலைப்பு தொடங்கவேண்டும். முகப்பில் வந்தும் இப்போது விளையாட்டுச் செய்திகளை வாசிப்பவர்கள் குறைவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபண்ணா கருத்துகளத்தில பின்னூட்டம் போட போட முன்னுக்கு வருதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/29/2019 at 6:10 AM, ஏராளன் said:

கிருபண்ணா கருத்துகளத்தில பின்னூட்டம் போட போட முன்னுக்கு வருதே?

 விளையாட்டுச் செய்திகளுக்கு கருத்து வைப்பவர்கள் குறைவு.  செய்திகளைத்தான் பின்னூட்டமாக வைக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மொத்தமாக 90 ஓட்டங்கள் எடுத்து பெரும் தோல்வியை சந்தித்துள்ளதே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.