suvy 5,122 Report post Posted February 1 உ சிவமயம். திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம். "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்" அன்புறவுகளுக்கு , நான் கடந்த ஆவணி மாதம் மனைவி மற்றும் மகனுடன் ஊருக்கு போய் இருந்தேன். அதை ஒரு பயணம் என்று சொல்வதைவிட கோவில் சுற்றுலா என்பது பொருந்தும். ஆவணி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பெரும்பாலான ஆலயங்களில் உற்சவங்கள் நடைபெறும்.ஊர் முழுவதும் ஒரே கோலாகலமாக இருக்கும். கோவில்கள் எல்லாம் புதிதாக வர்ணங்கள் பூசி மிக அழகாக இருந்தன.நானும் பல வருடங்களின் பின் அங்கு சென்றதால் ஒருவித பரவச நிலையில் இருந்தேன் . அந்த நெகிழ்ச்சியான அனுபவங்களை யாழ் இணையத்தின் 21 வது அகவையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். நானும் மனைவியும் இரு மகன்களும்தான் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை. நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது. யாத்திரை தொடரும்.......! நிரவாகம். தயவு செய்து உரிய இடத்துக்கு மாற்றிவிடவும். பின் அங்கிருந்து தொடர்கின்றேன். 16 3 1 Share this post Link to post Share on other sites
குமாரசாமி 5,782 Report post Posted February 1 4 hours ago, suvy said: உ சிவமயம். திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம். "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்" யாத்திரை தொடரும்.......! அடியேனும் பின் தொடர்வேன். 1 Share this post Link to post Share on other sites
மல்லிகை வாசம் 109 Report post Posted February 2 பிறந்து வளர்ந்த மண்ணில் உள்ள கோயில்களைப் பல நாட்களுக்குப் பின்னர் மீண்டும் தரிசிப்பது உண்மையிலேயே பரவசமான அனுபவம். ஆன்மீகம், நம் கலாசாரம் கலந்த அந்த நினைவுகள் தரும் ஆனந்தத்துக்கு ஈடில்லை. (கடந்த ஆவணி மாதத்தில் நானும் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன்.) உங்கள் ஆன்மீகப் பயணத்தில் ஐக்கியமாக அடியேனும் காத்திருக்கிறேன். தொடருங்கள்...! ☺️ 1 Share this post Link to post Share on other sites
suvy 5,122 Report post Posted February 2 யாத்திரை ....( 2 ). நாங்கள் இந்த நாட்டுக்கு வந்து பல வருடங்கள் ஓடி விட்டன. இங்கு இடைவிடாத வேலைப்பளு. பிள்ளைகளும் சிறுவர்கள்.மற்றும் வயதான பெற்றோர் (அம்மாவும், மாமியும்) . போன்ற சூழ்நிலைகளால் ஊருக்கு போகும் எண்ணம் "சாம்பல் பூத்த நெருப்பாக" எங்கள் உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்தது. காலம் உருள பிள்ளைகளும் வளர்த்து விட்டினம். பெற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராய் இயற்கை எய்தி விட்டார்கள். சென்ற வருட ஆரம்பத்தில் நினைத்தோம், எப்படியும் இந்த வருடம் ஊருக்கு போய் வர வேண்டும் என்று. மனைவி சொன்னார்,ஒருநாள் என்றாலும் நல்லூர் திருவிழா பார்க்க வேண்டும் என்று. அதற்கேற்றாற் போல் கட்டார் எயர் விமானத்தில் விமானசீட்டு முன் பதிவு செய்து கொண்டோம். ஒரு ஆளுக்கு 40 கிலோவும், கைப்பெட்டியில் 7 கிலோவும், மற்றும் தோளில் தொங்கும் ஒரு பையும் கொண்டு செல்லலாம். 40 கிலோவை இரு பெட்டிகளில் 20, 20 ஆக வைக்க வேண்டும். அதன்படி நாங்கள் பாரிஸில் நின்று உறவினர்கள் தந்த பொருட்களையும் சேர்த்து கட்டிக்கொண்டோம். யாத்திரை தொடரும்....! சம்பவம்: பெட்டிகளில் சாமான்கள் வைக்கும் போது அவை 19 கிலோவுக்கு மேற்படாமல் பார்த்து கொண்டோம்.அது விமான நிலையத்தில் பொதிகளை அனுப்பும் இடத்தில் பேருதவியாய் இருந்தது. அடுத்து மகனுக்கு அவரது வேலையின் நிமித்தம் 20 நாட்கள்தான் தங்க முடிந்தது. அதனால் அவர் எமக்கு முன்பே கிளம்பி விட்டார். நாங்கள் இருவரும் ஒரு மாதம் தங்கி நின்று வந்தோம்......! ஊக்கமளிக்கும் உறவுகளுக்கு உளமார்ந்த நன்றி....! 5 Share this post Link to post Share on other sites
ரதி 2,306 Report post Posted February 2 தொடருங்கள் சுவியண்ணா ...எங்களுக்கும் பிரயோசனமாய் இருக்கும் 1 Share this post Link to post Share on other sites
suvy 5,122 Report post Posted February 4 யாத்திரை....(3). சென்ற ஆடி மாதக் கடைசியில் உறவினர்களும் நண்பர்களும் விமான நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைக்க பாரீஸ் விமான நிலையத்தில் இருந்து அழகிய பணியாளர்களைக் கொண்ட கத்தார் விமானத்தில் ஏறிப் பயணப் பட்டோம்.தரமான உணவு வகைகளும்,சிறப்பான சேவையும் அந்த விமானத்தில் இருந்தது.ஒவ்வொரு இருக்கைக்கு முன்னும் ஒவ்வொரு சிறிய திரை.அதில் படங்கள்,பாட்டுகள் மட்டுமன்றி அந்த விமானத்தின் வழித்தடங்களையும் பார்க்க முடிந்தது. சுமார் ஐந்து மணித்தியாலப் பறப்பின் பின் இடைத் தங்கலாக கட்டாரில் தரை இறங்கியது. இரு மணித்தியாலத்தின் பின் அதே போன்ற மற்றோரு விமானத்தில் பயணம் தொடர்ந்தது. அந்த விமானம் இலங்கை நேரப்படி அதிகாலை 01 : 30 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை இறங்கியது. அங்கு அரைமணி நேரத்தில் சுழன்று வந்த எமது பெட்டிகளை எடுத்து வண்டிலில் போட்டுக்கொண்டு வெளியில் வந்தோம். அங்கே தயாராக எனது மருமகள் வானோடு வந்து எம்மை வரவேற்றாள். பரஸ்பரமான விசாரிப்புகளின் பின்பு நாம் கொழும்பு செல்லாமல் நேராக யாழ்ப்பாணம் செல்வது என முடிவெடுத்தோம்.இரவுப் பிரயாணத்தில் வாகன நெரிசல் இருக்காது மதியத்துக்கு முன் யாழ்ப்பாணம் போய் விடலாம் என சாரதி சொன்னதை ஏற்றுக் கொண்டு யாழ் நோக்கி பயணப் பட்டோம். வான் செல்லும்போது வழியில் விதியோரக் கடையில் துக்கத்தில் இருந்த கடைக்காரரை எழுப்பி ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களும் வாங்கிக் கொண்டோம். காலை எட்டு மணியளவில் முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.அங்கு கை, கால், முகம் கழுவிவிட்டு வந்து கடையில் தேங்காயும் கற்பூரமும் வாங்கிக்கொண்டு போய் கோயிலடியில் கற்பூரம் ஏற்றி சிதறு தேங்காய் போட்டு விட்டு பிள்ளையாரை சேவிக்க பூசை நடந்து கொண்டிருந்தது. கண்கொள்ளாக் காட்சி.நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு வந்து மறக்காமல் சில தேங்காய் சில்லுகளும் பொறுக்கி எடுத்து கொண்டு வந்து கடையில் கச்சானும் புழுக்கொடியலும் வாங்கிக் கொண்டு (இப்ப எல்லாம் பைக்கட்டுகளில் கிடைக்கிறது) தேநீர் குடித்து விட்டு மீண்டும் பயணப்பட்டோம். யாத்திரை தொடரும்.....! சம்பவம்: நான் கோவிலை சுற்றி வரும்போது எனது மருமகள் கேட்கிறாள், மாமா இங்கு சாப்பிடுவோமா அல்லது கிளிநொச்சியில் சாப்பிடுவோமா என்று அது என் காதிலேயே விழவில்லை அப்படி ஒரு பரவசநிலையில் நான்.மனிசி சொல்கிறாள் அவருக்கு இப்ப ஒன்றும் கேட்காது, நாங்கள் கிளிநொச்சிக்கு போய் சாப்பிடுவம் என்று. அது பரவாய் இல்லை.பிறகு சொன்னாள்.பார் இப்ப வானில் எறியவுடனே உந்தக் கடலை,புழுக்கொடியல் எல்லாம் தேங்காயுடன் சேர்த்து அரைத்து ஒரு வழி பண்ணிடுவார் என்று. அதேபோல் நானும் அதுகளை எடுத்து அரைக்க சாரதி உட்பட எல்லோரும் சிரிக்கினம். நான் புரியாமல் விழிக்கிறேன்.....! 4 3 Share this post Link to post Share on other sites
Kavallur Kanmani 542 Report post Posted February 4 அதெப்படி சென்ற ஆவணியில் யாழ் உறவுகள் பலர் தாயகம் சென்று வந்துள்ளோம். உங்கள் பயண அனுபவங்களைத் தொடருங்கள் சுவி. நான் தாயகம் மட்டுமல்ல தமிழகம் கேரளா மற்றும் பாண்டிச்சேரி என பல இடங்களிலுள்ள ஆலயங்கள் கோவில்களெல்லாம் தரிசித்தேன். நேரம் இல்லாத காரணத்தால் எழுத முடியவில்லை. உங்கள் அனுபவங்களை வாசிக்க ஆவலாய் உள்ளோம். தொடருங்கள். 1 Share this post Link to post Share on other sites
suvy 5,122 Report post Posted February 6 யாத்திரை :(4). நன்றாக விடிந்து விட்டது. கிளிநொச்சி நகரம் மிகவும் பரபரப்பாக அன்றைய நாளைத் தொடங்கி விட்டது. எல்லோரும் அரக்க பரக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.எங்கள் வண்டியும் "அம்மாச்சி" உணவகத்தின் முன்பாக வந்து நின்றது. அங்கும் ஒரே சனக் கூட்டம். அனைத்து விதமான காலை உணவுகளும் அங்கு கிடைக்கின்றன. அத்தனையும் சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கின்றது. நாங்களும் எமக்குத் தேவையானவற்றை வாங்கி சாப்பிட்டோம். எனது பார்வையில் நகரம் முழுவதும் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன.வீதிகள் அகலமாக இருக்கின்றன. நிறையக் கடைகள். மாடிகளுடன் கூடிய பெரிய பெரிய கடைகள். சாரதியும் எமது வண்டியை எடுத்து கொண்டு ஓடி பரந்தன், ஆனையிறவு வீதியை பிடிக்காமல் பூநகரி பக்கமாய் செலுத்திக் கொண்டு போகிறார்.நானும் என்ன தம்பி இந்த வீதியால் போகிறீங்கள். ஆனையிறவு பாதையால் போறதில்லையோ என கேட்க, அவரும் இப்ப நாங்கள் இந்த கிளாலி பாதையைத்தான் பாவிப்பது.சுற்று இல்லாமல் விரைவாக சென்று விடலாம் என்று சொன்னார். அந்த வீதியும் நன்றாக இருந்தது. என்ன நிறைய டிப்பர் வாகனங்கள் நிறைய போய் வருகின்றன மிகவும் வேகமாக. நான் முன்பு வரும்போது பார்த்த கிளாலி கடல் வேறு.இப்போது அங்கு பெரிய பாலம்போட்டுபயன்படுத்துகிறார்கள். எனது மனைவியின் கண்கள் கலங்க விம்மல் வெடிக்கிறது. மருமகள் கேட்கிறாள் ஏன் அன்ரி அழுகிறீங்கள் என்று. அவர் அந்த சம்பவத்தை சொல்லிக்கொண்டு வருகிறார். தொடர்ந்து வரும்போது நாவற்குழியடியில் புதிதாய் ஒரு சிவன் கோவில் இருந்தது.சாரதி கூறினார் இதுதான் சிவபூமி என்று. பிறிதொருநாள் அங்கு வரவேண்டும் என்று நினைத்து கொண்டேன். யாத்திரை தொடரும்........! சம்பவம்: எனது மனைவியும் இரு பிள்ளைகளும் பிரான்ஸ் வருவதற்காக கொழும்பு வரவேண்டும். அப்போது ஆனையிறவு பாதை அடைப்பு. கிளாலியில் வந்து வரிசையில் காத்திருக்கிறார்கள். அப்போது பாலம் இல்லை.சிறிய படகில்தான் பயணம்.தனியாக சிறுவர்களான இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வரவேண்டும். சரியான குளிர்.கை கால் எல்லாம் விறைக்குது. நன்றாக இருட்டி விட்டது.ஒரு மாதிரி படகில் ஏறியாகி விட்டது. படகுக்கு உள்ளும் தண்ணீர் வருகுது. நெருக்கமான சனம்.வெளிச்சமும் இல்லை. இருந்தால் செல் வந்து விழும்.பிள்ளைகளை காலடியில் இருத்தி இறுக்கிப் பிடித்து கொண்டாள். பெட்டிகள் எல்லாம் ஈரமாகி விட்டது. நீச்சல் தெரிந்த சிலர் படகை விட்டிறங்கி படகுடன் நீந்தி வருகினம்.ஒரு மாதிரி பூநகரி கரைக்கு வந்தாச்சுது. அன்று நானும் என்ர பிள்ளைகளும் தப்பியது அருந்தப்பு. பெட்டியில் இருந்த உடுப்புகள் எல்லாம் உப்புத்தண்ணி பட்டு சேதமாகி விட்டன. கூறைப் புடவையைத் தவிர........! 9 Share this post Link to post Share on other sites
மியாவ் 66 Report post Posted February 6 49 minutes ago, suvy said: நீச்சல் தெரிந்த சிலர் படகை விட்டிறங்கி படகுடன் நீந்தி வருகினம்.ஒரு மாதிரி பூநகரி கரைக்கு வந்தாச்சுது. அன்று நானும் என்ர பிள்ளைகளும் தப்பியது அருந்தப்பு. பெட்டியில் இருந்த உடுப்புகள் எல்லாம் உப்புத்தண்ணி பட்டு சேதமாகி விட்டன. கூறைப் புடவையைத் தவிர........! அசாதரமான நிகழ்வு... சாதரணமாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் ஐயா... தாங்கள் கோயிலுக்குள் சென்ற உடன் பரவச நிலை பெற்றதாக பதிந்திருந்தீர்கள்... சிறு வயதிலிருந்தே கோவிலுக்கு சென்றால் ஒரு உணர்வும் ஏற்பட்டதில்லை, சிவன் கோவிலை தவிற... சிவன் கோவிலினுள் அமைதி நிலையை அடையும் என் மனதானது... பதிமூன்று வயதிலிருந்து இதை உணர துவங்கினேன்... கோவில் என்றாலே சிதறி ஓடுபவன் , இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் திருவேற்காட்டில் கட்டபட்டுள்ள சிவன் கோவிலுக்கு சில முறை தன்னிச்சையாக சிில முறை சென்று வந்தாகி விட்டது... --தங்களின் பயண அனுபவத்தை தொடருங்கள் ஐயா... 1 Share this post Link to post Share on other sites
புரட்சிகர தமிழ்தேசியன் 538 Report post Posted February 6 அருமை .. தொடருங்கள் தோழர் .. 👌 1 Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 9,890 Report post Posted February 6 சுவியர்... "திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!" என்ற தலைப்பை முன்பு பார்த்து விட்டு, ஏதோ... பத்திரிகைகளில், யாரோ எழுதிய கட்டுரையின் இணைப்பு என்று விட்டு, உள்ளே போய் பார்க்கவில்லை. இன்று தான்... உள்ளே போய் பார்த்தால், சுவியரின் சொந்தக் கட்டுரை ஆக இருந்தது. பகிர்விற்கு நன்றி. Share this post Link to post Share on other sites
நிலாமதி 820 Report post Posted February 6 ஆமாம் நானும் தான் எதோ கோவில் பற்றிய கட்டுரை போலும் என்று எண்ணிவிடடேன். தொடருங்கள் . .. அடுத்து என்ன என்ற ஆவலுடன் வா சிக்கிறேன். Share this post Link to post Share on other sites
குமாரசாமி 5,782 Report post Posted February 6 On 2/4/2019 at 8:07 PM, suvy said: அழகிய பணியாளர்களைக் கொண்ட கத்தார் விமானத்தில் ஏறிப் பயணப் பட்டோம் குடும்பத்தோடை போனாலும் குசும்புக்கு குறைவில்லை..... Share this post Link to post Share on other sites
ராசவன்னியன் 1,982 Report post Posted February 7 On 2/1/2019 at 8:58 PM, suvy said: .... கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை. நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது. யாத்திரை தொடரும்.......! இங்க பார்ரா அக்குறும்பை..! (பாவம்..) Share this post Link to post Share on other sites
மல்லிகை வாசம் 109 Report post Posted February 7 சுவாரசியமானச் செல்லும் பயண அனுபவங்கள், சுவி அண்ணா. தொடருங்கள், ஆவலாய் உள்ளோம். 😍 Share this post Link to post Share on other sites
ஏராளன் 20 Report post Posted February 7 தொடருங்கள் அண்ணா. Share this post Link to post Share on other sites
suvy 5,122 Report post Posted February 7 யாத்திரை....(5). மதியம் வீட்டுக்கு வந்து விட்டோம். என்னுடைய மச்சாள் அறுசுவையோடு அசைவங்களும் சேர்த்து நிறைய உணவுகள் தயாரித்து வைத்திருந்தாள். எனது மனைவியும் அவாவும் புளுகி புளுகி கதைத்துக் கொண்டிருக்கினம். எங்கள் மகனையும் "நீ ரொம்ப வளர்ந்திட்டாயடா" என்று பாசத்துடன் பக்கத்தில் இருத்தி கதைக்கினம். நான் போய் தோய்ந்து குளித்துவிட்டு வர அருகில் உள்ள காளி கோவிலில் இருந்து பூசை மணி ஒலித்தது. மச்சாளும் நீங்கள் வந்த நேரம் இன்று கோயிலில் அன்னதானம். ஐயர் வந்துட்டார் போல அதுதான் மணி கேட்குது என்று சொல்ல நானும் இருங்கோ வாறன் என்று சொல்லிவிட்டு முற்றத்தில் இருந்த நித்யகல்யாணியில் இருந்து நாலு பூவை பறித்துக் கொண்டு வெளியே கோவிலுக்கு வந்தேன். கண்ணீர் மல்க அம்பாளை மனமுருக நன்றாக சேவித்து விட்டு அங்கேயே தரையில் சம்மணமிட்டு அமர்ந்து ஆசை தீர அன்னதான பிரசாதம் வாங்கி சாப்பிட்டேன். அங்கிருந்த யாருக்குமே என்னை அடையாளம் தெரியவில்லை. பழைய ஆட்கள் சிலர் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்து விட்டு பிறகு வந்து கட்டிப்பிடித்து கதைத்தார்கள். பின்பு வீட்டுக்கு சென்றதும் சமைத்ததை சாப்பிடவில்லை என்று பாசமான திட்டுகள் வாங்க வேண்டி வந்தது. மாலைநேரம் உறவினர்கள் நண்பர்கள் என்று அறிந்து அறிந்து வந்து பார்த்து கதைத்து விட்டு சென்றனர். இரவு சாப்பிட்டு விட்டு நானும் மனைவியும் மச்சாளும் கதைத்துக் கொண்டிருக்க மகன் மேல் வீட்டில் போய் படுத்து விட்டார்.கொஞ்ச நேரத்தின் பின் நானும் மேல் அறையில் படுக்க போகும் போது அவள் சொன்னாள் நீ அங்க போய் படுகிறது சரி,ஆனால் நான் சொல்லாமல் கீழ இறங்கி வரக்கூடாது என்று.உடனே நான் சீ ச் சீ நாங்கள் இப்ப விரதம் என்றேன். உன்ர விரதம் கிடக்கட்டும், இரவு அவர் உவடம் முழுக்க உலவித் திரிவார். நாளைக்கு விரதம் பிடிக்க நீ இருக்க மாட்டாய் நம்பாவிட்டால் பல்கனியை எட்டிப்பார் என்று. எட்டிப்பார்த்தேன் என்னளவு உயரத்தில் வைரவர் வாகனம் அமைதியாக என்னை பார்த்து கொண்டு கம்பீரமாய் நிக்குது. குரைத்திருந்தால் கடிக்காது என்று நம்பி இருப்பேன். இது குரைக்கவில்லை. நான் மேலே சென்று அறையைப் பூட்டியதும் அவர் அவளுடன் கீழே சென்று உலாவித் திரிகின்றார். இவர் போன்ற ஒருவர்,ஆனால் இவர் அவரல்ல......! யாத்திரை தொடரும்.....! சம்பவம்: முன்பெல்லாம் அந்தக் கோவில் இருப்பதே வெளியில் தெரியாது.ஒரு வீட்டுக்கு உள்ளேதான் இருந்தது. இப்பொழுது வெளியே கோவிலாய் உள்ளது. நானும் தினமும் காலையில் வேலைக்கு போகும்போது ஒரேயொரு மல்லிகை அல்லது செம்பருத்தம் பூ எடுத்து வந்து வெளியில் நின்று அந்த வேலித் தகரத்தில் உள்ள ஒரு துவாரத்தில் வைத்து வணங்கி விட்டுத்தான் போவது வழமை. அதுக்காகவா அந்தத் தாய் நான் வந்ததும் வராததுமாக காத்திருந்து என்னை அழைத்து எனக்கு உணவளித்தாள்......! 7 Share this post Link to post Share on other sites
மியாவ் 66 Report post Posted February 7 அசைவத்தை புறக்கணித்து அன்னதானத்தில் கலந்து கொள்வதற்க்கு ஒரு தனி மனம் தான் வேண்டும்... --நானாக இருந்திருந்தால் அசைவத்தை ஒரு கை பார்த்திருப்பேன்... அன்னதானத்திலும் அசைவம் என்றால் டபுள் ஆக்ஷன் செய்திருப்பேன்... Share this post Link to post Share on other sites
ரதி 2,306 Report post Posted February 7 4 hours ago, மியாவ் said: அசைவத்தை புறக்கணித்து அன்னதானத்தில் கலந்து கொள்வதற்க்கு ஒரு தனி மனம் தான் வேண்டும்... --நானாக இருந்திருந்தால் அசைவத்தை ஒரு கை பார்த்திருப்பேன்... அன்னதானத்திலும் அசைவம் என்றால் டபுள் ஆக்ஷன் செய்திருப்பேன்... சுவியண்ணா சைவம் என்ட படியால் அறுசுவை மாமிசத்தை கண்டதும் பயத்தில் ஓடி இருப்பார்...தொடருங்கோ சுவியண்ணா Share this post Link to post Share on other sites
குமாரசாமி 5,782 Report post Posted February 7 7 hours ago, மியாவ் said: அசைவத்தை புறக்கணித்து அன்னதானத்தில் கலந்து கொள்வதற்க்கு ஒரு தனி மனம் தான் வேண்டும்... --நானாக இருந்திருந்தால் அசைவத்தை ஒரு கை பார்த்திருப்பேன்... அன்னதானத்திலும் அசைவம் என்றால் டபுள் ஆக்ஷன் செய்திருப்பேன்... நீங்கள் இன்னும் ஒழுங்கான சைவச்சாப்பாடு சாப்பிடேல்லை எண்டு நினைக்கிறன். மரக்கறியிலை சமைக்கக்கூடிய நல்ல கைப்பக்குவமுள்ள ஆக்கள் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டுப்பாருங்கோ.......அசைவசாப்பாடெல்லாம் தோற்றுப்போகும். நான் ஊரில் இருக்கும் மட்டும் வருசத்திலை 2 அல்லது 3தரம் இறைச்சி சாப்பிடுவேன்.கிழமையில் 2தரம் மீன் கறி.மற்றும் படி ஒரே மரக்கறிதான். அதுவும் திருவிழாக்காலங்கள் தொடங்கிச்சுது எண்டால் அவ்வளவுதான்.....மச்ச சட்டி பானையேல்லாம் தூரத்துக்கு போய்விடும். அந்த நேரங்களில் அசைவத்துக்கான தவனம் கூட வராது. சில ஆக்கள் சொல்லுவினம் இறைச்சி மீன் எண்டால் ஒரு கறியோடை சாப்பிடலாம்.மரக்கறியெண்டால் கனகறி வேணும் எண்டுவினம். சமைக்கிறவன் சமைச்சால் ஒரு கத்தரிக்காய்க்கறியோடை சந்தோசமாய் சாப்பிடலாம். 1 Share this post Link to post Share on other sites
மியாவ் 66 Report post Posted February 8 4 hours ago, குமாரசாமி said: நீங்கள் இன்னும் ஒழுங்கான சைவச்சாப்பாடு சாப்பிடேல்லை எண்டு நினைக்கிறன். மரக்கறியிலை சமைக்கக்கூடிய நல்ல கைப்பக்குவமுள்ள ஆக்கள் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டுப்பாருங்கோ.......அசைவசாப்பாடெல்லாம் தோற்றுப்போகும். நான் ஊரில் இருக்கும் மட்டும் வருசத்திலை 2 அல்லது 3தரம் இறைச்சி சாப்பிடுவேன்.கிழமையில் 2தரம் மீன் கறி.மற்றும் படி ஒரே மரக்கறிதான். அதுவும் திருவிழாக்காலங்கள் தொடங்கிச்சுது எண்டால் அவ்வளவுதான்.....மச்ச சட்டி பானையேல்லாம் தூரத்துக்கு போய்விடும். அந்த நேரங்களில் அசைவத்துக்கான தவனம் கூட வராது. சில ஆக்கள் சொல்லுவினம் இறைச்சி மீன் எண்டால் ஒரு கறியோடை சாப்பிடலாம்.மரக்கறியெண்டால் கனகறி வேணும் எண்டுவினம். சமைக்கிறவன் சமைச்சால் ஒரு கத்தரிக்காய்க்கறியோடை சந்தோசமாய் சாப்பிடலாம். என் வீட்டில் சைவமும் நலனன்றாக தான் சமைப்பார்கள், ஆனால் அசைவம் என்றால் ஒரு தனி கிளு கிளுப்பு தான்... Share this post Link to post Share on other sites
மியாவ் 66 Report post Posted February 8 8 hours ago, ரதி said: சுவியண்ணா சைவம் என்ட படியால் அறுசுவை மாமிசத்தை கண்டதும் பயத்தில் ஓடி இருப்பார்...தொடருங்கோ சுவியண்ணா ஐயா சுவி அவர்களுக்கு அசைவம் பிடிக்காதா அல்லது தங்களுக்கு பிடிக்காதா... Share this post Link to post Share on other sites
ஈழப்பிரியன் 1,175 Report post Posted February 8 On 2/1/2019 at 10:28 AM, suvy said: நானும் மனைவியும் இரு மகன்களும்தான் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை. நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது. எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம் கவலையை விடுங்கள். யாழின் ஆண்டுவிழா கதாநாயகனே நீங்கள் தான். நானும் ஒரு பயணக் கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன். Share this post Link to post Share on other sites
suvy 5,122 Report post Posted February 9 18 hours ago, ஈழப்பிரியன் said: எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம் கவலையை விடுங்கள். யாழின் ஆண்டுவிழா கதாநாயகனே நீங்கள் தான். நானும் ஒரு பயணக் கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன். சுப சீக்கிரஸ்ய.... நல்ல காரியங்களை தள்ளிப்போடக் கூடாது உடனே ஆரம்பியுங்கள்.......! 😁 Share this post Link to post Share on other sites
putthan 1,849 Report post Posted February 9 On 2/7/2019 at 1:39 AM, suvy said: ஒரு சிவன் கோவில் இருந்தது.சாரதி கூறினார் இதுதான் சிவபூமி என்று. பிறிதொருநாள் அங்கு வரவேண்டும் என்று நினைத்து கொண்டேன். 1 Share this post Link to post Share on other sites