யாழ் இணையம்

அறிவித்தல்: யாழ் இணையம் 21 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

Recommended Posts

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,


எதிர்வரும் 30.03.2019 அன்று யாழ் இணையம் தனது 21 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 21 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 21 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 21 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் தயாராக உள்ளது. கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் இரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  1. யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  2. ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  3. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  4. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  5. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  6. ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  7. ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

 யாழ் இணைய நிர்வாகம்

Share this post


Link to post
Share on other sites

யாழ் 21 வயதை எட்டுவதால் adult theme இல் ஏதாவது எழுதலாமா என்று யோசிக்கின்றேன்!😁

Share this post


Link to post
Share on other sites
34 minutes ago, கிருபன் said:

யாழ் 21 வயதை எட்டுவதால் adult theme இல் ஏதாவது எழுதலாமா என்று யோசிக்கின்றேன்!😁

ஏதோ மார்க்கமா எழுத நினைச்சிட்டாப்பல.......😛

இப்படி எத்தனைபேர் கிளம்பப்போறாய்ங்களோ???😵

Share this post


Link to post
Share on other sites

 

முதற்கண் 21 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் யாழுக்கு நானும் தவழ்ந்து எழுந்து நடந்த இடம் என்றபடியால் வாழ்த்துக்கள்.

இந்த நேரங்களிலாவது ஆக்கங்கள் படைப்போருக்கு அவர்களின் படைப்புக்கு கருத்தெழுதுபவர்களுக்கு பச்சைப்புள்ளிகள் இடும் வசதியை செய்து கொடுக்கவும்.அனேகமாக மட்டுறுத்தினர்களால் சுய ஆக்கங்கள் படைக்கப்படுவதில்லை.அதனாலோ என்னவோ அதன் வலி அவர்களுக்குத் தெரிவதில்லை.
இந்த வருடமாவது ஏதாவது மாற்றம் நடக்கிறதா பார்ப்போம்.

இது வந்தவர்களை வரவேற்க முடியவில்லை என்பதே தவிர வேறோன்றுமல்ல.

Share this post


Link to post
Share on other sites

என் இனிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்.....! இன்றும் தமிழ் எழுத்தை மறக்காமல் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் யாழ் இணையம்தான் என்பதை மகிழ்வுடன் நினைவு கூறுகின்றேன்......!  🌺

ஏதாவது எழுதியே ஆக வேண்டும் என்ன எழுதுவது என்று யோசிக்க வேண்டி இருக்கின்றேன்.......!   😊

 

Share this post


Link to post
Share on other sites

21வது அகவையில் காலடி வைக்கும் யாழுக்கு வாழ்த்துக்கள். உண்மையிலேயே எமக்கு கணனியில் தமிழ் எழுத வைத்ததே யாழ் இணையம்தான். இதன் மூலம் எமது பல புதிய உறவுகளையும் பெற்றுக் கொண்டோம். பிறந்தநாளை நினைவுகூரும் இத் தருணத்தில் ஏதாவது எழுதத்தான் வேண்டும். முயற்சிக்கிறேன். யாழ் இணையத்திற்கு எம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

என் புனைபெயருக்கு மிகுந்த வாசம் கொடுத்த தளம். என்னை நான் மேலும் புரிந்து கொள்ள உதவிய களம். தட்டுத்தடுமாறி எழுத்துப் பிழைகளுடன் இங்கே எழுத ஆரம்பித்தது இன்னும் நினைவில் உள்ளது. யாழுக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்! ❤️🎉🎊

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்க  யாழே

எங்கும் சொல்வதுண்டு

என்னை  எழுத  வைத்த

எழுதத்தூண்டிய

எழுத கற்றுத்தந்த தாயிவள்

வாழ்க  பல்லாண்டு

Share this post


Link to post
Share on other sites

அட 21 வருடம் ஆகிவிட்டதா. 20 வருடங்கள்  எனக்கும் யாழிற்குமான உறவு... வாழ்த்துக்கள். 

Share this post


Link to post
Share on other sites

நன்றிகள் என்று சொல்லிவிட்டு...நகர்ந்து விட மனது இடம் கொடுக்குதில்லை!

ஏதாவது எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகின்றது !

வாழ்த்துக்கள் யாழ் களமே...!

வாழ்ந்திடு பல்லாண்டு....!

எமது வரலாற்றின் காப்பகமாய்....மிளிர்ந்திடு..

Share this post


Link to post
Share on other sites

photo-thumb-9421.png  Bildergebnis für பலà¯à®²à®¾à®£à¯à®à¯ வாழà¯à®  photo-thumb-9421.png

எனது அன்புக்  காதலி,  யாழுக்கு... 21 வயசு ஆகிறது.💋
என்  வாழ்வில்... மிக நேசிக்கும், களம்  இது.
யாழ். களத்தில்..   நான் இணைந்த காலத்தில் இருந்து, தினமும் குறைந்தது  3 மணித்தியாலமாவது,
அதனுடன் எனது நேரத்தை செலவழிப்பேன். என்ன மந்திர, மாயமோ... தெரியவில்லை. 

அதனை ஆரம்பித்த மோகன் அண்ணாவிற்கு... சிரம் தாழ்ந்த நன்றி கூறி...
யாழ் களத்தை... பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றேன்.  👍

Share this post


Link to post
Share on other sites

                                                                                                                                                           

                                                                                                                                                 

                                                                                 

                                                                                                 

 

                                                                                                           

 

 

Edited by suvy
திரி மாற்றப்பட்டுள்ளது. மெய்யெனப் படுவது.
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள் நல்ல நட்புக்களையும் பரிசாக கொடுத்ததற்கு

Share this post


Link to post
Share on other sites

21 வது   அகவை  காணும் யாழுக்கு வாழ்த்துக்கள். என்னைத்தமிழ் எழுத வைத்து யாழ் தான்.  எனக்குள் இருந் ஆர்வத்தை  வெளிக்கொணர வைத்தும் யாழ் தான் ..முன்பு போல எழுத முடியவில்லை ஆனால் தினமும் வாசிக்க வருவேன். எழுத . நேரமின்மை ..சற்று சோம்பலும் தான் இருப்பினும் ஏதாவது  எழுத  முயற்சிக்கிறேன். 

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் யாழ் இணையம்... என்னையும் ஒரு உலகறிந்த எழுத்தாளனாக(சும்மா ஒரு ஆசை அம்பிட்டும்தான்) அறிமுக படுத்தியமைக்கு பல கோடி நன்றிகள் ...அத்துடன் எனது கிறுக்கள்களுக்கு பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றிகள்....

யாழ்மகளே நீ வெற்றி நடை போட வேண்டும்  

Share this post


Link to post
Share on other sites

இருப்தோராவது  அகவையில் காலடி வைக்கும் யாழ் இணையத்திற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். இணைய வலையில் வெற்றிநடைபோட வாழ்த்துகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

 

வணக்கம்,

யாழ் அகவை 21 சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பகுதி திறக்கப்பட்டு, கள உறுப்பினர்கள் சுய ஆக்கங்களுக்கான தலைப்புக்களை திறக்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

https://yarl.com/forum3/forum/219-யாழ்-21-அகவை-சுய-ஆக்கங்கள்/

 

பெப்ரவரி முதலாம் நாளில் இருந்து கள உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுய ஆக்கங்கள் இப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

 

மேலும் பல சுய ஆக்கங்களை இணைத்து அகவை 21 ஐ சிறப்பிக்குமாறு கள உறுப்பினர்களை வேண்டுகின்றோம்.

நன்றி

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையத்தின் 21வது அகவை. சுதந்திரமாகப் பறப்பதற்குரிய வயது. அதற்கொரு திறவுகோல் வேண்டுமே...! (Key Birthday) திறவுகோலை தங்கத்திலா, வெள்ளியிலா, பித்தளையிலா செய்வதென்று யோசிக்கிறேன்....!! 

Quellbild anzeigen

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now