Sign in to follow this  
கிருபன்

‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்

Recommended Posts

‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்

January 28, 2019

 

thaimoli.jpg?zoom=3&resize=319%2C158

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ம் திகதி உலக தாய் மொழி தினத்தை நிறுவக வளாகத்தில் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி. சி. ஜெயசங்கர் தலைமையில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இந் நிகழ்வினை சிறப்புற நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தையும்; மொழி கற்கைகள் அலகின் விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் இதுவரை இரண்டு தடவைகள் இத் தினத்தினை ஒழுங்கமைப்புச் செய்து மிகவும் சிறப்பான முறையில் நடாத்தியுள்ளதோடு இந் நிறுவகத்தை உலக அறிஞர்கள், ஆய்வாளர்கள், பன்மொழிப் புலமையாளர்களின் பார்வைக்கும் உட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலாநிதி. சி ஜெய்சங்கர்; அவர்கள் இந் நிறுவகத்தின் பணிப்பாளராகக் கடமையேற்று மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் மூன்று தடவைகள் உலக தாய்மொழிகள் தினத்ததை ஒழுங்கமைப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பணிப்பாளரின் இடையறாத முயற்சியினாலும் ஊக்குவிப்பினாலும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களதும் நிர்வாகத்துறை சார்ந்தோரினதும் ஒத்துழைப்பினாலும் இவ் வருடமும் உலக தாய்மொழிகள் தினத்தை சிறப்பான முறையில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந் நிறுவகத்தில் கடந்;த 2017 ம் ஆண்டு இத் தினம் மிகச்சிறப்பான முறையில் பன்மொழி பேசுகின்ற சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இந் நிகழ்வில் அவர்களது கலாசாரப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் ஆற்றுகைகள் பலவும் மேடையேற்றப்பட்டதுடன் அவை நல்ல வரவேற்பையும் பெற்றுக்கொண்டன. 2018ல் இத் தினத்தின் நிகழ்வுகள் பல்வேறு கலைஞர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்புடன் அவர்களது ஆற்றுகைகள் இன்றி சிறு கருத்துரையும் கலந்துரையாடலுமாக நடாத்தி முடிக்கப்பட்டது.

இவ் வருடம் (2019)ல் ‘உள்ளுர் உணவின் மொழி ‘ என்ற தொனிப் பொருளில் உலக தாய் மொழிகள் தினத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்துவதற்காக உத்தேசிக்கப் பட்டுள்ளது. இவ் விழாவிற்கு உள்ளுரிலும் வெளியூர்களிலும் இருந்து அதிகளவான இனக்குழு சமூகத்தினர் அதாவது வேடர், பறங்கியர் குறவர், அலிகம்பே இனக்குழு சமூகத்தினர் ஆகியோர் வரவழைக்கப்பட்டு அவர்களது கலாசாரம் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் பாரம்பரிய உணவுகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதுடன்; அவை பற்றிய முன்வைப்புக்களும் காட்சிப்படுத்தல்களும் விற்பனையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உணவின் மொழி என்பது ஒரு சமூகக் குழுவினர் உண்ணும் உணவுகளின் அடிப்படையில் அவர்களது பண்பாட்டினையும் கலாசாரத்தினையும் அதன் தத்துவத்தினையும் விளங்கிக் கொள்வதாகும். வௌ;வேறு மொழி பேசுகின்ற மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் வேறுபட்டவையாகும். அவர்களின் உணவுப் பண்பாட்டினை அவர்கள் வாழும் பிரதேசம், மதம், மொழி, சமூகக்குழுக்கள் என்பன தீர்மானிக்கின்றன எனக் கூறலாம்.

உணவுப் பண்பாடும் தத்துவங்களும் ஒவ்வோர் இனத்தினதும் சமூகத்தினதும் முக்கிய அடையாளங்களாக அமைகின்றன. இவ் அடையாளங்களைப் பேணுவதும் வளர்த்தெடுப்பதும் ஒவ்வொரு சமூகத்தினதும் கடமையும் பொறுப்புமாகும்;.

பாரம்பரிய, உள்ளுர் உணவுசார் வழக்காறுகள் ஆரோக்கியமான வாழ்வினை அடிப்படையாகக் கொண்டவை. அவை உள்ளார்ந்த ரீதியில் அறிவியல் நோக்குக் கொண்டவை. இந்த உணவுசார் வழக்காறுகள் மூலம் ஒரு சமூகத்தின் பண்பாட்டு மரபுகளை அதாவது அவர்களது நம்பிக்கைகள,; சடங்குகள், வழிபாட்டு மரபுகள,; விருந்தோம்பல,; அன்பு, ஆரோக்கிய வாழ்வு, எதிர்காலத்திற்கான பேணுகை, கற்பனைத்திறன், செயன்முறை அறிவு, உணர்வுகள் என்பவற்றினை அறிந்து கொள்ள முடியும். பாலூட்டும் தாய், பூபு;பெய்திய பெண் ஆகியோருக்கு குறிப்பிட்ட நாள் வரையும் எத்தகைய உணவுகளைக் கொடுக்கவேண்டும் அவற்றை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்ற நடைமுறை முற்றிலும் அவர்களது உடல் ஆரோக்கியத்தை மையப்படுத்தியவையாகும். அவ்வாறே பல்வேறு சடங்குகள், விசேட தினங்களின் போது தயார்செய்யும் உணவு முறைகளும் அவர்களின் உணவுசார் வழக்காறுகளை மட்டுமன்றி அறிவியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளன.

பாரம்பரிய உணவுகளில் பத்தியக்கறி பிரசவத்தின் அடையாளத்தையும் எள்ளுத்துவையல் உழுந்துக்களி, மஞ்சள் நீர் என்பன பூப்பெய்திய வீட்டின் அடையாளத்தையும் மோதகம், பாணக்கம், சர்க்கரைப் பொங்கல் என்பன கோயில் சடங்கின் அடையாளத்தையும் குறித்து நிற்கின்றன. மரணவீட்டில் கல்லைக்கு வைக்கும் உணவுகள், நெற்பொரி என்பன இறப்பின் அடையாளத்தையும் நேய்வாய்ப்பட்டவரை காண்பதற்காகக் கொண்டு செல்லும் உணவுகள் ஒருவரின் ஆரோக்கியமற்ற தன்மையையும் குறித்து நிற்கின்றன.

ஒருவர் தன் அன்பை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த அடையாளமாகவும் உணவு அமைகின்றது. அதாவது நீ;ண்ட நாட்களின் பின் ஒரு உறவினர் வீட்டுக்கு வந்தால் அவருக்கு பிடித்த உணவுகளை விதம் விதமாக சமைத்துப் பரிமறுவதன் மூலம் தமது அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவர். பதப்படுத்திய , வற்றலாக்கிய, பாகிடப்பட்ட உணவுகள் சேமிப்பு, எதிர்காலம் பற்றிய உணர்வு முதலானவற்றை அடையாளப்படுத்துகின்றன. அலங்கார வடிவமைப்புகளுடன் தயார் செய்யப்பட்ட உணவுகள் உணவைத் தயார் செய்தவரின் கற்பனாசக்தியையும் அறிவாற்றலையும் வெளிப்படுத்துகின்றன. ஒருவர் தான் பிறந்த நாளை தெரிவிக்கும் போதும் மகிழ்வான செய்திகளைத் தெரிவிக்கும் போதும் இனிப்புப் பண்டங்களை வழங்குவதும் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த சர்க்கரை, சொக்லட், கற்கண்டு வழங்குவதும் எமது சமூக வழக்காறாகும். இவ்வுணவுகள் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். ஒரு சமூகம் தமக்கான உணவை எவ்வாறு தயார் செய்து உண்கிறது என்பது அச் சமூகத்தின் தொழில்நுட்ப அறிவையும் நாகரிக வளர்ச்சியையும் அடையாளப்படுத்துகின்றன. இத்தகைய அடையாளப் படுத்தல்களே அச் சமூகத்தின் உணவின் மொழி எனலாம்.

தற்போது எமது உள்ளுர்ப் பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் என்பன மறைந்து போய் எமது உணவுப் பழக்கத்திற்கான அடையாளங்களையே நாம் இழந்து மேலைத்தேச உணவு வகைகளுக்கும் பானங்களுக்கும் அடிமையாகிப் போயுள்ளோம். எமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில் எமது உணவு முறைகளை எமது வருங்கால சந்ததியினருக்கு நாம் கையளிப்பதன் மூலம் எமது உள்ளுர் உணவுக் கலாச்சாரத்தைப் பேண முடியும்.

நாகரிக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்;ச்சி கலாச்சாரத் தொடர்புகள் இயந்திரமயமாக்கல் என்பவற்றால் பதப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கங்களுக்கும் பிற கலாச்சார உணவுகளுக்கும் மக்கள் பழக்கப்பட்டு விட்டனர். இதனால் எமது பாரம்பரிய உணவுகள் நீக்கப்பட்டு அவை இயற்கை நிலையிலிருந்து மாற்றப்பட்டு விட்டன. இது தற்போது மக்களின் ஆரோக்கியத்தில் பெருந்தாக்கத்தை உண்டு பண்ணுகின்றன. உணவு உற்பத்தி நிறுவனங்கள் தமது உற்பத்திகளை விற்பதற்காக கையாளும் தந்திரோபாயங்களாலும் சந்தைப்படுத்தல் உத்திகளாலும் மக்கள் அவ் உணவுகளால் கவரப்பட்டு அவ் உணவுகளை விரும்பத் தொடங்கி விட்டனர். பதப்படுத்தப்பட்ட உடனடி உணவுகளாலும் செயற்கைச் சுவையூட்டிகள் நிறமூட்டிகளாலும் எமது உடலின் ஆரோக்கியம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.

எமது உடலுக்கு தேவையான உணவு எது என்பதை நாம் பழக்கப்படுத்திக் கொள்ளாமல் சுவையான உணவு எது என்பதையே தேடி உண்ணப் பழக்கப்பட்டு விட்டோம். எமது பொருத்தமற்ற உணவுப் பழக்க வழக்கங்களால் நாம் பல்வேறு தொற்றா நேய்களுக்கு இடங்கொடுத்துள்ளோம். இத்தகைய எமது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப் பழக்கவழக்க முறைகளைக் கைவிட்டு உடல் ஆரோக்கியம் பேணும் எமது பண்பாட்டு உணவுகளை எமது வருங்கால சந்ததியினருக்கு வழங்குவது அனைவரதும் பொறுப்புமிக்க செயற்பாடாகும். எனவே தான் எமது பல்கலைக்கழக சமூகத்தினர் இவ்வருடம் உலக தாய்மொழிகள் தினத்தை ‘உள்ளுர் உணவின் மொழியாகக்’ கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே எதிர்வரும் மாசிமாதம் 22ம் திகதி நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் ஆதரவினை வழங்குவதோடு சிறந்த கருத்துக்களையும் முன்வைக்குமாறு எமது நிறுவகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். அனைவரம் வருக! கருத்துரை தருக!

 

http://globaltamilnews.net/2019/111432/

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this