• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ரதி

விதியை மதியால் வெல்லலாமா?

Recommended Posts

கொஞ்சப் பேர் சொல்லினம் விதியை மதியால் வெல்லலாம் என்று இதை நம்புகிறீர்களா?...நான் சொல்றன் முடியாது என்று இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

அது,அது நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும்...அழுது,புலம்பி கடவுளை வேண்டினால் பாவ,புண்ணியத்தை கொஞ்சம் கூட்டி குறைக்கலாம் ...சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருத்தல் என்பதும்,இல்லாமல் தவிர்த்தல் என்பதும் விதியின் விளையாட்டு அல்லவா!

நான் கடுமையான நோயின் பிடியில் இருந்து போராடி தப்பித்து விட்டேன் என்பார்கள்...தப்பித்து வரணும் என்பது தான் விதியாக இருந்தால்? ... காதலித்து திருமணம் செய்து நன்றாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தாங்கள் எந்த வித  சாதகமும் பார்க்காமல் திருமணம் செய்தோம்.நன்றாய்த் தானே இருக்கிறோம் என்பார்கள் ..அப்படி அவர்கள் வாழ வேண்டும் என்பது சித்தமாக இருந்தால் மாத்த முடியுமா?

எதோ எழுத வேண்டும் என்று தோன்றிச்சு...எழுதியிடடன்🙂

 • Like 4

Share this post

Link to post
Share on other sites

ஹாஹா🤣 சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட கதை ...முனிவர் என்ன கடவுளா? அவருக்கு எப்படித் தெரியும் முதலாவது மன்னன் தான் போரில் ஜெயிப்பான் என்று?...ஒன்று இவர் போலி முனிவராய் இருக்க வேண்டும் அல்லது ஆனைக்கும் அடி சறுக்கி இருக்க வேண்டும்....இரண்டாவது மன்னன் ஜெயிக்க வேண்டும் என்பதே விதி.

இணைப்பிற்கு நன்றி பெருமாள்  

Share this post

Link to post
Share on other sites

விதியை மதியால் வெல்லலாம் ஆனால் அதுவே மீண்டும் விதியாகி விடும்......! கண்ணதாசன் சொல்லியது......!  😒

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:

ஹாஹா🤣 சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட கதை ...முனிவர் என்ன கடவுளா? அவருக்கு எப்படித் தெரியும் முதலாவது மன்னன் தான் போரில் ஜெயிப்பான் என்று?...ஒன்று இவர் போலி முனிவராய் இருக்க வேண்டும் அல்லது ஆனைக்கும் அடி சறுக்கி இருக்க வேண்டும்....இரண்டாவது மன்னன் ஜெயிக்க வேண்டும் என்பதே விதி.

இணைப்பிற்கு நன்றி பெருமாள்  

இதில் முனிவர் மாற்றி சொல்லி இருந்தாலும் இரண்டாவது மன்னனே வெல்வான் ஏனெனில் தன்னம்பிக்கை மிக்கவர்களை விதி ஒன்றும் செய்வது கிடையாது மாறாக அங்கு விதி ஏமாற்றத்துடன் வலுவிழந்து போகும் .

Share this post

Link to post
Share on other sites

விதியை கண்டிப்பாக மதியால் வெல்லலாம். ஆனால் மதி என்பது ஒரு சில மனிதர்களின் மதியால் மட்டுமல்ல. மக்களின்,  இனக் குழுமத்தின், சமூகத்தின், குடும்பத்தின் ஒட்டுமொத்த மனிதர்களால் அல்லது பெரும்பான்மை மனிதர்களால் சரியாக மதியை பயன்படுத்தப்படும் போது விதியை இலகுவாக வெல்லலாம்.

கட்டுக்கோப்பும், ஒற்றுமையும், சாதி பேத வேறுபாடுகளை மீறி இனமானம் கொண்ட இனம் வெல்லுது. இதில் எதுவும் இல்லாத இனம் தோற்குது.

உண்மையில் விதி என்றே ஒன்றும் இல்லை.

வீதியில் சிவனே என்று சரியாக போன ஒரு விரிவுரையாளரை வாகனம் மோதி கொல்லுது என்றால் அது விதி அல்ல. அந்த ஊரில், நாட்டில் இருக்கும் மக்கள் வீதி ஒழுங்கை சரியாக மதிக்காமையால் நிகழும் ஒன்று. இப்படி சட்டங்களை மதிக்காத எம் நாடுகளுடன் ஒப்பிடும் போது ஏனைய படித்த, சட்டங்களை ஓரளவுக்கேனும் மதிக்கும் நாடுகளில் விபத்தில் ஆட்கள் சாவது குறைவாக இருப்பது ஏன்? விபத்து என்றாலே எங்கோ ஒருவரின் தவறால் இன்னொருவருக்கு ஏற்படுவது தானே?

வண்ணாத்திப் பூச்சி தியறி (butterfly theory) தான் இங்கு. எங்கோ ஒரு சிறு துணிக்கையில் நிகழும் அசைவு,சலனம், அல்லது சலனமின்மை மெதுவாக பரவி பரவி பூமியில் எங்கோ இருக்கும் இன்னொன்றை பாதிக்கின்றது. எங்கோ ஒரு நாட்டில் போன கப்பல் விபத்துக்குள்ளாகி அதன் உடைவுகள் உலகின் எங்கோ ஒரு தீவில் கரை ஒருங்கும் போது அந்த தீவிற்கு உடைவுகளில் பயணித்த சிறு எறும்பு கூட்டம் தரையிறங்கி அவ் தீவில் இலட்சக்கணக்கான வருடம் வாழும் நண்டுகளுக்கு ஆபத்தாக அமைகின்றது. உடைவுகளின் பயணத்தை தீர்மானித்தது காற்று வீசும் திசையும், புவியமைப்பும். இதில் விதி என்பது என்ன?

நாம் வெற்றியடையும் போது. எல்லாம் விதி என்று சொல்வதில்லை. தோல்வியும் இழப்பும் நிகழும் போது மட்டுமே விதியை கூப்பிடுகின்றோம்.

விதி என்பது தோற்றவர்கள் தம் தோல்விக்கான நியாயமான காரணங்களை தம்மில் தேடாமல் சோம்பேறித் தனமாக 'எல்லாம் விதி' என்று புலம்ப சொல்லும் ஒரு தப்பித்தல் காரணம் என்று தான் நான் நம்புகின்றேன்.

 • Like 4
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 2/1/2019 at 2:41 AM, நிழலி said:

விதி என்பது தோற்றவர்கள் தம் தோல்விக்கான நியாயமான காரணங்களை தம்மில் தேடாமல் சோம்பேறித் தனமாக 'எல்லாம் விதி' என்று புலம்ப சொல்லும் ஒரு தப்பித்தல் காரணம் என்று தான் நான் நம்புகின்றேன்.

விதி என்ற வார்ததைக்கு இதைவிட சிறந்த வரைவிலக்கணம் இருக்க முடியாது. ஒரு வாகன விபத்தில் ஒருவர் தப்பினால் தெய்வாதீனமாக உயிர் தப்பினார் என்று கூறுபவர்கள் அதே விபத்தில் இறந்தவரை தெய்வம்  கொன்றுவிட்டது  கூறாமல் அவன் விதி முடிந்தது என்று மூடத்தனமாக சப்பைக்கட்டு கட்டுவார்கள். 

Share this post

Link to post
Share on other sites
On ‎2‎/‎1‎/‎2019 at 1:41 AM, நிழலி said:

விதியை கண்டிப்பாக மதியால் வெல்லலாம். ஆனால் மதி என்பது ஒரு சில மனிதர்களின் மதியால் மட்டுமல்ல. மக்களின்,  இனக் குழுமத்தின், சமூகத்தின், குடும்பத்தின் ஒட்டுமொத்த மனிதர்களால் அல்லது பெரும்பான்மை மனிதர்களால் சரியாக மதியை பயன்படுத்தப்படும் போது விதியை இலகுவாக வெல்லலாம்.

கட்டுக்கோப்பும், ஒற்றுமையும், சாதி பேத வேறுபாடுகளை மீறி இனமானம் கொண்ட இனம் வெல்லுது. இதில் எதுவும் இல்லாத இனம் தோற்குது.

உண்மையில் விதி என்றே ஒன்றும் இல்லை.

வீதியில் சிவனே என்று சரியாக போன ஒரு விரிவுரையாளரை வாகனம் மோதி கொல்லுது என்றால் அது விதி அல்ல. அந்த ஊரில், நாட்டில் இருக்கும் மக்கள் வீதி ஒழுங்கை சரியாக மதிக்காமையால் நிகழும் ஒன்று. இப்படி சட்டங்களை மதிக்காத எம் நாடுகளுடன் ஒப்பிடும் போது ஏனைய படித்த, சட்டங்களை ஓரளவுக்கேனும் மதிக்கும் நாடுகளில் விபத்தில் ஆட்கள் சாவது குறைவாக இருப்பது ஏன்? விபத்து என்றாலே எங்கோ ஒருவரின் தவறால் இன்னொருவருக்கு ஏற்படுவது தானே?

வண்ணாத்திப் பூச்சி தியறி (butterfly theory) தான் இங்கு. எங்கோ ஒரு சிறு துணிக்கையில் நிகழும் அசைவு,சலனம், அல்லது சலனமின்மை மெதுவாக பரவி பரவி பூமியில் எங்கோ இருக்கும் இன்னொன்றை பாதிக்கின்றது. எங்கோ ஒரு நாட்டில் போன கப்பல் விபத்துக்குள்ளாகி அதன் உடைவுகள் உலகின் எங்கோ ஒரு தீவில் கரை ஒருங்கும் போது அந்த தீவிற்கு உடைவுகளில் பயணித்த சிறு எறும்பு கூட்டம் தரையிறங்கி அவ் தீவில் இலட்சக்கணக்கான வருடம் வாழும் நண்டுகளுக்கு ஆபத்தாக அமைகின்றது. உடைவுகளின் பயணத்தை தீர்மானித்தது காற்று வீசும் திசையும், புவியமைப்பும். இதில் விதி என்பது என்ன?

நாம் வெற்றியடையும் போது. எல்லாம் விதி என்று சொல்வதில்லை. தோல்வியும் இழப்பும் நிகழும் போது மட்டுமே விதியை கூப்பிடுகின்றோம்.

விதி என்பது தோற்றவர்கள் தம் தோல்விக்கான நியாயமான காரணங்களை தம்மில் தேடாமல் சோம்பேறித் தனமாக 'எல்லாம் விதி' என்று புலம்ப சொல்லும் ஒரு தப்பித்தல் காரணம் என்று தான் நான் நம்புகின்றேன்.

வணக்கம் நிழலி, உங்கள் கருத்திற்கே வாறன் அந்த சாரதி போக்குவரத்து விதியை மீறினார்...இதை போல முன்பும் அவர் செய்திருக்கலாம் அல்லது தெரிந்தோ/தெரியாமலோ அது தான் முதல் தடவையாக இருந்திருக்கலாம்...அந்த சாரதி பிழை விட்டார் தான்...ஆனால் அந்த அப்பாவி விரிவுரையாளர் செய்த பிழை என்ன?...அவர் ஒரு நிமிடம் அல்லது ஒரு செக்கன் முந்தி அல்லது பிந்தி அந்த இடத்திற்கு வந்திருந்தால் அவர் தப்பி இருப்பாரா இல்லையா?....சரியாய் அந்த நிமிடம் அந்த இடத்திற்கு அவரைக் கொண்டு வந்தது எது?...அது தான் விதி....இலங்கையில் போக்குவரத்து சட்டங்களை மதிக்காததால் தான் விபத்துக்கள் அதிகம் என்றும்[உண்மை தான் ] சட்டங்களை மதிக்கும் மேல் நாட்டில் விபத்துக்கள் குறைவு என்றும் எழுதியுள்ளீர்கள்...உங்கள் மன சாட் சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இருக்கும் நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை விபத்துக்கள் நடக்கின்றது என்று தெரியுமா?

விதியை,மதியால் வெல்லலாம் என்று நம் முன்னோர்கள் சொல்லக் காரணம் எது தெரியுமா? அப்படி சொல்லி இருக்கா விட்டால் சாதாரணமாய்  நடக்கக் கூடிய எல்லா விசயத்தையும் மக்கள் விதி மேல் போட்டுட்டு சோம்பேறியாய் இருந்து விடுவார்கள் என்பதற்காகத் தான் சொல்லப் பட்டது...என்ட கண் முன்னே நான் எத்தனையோ பேரைப் பார்க்கிறேன்...கடுமையாய் உழைப்பவர்கள் இன்னும் கடுமையாய் உழைத்துக் கொண்டு தான் இருக்கினம்..உழைத்து ,உழைத்து மாடாய் தோய்ந்து போய் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இறந்தவர்களும்  இருக்கிறார்கள் ...அதே நேரத்தில் பெனிபிட் எடுத்துக் கொண்டு உழைப்பவர்களை விட சந்தோசமாய் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.குருட்டு அதிஸ்ட்டத்தில் பணக்காரராய் வந்தவர்களும் இருக்கிறார்கள்...இதைத் தான் ஒவ்வொருவருடைய தலையெழுத்து,விதி என்கிறோம் 

டிரம்பைத் தெரிந்தவர்கள் நினைத்திருப்பார்களா அவர் அமெரிக்க ஜனாதிபதியாய் ஒரு நாளைக்கு வருவார் என்று  ... எங்கள் மக்களை விடுங்கள் ஒற்றுமை இல்லாத கூட்டம்.சாதி,மதம் என்று ஆதி படத் தான் சரி...ஆனால் பிரபாகரனும்,புலிகளும் கடுமையாய் உழைத்தார்களே? ...இன்னாரால் தான் தமிழ் ஈழம் கிடைக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விதி...அதற்காக எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும்.இனி மேல் கிடைக்காது என்று போட்டு பேசாமல் இருந்தால் ஒன்றும் கிடைக்காது..அது தான் விதிக்கும்,மதிக்கும் உள்ள வித்தியாசம்  

Edited by ரதி
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

அறிவுக்கு ஒவ்வாத முட்டாள்த்தனங்களை இப்போதும் உண்மை என  நம்பும் ஏமாளிகள் எந்த மக்கள்க்கூட்டத்தில் அதிகம் உள்ளார்கள் என்று ஒரு போட்டி வைத்து அதற்கு நோபல் பரிசுபோல் ஒரு விருது வழங்கப்படும் என்றால் தமிழர்கள் அந்த விருதை பலமுறை வென்ற இனமாக தமிழர்கள் இருப்பதுடன் அதை பெருமையுடன் தமக்குள் பகிர்ந்து சந்தோசப்படும் இனமாகவும் இருப்பார்கள்.

(வேறு  நாட்டு மக்களில் உள்ள ஒரு சில  பைத்தியங்கள் சில இப்படியான விடயங்களை நம்பி சில லூசுத்தனங்களைச் செய்தால் அதையும் தமக்குள் ஆர்வத்துடன்  பகிர்ந்து நாங்கள் மட்டும் இவ்வுலகில்  லூசுகள் இல்லை என்று ஆதாரங்களை காட்டுவார்கள்.)

Share this post

Link to post
Share on other sites

நான் இறப்பது விதி
அது வரைக்கும் நோய் நொடியில்லாமல் கடன் துன்பங்கள் இல்லாமல் வாழ உதவுவது மதி
என் மதிக்கு புத்துணர்ச்சி தருவது......

Share this post

Link to post
Share on other sites
40 minutes ago, குமாரசாமி said:

நான் இறப்பது விதி
அது வரைக்கும் நோய் நொடியில்லாமல் கடன் துன்பங்கள் இல்லாமல் வாழ உதவுவது மதி
என் மதிக்கு புத்துணர்ச்சி தருவது......

மிகவும் மடத்தனமான stupid கருத்துக்களைக்கூட ஒரு அழகான பாடலாக தமது கற்பனையில் எழுதி அதற்கு மிக ரம்மியமாக இசைவடிவம் கொடுத்து அதை மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்பான மின்சார வசதியை உபயோகப்படுத்தி உயர் ஒலித்தரத்தில்  இசைத்தட்டாக வெளியிட்டு அதை மனித கண்டு பிடிப்பான இணையத்தைப் பயன்படுத்தி ஒலி ஒளி பரப்பு செய்து பல லட்சக்கணக்கான மனிதர்களை அதைப் பாரவையிட வைத்து  அந்த இசையை ரசிக்கச் செய்யும்  ஆற்றல் மனிதனுக்கு உண்டு என்பதை இந்த பாடல் எமக்கு உணர்ததுகிறது. 

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, tulpen said:

அறிவுக்கு ஒவ்வாத முட்டாள்த்தனங்களை இப்போதும் உண்மை என  நம்பும் ஏமாளிகள் எந்த மக்கள்க்கூட்டத்தில் அதிகம் உள்ளார்கள் என்று ஒரு போட்டி வைத்து அதற்கு நோபல் பரிசுபோல் ஒரு விருது வழங்கப்படும் என்றால் தமிழர்கள் அந்த விருதை பலமுறை வென்ற இனமாக தமிழர்கள் இருப்பதுடன் அதை பெருமையுடன் தமக்குள் பகிர்ந்து சந்தோசப்படும் இனமாகவும் இருப்பார்கள்.

(வேறு  நாட்டு மக்களில் உள்ள ஒரு சில  பைத்தியங்கள் சில இப்படியான விடயங்களை நம்பி சில லூசுத்தனங்களைச் செய்தால் அதையும் தமக்குள் ஆர்வத்துடன்  பகிர்ந்து நாங்கள் மட்டும் இவ்வுலகில்  லூசுகள் இல்லை என்று ஆதாரங்களை காட்டுவார்கள்.)

உங்களுக்கு ஏதாவது எழுதோணும் என்டால் திரி சம்மந்தமாய் எழுதுங்கோ...அதை விடுத்து விதண்டாவாதம் கதைக்க கூடாது 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

உங்களுக்கு ஏதாவது எழுதோணும் என்டால் திரி சம்மந்தமாய் எழுதுங்கோ...அதை விடுத்து விதண்டாவாதம் கதைக்க கூடாது 

விதிப்படிதான் எல்லாம் நடக்கும் அதை மாற்ற முடியாது என்ற பைத்தியக்காரத்தனத்தைப்பற்றி இந்த திரி இருப்பதால் அதைப்பற்றியே எழுதினேன். 

Share this post

Link to post
Share on other sites
23 hours ago, tulpen said:

விதிப்படிதான் எல்லாம் நடக்கும் அதை மாற்ற முடியாது என்ற பைத்தியக்காரத்தனத்தைப்பற்றி இந்த திரி இருப்பதால் அதைப்பற்றியே எழுதினேன். 

விதி என்று ஒன்று இல்லை என்றால் அதை அறிவு பூர்வமாக நிரூபியுங்கள்...அதை விடுத்து சும்மா மொடடையாய் சொன்னால் எப்படி ஏற்பது?

முயற்சி செய்து கொண்டே இருங்கள். சரியான நேரம் வந்தால் எல்லாம் சரி வரும்."இது தான் விதி" .
 
Share this post

Link to post
Share on other sites
On ‎2‎/‎2‎/‎2019 at 3:32 PM, ரதி said:

வணக்கம் நிழலி, உங்கள் கருத்திற்கே வாறன் அந்த சாரதி போக்குவரத்து விதியை மீறினார்...இதை போல முன்பும் அவர் செய்திருக்கலாம் அல்லது தெரிந்தோ/தெரியாமலோ அது தான் முதல் தடவையாக இருந்திருக்கலாம்...அந்த சாரதி பிழை விட்டார் தான்...ஆனால் அந்த அப்பாவி விரிவுரையாளர் செய்த பிழை என்ன?...அவர் ஒரு நிமிடம் அல்லது ஒரு செக்கன் முந்தி அல்லது பிந்தி அந்த இடத்திற்கு வந்திருந்தால் அவர் தப்பி இருப்பாரா இல்லையா?....சரியாய் அந்த நிமிடம் அந்த இடத்திற்கு அவரைக் கொண்டு வந்தது எது?...அது தான் விதி....

இது ஒரு incident அல்லது coincidence; அவ்வளவு தான்.

இவ்வளவு நாளும் அவர் அதே வீதியில் போய்க் கொண்டு இருக்கும் போது எதுவும் நடக்காமல் இருந்த நிகழ்வுகள் மாதிரி இதுவும் ஒரு நிகழ்வுதான். நீங்கள் சொல்வதை பார்த்தால் இந்த நிமிடம் இந்த கருத்தை நான் எழுதுவதும், அதை நீங்கள் இன்னொரு கணத்தில் வாசிப்பதும் கூட 'விதி' என்ற நியதிக்குள் அடங்கி 'என் விதி இதுக்கு பதில் எழுதுகின்றேன். உங்களின் விதி அதை வாசிக்கின்றீர்கள்' என்ற மாதிரி ஆகிவிடும். இன்னும் சொல்லப் போனால் இன்னமும் அரதப் பழசான நம்பிக்கைகளை அந்த கால கட்டத்தினை தாண்டி வந்த பின் இன்னும் அது சரியானது என்று சொல்கின்றவர்கள் சொல்லும் 'எல்லாம் தலைவிதியில் எழுதியிருக்கு' என்ற நம்பிக்கையில் வந்து விடும். ஆனால் தலையில் எழுதப்பட்ட விதி என்று ஒன்றும் இல்லை.

On ‎2‎/‎2‎/‎2019 at 3:32 PM, ரதி said:

என்ட கண் முன்னே நான் எத்தனையோ பேரைப் பார்க்கிறேன்...கடுமையாய் உழைப்பவர்கள் இன்னும் கடுமையாய் உழைத்துக் கொண்டு தான் இருக்கினம்..உழைத்து ,உழைத்து மாடாய் தோய்ந்து போய் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இறந்தவர்களும்  இருக்கிறார்கள் ...அதே நேரத்தில் பெனிபிட் எடுத்துக் கொண்டு உழைப்பவர்களை விட சந்தோசமாய் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.குருட்டு அதிஸ்ட்டத்தில் பணக்காரராய் வந்தவர்களும் இருக்கிறார்கள்...இதைத் தான் ஒவ்வொருவருடைய தலையெழுத்து,விதி என்கிறோம் 

கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைத்து விடுமா ரதி? கடுமையான உழைப்புடன் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கும் அளவுக்கு அறிவும் இருத்தல் அவசியம் அல்லவா? அத்துடன் காலத்துக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டு, புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்துக் கொண்டு கடுமையாக உழைப்பவர்கள் தான் வெற்றியை அடைய முடியும். வெறும் கடும் உழைப்பு மட்டுமே போதாது.

அத்துடன் பெனிவிட் எடுப்பவர் உழைப்பவரை விட சந்தோசமாக இருக்கின்றார் என்பது எல்லாம் நாம் அவரை பார்த்து மனதில் ஒப்பிட்டு நினைப்பவை தான். உழைக்காமல் கிடைக்கும் மகிழ்ச்சி கேவலமானது என நினைக்காதளவுக்கு ஒருவர் மனம் கொண்டவராயின் அந்த மகிழ்ச்சியில் கொண்டாடுவதற்கு எதுவுமே இருக்காது.வீடு வாசல், சொகுசு கார்கள் தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான அடையாளங்கள் இல்லை. இப்படியான கற்பிதங்களால் தான் எம் சமூகம் அளவுக்கு மீறி ஆசைப்பட்டு மற்றவர் வாழும் வாழ்கையை வாழ நினைத்து மகிழ்ச்சி அற்ற சமூகமாக மாறி இருக்கு.

On ‎2‎/‎2‎/‎2019 at 3:32 PM, ரதி said:

டிரம்பைத் தெரிந்தவர்கள் நினைத்திருப்பார்களா அவர் அமெரிக்க ஜனாதிபதியாய் ஒரு நாளைக்கு வருவார் என்று  ... எங்கள் மக்களை விடுங்கள் ஒற்றுமை இல்லாத கூட்டம்.சாதி,மதம் என்று ஆதி படத் தான் சரி...ஆனால் பிரபாகரனும்,புலிகளும் கடுமையாய் உழைத்தார்களே? ...இன்னாரால் தான் தமிழ் ஈழம் கிடைக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விதி...அதற்காக எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும்.இனி மேல் கிடைக்காது என்று போட்டு பேசாமல் இருந்தால் ஒன்றும் கிடைக்காது..அது தான் விதிக்கும்,மதிக்கும் உள்ள வித்தியாசம்  

தேர்தலில் ட்ரம்ப் சுயேட்சையாக நின்று வெல்லவில்லையே?!

அவர் வெல்லுவார் என நம்பியதால் தான் அவரது குடியரசுக் கட்சி அவரை சனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்தது. அவர் வெல்லுவார் என அவரது இலட்சக்கணக்கான ஆதவாளர்கள் நம்பினர். அவரது குடும்பம் நம்பியது. எல்லாவற்றையும் விட ட்ரம்ப்  தான் வெல்லுவேன் என உறுதியாக நம்பினார். (ரஷ்யா செய்த தில்லாலங்கடி வேலையால் தான் அவர் வென்றவர் என்று சொல்லப்படுவது எந்தளவுக்கு உண்மை என்று இன்னமும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அதை உறுதியான காரணமாக சொல்ல முடியவில்லை)

தலைவர் / புலிகளின் தோல்வி பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். எல்லாம் எங்கள் விதி, தலையெழுத்து..அதுதான் தோற்றோம் என்று மலினப்படுத்தாமல்/ சாக்கு போக்கு சொல்லாமல் இத் தோல்விக்கான பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் மீதும் இருக்கு என்று குறிப்பிட்டுக் கொண்டு இது பற்றி இந்த திரியில் எழுதுவதை நிறுத்துகின்றேன். இல்லாவிடின் இது ஒரு அரசியல் திரியாக நீண்டு விடும்.

On ‎2‎/‎2‎/‎2019 at 3:32 PM, ரதி said:

...உங்கள் மன சாட் சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இருக்கும் நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை விபத்துக்கள் நடக்கின்றது என்று தெரியுமா?

நான் வசிக்கும்  டொரோண்டோ பெரும் பாகத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போதும் (6.418 million) வாகனங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போதும் (7.9 million - 2015 புள்ளி விபரம்: மக்களின் எண்ணிக்கையை விட வாக்கங்களின் எண்ணிக்கை அதிகம்)   விபத்துகள் குறைவாக நடக்கின்றன என்றே முடிவுக்கு வர முடியும். கடந்த வருடம் டிசம்பர் வரைக்கும் 59 உயிரிழப்புகள் மட்டுமே ஒன்ராறியோவில்  நிகழ்ந்துள்ளன.

ஒன்ராறியோ மாகாணம் வட அமெரிக்காவில் வாகான விபத்துகள் குறைந்த இடமாக பல காலமாக இருந்து வருகின்றது.

----

நான் முன்னர் சொன்ன மாதிரி. விதி என்பது தோற்றுப் போகும் போதும், இழப்புகள் வரும் போதும் மட்டுமே சொல்லப்படும் காரணமாகவே இருக்கு. தன் பிள்ளை படிச்சு பெரிய பதவிக்கு போகும் போது எவரும் 'எல்லாம் தலை விதி, படிச்சு பட்டம் பெற்று விட்டார்கள்' என்று சொல்வதில்லை, எவருக்கும் ஊதிய உயர்வு கிடைக்கும் போது 'என் தலைவிதி எனக்கு ஊதிய உயர்வு தந்து விட்டார்கள்" என்று தம் சாதனையை மறைத்து விதியை காரணம் காட்டுவது இல்லை. பக்கத்து சீட்டில் அழகான பெண்ணோ அல்லது வாலிபனோ வந்து அமர்ந்து விட்டால் 'என் தலைவிதி என் பக்கத்தில் ஒரு அழகான ஆள்' என்று சொல்வதும் இல்லை.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

விதி என்று ஒன்று இல்லை என்றால் அதை அறிவு பூர்வமாக நிரூபியுங்கள்...அதை விடுத்து சும்மா மொடடையாய் சொன்னால் எப்படி ஏற்பது?

முயற்சி செய்து கொண்டே இருங்கள். சரியான நேரம் வந்தால் எல்லாம் சரி வரும்."இது தான் விதி" .
 
ஒரு விடயம் இருக்கிறது என்போர்கள் தான் அதை நிருபிக்க வேண்டுமே தவிர இல்லை என்போர் அல்ல. கால ஓட்டத்தில் பல விடயங்கள் நடைபெறுகின்றன. அது இயற்கை.  ஒரு விடயம் நடந்து முடிந்த பின்னர் அது விதி இது முன்னரே தீரமானிக்கப்பட்டது. தலையில் எழுதப்பட்டது என்று கூறுவதைத்தான் சுத்த பைத்தியக்காரத்தனம் என்று கூறுகிறோம் 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

விதி நம்பிக்கையாளர்களுக்கு எதிரான பரவலான விமர்சனம் அவர்கள் 'சோம்போறிகள்' என்பதாகும். இக்கருத்துப் பொய்யானது எனப் பல இடங்களில் நாம் அவதானிக்கலாம். கடினமாக உழைக்கும் ஒருவர் இன்னும் வாழ்வில் முன்னேற முடியாத நிலை, அதிர்ஷ்ட லாபச்சீட்டில் கோடிகளைப் பெற்ற சாதாரண மனிதர்கள் என ஏராளமான உதாரணங்கள் உண்டு. என்னைப் பொறுத்தவரை விதி என்பது நாம் முன்போ, தற்போதோ செய்துள்ள பாவ புண்ணியங்களின் விளைவாகும். அதாவது நமது கர்ம வினைப்பயன் - இதனை உறுதியாக நான் நம்புகிறேன். என்றோ செய்த நன்மை ஒரே நாளில் ஏழையைப் பணக்காரனாக்லாம் (அதிர்ஷ்டச் சீட்டு).

அதன் பொருள் நான் சோம்போறித்தனத்தை ஆதரிக்கின்றேன் என்பதல்ல. நம் முயற்சிக்கு என்றோ ஒருநாள் பலன் கிடைக்க வேண்டும் என்பதும் விதியாகும். 'கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே' எனக் கீதை சொல்வதன் உட் பொருளும் ' உன் கடமைக்கான பிரதிஉபகாரத்தை உடனடியாக எதிர்பாராமல் அதனைச் செய். அதன் பலன் என்றோ ஒருநாள் வேறேதும் வடிவில் நிச்சயமாகக் கிடைக்கும்' என்றே நான் கருதுகிறேன்.

எனினும் விதியைப் பற்றி என்ன தான் விவாதித்தாலும் நம் சிற்றறிவுக்கு முழுமையான விடை கிடைக்காது என்ற எண்ணத்தையும் பதிந்தே ஆக வேண்டும். கணிணிகளால் Computer programs பற்றி உணர்வு / புத்திபூர்வமாக  யோசிக்க / உணரமுடியுமா?!

என்ன தான் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டாலும் மனிதன் விதி பற்றி அறிய முயல்வதும் இதுபோல் தான்! 😊

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

விதி என்பது வெளிப்படையானது. இதில் எந்த ஒளிப்பு மறைப்பும் இல்லை. பிறந்த உயிர்கள் எல்லாம் ஒரு நாள் இறந்தே தீரும் இது விதி. தண்ணீர் சராசரியாக  0 பாகையில் உறைநிலையை அடையும் 100 பாகையில் கொதிநிலையை அடைந்து ஆவியாகும். இதுவும் விதியே. எந்த தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் உண்டு. பூமியின் ஈர்பபுசக்தி ஒரு செக்கனுக்கு 11 கி.மீ. இவை எல்லாம்அறிவு பூர்வமாக  நிரூபிக்கப்பட்ட விதிகள். இவற்றை நம்புவது வேறு. ஆனால் மனித வாழ்ககையில் நடக்கும் சாதாரண சம்பவங்கள் ஏற்கனவே எவனோ எழுதி வைத்து என்று கண்மூடித்தனமாக நம்புவது எவ்வளவு முட்டாள்த்தனமோ அதை விட முட்டாள்த்தனம் கடவுளை வேண்டினால் விதியை மீறி எம்மை காப்பாற்றுவார் என்று நம்புவது. 

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, tulpen said:

விதி என்பது வெளிப்படையானது. இதில் எந்த ஒளிப்பு மறைப்பும் இல்லை. பிறந்த உயிர்கள் எல்லாம் ஒரு நாள் இறந்தே தீரும் இது விதி. தண்ணீர் சராசரியாக  0 பாகையில் உறைநிலையை அடையும் 100 பாகையில் கொதிநிலையை அடைந்து ஆவியாகும். இதுவும் விதியே. எந்த தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் உண்டு. பூமியின் ஈர்பபுசக்தி ஒரு செக்கனுக்கு 11 கி.மீ. இவை எல்லாம்அறிவு பூர்வமாக  நிரூபிக்கப்பட்ட விதிகள். 

Tulpen, நீங்கள் மேற் கூறிய விதிகள் எல்லாம் மனிதருக்குத் தெரிந்திருப்பதால் 'இவ்வளவு தான் விதிகள்; வேறு விதிகள் இல்லை' என்று சொல்லிப் புறந்தள்ள முடியாது. எல்லா விதிகளும் மனிதனால் நிரூபிக்கப்படும் முன்னர் அறியப்படாமலே இருந்திருக்கின்றன அல்லவா? உதாரணமாக புவியீர்ப்பு விதி பற்றி 5000 ஆண்டுகளுக்கு முன்னர் மனித குலம் அறியாமல் இருந்திருக்கலாம். அதனால் அக்காலத்தில் புவியீர்ப்பு சக்தி இல்லை என முடிவெடுக்க முடியுமா? நமது ஆராய்ச்சிக்கு எட்டாத விடயங்கள் / விதிகள் இருக்கலாம். எதிர்காலத்தில் பல அறியப்படலாம். ஆனால் எல்லா விதிகளும் அறியப்பட்டால் இப்பிரபஞ்சத்தைப் படைத்த கர்த்தா எதற்கு? இது இயற்கையின் இரகசியம். இதுவும் ஒரு விதி தான்! 

நமது சிற்றறிவு கொண்டு  அறிந்திட முடியாது. பெரிய அறிவியல் என்றேல்லாம் நாம் புளகாங்கிதம் அடைவதெல்லாம் இச் சிற்றறிவு கொண்டு தானே?! ☺️

Edited by மல்லிகை வாசம்
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

விதி அதன் வேலையை 24/7 என்று பார்க்க இயலும்...

மதி அப்படி அல்ல...

Share this post

Link to post
Share on other sites
On 1/30/2019 at 9:57 PM, ரதி said:

கொஞ்சப் பேர் சொல்லினம் விதியை மதியால் வெல்லலாம் என்று இதை நம்புகிறீர்களா?...நான் சொல்றன் முடியாது என்று இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

அது,அது நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும்...அழுது,புலம்பி கடவுளை வேண்டினால் பாவ,புண்ணியத்தை கொஞ்சம் கூட்டி குறைக்கலாம் ...சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருத்தல் என்பதும்,இல்லாமல் தவிர்த்தல் என்பதும் விதியின் விளையாட்டு அல்லவா!

நான் கடுமையான நோயின் பிடியில் இருந்து போராடி தப்பித்து விட்டேன் என்பார்கள்...தப்பித்து வரணும் என்பது தான் விதியாக இருந்தால்? ... காதலித்து திருமணம் செய்து நன்றாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தாங்கள் எந்த வித  சாதகமும் பார்க்காமல் திருமணம் செய்தோம்.நன்றாய்த் தானே இருக்கிறோம் என்பார்கள் ..அப்படி அவர்கள் வாழ வேண்டும் என்பது சித்தமாக இருந்தால் மாத்த முடியுமா?

எதோ எழுத வேண்டும் என்று தோன்றிச்சு...எழுதியிடடன்🙂

😀

Share this post

Link to post
Share on other sites
On ‎2‎/‎6‎/‎2019 at 1:19 PM, மோகன் said:

😀

உண்மையிலேயே,சத்தியமாய் மறந்து போய்ட்டன்☺️...இதே வேலையாய் தேடி எடுத்தமைக்கு நன்றிகள் மோகன்  🤗

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this