Jump to content

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                                                                                          

                                                                                                                                                                   சிவமயம்.

 

                                                                                                                                          திவ்ய தேசத்தில்  திருத்தல தரிசனம்.

                                                                                 

                                                                                                           20180828-093354.jpg

 

                                                                                                                   "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்"

 

அன்புறவுகளுக்கு ,

                                        நான் கடந்த ஆவணி மாதம் மனைவி மற்றும் மகனுடன் ஊருக்கு போய் இருந்தேன். அதை ஒரு பயணம் என்று சொல்வதைவிட கோவில் சுற்றுலா என்பது பொருந்தும். ஆவணி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பெரும்பாலான ஆலயங்களில்  உற்சவங்கள் நடைபெறும்.ஊர் முழுவதும் ஒரே கோலாகலமாக இருக்கும். கோவில்கள் எல்லாம் புதிதாக வர்ணங்கள் பூசி மிக அழகாக இருந்தன.நானும் பல வருடங்களின் பின் அங்கு சென்றதால் ஒருவித பரவச நிலையில் இருந்தேன் . அந்த நெகிழ்ச்சியான அனுபவங்களை யாழ் இணையத்தின் 21 வது அகவையில்  உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

நானும் மனைவியும் இரு மகன்களும்தான் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை.  நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது.

யாத்திரை தொடரும்.......!

 நிரவாகம். தயவு செய்து உரிய இடத்துக்கு மாற்றிவிடவும். பின் அங்கிருந்து தொடர்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

                                                                                                                                                                          

                                                                                                                                                                   சிவமயம்.

 

                                                                                                                                          திவ்ய தேசத்தில்  திருத்தல தரிசனம்.

                                                                                 

                                                                                                           20180828-093354.jpg

 

                                                                                                                   "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்"

 

 

யாத்திரை தொடரும்.......!

அடியேனும் பின் தொடர்வேன்.

 

Link to comment
Share on other sites

பிறந்து வளர்ந்த மண்ணில் உள்ள கோயில்களைப் பல நாட்களுக்குப் பின்னர் மீண்டும் தரிசிப்பது உண்மையிலேயே பரவசமான அனுபவம். ஆன்மீகம், நம் கலாசாரம் கலந்த அந்த நினைவுகள் தரும் ஆனந்தத்துக்கு ஈடில்லை. (கடந்த ஆவணி மாதத்தில் நானும் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன்.)

உங்கள் ஆன்மீகப் பயணத்தில் ஐக்கியமாக அடியேனும் காத்திருக்கிறேன். தொடருங்கள்...! ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                    Résultat de recherche d'images pour "france map"

யாத்திரை ....( 2 ).

நாங்கள் இந்த நாட்டுக்கு வந்து பல வருடங்கள் ஓடி விட்டன. இங்கு இடைவிடாத வேலைப்பளு. பிள்ளைகளும் சிறுவர்கள்.மற்றும் வயதான பெற்றோர் (அம்மாவும், மாமியும்) .  போன்ற சூழ்நிலைகளால் ஊருக்கு போகும் எண்ணம் "சாம்பல் பூத்த நெருப்பாக" எங்கள் உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்தது.  காலம் உருள பிள்ளைகளும் வளர்த்து விட்டினம். பெற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராய் இயற்கை எய்தி விட்டார்கள்.

சென்ற வருட ஆரம்பத்தில் நினைத்தோம், எப்படியும் இந்த வருடம் ஊருக்கு போய் வர வேண்டும் என்று. மனைவி சொன்னார்,ஒருநாள் என்றாலும் நல்லூர் திருவிழா பார்க்க வேண்டும் என்று. அதற்கேற்றாற் போல் கட்டார் எயர் விமானத்தில் விமானசீட்டு முன் பதிவு செய்து கொண்டோம்.

ஒரு ஆளுக்கு 40 கிலோவும், கைப்பெட்டியில் 7 கிலோவும், மற்றும்  தோளில் தொங்கும் ஒரு பையும் கொண்டு செல்லலாம். 40 கிலோவை இரு பெட்டிகளில் 20, 20 ஆக வைக்க வேண்டும். அதன்படி நாங்கள் பாரிஸில் நின்று உறவினர்கள் தந்த பொருட்களையும் சேர்த்து கட்டிக்கொண்டோம்.

யாத்திரை தொடரும்....!

சம்பவம்: பெட்டிகளில் சாமான்கள் வைக்கும் போது  அவை 19 கிலோவுக்கு மேற்படாமல் பார்த்து கொண்டோம்.அது விமான நிலையத்தில் பொதிகளை அனுப்பும் இடத்தில் பேருதவியாய் இருந்தது.

அடுத்து மகனுக்கு அவரது வேலையின் நிமித்தம் 20 நாட்கள்தான் தங்க முடிந்தது. அதனால் அவர் எமக்கு முன்பே கிளம்பி விட்டார். நாங்கள் இருவரும் ஒரு மாதம் தங்கி நின்று வந்தோம்......!

ஊக்கமளிக்கும் உறவுகளுக்கு உளமார்ந்த நன்றி....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவியண்ணா ...எங்களுக்கும் பிரயோசனமாய் இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                             Image associée

                                                           

 

யாத்திரை....(3).

சென்ற ஆடி மாதக் கடைசியில் உறவினர்களும் நண்பர்களும் விமான நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைக்க பாரீஸ் விமான நிலையத்தில் இருந்து அழகிய பணியாளர்களைக் கொண்ட கத்தார் விமானத்தில் ஏறிப் பயணப் பட்டோம்.தரமான உணவு வகைகளும்,சிறப்பான சேவையும் அந்த விமானத்தில் இருந்தது.ஒவ்வொரு இருக்கைக்கு முன்னும் ஒவ்வொரு சிறிய திரை.அதில் படங்கள்,பாட்டுகள்  மட்டுமன்றி அந்த விமானத்தின் வழித்தடங்களையும் பார்க்க முடிந்தது. சுமார் ஐந்து மணித்தியாலப் பறப்பின் பின் இடைத் தங்கலாக கட்டாரில்    தரை இறங்கியது. இரு மணித்தியாலத்தின் பின் அதே போன்ற மற்றோரு விமானத்தில் பயணம் தொடர்ந்தது. அந்த விமானம் இலங்கை நேரப்படி அதிகாலை 01 : 30 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை இறங்கியது. அங்கு அரைமணி நேரத்தில் சுழன்று வந்த எமது பெட்டிகளை எடுத்து வண்டிலில் போட்டுக்கொண்டு வெளியில் வந்தோம். அங்கே தயாராக எனது மருமகள் வானோடு வந்து எம்மை வரவேற்றாள்.

                                                               Image associée
                             பரஸ்பரமான விசாரிப்புகளின் பின்பு நாம் கொழும்பு செல்லாமல் நேராக யாழ்ப்பாணம் செல்வது என முடிவெடுத்தோம்.இரவுப் பிரயாணத்தில் வாகன நெரிசல் இருக்காது மதியத்துக்கு முன் யாழ்ப்பாணம் போய் விடலாம் என சாரதி சொன்னதை  ஏற்றுக் கொண்டு யாழ் நோக்கி பயணப் பட்டோம். வான் செல்லும்போது வழியில் விதியோரக் கடையில் துக்கத்தில் இருந்த கடைக்காரரை எழுப்பி ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களும் வாங்கிக் கொண்டோம். 

                                                                                       Image associée
காலை எட்டு மணியளவில் முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.அங்கு கை, கால், முகம் கழுவிவிட்டு வந்து கடையில் தேங்காயும் கற்பூரமும் வாங்கிக்கொண்டு போய் கோயிலடியில் கற்பூரம் ஏற்றி சிதறு தேங்காய் போட்டு விட்டு பிள்ளையாரை சேவிக்க பூசை நடந்து  கொண்டிருந்தது. கண்கொள்ளாக் காட்சி.நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு வந்து மறக்காமல் சில தேங்காய் சில்லுகளும் பொறுக்கி எடுத்து கொண்டு வந்து கடையில் கச்சானும் புழுக்கொடியலும் வாங்கிக் கொண்டு (இப்ப எல்லாம் பைக்கட்டுகளில் கிடைக்கிறது) தேநீர் குடித்து விட்டு மீண்டும் பயணப்பட்டோம்.

யாத்திரை தொடரும்.....!

சம்பவம்: நான் கோவிலை சுற்றி வரும்போது எனது மருமகள் கேட்கிறாள், மாமா இங்கு சாப்பிடுவோமா அல்லது கிளிநொச்சியில் சாப்பிடுவோமா என்று அது என் காதிலேயே விழவில்லை அப்படி ஒரு பரவசநிலையில்  நான்.மனிசி சொல்கிறாள் அவருக்கு இப்ப ஒன்றும் கேட்காது, நாங்கள் கிளிநொச்சிக்கு போய் சாப்பிடுவம் என்று. அது பரவாய் இல்லை.பிறகு சொன்னாள்.பார் இப்ப வானில் எறியவுடனே உந்தக் கடலை,புழுக்கொடியல் எல்லாம் தேங்காயுடன் சேர்த்து அரைத்து ஒரு வழி பண்ணிடுவார் என்று. அதேபோல் நானும் அதுகளை எடுத்து அரைக்க சாரதி உட்பட எல்லோரும் சிரிக்கினம். நான் புரியாமல் விழிக்கிறேன்.....! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி சென்ற ஆவணியில் யாழ் உறவுகள் பலர் தாயகம் சென்று வந்துள்ளோம். உங்கள் பயண அனுபவங்களைத் தொடருங்கள் சுவி. நான் தாயகம் மட்டுமல்ல தமிழகம் கேரளா மற்றும் பாண்டிச்சேரி என பல இடங்களிலுள்ள ஆலயங்கள் கோவில்களெல்லாம் தரிசித்தேன். நேரம் இல்லாத காரணத்தால் எழுத முடியவில்லை. உங்கள் அனுபவங்களை வாசிக்க ஆவலாய் உள்ளோம். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாத்திரை :(4).

                                                                                                                             Résultat de recherche d'images pour "ammachi kilinochi"

                                                                  
நன்றாக விடிந்து விட்டது. கிளிநொச்சி நகரம் மிகவும் பரபரப்பாக அன்றைய நாளைத் தொடங்கி விட்டது. எல்லோரும் அரக்க பரக்க  ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.எங்கள் வண்டியும் "அம்மாச்சி" உணவகத்தின் முன்பாக வந்து நின்றது. அங்கும் ஒரே சனக் கூட்டம். அனைத்து விதமான காலை உணவுகளும் அங்கு கிடைக்கின்றன. அத்தனையும் சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கின்றது.
                                                                                     
                                                                                                                       20180731-051053.jpg

நாங்களும் எமக்குத் தேவையானவற்றை வாங்கி சாப்பிட்டோம். எனது பார்வையில் நகரம் முழுவதும் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன.வீதிகள் அகலமாக இருக்கின்றன. நிறையக் கடைகள். மாடிகளுடன் கூடிய பெரிய பெரிய கடைகள். சாரதியும் எமது வண்டியை எடுத்து கொண்டு ஓடி பரந்தன், ஆனையிறவு வீதியை பிடிக்காமல் பூநகரி பக்கமாய் செலுத்திக் கொண்டு போகிறார்.நானும் என்ன தம்பி இந்த வீதியால் போகிறீங்கள். ஆனையிறவு பாதையால் போறதில்லையோ என கேட்க, அவரும் இப்ப நாங்கள் இந்த கிளாலி பாதையைத்தான் பாவிப்பது.சுற்று இல்லாமல் விரைவாக சென்று விடலாம் என்று சொன்னார். அந்த வீதியும் நன்றாக இருந்தது. என்ன நிறைய டிப்பர் வாகனங்கள் நிறைய போய் வருகின்றன மிகவும் வேகமாக. நான் முன்பு வரும்போது பார்த்த கிளாலி கடல் வேறு.இப்போது அங்கு பெரிய பாலம்போட்டுபயன்படுத்துகிறார்கள்.

                                                                                                         20180731-061407.jpg

         எனது மனைவியின் கண்கள் கலங்க விம்மல் வெடிக்கிறது. மருமகள் கேட்கிறாள் ஏன்  அன்ரி அழுகிறீங்கள் என்று. அவர் அந்த சம்பவத்தை சொல்லிக்கொண்டு வருகிறார். தொடர்ந்து வரும்போது நாவற்குழியடியில் புதிதாய் ஒரு சிவன் கோவில் இருந்தது.சாரதி கூறினார் இதுதான் சிவபூமி என்று. பிறிதொருநாள் அங்கு வரவேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

                                                                                                            Image associée

யாத்திரை தொடரும்........!

சம்பவம்: எனது மனைவியும் இரு பிள்ளைகளும் பிரான்ஸ் வருவதற்காக கொழும்பு வரவேண்டும்.  அப்போது ஆனையிறவு பாதை அடைப்பு. கிளாலியில் வந்து வரிசையில் காத்திருக்கிறார்கள். அப்போது பாலம் இல்லை.சிறிய படகில்தான் பயணம்.தனியாக சிறுவர்களான இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வரவேண்டும். சரியான குளிர்.கை கால் எல்லாம் விறைக்குது. நன்றாக இருட்டி விட்டது.ஒரு மாதிரி படகில் ஏறியாகி விட்டது. படகுக்கு உள்ளும் தண்ணீர் வருகுது. நெருக்கமான சனம்.வெளிச்சமும் இல்லை. இருந்தால் செல் வந்து விழும்.பிள்ளைகளை காலடியில் இருத்தி இறுக்கிப் பிடித்து கொண்டாள். பெட்டிகள் எல்லாம் ஈரமாகி விட்டது.
  நீச்சல் தெரிந்த சிலர் படகை விட்டிறங்கி படகுடன் நீந்தி வருகினம்.ஒரு மாதிரி பூநகரி கரைக்கு வந்தாச்சுது. அன்று நானும் என்ர பிள்ளைகளும் தப்பியது அருந்தப்பு. பெட்டியில் இருந்த உடுப்புகள் எல்லாம் உப்புத்தண்ணி பட்டு சேதமாகி விட்டன. கூறைப் புடவையைத் தவிர........!
                                                                                                                              

Link to comment
Share on other sites

49 minutes ago, suvy said:

நீச்சல் தெரிந்த சிலர் படகை விட்டிறங்கி படகுடன் நீந்தி வருகினம்.ஒரு மாதிரி பூநகரி கரைக்கு வந்தாச்சுது. அன்று நானும் என்ர பிள்ளைகளும் தப்பியது அருந்தப்பு. பெட்டியில் இருந்த உடுப்புகள் எல்லாம் உப்புத்தண்ணி பட்டு சேதமாகி விட்டன. கூறைப் புடவையைத் தவிர........!
                                                                                                                              

அசாதரமான நிகழ்வு...

சாதரணமாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் ஐயா... 

தாங்கள் கோயிலுக்குள் சென்ற உடன் பரவச நிலை பெற்றதாக பதிந்திருந்தீர்கள்... 

சிறு வயதிலிருந்தே கோவிலுக்கு சென்றால் ஒரு உணர்வும் ஏற்பட்டதில்லை, சிவன் கோவிலை தவிற...

சிவன் கோவிலினுள் அமைதி நிலையை அடையும் என் மனதானது... பதிமூன்று வயதிலிருந்து இதை உணர துவங்கினேன்... கோவில் என்றாலே சிதறி ஓடுபவன் , இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் திருவேற்காட்டில் கட்டபட்டுள்ள சிவன் கோவிலுக்கு சில முறை தன்னிச்சையாக சிில முறை சென்று வந்தாகி விட்டது...

--தங்களின் பயண அனுபவத்தை தொடருங்கள் ஐயா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை .. தொடருங்கள் தோழர் .. 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர்... "திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!" என்ற தலைப்பை முன்பு பார்த்து விட்டு,
ஏதோ... பத்திரிகைகளில், யாரோ எழுதிய கட்டுரையின் இணைப்பு என்று விட்டு, உள்ளே போய் பார்க்கவில்லை.
இன்று தான்... உள்ளே போய் பார்த்தால், சுவியரின் சொந்தக்  கட்டுரை ஆக இருந்தது.
பகிர்விற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நானும் தான் எதோ கோவில் பற்றிய  கட்டுரை போலும் என்று எண்ணிவிடடேன்.  தொடருங்கள் .

.. அடுத்து என்ன  என்ற ஆவலுடன்   வா சிக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2019 at 8:07 PM, suvy said:

அழகிய பணியாளர்களைக் கொண்ட கத்தார் விமானத்தில் ஏறிப் பயணப் பட்டோம்

குடும்பத்தோடை போனாலும் குசும்புக்கு குறைவில்லை.....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2019 at 8:58 PM, suvy said:

.... கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லைநாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது.

யாத்திரை தொடரும்.......!

இங்க பார்ரா அக்குறும்பை..!  ffou2.gif

(பாவம்..) reverie.gif

 

Link to comment
Share on other sites

சுவாரசியமானச் செல்லும் பயண அனுபவங்கள், சுவி அண்ணா. தொடருங்கள், ஆவலாய் உள்ளோம். 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை....(5).
                                                                                                   20190205-175951-1.jpg

மதியம் வீட்டுக்கு வந்து விட்டோம். என்னுடைய மச்சாள்  அறுசுவையோடு அசைவங்களும் சேர்த்து நிறைய உணவுகள் தயாரித்து வைத்திருந்தாள். எனது மனைவியும் அவாவும் புளுகி புளுகி கதைத்துக் கொண்டிருக்கினம். எங்கள் மகனையும் "நீ ரொம்ப வளர்ந்திட்டாயடா" என்று பாசத்துடன் பக்கத்தில் இருத்தி கதைக்கினம். நான் போய் தோய்ந்து குளித்துவிட்டு வர அருகில் உள்ள காளி கோவிலில் இருந்து பூசை மணி   ஒலித்தது. மச்சாளும் நீங்கள் வந்த நேரம் இன்று கோயிலில் அன்னதானம். ஐயர் வந்துட்டார் போல அதுதான் மணி கேட்குது என்று சொல்ல நானும் இருங்கோ வாறன் என்று சொல்லிவிட்டு முற்றத்தில் இருந்த நித்யகல்யாணியில் இருந்து நாலு பூவை பறித்துக் கொண்டு வெளியே கோவிலுக்கு வந்தேன். கண்ணீர் மல்க அம்பாளை மனமுருக நன்றாக சேவித்து விட்டு அங்கேயே தரையில் சம்மணமிட்டு அமர்ந்து ஆசை தீர அன்னதான பிரசாதம் வாங்கி சாப்பிட்டேன். அங்கிருந்த யாருக்குமே என்னை அடையாளம் தெரியவில்லை. பழைய ஆட்கள் சிலர் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்து விட்டு பிறகு வந்து கட்டிப்பிடித்து கதைத்தார்கள்.

                                             பின்பு வீட்டுக்கு சென்றதும் சமைத்ததை சாப்பிடவில்லை என்று பாசமான திட்டுகள் வாங்க வேண்டி வந்தது. மாலைநேரம் உறவினர்கள் நண்பர்கள் என்று அறிந்து அறிந்து வந்து பார்த்து கதைத்து விட்டு சென்றனர். இரவு சாப்பிட்டு விட்டு நானும் மனைவியும் மச்சாளும் கதைத்துக் கொண்டிருக்க மகன் மேல் வீட்டில் போய் படுத்து விட்டார்.கொஞ்ச நேரத்தின் பின் நானும் மேல் அறையில் படுக்க போகும் போது  அவள் சொன்னாள்  நீ அங்க போய் படுகிறது சரி,ஆனால் நான் சொல்லாமல் கீழ இறங்கி வரக்கூடாது என்று.உடனே நான் சீ ச் சீ  நாங்கள் இப்ப விரதம் என்றேன்.
உன்ர விரதம் கிடக்கட்டும், இரவு அவர் உவடம் முழுக்க உலவித் திரிவார். நாளைக்கு விரதம் பிடிக்க நீ இருக்க மாட்டாய் நம்பாவிட்டால் பல்கனியை எட்டிப்பார் என்று. எட்டிப்பார்த்தேன் என்னளவு உயரத்தில் வைரவர் வாகனம் அமைதியாக என்னை பார்த்து கொண்டு கம்பீரமாய் நிக்குது. குரைத்திருந்தால் கடிக்காது என்று நம்பி இருப்பேன். இது குரைக்கவில்லை. நான் மேலே சென்று அறையைப் பூட்டியதும் அவர் அவளுடன் கீழே சென்று உலாவித் திரிகின்றார்.

                                                                                                                          Résultat de recherche d'images pour "black dog"

                                                                                                                                          இவர் போன்ற ஒருவர்,ஆனால் இவர் அவரல்ல......!

யாத்திரை தொடரும்.....!

சம்பவம்: முன்பெல்லாம் அந்தக் கோவில் இருப்பதே வெளியில் தெரியாது.ஒரு வீட்டுக்கு உள்ளேதான் இருந்தது. இப்பொழுது வெளியே கோவிலாய் உள்ளது. நானும் தினமும் காலையில் வேலைக்கு போகும்போது ஒரேயொரு மல்லிகை அல்லது செம்பருத்தம் பூ எடுத்து வந்து வெளியில் நின்று அந்த வேலித் தகரத்தில் உள்ள ஒரு துவாரத்தில் வைத்து வணங்கி விட்டுத்தான் போவது வழமை. அதுக்காகவா அந்தத் தாய் நான் வந்ததும் வராததுமாக காத்திருந்து என்னை அழைத்து எனக்கு உணவளித்தாள்......!
 

Link to comment
Share on other sites

அசைவத்தை புறக்கணித்து அன்னதானத்தில் கலந்து கொள்வதற்க்கு ஒரு தனி மனம் தான் வேண்டும்...

--நானாக இருந்திருந்தால் அசைவத்தை ஒரு கை பார்த்திருப்பேன்... அன்னதானத்திலும் அசைவம் என்றால் டபுள் ஆக்ஷன் செய்திருப்பேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மியாவ் said:

அசைவத்தை புறக்கணித்து அன்னதானத்தில் கலந்து கொள்வதற்க்கு ஒரு தனி மனம் தான் வேண்டும்...

--நானாக இருந்திருந்தால் அசைவத்தை ஒரு கை பார்த்திருப்பேன்... அன்னதானத்திலும் அசைவம் என்றால் டபுள் ஆக்ஷன் செய்திருப்பேன்...

சுவியண்ணா  சைவம் என்ட படியால் அறுசுவை மாமிசத்தை கண்டதும் பயத்தில் ஓடி இருப்பார்...தொடருங்கோ சுவியண்ணா 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மியாவ் said:

அசைவத்தை புறக்கணித்து அன்னதானத்தில் கலந்து கொள்வதற்க்கு ஒரு தனி மனம் தான் வேண்டும்...

--நானாக இருந்திருந்தால் அசைவத்தை ஒரு கை பார்த்திருப்பேன்... அன்னதானத்திலும் அசைவம் என்றால் டபுள் ஆக்ஷன் செய்திருப்பேன்...

நீங்கள் இன்னும் ஒழுங்கான சைவச்சாப்பாடு சாப்பிடேல்லை எண்டு நினைக்கிறன்.  மரக்கறியிலை சமைக்கக்கூடிய நல்ல கைப்பக்குவமுள்ள ஆக்கள் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டுப்பாருங்கோ.......அசைவசாப்பாடெல்லாம் தோற்றுப்போகும்.
நான் ஊரில் இருக்கும் மட்டும் வருசத்திலை 2 அல்லது 3தரம் இறைச்சி சாப்பிடுவேன்.கிழமையில் 2தரம் மீன் கறி.மற்றும் படி ஒரே மரக்கறிதான். அதுவும் திருவிழாக்காலங்கள் தொடங்கிச்சுது எண்டால் அவ்வளவுதான்.....மச்ச சட்டி பானையேல்லாம் தூரத்துக்கு போய்விடும்.

அந்த நேரங்களில் அசைவத்துக்கான தவனம் கூட வராது.

சில ஆக்கள் சொல்லுவினம் இறைச்சி மீன் எண்டால் ஒரு கறியோடை சாப்பிடலாம்.மரக்கறியெண்டால் கனகறி வேணும் எண்டுவினம். சமைக்கிறவன் சமைச்சால் ஒரு கத்தரிக்காய்க்கறியோடை சந்தோசமாய் சாப்பிடலாம்.:grin:

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

நீங்கள் இன்னும் ஒழுங்கான சைவச்சாப்பாடு சாப்பிடேல்லை எண்டு நினைக்கிறன்.  மரக்கறியிலை சமைக்கக்கூடிய நல்ல கைப்பக்குவமுள்ள ஆக்கள் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டுப்பாருங்கோ.......அசைவசாப்பாடெல்லாம் தோற்றுப்போகும்.
நான் ஊரில் இருக்கும் மட்டும் வருசத்திலை 2 அல்லது 3தரம் இறைச்சி சாப்பிடுவேன்.கிழமையில் 2தரம் மீன் கறி.மற்றும் படி ஒரே மரக்கறிதான். அதுவும் திருவிழாக்காலங்கள் தொடங்கிச்சுது எண்டால் அவ்வளவுதான்.....மச்ச சட்டி பானையேல்லாம் தூரத்துக்கு போய்விடும்.

அந்த நேரங்களில் அசைவத்துக்கான தவனம் கூட வராது.

சில ஆக்கள் சொல்லுவினம் இறைச்சி மீன் எண்டால் ஒரு கறியோடை சாப்பிடலாம்.மரக்கறியெண்டால் கனகறி வேணும் எண்டுவினம். சமைக்கிறவன் சமைச்சால் ஒரு கத்தரிக்காய்க்கறியோடை சந்தோசமாய் சாப்பிடலாம்.:grin:

என் வீட்டில் சைவமும் நலனன்றாக தான் சமைப்பார்கள், ஆனால் அசைவம் என்றால் ஒரு தனி கிளு கிளுப்பு தான்...

Link to comment
Share on other sites

8 hours ago, ரதி said:

சுவியண்ணா  சைவம் என்ட படியால் அறுசுவை மாமிசத்தை கண்டதும் பயத்தில் ஓடி இருப்பார்...தொடருங்கோ சுவியண்ணா 
 

ஐயா சுவி அவர்களுக்கு அசைவம் பிடிக்காதா அல்லது தங்களுக்கு பிடிக்காதா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2019 at 10:28 AM, suvy said:

நானும் மனைவியும் இரு மகன்களும்தான் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை.  நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது.

 

எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம் கவலையை விடுங்கள்.

யாழின் ஆண்டுவிழா கதாநாயகனே நீங்கள் தான்.

நானும் ஒரு பயணக் கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம் கவலையை விடுங்கள்.

யாழின் ஆண்டுவிழா கதாநாயகனே நீங்கள் தான்.

நானும் ஒரு பயணக் கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன்.

சுப சீக்கிரஸ்ய.... நல்ல காரியங்களை தள்ளிப்போடக் கூடாது உடனே ஆரம்பியுங்கள்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2019 at 1:39 AM, suvy said:

ஒரு சிவன் கோவில் இருந்தது.சாரதி கூறினார் இதுதான் சிவபூமி என்று. பிறிதொருநாள் அங்கு வரவேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

51642160_302251460482869_70992463623356416_n.jpg?_nc_cat=111&_nc_ht=scontent-syd2-1.xx&oh=e7394b564f44106896f329741f2fa84f&oe=5CEA8616

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.