Sign in to follow this  
suvy

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!

Recommended Posts

9 hours ago, புங்கையூரன் said:

பத்மா கபே.....பழைய நினைவுகள்.....சிலவற்றைக் கிழறி விட்டு விட்டது!

போதாக்குறைக்கு...... கமீதியா கபேயும் வந்து போகுது....!

இந்தத் திருவாசக  மணி மண்டபம்.....சந்தர்ப்பம் கிடைக்கும் போது.....கட்டாயம் பார்க்க வேண்டும்.....!

இதற்கு.....நிலம் கொடுத்து உதவி செய்தவர்.....சிட்னியில் வசிக்கும்....வைத்திய கலாநிதி மனோமோகன் என்று நினைக்கிறேன்!  

தொடர்ந்தும்....எழுதுங்கள்....சுவியர்...!

நானும் இந்ததடவை சென்று வந்தேன் .எமது பிள்ளைகள் இங்கு தேவாரம் பாடினார்கள்.....வைத்திய கலாநிதி மனமோகன் தான் இந்த கோவிலுக்கு காணி வழங்கினார்...

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

யாத்திரை......(17).

                                                                            20180828-125305.jpg

 


                                          முள்ளியவளை நோக்கி கிளாலி பாலத்தால் சென்று பின் பரந்தன் சந்தியால் வாகனம் செல்கின்றது. நான் வற்றாப்பளை கண்ணகை அம்மனையும் தரிசித்து விட்டு போவோம் என்று சொல்ல புதுக்குடியிருப்பு சந்தியால் திரும்பி நந்திக் கடல் ஓரமாக வான் செல்கின்றது. இந்தியன் ஆர்மி யாழ்பாணத்துக்குள் வந்து எமது வாழ்வை அழித்த அந்த நாளில்  நான் மனிசி எல்லோரும் யாழ்ப்பாணத்தில் ஆதீனத்தில் தங்கி விட்டோம். அம்மா,மாமி, மச்சாள்மார் எல்லோரும் குடி பெயர்ந்து வந்து கண்ணகை அம்மன் கோவிலில்தான் தங்கி இருந்தனர். நந்திக் கடலைப் பார்க்கும்போது முள்ளிவாய்க்காலும் நினைவில் நிழலாடி கண்கள் பணிகின்றன. அந்தப் பெரிய காட்டைக் கடந்து கோவில் வாசலில் வான் வந்து நிக்கின்றது. அங்கிருந்த குழாயில் கைகால் கழுவி விட்டு கோபுரத்தின் முன்னால் கற்பூரம் ஏற்றி  சிதறுதேங்காய் போட்டுவிட்டு உள்ளே போகின்றோம்.ஓரளவு சனம் இருந்தது.மத்தியானம் பூசை நடந்து கொண்டிருக்கு.

                                                                       20180828-125328.jpg

                              கண்ணகை அம்மனுக்கு முன்னால் தினுசு தினுசான எண்ணெய் தீபங்கள் சுடர்விட்டு எரிகின்றன. மூலவர் பூசை முடிந்து தெற்கு வாசலில் பூசை நடக்குது.அர்ச்சகர் அம்பாளுக்கு தீபம் காட்டிவிட்டு யாராவது தேவாரமும் புராணமும் பாடும்படி அழைக்கின்றார்.அவர் மீண்டும் அழைக்க ஒவ்வொருவரும் மற்றவர் முகம்பார்க்க அடியேன் முன்னே வந்து மனமுருகிப் பாடுகின்றேன்.மெய் சிலிர்க்கின்றது.அப்படியே உள்வீதி சுற்றிவந்து வசந்த மண்டபத்தில் பூசை ஒலிபெருக்கியில் சத்தமாய் நடக்கின்றது. பஞ்சபுராணம் பாடும்படி அர்ச்சகர் அழைக்கின்றார்.மற்றவர்கள் பின்னால் நிற்கும் எனக்கு வழி விடுகின்றனர். அவர் ஒலிபெருக்கியில் நின்று பாடும்படி சொல்கின்றார்.என்ன ஒரு பெரும்பேறு. என்னை மறந்து நான் பாடுகின்றேன்.பின்பு மூலவர் சந்நிதியில் அம்பாளின் முன்னால் எம்மை அழைத்து காளாஞ்சி தந்து கௌரவிக்கின்றார்கள்.

                                                                            20180828-134155.jpg
                                                மீண்டும் கிளம்பி முள்ளியவளையில் அத்தான் அக்கா வீட்டுக்கு வருகின்றேன்.அக்காவும் இரு வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டார். அங்கு அத்தானுடன் இருந்து கதைத்து சிரமபரிகாரம் செய்துவிட்டு கிளம்பி தண்ணீரூற்று பிள்ளையார் கோவிலுக்கு வருகிறோம். நான் சுமார் ஆறுமாதம் வரை தண்ணீரூற்றில் வேலை செய்திருக்கின்றேன்.அக்காலங்களில் தினமும் மாலை அந்தக் கேணியில் இருக்கும் தொட்டிகளில்தான் தோய்ந்து குளிப்பது. அப்போது அங்கு கிண்ணியாவைப் போல் ஆறேழு தொட்டிகள் இருக்கும்.அவற்றில் நீர் ஊற்றேடுத்து பெருகி வரும். இயற்கையை ரசித்து கொண்டே நீராடலாம். ஆனால் சுடுதண்ணீர் இல்லை.சுற்றிவர முப்போகமும் விளைந்து கொண்டிருக்கும் வயல்கள். நிலத்தை நிகத்தால் சுரண்டினால் நீர் வரும் பூமி. இப்பொழுது அந்தத் தொட்டிகளைக் காணவில்லை. ஒரே கேணியாக்கி பெரிய மதிலால் மூடிக் கட்டியிருக்கிறார்கள்.அது எனக்கு ரசிக்கவில்லை.

                                                                        20180828-134208.jpg

யாத்திரை தொடரும்........!

சம்பவம் : தெய்வம் எங்காவது பொய் சொல்லுமா, சொன்னதே எனக்காக சொன்னது.... மாலை ஆறு மணியானால் வீட்டில் பித்தளை விளக்கு,ஒரு மேசை லாம்பு, ஒரு அரிக்கன் லாம்பு பளிங்கு போல் துடைத்து மண்ணெண்ணெய் விட்டு திரியெல்லாம் கத்தரித்து விளக்கேற்றுவார்கள்.அந்த நேரம் எனக்கு ராகுகாலம். நான் வீட்டை விட்டு வளவுகளுக்குள் ஓடி விடுவேன்.பெரும்பாலும் பின்னாலே நாலுவீடு தள்ளி இருக்கும் பெரியம்மா(அம்மா,மாமா,குஞ்சம்மா,சின்னம்மா எல்லோருக்கும் அக்கா) அங்கு போய் விடுவேன்.அங்கு எனக்கு அண்ணாவும் அக்காவும் இருக்கினம்.என்ர தெய்வம் அக்கா என்னை அறைக்குள் தள்ளி விடும்.வாசலில் தான் இருந்து கொண்டு தன்னை சுற்றி சீலை சட்டைகள் தைப்பது போன்ற பாவனையில் பரப்பி வைத்திருப்பா.அல்லது கடகத்தில் புளியம்பழம் கொட்டி பரப்பி உடைத்து கொண்டிருப்பா.பிசாசுகள் என்னை எல்லா இடமும் தேடிக்கொண்டிருக்கும். இங்கேயும் வரும்.

உவன் தம்பி உங்க நிக்கிறானோ. யார் சுவியோ அவன் இஞ்ச வந்து எத்தனை நாள். இஞ்ச வரேல்ல. குரங்கு படிக்கிற கள்ளத்தில் எங்கேயோ போய் ஒளிச்சுட்டுது.வரட்டும் காலை முறித்து அடுப்புக்கை வைக்கிறன் என்று விட்டு போய் விடுவினம். பின்பு அக்கா தன்பாட்டில் அங்கிருந்து பாடும்.இந்து லேடிஸ் ஸ்டூடன்ற்.நல்லா படிப்பா.ஒருநாளும் பெரியம்மாவும் அக்காவும் எனக்கு அடித்ததே இல்லை.ஆங்கில பாட்டுக்கள் பாபா பிளாக் சீப், டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார், ரெய்ன் ரெய்ன் கோ எவேஎல்லாம் முற்றத்தில் நின்று நடித்து நடித்து பாடுவா.நானும் கூட சேர்ந்து பாடுவேன். ஜாக் & ஜில் பாடினால் இருவரும் தண்ணியோடு விழுந்து உருளுவார்கள்.நாங்களும்தான், பின்பு ஹா ஹா என்று சிரிப்பு வேற. உச்சிமீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று பாரதியாரை விட ஆவேசத்தில் 45 டிகிரியில் கையை உயர்த்தி பாடினால் விழுந்த வானம் மீண்டும் போய் ஒட்டி கொள்ளும். மற்றும் பாடப்புத்தகங்களில் வரும் கதைகள் பாடல்கள் எல்லாம் நீ படி என்று சொல்லாமலே என் தலைக்குள் ஏற்றி விடும். சிலேட்டு இல்லை கொப்பி பென்சில் இல்லை இதுதான் படிப்பு என்று தெரியாமலே படித்திருக்கிறேன்.

 சில காரணங்களால் மனிசி பிள்ளைகளையும் பார்க்காமல் நான் பிரான்சிக்கு வருகிறேன்.என் எண்ணம் இரண்டு சாவியுடன் இங்கு வேலை செய்யலாம் என்று.ஆனால் இங்கு சட்டதிட்டங்கள் கடுமை. பாஷை தெரியாது.ஆங்கில எழுத்துக்கள் ஆனால் ஆங்கிலமாய் உச்சரிப்பு இல்லை. ஒரு போர்த்துகீஸ்காரனிடம்  வேலை செய்கிறேன்.ஒருத்தர் வந்து நின்று நெடுநேரம் எனது வேலையை பார்த்து கொண்டு நிக்கறார்.கொஞ்ச நேரத்தில் எனக்கு பாஷை தெரியாது என்பதை புரிந்து கொண்டு நீ நல்லா வேலை செய்கிறாய் என்று சைகையாலும் சிறிது ஆங்கிலத்திலும் பாராட்டுகிறார். நானும் ஆங்கிலத்தில் எனது வீரப்பிரதாபங்களை அள்ளி விடுகிறன். சற்று நேரத்தி அவர் தனது கார்டை காட்டி நான் போலீஸ் நாளை காலை ஸ்டேசனுக்க வா என்று எனது கார்டை வாங்கி கொண்டு விலாசம் தந்து விட்டு போய் விட்டார்.அடுத்த நாள் நான் அங்கு சென்றபோது ஒரு மொழிபெயர்பாளருடன் விசாரணை நடந்து இனிமேல் இப்படி செய்யக்கூடாது இந்நாட்டில் இது குற்றம் என்று சொல்லி விடுகிறார்கள்.வெளியே வந்தால் எனக்கு வேலை தந்தவரும் உள்ளே இருந்து வாரார்.
             பின்பு நான் இங்கு "அடாப் "(addap)பில் மூன்றுமாதம் படித்தேன். அங்கு ஒரு வியட்னாம் ஆசிரியர். அவர் படிப்பிக்கும் போது கொப்பியில் எழுத சொல்வதில்லை."எக்ரி தான் லு தெத்" தலையில் எழுது என்று சொல்லுவார். மிகத்  தேவையான வாக்கியங்களை வகுப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் மீன்டும் மீன்டும் கேள்வி கேட்டு பதில் சொல்ல வேண்டும். உதாரணமாக இந்த இடத்துக்கு எப்படி போவது. வழி சொல்லுவது. கடையில் சாமான்கள் வாங்குவது என்று அன்றாடம் புழக்கத்தில் உள்ள வாக்கியங்கள்.பிற்காலத்தில் இந்த படிப்பு எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. வங்கிகளில் கடன் வாங்கவும், எலக்ரிக் கடைகளில் கடனுக்கு சாமான்கள் வாங்குவதற்கும்.

யாழ் இந்துவில் படிக்கும்போது ஏ .எஸ் கனகரட்னம் மாஸ்டர். ஆங்கில வகுப்பு எடுப்பவர்.வேட்டி சட்டையுடன் வருவார்.prefact கார் வைத்திருந்தார்.அவர் அதிகமாக எங்களுக்கு ஆங்கில வகுப்பை விடுதியில் உள்ள சாப்பாட்டு அறையில்தான் நடத்துவார்.அது ஒதுக்கு புறமாக இருப்பதால் யாருடைய இடையூறும் இருக்காது. அங்கு பாடப்புத்தகத்தில் வரும் கதைகளை நாங்கள் புத்தகத்தை பார்த்தே அந்தந்த பாத்திரங்களாக இருந்து நடிக்க வேண்டும்.சிங்கம் முயல் கதையை எல்லோரும் மாறி மாறி பேசி நடிக்க வேண்டும்.ஒருத்தரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.அப்போது ஒரு டேப்ரெக்காடர் இரண்டு பெரிய வீல் மேலே நாடாவுடன் சுற்றி கொண்டிருக்கும்.அதில் ஆங்கிலத்தை எப்படி உச்சரிப்பது, இருவர் எப்படி உரையாடுவது என்று எல்லாம் இருக்கும்.அதை முதல் பத்து நிமிடம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.பின்பு அதே போல் உரையாட வேண்டும். எல்லாம் ஞாபகத்தில் வந்து போகின்றது.....!

                      ஒருநாள் எனக்கும் அத்தானுக்கும்  (மாமாவின் மகன்)  மாமா சம்பல் அடி அடித்து போட்டு (எங்கட குழப்படியும் அப்படியானதுதான், அதை விட குறைவான தண்டனைக்கு சட்டத்தில் இடமில்லை). வெய்யிலில் முழங்காலில் இருத்தி விட்டு நெற்றியில் கல்லும் வைத்து விட்டு அங்கால வேலை செய்து கொண்டு இருக்கிறார்.சூரியனும் கொளுத்துது.வியர்வை ஆறாய் ஓடுது.ஒரு கட்டத்தில் அவர் எழுந்து சந்தியில் இருக்கும் கடைக்கு போகிறார். குஞ்சு குருமன் எல்லாம் படலையில் நிலையெடுத்து நின்று தகவல் குடுக்குதுகள்.அத்தை ஓடி வந்து கல்லை எடுத்து போட்டு தேசிக்காய் தண்ணியை  கெதியாய் குடிக்கத்  தருகிறா.நியூஸ் வருகுது "ஆள் வருது, ஆள் வருது "என்று உடனே நாங்கள் அந்த பொசிசனில் நிலையெடுத்து நிக்கிறம். எல்லோரும் ஆங்காங்கே போய் விட்டனர்.(அப்போது எங்களுக்கு 22/23 வயதிருக்கும்.இப்ப பிள்ளைகளைத் தொட முடியுமா). மாமா வந்து விட்டார். பெரியம்மாவுக்கு தகவல் போய் அவ தம்பியாரை பேசிக் கொண்டு வருகிறா. அவவுக்கு மட்டும்தான் மாமா கப்சிப். மாநாடு நடக்கிறது. இவங்கள் சேர்ந்திருந்தால்தான் பிரச்சினை இவர்களை பிரித்து விடுவது என்ற முடிவு ஏகமனதாக எடுக்கப் படுகிறது.தம்பியை நான் முள்ளியவளைக்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என்று அக்கா சொல்கிறா. அதன் நிமித்தம் அத்தான் அக்காவுடன் முள்ளியவளைக்கு வருகிறேன்....!
 

  • Like 4

Share this post


Link to post
Share on other sites
On 2/20/2019 at 11:15 AM, suvy said:

யாத்திரை .....(14)

                                    IMG-20181018-WA0015.jpg


 

சுவி அண்ணாவின்,   திவ்ய-தேசத்தில்-திருத்தல-தரிசனத்தில்,
யாழ் இந்துக் கல்லூரி வைரவ கோவிலும், அந்த கூர் மதிலும்,  மைதானமும் வந்தது.... மிக மகிழ்ச்சியாக உள்ளது.
இன்னும்... அந்த இனிய நாட்கள், வராதா என்ற ஏக்கமும் வந்தது.

சுவி... அந்த வைரவர் கோவிலுக்கு,  எதிர் பக்கம்  உள்ள  கடையில்... "கீரை வடை"   விற்பார்கள்.
அதன்.. சுவையோ... சுவை. மலிவோ.. மலிவு, வடையோ... பென்னாம்  பெரிசு.  
அந்த நேரம்..  அதன் விலை, 25  சதம்  மட்டுமே....
இப்போதும்... அந்தக் கடை, உள்ளதா? ✒️

Share this post


Link to post
Share on other sites
On 2/21/2019 at 3:29 PM, ஈழப்பிரியன் said:

பத்மாகபே என்னாச்சு?

ஈழப்பிரியன்..... நீங்கள், பத்மா கடையில்... 
சைக்கிள் கடை மணியன், காசில்....   சாப்பிட்ட  ஆளா நீங்கள்.
அப்படி... என்றால், நெருங்கி வந்து விட்டோம்... மச்சான்.  🤪 😝 🤑  😍
 

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, suvy said:

  கண்ணகை அம்மனுக்கு முன்னால் தினுசு தினுசான எண்ணெய் தீபங்கள் சுடர்விட்டு எரிகின்றன. மூலவர் பூசை முடிந்து தெற்கு வாசலில் பூசை நடக்குது.அர்ச்சகர் அம்பாளுக்கு தீபம் காட்டிவிட்டு யாராவது தேவாரமும் புராணமும் பாடும்படி அழைக்கின்றார்.அவர் மீண்டும் அழைக்க ஒவ்வொருவரும் மற்றவர் முகம்பார்க்க அடியேன் முன்னே வந்து மனமுருகிப் பாடுகின்றேன்.மெய் சிலிர்க்கின்றது.அப்படியே உள்வீதி சுற்றிவந்து வசந்த மண்டபத்தில் பூசை ஒலிபெருக்கியில் சத்தமாய் நடக்கின்றது. பஞ்சபுராணம் பாடும்படி அர்ச்சகர் அழைக்கின்றார்.மற்றவர்கள் பின்னால் நிற்கும் எனக்கு வழி விடுகின்றனர். அவர் ஒலிபெருக்கியில் நின்று பாடும்படி சொல்கின்றார்.என்ன ஒரு பெரும்பேறு. என்னை மறந்து நான் பாடுகின்றேன்.பின்பு மூலவர் சந்நிதியில் அம்பாளின் முன்னால் எம்மை அழைத்து காளாஞ்சி தந்து கௌரவிக்கின்றார்கள்.

இந்த குடுப்பினை எல்லாருக்கும் வராது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

சுவி... அந்த வைரவர் கோவிலுக்கு,  எதிர் பக்கம்  உள்ள  கடையில்... "கீரை வடை"   விற்பார்கள்.
அதன்.. சுவையோ... சுவை. மலிவோ.. மலிவு, வடையோ... பென்னாம்  பெரிசு.  
அந்த நேரம்..  அதன் விலை, 25  சதம்  மட்டுமே....
இப்போதும்... அந்தக் கடை, உள்ளதா? ✒️

சிறி வெள்ளிக்கிழமைகளில் மதியம் கடையில் வாங்கி சாப்பிடும்படி காசு தருவார்கள்.அனேகமாக பத்மாகபேயிலும் மைதான மூலைக்கடையில் கீரைவடையும் மாறிமாறி சாப்பிடுவேன்.கீரைவடை 10 சதத்திற்கு வாங்கியதாகவே ஞாபகம்.ஒரு வடை சாப்பிட்டாலே போதும்.

இந்த வயிரவர் கோவிலில் ஒரு குண்டு ஐயர் இருந்தவர்.அந்த நேரம் அவரை பகிடி பண்ணுவோம்.கோவிலுக்குள் இருந்து தவளை பிடித்து எங்கள் மீது எறிவார்.

Share this post


Link to post
Share on other sites

சுவி அண்ணா, தங்கள் அனுபவப் பகிர்வுகள் எம்மையெல்லாம் தாயகத்துக்கு மீண்டும் கூட்டிச் செல்கின்றன. உங்கள் வாழ்க்கை அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி வெளியிடக்கூடிய ஆற்றலை உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன். வாழ்த்துக்கள்!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, தமிழ் சிறி said:

சுவி அண்ணாவின்,   திவ்ய-தேசத்தில்-திருத்தல-தரிசனத்தில்,
யாழ் இந்துக் கல்லூரி வைரவ கோவிலும், அந்த கூர் மதிலும்,  மைதானமும் வந்தது.... மிக மகிழ்ச்சியாக உள்ளது.
இன்னும்... அந்த இனிய நாட்கள், வராதா என்ற ஏக்கமும் வந்தது.

சுவி... அந்த வைரவர் கோவிலுக்கு,  எதிர் பக்கம்  உள்ள  கடையில்... "கீரை வடை"   விற்பார்கள்.
அதன்.. சுவையோ... சுவை. மலிவோ.. மலிவு, வடையோ... பென்னாம்  பெரிசு.  
அந்த நேரம்..  அதன் விலை, 25  சதம்  மட்டுமே....
இப்போதும்... அந்தக் கடை, உள்ளதா? ✒️

                 20180816-172129.jpg

இதுதான் வயிரவர் கோவில். அது ஒரு அம்மன் கோவில்.முன்பு அது எமது உறவினரின் வீட்டுக்குள் இருந்தது. பின்பு அந்த காணி பள்ளிக்கூடத்துக்கு கொடுத்ததும் அவர்கள் கோவிலை அப்படியே விட்டு விட்டார்கள். நான் படிக்கும்போதும் கீரைவடை  பத்துசதம்தான்.பக்கத்தில் முருகன் பேக்கரி இருந்தது. அதில் சீனி ஒழுக ஒழுக  பனிஸ் ஐந்து சதத்துக்கும் , பூ பிஸ்கட் மேலே பூவாய் ஐசிங் செய்தது ஐந்து சதத்துக்கு கை நிறைய அள்ளித் தருவினம்.  ரோஸ்பான் அரை றாத்தல் கால் றாத்தல் என்று இருக்கும்.நல்ல ருசி.அந்தக் குண்டு ஐயர் இப்பொழுது இல்லை.(நீங்கள் சொல்லத்தான் ஞாபகம் வருது இன்னொரு ஐயரின் சம்பவம் ஒன்று). மில்லிய ஐயர் ஒருவர் பூசை பண்ணுகிறார். அவரையும் காத்திருந்து சந்தித்து விட்டு வந்தேன்.  😁

 

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this