Jump to content

ஏறாவூர் விபத்தில் – விரிவுரையாளர் உயிரிழப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

accident-1-2-720x450.jpg

ஏறாவூர் விபத்தில் – விரிவுரையாளர் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற விபத்தில் விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இன்று(வியாழக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தை வீதி, செங்கலடியைச் சேர்ந்த கந்தக்குட்டி கோமளேஸ்வரன் (வயது 48) என்ற மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த விரிவுரையாளரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/ஏறாவூர்-விபத்தில்-விரிவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா வீதிகளில்.. பேரூந்து ஓட்டுனர்கள்.. ஆட்டோ ஓட்டுனர்கள்.. பெரும்பாலானோர்.. எந்த விதிகளையும் மதிப்பதாக இல்லை. அதனால்.. விபத்துக்களும்.. அநியாய உயிரிழப்புக்களுமே மிச்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nedukkalapoovan said:

சொறீலங்கா வீதிகளில்.. பேரூந்து ஓட்டுனர்கள்.. ஆட்டோ ஓட்டுனர்கள்.. பெரும்பாலானோர்.. எந்த விதிகளையும் மதிப்பதாக இல்லை. அதனால்.. விபத்துக்களும்.. அநியாய உயிரிழப்புக்களுமே மிச்சம். 

அதை விட மோசம் குடித்து விட்டு சைக்கிள் ,மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் 
முந்தைய நாள் எனது காரிலும் சிறு விபத்து , போதை தலைக்கேறியதில் பின்புறம் பார்க்காமல் காரின் முன் சைக்கிளுடன் பாய்ந்துவிட்டார் 
கணப்பொழுதில் சடன் பிரேக் அடித்தும் கார் தட்டி விட்டுவிட்டது ,காலில் சிறுகாயத்துடன் தப்பிவிட்டார் 
சுற்றி இருந்தவர்கள் காரைப்பர்த்துவிட்டு அவருக்கு ஏதாவது என்னிடமிருந்து பிடுங்கி கொடுக்க முயன்றும் DASH CAM வீடியோ என்னை  காப்பாற்றிவிட்டது. இப்போது இப்படியாக முழு நேரத்தொழிலிலும் இறங்கியிருக்கிறார்கள் இலங்கை குடி மக்கள் 
உயிரை பணயம் வைத்து நல்ல உயர் சாதிக்கார் முன் பாய்வது ,பிறகு அவனிடமிருந்து நன்றாக கறப்பது , 
 
Link to comment
Share on other sites

8 hours ago, nedukkalapoovan said:

சொறீலங்கா வீதிகளில்.. பேரூந்து ஓட்டுனர்கள்.. ஆட்டோ ஓட்டுனர்கள்.. பெரும்பாலானோர்.. எந்த விதிகளையும் மதிப்பதாக இல்லை. அதனால்.. விபத்துக்களும்.. அநியாய உயிரிழப்புக்களுமே மிச்சம். 

இவர்களுடன் மகிழூந்து ஓட்டுனர்கள், உந்துருளி ஓட்டுநர்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

உந்துருளி ஓட்டுனர்கள் தாறுமாறாக, குறுக்கும் மறுக்குமாக ஓடுவதை இலங்கை முழுவதிலும் காணலாம்.  

தற்போது, மகிழூந்து ஓட்டுனர்களும் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்ற தோரணையில் தான் ஓடுகின்றனர். 

Link to comment
Share on other sites

பேரூந்து சாரதியின் தறிகெட்ட ஓட்டத்தினால் பலியான விரிவுரையாளர் - காணொளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

பேரூந்து சாரதியின் தறிகெட்ட ஓட்டத்தினால் பலியான விரிவுரையாளர் - காணொளி

என்ன கொடுமை ...ஆத்மா சாந்தியடையட்டும்...அவர் ஓரமாய்த் தானே போனவர்...இந்த பேருந்து சாரதி அவரை அடிப்பதற்கு என்றே எமன் ரூபத்தில் ஒட்டி இருக்கார்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ரதி said:

என்ன கொடுமை ...ஆத்மா சாந்தியடையட்டும்...அவர் ஓரமாய்த் தானே போனவர்...இந்த பேருந்து சாரதி அவரை அடிப்பதற்கு என்றே எமன் ரூபத்தில் ஒட்டி இருக்கார்  

அதுதான் விதி தங்கச்சி............விதி....tw_anguished:

Link to comment
Share on other sites

இது போன்ற விதிமுறைகளை அப்பட்டமாக மீறி ஏற்படும் விபத்துக்களின் போது மரணமானவர் குடும்பத்திற்கு 3, 4 கோடிக்கணக்கில் நட்டஈடு கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் சாரதிகள் 2, 3 வருடங்கள் சிறையில் அடைக்கப்படுவதுடன் வாழ் நாள் முழுவதும் எந்தவொரு வாகனமும் செலுத்த முடியாதபடி அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட வேண்டும். அப்போது தான் கொஞ்சமாவது முன்னேற்றம் ஏற்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.