யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பிழம்பு

முட்டை பொரிப்பது எப்படி?

Recommended Posts

நானும் எத்தனை ஆயிரம் முட்டை பொரிச்சு இருப்பன்....ஆனால் இப்படி எல்லாம் மினக்கெடவில்லை. 

நான் பார்த்தவரைக்கும் ஒவ்வொரு வீட்டிலும் சில சில மாறுதல்களுடன் முட்டை பொரிப்பர். உங்கள் வீடுகளில் அல்லது நீங்கள் என்னமாதிரி முட்டை பொரிப்பீர்கள் என அறியத் தந்தால் முட்டை பொரியல் பற்றி சுவாரசியமான திரியாக அமையும்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Ãhnliches FotoÃhnliches Foto

Bildergebnis für pan  Ãhnliches Foto

Ãhnliches Foto Ãhnliches Foto

முட்டை   - 4
தக்காளிப் பழம்   - 1
Fetta Cheese     -  100  கிராம்.   
நான்கு மேசைக் கரண்டி பால். 
சுவைக்கு ஏற்ற உப்பு.
எண்ணை  சிறிதளவு.

உடைத்த  முட்டையை  பாத்திரத்தில்  ஊற்றி,  பால் விட்டு  நன்கு அடிக்கவும்.
சிறிதாக வெட்டிய தக்காளிப் பழத்தையும், கையால் ஓரளவு பிசைந்த,  
Fetta Cheese  ஐயும், உப்பையும்  அதற்குள் போட்டு, நன்கு கலக்கி விட்டு...
வீட்டில் உள்ள பெரிய Pan´ல் போட்டு, இரண்டு பக்கமும்  பொரித்து சாப்பிடவும்.
வாழ்க்கையில்... இந்த முட்டைப் பொரியலை.. மறக்க மாட்டீர்கள்.. 😁

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

முட்டை  -----2 , பச்சைமிளகாய் ---- 1 சிறிதாக அரிந்தது , சின்ன வெங்காயம் ----2 சிறிதாக அரிந்தது , ஒரு மே .கரண்டி எண்ணை (நல்லெண்ணை நல்லது). சிறிது உப்பு, கொஞ்சம் பால்,மஞ்சள்தூள் சிறிது, மிளகுதூள் சிறிது, சீரகத்தூள் சிறிது......!

முட்டையை உடைத்து நன்றாக அடித்து பின் பாலும் சேர்த்து அடித்து வைக்கவும்.

தாச்சியில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் மஞ்சள் தூள் சீரகத்தூள் உப்பும்  சேர்த்து வதக்கி பின் முட்டை  கலவையை கொட்டி கிளறவும் ஒரு பதம் வரும்போது மிளகு தூளையும்  தூவி கிளறி இறக்கவும்.......!

இதை சாப்பிட்டபின் மேலுள்ள பொரியல்களை நினைக்க மாட்டீர்கள். காரணம் அவை இரண்டும் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கானது......!   😁

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, suvy said:

சுவி...  உங்கடை முட்டைப் பொரியலில்....  மஞ்சள் தூள், சீரகத்தூள்  சேர்ப்பதை பார்க்க....
பத்திய சாப்பாடு... சாப்பிடுவர்களுக்கான பொரியல் போலுள்ளது. 😝

Share this post

Link to post
Share on other sites

இதைப் பார்த்தால்  முட்டை  சாப்பிடாதவர்களும் சாப்பிடுவார்கள்.....நானே சந்தோஷமாய் சாப்பிடுவன் போல கிடக்கு ஆனால் இன்டைக்கு சனி பிரதோஷம். அதனால் ரிஜக்ட் ....!

On 1/30/2019 at 7:14 PM, தமிழ் சிறி said:

சுவி...  உங்கடை முட்டைப் பொரியலில்....  மஞ்சள் தூள், சீரகத்தூள்  சேர்ப்பதை பார்க்க....
பத்திய சாப்பாடு... சாப்பிடுவர்களுக்கான பொரியல் போலுள்ளது. 😝

பத்திய சாப்பாட்டில் சீரகத்தூள் சேர்ந்து இருக்கும், ஆனால் சீரகம் சேர்ந்ததெல்லாம் பத்தியமல்ல. ரெம்ப எளிமையான முட்டை  பொரியல். செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லவும். எல்லோருமே  செய்யலாம்.......!  😛

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

இதைப் பார்த்தால்  முட்டை  சாப்பிடாதவர்களும் சாப்பிடுவார்கள்.....நானே சந்தோஷமாய் சாப்பிடுவன் போல கிடக்கு ஆனால் இன்டைக்கு சனி பிரதோஷம். அதனால் ரிஜக்ட் ....!

சார் சனி பிரதோஷம் நாள் அதுவுமாய் முட்டைப்பொரியல் பக்கம் ஏன் போனாரு? wave goodbye goodbye GIFs GIF

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

சார் சனி பிரதோஷம் நாள் அதுவுமாய் முட்டைப்பொரியல் பக்கம் ஏன் போனாரு? wave goodbye goodbye GIFs GIF

சும்மா எட்டிப்பார்த்திருப்பாரு  அடுப்படி மூலயை கருகிற வாசனை அடித்திருக்கலாம்

Share this post

Link to post
Share on other sites

Omega-3 முட்டைப் பொரியல்

- - - - - 

சிறுவயதில் சனி ஞாயிறு நாட்களில் வீட்டு வளவில் காவிளாய்ச் செடிகளுக்குக் கீழ் சருகுகளிலும் மரங்களின்கீழ் நிழலான ஒதுக்குப் புறங்களிலும் எமது கோழிகள் இட்ட முட்டைகளைத் தேடி ரோந்து போவது வழக்கம்.  ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகள் சிக்கினால் மட்டுமே வீட்டாருக்குப் போய்ச் சேரும். எப்படியும் ஒரு முட்டையாவது சிக்கும். அதனை ஊசி ஒன்றினால் ஓட்டை போட்டு அப்படியே பச்சையாக உறிஞ்சிக் குடித்த சுவை இன்னும் மறக்கவில்லை. முட்டை எந்த வடிவில் தயார் செய்தாலும் அதன் இயற்கையான சுவை மாறாமல் இருக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்

IMG_0889.jpg
3 நாட்டுக்கோழி முட்டை (Bio - organic முட்டையாக இருந்தால் நல்லது )
1 காளான்
1 வெங்காயம்
உப்பு
மிளகுதூள்
மஞ்சள்
rapeseed oil - organic (colza) - இல்லாதவர்கள் ஒவிவ் எண்ணையைப் பாவிக்கலாம்

செய்முறை
வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
காளானின் தோலை உரித்து மெல்லியதாகக் குறுக்காக வெட்டிக் கொள்ளுங்கள்.

IMG_0890.jpg
உணவு ஒட்டாத தாய்ச்சியில் அல்லது மண் சட்டியில் எண்ணை விடாமல் காளான் துண்டுகளை மெல்லிய நெருப்பில் வேக விடுங்கள். வேக ஆரம்பித்ததும் அதிலிருந்து நீர் வெளியேறும். அந்த நீரிலேயே காளான் அவியும். விரும்பினால் சிறிதளவு உப்புத் தூவிக் கொள்ளலாம். 

IMG_0892.jpg
வெங்காயத் துண்டுகளைக் காளானுடன் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வேக விட்டு இறக்கித் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். வாசத்துக்கு சீரகம் அல்லது ஏதாவது தூவிக் கொள்ளலாம். :rolleyes:

IMG_0893.jpg
தாச்சியில் 3 முட்டைகளையும் உடைத்து மஞ்சள்கரு உடையாமல் மெதுவாக ஊற்றுங்கள். 

IMG_0894.jpg
மெல்லிய நெருப்பில் 1 நிமிடம் வேகியதும் மஞ்சள் கருவை மெதுவாக உடைத்துவிட்டு காளைனையும் வெங்காயத்தையும் அதன்மேல் போட்டு தேவையான அளவு உப்பைத் தூவிக் கொள்ளுங்கள்.

IMG_0896.jpg
அதிகம் வேக விடாமல் அரை அவியல் பதமாக ஒரு கோப்பையில் இறக்கி சில வினாடிகள் ஆற விடுங்கள்.

IMG_0897.jpg
இப்போது மிளகு தூளையும் மஞ்சளையும் தூவி, 1 அல்லது 2 மேசைக் கரண்டி rapeseed எண்ணையை அதன்மேல் தெளித்து உண்ணவும்.

IMG_0898.jpg

ஒன்றுவிட்டு ஒரு நாளைக்கு எனக்குக் காலை உணவு இதுதான். :grin:

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, இணையவன் said:

ஒன்றுவிட்டு ஒரு நாளைக்கு எனக்குக் காலை உணவு இதுதான். :grin:

டக்குத்தர்மார் முட்டை கனக்க சாப்பிடக்கூடாது எண்டு சொல்லீனம்......நீங்கள் என்னடாவெண்டால் ஒன்றுவிட்ட ஒரு நாளைக்கு முட்டைதான் காலைச்சாப்பாடு எண்டு சொல்லுறியள்.......பிரச்சனை இல்லையோ?

ஒலிவ் எண்ணெயில் பொரித்தால் உடம்பு வைக்காதோ ?
 
ஒன்ட விட்ட ஒரு நாளைக்கு 3 முட்டை சாப்பிடுற நீங்களோ😉

Share this post

Link to post
Share on other sites

தக்காளி ஒம்லேட் .. 😋

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.