• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
suvy

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!

Recommended Posts

                                                                                                                                                                          

                                                                                                                                                                   சிவமயம்.

 

                                                                                                                                          திவ்ய தேசத்தில்  திருத்தல தரிசனம்.

                                                                                 

                                                                                                           20180828-093354.jpg

 

                                                                                                                   "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்"

 

அன்புறவுகளுக்கு ,

                                        நான் கடந்த ஆவணி மாதம் மனைவி மற்றும் மகனுடன் ஊருக்கு போய் இருந்தேன். அதை ஒரு பயணம் என்று சொல்வதைவிட கோவில் சுற்றுலா என்பது பொருந்தும். ஆவணி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பெரும்பாலான ஆலயங்களில்  உற்சவங்கள் நடைபெறும்.ஊர் முழுவதும் ஒரே கோலாகலமாக இருக்கும். கோவில்கள் எல்லாம் புதிதாக வர்ணங்கள் பூசி மிக அழகாக இருந்தன.நானும் பல வருடங்களின் பின் அங்கு சென்றதால் ஒருவித பரவச நிலையில் இருந்தேன் . அந்த நெகிழ்ச்சியான அனுபவங்களை யாழ் இணையத்தின் 21 வது அகவையில்  உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

நானும் மனைவியும் இரு மகன்களும்தான் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை.  நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது.

யாத்திரை தொடரும்.......!

 நிரவாகம். தயவு செய்து உரிய இடத்துக்கு மாற்றிவிடவும். பின் அங்கிருந்து தொடர்கின்றேன்.

 • Like 17
 • Thanks 3
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, suvy said:

                                                                                                                                                                          

                                                                                                                                                                   சிவமயம்.

 

                                                                                                                                          திவ்ய தேசத்தில்  திருத்தல தரிசனம்.

                                                                                 

                                                                                                           20180828-093354.jpg

 

                                                                                                                   "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்"

 

 

யாத்திரை தொடரும்.......!

அடியேனும் பின் தொடர்வேன்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பிறந்து வளர்ந்த மண்ணில் உள்ள கோயில்களைப் பல நாட்களுக்குப் பின்னர் மீண்டும் தரிசிப்பது உண்மையிலேயே பரவசமான அனுபவம். ஆன்மீகம், நம் கலாசாரம் கலந்த அந்த நினைவுகள் தரும் ஆனந்தத்துக்கு ஈடில்லை. (கடந்த ஆவணி மாதத்தில் நானும் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன்.)

உங்கள் ஆன்மீகப் பயணத்தில் ஐக்கியமாக அடியேனும் காத்திருக்கிறேன். தொடருங்கள்...! ☺️

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

                                                                                                    Résultat de recherche d'images pour "france map"

யாத்திரை ....( 2 ).

நாங்கள் இந்த நாட்டுக்கு வந்து பல வருடங்கள் ஓடி விட்டன. இங்கு இடைவிடாத வேலைப்பளு. பிள்ளைகளும் சிறுவர்கள்.மற்றும் வயதான பெற்றோர் (அம்மாவும், மாமியும்) .  போன்ற சூழ்நிலைகளால் ஊருக்கு போகும் எண்ணம் "சாம்பல் பூத்த நெருப்பாக" எங்கள் உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்தது.  காலம் உருள பிள்ளைகளும் வளர்த்து விட்டினம். பெற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராய் இயற்கை எய்தி விட்டார்கள்.

சென்ற வருட ஆரம்பத்தில் நினைத்தோம், எப்படியும் இந்த வருடம் ஊருக்கு போய் வர வேண்டும் என்று. மனைவி சொன்னார்,ஒருநாள் என்றாலும் நல்லூர் திருவிழா பார்க்க வேண்டும் என்று. அதற்கேற்றாற் போல் கட்டார் எயர் விமானத்தில் விமானசீட்டு முன் பதிவு செய்து கொண்டோம்.

ஒரு ஆளுக்கு 40 கிலோவும், கைப்பெட்டியில் 7 கிலோவும், மற்றும்  தோளில் தொங்கும் ஒரு பையும் கொண்டு செல்லலாம். 40 கிலோவை இரு பெட்டிகளில் 20, 20 ஆக வைக்க வேண்டும். அதன்படி நாங்கள் பாரிஸில் நின்று உறவினர்கள் தந்த பொருட்களையும் சேர்த்து கட்டிக்கொண்டோம்.

யாத்திரை தொடரும்....!

சம்பவம்: பெட்டிகளில் சாமான்கள் வைக்கும் போது  அவை 19 கிலோவுக்கு மேற்படாமல் பார்த்து கொண்டோம்.அது விமான நிலையத்தில் பொதிகளை அனுப்பும் இடத்தில் பேருதவியாய் இருந்தது.

அடுத்து மகனுக்கு அவரது வேலையின் நிமித்தம் 20 நாட்கள்தான் தங்க முடிந்தது. அதனால் அவர் எமக்கு முன்பே கிளம்பி விட்டார். நாங்கள் இருவரும் ஒரு மாதம் தங்கி நின்று வந்தோம்......!

ஊக்கமளிக்கும் உறவுகளுக்கு உளமார்ந்த நன்றி....!

 • Like 5

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் சுவியண்ணா ...எங்களுக்கும் பிரயோசனமாய் இருக்கும் 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

                                                             Image associée

                                                           

 

யாத்திரை....(3).

சென்ற ஆடி மாதக் கடைசியில் உறவினர்களும் நண்பர்களும் விமான நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைக்க பாரீஸ் விமான நிலையத்தில் இருந்து அழகிய பணியாளர்களைக் கொண்ட கத்தார் விமானத்தில் ஏறிப் பயணப் பட்டோம்.தரமான உணவு வகைகளும்,சிறப்பான சேவையும் அந்த விமானத்தில் இருந்தது.ஒவ்வொரு இருக்கைக்கு முன்னும் ஒவ்வொரு சிறிய திரை.அதில் படங்கள்,பாட்டுகள்  மட்டுமன்றி அந்த விமானத்தின் வழித்தடங்களையும் பார்க்க முடிந்தது. சுமார் ஐந்து மணித்தியாலப் பறப்பின் பின் இடைத் தங்கலாக கட்டாரில்    தரை இறங்கியது. இரு மணித்தியாலத்தின் பின் அதே போன்ற மற்றோரு விமானத்தில் பயணம் தொடர்ந்தது. அந்த விமானம் இலங்கை நேரப்படி அதிகாலை 01 : 30 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை இறங்கியது. அங்கு அரைமணி நேரத்தில் சுழன்று வந்த எமது பெட்டிகளை எடுத்து வண்டிலில் போட்டுக்கொண்டு வெளியில் வந்தோம். அங்கே தயாராக எனது மருமகள் வானோடு வந்து எம்மை வரவேற்றாள்.

                                                               Image associée
                             பரஸ்பரமான விசாரிப்புகளின் பின்பு நாம் கொழும்பு செல்லாமல் நேராக யாழ்ப்பாணம் செல்வது என முடிவெடுத்தோம்.இரவுப் பிரயாணத்தில் வாகன நெரிசல் இருக்காது மதியத்துக்கு முன் யாழ்ப்பாணம் போய் விடலாம் என சாரதி சொன்னதை  ஏற்றுக் கொண்டு யாழ் நோக்கி பயணப் பட்டோம். வான் செல்லும்போது வழியில் விதியோரக் கடையில் துக்கத்தில் இருந்த கடைக்காரரை எழுப்பி ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களும் வாங்கிக் கொண்டோம். 

                                                                                       Image associée
காலை எட்டு மணியளவில் முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.அங்கு கை, கால், முகம் கழுவிவிட்டு வந்து கடையில் தேங்காயும் கற்பூரமும் வாங்கிக்கொண்டு போய் கோயிலடியில் கற்பூரம் ஏற்றி சிதறு தேங்காய் போட்டு விட்டு பிள்ளையாரை சேவிக்க பூசை நடந்து  கொண்டிருந்தது. கண்கொள்ளாக் காட்சி.நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு வந்து மறக்காமல் சில தேங்காய் சில்லுகளும் பொறுக்கி எடுத்து கொண்டு வந்து கடையில் கச்சானும் புழுக்கொடியலும் வாங்கிக் கொண்டு (இப்ப எல்லாம் பைக்கட்டுகளில் கிடைக்கிறது) தேநீர் குடித்து விட்டு மீண்டும் பயணப்பட்டோம்.

யாத்திரை தொடரும்.....!

சம்பவம்: நான் கோவிலை சுற்றி வரும்போது எனது மருமகள் கேட்கிறாள், மாமா இங்கு சாப்பிடுவோமா அல்லது கிளிநொச்சியில் சாப்பிடுவோமா என்று அது என் காதிலேயே விழவில்லை அப்படி ஒரு பரவசநிலையில்  நான்.மனிசி சொல்கிறாள் அவருக்கு இப்ப ஒன்றும் கேட்காது, நாங்கள் கிளிநொச்சிக்கு போய் சாப்பிடுவம் என்று. அது பரவாய் இல்லை.பிறகு சொன்னாள்.பார் இப்ப வானில் எறியவுடனே உந்தக் கடலை,புழுக்கொடியல் எல்லாம் தேங்காயுடன் சேர்த்து அரைத்து ஒரு வழி பண்ணிடுவார் என்று. அதேபோல் நானும் அதுகளை எடுத்து அரைக்க சாரதி உட்பட எல்லோரும் சிரிக்கினம். நான் புரியாமல் விழிக்கிறேன்.....! 
 

 • Like 5
 • Haha 3

Share this post


Link to post
Share on other sites

அதெப்படி சென்ற ஆவணியில் யாழ் உறவுகள் பலர் தாயகம் சென்று வந்துள்ளோம். உங்கள் பயண அனுபவங்களைத் தொடருங்கள் சுவி. நான் தாயகம் மட்டுமல்ல தமிழகம் கேரளா மற்றும் பாண்டிச்சேரி என பல இடங்களிலுள்ள ஆலயங்கள் கோவில்களெல்லாம் தரிசித்தேன். நேரம் இல்லாத காரணத்தால் எழுத முடியவில்லை. உங்கள் அனுபவங்களை வாசிக்க ஆவலாய் உள்ளோம். தொடருங்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

யாத்திரை :(4).

                                                                                                                             Résultat de recherche d'images pour "ammachi kilinochi"

                                                                  
நன்றாக விடிந்து விட்டது. கிளிநொச்சி நகரம் மிகவும் பரபரப்பாக அன்றைய நாளைத் தொடங்கி விட்டது. எல்லோரும் அரக்க பரக்க  ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.எங்கள் வண்டியும் "அம்மாச்சி" உணவகத்தின் முன்பாக வந்து நின்றது. அங்கும் ஒரே சனக் கூட்டம். அனைத்து விதமான காலை உணவுகளும் அங்கு கிடைக்கின்றன. அத்தனையும் சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கின்றது.
                                                                                     
                                                                                                                       20180731-051053.jpg

நாங்களும் எமக்குத் தேவையானவற்றை வாங்கி சாப்பிட்டோம். எனது பார்வையில் நகரம் முழுவதும் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன.வீதிகள் அகலமாக இருக்கின்றன. நிறையக் கடைகள். மாடிகளுடன் கூடிய பெரிய பெரிய கடைகள். சாரதியும் எமது வண்டியை எடுத்து கொண்டு ஓடி பரந்தன், ஆனையிறவு வீதியை பிடிக்காமல் பூநகரி பக்கமாய் செலுத்திக் கொண்டு போகிறார்.நானும் என்ன தம்பி இந்த வீதியால் போகிறீங்கள். ஆனையிறவு பாதையால் போறதில்லையோ என கேட்க, அவரும் இப்ப நாங்கள் இந்த கிளாலி பாதையைத்தான் பாவிப்பது.சுற்று இல்லாமல் விரைவாக சென்று விடலாம் என்று சொன்னார். அந்த வீதியும் நன்றாக இருந்தது. என்ன நிறைய டிப்பர் வாகனங்கள் நிறைய போய் வருகின்றன மிகவும் வேகமாக. நான் முன்பு வரும்போது பார்த்த கிளாலி கடல் வேறு.இப்போது அங்கு பெரிய பாலம்போட்டுபயன்படுத்துகிறார்கள்.

                                                                                                         20180731-061407.jpg

         எனது மனைவியின் கண்கள் கலங்க விம்மல் வெடிக்கிறது. மருமகள் கேட்கிறாள் ஏன்  அன்ரி அழுகிறீங்கள் என்று. அவர் அந்த சம்பவத்தை சொல்லிக்கொண்டு வருகிறார். தொடர்ந்து வரும்போது நாவற்குழியடியில் புதிதாய் ஒரு சிவன் கோவில் இருந்தது.சாரதி கூறினார் இதுதான் சிவபூமி என்று. பிறிதொருநாள் அங்கு வரவேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

                                                                                                            Image associée

யாத்திரை தொடரும்........!

சம்பவம்: எனது மனைவியும் இரு பிள்ளைகளும் பிரான்ஸ் வருவதற்காக கொழும்பு வரவேண்டும்.  அப்போது ஆனையிறவு பாதை அடைப்பு. கிளாலியில் வந்து வரிசையில் காத்திருக்கிறார்கள். அப்போது பாலம் இல்லை.சிறிய படகில்தான் பயணம்.தனியாக சிறுவர்களான இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வரவேண்டும். சரியான குளிர்.கை கால் எல்லாம் விறைக்குது. நன்றாக இருட்டி விட்டது.ஒரு மாதிரி படகில் ஏறியாகி விட்டது. படகுக்கு உள்ளும் தண்ணீர் வருகுது. நெருக்கமான சனம்.வெளிச்சமும் இல்லை. இருந்தால் செல் வந்து விழும்.பிள்ளைகளை காலடியில் இருத்தி இறுக்கிப் பிடித்து கொண்டாள். பெட்டிகள் எல்லாம் ஈரமாகி விட்டது.
  நீச்சல் தெரிந்த சிலர் படகை விட்டிறங்கி படகுடன் நீந்தி வருகினம்.ஒரு மாதிரி பூநகரி கரைக்கு வந்தாச்சுது. அன்று நானும் என்ர பிள்ளைகளும் தப்பியது அருந்தப்பு. பெட்டியில் இருந்த உடுப்புகள் எல்லாம் உப்புத்தண்ணி பட்டு சேதமாகி விட்டன. கூறைப் புடவையைத் தவிர........!
                                                                                                                              

 • Like 9

Share this post


Link to post
Share on other sites
49 minutes ago, suvy said:

நீச்சல் தெரிந்த சிலர் படகை விட்டிறங்கி படகுடன் நீந்தி வருகினம்.ஒரு மாதிரி பூநகரி கரைக்கு வந்தாச்சுது. அன்று நானும் என்ர பிள்ளைகளும் தப்பியது அருந்தப்பு. பெட்டியில் இருந்த உடுப்புகள் எல்லாம் உப்புத்தண்ணி பட்டு சேதமாகி விட்டன. கூறைப் புடவையைத் தவிர........!
                                                                                                                              

அசாதரமான நிகழ்வு...

சாதரணமாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் ஐயா... 

தாங்கள் கோயிலுக்குள் சென்ற உடன் பரவச நிலை பெற்றதாக பதிந்திருந்தீர்கள்... 

சிறு வயதிலிருந்தே கோவிலுக்கு சென்றால் ஒரு உணர்வும் ஏற்பட்டதில்லை, சிவன் கோவிலை தவிற...

சிவன் கோவிலினுள் அமைதி நிலையை அடையும் என் மனதானது... பதிமூன்று வயதிலிருந்து இதை உணர துவங்கினேன்... கோவில் என்றாலே சிதறி ஓடுபவன் , இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் திருவேற்காட்டில் கட்டபட்டுள்ள சிவன் கோவிலுக்கு சில முறை தன்னிச்சையாக சிில முறை சென்று வந்தாகி விட்டது...

--தங்களின் பயண அனுபவத்தை தொடருங்கள் ஐயா...

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அருமை .. தொடருங்கள் தோழர் .. 👌

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சுவியர்... "திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!" என்ற தலைப்பை முன்பு பார்த்து விட்டு,
ஏதோ... பத்திரிகைகளில், யாரோ எழுதிய கட்டுரையின் இணைப்பு என்று விட்டு, உள்ளே போய் பார்க்கவில்லை.
இன்று தான்... உள்ளே போய் பார்த்தால், சுவியரின் சொந்தக்  கட்டுரை ஆக இருந்தது.
பகிர்விற்கு நன்றி.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆமாம் நானும் தான் எதோ கோவில் பற்றிய  கட்டுரை போலும் என்று எண்ணிவிடடேன்.  தொடருங்கள் .

.. அடுத்து என்ன  என்ற ஆவலுடன்   வா சிக்கிறேன். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 2/4/2019 at 8:07 PM, suvy said:

அழகிய பணியாளர்களைக் கொண்ட கத்தார் விமானத்தில் ஏறிப் பயணப் பட்டோம்

குடும்பத்தோடை போனாலும் குசும்புக்கு குறைவில்லை.....tw_blush:

Share this post


Link to post
Share on other sites
On 2/1/2019 at 8:58 PM, suvy said:

.... கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லைநாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது.

யாத்திரை தொடரும்.......!

இங்க பார்ரா அக்குறும்பை..!  ffou2.gif

(பாவம்..) reverie.gif

 

Share this post


Link to post
Share on other sites

சுவாரசியமானச் செல்லும் பயண அனுபவங்கள், சுவி அண்ணா. தொடருங்கள், ஆவலாய் உள்ளோம். 😍

Share this post


Link to post
Share on other sites

யாத்திரை....(5).
                                                                                                   20190205-175951-1.jpg

மதியம் வீட்டுக்கு வந்து விட்டோம். என்னுடைய மச்சாள்  அறுசுவையோடு அசைவங்களும் சேர்த்து நிறைய உணவுகள் தயாரித்து வைத்திருந்தாள். எனது மனைவியும் அவாவும் புளுகி புளுகி கதைத்துக் கொண்டிருக்கினம். எங்கள் மகனையும் "நீ ரொம்ப வளர்ந்திட்டாயடா" என்று பாசத்துடன் பக்கத்தில் இருத்தி கதைக்கினம். நான் போய் தோய்ந்து குளித்துவிட்டு வர அருகில் உள்ள காளி கோவிலில் இருந்து பூசை மணி   ஒலித்தது. மச்சாளும் நீங்கள் வந்த நேரம் இன்று கோயிலில் அன்னதானம். ஐயர் வந்துட்டார் போல அதுதான் மணி கேட்குது என்று சொல்ல நானும் இருங்கோ வாறன் என்று சொல்லிவிட்டு முற்றத்தில் இருந்த நித்யகல்யாணியில் இருந்து நாலு பூவை பறித்துக் கொண்டு வெளியே கோவிலுக்கு வந்தேன். கண்ணீர் மல்க அம்பாளை மனமுருக நன்றாக சேவித்து விட்டு அங்கேயே தரையில் சம்மணமிட்டு அமர்ந்து ஆசை தீர அன்னதான பிரசாதம் வாங்கி சாப்பிட்டேன். அங்கிருந்த யாருக்குமே என்னை அடையாளம் தெரியவில்லை. பழைய ஆட்கள் சிலர் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்து விட்டு பிறகு வந்து கட்டிப்பிடித்து கதைத்தார்கள்.

                                             பின்பு வீட்டுக்கு சென்றதும் சமைத்ததை சாப்பிடவில்லை என்று பாசமான திட்டுகள் வாங்க வேண்டி வந்தது. மாலைநேரம் உறவினர்கள் நண்பர்கள் என்று அறிந்து அறிந்து வந்து பார்த்து கதைத்து விட்டு சென்றனர். இரவு சாப்பிட்டு விட்டு நானும் மனைவியும் மச்சாளும் கதைத்துக் கொண்டிருக்க மகன் மேல் வீட்டில் போய் படுத்து விட்டார்.கொஞ்ச நேரத்தின் பின் நானும் மேல் அறையில் படுக்க போகும் போது  அவள் சொன்னாள்  நீ அங்க போய் படுகிறது சரி,ஆனால் நான் சொல்லாமல் கீழ இறங்கி வரக்கூடாது என்று.உடனே நான் சீ ச் சீ  நாங்கள் இப்ப விரதம் என்றேன்.
உன்ர விரதம் கிடக்கட்டும், இரவு அவர் உவடம் முழுக்க உலவித் திரிவார். நாளைக்கு விரதம் பிடிக்க நீ இருக்க மாட்டாய் நம்பாவிட்டால் பல்கனியை எட்டிப்பார் என்று. எட்டிப்பார்த்தேன் என்னளவு உயரத்தில் வைரவர் வாகனம் அமைதியாக என்னை பார்த்து கொண்டு கம்பீரமாய் நிக்குது. குரைத்திருந்தால் கடிக்காது என்று நம்பி இருப்பேன். இது குரைக்கவில்லை. நான் மேலே சென்று அறையைப் பூட்டியதும் அவர் அவளுடன் கீழே சென்று உலாவித் திரிகின்றார்.

                                                                                                                          Résultat de recherche d'images pour "black dog"

                                                                                                                                          இவர் போன்ற ஒருவர்,ஆனால் இவர் அவரல்ல......!

யாத்திரை தொடரும்.....!

சம்பவம்: முன்பெல்லாம் அந்தக் கோவில் இருப்பதே வெளியில் தெரியாது.ஒரு வீட்டுக்கு உள்ளேதான் இருந்தது. இப்பொழுது வெளியே கோவிலாய் உள்ளது. நானும் தினமும் காலையில் வேலைக்கு போகும்போது ஒரேயொரு மல்லிகை அல்லது செம்பருத்தம் பூ எடுத்து வந்து வெளியில் நின்று அந்த வேலித் தகரத்தில் உள்ள ஒரு துவாரத்தில் வைத்து வணங்கி விட்டுத்தான் போவது வழமை. அதுக்காகவா அந்தத் தாய் நான் வந்ததும் வராததுமாக காத்திருந்து என்னை அழைத்து எனக்கு உணவளித்தாள்......!
 

 • Like 7

Share this post


Link to post
Share on other sites

அசைவத்தை புறக்கணித்து அன்னதானத்தில் கலந்து கொள்வதற்க்கு ஒரு தனி மனம் தான் வேண்டும்...

--நானாக இருந்திருந்தால் அசைவத்தை ஒரு கை பார்த்திருப்பேன்... அன்னதானத்திலும் அசைவம் என்றால் டபுள் ஆக்ஷன் செய்திருப்பேன்...

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, மியாவ் said:

அசைவத்தை புறக்கணித்து அன்னதானத்தில் கலந்து கொள்வதற்க்கு ஒரு தனி மனம் தான் வேண்டும்...

--நானாக இருந்திருந்தால் அசைவத்தை ஒரு கை பார்த்திருப்பேன்... அன்னதானத்திலும் அசைவம் என்றால் டபுள் ஆக்ஷன் செய்திருப்பேன்...

சுவியண்ணா  சைவம் என்ட படியால் அறுசுவை மாமிசத்தை கண்டதும் பயத்தில் ஓடி இருப்பார்...தொடருங்கோ சுவியண்ணா 
 

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, மியாவ் said:

அசைவத்தை புறக்கணித்து அன்னதானத்தில் கலந்து கொள்வதற்க்கு ஒரு தனி மனம் தான் வேண்டும்...

--நானாக இருந்திருந்தால் அசைவத்தை ஒரு கை பார்த்திருப்பேன்... அன்னதானத்திலும் அசைவம் என்றால் டபுள் ஆக்ஷன் செய்திருப்பேன்...

நீங்கள் இன்னும் ஒழுங்கான சைவச்சாப்பாடு சாப்பிடேல்லை எண்டு நினைக்கிறன்.  மரக்கறியிலை சமைக்கக்கூடிய நல்ல கைப்பக்குவமுள்ள ஆக்கள் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டுப்பாருங்கோ.......அசைவசாப்பாடெல்லாம் தோற்றுப்போகும்.
நான் ஊரில் இருக்கும் மட்டும் வருசத்திலை 2 அல்லது 3தரம் இறைச்சி சாப்பிடுவேன்.கிழமையில் 2தரம் மீன் கறி.மற்றும் படி ஒரே மரக்கறிதான். அதுவும் திருவிழாக்காலங்கள் தொடங்கிச்சுது எண்டால் அவ்வளவுதான்.....மச்ச சட்டி பானையேல்லாம் தூரத்துக்கு போய்விடும்.

அந்த நேரங்களில் அசைவத்துக்கான தவனம் கூட வராது.

சில ஆக்கள் சொல்லுவினம் இறைச்சி மீன் எண்டால் ஒரு கறியோடை சாப்பிடலாம்.மரக்கறியெண்டால் கனகறி வேணும் எண்டுவினம். சமைக்கிறவன் சமைச்சால் ஒரு கத்தரிக்காய்க்கறியோடை சந்தோசமாய் சாப்பிடலாம்.:grin:

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

நீங்கள் இன்னும் ஒழுங்கான சைவச்சாப்பாடு சாப்பிடேல்லை எண்டு நினைக்கிறன்.  மரக்கறியிலை சமைக்கக்கூடிய நல்ல கைப்பக்குவமுள்ள ஆக்கள் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டுப்பாருங்கோ.......அசைவசாப்பாடெல்லாம் தோற்றுப்போகும்.
நான் ஊரில் இருக்கும் மட்டும் வருசத்திலை 2 அல்லது 3தரம் இறைச்சி சாப்பிடுவேன்.கிழமையில் 2தரம் மீன் கறி.மற்றும் படி ஒரே மரக்கறிதான். அதுவும் திருவிழாக்காலங்கள் தொடங்கிச்சுது எண்டால் அவ்வளவுதான்.....மச்ச சட்டி பானையேல்லாம் தூரத்துக்கு போய்விடும்.

அந்த நேரங்களில் அசைவத்துக்கான தவனம் கூட வராது.

சில ஆக்கள் சொல்லுவினம் இறைச்சி மீன் எண்டால் ஒரு கறியோடை சாப்பிடலாம்.மரக்கறியெண்டால் கனகறி வேணும் எண்டுவினம். சமைக்கிறவன் சமைச்சால் ஒரு கத்தரிக்காய்க்கறியோடை சந்தோசமாய் சாப்பிடலாம்.:grin:

என் வீட்டில் சைவமும் நலனன்றாக தான் சமைப்பார்கள், ஆனால் அசைவம் என்றால் ஒரு தனி கிளு கிளுப்பு தான்...

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, ரதி said:

சுவியண்ணா  சைவம் என்ட படியால் அறுசுவை மாமிசத்தை கண்டதும் பயத்தில் ஓடி இருப்பார்...தொடருங்கோ சுவியண்ணா 
 

ஐயா சுவி அவர்களுக்கு அசைவம் பிடிக்காதா அல்லது தங்களுக்கு பிடிக்காதா...

Share this post


Link to post
Share on other sites
On 2/1/2019 at 10:28 AM, suvy said:

நானும் மனைவியும் இரு மகன்களும்தான் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை.  நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது.

 

எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம் கவலையை விடுங்கள்.

யாழின் ஆண்டுவிழா கதாநாயகனே நீங்கள் தான்.

நானும் ஒரு பயணக் கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, ஈழப்பிரியன் said:

எம்பெருமான் எப்பவும் கொடுக்கலாம் கவலையை விடுங்கள்.

யாழின் ஆண்டுவிழா கதாநாயகனே நீங்கள் தான்.

நானும் ஒரு பயணக் கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன்.

சுப சீக்கிரஸ்ய.... நல்ல காரியங்களை தள்ளிப்போடக் கூடாது உடனே ஆரம்பியுங்கள்.......!  😁

Share this post


Link to post
Share on other sites
On 2/7/2019 at 1:39 AM, suvy said:

ஒரு சிவன் கோவில் இருந்தது.சாரதி கூறினார் இதுதான் சிவபூமி என்று. பிறிதொருநாள் அங்கு வரவேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

51642160_302251460482869_70992463623356416_n.jpg?_nc_cat=111&_nc_ht=scontent-syd2-1.xx&oh=e7394b564f44106896f329741f2fa84f&oe=5CEA8616

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நூறு கதை நூறு படம்: 35 சேது June 22, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர் காதல் யூகத்திற்குள் அகப்படாத வினோதங்களில் ஒன்று. பாலுமகேந்திராவின் பள்ளியிலிருந்து கிளம்பியவர்களின் பட்டியலில் முக்கியப் பெயராக பாலாவின் பெயரை எழுதுவதற்கான காரணப் படம் சேது. கையாள்வதற்குச் சிரமமான காதலின் தனித்த கடினத்தைச் சொல்ல முற்பட்ட படம். அச்சு அசலான பதின்பருவத்தின் தளைகளற்ற ஆண் மனம் ஒன்றை கொஞ்சமும் புனைவுத் தன்மை துருத்தாத வண்ணம் சித்தரித்தார் விக்ரம். நாயகவேஷத்தின் அதீதங்கள் எதுவும் கலக்காமல் படிகம் போன்ற துல்லியத்தோடு ஆடவனின் தனியாவர்த்தன உலகம் நம் கண் முன்னால் விரிந்தது. அங்கே தென்பட்ட தேவதை அபிதாவின் மீது சேதுவுக்கு ஏற்பட்ட வாஞ்சை ஆதுரமாகித் தேடலாய்க் கனிந்து காதலாவதெல்லாமும் நம்பகத்தின் ஓடுபாதையில் பிசகாமல் நிகழ்ந்தேறியது. சொல்லவந்த காதலின் ஒற்றை இழையை, முன்பறியா யதார்த்த நேர்த்தியுடன் சித்தரித்ததும், தன்னைத் தானே நகர்த்திக் கொண்டு செல்லக்கூடிய திரைக்கதையின் சொலல் முறையும் சேதுவின் பலங்கள். குரல் மொழி இசை எனத் தன் மூன்று மலர்களைக் கொண்டு இந்தப் படத்தை உயிர்ப்பித்தார் இளையராஜா. திரைப்படத்தின் பாடல்கள் என்பவை இந்தியசினிமாவின் கதாநம்பகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று திருப்புவது எப்படி நோக்கினாலும் காட்சியனுபவத்தில் இடையூறாகவே விளையும். அபூர்வமாக சேதுவின் பாடல்கள் லேசாக வெளுத்த, முகிழ்ந்து முடிக்காத, மொட்டும் பூவுமான, பாதி மலர் ஒன்றாகவே இயைந்து ஒலித்தன. கலை, காதலைக் கையாளும்போது மாத்திரம் ஒரு சிட்டிகை புனிதத்தை அதன்மீது கூடுதலாய்த் தெளித்துவிடுகிறது. பரஸ்பரம் சரிவர நுகரப்படாத, பாதியில் கலைந்த ஒரு கனவேக்கத்தை ஒத்த அரிதான காதலை சேதுவும் அபிதாவும் கொண்டிருந்தார்கள். மலர் பறிப்பதுபோலக் காதலைக் கையாண்டு கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், உயிர் பறிக்கிற கடினத்தோடு தன் காதலை முன்வைத்தான் சேது. ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிந்தும் நிராகரிக்கவே முடியாது என்பதையும் தெரிந்துகொண்டு அவனைப் பெற்றுக்கொண்டு, தன் மனதைத் தர முனைந்தாள் அபிதா. அவனது தாமத வீதியில் உதிர்ந்து கிடக்கும் சருகுப் பூக்களில் ஒன்றென உயிரைத் துச்சம் செய்து கொண்டு, கதைகளை முடிவுக்கு அழைத்தாள் அபிதா. பச்சை வண்ணம் ததும்பும் பிறழ் மனங்களின் வனாந்திரமாம் பாண்டி மடத்திலிருந்து, தன் மன மீள்தலை நிரூபித்தபடி, காதலாளைத் தேடி வருகிற சேது, அவளற்ற தன் உலகில் எஞ்சுகிற ஒரே இடமான அதே இடத்துக்குத் திரும்புகிறதோடு முடிகிறது படம். துக்கமும், கண்ணீரும் காதலை எப்போதும் சுற்றி இருக்கிற எடையற்ற குறளிகள் அல்லது காதலின் இருபுறச் சிலுவைகள். வென்ற காதல்களின் பேரேடுகள் தணிக்கைக்கு அப்பால் கைவிடப்படுகிற வெற்றுத் தகவல்கள் காலச்செரிமானத்துக்குத் தப்பிப் பிழைக்கிற வல்லமை தோற்ற காதல்களுக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில் தேவதாஸ் பார்வதி வரையிலான பாதிமுழுமைகளின் சின்னஞ்சிறிய பட்டியலில் சேதுவும் அபிதாவும் நிரந்தர ஒளிப்பூக்கள். யதார்த்தமான மனிதர்களைப் பாத்திரமாக்கியதன் வெற்றியை அறுவடை செய்தார் பாலா. தன்னை எந்தளவுக்கும் வருத்திக்கொள்ளக் கூடிய இன்னொரு மகா நடிகனாகவே விக்ரம் தன் அடுத்த கணக்கைத் தொடங்கினார். அனேகமாக இந்திய அளவில் நெடிய காத்திருத்தல் காலத்தினைக் கடந்து ஒளிவட்டம் பெற்ற நட்சத்திரமாக விக்ரமைச் சொல்ல முடியும். பாடல்களும் ஒளிப்பதிவும் இயல்பின் சுவர்களுக்குள் இயங்கிக் கடந்த வசனங்களும் சிவக்குமார் ஸ்ரீமன், மோகன் வைத்யா, அபிதா என பாத்திரங்களுக்கான நடிக தேர்வுகளும் என்று எல்லாமே காரணங்களாயின. சேது தமிழ் நிலத்தின் அடுத்த தேவதாஸ் ஆகவே தன் தடத்தைப் பதித்தது. சொல்லாக் காதலில் தொடங்கி வெல்லாக் காதல் வரைக்கும் வென்ற காதல் வெல்லக் கட்டி தோற்ற காதல் வைரக்கட்டி என்பதுதான் காதலுக்கான புனைவுலக அந்தஸ்து. அதனைக் கம்பீரமாகப் பொன்னேட்டில் பொறித்துத் தந்த படம் சேது.   https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-35-சேது/  
  • 8 வயது சிறுமியை ஒரு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்த தந்தையை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள 4ஆம் காலனி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கூலித் தொழிலாளியான தந்தை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கடந்த 26ஆம் திகதி வரை தனது 8 வயதான மகளை  பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். இதனையடுத்து சம்பவதினமான நேற்றிரவு குறித்த தந்தையாரை பொலிஸார் கைதுசெய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள தந்தையாரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/8-வயது-சிறுமியை-ஒரு-வருடமா/?fbclid=IwAR2JQHF0Zafn1WP50RnHOjdTRDFI1GFRGeRl-dHk6j13Kta-mhRNiKh5FrY   
  • "ஜெனிவா விவாகரத்தில் நாம் ஏற்கனவே சில முன்னெடுப்புகளை கையாண்டுள்ளோம். இதில் இலங்கை குறித்த விவகாரத்தில் எமக்கு அனுசரணையாக இருக்கின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்த குழுவிற்கு இப்போது தலைமை தாங்குவது பிரித்தானியா, ஆகவே அவர்கள் தான் இப்போது இதற்கொரு வடிவம் கொடுக்க வேண்டும். அந்தவகையில்  பிரித்தானிய தூதுவரை அண்மையில் சந்தித்து இந்த விடயம் குறித்து ஒன்றரை மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரமாக பேசினேன். வருகின்ற சில நாட்களில் மேலும் சிலருடன்  பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. " பிரித்தானியாவை நோக்கி பாயும் தோட்டாக்களும் பணப்பெட்டிகளும் ....  பேசுப்பொருட்களாகவும் பேரம்பேசும் பொருட்களாகவும் 
  • பிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம் பிரிட்டனின் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் அவரை மீண்டும் நியாயப்படுத்தியுள்ளது. பிரிட்டனிற்கான  இலங்கை தூதரகத்தில் 2018 இல் இலங்கையின் சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்ற வேளை ஆர்ப்பாட்டம் செய்தவர்களை நோக்கி மரண அச்சுறுத்தல் விடுத்ததன் மூலம் பிரிகேடியர் பெர்ணான்டோ குற்றமிழைத்தார் என பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன் அபராதமும் விதித்துள்ளது.  எனினும் இந்த வழக்கு தொடர்பான சம்பவங்கள் இடம்பெற்ற ஒழுங்கு  இது ஒரு அரசியல் ரீதியான நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என்பதை புலப்படுத்துகின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரிகேடியர் பெர்ணாண்டோ இராஜதந்திர விடுபாட்டுரிமைக்குரிய,இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த இராஜதந்திரி என்ற தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நீதிமன்ற விசாரணைகள், பிரிகேடியர் பெர்ணான்டோவின் இராஜதந்திர விடுபாட்டுரிமையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளமை,பிரிட்டனின் தேர்தல் வேளையில் தீர்ப்பு வெளியாகியுள்ளமை,வழக்கு விசாரணைகள் இடம்பெற்றவேளை வழக்கு தொடுநரின்  ஆதரவாளர்கள் விடுதலைப்புலிகளின் கொடியை  ஏந்தியவாறு நீதிமன்ற வழக்குகளின் போது அடாத்தான விதத்தில் , அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டமை,வழக்கு தொடுநரினால்  நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய விபரங்கள் பகிரங்கமாகியமை,போன்ற சம்பவங்கள் இது அரசியநோக்கங்களை அடிப்படையாக கொண்டது என்பதை புலப்படுத்தியுள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/70629  
  • பிரமிள்: தனியொருவன் (பகுதி 3) – பாலா கருப்பசாமி by Gokul PrasadApril 20, 2019 மார்ச் 26, 2019ல் தமிழ் இந்துவில் வெளியான எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பேட்டி இங்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் ஒரு பதிலில் அவர் ”‘மணிக்கொடி’ ஆட்கள் கிட்டேயிருந்தே தொடங்கிட்டுது. நானும் கு.அழகிரிசாமியும் அந்தக் காலத்துலேயே இதைப் பேசியிருக்கோம். ரெண்டு சாதிகளைக் கடந்தும் இன்னைக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. ஆனா, பிராமணிய மனோபாவம், பார்வை இப்பவும் எல்லா சாதிகள்கிட்டயும் தொடர்றதாதான் எனக்குத் தோணுது’” என்று சொன்ன பதில்தான். இதில் பிராமணிய ஆதிக்கம் தொடர்வதாகக் கூட அவர் சொல்லவில்லை. பிராமணியம் என்பது ஒரு குணாதிசயமாகச் சுட்டப்பட்டு அக்குணம் எல்லா சாதிகளிலும் தொடர்வதாகத் தான் சொல்லியிருக்கிறார். இதற்கே அவர் மீது வருத்தப்பட்டவர்களைக் கண்டால் ஆச்சரியமாக உள்ளது. பிறகு எதற்கு இங்கே இத்தனை குழுக்கள் இயங்குகின்றனவாம்? நான் பார்த்த வரை இலக்கியம் என்பதைத் தாண்டி ஒருவர் தனது சாதி என்பதற்காகவே அவரைத் தூக்கிப் பிடிக்கும் போக்கு எங்கும் காணப்படுகிறது. இதில் எழுத்தாளர் வாசகர் என்ற வித்தியாசம் கூடத் தெரிவதில்லை. ஒரு வாசகர் தன் சாதியைச் சேர்ந்த எழுத்தாளரின் எழுத்தை தேடித் தேடி வாசிப்பதைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக பிராமணர்கள். ஒருவேளை பிற சாதியினருக்கு இன்னும் அந்தளவு ’விழிப்புணர்வு’ வரவில்லை போலும். பிரமிள் இலக்கியத்துக்காக அனைத்தையும் எதிர்த்தவர். சாதீய ரீதியான குழு மனப்பான்மையோடு இயங்குபவர்கள், அரசியல் நிலைப்பாடுகளோடு படைப்புகளை அணுகுபவர்கள், கோட்பாடுகளைக் கொண்டு வெறும் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் என்று இலக்கியத்துக்கு எதிரான செயல்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். எந்தளவு வைதீகத்துக்கு எதிரான நிலையைக் கொண்டிருந்தாரோ அதே தீவிரத்துடன் இடதுசாரிகளின் மீதும் தொடர்ந்து விமர்சனங்களை வைத்தார். எப்படி இப்படி ஒரு எழுத்தாளன் தனியாக வாழ்ந்து மறைந்தான் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பிரமிள் வேலை எதுவும் செய்யவில்லை. தன்னை கவிஞன், விமர்சகன் என்றே எங்கும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். 1970-75 காலகட்டம் அவருக்குக் கொடுமையானது. அவரே நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டபடி அது நினைவுகூற விரும்பாத காலகட்டம். நாள் முழுக்க பட்டினியாக பல நாட்கள். யாரிடமும் சென்று காசு கேட்டதுமில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. திராவிட எழுத்துக்கு முன்னுதாரணமாக உயர்த்திப் பிடிக்க வேண்டியது பிரமிளைத் தான். “சமூகம் என்பதே abstraction. சமூகத்தை அபிப்பிராயங்களால் அர்ச்சிப்பதோ சவுக்கடி கொடுப்பதோ, தற்காலிகமான சலசலப்புக்கு மேல் ஆழமாக உழுது செல்லும் இரசனையின் பலனைத் தராது. உண்மையைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் இரசனை இராது. பரபரப்பான அபிப்பிராயங்களே ஆட்சி புரியும். இரசனை, பக்குவமுள்ள இதயத்துக்குத் தான். அது உலகைத் திருத்தி விடாது. ஒரு சமூகம் கலைஞன் ஒருவனை ஆதரிக்கிறதென்றால், பரவி விட்ட அபிப்பிராயத்திலேயே. பாரதியை அச்சிட்டுப் பிழைக்க முடிவது அதனால்தான் – பாரதி இரசனையால் அல்ல” ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டவுடன் அந்தக் குறிப்பிட்ட புத்தகம் மட்டும் கூடுதலாக விற்பனையாகும். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவலுக்கு விருது கிடைத்தவுடன் திருநெல்வேலியில் அதுவரை ஒன்றோ இரண்டோ விற்றிருந்த ஒரு கடையில் 100 புத்தகங்களுக்கு மேல் விற்றன. கேரளாவில் எங்கு பார்த்தாலும் பஷீரைக் கொண்டாடுகிறார்கள். நிறைய இடங்களில் அவர் புகைப்படங்களை பெருமையாக மக்கள் மாட்டி வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். ஒரு மலையாள இலக்கியவாதியிடம் கேட்டபோது அவர் சொன்னது, ‘அப்படியில்லை. குறிப்பிட்ட ஒருவரைக் குறித்த ஓர் அங்கீகாரத்தையும், மதிப்பீட்டையும் உருவாக்கினால் போதும். மக்கள் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.’ பாரதிக்கு அதுதானே நடந்தது? எந்தக் கூட்டத்திலும் பாருங்கள். பொத்தாம்பொதுவான அவரது சில பாடல் வரிகளைச் சொல்லி ஒப்பேற்றி விடுவார்கள். சொல்பவருக்கும் தெரியாது. வாசிப்பவருக்கும் தெரியாது. ஏற்கெனவே மகாகவி என்று உறுதிபடுத்தப்பட்டிருக்கிறார் என்பதால் சும்மா நான்கு வார்த்தைகள் பாராட்டிச் சொல்வதில் நிச்சயம் தவறே இருக்க முடியாது இல்லையா? இங்கு ஒரு படைப்பைப் பற்றி பிரபலமான ஒருவர் சொன்னால் மட்டும்தான் அதற்கு மவுசு. இதனால் தான் கதை, கவிதைகளுக்கு முன்னுரை வாங்க மூத்த எழுத்தாளர்களைச் சார்ந்து முதுகு சொறிந்து கொண்டு பல கூட்டங்கள் திரிகின்றன. படைப்புக்கான மதிப்பு படைப்பிலேயே உள்ளது. அது வாசிப்பவரால் கண்டுணரப்பட்டு அம்மதிப்பு உருவாக வேண்டும். எல்லோரும் எல்லாவற்றுக்கும் இன்னொருவரையே சார்ந்திருக்கிறார்கள். ஒரு புத்தகத்தை முழுக்க வாசிப்பதற்கு பதில் அதை வாசித்த ஒருவர் சொல்லும் கருத்தைப் படித்தால் போதாதா, தனக்கு பதில்தான் அவர் யோசிக்கிறாரே, தொகுத்துத் தருகிறாரே அப்புறம் எதுக்குச் சிரமப்பட வேண்டும்? இதில் உள்ள அபாயம் நிறைய பேருக்குத் தெரியவில்லை. “என்னை convince செய். நீ சொல்வதை நம்புகிறேன்” என்ற அளவுக்குத் தான் நிறைய நபர்கள் இருக்கிறார்கள். செப்டம்பர் 1964ல் எழுத்து இதழில் வந்த கட்டுரையில் தான் பிரமிள் முதன்முதலாக தனிநபர்வாதத்தை முன்வைக்கிறார். இன,மத, மொழிக்குரியவராக ஒருவர் தன்னை அடையாளம் கண்டு ஓர் இனத்துக்கான ஒட்டுமொத்த இரசனை மேம்பாடு என்று செல்லும்போது தனிநபர் வளர்ச்சி தடைப்பட்டு, சமூகத்தை சதா குறை சொல்லும் முற்போக்குவாதம் வருகிறது. இரசனை தனிநபரின் சொத்து. ஒரு சமூகத்துக்கான படைப்பை மட்டுமே ஏற்கும் இரசிக்கும் தன்மை போலித்தனமானது. வறட்டுத்தனமானது. ”சாமானிய வாழ்க்கையில் ஒருவன் பூரணமாக வாழ்கிறபோது அங்கேயே கவிதை நடைபெறுகிறது. பூரண மனித வாழ்வே கவிதை வாழ்வு. அவ்வாழ்வில் கவிதை எழுதப்படாவிட்டாலும் கவித்துவம் உண்டு. தேசிய, இன, மத வாழ்வுகளுக்கு அப்பாற்பட்ட குழந்தைமையுடன் மனம் விழிப்புப்பெறும் கணமே அது. கவிஞன் அறிந்தோ அறியாமலோ அவ்வப்போது இந்நிலையை அடைந்து விடுகிறான். சொற்களில் பழகிய, சொல்மயமான நினைவுத் தொடரில் அனுபவ மின்சாரம் பாயும் வேளையே கவிதை பிறக்கும் வேளை. கவிதை சொல்லில் இல்லை. கவிதையின் ஊற்று போனதும் வருவதும் அற்ற நிகழ்களத்தில் கிடக்கிறது.” எழுத்து இதழ் 66ல் (செப்டம்பர் 1964) கவித்துவம் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை அவரது முக்கியமான கட்டுரைகளில் ஒன்று. வெற்றுச் சொற்களை ஒட்டி வெட்டி அமைப்பதின் மூலம் அதன் அர்த்தகதியை மாற்றி ஒரு விளையாட்டை நிகழ்த்துவதே கவிதை என்று நம்பி ஒரு கோஷ்டி இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்னொருவர் இதற்கு மேலே போய் ”கவிதையை இயற்கையான ஒன்றாக கருதிக் கொண்டு காலம் கழிக்கும் சனக்கூட்டமொன்று இன்னும் இலக்கிய வெளியில் இருக்கிறது” என்று எழுதி வைக்கிறார். எந்தப் படைப்பாக இருந்தாலும் அதனளவில் நேர்மையாக, உண்மையாக, அனுபவப் பூர்வமாக, உணர்வோட்டத்துடன் கலந்து வெளிப்படாவிடில் அந்தப் படைப்பானது அது இயங்கும் கலைத்துறைக்குத் தேவையற்ற ஒன்றே. எழுதப் படிக்கத் தெரியுமென்பதால், ஒரு கோணப்பார்வையைக் காட்டி அதன் இயல்புமீறிய தன்மையை கவிதை என்று நம்பிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் பெருகி விட்டனர். பொட்டுப்பொட்டாய்ச் சாரல், இலை நுனியில் திரண்டு குமிழ்ந்து உச்சகட்டத்தில் விடுபட்டு வீழும் நீர்த்துளி கணம். கவித்துவம் என்பது காலாதீதத்தில் கிடக்கிறது. அந்த கணம் கூட கைவரப்பெறாது மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அனைத்தையும் தெறிக்கச் செய்து மூச்சுவிட்டுக்கொள்ளும் அந்த ஒரு கணத்துக்கும் குறைவான இடைவெளி மனிதர்களுக்கு சித்திக்கத்தான் செய்கிறது. ஒரு மனித வாழ்வில் இப்படி மொத்தம் எத்தனை கணங்கள் வாழ்ந்திருப்போம். இத்தகு கணங்களை வாழ்வில் கூட்டிக் கொள்வதும், அந்தந்த கணங்களில் வாழ்வதை நோக்கமாக வைத்துக் கொள்வதுமல்லவா உண்மையான வாழ்வாக இருக்க முடியும்? அரசு, சமூகம், கலை, உறவுகள் அனைத்தும் இதன் மதிப்பை உணர்ந்ததாக அதன் பொருட்டு இயங்குவதாக அமைவதே நாகரீகத்தின் உச்சம் என்று சொல்லலாம். பிரச்சாரத்திற்காக, அரசியல் நிலைப்பாட்டிற்காக இலக்கியத்தைக் கைக்கொள்ளும்போது அதில் உயிர் இருப்பதில்லை. படைப்பு அந்தரங்கமானது. அது ஒரு தன்னிலை மலர்ச்சி, செடியில் பூக்கும் பூப்போல. இரண்டாம் நபரை உத்தேசித்து அது மலர்வதில்லை. இரண்டாம் நபருக்கு அங்கே இடமேயில்லை. இருந்தும், அது அனைவருக்குமான மலராக உள்ளது. அதுதான் படைப்பு. இன்னொருவரை, இனத்தை, சமூகத்தை உத்தேசித்து எழுதப்படும் போதே இந்த அந்தரங்க உறவு நிகழாமல் போய் விடுகிறது. வெறும் மொழியை வைத்துக் கொண்டு போலியாய்ச் செய்யப்படும் எழுத்து மட்டுமே எஞ்சுகிறது. கொஞ்சம் புத்திசாலித்தனமாக பூசி மெழுகி என்னதான் ஏமாற்றப் பார்த்தாலும், படைப்பு பல்லிளித்து விடும். காலாதீதத்தில் ஏது சொல்? மனிதன் உள்ளே முழுதும் சொற்களால் நிறைந்திருக்கிறான். சொல்லற்ற கணம், உறைந்த சொற்களின் மீது படரும் போது வாசனை போலொரு நினைவு, ஒரு காட்சி, ஒரு சொல் ஒட்டிக்கொள்கிறது. ஒருவித தன்மயக்க நிலை அதைத் தொடர்கிறது. (கணத்துக்கும் குறைவான நேரம்) அது ஒரு கரு. ஓர் உயிர். அக்கண முகிழ்ப்பில் அதன் சாரத்தின் மீது நிகழ்வது கவிதை. மனிதனிடம் எப்போதும் இருப்பது சொல். ஆனால் கவிதை சொல்லில் இல்லை. மேலே விவரித்த கட்டுரைக்கு வலுசேர்க்கும் அடுத்த இரண்டு கட்டுரைகளைப் பார்க்கலாம். அ. படைப்பாளி மனநிலை (எழுத்து இதழ், டிசம்பர் 1965) ஒரு படைப்பை கோட்பாடுகளைக் கொண்டு அளவிடுவது சரியாக இருக்குமா? கோட்பாடுகள் போன்ற கருவிகள் குறிப்பிட்ட கோணத்தை மட்டும் மையமாகக் கொண்டவை. தனித்தனியாகப் பார்த்து ஒவ்வொன்றையும் அளவிடுவது (குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதை) அதன் முழுமையை உணரச் செய்யாது. பொதுவான சமநிறுவை (objective value) சாத்தியமா என்ற கேள்வியை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறார் பிரமிள். ஓர் எழுத்தாளர் பிடித்துப் போவதற்கும் இன்னொருவர் பிடிக்காமல் போவதற்குமான காரணம் என்ன? இரண்டு இலக்கிய வாசகர்கள் ஒரே மாதிரி இரசனை கொண்டிருப்பதும் இல்லை. அப்படியே இருந்தாலும் நுட்பமான வேறுபாடுகள், தாக்கங்கள் இருக்கும். இது வாசகரின் அனுபவ, இரசனை சார்ந்ததாக உள்ளது. இந்நிலையில் விமர்சகன் ஒரு படைப்பை மதிப்பிட சிருஷ்டிக்கும் மனநிலையை அடிப்படையாகக் கொள்வதை முன்வைக்கிறார். சிருஷ்டி எவ்வாறு நிகழ்கிறது? எழுத்தாளன்/கவிஞன் எதை சிருஷ்டிக்க வேண்டும் என்ற முடிவுடன் சிருஷ்டிக்கிறானா? எழுதும் ஒவ்வொரு சொல்லிலும் அவனது பிரக்ஞை உள்ளதா? கட்டுப்பாடும் நோக்கமும் உடையவன் தானா? “மௌனி போன்றவர் கதைக்கு பிரக்ஞைபூர்வமான ஒரு தளம் இல்லை” இந்தக் கட்டுரையில் படைப்பாளியின் படைப்பு மனநிலைக்கு வாசகன் அணுகி வரவேண்டும். அந்நிலையில் படைப்பை மதிப்பிடுவதே சரியானது என்கிறார். இதை அவர் இன்னும் சற்று விவரித்துச் சொல்லியிருக்கலாம். இந்த படைப்பு மனநிலை விவரிக்க முடியாத ஒன்று என்று சொல்கிறார். ஒரு கவிதையை உள்வாங்கிக் கொண்டதும் என்ன நடக்கிறது? சட்டென்று மழைபெய்து நனைந்தது போல, ஒரு விளக்கு உள்ளுக்குள் பளிச்சென்று எரிவதுபோல, ஒரு நண்பனைத் தோளோடு அணைத்துக் கொள்வது போல, பற்றவைத்தவுடன் குப்பென்று பற்றி சரசரவென்று பொசுக்கித் தள்ளும் தழல்போல இப்படி எத்தனையோ உணர்வு நிலைகளை அதனோடொரு உள்ளார்ந்த மௌனத்தையும் தருகிறது. படைப்பு மனநிலையை உணர்வதும், படைப்பைப் புரிந்துகொள்வதும் ஒன்றா? புரிந்து கொள்வதில் ஒருவித விலகல் இருக்கிறது. கணித சூத்திரத்தை அணுகும் மனப்பாங்கு. படைப்பை உணர்ந்து அனுபவிப்பதில்? இது சற்று கடினமானது. கவிஞன் (உதாரணத்திற்கு), ஓர் மனோகதியை, உந்துதலை அடைந்து எழுதத் தொடங்குகிறான். எழுதி முடித்தவுடன் படைப்பு தனி உயிராகிவிடுகிறது. அச்சமயம் படைப்பாளியின் தான், தனது என்ற உணர்வை நீக்கிவிட்டால் அவரும் ஒரு வாசகரே. முதல்நிலை வாசகராகச் சொல்லலாம். ஆனால் வாசகருக்கு அப்படி இல்லை. அவர் இந்தத் தொடர்ச்சியை பின்னிருந்து தொடங்குகிறார். அதாவது, முதலில் சொல், வரி, அடுத்தடுத்த வரிகளுக்கிடையிலான தொடர்பு, அனுபவத்தோடு சரிபார்த்து கவிதை பேசும் பொருள், உணர்வு கதிக்கு நெருங்கி வந்து அதை முழுதுமாக உள்வாங்கிக் கொள்கிறார். இது சற்று சிரமப்பட வேண்டிய வேலைதான். இத்தகு சிரமத்திற்கு வாசகர் மனதில் வேறு சிந்தனையோட்டமின்றி, மனமொப்பி, முன்முடிவுகளின்றி வாசிக்க வேண்டியிருக்கிறது. படைப்புக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று சொல்லலாம். ஆனாலும் படைப்பை உணர்ந்து அனுபவித்தல் என்பதும், படைப்பு மனநிலையும் ஒன்றா. இரண்டு நெடுநாள் நண்பர்கள் சந்திக்கையில் எதுவுமே பேசாமல் கூட மணிக்கணக்காய் ஒன்றாய் அமைதியாய் அமர்ந்திருப்பார்களே, அதுபோன்றதொரு இடம்தான் எழுத்தாளரோடு வாசகர் சந்திக்கும் இடம். அது படைப்பு மனநிலையைச் சந்தித்தல். மனதை வெறுமையாய் வைத்திருந்து, படைப்பு இழுக்கும் திக்கெல்லாம் போய்வரும் திராணியும், அமைதியும், வேறு சிந்தனைக் குறுக்கீடும் இன்றி இருப்பவர் நிச்சயம் படைப்பாளிக்கு அருகில் வந்துவிடுவார். ஆ. சிருஷ்டி இயக்கம் (எழுத்து இதழ், ஜூன் 1966) ”The Milky Way is like a silver river” – Vladimir Mayakovsky “யாருடைய நடமாடும் நிழல்கள் நாம்?” – மௌனி பிரமிள் தனது முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையை  எழுதியிருக்கிறார். ஒரு வரியில் அதன் அர்த்தம் தரும் வெடிப்பில் அல்லது ஒரு பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது சட்டென்று முடிந்து அப்படியே கீழே தலைகுப்புற விழுவது போல. இந்தப் படைப்பு வரிகளின் மர்மம், படைப்பாளியின் சிருஷ்டி மனநிலையில் தொக்கி நிற்கிறது. எனவே அந்த வரிகளை அதன் அனுபவத்துக்குள் நாம் செல்லும்போது அந்த மனகதியைப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார். மேற்கண்ட கவிதை வரியை எழுதிய மாயகோவ்ஸ்கி அதை எழுதி முடித்ததும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார். ‘She loves me…she loves me not’ எனத் தொடங்கும் அந்தக் கவிதை 28 வரிகளைக் கொண்டது. ஒட்டுமொத்தக் கவிதையிலும் இந்த ஒருவரி மட்டும் ஒரு மின்னல்வெட்டாக திகைக்கச் செய்து கவிதையை வேறொரு தளத்தில் கொண்டு நிறுத்தி விடுகிறது. இந்த வரியை அடுத்துத் தொடரும் “I’m in no hurry” என்ற வார்த்தை, எப்படியொரு சமாதானத்தை அவரது மரணத்திற்குத் தந்திருக்கும். தற்கொலைக்குக் காரணம் பார்த்தால் தினசரிச் செய்தி போல ஒன்றுதான். காதல் தோல்வி. அந்த இறுதிக் கவிதையைக் கூட இருள்நகையாக எழுதியிருக்கிறார். ஒரு தற்கொலைக்குத் துணிந்தவனைப் புரிந்துகொள்வது எப்படி? அந்த பிஸ்டலை நம் நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தாவிடில் அதன் அழுத்தத்தை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? தான் இங்கே வாழ்வின் முடிவில் நின்றுகொண்டிருக்கும் இதே கணத்தில், அந்த இரவில் இதெதுவும் அறியாது உறங்கிக் கொண்டிருக்கும் காதலி, இருவருக்குமிடையேயான கடக்கமுடியாத அந்தப் பள்ளத்தாக்கு. இப்படி மேலும் மேலும் உள்ளே செல்லும் வாசகருக்கு கவிதை இன்னுமின்னும் திறந்துபடும். இந்தக் கட்டுரையை பிரமிள் இப்படி முடிக்கிறார். “கலைஞனால் பிரமிப்படைய முடிகிறது; அதிசயிக்க முடிகிறது; கேள்விபோட முடிகிறது. அதிசயிப்பு, கேள்விபோடல் – இவைதான் கலையின் உந்நதமான காரியம் என நினைக்கிறேன். இந்த பிரமிப்பு, அதிசயம், கேள்விகள் என்பவற்றின் இயக்கம்தான், படைப்பு மனநிலை.” மேலே எழுதப்பட்டதின் உணர்வுகதிக்கு ஆளாதல் படைப்பு மனநிலையை உணர்வதாகுமா என்பது குறித்து பார்த்தோம். படைப்பில் தன்னையிழந்து அதன் உணர்வுத் தளத்தை சொற்களில் படைப்பாளி பிரதிபலித்திருக்கும் போது, அதை வாசகர் உள்வாங்கிக் கொள்ளும்போது அது படைப்பு மனநிலையை உணர்தல் என்று சொல்லலாம். அதே நேரம், எழுத்து வித்தகர்கள், குறிப்பிட்ட மனநிலைக்கு வாசகரை உட்படுத்தவேண்டி எழுதுகையில் அதை உணர்வதற்கான திராணியும் வாசகரிடத்தில் வேண்டியிருக்கிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு உரையாடலின் தொடக்கத்திலும், நாம் இதற்கான விடையை சேர்ந்து கண்டுபிடிக்கலாம் என்று சொல்வார். தான் சொன்னதனால் கேட்பவர் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது, மாறாக அவராக உணர்ந்து அதற்கான விடையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பார். எந்தவிதத்திலும் இன்னொருவர் தன்னைச் சார்ந்திருக்க அவர் விடவில்லை. தான் குருவல்ல. ஒருவரைப் பின்பற்றுவது தன்னைத் தானே அவமதித்துக் கொள்ளுதல் என்கிறார். இங்கே எழுத்தாளர்களின் நோக்கமே சார்பு வட்டத்தை விரிவாக்கிக் கொள்வதுதான். இதன்மூலம் ஓர் அதிகாரத்தை உருவாக்குகிறார்கள். தமிழ் இந்துவில் 7/4/19 அன்று வெளியான சி.மோகன் அவர்களின் கட்டுரையில் சி.சு.செல்லப்பா குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒரு காலத்தின் குரலாகவும் தன் காலத்தின் இலக்கியப் போக்குகளைக் கட்டமைக்கும் சக்தியின் உருவகமாகவும் வாழ்ந்த சி.சு.செல்லப்பா, தன் பிந்தைய காலத்தில் தன் செழுமையான அர்ப்பணிப்பு மிக்க கலை நினைவுகளில் உறைந்து விட்டிருந்தார். ‘எழுத்து’ எழுத்தாளர்கள் பலரும் செல்லப்பாவை விட்டு, அவரது சமகாலத் தன்மையற்ற பிடிவாதங்களால், ஒதுங்கிய நிலையில் சச்சிதானந்தம் மிகுந்த மதிப்புடன் உறவைத் தொடர்ந்து கொண்டிருந்தார். புதிய போக்குகளைப் பொருட்படுத்தாதவராகவும், புறக்கணிப்பவராகவும் கால மாற்றங்களில் சலிப்புற்ற அதேசமயம் வைராக்கியமிக்க முதியவராகவும் இருந்து கொண்டிருந்தார்.” இங்கே இதைக் குறிப்பிடக் காரணம் பிரமிள் ‘புனித ஜெனே’ என்ற தலைப்பில் கசடதபற இதழில் (பிப். 1971) ஒரு கட்டுரை எழுதுகிறார். இதுவரை எழுத்து இதழில் தானே எழுதி வந்தார், என்னாயிற்று என்ற கேள்விக்கு விடை சி. மோகனின் கட்டுரையில் இருக்கிறது. டி.எச். லாரன்ஸின் லேடி சாட்டர்லீஸ் லவர்க்கு விமர்சகர் ரைடர் ஹொக்கார்ட் எழுதிய முன்னுரையை எழுத்து இதழுக்கு அனுப்பிய போது, சி.சு.செ. அதை பிரசுரிக்க மறுத்ததோடு நேர்ச்சந்திப்பில், “How dare you send it to me?” எனக் கேட்டிருக்கிறார். இது சி.சு.செ. குறித்த தெளிவான சித்திரத்தை நமக்குத் தருகிறது. கலையுணர்வை விட சமூகவுணர்வை அதன் மதிப்பீடுகளை போஷிப்பதே கலையின் நோக்கம் என்று கருதுவோர் இன்றும் இருக்கிறார்கள். இது கலைஞனை ஒரு சமூகப் பிராணியாக இருக்க நிர்ப்பந்திப்பது. ஜெனே திருடனாகவும் ஒருபாலின உறவாளராகவும் இருந்தவர். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு, இவர் திருத்த முடியாத திருடன் என்று ஆயுட்சிறை விதிக்கப்பட்டவர். இவரை சார்த்தர் புனித ஜெனே என்று அழைத்தார். “டி.எஸ். எலியட், எழுத்தாளனது எழுத்தை மட்டும்தான் நாம் அளக்க வேண்டும், அவனை அல்ல என்ற கொள்கையை, விமர்சனத் துறையில் நிலைநாட்டி விட்டார். இருந்தும் திருடன், சொந்தப் பாலுறவுத் தாசி – எழுத்தாளன் என்ற விஷயத்தில், அதுவும் தன் வாழ்வையே அப்பட்டமாக சுயசரிதையாக எழுதியவனிடத்தில், நாம் திடுக்கிடவே செய்கிறோம். இதன் காரணம், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை தான் நன்மையானவை என்ற நமது பிரமையாக இருக்கலாம். இந்த வகையான சமூக அங்கீகாரம் பெற்ற தன்மைகளை, சமூக வரம்புகளுள் – குடும்பம், பள்ளி என்ற வரம்புகளுள் – வளர்ந்த காரணத்துக்காக மட்டும் தான் நாம் மதிக்கிறோம் எனலாம். இந்த நன்மைகளை மீறி, எவ்விதமான புனிதத் தன்மையுமில்லை என்றும் நினைக்கிறோம். இதனால் தான், ஜெனே புனிதமானவன் என்பது நாராசமாக ஒலிக்கிறது. ஜெனே பணத்துக்காக எழுதக்கூடிய ஆற்றல் இருந்தும் திருடினான்.” ஜெனே தனது ஆயுட்சிறை வாசத்தில்தான் எழுதியிருக்கிறார். சிறையில், காகித உறை செய்வதற்காகப் பணிக்கப்பட்டு, சமயம் கிடைக்கும்போது அந்த உறைகளின் மீது பென்சிலால் எழுதியிருக்கிறார். காவலர்கள் கண்களில் படாமல்தான் எழுத வேண்டும். எழுதியவை அனைத்தும் தன் வாழ்வில் நடந்த இழிவானதும் ஆபாசமானதும், தனது ‘காதலர்கள்’ குறித்துமானவை தான். இருந்தும் ஒருமுறை இவரது எழுத்துக்களை சிறையதிகாரி கண்டு வாசித்து விட்டு எறிந்து விட்டார். ஜெனே மீண்டும் எழுதினார். ஏன்? எப்படியும் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடும். ஒருவேளை சிறையை விட்டுப் போனாலும் பிரசுரத்துக்கு ஏற்கப்படாத உள்ளடக்கமும் எழுத்தும். பிரசுரமானாலும் தணிக்கையில் சிக்கிக் கொள்ளும். ஆனாலும் ஜெனே எழுதினார். ஏன்? இதற்கு ஜெனேவால் கூட பதில் சொல்ல முடியவில்லை. ஆபாசமெல்லாம் குழந்தையின் நிர்வாணமாய் பரிசுத்தமாய் இருந்தது. “எது நல்லது எது தீயது? மனித மனத்தின் ஆழ்ந்த ரகசியங்களை உதாசீனம் செய்துவிட்டு, கூட்டுவாழ்வுக்கு ஏற்ற சௌகரியங்களை, நல்லது – புண்ணியம் என்றுகூறி, அதோடு தேச பக்திக்காக நடக்கும் போரையும் புண்ணியம் என்கிறோம். ஜெனே இதே தர்க்கத்தில் தான், தனது கூட்டமான குற்ற உலகில் கொலையும் கொள்ளையும் தான் புண்ணியம் என்கிறான். இது, உலகு முழுவதுமே உள்ள கலாசாரங்கள் யாவற்றுக்கும் விடப்பட்ட சவால்!” முன்னர் சொன்ன சி.சு.செ. சித்திரத்துடன் மேற்கண்ட கட்டுரையின் சாரத்தைப் பொருத்திப் பார்த்தால் அவர் ஏன் எழுத்து இதழில் பிரசுரிக்க மறுத்தார் என்பது புரியும். சி.சு.செ. மணிக்கொடி எழுத்தாளர்களையும், தனது எழுத்துக்களையும் அதன் போக்கிலான நகர்வுகளையும் மட்டுமே கவனம் கொண்டார். இத்துடன் எழுத்து இதழுடனான பிரமிளின் அத்தியாயம் முடிவடைகிறது. (தொடரும்) பின்குறிப்பு : இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள அனைத்து  ஓவியங்களும் பிரமிளால் வரையப்பட்டவை.   http://tamizhini.co.in/2019/04/20/பிரமிள்-தனியொருவன்-பகுத-2/