போல்

வடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?

Recommended Posts

money.jpg

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசால் சுமார் 17 ஆயிரத்து 256 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடக்கு மாகாண திறைசேரியிடம் இருந்து இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

 1. அபிவிருத்திக்கு 618 மில்லியன் ரூபாய்,
 2. பிரமாண கொடைக்காக 195 மில்லியன் ரூபாய்,
 3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 310 மில்லியன் ரூபாயும்,
 4. யுனிசெப் திட்டத்தில் 188.05 மில்லியன் ரூபாயும்,
 5. 1000 பாடசாலை செயற்திட்டத்திற்காக 28 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2014 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

 1. அபிவிருத்திக்கு 908 மில்லியன் ரூபா,
 2. பிரமாண கொடைக்காக 1280 மில்லியன் ரூபாய்,
 3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 286.47 மில்லியன் ரூபாயும்,
 4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 180 மில்லியன் ரூபாயும்,
 5. யுனிசெப் 50.98 மில்லியன் ரூபாயும்,
 6. 1000 பாடசாலை செயற்திட்டத்திற்காக 35 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2015 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

 1. அபிவிருத்திக்கு 1440 மில்லியன் ரூபா,
 2. பிரமாண கொடைக்காக 400 மில்லியன் ரூபாயும்,
 3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 335.61 மில்லியன் ரூபாயும்,
 4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 355 மில்லியன் ரூபாயும்
 5. யுனிசெப் 16.43 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2016 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

 1. அபிவிருத்திக்கு 1800 மில்லியன் ரூபாயும்,
 2. பிரமாண கொடைக்காக 437 மில்லியன் ரூபாயும்,
 3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 289 மில்லியன் ரூபாயும்,
 4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 365 மில்லியன் ரூபாயும்,
 5. யுனிசெப் 7.81 மில்லியன் ரூபாயும்,
 6. சிறந்த பாடசாலை 685.35 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

 1. அபிவிருத்திக்கு 3620.50 மில்லியன் ரூபாயும்,
 2. பிரமாண கொடைக்காக 605.70 மில்லியன் ரூபாயும்,
 3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 252 மில்லியன் ரூபாயும்,
 4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 360 மில்லியன் ரூபாயும்,
 5. யுனிசெப் 7.81 மில்லியன் ரூபாயும்,
 6. அருகிலுள்ள சிறந்த பாடசாலை ஆயிரத்து 153 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2018 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

 1. அபிவிருத்திக்கு 1300.00 மில்லியன் ரூபாயும்,
 2. பிரமாண கொடைக்காக 350 மில்லியன் ரூபாயும்,
 3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 79 மில்லியன் ரூபாயும்,
 4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 324.80 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவ்வாறு 17 ஆயிரத்து 256. 15 மில்லியன் ரூபாய் வடக்கு மாகாணத்தின் கடந்த ஜந்தாண்டு கால அபிவிருத்திக்காக மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத் தகவல்கள் யாவும் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் ஊடாக மாகாண திறைசேரி தகவல் அலுவலரிடமிருந்து தகவலறியும் உரிமை சட்டம் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் ஆகும்.

இதேவேளை, மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு தருவதாக அறிவிக்கப்பட்ட நிதியில் பெரும் பகுதி நிதி வழங்கப்படுவதில்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முழுமையாக செலவிடப்படுவதில்லை என்று மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றஞ்சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வடக்கு-மாகாண-சபைக்கு-மத்/

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

இவ்வளவு பணத்தை பெற்றும் ஒன்றும் செய்யாமல் வெற்று அறிக்கைகளை விட்டதும், ஒன்றுக்கும் உதவாத நூற்றுக்கணக்கான பிரேரணைகளை நிறைவேற்றியதும், மாகாணசபை உறுப்பினர்களுடன் நீதிமன்றத்தில் மல்லுக்கட்டியதும் தான் வடக்கு மாகாணசபையினதும் விக்கி ஐயாவினதும் சாதனை.

கொடுத்த நிதியில் ஒரு பகுதிஅயை திருப்பி அனுப்ப வேண்டி வந்தது ஒன்றே போதும் விக்கி ஐயாவின் செயற்திறன் அற்ற திறமைக்கு.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

நிதி ஒதுக்கப்பட்டாலும்.. திட்டங்கள் ஆளுநரால்.. மத்திய அரசால்... ஒப்புக்கொள்ளப்படாமல் திரும்பிய நிதி தான் அதிகம். இது விக்கி ஐயாவின் செயற்திறனின்மையை காட்டவில்லை.. மாகாண சபைகள் என்பது உப்புச்சப்பற்றவை என்பதை மீண்டும் காட்டி நிற்கின்றன.

அதுபோக..யாழில்... தீவகத்தில்... சதுப்பு நிலத்தில் வீட்டுத்திட்டம் அமைப்பு.. கடலுக்குள் தாவரம் வளர்ப்பு.. கடலை மறித்து இராணுவத்துக்கு தடாகம் அமைப்பு.. என்று டக்கி அங்கிள் எவ்வளத்தை அநாவசியமாகச் செலவு செய்தும் சுருட்டியும் உள்ளார் என்பதை அங்கு போய் பார்த்தால் தெரியும்.

தெருக்கள்.. கூட.. மகிந்தர் கட்சிக்கு அல்லது அவரின் கூட்டாளிக்கட்சிகளுக்கு ஆதரவான இடங்களில் திருத்தப்பட்டும்.. மற்றவை பராமரிப்பற்றும் இருக்கக் காணலாம். இதில் மாகாண அரசு தலையிடவே முடியாது.

பண்ணை கடலில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம்.. சிதைந்து போய் கிடக்கிறது. படகுகள்.. கடலுக்குள் செயற்பாடற்று.. உக்குகிறது.

எந்தத் திட்டமும்.. நீண்ட கால தேவைகள்.. பராமரிப்புக்கள் குறித்த அக்கறையற்று.. குறும் அரசியல்.. நோக்கோடும்.. காசு கொள்ளை அடிக்கும் நோக்கடுமே செய்யப்படுகிறது.

வீடமைப்பு திட்டத்துக்கு வீட்டுக்கு 7 இலச்சம் ஒதுக்கப்பட்டும்.. 3.5 இலட்சத்தில் அரைகுறை வீடுகளை கட்டி மக்களிடம் கையளித்துவிட்டு.. மிகுதி 50% ஐ அரசியல்வாதிகளும் அலுவர்களுக்கும் பொக்கட்டுக்குள் போட்டுக்கொண்டது தான் நடந்திருக்கிறது.

இப்படி.. சொறீலங்கா எங்கனும்.. ஊழலும்.. சுருட்டலும்.. அரசியல் செல்வாக்கும்.. சட்ட ஒழுங்கின்மைகளும் தலைவிரித்தாடுகிறது. இதில் விக்கி ஐயா வின் பக்களிப்பு என்பது 1% கூட அமையாது. ஆனால்.. குற்றச்சாட்டுக்கள் எல்லாம் விக்கி ஐயாவை நோக்கி பாய்வது தான் வேடிக்கை.  🙄

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, nedukkalapoovan said:

நிதி ஒதுக்கப்பட்டாலும்.. திட்டங்கள் ஆளுநரால்.. மத்திய அரசால்... ஒப்புக்கொள்ளப்படாமல் திரும்பிய நிதி தான் அதிகம். இது விக்கி ஐயாவின் செயற்திறனின்மையை காட்டவில்லை.. மாகாண சபைகள் என்பது உப்புச்சப்பற்றவை என்பதை மீண்டும் காட்டி நிற்கின்றன.

அதுபோக..யாழில்... தீவகத்தில்... சதுப்பு நிலத்தில் வீட்டுத்திட்டம் அமைப்பு.. கடலுக்குள் தாவரம் வளர்ப்பு.. கடலை மறித்து இராணுவத்துக்கு தடாகம் அமைப்பு.. என்று டக்கி அங்கிள் எவ்வளத்தை அநாவசியமாகச் செலவு செய்தும் சுருட்டியும் உள்ளார் என்பதை அங்கு போய் பார்த்தால் தெரியும்.

தெருக்கள்.. கூட.. மகிந்தர் கட்சிக்கு அல்லது அவரின் கூட்டாளிக்கட்சிகளுக்கு ஆதரவான இடங்களில் திருத்தப்பட்டும்.. மற்றவை பராமரிப்பற்றும் இருக்கக் காணலாம். இதில் மாகாண அரசு தலையிடவே முடியாது.

பண்ணை கடலில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம்.. சிதைந்து போய் கிடக்கிறது. படகுகள்.. கடலுக்குள் செயற்பாடற்று.. உக்குகிறது.

எந்தத் திட்டமும்.. நீண்ட கால தேவைகள்.. பராமரிப்புக்கள் குறித்த அக்கறையற்று.. குறும் அரசியல்.. நோக்கோடும்.. காசு கொள்ளை அடிக்கும் நோக்கோருமே செய்யப்படுகிறது.

வீடமைப்பு திட்டத்துக்கு வீட்டுக்கு 7 இலச்சம் ஒதுக்கப்பட்டும்.. 3.5 இலட்சத்தில் அரைகுறை வீடுகளை கட்டி மக்களிடம் கையளித்துவிட்டு.. மிகுதி 50% ஐ அரசியல்வாதிகளும் அலுவர்களுக்கும் பொக்கட்டுக்குள் போட்டுக்கொண்டது தான் நடந்திருக்கிறது.

இப்படி.. சொறீலங்கா எங்கனும்.. ஊழலும்.. சுருட்டலும்.. அரசியல் செல்வாக்கும்.. சட்ட ஒழுங்கின்மைகளும் தலைவிரித்தாடுகிறது. இதில் விக்கி ஐயா வின் பக்களிப்பு என்பது 1% கூட அமையாது. ஆனால்.. குற்றச்சாட்டுக்கள் எல்லாம் விக்கி ஐயாவை நோக்கி பாய்வது தான் வேடிக்கை.  🙄

அப்ப எப்படி கிழக்கு மாகாணசபையால் பல நல்ல திட்டங்களையும் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட ரீதியில் அபிவிருத்திகளையும் செய்ய முடிந்தது?

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, நிழலி said:

அப்ப எப்படி கிழக்கு மாகாணசபையால் பல நல்ல திட்டங்களையும் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட ரீதியில் அபிவிருத்திகளையும் செய்ய முடிந்தது?

கிழக்கில் தமிழர் பகுதிகளில் நடந்த அபிவிருத்தி அல்லது நல்ல திட்டங்கள் என்ன..??!

கிழக்கு சவுதி பணத்தில்.. திட்டமிட்ட.. இஸ்லாமிய மயமாக்களின் கீழ் தான் திட்டங்கள் அமுலாக்க காண முடிகிறது.

கிழக்கில்.. சேலையும்.. தலையில்.. ஒரு துண்டும் போட்டுத் திரிந்த இஸ்லாமியப் பெண்கள் எல்லாம்.. இப்போ கண் மட்டும் தெரியும் அளவுக்கு உடுப்புகளோடு.. இப்படி பல திட்டங்கள் இஸ்லாமிய கடும் சட்டங்கள் அமுலாகி இருப்பதோடு சவுதி மற்றும் சில முஸ்லீம் நாடுகளின் உதவியுடன்.. நிதிக் கடன் திட்டங்களும் அமுலாக்கப்பட்டு வருகின்றன.

இருந்தும்.. இவை எல்லா முஸ்லீம் மாவட்டங்களையும் அடைவதில்லை. தமிழர் பிராந்தியத்தை அண்டிய இஸ்லாமிய ஆக்கிரமிப்பை நோக்கோடு கொண்டு அமையும் திட்டங்களே பல.🙄

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites
Quote

அப்ப எப்படி கிழக்கு மாகாணசபையால் பல நல்ல திட்டங்களையும் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட ரீதியில் அபிவிருத்திகளையும் செய்ய முடிந்தது?

சந்திரகாந்தன் மகிந்தவின் ஆசியோடு செயற்பட்டதை சுலபமாக மறக்கின்றீர்களே!

Quote

கொடுத்த நிதியில் ஒரு பகுதிஅயை திருப்பி அனுப்ப வேண்டி வந்தது ஒன்றே போதும் விக்கி ஐயாவின் செயற்திறன் அற்ற திறமைக்கு.

மேலே எங்கும் வந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படவில்லையே.

Edited by ஏராளன்

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, nedukkalapoovan said:

கிழக்கில் தமிழர் பகுதிகளில் நடந்த அபிவிருத்தி அல்லது நல்ல திட்டங்கள் என்ன..??!

கிழக்கு சவுதி பணத்தில்.. திட்டமிட்ட.. இஸ்லாமிய மயமாக்களின் கீழ் தான் திட்டங்கள் அமுலாக்க காண முடிகிறது.

கிழக்கில்.. சேலையும்.. தலையில்.. ஒரு துண்டும் போட்டுத் திரிந்த இஸ்லாமியப் பெண்கள் எல்லாம்.. இப்போ கண் மட்டும் தெரியும் அளவுக்கு உடுப்புகளோடு.. இப்படி பல திட்டங்கள் இஸ்லாமிய கடும் சட்டங்கள் அமுலாகி இருப்பதோடு சவுதி மற்றும் சில முஸ்லீம் நாடுகளின் உதவியுடன்.. நிதிக் கடன் திட்டங்களும் அமுலாக்கப்பட்டு வருகின்றன.

இருந்தும்.. இவை எல்லா முஸ்லீம் மாவட்டங்களையும் அடைவதில்லை. தமிழர் பிராந்தியத்தை அண்டிய இஸ்லாமிய ஆக்கிரமிப்பை நோக்கோடு கொண்டு அமையும் திட்டங்களே அமையும்.🙄

ஆகவே மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மட்டுமல்லாமல் அவர்களின் தயவு இன்றி கூட கிழக்கு மாகாணசபையால் வெற்றிகரமாக இஸ்லாமியமயப் படுத்தக் கூடியதாக இருந்திருக்கு. அவர்களின் நோக்கில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்கள் என்று தானே அர்த்தம். ஆனால் வடக்கு மாகாணசபை?

1 minute ago, ஏராளன் said:

சந்திரகாந்தன் மகிந்தவின் ஆசியோடு செயற்பட்டதை சுலபமாக மறக்கின்றீர்களே!

புரியவில்லை. சந்திரகாந்தன் பிள்ளையான் மகிந்தவின் துணையுடன் கிழக்கை அபிவிருத்தி செய்தார் என்று சொல்கின்றீர்களா? (இதே போன்ற ஒரு கருத்தை ரதியும் இன்னொரு திரியில் வைத்து இருந்தார்)

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, நிழலி said:

ஆகவே மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மட்டுமல்லாமல் அவர்களின் தயவு இன்றி கூட கிழக்கு மாகாணசபையால் வெற்றிகரமாக இஸ்லாமியமயப் படுத்தக் கூடியதாக இருந்திருக்கு. அவர்களின் நோக்கில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்கள் என்று தானே அர்த்தம். ஆனால் வடக்கு மாகாணசபை?

கிழக்கை இஸ்லாமிய மயப்படுத்தி.... இயன்ற வரை சிங்கள மயப்படுத்தி தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை சிதைக்கனும் என்ற வகையில்.. அங்கு சிங்கள அரசும்.. இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கூட்டிணைந்து செயற்படுவது.. ஹிஸ்புல்லா.. ஆளுநராக நியமிக்கப்பட்ட வகையில் இருந்து மிகவும் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆனால்.. உண்மையில் நிலை இவை எல்லாம் அங்கு நன்கு திட்டமிட்டு சிக்கல் தன்மைகளோடு.. நடைமுறையாகிறது.

அதேவேளை.. வடக்கில்.. தமிழர்களின் ஆட்சி அமைந்தாலும்.. அது தீர்க்கமாக இருக்கக் கூடாது என்பதிலும் இதே சக்திகள் இருக்கும் போது. வடக்கிலோ.. கிழக்கிலோ தமிழர் தரப்பால்.. எதை உருப்படியாக செய்ய முடியும்... செய்ய நினைத்தாலும்..??! 🙄

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

சரி, அப்படி என்றால் வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு என்ன வழிகள் இருக்கு என நினைக்கின்றீர்கள்? அவ் வழிகளில் ஏன் விக்கி ஐயா தொடக்கம் எவரும் முயற்சிக்கவில்லை?

Share this post

Link to post
Share on other sites

முயற்சிக்கவில்லை என்பது தவறு. முயற்சித்தார்கள் தடைகள் போடப்பட்டு.. முடக்கப்பட்டார் என்பதே யதார்த்தம். இதனை முன்னாள் ஆளுநர் குரோ இதய சுத்தி உள்ளவராக இருந்தார்.. பகிரங்கமாக ஒப்புக் கொள்ளலாம்.

குரோ செய்த செயல்கள்.... வாள் வெட்டுக்கும்பலை இராணுவத்தின் தயவோடு உருவாக்கி.. விசேட அதிரடிப்படையை யாழ் கோட்டைக்கு அருகில் முகாமிட வைத்தது தான்.

இப்படி ஆளுநரிடம் அதிகாரங்கள் பொதிந்த நிலையில்.. மாகாண சபை என்பது.. ஒரு உப்புச்சப்பற்றது.

சர்வதேச நிதிகளில் அமைந்த திட்டங்களில் கூட காசு சுருட்டல் நிகழ்ந்துள்ளதே தவிர திட்டங்கள் முறையாக அமுலாகாத நிலையில்..

பல சர்வதேச நிதிகளும்.. நாடுகளும் திட்டங்களில் இருந்து பின்வாங்கி உள்ளன.

நோர்வே கூட கொண்டு வர இருந்த சில திட்டங்களுக்கு மகிந்த கொம்பனி.. 10% தொடக்கம்.. 20% கையூட்டு கேட்ட நிலையில்.. நோர்வே பின்வாங்கிச் சென்றிருக்கிறது.

இப்படிப் பல. இந்த நிலையில் விக்கி ஐயா.. தமிழருக்கு என்ன செய்ய முடியுமோ.. அதை தன்னால் இயன்ற வரை செய்ய முற்பட்டிருக்கிறார் என்பது தான் யதார்த்தம். ஆனால்.. அவரால்.. எதையும் பூரணமாகச் செய்ய முடியவில்லை. அதற்கு இடமளிக்கப்படவில்லை. 🙄

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கடந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் எங்கள் ஊரின் வீதி ஜனவரி மாதம் முடிய முன்னர் புனரமைக்கப்பட்டது, மத்திய அரசு நிதியை உடனுக்குடன் வழங்க தாமதமானதாலேயே.
இது போலவே முதலமைச்சரின் காலத்திலும் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மீதியை வருட இறுதியில்  வழங்கிவிட்டு செலவு செய்யவில்லை( உண்மையில் வருட இறுதியில் அவசரமாக செலவளிக்கப்பட்டது)
என்று மத்திய அரசும் அதனோடு ஒத்தோடுபவர்களும் வாதித்தனர், ஆனால் விக்கி ஐயா வந்த நிதி எதுவும் செலவளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படவில்லை என பல தடவை அறிவித்துள்ளார்.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, நிழலி said:

ஆகவே மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மட்டுமல்லாமல் அவர்களின் தயவு இன்றி கூட கிழக்கு மாகாணசபையால் வெற்றிகரமாக இஸ்லாமியமயப் படுத்தக் கூடியதாக இருந்திருக்கு. அவர்களின் நோக்கில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்கள் என்று தானே அர்த்தம். ஆனால் வடக்கு மாகாணசபை?

புரியவில்லை. சந்திரகாந்தன் பிள்ளையான் மகிந்தவின் துணையுடன் கிழக்கை அபிவிருத்தி செய்தார் என்று சொல்கின்றீர்களா? (இதே போன்ற ஒரு கருத்தை ரதியும் இன்னொரு திரியில் வைத்து இருந்தார்)

ரதி எங்கே சொன்னார்?... பிள்ளையான் திரும்பவும் முதலமைச்சராய் வரக் கூடாது என்பதற்காகத் தான் தூக்கி உள்ளே  வைத்து இருக்கிறார்கள்...வந்தால் தமிழர்களுக்கு நல்லது செய்து போடுவார்...இங்கே யாழில் எழுதுபவர்களுக்கு கிழக்கில் தமிழ் சனம் எப்படிப் போனாலும் பரவாயில்லை அவர்கள்[பிள்ளையான்] உள்ளே இருந்தால் சரி.

வெட்கமில்லாமல் இங்கே சிலர்  சீவிக்கு சப்போட் பண்ணுவதை பார்த்தால் அவரே அனந்த கண்ணீர் வடிப்பார் 
  
Share this post

Link to post
Share on other sites

விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை செய்திருக்கக் கூடிய பலவற்றை செய்யவில்லை என்பதுவும், மக்கள் நலன்கள் தொடர்பாக வெளிப்படையாக தெரியாத பலவற்றையும் செய்துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது.

வட மாகாணசபையின் பதவிக் காலத்தில், சுமந்திரன் - மாவை - ஸ்ரீதரன் - சரவணபவன் - சிவஞானம் போன்றவர்கள் ரணிலுடன் - ஆளுநர்களுடன் - சேர்ந்து போட்ட முட்டுக்கட்டைகள் வட மாகாணசபையின் செயற்திறனை 40% க்கும் அதிகமாக குறைந்திருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

விக்னேஸ்வரன் அவர்களின் அரசியல் கையாளுதல் அனுபவமின்மையும், அவருடன் கூடவிருந்த குள்ளநரிகள் போன்றவர்களின் செயற்பாடுகளும் வட மாகாணசபையின் செயற்திறனை 10% க்கும் அதிகமாக குறைந்திருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

மாகாண சபையின் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்தும் அதிகாரம் திட்டமிட்ட தமிழின அழிப்பை செய்துவரும் சிங்கள-பௌத்த பயங்கரவாத இயந்திரத்தின் கைகளில் இருப்பதையும் எவரும் மறுக்க முடியாது. இது தமிழின விரோத ஹிந்திய கயவர்களால் ஏற்படுத்தப்பட்ட பொறி!   

இதே இடத்தில் மாவை அல்லது சுமந்திரன் இருந்திருந்தால் விக்னேஸ்வரன் அவர்கள் சாதித்ததில் 40% ஜக் கூட செய்திருக்க மாட்டார்.

இதே இடத்தில் சம்மந்தன் இருந்திருந்தால் விக்னேஸ்வரன் அவர்கள் சாதித்ததில் 5% ஜக் கூட செய்திருக்க மாட்டார்.

வட மாகாணசபையின் பதவிக் காலத்தில், வேறுயாராலும் செய்திருக்க முடியாத ஒன்றை விக்னேஸ்வரன் அவர்கள் உறுதியாக செய்து முடித்திருந்தார். அது சிங்கள-பௌத்த அரசின் திட்டமிட்ட இனவழிப்புகளையும், ஆக்கிரமிப்புக்களையும் சட்டவலுவுள்ள ஆவணங்களாக தயாரித்து சர்வதேச பிரதிநிதிகள் பலரிடம் கையளித்துள்ளார்.

எனவே, இவற்றையும் மனதில் கொண்டு கருத்தெழுவது தமிழினத்தின் எதிர்காலத்துக்கு  உதவியாக இருக்கும்.

அதற்காக உண்மைகளை (விக்னேஸ்வரன் அவர்களால் செய்யமுடியாது போனவற்றை) மறைக்கத் தேவையில்லை. உண்மைகளை மறைப்பதுவும் நல்ல எதிர்காலத்துக்கு  உதவப் போவதில்லை.

தமது பலவீனங்களை விக்னேஸ்வரன் அவர்கள் தரப்பும் உணர்ந்து திருந்த வேண்டும்.

அதற்காவே இந்த தலைப்பை இங்கு இணைத்தேன்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, ரதி said:

வெட்கமில்லாமல் இங்கே சிலர்  சீவிக்கு சப்போட் பண்ணுவதை பார்த்தால் அவரே அனந்த கண்ணீர் வடிப்பார் 
  
இதுதான் உண்மை.

விக்கியாரின் அத்தியாயம் எப்போதோ முடிந்துவிட்டது.

இனி தலை காட்ட முடியாது.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, போல் said:

விக்னேஸ்வரன் அவர்களின் அரசியல் கையாளுதல் அனுபவமின்மையும், அவருடன் கூடவிருந்த குள்ளநரிகள் போன்றவர்களின் செயற்பாடுகளும் வட மாகாணசபையின் செயற்திறனை 10% க்கும் அதிகமாக குறைந்திருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

தமது பலவீனங்களை விக்னேஸ்வரன் அவர்கள் தரப்பும் உணர்ந்து திருந்த வேண்டும்.

 உண்மைதான்.

விக்கியார் அரசியலில் கத்துக்  குட்டி.

நீதிவானாக நீதிமன்றங்களிலும் பஞ்சாயத்து தீர்ப்புகளை, எப்படித்தான் வழங்கி இருப்பாரோ, யாமறியோம்.

Share this post

Link to post
Share on other sites

இந்த தரவுகள்  ஏற்றப்படுத்த முனையும் தோற்றதின் நிதர்சனமும், உண்மையான நிலவரத்தின் நிதர்சனத்தையும் சொல்லாடல்களையும், வரிக்கிளுக்கிடையேயும் கூர்ந்து கிரகித்தால் உண்மை புலப்படும்.

செய்தியின் சாராம்சம், பெருமளவு நிதி வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்டாலும், விக்கியின் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவமின்மையே நிதி பயன்படுத்தப்படாமல் போனததற்கான காரணம். ஓர்தரவுகளின் படி  சனநாயக அமைப்பிடற்கு வழங்கப்பட்டாலும், செலவு செய்யப்படாமையின்  குறையை, குற்றத்தை ஓர் தனி நபரின் மீது சுமத்துவது.

விக்கி மீது வெளிப்படையான விமர்சனம் இல்லாவிட்டாலும், அவர் மீதான குறை தொக்காக  தொனிக்கிறது.

இங்கே அதை வரிக்கு வரி மேளம் அடித்து காட்டுபவர்களும் இருக்கிறார்கள், செய்தியை விட.

தரவுகளின் படி, நிதி ஒதுக்கப்பட்டது என்றே இருக்கிறது. நிதி ஒதுக்கம் என்பது ஓர் மெலெழுந்தவரியான திட்டமிடல். இதில் எந்த விதமான இறுதியான தீர்மானமோ, ஆகக்குறைந்தது வாக்குறுதியோ இல்லை.

ஒதுக்கப்பட்ட நிதி, அனுப்பப்பட்டதா (அதாவது திரை சேரியின் மத்திய வங்கி கணக்கில் இருந்து) என்பதாய் யாரவது உறுதி படுத்த முடியுமா?

அப்படி அது அனுப்பப்பட்டிருந்தால், அது ஆளுநரின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கி
கணக்கிற்கு வந்தடைந்திருக்கும்.  ஆனாலும், அந்த நிதி எப்போது வந்தடைந்தது என்பது தெரியாது. நிதியாண்டின் இறுதி வாரத்தில் வந்தாலும் வந்தடைந்தது என்பதே அர்த்தம், ஆனால் நடைமுறையில் ஒன்றுமே செய்யதிருக்கமுடியாது, ஆளுநரால் கூட.

அப்படி ஆளுநர் வங்கிகணக்கில் நிதி வந்தடைந்திருந்தால், வடமாகாணசபையின் பாதீடு மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஆளுநர் வங்கி கணக்கில் இருந்து, உரிய ஆவணங்களில் ஆளுநர் மற்றும் திறைசேரியின் ஒப்புதல் ஒப்பத்துடன், உரிய நேரத்தில்,வடமாகாண சபையின் வங்கி கணக்கிற்க்கு விடுவிக்கப்பட்டதா (funds released) ?

வடமாகாண சபையின் வங்கி கண்ணக்கு கூட, திறைசேரியால் முடக்க  அல்லது தடுக்க முடியும், அப்படி நிதி வடமாகாணசபை வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டாலும்.

இது public finance இல் உள்ள சாதாரண கட்டுப்பட்டு முனைகளும், அதிகார  மையங்களும்.

சொறி லங்கா, இதை விட அதிகார கட்டுப்பட்டு முனைகளை, வடமாகாண சபையை பொறுத்தவரை உருவாக் கியிருந்தால், அதில் ஒன்றும் வியப்பில்லை.

மேலே சொல்லியவற்றை மனதில் இருத்தி, தரவுகளை மீண்டும் வாசியுங்கள்.

உங்களுக்கே, செய்தியின் தரவுகள் ஏற்ப்படுத்த முனையும் தோற்றத்தின் விம்பம், யாரை தாக்குவதற்கு என்பது புரியும்.

மறுவளமாக, யாரையும் குறைக்கவோ அல்லது கூட்டுவதத்திற்கோ இதை நான் இங்கு எழுதவில்லை.

Edited by Kadancha
add info.
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, நிழலி said:

இவ்வளவு பணத்தை பெற்றும் ஒன்றும் செய்யாமல் வெற்று அறிக்கைகளை விட்டதும், ஒன்றுக்கும் உதவாத நூற்றுக்கணக்கான பிரேரணைகளை நிறைவேற்றியதும், மாகாணசபை உறுப்பினர்களுடன் நீதிமன்றத்தில் மல்லுக்கட்டியதும் தான் வடக்கு மாகாணசபையினதும் விக்கி ஐயாவினதும் சாதனை.

20 hours ago, ஏராளன் said:

மேலே எங்கும் வந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படவில்லையே.

செய்தியின் தரவுகள் ஏற்றப்படுத்த முனைந்த தோற்றத்தை நீங்களே ஏற்றுக்கொண்டு விட்டீர்கள், ஓர் மறு கேள்வியுமின்றி.

Share this post

Link to post
Share on other sites

விக்கி ஐயா வே சொல்லி இருக்கிறார் அபிவிருத்தி செய்ய நினைத்தால் தனது தனிபடபட்ட தொடர்புகள் முலம் செய்திருக்கலாம் ஆனால் அபிவிருத்திக்கு முன் தீர்வுதான் முக்கியம் என்று

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, சுவைப்பிரியன் said:

விக்கி ஐயா வே சொல்லி இருக்கிறார் அபிவிருத்தி செய்ய நினைத்தால் தனது தனிபடபட்ட தொடர்புகள் முலம் செய்திருக்கலாம்

அர்த்தம் உங்களுக்கு புரியவில்லையா?

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, சுவைப்பிரியன் said:

விக்கி ஐயா வே சொல்லி இருக்கிறார் அபிவிருத்தி செய்ய நினைத்தால் தனது தனிபடபட்ட தொடர்புகள் முலம் செய்திருக்கலாம் ஆனால் அபிவிருத்திக்கு முன் தீர்வுதான் முக்கியம் என்று

தீர்வும் இல்லை,அபிவிருத்தியும் இல்லை.இப்படியே காலத்தை கடத்த வேண்டியது தான் 😧

Share this post

Link to post
Share on other sites
29 minutes ago, ரதி said:

தீர்வும் இல்லை,அபிவிருத்தியும் இல்லை.இப்படியே காலத்தை கடத்த வேண்டியது தான் 😧

மட்டக்களப்பில் பிள்ளையானின் அபிவிருத்தி ( நீங்கள் கூறும்) எங்கே?

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, சுவைப்பிரியன் said:

விக்கி ஐயா வே சொல்லி இருக்கிறார் அபிவிருத்தி செய்ய நினைத்தால் தனது தனிபடபட்ட தொடர்புகள் முலம் செய்திருக்கலாம் ஆனால் அபிவிருத்திக்கு முன் தீர்வுதான் முக்கியம் என்று

அவர் அதைச் செய்திருக்கலாம் என்பது தான் என் அபிப்பிராயம். மேலும், மாகாண சபையின் தற்போதைய குறைபாடுகள் நிவர்த்திக்கும் வரை அபிவிருத்தி இயலாது என்பதும் ஒரு நொண்டிச்சாட்டு எனக் கருதுகிறேன். ஆளுனரோடு ஆளுனரின் செயலாளரோடு (அவரோடும் மோதல் இருந்ததாக தகவல்?) working relationship ஆவது வைத்திருந்து பணியார்றியிருக்கலாம். கடஞ்சா சொல்வது போல ஒதுக்கியதும் வந்ததும் வெவ்வேறாக இருக்க இந்த உராய்வுள்ள உறவுகள் தான் காரணமோ தெரியாது.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.