Jump to content

பாவிக்கப்படாத மூளை

Recommended Posts

பொதுவாக, ஒரு மனிதனின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட வயது எல்லையின் பின்னர் மூளையின் வளர்ச்சி, இதர உடல் உறுப்புக்களைப் போல, தனது இறுதி வளர்ச்சி நிலையினை (அதாவது இந்நிலைக்கு மேல் மாற்றமில்லை என்ற நிலை) அடைந்து விடும் என்ற கருத்தே மருத்துவ வட்டாரங்களில் மிக அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. அதாவது, மனித மூளையானது plasticity அற்றது என்பதே இந்தப் புரிதல். எனினும் அண்மைக் காலமாக இந்தப் புரிதல் தவறானது என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டு மருத்துவ வட்டாரங்களில் பலத்த பரபரப்பினை எற்படுத்தி வருகின்றது. இந்தக் கண்டுபிடிப்பிற்கு வழி வகுத்த சம்பவம் சுவாரசியமானது.

ஓரு மருத்துவ பேராசிரியர். அவரது மகன்களும் மருத்துவர்கள். பேராசிரியரிற்கு ஒரு நாள் திடீரென ஏற்பட்ட ஒரு பாரிய மாரடைப்பின் காரணமாக, அவரது மூளை பலத்த சேதமடைந்து அவர் பலவற்றை மறந்து போகிறார். அவரது மூளையில் பலத்த தாக்கம் ஏற்பட்டுள்ளது எனவும், அவரது வயதை வைத்துப் பார்க்கையில் அவரது நிலமையில் மாற்றங்களிற்குச் சாத்தியமில்லை எனவும் வைத்தியர்கள் கையை விரிக்கின்றனர். பேராசிரியரிற்கு இந்நிலை ஏற்பட்ட போது, பேராசிரியது இளைய மகன் ஒரு மருத்துவ மாணவனாக மட்டுமே இருந்தார். எனினும் தனது தந்தையின் நிலையினை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே தனது தந்தையை அமெரிக்காவில் இருந்து, தான் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த மெக்சிக்கோவிற்கு அழைத்துச் செல்கின்றார். அங்கு சென்ற நாள் முதல் தனது தந்தைக்கு விடயங்களை ஒரு குழந்தைக்குக் கற்றுக் கொடுப்பது போல் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கின்றார். அதன் முதல் படியாக தனது தந்தையை ஒரு குழந்தை போல் தவள்வதற்குப் பயிற்று விக்கின்றார். இவ்வாறு ஏறத்தாள அனைத்தையும் தனது தந்தைக்குப் புதிதாகக் கற்றுக் கொடுக்கின்றார். மருத்துவப் பேராசிரியரும் படிப்படியாக விடயங்களைப் புதிதாகக் கற்று, தனது 77 வயதில் பூரண ஆரோக்கியத்துடன், தனக்கு மிகவும் பிடித்த மலை ஏறும் விளையாட்டைச் செய்து கொண்டிருக்கையில், மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு மலை உச்சியி ஒன்றில் இறந்து போகின்றார்.

பேராசிரியரது இறப்பை அடுத்து, அவரது மருத்துவர் மகனின் வேண்டுகோளிற்கிணங்க, பேராசிரியரது உடல் ஆழ்ந்த மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகின்றது. குறிப்பாக அவரது மூளை உன்னிப்பாக ஆராயப்படுகிறது. அப்போது தான் மருத்துவர்கள், பேராசிரியரிற்கு ஏற்பட்ட முதல் மாரடைப்பின் காரணமாகப் பழுதடைந்த அவரது மூளையின் பகுதி இன்னமும் அவ்வாறே தான் உள்ளது எனவும், அப்பகுதி குணம் பெறுவதற்குப் பதிலாக, பேராசிரியரின் மூளையில் முன்னர் பாவனையில் இருந்திரா இதர பகுதிகளே, அவரது மகன் கொடுத்த பயிற்சியின் விளைவாக, மாற்றமடைந்து பானைக்குடபடுத்ப்பட்டிருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல உபயோகமான கருத்து. எங்களுக்குப் புரியாத விடயங்கள் பலவற்றையும் புறந்தள்ளி விடாது புரிய முயற்சிக்க வேண்டும் அதனால் தான் நாம் புதிய கண்டுபிடிப்புக்களை செய்யமுடியும்.

அந்த இந்து சமயம் தொடர்பான பந்தி இல்லாமலேயே சொல்ல வந்த விடயம் தெளிவாக உள்ளது :o . நாம் ஏதாவது புதிதாக கண்டுபிடிக்கவேண்டுமென்றால் இந்து சமயத்தை ஆராய்வதை விடுத்து வெள்ளைக்காரன் ஏற்கனவே கண்டுபிடித்து வைத்துள்ளவற்றை ஆராய்ந்து அறிந்து கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

வெள்ளைக் காரன் 21ம் நூற்றாண்டில் ஒரு தலை பல கைகள் உடைய மனித உருவம் ஏன் சாத்தியமானது என்று ஆராய்ச்சி அடிப்படையில் விளங்கப்படுத்துகின்றான் ஏற்றுக் கொள்ளுகின்றோம். வியக்கின்றோம். ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளாக, எமது முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள, வேறு எந்த சமூகத்திலும் வழக்கத்தில் இல்லாத, கடவுள் உருவத்தில் பல கைகள் ஒரு தலை இருந்தமை தொடர்பில் நாம் எந்த அறிவியல் விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளவோ அல்லது அறிவியல் கோணத்தில் சிந்திக்கவோ தயாராயில்லை. மாறாக நக்கல் பண்ணி வாழாது இருக்கின்றோம்.

கடவுள் நம்பிக்கையானது சிந்திக்கத் தெரிந்தோர் கொண்டிருக்க முடியாத ஒன்று

என்ற முரட்டுப் பிடிவாததத்தின் (யாரோ சிலர் அப்படி ஏதோ காரணங்களிற்காகச் சொன்னார்கள் என்பதற்காக) அடிப்படையில் கடவுள் நம்பிக்கை தொடர்பான எமது வரலாற்றை எம்மில்சிலர் எந்த அறிவியல் நோக்கிலும் நோக்கத் தயாராயில்லை. அவ்வளவு தான்நான் சொல்ல விழைந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் நம்பிக்கையை சமயத்தினுள் உள்ளடக்குவது சிறந்ததா? அல்லது அறிவியலினுள் உள்ளடக்குவது சிறந்ததா?

ஒரு சமயக்கொள்கைகளை உருவாக்கவும் நிறைய சிந்திக்கவேண்டியுள்ளதே?

Link to comment
Share on other sites

வெள்ளைக் காரன் 21ம் நூற்றாண்டில் ஒரு தலை பல கைகள் உடைய மனித உருவம் ஏன் சாத்தியமானது என்று ஆராய்ச்சி அடிப்படையில் விளங்கப்படுத்துகின்றான் ஏற்றுக் கொள்ளுகின்றோம். வியக்கின்றோம். ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளாக, எமது முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள, வேறு எந்த சமூகத்திலும் வழக்கத்தில் இல்லாத, கடவுள் உருவத்தில் பல கைகள் ஒரு தலை இருந்தமை தொடர்பில் நாம் எந்த அறிவியல் விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளவோ அல்லது அறிவியல் கோணத்தில் சிந்திக்கவோ தயாராயில்லை. மாறாக நக்கல் பண்ணி வாழாது இருக்கின்றோம்.

...

எமது முன்னோர்கள் பல அறிவியல் செய்திகளை எமக்கு விட்டுச் சென்றுள்ளனர். அக்காலத்தில் மனிதன் கட்டுப்பட்டது கடவுளுக்குத்தான். ஆகவே எல்லாவற்றையும் கடவுள்கள் மூலம் சொல்லிவைத்தார்கள். இதுதான் அவர்கள் செய்த தவறு என்று நினைக்கிறேன்.

அதனால்தான் 21 ஆம் நூற்றாண்டிலும் நாம் இவற்றை அறிவியல் கோணத்தில் சிந்திக்க மறுக்கிறோம், கடவுள் குற்றம் ஆகிவிடும் என்று. இந்தியாவில் இரண்டு முகங்களுடனோ, நான்கு கைகளுடனோ பிள்ளை பிறந்தால் அதை வணங்குவதற்கு கூட்டம் கூடிவிடும்.

Link to comment
Share on other sites

கடவுள் நம்பிக்கையை சமயத்தினுள் உள்ளடக்குவது சிறந்ததா? அல்லது அறிவியலினுள் உள்ளடக்குவது சிறந்ததா?

ஒரு சமயக்கொள்கைகளை உருவாக்கவும் நிறைய சிந்திக்கவேண்டியுள்ளதே?

எனது தாழ்மையான கருத்துப் படி, கடவுள் நம்பிக்கையை அறிவியல் என்பதா சமயம் என்பதா என்ற குழப்பம் தேவை அற்றது. நம்பிக்கை உடையவர்களிற்கு அது வாழ்வோடு பின்னிப் பிணைந்தது.

நாம் அனைவரும் இக்களத்தில் பல தடவைகள் முன்னர் கூறியதைப் போல கடவுள் நம்பிக்கை என்பது போதிக்கப்பட முடியாதது, உணரப் பட வேண்டியது. மேலும் எவரையும் மதம் மாற்றுவதோ அல்லது இந்து சமயத்தை காப்பாத்துவதோ எனது நோக்கமுமில்லை. இத்தனை ஆண்டு கள் இருந்து வரும்

சமயம் எனது கட்டுரைகள் இல்லாவிடின் அழிந்து போய்விடும் என நினைக்கும் அளவிற்கு நான் அகந்தை உடைய மனிதனும் அல்ல.

எனது வாதங்களை இங்கு நான் வைப்பதற்கான ஒரே காரணம், சிந்திக்கத் தெரிந்தவர்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர், அப்பாவித் தனமாக, ஆரோ தமக்கு எதனுடையதோ அடிப்படையில் கடவுள் நம்பிக்கை மூடத் தனம் என்று சொன்னார்கள் என்ன அடிப்படையில், உண்மையில் ஒரு cult போன்று (what an irony )கடவுள் நம்பிக்கையை நக்கல் பண்ணுவதிலேயே வாழ்க்கையைச் செலவழிக்கின்றார்கள். கடவுள் நம்பிக்கை என்பது முற்றிலும் மூட நம்பிக்கைகளின் சரணாலம் எனக் கூறுகின்றார்கள். அனைவரையும் நாத்திகர் ஆக்கி விடத் துடிக்கின்றார்கள். இந்த மூடிய அணுகு முறையில் இவர்களால் எப்போதும் எதையும்புரிந்துகொள்ள முடியப் போவதில்லை. அதனால் தான் கடவுள் நம்பிக்கை தொடர்பான பன்முகத்தன்மையை அப்பப்போ எனது அறிவிற்கு எட்டிய வரை கூறி வருகின்றேன். அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

எமது முன்னோர்கள் பல அறிவியல் செய்திகளை எமக்கு விட்டுச் சென்றுள்ளனர். அக்காலத்தில் மனிதன் கட்டுப்பட்டது கடவுளுக்குத்தான். ஆகவே எல்லாவற்றையும் கடவுள்கள் மூலம் சொல்லிவைத்தார்கள். இதுதான் அவர்கள் செய்த தவறு என்று நினைக்கிறேன்.

அதனால்தான் 21 ஆம் நூற்றாண்டிலும் நாம் இவற்றை அறிவியல் கோணத்தில் சிந்திக்க மறுக்கிறோம், கடவுள் குற்றம் ஆகிவிடும் என்று. இந்தியாவில் இரண்டு முகங்களுடனோ, நான்கு கைகளுடனோ பிள்ளை பிறந்தால் அதை வணங்குவதற்கு கூட்டம் கூடிவிடும்.

உங்களது கருத்தினை ஓரளவிற்கு ஒத்துக் கொள்கின்றேன். எனினும், கடவுள்

நம்பிக்கை பற்றி கேள்வி கேட்காது மனிதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்தான் என என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. கேள்விகள் வித்தியாசப் பட்டிருக்கலாம், உணர்வு தொடர்பானவையாக இருந்திருக்கலாம, ஆனால் நிச்யம் குழப்பங்களும் தெளிவுகளும் இருந்தே இருக்கும் என்பது எனது

எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொருவன்,

உங்களின் கருத்துக்கு நீங்கள் இங்கு முன்பு பதிந்த சில கருத்துக்களின் துணையையும் சேர்த்து பதிலளிக்க முயல்கிறேன்.

நீங்கள் முன்பு கூறிய ஒரு உதாரணத்தில் ஒரு ஆராய்ச்சி மாணவி தன் ஆய்வுகளுக்கு ரொய்ட்டர்ச் போன்ற உலக தரம்வாய்ந்த செய்தி நிறுவனங்களின் செய்திகளை மட்டுமே ஆதாரமாக காட்ட முடியும். இதற்காக அவையெல்லாம் உண்மை என்பதல்ல. உதாரணமாக கனடாவில் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். ஒரு கனேடியரிடம் போய் நீங்கள் புலிகள் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று சொன்னால் சிரிப்பார்கள். கோபப்படுவார்கள். ஏன் கைது செய்து அடைக்கவும் செய்வார்கள். அவர்களினைப் அதுவே உண்மை.

அதே போல விஞ்ஞானத்தை வாழ்வின் வழிகாட்டியாக கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதையும் விஞ்ஞான ரீதியில் நிறுவினால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். மற்றவைகளினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் விஞ்ஞான ரீதியில் முரண்பட்ட விடயங்களை கண்டு நகைக்கலாம். சிலருக்கு சமயத்தில் உள்ள அபரிமிதமான நம்பிக்கை போல அவர்களுக்கு விஞ்ஞானத்தில் அபரிமித நம்பிக்கை. அதைக் கண்டு ஏன் இவ்வளவு டென்சன்?

Link to comment
Share on other sites

உதாரணமாக கனடாவில் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். ஒரு கனேடியரிடம் போய் நீங்கள் புலிகள் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று சொன்னால் சிரிப்பார்கள். கோபப்படுவார்கள். ஏன் கைது செய்து அடைக்கவும் செய்வார்கள். அவர்களினைப் அதுவே உண்மை.

அதே போல விஞ்ஞானத்தை வாழ்வின் வழிகாட்டியாக கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதையும் விஞ்ஞான ரீதியில் நிறுவினால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். மற்றவைகளினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் விஞ்ஞான ரீதியில் முரண்பட்ட விடயங்களை கண்டு நகைக்கலாம். சிலருக்கு சமயத்தில் உள்ள அபரிமிதமான நம்பிக்கை போல அவர்களுக்கு விஞ்ஞானத்தில் அபரிமித நம்பிக்கை. அதைக் கண்டு ஏன் இவ்வளவு டென்சன்?

உங்களது உதாரணத்தை வைத்தே பதில் கூறுகின்றேன்.

கனடாவில் புலிகள் பயங்கரவாதிகள் எனக் கருதப்படுகிறார்கள் என்பதற்காக, தனிப்பட்ட முறையில், தமிழரல்லாத நண்பர்களிற்கு மத்தியில், எமது நியாயப்பாட்டைக் கூற நாம்தயங்குவதில்லை. இப்பிடித்தான் முன்னர் நெல்சன் மண்டேலாவையும் பயங்கர வாதிகள் என்றீர்கள் இப்போ அவரை ஒனறறி சிற்றிசன் என்கிறீர்கள் அதுபோலத் தான் இவையும் என்கிறோம். அவர்களும் சிந்திக்கின்றார்கள்.

அதுபோலத் தான், விஞ்ஞானத்திற்குச் சயமம் முரண்பட்டது என்று, விஞ்ஞானிகள் அல்லாத சிலரே நகைக்கும் போது, இங்கே பாருங்கள் இப்படிக் கூட இது இருக்கலாமே என கூறுவது தான் எனது இலக்கு.

புலிகளை நகைப்பவர்களிற்கு ஏன் டென்சன் பட்டு உங்கட பக்க நியாயத்தைக் குறிப்பிடுகிறீர்கள் (நான் தனிப்பட்ட கலந்துரையாடல்களை மட்டுமே இங்கு குறிக்கிறேன். பொதுவாக எம்மவர் செய்யும் சில பிரச்சார வடிவங்கள் பற்றிய எனது மாறு பட்ட கருத்தை முன்னமே தெரிவித்துள்ளேன். அதனுடன் இது முரண்படுவதாக நினைக்க வேண்டாம்) என யாரும் கேட்பதில்லை, அது டென்சனா என்பது கூட விவாதத்திற்குரியதே. அது போன்று தான் இங்கும் விஞ்ஞானமே கடவுள் நம்பிக்கை தொடர்பான பல விடயங்களை நிரூபித்து வருகையில், வெட்டிச் சிரிப்பொலிகளிற்கு அளிக்கப்படும் பதில் சில சமயம் டென்சன் போன்றும் தெரியலாம். ஒரு வேளை டென்சனாகவும் இருக்கலாம். டென்சன் தான் எனின் அது தவிர்க்கப்படவேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடே.

Link to comment
Share on other sites

சமயம் விஞ்ஞானத்தை உள்ளடக்கியிருந்தால் நாம் ஏன் இன்னும் வெள்ளைக்காரனை விட விஞ்ஞான வளர்ச்சியில் படு தோல்லியடைந்திருக்கிறோம் ?

நான் பகுத்தறிவாளியும் இல்லை, அறிவாளியும் இல்லை.

ஆனால் பிரச்சனை என்று வரும்போது கவனமாக சிந்தித்து, அதை எதிர்கொள்வதை விட்டு, கடவுளை வணங்கினால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்பதனையும், தோல்வி ஏற்படும்போது, எதனால் தோல்வி ஏற்பட்டது என்று சிந்திப்பதை விட்டு, அது கடவுளின் விளையாட்டு, ஏற்கனவே எழுதப்பட்ட விதியின் விளயாட்டு என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

சமயம் எங்களை சிந்திக்க வாய்ப்பளிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் புலிகள் பயங்கரவாதிகள் எனக் கருதப்படுகிறார்கள் என்பதற்காக, தனிப்பட்ட முறையில், தமிழரல்லாத நண்பர்களிற்கு மத்தியில், எமது நியாயப்பாட்டைக் கூற நாம்தயங்குவதில்லை. இப்பிடித்தான் முன்னர் நெல்சன் மண்டேலாவையும் பயங்கர வாதிகள் என்றீர்கள் இப்போ அவரை ஒனறறி சிற்றிசன் என்கிறீர்கள் அதுபோலத் தான் இவையும் என்கிறோம். அவர்களும் சிந்திக்கின்றார்கள்.

எங்களுக்கு 100% வீதம் தெரிந்தபடியால் கூறுகிறோம். தெரியாவிட்டால்?

உதாரணமாக, செவ்வாயில் உயிரினம் இல்லை என்பதே தற்போதைய அறிவியல். ஆனால் இருக்கலாம் என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் செல்கின்றன. உண்மையில் அங்கு விஞ்ஞானத்தில் வளர்ந்த எம்மைப்போன்ற உயிர்கள் கூட இருக்கலாம். அதற்காக இப்போதே செவ்வாயில் உயிரினம் இருப்பதாக அனுமானிப்பது தவறு. அந்த அனுமானத்தை அடிப்படையாக வைத்து இன்னும் இன்னும் அனுமானங்கள் எடுப்பதும் தவறு. செவ்வாயில் உயிரினம் இருக்கலாம் என்பதற்காக அவற்றின் தாக்குதலில் இருந்து தடுப்பதற்காக எதேனும் பாதுகாப்பு கேடயங்களை மார்ச் (mars) ரோவர்கள் கொண்டிருந்தனவா, இல்லையே?

எமக்குத் தெரியாத விடயங்கள் பல உள்ளன. அதற்காக அவற்றை எல்லாம் எண்ணி அவற்றை எல்லாம் கருத்தில் எடுத்து எமது வாழ்வை திட்டமிட முடியுமா? எமக்கு நிச்சயமாக தெரிந்தவை எவையோ அவற்றை மட்டும் கருத்தில் கொண்டு (assumption) நாம் எமது வாழ்வை திட்டமிடலாம் தானே?

எமக்குத் தெரியாது என்பதற்காக யாரோ எழுதி வைத்தது எல்லாம் உண்மை என்று ஆகிவிடுமா?

Link to comment
Share on other sites

சமயம் விஞ்ஞானத்தை உள்ளடக்கியிருந்தால் நாம் ஏன் இன்னும் வெள்ளைக்காரனை விட விஞ்ஞான வளர்ச்சியில் படு தோல்லியடைந்திருக்கிறோம் ?

நான் பகுத்தறிவாளியும் இல்லை, அறிவாளியும் இல்லை.

ஆனால் பிரச்சனை என்று வரும்போது கவனமாக சிந்தித்து, அதை எதிர்கொள்வதை விட்டு, கடவுளை வணங்கினால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்பதனையும், தோல்வி ஏற்படும்போது, எதனால் தோல்வி ஏற்பட்டது என்று சிந்திப்பதை விட்டு, அது கடவுளின் விளையாட்டு, ஏற்கனவே எழுதப்பட்ட விதியின் விளயாட்டு என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

சமயம் எங்களை சிந்திக்க வாய்ப்பளிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

நாம் விஞ்ஞானத்தில் முன்னேறாமைக்கு எமது சிந்தனைத் தன்மை தான் காரணம். சோதனையை மையமாக வைத்துப் படித்தல் முதலியனவும், சிறப்பான உத்தியோகத்திற்காகவும் சீதனத்திற்காகவும் படிக்கும் தன்மையும் இவற்றுட் சில. கடவுள் நம்பிக்கையில் நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன. நாம் தான் பார்க்கத் தவறுகின்றோம்.

எமது நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் பலவற்றிற்கான சிந்தனைகள் பொதிந்து தான் கிடக்கின்றன. நாம் பார்க்க மறுப்பது எமது தவறே அன்றி கடவுள் நம்பிக்கையினுடையது அல்ல.

மேலும் கஸ்ரங்கள் வந்தால் ஏற்றுக் கொண்டு வாழாதிருக்குமாறு எந்தச் சமயமும் போதிப்பதாயில்லை. கஸ்ரங்களில் இருந்து கற்றல் நடக்கவேண்டும் என்று தான் கூறப்படுகின்றது. அதனால் தான் சோதனை என்ற வார்த்தைப் பிரயோகம் கூட அங்கு முன்வைக்கப் படுகின்றது. அத்தோடு கஸ்ரங்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் கூறப்படுகின்றன. அத்தோடு எமக்கு மலைப்பூட்டும் கஸ்ரங்களை எதிர்கொள்வதற்கும் நம்பிக்கை தரப்படுகின்றது. இதில் என்ன கெடுதல்.

Link to comment
Share on other sites

எங்களுக்கு 100% வீதம் தெரிந்தபடியால் கூறுகிறோம். தெரியாவிட்டால்?

நூறு வீதம் நிறுவப்பட்ட மூளையின் தன்மையை அடியாகக் கொண்டு பல கைகள் ஒரு தலை விடயத்தை இங்கு நான் கூறப் போய்த் தானே இந்த விவாதமே வந்தது. விடயம் என்ன என்பது தான் இங்கு பலரிற்குப் பிரச்சினை.

இப்போ பாருங்கள், இந்த கடவுள் நம்பிக்கை என்ற விடயம் ஆண்டாண்டு காலமாக மக்கள் மத்தியில் இருந்து வருகின்ற ஒன்று. இதனால்வௌ;வேறு அனுகூலங்கள் வௌ;வேறு மனிதரிற்கு. இந்நிலையில், இந்த நம்பிக்கை அடிப்படையை ஒழித்தே தீருவோம் என சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கையில், இந்த நம்பிக்கை தொடர்பில் மறுக்கப்படமுடியாத நிறுவல்கள் முன்வரும் போது, சிந்திக்கத் தெரியாத மனிதர்களிற்காகச் சிந்திப்பதாய்ச் சொல்லிக் கொள்ளும் கடவுள் மறுப்பாளர்களிற்கு அது பற்றிச் சுட்டிக்காட்டக் கூடாது என்பது எவ்விதததில் நியாயம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ பாருங்கள், இந்த கடவுள் நம்பிக்கை என்ற விடயம் ஆண்டாண்டு காலமாக மக்கள் மத்தியில் இருந்து வருகின்ற ஒன்று. இதனால்வௌ;வேறு அனுகூலங்கள் வௌ;வேறு மனிதரிற்கு. இந்நிலையில், இந்த நம்பிக்கை அடிப்படையை ஒழித்தே தீருவோம் என சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கையில், இந்த நம்பிக்கை தொடர்பில் மறுக்கப்படமுடியாத நிறுவல்கள் முன்வரும் போது, சிந்திக்கத் தெரியாத மனிதர்களிற்காகச் சிந்திப்பதாய்ச் சொல்லிக் கொள்ளும் கடவுள் மறுப்பாளர்களிற்கு அது பற்றிச் சுட்டிக்காட்டக் கூடாது என்பது எவ்விதததில் நியாயம்?

நாத்திகவாதம் பேசிய பலர் தொடர்பான எனது அறிதல்களும் அனுபவங்களும்:

  • 20 களில் முரட்டுத்தனமான நாத்திகவாதம் பேசுவார்கள்
  • 30 இன்னும் முரட்டுத் தனமாக 5 வயதே ஆன தங்களின் குழந்தைகளுக்கும் வரட்டு வேதாந்தத்தை கற்பித்து இவர்களின் 5 வயதுக் குழந்தைகளே கடவுள் இல்லை என்று சொல்லித் திரியும்.
  • 40 களில் இவர்களை கோயில்களுக்குள் கண்டிருக்கிறேன். அவர்களின் அசட்டுச் சிரிப்புச் சமாளிப்புகள்:

    • சும்மா பொழுது போகவில்லை
    • மனைவியை drop பண்ண வந்தேன்
    • இப்ப பாருக்கோ உந்தப் பெடிய்ள் காங் குகளோடை சேந்து பெரிய அராசகம் பண்ணுறாங்கள். உதுகளில சேராமல் இருக்கிறதுக்கு இப்பிடி கொஞ்சம் தேவை..அது தான் கூட்டிக்கொண்டு வந்தனான்.

    [*]50 களில் கோயிலுக்கு ஒவ்வொருநாளும் போய் வருதல்

    [*]60 களில் சாமி காவுதல் :o

    [*]70 களில் சாமியாடுதல் :(

இவர்களால் எல்லாமா அடுத்தவரின் சமய நம்பிக்கையினை அழிக்க முடியும்?

என்னைப் பொறுத்தவரை சமயம் என்பது (நாத்திகர்களுக்கு "நாத்திகம்" என்பது அவர்களின் சமயம்) ஒரு மருந்து மாதிரி. அளவாக எடுத்துக்கொண்டால் அருமையான வாழ்க்கை. அளவுக்கதிகமாகி அடிக்டட் ஆனால் அதுவே நமக்கு எமன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையே தான் ஜே.கிருஸ்ணமூர்த்தி என்னும் spiritual teacher இப்படி point செய்கிறார்....ஏன் இந்த point என்ற பதம் பாவிக்கப்படுகிறதென்றால், தான் சொல்பவற்றை நம்பாதீர்கள், "question everything - don't just accept because someone told you" என்று கூறுகிறார். ்தான் கூறுபவை pointers மட்டுமே, அவரவர் self-awareness மூலம் மட்டுமே நிஜத்தை (the truth) அறிந்து கொள்ளமுடியும் என்று கூறுகிறார்.

"We are conditioned for ten thousand or so years. Our thoughts arise from this conditioned mind. Human being has evolved physically but I question if there was any evolution in the psyche....."

நீங்கள் மேலே குறிப்பிட்ட snow slope என்பது இந்த conditioned mind ஐ தான் குறிக்கின்றது.

மேலும் அவர்,

"knowledge must end. knowledge being my pain, suffering, experience..Technologically we need knowledge..I need knowledge to build a bridge and so on"

இதை எனக்கு சரியாக விளங்கப்படுத்த முடியவில்லை. ஆர்வமுள்ளவர்கள் அவர் குறிப்பிடுவதை நேராக கேட்டுப்பாருங்கள்.

அவர் குறிப்பிடும் knowledge எனும் பதம் அவதானத்துடன் கவனிக்கப்படவேண்டியது.

"mutation in the brain" பற்றி Dr. David Bohm (இவர் ஐன்ஸ்டைனுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது) உடன் J.Krishnamurti உரையாடும்போது குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் குறிப்பிடுவது என்னவென்றால்,

"when one observe his thoughts, emotions and knowing the limitation of his thought there's a mutation in the brain cells...."

எங்களது conditioned brain தனது வரையறையை உணரும் போது அங்கு பெளதீகமாக மாற்றம் நிகழ்கிறது.

...

இதில் நகைப்புக்கிடமான விடயம் என்னவென்றால், விஞ்ஞானிகள் (the so called) மனிதன் மூளையின் எல்லாப்பகுதியையும் பயன்படுத்தினால் உடம்பில் நிறைய bio arm பூட்டலாம் என்றும் மனிதனின் productivity (so called) அதிகரிக்கலாம் என்று எதிர்வுகூறுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையே தான் ஜே.கிருஸ்ணமூர்த்தி என்னும் spiritual teacher இப்படி point செய்கிறார்....ஏன் இந்த point என்ற பதம் பாவிக்கப்படுகிறதென்றால், தான் சொல்பவற்றை நம்பாதீர்கள், "question everything - don't just accept because someone told you" என்று கூறுகிறார். ்தான் கூறுபவை pointers மட்டுமே, அவரவர் self-awareness மூலம் மட்டுமே நிஜத்தை (the truth) அறிந்து கொள்ளமுடியும் என்று கூறுகிறார்.

தத்துவார்த்தமாக இவையெல்லாம் எப்போதோ சொல்லப்பட்டவை தான். ஏன் திருவள்ளுவர் சொல்லவில்லையா

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று.

விஞ்ஞான ரீதியில் இது தான் முதல் தடவை.

யிட்டு கிருசுணமூர்த்தி பற்றிய இணைப்புக்கு நன்றி. இணையத்தில் அவர் எழுத்துக்கள் பற்றிய இன்னும் தரவுகள் இணைப்புக்கள் இருந்தால் கட்டாயம் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே குறிப்பிட்ட இணைப்பில் வீடியோ பதிவுகள் சில துண்டுகளே இருந்தாலும் ஓடியோவும், டெக்ஸ்ட்டும் முழுமையாக சேமிக்கப்பட்டுள்ளது.

மற்றும் நூல்களை இங்கு பார்வையிடலாம். வீடியோக்கள் உங்கள் உள்ளூரிலுள்ள 'foundation' இலோ, நூலகங்களிலோ borrow பண்ணலாம் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.