Jump to content

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை ....(6).

                                                                                                20190205-180345-1.jpg             

அடுத்தநாள் சீக்கிரமே எழுந்து விட்டேன். கீழே மச்சாள் கூட்டி பெருக்கும் சத்தம் கேட்டது. நான் இறங்கி வரலாமா என்று கேட்க அவரை பால்கனியில் விட்டு பூட்டியாச்சு இனி உவரை இறங்கச் சொல்லு என்று குரல் கேட்டது. அன்று மழை குணமாய் இருட்டி இருந்தது.தோய்வதற்கு கொஞ்சம் யோசனையாய் இருந்தது.இங்கு எந்த கோடையிலும் பைப்பில் சுடுதண்ணி கலந்துதான் குளிக்க வேண்டும்.என்று நினைத்து கொண்டு  உள்ளே போய் சிறிது சிறிதாக குளிக்கும் போது குளிர் தெரியவில்லை. பச்சத் தண்ணீரில் தோய முடிந்தது. வெளியே வந்து பார்த்தால் எல்லா இடங்களிலும் வெத்தலை கொடி பந்தலாய் படர்ந்திருக்கு. பார்க்க சந்தோசமாய் இருக்கு.
                                                                                                                   IMG-ad4d25cf1173a3ef9053f2e675350c5d-V-1                                              
 எனக்கு தெரிந்தவரை முன்பு எங்கள் அயலட்டையில் வெற்றிலைக் கொடி இருக்கவில்லை. தேசிக்காய் மரம் கூட எங்காவது ஒன்று இரண்டு வீட்டில் அருமையாய் இருக்கும். இப்போது அநேகமாய் எல்லா வீடுகளிலும் வெற்றிலை,  தேசிக்காய் , கறிவேப்பிலை,முருங்கை எல்லாம் வைத்து இருக்கிறார்கள். அவைகளும் செழிப்பாய் வளர்ந்திருக்கின்றன. நானும் ஒரு வெற்றிலையும் இரண்டு பூவும் பறித்து சூரியனைப் பார்த்து வணங்கி விட்டு பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு செல்கிறேன்.

                                                                                                 IMG-178c90fbbec036efacf4dfa1af05f638-V-1

காலையில் கோவிலில் நிறைய சனம் வந்து கும்பிடுகின்றார்கள்.பூசையின்போதுமேளம்,சேமக்களம்,சங்கொலி போன்ற வாத்தியங்களின் ஓசை ஒரு மின்சாரப்பெட்டியில் இருந்து ஒலித்துக்கொண்டிருக்கு. எல்லா கோவில்களிலும் அந்த சாதனம் வாங்கி வைத்திருக்கினம். சாமி கும்பிட்டு அர்ச்சனைகள் செய்கிறேன், தட்டத்தில் குறைந்தது 20 ரூபாயில் இருந்து 50,100 ரூபாய்வரை நிறைந்து கிடக்கு.நன்றாக கும்பிட்டுவிட்டு வருகின்றேன்.

                                                                                           IMG-62ae70281044faf88a1ef7432e2154f1-V-1

யாத்திரை தொடரும்.....!

சம்பவம்: நான் வெளியே வந்து சூரியனை பார்த்துகும்பிடுகிறேன். வீடும் பெரிதாய் கட்டி இருப்பதால் இருட்டு, திசையிலும் குழப்பம். கையில் பூவோடும் நீரோடும்  கும்பிட்டுக்கொண்டு நிக்க மச்சாள் வந்து "உந்தப் பக்கம் யாரைப்பார்த்து ஒற்றைக்காலில் நின்று தவம் செய்கிறாய்.கிழக்கு இந்தப்பக்கம் எல்லோ  இருக்கு என்று சொல்ல மனைவியும் தன் பங்குக்கு ஏன் அக்கா அம்மையாவின்ர பெட்டைகள் ஒருத்தரும் உங்கு இல்லையோ என்று கேட்கிறாள். அவை எல்லாம் வீடு மாறிபோட்டினம். அவர்களும் கலியாணம் கட்டி பிள்ளை குட்டிகளுடன் இருக்கிறார்கள்.என்று சொல்கிறாள்.

அம்மையா: அப்படித்தான் அவரை எல்லாரும் அழைப்பது.ஆண்  பெண் என ஒரு எட்டு பத்து அழகான பிள்ளைகள். பார்த்தால் வினு சக்கரவர்த்தி மாதிரி இருப்பார். அவர்தான் அன்று ஒருநாள் நிறை போதையில் தண்ணி அள்ளும்போது  அந்தக் கிணற்றினுள் தவறி விழுந்து விட்டார். இரவு 11 மணி இருக்கும். நான் நல்ல நித்திரையாய் கிடக்க அம்மம்மா ஓடி வந்து எட தம்பி பக்கத்து வீட்டில் எல்லோரும் குளறி கேட்குது என்னெண்டு ஓடிப்போய் பாரடா என்று சொல்ல நானும் உடுத்திருந்த சறத்துடன் ஓடிப்போய் மதிலை ஒரு ஜம்ப் பண்ணி பார்த்தால் அம்மையா கிணத்துக்குள்ள. நான் யோசிக்காமல் குதித்திட்டன். மேலிருந்து டார்ச் அடிக்கிறார்கள். பின் கயிற்றில் பெற்றோமக்ஸ் லைட்டும் இறங்குது. நான் கீழபோய் அவரை பிடரி சேட்டுடன் பிடித்திட்டன்.கட்டு கல்லில் வைத்து பிடித்துக்கொண்டு நிக்கிறன்.அவற்றை வெறி எல்லாம் முறிஞ்சு போச்சு. நான் அவரிடம் அம்மையா என்னை நல்லா இறுக்கி பிடியுங்கோ. என் கைக்கு மேல் கொஞ்ச உயரம்தான் மேல் கட்டு. ( முக்கால்வாசி கிணற்றில் தண்ணி நிறைந்திருக்கு. கிணற்றின் மேல் பிளாட் போட்டு கடை கட்டி இருப்பதால் ஒரு சின்ன சதுர இடைவெளியில்தான் காப்பியில் தண்ணி அள்ளுவது). நான் கயிற்றுடன் போய் அவர்களின் கையை பிடிக்க எங்களை மேல இருக்கிறவர்கள் தூக்கி போடுவார்கள் என்று சொன்னன். அவரும் ஓமடா தம்பி நான் உன்னை இறுக்கி பிடிக்கிறன் என்று சொன்னார்.

          அந்தப் பிளானில் கயிற்றில் நான் பிடிக்க அம்மையா என் இடுப்பை ( நிஜமாய் அப்ப எனக்கு இடை இருந்தது).பிடிக்க  அவர்கள் மேலே இழுத்து என்கையை பற்றி விட்டார்கள். அம்மையா என் சறத்துடன் மீண்டும் கீழே போய் விட்டார். பிறகு நான் கீழே வர அவர் தவளை மல்லாந்ததுபோல மேலே வந்தார் பிடிச்சிட்டன். பிறகு வேட்டியால அவரை கயித்துடன்சேர்த்து கட்டி மேலே தூக்கியாச்சு. இப்ப எனக்கு மேலே வர வெட்கம். சறம் இல்லை.மாமா (அம்மாவின் அண்ணன்,மனிசியின் அப்பா) கத்துறார் மேலே வாடா என்று.நான் நிலைமையை சொல்ல இரண்டு "அதுதான் அதை"  சொல்லி கத்துறார்.அதுக்குள் ஒரு நண்பன் சேர்ட் ஒன்றை போட்டான்  நான் அதை கோவணமாய் கட்டிக்கொண்டு (அப்ப வெள்ளி அறுணாக்கொடி அட்ஷரக்கூட்டுடன் கட்டியிருப்பன்) மேலே வந்தேன். 

பின் அந்த நேரத்தில் அத்தை தேனீர் வார்த்துகொண்டுவந்து எல்லாருக்கும் குடுக்கிறா. பொடியள் எல்லாம் கலாய்கிறாங்கள். போடா போடா நீ பொட்டை விழுந்திட்டுதென்றுதான் ஓடிப்போய் குதிச்சனி என்று.எல்லோரும் போனபின் மாமா வந்து சொன்னார், கவனமடா அப்பு  கொப்பரை மாதிரி நீயும் தண்ணிக்குள்ள போயிடாதே என்று. மாமா என்  வைத்துள்ள பாசம் அன்றுதான் புரிந்தது.(மற்றும்படி சவுல் அடிதான் எனக்கும், அவரின் மூத்த மகனுக்கும் அப்பப்ப குறையின்றி  தாராளமாய் நடக்கும்). என் ஐயா வவுனியாவில் ஒரு குளத்தில்தான்  நீந்தும்போது மோசம் போனவர். அப்ப நான் அம்மா வயிற்றில் எட்டு மாத கர்ப்பம்.....!
 
Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

என் ஐயா வவுனியாவில் ஒரு குளத்தில்தான்  நீந்தும்போது மோசம் போனவர். அப்ப நான் அம்மா வயிற்றில் எட்டு மாத கர்ப்பம்.....!
 
கசப்பான சம்பவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, suvy said:

படங்களுடன்  தெய்வகடாட்சமாக ஆரம்பித்து பதைபதைப்பு  மாறுமுன்  சிரிக்க  வைத்து  இறுதியில் கண்கலங்க வைத்த   கதையும் சம்பவமும் அபாரம்.

கிட்டத்தட்ட 38வரிகளில்  ஒரு பெரிய திரைப்படம் பார்த்த பிரமை.tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

சுப சீக்கிரஸ்ய.... நல்ல காரியங்களை தள்ளிப்போடக் கூடாது உடனே ஆரம்பியுங்கள்.......!  😁

பேரப்பிள்ளைகளுக்கு முன்னால் கணனியோ கைத்தொலைபேசியோ 2 வயது வரை நோண்டக் கூடாதென்று ஒரு எழுதாத சட்டம்.இங்கே பாசம் வென்றுவிட்டது.அதனாலத் தான் முன்னர் போல எழுத முடிவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பின் அந்த நேரத்தில் அத்தை தேனீர் வார்த்துகொண்டுவந்து எல்லாருக்கும் குடுக்கிறா. பொடியள் எல்லாம் கலாய்கிறாங்கள். போடா போடா நீ பொட்டை விழுந்திட்டுதென்றுதான் ஓடிப்போய் குதிச்சனி என்று.எல்லோரும் போனபின் மாமா வந்து சொன்னார், கவனமடா அப்பு  கொப்பரை மாதிரி நீயும் தண்ணிக்குள்ள போயிடாதே என்று. மாமா என்  வைத்துள்ள பாசம் அன்றுதான் புரிந்தது.(மற்றும்படி சவுல் அடிதான் எனக்கும், அவரின் மூத்த மகனுக்கும் அப்பப்ப குறையின்றி  தாராளமாய் நடக்கும்). என் ஐயா வவுனியாவில் ஒரு குளத்தில்தான்  நீந்தும்போது மோசம் போனவர். அப்ப நான் அம்மா வயிற்றில் எட்டு மாத கர்ப்பம்.....!
 
அப்பா இல்லாமல் உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த அந்த தாய்க்கு வணங்குகிறேன் அம்மா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎8‎/‎2019 at 4:08 AM, மியாவ் said:

ஐயா சுவி அவர்களுக்கு அசைவம் பிடிக்காதா அல்லது தங்களுக்கு பிடிக்காதா...

நான் நல்லாய் அசைவம் சாப்பிடுவன்...சுவியண்ணா தான் சுத்த சைவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

முன்பு எங்கள் அயலட்டையில் வெற்றிலைக் கொடி இருக்கவில்லை.

புகையிலை தடை என்றவுடன் வெற்றிலை வைக்க தொடங்கிட்டினம் போல கிடக்கு 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோகத்தையும் சுவையோடு அதிலும் நகைச்சுவையோடு சொல்லும் உங்கள் மனப்பக்குவம் எல்லோருக்கும் வராது. யாத்திரை மிக சுவாரசியமாகச் செல்கிறது. தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை.....(7).

                                                                                          Résultat de recherche d'images pour "sri lanka auto rickshaw"

பின்பு நாங்கள் ஒரு ஆட்டோவில் பெரிய கடைக்கு (டவுனுக்கு) சென்று காசை மாற்றுகிறோம். அன்று ஒரு ஈரோ அண்ணளவாய் இருநூறு வரை போகின்றது.அதிலும் பெரிய தாளுக்கு ஒரு விலை,சிறிய தாளுக்கு ஒரு விலை. எனது பர்ஸ் நிறைய பணம்.எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை. பர்சில் இவ்வளவு பணம் நான் கனவிலே கூட வைத்திருந்ததில்லை. மனைவியும் மாத்திக்கொண்டு வருகின்றா. பக்கத்தில் லிங்கம் கூல்பாரில் ஐஸ்கிரீம், சர்பத் என்று ஆளாளுக்கு விரும்பியதை வாங்கி சாப்பிடுகின்றோம். நானும் டயபடிஸ் சுக்கு டாட்டா காட்டிவிட்டு சாப்பிடுகிறன். மனிசி பில்லுக்கு காசை குடப்பா என்று சொல்ல நானும் நோ ...நோ  நீ உன்ர காசை குடு. இது முழுதும் என்ர செல்வ்  செலவுதான்.நான் கண்கடை தெரியாமல் "உல்லாச உலகம்" தங்கவேலு ரேஞ்சில் நிக்கிறன். உடனே மச்சாளும் தங்கையிடம் பொறடி இவர் நாலு நாளைக்கு கிலுக்குவார்.பிறகு காய்ஞ்சு போய் உன்னட்ட வரேக்க நீ குடுக்காத என்று புத்தி சொல்லுறா.நான் அதை காதிலேயே வாங்க வில்லை.
                  அங்கு  உறவினர் வீடுகளும் கோவிலும் என்று திரிவதால் சாக்ஸ்சும் சப்பாத்தும் அசௌகாரியமாய் இருக்கு. அதனால் செருப்பும் இரண்டு சேர்ட்டும் வாங்க ஐயாயிரம் ரூபா பில். சந்தோசமாய் இழுத்து குடுத்தன்.பின்பு போனுக்கு சிம்கார்ட் ,சார்ஜ், இன்டர்நெட்  இரண்டாயிரத்து ஐந்நூறு, மீண்டும் ஆட்டோவில் வீடு வர பத்தாயிரம் காலி. (30 வருடத்துக்கு முன் எனது 8 மாதச் சம்பளம்). மச்சான் வீட்டில் இரவு சாப்பாடு கதைகள் என்று அன்றையநாள் போகிறது. அங்கு பின் வளவில்  அன்று நாங்கள் பாவித்த வாகனங்களில் சில லொறி, கார், ஸ்கூட்டர்,சயிக்கிள் எல்லாம் கறல் பிடித்து போய்  வெறும் இரும்பாய் கிடக்கின்றன.பார்க்க கண்கள் பணிக்கின

                                                                                       20180801-071343.jpg   

                                                 இன்று காலை  தோய்ந்து சரியாக கிழக்கு பார்த்து நின்று வணங்கி விட்டு எனது குருநாதரையும் சில நண்பர்களையும் பார்க்க பரிசுப்பொருட்களுடன் சயிக்கிள் எடுத்து கொண்டு கிளம்பினேன்.அவர்களை சந்தித்து கடைகளில் சாப்பிட்டு நன்றாக பொழுது போனது.அவருக்கு ரொம்ப வயதாகி விட்டிருந்தது.என்னை கண்டதும் சந்தோசமாய் என் கையை பிடித்து கொண்டு நெடுநேரம் கதைத்து கொண்டிருந்தார்.அவருக்கு உபயோகமான சிறப்பான பரிசு பொருட்கள் குடுத்தேன்.பின் எனது பால்ய நண்பனை போய் சந்தித்தேன்.இவர் எனது குருநாதரின் பெறாமகன். என்கூட லிபியாவிலும் வந்து வேலை செய்தவர். பின்பு அங்கு பிரச்சினை வர ஊர் வந்து மீண்டும் அவர் லிபியா போகவில்லை. பிள்ளைகளும் வளர்ந்து விட்டினம். அங்கேயே மீண்டும்  கராஜ் போட்டு நடத்திக் கொண்டிருக்கின்றார்.

                          சிறு வயதில் இருந்து  ஒன்றாக ஓடி விளையாடி ஒன்றாக படங்கள் பார்த்து,ஒருத்தர் வீட்டில் ஒருத்தர் சாப்பிட்டு சேர்ந்து தொழில் செய்து முன் பின்னாய் திருமணமும் செய்து....... இருவரும் நிறைய நேரம் அளவளாவினோம். கன காலத்தின் பின் சேர்ந்து போய் கடையில் சாப்பிட்டோம். பின் அவரது மோட்டர் சைக்கிளில் சென்று மேலும் சில நண்பர்களை பார்த்து பரிசுப்பொருட்கள் குடுத்து கதைத்து விட்டு வந்தேன். 

யாத்திரை தொடரும்......!

சம்பவம்:  எனது நண்பன் காதலித்த காலங்களில் அவருக்கு நான்தான் காதல் காதல் கடிதம் எழுதித் தருவது."அலைகடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாத" என்ற பிரசித்தமான வசனத்தின் முன்னோடிகள் நாங்களே.இப்படியே அவர்கள் காதல் வளர்ந்ததும் அது திருமணத்தில் முடிந்ததும் தனிக்கதை. ("பொன்மணி" என்று ஒரு ஈழத்து தமிழ்ப்படம் அன்றுதான் ஆரம்பம்.). அன்று மாலை அந்தப்படத்தை நானும் அவனுமாய் பார்க்கிறோம். அதில் வந்த முதலாவது காட்சியே எங்களை அதிர்சிக்குள்ளாக்குகின்றது. ஒரு சோமர்செட் கார்  ஒரு பெண்ணுடன் கோட்டை  முனியப்பர் வீதியால் வேகமாய் போகின்றது. இதே சம்பவம் இன்று அதிகாலைக்  கருக்கலில்  அதே வீதியில் நடந்தது. காரின் நிறம்தான் வேறு. இது எப்படி சாத்தியம். இதன் தொடர்பு என்ன தெரியாது. மேலும் இன்று ஏன் இந்தப் படத்திற்கு நாங்கள் வர வேண்டும். எம்மை எது அழைத்து வந்தது....இன்றுவரை புரியவில்லை.....!

                                    நான் கடிதம் எழுதி குடுத்ததே தவிர அவாவை நான் ஒருநாளும் பார்த்ததில்லை. அன்று  வருடப்பிறப்பு. மருதடி விநாயகர் தேர்.  n .r .t .b  யில் வேலை. நான் ஓடும் பஸ்ஸில் இருந்து ஸ்டைலாய் குதித்து(அது அப்ப எழுதப் படாத விதி) கோவிலுக்குள் சென்று கும்பிட்டுவிட்டு வெளியே வருகின்றேன்.சனக் கூட்டம். ஒரு பெண் ஓடிவந்து அண்ணா என்று என் கையை பிடிக்கிறாள். மறுகையில் பிள்ளை ஒன்று. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் முழுச அண்ணா "அலைகடல் வற்றினாலும்" என்று சொல்ல அப்பவும் புரியவில்லை. என்பின்னால் இருந்து நண்பன் வெளிப்பட்டு "டேய் கழுதை இது என்ர மனிசியும் பிள்ளையும்" என்கிறான். நானும் நண்பனும் அப்பப்ப சந்திப்பதுண்டு.ஒரே நகரத்தில்தான் வாழுகின்றோம்.ஆனால்  சுமார் மூன்று வருடத்தின் பின் அவர் மனைவியை பிள்ளையுடன் முதன் முதலாய் பார்க்கிறேன்.

அவனை தள்ளி கூட்டிப்போய் "எருமை நான்தான் கடிதம் எழுதினது எண்டு சொல்லிபோட்டாய்" போல. 
அதெல்லாம் அப்பவே சொல்லிட்டன்.முதலிரவன்று வேறு என்னத்தை கதைக்குறதாம்.....!
 
Link to comment
Share on other sites

10 hours ago, suvy said:

அங்கு பின் வளவில்  அன்று நாங்கள் பாவித்த வாகனங்களில் சில லொறி, கார், ஸ்கூட்டர்,சயிக்கிள் எல்லாம் கறல் பிடித்து போய்  வெறும் இரும்பாய் கிடக்கின்றன.பார்க்க கண்கள் பணிக்கின

                                                                                       20180801-071343.jpg   

அன்று மாலை அந்தப்படத்தை நானும் அவனுமாய் பார்க்கிறோம். அதில் வந்த முதலாவது காட்சியே எங்களை அதிர்சிக்குள்ளாக்குகின்றது. ஒரு சோமர்செட் கார்  ஒரு பெண்ணுடன் கோட்டை  முனியப்பர் வீதியால் வேகமாய் போகின்றது. இதே சம்பவம் இன்று அதிகாலைக்  கருக்கலில்  அதே வீதியில் நடந்தது. காரின் நிறம்தான் வேறு. இது எப்படி சாத்தியம். இதன் தொடர்பு என்ன தெரியாது. மேலும் இன்று ஏன் இந்தப் படத்திற்கு நாங்கள் வர வேண்டும். எம்மை எது அழைத்து வந்தது....இன்றுவரை புரியவில்லை.....!
 
இவ்வாறு சில சம்பவங்கள் அவ்வப்போது நம்மை ஆச்சரியப்படுத்துவதுண்டு! நம்மால் புரிந்து கொள்ளமுடியாத ஏதோ ஓர் பிரபஞ்ச ரகசியம் என எண்ணிக்கொள்வேன்.

தாய்மண்ணைக் கண்முன்னே நிறுத்தி மீண்டும், மீண்டும் அங்கே செல்லத் தூண்டும் உங்கள் பயணப் பதிவுகளைத் தொடருங்கள், சுவி அண்ணா! 👍😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

அன்று  வருடப்பிறப்பு. மருதடி விநாயகர் தேர்.  n .r .t .b  யில் வேலை.

இந்த தடவையும் நானும் மருதடியானிட்ட் ஒரு விசிட் அடிச்சேன்.... தரிசனம் நன்றாக உள்ளது தொடருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், சுவியர்!

அனுபவப் பகிர்வு...அழகாக நகர்ந்து செல்கின்றது!

தொடர்ந்தும் வாசித்துக் கொண்டு வருகிறேன்! கணனிப் பிரச்சனையால்,.....விரிவான கருத்துக்களை எழுத முடியவில்லை!

விரைவில் கணனிப் பிரச்சனை முடிவுக்கு....வரும்!

வழக்கம் போல...மீண்டும் யாழில்.....கருத்துக்களை எழுத முயல்வேன்!

தொடர்ந்தும் எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை .....(8).

                                                   Résultat de recherche d'images pour "nallur sivan kovil jaffna"

அன்று மாலை எனது பெறாமகன் (அண்ணரின் மகன்) எங்களை பார்க்க வந்தார். நாளைக்கு வெள்ளிக்கிழமை.காலையில் அப்பாவையும் அழைத்து வா நல்லூருக்கும், சன்னதிக்கும் போகவேணும் என்று சொன்னேன். அடுத்தநாள் காலையிலேயே அவர் அண்ணனுடனும் தனது இரு பிள்ளைகளுடனும் வானில் வந்து விட்டார். நாங்களும் கிளம்பி முதலில் நல்லூர் சிவன் கோவிலில் நன்றாக வணங்கி விட்டு பின் முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனைகள் செய்து (அர்ச்சனை சீட்டு ஒரு ரூபாதான்) முருகனை கண்ணார மனம் நிறைய தரிசித்து விட்டு வந்தோம். கோவில் உள்ளே மிக விசாலமாகவும்,நேர்த்தியாகவும் கட்டி இருக்கிறார்கள். கோபுரம் கட்டுவதற்காக பழநியாண்டவரின்  இருப்பிடத்தை  மாற்றி பக்கத்து மூலையில் பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார்கள். அவரை நான்கு பக்கத்தாலும் தரிசிக்க முடிகின்றது. புதிதாக இரண்டு கோபுரங்களும் கட்டியுள்ளார்கள். அவை பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கின்றன.   

                                                                                    IMG-20180816-WA0008.jpg

                                                                                                                                   அப்படியே  வெளிவீதி சுற்றி வருகின்றோம்.  பிள்ளையார் கோவிலும் திருத்து அழகாக உள்ளது.மனோன்மணியம்மன் கோவிலில்  திருத்த வேலைகள் நடைபெறுவதால் உள்ளே போக முடியவில்லை. தேரடி வில்வமரத்தடியில் மேலும் சில மரக்கன்றுகள் நட்டிருக்கின்றார்கள். தேரடியிலும் சிதறுதேங்காய் போட்டு விட்டு வந்து வானில் ஏறி சன்னதியை நோக்கி செல்கின்றோம்.  நான் சொல்லிட்டன் மதியம் சன்னதி மடத்தில்தான் அன்னதான சாப்பாடு என்று.
                                    பருத்தித்துறை வீதியில் வான் வேகமெடுத்து செல்கின்றது.எனது மகனுக்கு, அங்கு ஆட்டோக்களும், மோட்டார் சயிக்கிள்களும் கண்டபடி சகட்டுமேனிக்கு முன் பின்னாக செல்வதைப் பார்க்க வியப்பாய் இருக்கு. எல்லா வாகனமும் எந்த நேரமும் கோர்ன் அடித்து கொண்டே செல்கின்றன.(அவர் நாலு வயதில் இங்கு வந்து விட்டார்). இந் நாடுகளில் கோர்ன் அதிகம் பயன் படுத்துவதில்லை.

                                     IMG-20180805-WA0077.jpg

                   திடீரென பெறாமகன் கேட்கிறார் சித்தப்பா வல்லிபுரக் கோவிலுக்கு போய்விட்டு போவோமா என்று. நானும் எல்லா கோவிலுக்கும் போயிட்டு போகலாம் பிரச்சினை இல்லை என்று சொல்ல அடுத்து வந்த சந்தியால் வான் திரும்பி பெருமாள் கோவிலை நோக்கி போகின்றது. பனங்காடுகளுக்கு நடுவே கோயில் அமைந்திருக்கிறது. புத்தம் புதிதாய் வர்ணம் பூசிய சுற்று மதில் மற்றும் பெரிய கோபுரத்துடன் பெருமாள் கொலுவிருக்கின்றார்.அன்று அங்கு அதிகம் கூட்டமில்லை. அர்சனைப் பொருட்களுடன் சென்று அருமையான தரிசனம். இப்போது உள்ளிருக்கும் சந்நிதிகளில் கற்பூரம் ஏற்றுவதில்லை.

                                    மத்தியானமாகி விட்டது.மடத்தில் அன்னதானம் என்று சொன்னார்கள்.  நான் சந்நிதியில் சாப்பிடுவம் என்றிருந்தேன் ஆனால் பெருமாள் விடவில்லை. அமிர்தத்துக்கு நிகரான அன்னமிட்டு எங்களை அனுப்பி வைத்தார். (அவருக்கு தெரியும் தனது பக்தர்களை தவிக்க விடக்கூடாது என்று). மீண்டும் வண்டி பருத்தித்துறை  வீதியை பிடித்து பயணித்து வெள்ளை வெளியில் அந்த சிறிய கோயிலின் அருகே நிக்கின்றது. கண்டி வீதியில் முறிகண்டி போல் பருத்தித்துறை வீதியில்  இந்தக் கோவில். எல்லா வாகனங்களும் தரித்து நின்றே செல்கின்றன.

                                                                20180803-111124.jpg
                                          
                                        எதிரே ஒரு பெரிய உருவத்துடன் சிறிய ஆஞ்சநேயர் கோவில். வாலால் தகனம் செய்த பூமியில் காலால் மண்டியிட்டு கையால் ஆசி வழங்கியபடி.....!           

 யாத்திரை தொடரும்......!

சம்பவம்: நான் கல்லூரியில் படிக்கும் போதும் சரி, வேலையில் சேர்ந்த பின்பும் சரி ஒவ்வொரு வெள்ளியும் தவறாது நல்லூர் சிவன் கோவிலுக்கு சென்று வணங்குவது வழமை. அங்கிருக்கும் அந்தப் பெரிய துர்க்கை அம்மனை மிகவும் பிடிக்கும். வசதியான நேரமெல்லாம் அம்மனுக்கு புடவை சாத்தியும்,நவகிரகங்களுக்கு பால் அபிஷேகமும் செய்வது வழக்கம். அது மட்டுமன்றி மேலும் சில காரணங்களால் அந்தக்கோவில் என் வாழ்வில் அதீத இடம் கொண்டது. அந்த சந்நிதியில் நின்றபோது ஏனோ என்னால் அடக்க முடியாதவாறு கண்ணீர் வழிந்து ஓடுகின்றது. மேலும் இக் காலங்களில் நான்அருகில் இருக்கும் நல்லை ஆதீனத்தில் யோகாசனமும் பயின்று வந்தேன். திருவிழா காலங்களில் இருபத்தைந்து நாளும் நடக்கும்  மணிஐயரின் பிரசங்கங்களை ஒருபோதும் தவறவிட்டதில்லை. அப்போதெல்லாம் பிரசங்கம் முடிய இரவு பதினோரு மணி கூட ஆகிவிடும்......!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

வணக்கம், சுவியர்!

அனுபவப் பகிர்வு...அழகாக நகர்ந்து செல்கின்றது!

தொடர்ந்தும் வாசித்துக் கொண்டு வருகிறேன்! கணனிப் பிரச்சனையால்,.....விரிவான கருத்துக்களை எழுத முடியவில்லை!

விரைவில் கணனிப் பிரச்சனை முடிவுக்கு....வரும்!

வழக்கம் போல...மீண்டும் யாழில்.....கருத்துக்களை எழுத முயல்வேன்!

தொடர்ந்தும் எழுதுங்கள்!

என்ன ஆபீசில ஆப்பு வைத்திட்டாங்களோ?

1 hour ago, suvy said:

யாத்திரை தொடரும்......!

ஆவலோடு எதிர்பார்த்திருக்கோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தரிசனங்களுக்கு நன்றி சுவியர்! நானும் யோகேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் யோகா பயின்றேன், அது நல்லை ஆதீனத்திற்கு அருகில் இருக்கும் மண்டபம் என நினைக்கிறேன், சரியா? 

நல்லூர் திருவிழா வரும் அதே காலத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது ஆசனக் கோவில் (தலைமைக் கோவில்) எனப் படும் அடைக்கலமாதா ஆலய திருவிழாவும் வரும். அதனால் எல்லா நாட்களும் நல்லூர் போகக் கிடைக்காது. ஆனாலும், நல்லூரின் சப்பறத்திருவிழாவுக்கும், தேருக்கும் வீட்டில் மச்சம் புளங்காமல் குடும்பமாகப் போய்வருவோம். மதஸ்தானம் என்பதைத் தாண்டி நல்லூர் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய அடையாளம், எங்கள் எல்லாருக்கும் பொதுவானது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வயதில் ஏன்டா இவ்வளவு கோயில்கள் என்று நினைத்தது உண்டு ஆனால் இப்ப அந்த கோயில்களை எல்லாம் நானே தேடி போகின்றேன்..... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2019 at 5:31 PM, suvy said:

அவனை தள்ளி கூட்டிப்போய் "எருமை நான்தான் கடிதம் எழுதினது எண்டு சொல்லிபோட்டாய்" போல. 
அதெல்லாம் அப்பவே சொல்லிட்டன்.முதலிரவன்று வேறு என்னத்தை கதைக்குறதாம்.....!

ஆகா மாட்டிகிட்டாரா சுவியண்ணா?!

Link to comment
Share on other sites

On 2/11/2019 at 5:31 PM, suvy said:

யாத்திரை.....(7)

யாத்திரை 7 ல் பகிர்ந்துள்ளதை படிக்கும் பொழுது நானே அந்த சூழலில் இருப்பது போன்று உள்ளது... மிக நேர்த்தியான உணர்ச்சி மிகுந்த எழுத்து நடை...

On 2/11/2019 at 5:31 PM, suvy said:

யாத்திரை.....(7).

சம்பவம்:  எனது நண்பன் காதலித்த காலங்களில் அவருக்கு நான்தான் காதல் காதல் கடிதம் எழுதித் தருவது."அலைகடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாத" என்ற பிரசித்தமான வசனத்தின் முன்னோடிகள் நாங்களே.இப்படியே அவர்கள் காதல் வளர்ந்ததும் அது திருமணத்தில் முடிந்ததும் தனிக்கதை. ("பொன்மணி" என்று ஒரு ஈழத்து தமிழ்ப்படம் அன்றுதான் ஆரம்பம்.). அன்று மாலை அந்தப்படத்தை நானும் அவனுமாய் பார்க்கிறோம். அதில் வந்த முதலாவது காட்சியே எங்களை அதிர்சிக்குள்ளாக்குகின்றது. ஒரு சோமர்செட் கார்  ஒரு பெண்ணுடன் கோட்டை  முனியப்பர் வீதியால் வேகமாய் போகின்றது. இதே சம்பவம் இன்று அதிகாலைக்  கருக்கலில்  அதே வீதியில் நடந்தது. காரின் நிறம்தான் வேறு. இது எப்படி சாத்தியம். இதன் தொடர்பு என்ன தெரியாது. மேலும் இன்று ஏன் இந்தப் படத்திற்கு நாங்கள் வர வேண்டும். எம்மை எது அழைத்து வந்தது....இன்றுவரை புரியவில்லை.....!

பிரபஞ்சத்தில் எல்லாமுமே ஒன்றை ஒன்று சுற்றிக்கொண்டு தான் உள்ளது... அப்படி சுற்றும் பொழுது மீண்டும் மீண்டும் சில துகள்களோ, கிரகங்களோ, விண் மீன்களோ, ஏன் பிரபஞ்சங்களும் கூட ஒரு மையப் பகுதியை ஆதாரமாக கொண்டு பயணிக்கும் பொழுது ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்ளும்... நமது உடல் கூறானது நச்சத்திர துகள்கள் தானே, அப்படியான உடல் பிரபஞ்ச சுழர்ச்சியில் ஆட்கொள்ளபட்ட சம்பவங்களில் சங்கமிக்கலாம்... இதை சில பேர் கவனிப்பர், சில பேர் கவனிக்காமல் கடந்து செல்வர்... அது அவரவருடைய நியாபக சக்தியை பொறுத்தது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை.....(9).

                                             IMG-20180805-WA0116.jpg 

மீண்டும் பயணப்பட்டு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வந்தோம். அது திருவிழா சமயமாதலால் நிறைய கூட்டம். தொன்டமானாறு படித்துறையில் இறங்கி கை கால் அலம்பி வந்து அர்ச்சனை செய்து முருகனை சேவித்து உள்வீதி சுற்றி வள்ளியம்மன் சந்நிதி எல்லாம் வணங்கி விட்டு வெளியே வந்தால் மடத்தில் இருந்து அன்னதான வரிசை ஒரு மைல் நீளத்துக்கும் மேலாக நீண்டு இருக்கு.அதில் நிண்டிருந்தால் அன்று மாலையானாலும் சாப்பிடுவது சந்தேகமே. இது தெரிந்துதான் பெருமாள் தன்னிடமே எங்களை பசியாற்றி அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைத்தோம்.....!

                                            பின்பு  பிள்ளைகளுக்கு விளையாட்டு சாமான்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பி வருகையில் அச்சுவேலியை அண்மிக்கும்போது தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலுக்கும் போயிட்டு போவோம் என்றார் பெறாமகன். அப்படியே அந்த சந்தியால திரும்பி தெல்லிப்பளை நோக்கி வான் போகுது. வீதியின் இரு மருங்கிலும் தோட்டங்கள் பச்சபசேல் என்று. செந்தூரம் போன்ற அந்த கருஞ்சிகப்பு செம்மண்ணில் கால் புதைய நடக்க வேண்டும்போல் இருக்கு.

                                                                                         IMG-20180805-WA0123.jpg

                                                                                      துர்க்கையம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.சனம் குறைவாக இருந்தது.கொஞ்ச பக்தர்களே இருந்தார்கள்.கோவில் பெரிதாகவும் அழகாகவும் இருக்கு. முன் வாசலில் காராம்பசு கன்றுடன் நின்று வரவேற்கிறது. சிறப்பாக அம்பாளை தரிசனம் செய்து அர்ச்சனையும் செய்து விட்டு வெளியே வருகிறோம்.  எனக்கு மாவிட்டபுரத்தில்  எங்கள் வீட்டையும்  அருகே இருக்கும் காளிகோவிலையும் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் சென்று வந்த எனது தங்கை சொன்னார், வீடெல்லாம் உடைத்துக்கொண்டு போட்டார்கள். ரோட்டில் இருந்து ஒரே காடாய் கிடக்கு.போகும் வழியெல்லாம் மரங்களாலும் பற்றைகளாலும் மறைந்து போய் கிடக்குது என்று. முன்பு லொறி போன பாதை இப்போது வான் போகவும் சிரமப்பட்டுக்கொண்டு போகுது.

                                                 IMG-20180805-WA0125.jpg                                            

                                                         வீட்டின் சுவடே இல்லை.கிட்டவே போக முடியவில்லை.பாம்பு பூச்சி இருக்கும் என்ற பயம் ஒரு பக்கம், வெடி கிடி கிடந்தது தொலைக்க போகுது என்ற பயம் வேறு. எவ்வளவு பேர் புழங்கிய பெரிய ஒட்டு வீடு. எட்டத்தில் இருந்து பார்க்கிறேன்.கிணறு எல்லாம் முற்றாக மண்ணும் குப்பைகளும் போட்டு மூடிக் கிடக்கு. மனவேதனையுடன் பார்த்துவிட்டு கோவிலுக்கு வந்தால் ஒரு சின்ன தகர கொட்டிலுக்குள் அம்பாள் இருக்கிறாள்.அருகில் பிள்ளையாருக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சந்நிதிகள் கட்டி வேலைகள் முடியாமல் அரைகுறையாய் கிடக்கு. ஒரு ஆளரவம் இல்லை.யாரோ தினமும் வந்து விளக்கேற்றி வணங்கி விட்டு செல்கின்றனர். கிணற்றில் தண்ணீர் அள்ளி குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம். வழியில் மருதனாமடத்தில் ஆஞ்சநேயர் கோவிலும் வானுயரத்துக்கு ஆஞ்சநேயரின் சிற்பமும்  நின்று அருள் பாலிக்கின்றார். எல்லா இடமும் பரவலாக அனுமன் கோவில்கள் இருக்கின்றன. வானில் வரும்போது சித்தப்பா நாளைக்கு உங்களுக்கு நேரமிருந்தால் நயினாதீவு போகலாம் என்கிறார். நானும் சரி என்று சொல்கிறேன்.அப்படியே மாலை வீடு வந்து சேர்ந்தோம்......!

யாத்திரை தொடரும்.....!

சம்பவம்:  என்னுடன் வேலை செய்யும் வேலைநேரத்தில் என் நண்பன் மிகவும் கவலையாய் இருந்தான்.என்ன விடயம் என்று கேட்க, சுவி நான் விஜயாவுடன்(பெயர் மாற்றம்) வீட்டை விட்டு வந்திட்டன். தங்குவதற்கு விடு வேண்டும் அதுதான் யோசிக்கிறேன் என்கிறார். மாலை வேலை முடிந்ததும் என்னோடு அவரை அழைத்து வந்து கார் எடுத்து கொண்டுபோய் பெண்ணையும் கூட்டி வந்து எனது உறவினர் வீட்டில் ஒரு அறையில் வாடகை எல்லாம் பேசி தங்க வைக்கிறேன்.அவர்கள் ஏற்கனவே ரகசியமாய் பதிவுத்திருமணம் செய்திருந்தனர். ஒருநாள் இருவரும் என்னிடம் தாலி கட்டி கல்யாணம் செய்யவேணும் என்ன செய்யலாம் என்று கேட்டார்கள். நாங்கள் மூவருமாய் ஆலோசித்து அடுத்தநாள் எனது மோட்டார் சைக்கிளில் சந்நிதிக்கு சென்று அங்கு உரியவர்களுடன் கதைத்து கோவில் மேளத்துடன் தாலி கட்டுவதற்கும் ஒரு சின்ன அன்னதானத்திற்கும் பணம் கட்டி ஏற்பாடுகள் செய்து விட்டு வீட்டுக்கு வருகின்றோம்.

                                                             அந்த நாளன்று காரில் மாப்பிள்ளைத்தோழனாக நானும் பொம்பிளைத் தோழியாக  எனது தங்கை (ஐந்து ஆறு வயதிருக்கும்)யுமாக நான்குபேரும் சன்னதிக்கு சென்றோம். அன்று அங்கு வள்ளியம்மன் சந்நிதியில் ஏழு எட்டு கல்யாணங்கள்.எல்லோரும் நிறைய பந்து மித்திரர்களுடன் வந்திருந்தனர். எமது கல்யாணத்தில்தான் ரொம்ப சிக்கனமாக நான்குபேர் மட்டும்.அப்போது வேறு கல்யாணத்துக்கு படம் எடுக்க வந்த நண்பனொருவன் என்னைக்கண்டு என்ன சுவி யாருடைய கல்யாணம் என்று கேட்க நானும் அவனிடம் விடயத்தை சொல்லி எங்களுக்கும் நாலைந்து படம் எடுக்குறியா என்று கேட்க, அட இதுக்கேன் யோசிக்கிறாய் என்று சொல்லி எமது முறைவந்து தாலி கட்டும்போது சும்மா சுட்டுத்தள்ளி விட்டான். பின் மடத்தில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு யாழ்ப்பாணம் வர இரவாகி விட்டது. அவரது அறையில் அன்று அவரது முதலிரவுக்கு வேண்டிய ஒழுங்குகளை எனது வீட்டாரும் நண்பர்களும் செய்து வைத்திருந்தனர்......!

(தந்தையுமானவன் கதையில் இதை நினைத்து எழுதியிருக்கிறேன்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2019 at 5:07 AM, குமாரசாமி said:

நீங்கள் இன்னும் ஒழுங்கான சைவச்சாப்பாடு சாப்பிடேல்லை எண்டு நினைக்கிறன்.  மரக்கறியிலை சமைக்கக்கூடிய நல்ல கைப்பக்குவமுள்ள ஆக்கள் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டுப்பாருங்கோ.......அசைவசாப்பாடெல்லாம் தோற்றுப்போகும்.
நான் ஊரில் இருக்கும் மட்டும் வருசத்திலை 2 அல்லது 3தரம் இறைச்சி சாப்பிடுவேன்.கிழமையில் 2தரம் மீன் கறி.மற்றும் படி ஒரே மரக்கறிதான். அதுவும் திருவிழாக்காலங்கள் தொடங்கிச்சுது எண்டால் அவ்வளவுதான்.....மச்ச சட்டி பானையேல்லாம் தூரத்துக்கு போய்விடும்.

அந்த நேரங்களில் அசைவத்துக்கான தவனம் கூட வராது.

சில ஆக்கள் சொல்லுவினம் இறைச்சி மீன் எண்டால் ஒரு கறியோடை சாப்பிடலாம்.மரக்கறியெண்டால் கனகறி வேணும் எண்டுவினம். சமைக்கிறவன் சமைச்சால் ஒரு கத்தரிக்காய்க்கறியோடை சந்தோசமாய் சாப்பிடலாம்.:grin:

ஆனால் நாங்கள் உங்களை சமைக்க சொல்ல மாட்டோம் நம்புங்கள் 

சுவி அண்ணே தொடரட்டும் யாத்திரை நான் யாழ் சென்ற போது அனைத்து கோவில்களையும் தரிசித்ததும் நினைவில் வந்து போகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை .....(10).

                     IMG-20180805-WA0089.jpg

                                                                        IMG-20190215-WA0000-1.jpg

அன்று மாலை டவுனுக்கு போய் வருவோமா அப்பா என்று மகன் கேட்டார்.  நானும் சரி என்று சொல்லி இருவரும் நடந்தே சென்றோம்.அவரும் அங்கு தனக்கும் தனது நண்பர்களுக்கும் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார். நானும் அடுத்தநாள் நயினாதீவுக்கு கொண்டு போவதற்காக கோயிலுக்கு தேவையான எல்லாச் சாமான்களும்  வாங்கிக் கொண்டேன். சில்லறை கடைகளில் கற்பூரம், தேங்காய் எல்லாம் சரியான விலை. பின் மாலயன் கஃபேக்கு சென்று சிற்றுண்டிகள் சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கும் பார்சல்கள் கட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
                          ஞாயிற்றுகிழமை அதிகாலையில் கிளம்பி வானில் நயினாதீவுக்கு புறப்பட்டோம். பண்ணைப்பாலம் வழியாக வண்டி செல்கின்றது. அப்போது அந்த போக்குகளின் (விதிக்கு கீழிருக்கும் நீரின் போக்குவரத்துக்கு உரிய குழாய்கள்) அருகே நண்பர்களுடன் அமர்ந்திருந்து தூண்டிலில் மீன் பிடித்தது நினைவில் ஓடியது. விதியின் அருகே கடலில் தூண் போட்டு குழாய்கள் பொருத்துகின்றார்கள். குடிதண்ணி விநியோகத்திற்காக இருக்கலாம். மண்கும்பான் பிள்ளையார் கோயிலடியில் இறங்கி தரிசித்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். செல்ல செல்ல வீதியும் குண்டும் குழியுமாய் போகிறது. நல்ல வெய்யில். குறிகாட்டுவானை அடைந்ததும் படகுக்காக வரிசையில் காத்திருக்கின்றோம். அதிகளவிலான சிங்கள மக்கள் நாக விகாரைக்கு செல்வதற்காக கையில் தாமரை பூக்களுடன் இருக்கின்றார்கள். படகு வந்ததும் பயணத்துக்கான பணத்தை பெற்றுக்கொண்டு எல்லோருக்கும் நீரில் மிதக்கும் பாதுகாப்பு உடை தருகின்றார்கள். அதை அணிந்துகொண்டு படகில் செல்கிறோம். அந்த ஏழாற்று பிரிவு வரும் இடத்தில் ஒரு ஆட்டம் ஆடி குலுங்கி நிமிர்ந்துதான் செல்கிறது.

               20180805-120322.jpg

                                                                              தூரத்தில் அம்பாளின் கோபுரம் அபயக்கரம் நீட்டி அழைக்கின்றது.சற்று நேரத்தில் படகு விகாரைக்கு முன் உள்ள படகுத்துறையில் நிற்கிறது. சிங்களமக்கள் ஆரவாரத்துடன் இறங்கி செல்கின்றனர்.பின்பு கோவிலின் முன்பாக படகு வந்து நின்றதும் நாங்களும் ஜாக்கட்டை கழற்றி வைத்துவிட்டு இறங்குகின்றோம். பின்பு கோவிலுக்கு செல்கின்றோம்.முகப்பில்  பென்னம்பெரிய நந்தி அம்மனை பார்த்தவாறு படுத்திருக்கு. கனபசுக்கள் அங்கும் இங்குமாய் திரிகின்றன. நாமும் உள்ளே சென்று அம்பாளுக்கு பட்டுப்புடவை நிவேதித்து அர்ச்சனை செய்து உள்வீதி சுற்றி கும்பிட்டுவிட்டு வெளியே வருகின்றோம்.சில பசுக்கள் விடாமல் பின்தொடர வாழைப்பழம் வெற்றிலைகளை உணவாகத் தருகிறோம். அவை அந்நியபொருட்களைப் புறக்கணிப்பதுபோல் வெற்றிலையை தவிர்க்கின்றன. ஏன் ....ஏன் .....ஏன் ......!

                                                                                      20180805-131023.jpg

                                   20180805-121645.jpg

                                                    மத்தியானம் ஆகிறது.அன்னதான மடத்துக்கு செல்கின்றோம். அன்று தொடக்கம் இன்றுவரை அணையா அடுப்புடன் அன்னம் வழங்கிக் கொண்டிருக்கும் திவ்யமடம் அது.  பிரார்த்தனை வைத்து தலைமுடி காணிக்கை செய்வதும் நடைபெறுகின்றது. மடத்துக்குள் எல்லோரையும் அமரச்செய்வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. நானும் உள்ளே சென்று அவர்களுடன் தொண்டுகள்  புரிகின்றேன்.பின்பு அமிழ்தினும் இனிய அந்த அன்னத்தை பயபக்தியுடன் சாப்பிட்டோம். இலைகளை எடுத்து வந்து வெளியே போடும்போதுதான் பார்க்கிறேன் எல்லா மாடுகளும் மூச்சு விடாமல் ரவுண்டுகட்டி சாப்பிடுகின்றன. ஓ ...அதுதான் வெற்றிலையை அவை சீண்டவில்லை.

                    IMG-20190215-WA0001-1.jpg

பின்பு அங்கிருந்து ஒரு ஆட்டொவில் எமது உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டு வரும்பொழுது நாகவிகாரையில் இறங்கி உள்ளே சென்று நன்றாக சுற்றி பார்த்து புத்தர் பெருமானை வணங்கினோம். எல்லா இடமும் மிகவும் சுத்தமாக வைத்திருக்கின்றார்கள்.சிறு சத்தம் கூட கிடையாது. இயற்கையான கடலின் ஓசையும், காற்றின் ஓசையும் துல்லியமாய் கேட்கின்றன.... மீண்டும் கோவிலடிக்கு வந்து சில பல சாமான்கள் வாங்கிக் கொண்டு படகில் குறிகாட்டுவான் வந்து வானில் வீடு வந்து சேர்ந்தோம்.......!

யாத்திரை தொடரும்......!

சம்பவம்: அப்போது நான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு எனது வீட்டின் அருகேயுள்ள கராஜில் வேலை செய்கின்றேன்.எனது நண்பனும் நானும் எமக்கு டிப்ஸ் ஆக வரும் பணத்தில் தினமும் இரவில் கடைகளில் சாப்பிடுவதும் இரண்டாவது ஷோ படம் பார்ப்பதும் வழக்கம்.இதை எனது தாயார் மாமாவிடம் (தமையன்) சொல்லிவிட்டார். அவரும் ஒருநாள் காத்திருந்து பிடித்து  வழக்கம் போல் பூசை பண்ணிவிட்டு அடுத்தநாள் வேலைக்கு போக வேண்டாம் என்று மறித்து என்னை கூட்டிக் கொண்டுபோய் பண்ணையில் இருக்கும் சில்வா கராஜில் சேர்த்து விட்டார்.அப்போது யாழ்ப்பாணத்தில் அங்கும் சிவன்கோவிலுக்கு அருகில் சைமன் கராஜிலும்தான் டீசல் வாகனங்கள் வேலை செய்வார்கள். எம்மிடம் டீசல் வாகனம் இருந்தபடியால் (மேலே படத்தில் உள்ளது.கொம்பனியில் இருந்து புத்தம்புதிதாய் செசியாய் வாங்கியது) அங்கேதான் வேலை செய்வது வழக்கம். அவரிடம் , இவனுக்கு கையில காசு குடுக்க கூடாது என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார்.கராஜுக்கு முன் ஒரு பெட்டிக்கடை இருக்கு.தேனீர், பழம், வடை என்று. அங்கு ஒரு கணக்கு திறந்து என்ன கேட்கிறானோ குடு ஆனால் காசு மட்டும் குடுத்து போடாதை என்று அவரிடமும் சொல்லி விட்டார். ஒரு ரேஸிங் சைக்கிள் கையில்.

                                                      அதனால் சில நாட்கள் பாஸய்யாவின்(சில்வா) மருமக்களுடன் பண்ணை கடலுக்கு போய் துண்டில் போட்டு மீன் பிடிப்பது என்று பழக்கமாயிட்டுது.அப்போது இடிமின்னலுடன் மழை  வரும் நாட்களில் ஓரா,ஒட்டி மீன்கள்  கூட்டம் கூட்டமாய்  கிளம்பி வந்து கல்லுகளில் மோதி வீதியில் கூட வந்து விழும். அப்போது வெட்டு துண்டில் போட்டு(அதில் இரை கொழுவுவதில்லை)  மீன்  கூட்டத்துக்குள் தூண்டிலை எறிந்து  ஒரு வெட்டு வெட்டி இழுக்க வேண்டும்.பிடிப்போம்.   

                                                                       சில நாளில் எனக்கு டிப்ஸ் காசுகள் நிறைய வர தொடங்கிட்டுது.நான் நன்றாக வேலை செய்ய தொடங்கி விட்டன். பக்கத்தில் ரீகல் தியேட்டர். அங்கு ஆங்கில படங்கள் 4 : 45 க்கு தொடங்கி 6 : 30 க்கு முடியும். அந்த தியேட்டரில் சீஸும் உப்பு பிஸ்கட்டும் கோலாவும் விசேஷம்.அந்நாட்களில் அப்படி வேறு தியேட்டர்களில் இல்லை. எந்தப் படமாக இருந்தாலும் மூன்று நாள் தான் ஓடும். ஒருமாதம் ஓடும் படங்களின் அட்டவனையை 30ம் தேதியே குடுத்து விடுவார்கள். நான் படம் பார்த்து விட்டு  ஏழு மணிக்கு வீட்டில் இருப்பேன். இந்த நேர வித்தியாசம் அம்மா,மாமா  யாருக்கும் தெரியாது. மற்ற தியேட்டர்களில் காலை 10:30, 2:30,  6:30, 9:30.காட்சிகள். அது அவர்களுக்கு தெரியும். 
                                                  
                       விதி யாரை விட்டது. அங்கும் பிரச்சினை வந்து முள்ளியவளைக்கு அக்கா வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்......!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎14‎/‎2019 at 12:54 PM, suvy said:

யாத்திரை.....(9).

                                             IMG-20180805-WA0116.jpg 

மீண்டும் பயணப்பட்டு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வந்தோம். அது திருவிழா சமயமாதலால் நிறைய கூட்டம். தொன்டமானாறு படித்துறையில் இறங்கி கை கால் அலம்பி வந்து அர்ச்சனை செய்து முருகனை சேவித்து உள்வீதி சுற்றி வள்ளியம்மன் சந்நிதி எல்லாம் வணங்கி விட்டு வெளியே வந்தால் மடத்தில் இருந்து அன்னதான வரிசை ஒரு மைல் நீளத்துக்கும் மேலாக நீண்டு இருக்கு.அதில் நிண்டிருந்தால் அன்று மாலையானாலும் சாப்பிடுவது சந்தேகமே. இது தெரிந்துதான் பெருமாள் தன்னிடமே எங்களை பசியாற்றி அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைத்தோம்.....!

                                            பின்பு  பிள்ளைகளுக்கு விளையாட்டு சாமான்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பி வருகையில் அச்சுவேலியை அண்மிக்கும்போது தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலுக்கும் போயிட்டு போவோம் என்றார் பெறாமகன். அப்படியே அந்த சந்தியால திரும்பி தெல்லிப்பளை நோக்கி வான் போகுது. வீதியின் இரு மருங்கிலும் தோட்டங்கள் பச்சபசேல் என்று. செந்தூரம் போன்ற அந்த கருஞ்சிகப்பு செம்மண்ணில் கால் புதைய நடக்க வேண்டும்போல் இருக்கு.

                                                                                         IMG-20180805-WA0123.jpg

                                                                                      துர்க்கையம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.சனம் குறைவாக இருந்தது.கொஞ்ச பக்தர்களே இருந்தார்கள்.கோவில் பெரிதாகவும் அழகாகவும் இருக்கு. முன் வாசலில் காராம்பசு கன்றுடன் நின்று வரவேற்கிறது. சிறப்பாக அம்பாளை தரிசனம் செய்து அர்ச்சனையும் செய்து விட்டு வெளியே வருகிறோம்.  எனக்கு மாவிட்டபுரத்தில்  எங்கள் வீட்டையும்  அருகே இருக்கும் காளிகோவிலையும் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் சென்று வந்த எனது தங்கை சொன்னார், வீடெல்லாம் உடைத்துக்கொண்டு போட்டார்கள். ரோட்டில் இருந்து ஒரே காடாய் கிடக்கு.போகும் வழியெல்லாம் மரங்களாலும் பற்றைகளாலும் மறைந்து போய் கிடக்குது என்று. முன்பு லொறி போன பாதை இப்போது வான் போகவும் சிரமப்பட்டுக்கொண்டு போகுது.

                                                 IMG-20180805-WA0125.jpg                                            

                                                         வீட்டின் சுவடே இல்லை.கிட்டவே போக முடியவில்லை.பாம்பு பூச்சி இருக்கும் என்ற பயம் ஒரு பக்கம், வெடி கிடி கிடந்தது தொலைக்க போகுது என்ற பயம் வேறு. எவ்வளவு பேர் புழங்கிய பெரிய ஒட்டு வீடு. எட்டத்தில் இருந்து பார்க்கிறேன்.கிணறு எல்லாம் முற்றாக மண்ணும் குப்பைகளும் போட்டு மூடிக் கிடக்கு. மனவேதனையுடன் பார்த்துவிட்டு கோவிலுக்கு வந்தால் ஒரு சின்ன தகர கொட்டிலுக்குள் அம்பாள் இருக்கிறாள்.அருகில் பிள்ளையாருக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சந்நிதிகள் கட்டி வேலைகள் முடியாமல் அரைகுறையாய் கிடக்கு. ஒரு ஆளரவம் இல்லை.யாரோ தினமும் வந்து விளக்கேற்றி வணங்கி விட்டு செல்கின்றனர். கிணற்றில் தண்ணீர் அள்ளி குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம். வழியில் மருதனாமடத்தில் ஆஞ்சநேயர் கோவிலும் வானுயரத்துக்கு ஆஞ்சநேயரின் சிற்பமும்  நின்று அருள் பாலிக்கின்றார். எல்லா இடமும் பரவலாக அனுமன் கோவில்கள் இருக்கின்றன. வானில் வரும்போது சித்தப்பா நாளைக்கு உங்களுக்கு நேரமிருந்தால் நயினாதீவு போகலாம் என்கிறார். நானும் சரி என்று சொல்கிறேன்.அப்படியே மாலை வீடு வந்து சேர்ந்தோம்......!

யாத்திரை தொடரும்.....!

சம்பவம்:  என்னுடன் வேலை செய்யும் வேலைநேரத்தில் என் நண்பன் மிகவும் கவலையாய் இருந்தான்.என்ன விடயம் என்று கேட்க, சுவி நான் விஜயாவுடன்(பெயர் மாற்றம்) வீட்டை விட்டு வந்திட்டன். தங்குவதற்கு விடு வேண்டும் அதுதான் யோசிக்கிறேன் என்கிறார். மாலை வேலை முடிந்ததும் என்னோடு அவரை அழைத்து வந்து கார் எடுத்து கொண்டுபோய் பெண்ணையும் கூட்டி வந்து எனது உறவினர் வீட்டில் ஒரு அறையில் வாடகை எல்லாம் பேசி தங்க வைக்கிறேன்.அவர்கள் ஏற்கனவே ரகசியமாய் பதிவுத்திருமணம் செய்திருந்தனர். ஒருநாள் இருவரும் என்னிடம் தாலி கட்டி கல்யாணம் செய்யவேணும் என்ன செய்யலாம் என்று கேட்டார்கள். நாங்கள் மூவருமாய் ஆலோசித்து அடுத்தநாள் எனது மோட்டார் சைக்கிளில் சந்நிதிக்கு சென்று அங்கு உரியவர்களுடன் கதைத்து கோவில் மேளத்துடன் தாலி கட்டுவதற்கும் ஒரு சின்ன அன்னதானத்திற்கும் பணம் கட்டி ஏற்பாடுகள் செய்து விட்டு வீட்டுக்கு வருகின்றோம்.

                                                             அந்த நாளன்று காரில் மாப்பிள்ளைத்தோழனாக நானும் பொம்பிளைத் தோழியாக  எனது தங்கை (ஐந்து ஆறு வயதிருக்கும்)யுமாக நான்குபேரும் சன்னதிக்கு சென்றோம். அன்று அங்கு வள்ளியம்மன் சந்நிதியில் ஏழு எட்டு கல்யாணங்கள்.எல்லோரும் நிறைய பந்து மித்திரர்களுடன் வந்திருந்தனர். எமது கல்யாணத்தில்தான் ரொம்ப சிக்கனமாக நான்குபேர் மட்டும்.அப்போது வேறு கல்யாணத்துக்கு படம் எடுக்க வந்த நண்பனொருவன் என்னைக்கண்டு என்ன சுவி யாருடைய கல்யாணம் என்று கேட்க நானும் அவனிடம் விடயத்தை சொல்லி எங்களுக்கும் நாலைந்து படம் எடுக்குறியா என்று கேட்க, அட இதுக்கேன் யோசிக்கிறாய் என்று சொல்லி எமது முறைவந்து தாலி கட்டும்போது சும்மா சுட்டுத்தள்ளி விட்டான். பின் மடத்தில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு யாழ்ப்பாணம் வர இரவாகி விட்டது. அவரது அறையில் அன்று அவரது முதலிரவுக்கு வேண்டிய ஒழுங்குகளை எனது வீட்டாரும் நண்பர்களும் செய்து வைத்திருந்தனர்......!

(தந்தையுமானவன் கதையில் இதை நினைத்து எழுதியிருக்கிறேன்).

உங்களுக்கும்,உங்கள் தங்கச்சிக்கும் 20 வயசிற்கு மேல் வித்தியாசமா அண்ணா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

உங்களுக்கும்,உங்கள் தங்கச்சிக்கும் 20 வயசிற்கு மேல் வித்தியாசமா அண்ணா ?

எனக்கும் இந்தக் கேள்வி வந்தது.அம்மாவின் கர்ப்பத்திலேயே அப்பா இறந்துவிட்டார் என்று எழுதிய சுவியர் இதில் நானும் தங்கையும் தோழன் தோழியாக போனோம் என்று எழுதியிருந்தார்.நேரமின்மையால் கேட்க முடியாமல் போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

உங்களுக்கும்,உங்கள் தங்கச்சிக்கும் 20 வயசிற்கு மேல் வித்தியாசமா அண்ணா ?

7 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் இந்தக் கேள்வி வந்தது.அம்மாவின் கர்ப்பத்திலேயே அப்பா இறந்துவிட்டார் என்று எழுதிய சுவியர் இதில் நானும் தங்கையும் தோழன் தோழியாக போனோம் என்று எழுதியிருந்தார்.நேரமின்மையால் கேட்க முடியாமல் போய்விட்டது.

இரு தங்கைகள் இரணைப்பிள்ளைகள். அவர்களில் ஒருவரின் மகளுடன் எனது மகனுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கலாம்.சுமார் பதினெட்டு வயது வித்தியாசம் இருக்கும். இடையில் ஒரு தம்பி அகால மரணமடைந்து விட்டார். தாயார் சிறிய வயது என்பதால் அன்றே மறுமணம் செய்து வைத்து விட்டார்கள். ஐயாவுடன் ஒரு வருடத்துக்குள்தான் வாழ்ந்துள்ளார்......! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.