Jump to content

தமிழ் மாணவி... விண்வெளிக்கு செல்ல உள்ளார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.320.160.600.053.800.700.160.90-720x450.jpg

விண்வெளிக்கு பயணமாகும், முதல் ஈழத்தமிழ் மாணவி!

ஈழத்தமிழ் மாணவி ஒருவர் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு பயணமாகவுள்ளார்.

பிரித்தானியாவில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவியே, விண்வெளி தொடர்பான கற்கைநெறியில் சிறப்பு தேர்ச்சி பெற்று விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றனர்.

செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியிலிருந்து நில அளவை செய்வது என பல துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆய்வு மையம் தீர்மானித்திருந்தது.

அதன்படி,  ஈழத்தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்திரன் திறமையாக செயற்பட்டு விண்வெளிக்கு செல்லும் இருவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவருடன் இணைந்து பிரித்தானிய மாணவியான டியானாவும் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.

Tamil_News_large_2203552.jpg

http://athavannews.com/விண்வெளிக்கு-பயணமாகும்-ம/

 

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பறக்கும் பாவைகளுக்கு வாழ்த்துக்கள். போய் வாருங்கள்.......!  

Link to post
Share on other sites

இது போன்று செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேரும் சமயம் வந்தால் யாரெல்லாம் குடியேர தயாராவீர்கள்...

எனது வீட்டில் வெளிநாடு என்றாலே என் மனைவி துடைப்பானையும் செருப்பையும் எடுக்காத குறை தான்... எனது மனைவி மட்டுமல்ல குடும்பமே...

இந்த சிறு வயதில் விண்வெளிக்கு செல்லும் இந்த மங்கைக்கு எந்தளவு மன துணிச்சலும் பக்குவமும் இருந்திருக்க வேண்டும்...

இதய பூர்வமான வாழ்த்துக்கள்...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

E_1476333361.jpeg

பிரபஞ்சத்தை அருகில் காண செல்லும் மாணவிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .. 💐

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மைத்திரியின் ஊடாக கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள்- பிள்ளையான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்களென ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும்  கூறியுள்ளதாவது, “கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் தங்களது தலைவிதியை மாற்றிக் கொள்வதற்கு தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அபிவிருத்தி, அதிகார விடயங்கள் எவை வந்தாலும் உங்களுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற அளவிற்கு நீங்கள் மாற்றமடைய வேண்டும். இதனை கொழும்பிலோ அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்தோ வருகின்றவர்கள் தீர்மானிப்பதன் காரணமாக பல முறைப்பாடுகள், அழிவுகளை கடந்த காலத்தில் கண்டோம். இந்த கசப்பான அனுபவங்களை வைத்துதான் எமது கட்சி உருவானது. கிழக்கு மாகாணத்தில் உதித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை அழித்து விட வேண்டும் என்பதற்காகத்தான் என்னைக் கூட சிறையில் அடைத்தார்கள். அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எந்தவிதமான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என்ற நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்,பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேன வந்தால் என்னை சிறையில் அடைப்பதாக மேடையில் பேசினார். அதை நடாத்திக் காட்டினார்கள். பரவாயில்லை. என்னை சிறையில் அடைத்ததை தவிர அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்றால் அவரது கிராமமான புதுக்குடியிருப்பிலுள்ள பாடசாலையை மூடுவதற்கான நிலைமைக்கு வைத்துள்ளார். நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு எங்களது கிராமத்தினை கட்டியெழுப்பாமல் போனால் ஏனைய கிராமங்களை எவ்வாறு கட்டியெழுப்புவோம். இந்த கேள்வியை அவர்களிடத்தில் கேட்டுப் பார்க்க வேண்டும். எங்களது மாகாணத்தினை நாங்களே நிர்ணயிக்க கூடிய மக்கள் கூட்டமாக ஆவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது” என்றார். http://athavannews.com/மைத்திரியின்-ஊடாக-கூட்டம/
    • துருக்கியின் சவாலை எதிர்கொள்ள பிரான்ஸிடமிருந்து 18 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் கிரேக்கம்! கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான வளர்ந்து வரும் ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரேக்கம் மற்றும் பிரான்ஸ் 2.5 பில்லியன் யூரோக்கள் (3 பில்லியன் டொலர்கள்) போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஏதென்ஸில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த ஒப்பந்தத்தில், கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் நிகோஸ் பனகியோடோபஒவுலோஸ் மற்றும் பிரான்ஸ் பிரதிநிதி புளோரன்ஸ் பார்லி கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் ‘பல திசைகளில் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது’ என்று கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் கூறினார். இயற்கை எரிவாயு வளங்கள் மற்றும் அந்தந்த கடற்கரைகளுக்கு வெளியே உள்ள கடலில் கடற்படை செல்வாக்கு தொடர்பாக துருக்கியுடனான மோதலில் பிரான்ஸ் கிரேக்கத்தை கடுமையாக ஆதரித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கிரேக்கம் 18 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்குவதைக் காணும், அவற்றில் பிரான்ஸின் வான்படையின் பாவனையில் உள்ள 12 விமானங்களும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் உதிரிப்பாகங்களும், ஆயுதத் தளபாடங்களும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/துருக்கியின்-சவாலை-எதிர்/
    • அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதி: பைடன் கையெழுத்து! அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, மூன்றாம் பாலினத்தவர்கள் இராணுவத்தில் சேர வழிவகை செய்தார். ஒபாமாவின் இந்த உத்தரவை பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் நீக்கினார். தற்போது மீண்டும் ட்ரம்ப் விதித்த தடையை நீக்கி, அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, அமெரிக்க ராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பணி புரியலாம் ஆனால் இராணுவத்தில் புதிதாக மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜோ பைடன் கூறுகையில், ‘அமெரிக்க இராணுவத்தில் சேவை செய்யத் தகுதியுள்ள அனைவரும் இராணுவத்தில் சேரலாம். தகுதியுள்ள அனைவரும் வெளிப்படையாகவும் பெருமையுடனும் சேவை செய்யும்போது அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும், அதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது’ என கூறினார். http://athavannews.com/அமெரிக்க-இராணுவத்தில்-மூ/
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்சர் லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், ‘கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் வரும் ஆண்டுகளில் சமூகம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்த மாதிரியாக வடிவமைக்கப்படும் என்பதில் இன்னும் மிகப்பெரிய நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதையெல்லாம்விட, கொரோனா தடுப்பூசி படிப்படியாக சர்வதேச அளவில் மறுதொடக்கம் ஆகியுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது உடனடியாகவோ எளிதாகவோ இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாஸ்க் அணிந்து கொள்வது, கூட்டங்களை தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த ஆண்டும் தொடரும் என்றும் அடுத்த ஆண்டும் தொடரலாம் அத்துடன், நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் கொரோனா தடுப்பு செயல் குழுவின் துணைத்தலைவராக லாரன்ஸ் வாங் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனாவின்-தாக்கம்-எதிர்/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.