• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • இராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருக்கக் கூடாது: சித்தார்த்தன்   by : Dhackshala புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருந்தால், அது பாதகமான விடயமாகவே இருக்கும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசாங்கத்தில் நாம் எதிர்பார்த்ததை போலவே பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தேர்தலை மையப்படுத்தியோ அல்லது தேர்தலிற்கு பின்னரோ மாற்றங்கள் ஏற்படலாம். ஜனாதிபதி கோட்டாவை பொறுத்தவரை மாற்றங்கள் ஏற்படும் என்று கருதாவிட்டாலும் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறோம். தற்போது குற்றச்செயல்கள் கூடுதலாக இருக்கின்றன. எனவே இங்கு உருவாக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் நடவடிக்கைகள் தேவை என்ற அபிப்பிராயம் சில மக்கள் மத்தியிலே இருக்கிறது. பொதுவாக இது ஒரு இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருந்தால், அது பாதகமான விடயமாகவே இருக்கும். மக்களின் பாதுகாப்பு என்பது முக்கிய விடயம். அது பொலிஸ் துறையின் கண்காணிப்பாக இருந்தால் சிறப்பாக இருக்கும்” என மேலும் தெரிவித்தார். http://athavannews.com/இராணுவ-சோதனைச்-சாவடிகள்/
    • பரபரப்பான சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றி: சொந்த மண்ணில் தொடரை இழந்தது நியூஸிலாந்து!   by : Anojkiyan நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், இந்தியா அணி பரபரப்பான சுப்பர் ஓவரில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது. ஹெமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது ரோஹித் சர்மா 65 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 27 ஓட்டங்களையும், சிவம் டுபே 3 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 38 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேலும், மனீஷ் பாண்டே 14 ஓட்டங்களுடனும், ரவீந்திர ஜடேஜா 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், ஹமீஷ் பென்னட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் மற்றும் கொலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் ஓட்ட இலக்கு சமநிலைப் பெற்றதால் சுப்பர் வழங்கப்பட்டது. இதன்போது நியூஸிலாந்து அணி சார்பில், மார்டின் கப்டில் 31 ஓட்டங்களையும், கொலின் முன்ரோ 14 ஓட்டங்களையும், மிட்செல் சான்ட்னர் 9 ஓட்டங்களையும், கொலின் டி கிராண்ட்ஹோம் 5 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 95 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்தியா அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி, யுஸ்Nவுந்திர சஹால் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். வெற்றியை தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 17 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 18 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணி, வெற்றி இலக்கை கடந்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக 65 ஓட்டங்களையும், சுப்பர் ஓவரில் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட இந்தியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையிலான நான்காவது ரி-20 போட்டி, எதிர்வரும் 31ஆம் திகதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. http://athavannews.com/பரபரப்பான-சுப்பர்-ஓவரில்/
    • அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பி வரும் 600 பிரஜைகளைத் தனிமைப்படுத்த அரசாங்கம் திட்டம்   by : S.K.Guna சீனாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பி வரும் 600 பிரஜைகளை, கிறிஸ்மஸ் தீவில் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 1,200 மைல் தொலைவில் கிறிஸ்மஸ் தீவு உள்ளது. ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்த சீனாவின் தேசிய மகளிர் கால்பந்து அணி அவுஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. பெப்ரவரி 5 ஆம் திகதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முப்பத்திரண்டு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் பிரிஸ்பேனில் உள்ள ஒரு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் தேசிய மகளிர் கால்பந்து அணி கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட வுஹான் வழியாகப் பயணித்ததாகக் கூறப்படுகின்றது. சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் (NHC) புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஜேர்மனியில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே பிரான்ஸிலும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் வுஹானில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திரும்பிய ஒரு குடும்பத்தில் வைரஸ் பாதிப்பு உள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. http://athavannews.com/அவுஸ்திரேலியாவுக்குத்-த/
    • மாணவர்களுக்கு முகக் கவசம் தேவையில்லை   ஆர்.மகேஸ்வரி   கொரோனா வைரஸ் குறித்து பரவும் பொய்யானத் தகவல்களால் மாணவர்களும் பெற்றோரும் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவித்த உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மாணவர்கள்  முகக் கவசத்தை அணியுமாறு அரசாங்கம் வலியுறுத்தவில்லை என்றார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துரைத்த அவர், பிரதமர் மஹிந்த தலைமையில் பல அமைச்சுகளின் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) நடைபெற்றதாகத் தெரிவித்த அவர், இதன்போது தற்போது நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதி குறித்து அவதானம் செலுத்தப்பட்டதென்றார். சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய, சுற்றுநிருபம் ஒன்று பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சோ, சுகாதார அமைச்சோ முகக் கவசத்தை  அதிக விலை கொடுத்து வாங்கி அணியுமாறு மாணவர்களுக்கோ மக்களுக்கோ ஆலோசனை வழங்கவில்லை என்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/மணவரகளகக-மகக-கவசம-தவயலல/175-244725
    • மேலும் 110 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்   சீனாவில் கல்வி கற்கும் 110 மாணவர்கள் இன்று (29) நாடு திரும்பியிருப்பதாக சீனாவின் பேஜிங் நகரில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இதுவரை 380 மாணவர்கள் நாடு திரும்பியிருக்கிறார்கள். நேற்று 66 மாணவர்கள் நாடு திரும்பினார்கள். மேலும் 484 மாணவர்கள் சீனாவில் இருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளர் இனங்காணப்படுவாராயின், அதுபற்றி உடனடியாக அறிவிக்கப்படவிருக்கிறது. கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 23 பேர் அங்கொட தேசிய தொற்றுநோய் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் எட்டுப் பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அங்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, மூவரின் பரிசோதனை அறிக்கைகள் தற்சமயம் கிடைத்திருக்கின்றன. இதில் சீனப் பெண் ஒருவர் இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய இருவருக்கும் இந்த நோய் தொற்று ஏற்படவில்லை. மேலும் ஐந்து பேருக்கு இது தொடர்பான அறிக்கை வழங்கப்படவிருக்கிறது. வைரஸ் பரவல் பற்றி அநாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. வைரஸ் பரவலை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக உயர்ந்தபட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=125128