Jump to content

அதிமுக கோட்டையில் விழுகுது பெரிய ஓட்டை .!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க.வின் கோட்டையில் விழுது பெரும் ஓட்டை...! வெடித்துக் கிளம்பும் எதிர்ப்புகள், மூச்சு திணறும் முதல்வர்கள்..!!

edappadi-palanisamy-and-co.jpg

யுத்தத்தில் பிரம்மாஸ்திரம் மிக மிக முக்கியமானது. எல்லாம் இழந்த நிலையில் கடைசி அஸ்திரமாக ஏவப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்து, வெற்றியை நிலைநாட்டிட உதவும் ஆயுதம் இது.

அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரமாக இருந்தது ‘கொங்கு மண்டல தொகுதிகள்’தான். தெற்கு, வடக்கு, டெல்டா என மற்ற பகுதிகளில் பல இடங்களை இழந்திருந்தாலும் கூட, கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் கிடைத்த பெரும் வெற்றிதான் அந்த கட்சியை மீண்டும் அரியணையில் உட்கார வைத்தது மட்டுமில்லாமல், தொடர்ந்து அரசியல் ஆதிக்கம் செலுத்திடவும் வைத்துக் கொண்டிருந்தது.

கொங்கு மண்டல மாவட்டங்களில் இருக்கும் செல்வாக்கை நினைத்துத்தான் யாரையும் எதிர்க்கும் கெத்தும் அ.தி.மு.க.வுக்கு வந்தது. இந்நிலையில் அடிமடியிலேயே கை வைத்தது போல், கொங்கு மண்டலத்தின் கணிசமான மாவட்டங்களில் "வெரைட்டி வெரைட்டியான" பிரச்னைகளால் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் பொங்கி எழ துவங்கியுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் எடுத்து வருவதற்காக உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கையால் தங்களின் விவசாய நிலத்தின் கணிம்சமான பகுதி பறிபோவதால் விவசாயிகள் கடும் போராட்டத்தில் குதித்தனர். தொடர் உண்ணாவிரதம், மண்ணள்ளி சபிக்கும் போராட்டம்...

என்றெல்லாம் ஆரம்பித்து பல வகையான எதிர்ப்பு வடிவங்களை அரசுக்கு எதிராக நடத்திவிட்டனர். இந்நிலையில் இந்த போராட்ட அமைப்புகளின் தலைமை விவசாயிகளை அழைத்து அமைச்சர் தங்கமணி நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துவிட்டது.

ஏற்கனவே நிறுவப்பட்ட மின்கோபுரங்களுக்கு வாடகை தரவேண்டும், இனி கேபிள்தான் அமைக்க வேண்டும்! கோபுரம் கூடாது! என்பது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு தரப்பிலிருந்து வந்த பதிலில் அவர்களுக்கு ஒப்புதல் இல்லை. எனவே மீண்டும் துவங்குகிறது போராட்டம்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இந்த போராட்டம் மறுபடியும் வெடிக்கும் நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு கைவிட வேண்டும், இதற்கு தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்! என்று கூறி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் தனி  போராட்டத்தை துவக்கியுள்ளனர். கர்நாடகத்துக்குள்ளேயே ஊர்வலமாக நுழைய முயலுமளவுக்கு தயாராகிவிட்ட அவர்கள், ‘இந்த அணை தடுப்பு யுத்தத்தில் ஆஹிரம் விவசாயிகளை பலி கொடுக்கவும் தயாராக உள்ளோம். எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்கவோ, அலட்சியம் காட்டவோ தமிழக அரசு முயன்றால் எங்களின் பதிலடி வெகு பயங்கரமாக இருக்கும்.’ என்று சவால்விட்டு சபித்துள்ளனர்.

இது இப்படியிருக்கும் நிலையில் சேலம் டூ சென்னை ஐந்து வழி பசுமைச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் இன்னமும் அணையாத நெருப்பாக கனன்று கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடித்து எழலாம் எனும் நிலை நிலவுவது யதார்த்தம். ஆக கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் என கொங்கு மண்டலத்தை சேர்ந்த அத்தனை மாவட்டங்களிலுமே அரசுக்கு எதிரான போக்கு நிலவுகிறது.

பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களோ பல்லாயிரம். அந்த வகையில் பல லட்சம் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக படைதிரட்டி நிற்கின்றனர். இந்த சூழல் நீடித்தால், தேர்தலில் இவர்களின் வாக்குகள் ஆளும் அ.தி.மு.க.வுக்கு எதிராய் போகும் நிலை உள்ளது. எப்போதும் தோள் கொடுக்கும் கோட்டையான கொங்கு வாக்கு வங்கியிலேயே இவ்வளவு பெரிய ஓட்டை விழுந்தால், எப்படி தப்பி பிழைப்பது? என்பதுதான் முதல்வர்கள் உள்ளிட்ட அமைச்சரவையின் பெரிய கேள்விக்குறியாகவும், வருத்தமாகவும் உள்ளது. 

இந்த பிரச்னைகள் ஒவ்வொன்றிலும் முக்கிய லகான் மத்திய அரசின் கையில் உள்ளது. மக்களுக்காக போராடினால் டெல்லியை பகைக்க வேண்டும். எனவே எதையும் சரி செய்ய முடியாமல் திணறுகிறார்கள் பழனிசாமியும், பன்னீர்செல்வமும். என்னாகுமோ! ஏதாகுமோ!

https://tamil.asianetnews.com/politics/edappadi-palaniasamy-explosive-protests-pksvym

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.