• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
suvy

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!

Recommended Posts

9 hours ago, புங்கையூரன் said:

பத்மா கபே.....பழைய நினைவுகள்.....சிலவற்றைக் கிழறி விட்டு விட்டது!

போதாக்குறைக்கு...... கமீதியா கபேயும் வந்து போகுது....!

இந்தத் திருவாசக  மணி மண்டபம்.....சந்தர்ப்பம் கிடைக்கும் போது.....கட்டாயம் பார்க்க வேண்டும்.....!

இதற்கு.....நிலம் கொடுத்து உதவி செய்தவர்.....சிட்னியில் வசிக்கும்....வைத்திய கலாநிதி மனோமோகன் என்று நினைக்கிறேன்!  

தொடர்ந்தும்....எழுதுங்கள்....சுவியர்...!

நானும் இந்ததடவை சென்று வந்தேன் .எமது பிள்ளைகள் இங்கு தேவாரம் பாடினார்கள்.....வைத்திய கலாநிதி மனமோகன் தான் இந்த கோவிலுக்கு காணி வழங்கினார்...

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

யாத்திரை......(17).

                                                                            20180828-125305.jpg

 


                                          முள்ளியவளை நோக்கி கிளாலி பாலத்தால் சென்று பின் பரந்தன் சந்தியால் வாகனம் செல்கின்றது. நான் வற்றாப்பளை கண்ணகை அம்மனையும் தரிசித்து விட்டு போவோம் என்று சொல்ல புதுக்குடியிருப்பு சந்தியால் திரும்பி நந்திக் கடல் ஓரமாக வான் செல்கின்றது. இந்தியன் ஆர்மி யாழ்பாணத்துக்குள் வந்து எமது வாழ்வை அழித்த அந்த நாளில்  நான் மனிசி எல்லோரும் யாழ்ப்பாணத்தில் ஆதீனத்தில் தங்கி விட்டோம். அம்மா,மாமி, மச்சாள்மார் எல்லோரும் குடி பெயர்ந்து வந்து கண்ணகை அம்மன் கோவிலில்தான் தங்கி இருந்தனர். நந்திக் கடலைப் பார்க்கும்போது முள்ளிவாய்க்காலும் நினைவில் நிழலாடி கண்கள் பணிகின்றன. அந்தப் பெரிய காட்டைக் கடந்து கோவில் வாசலில் வான் வந்து நிக்கின்றது. அங்கிருந்த குழாயில் கைகால் கழுவி விட்டு கோபுரத்தின் முன்னால் கற்பூரம் ஏற்றி  சிதறுதேங்காய் போட்டுவிட்டு உள்ளே போகின்றோம்.ஓரளவு சனம் இருந்தது.மத்தியானம் பூசை நடந்து கொண்டிருக்கு.

                                                                       20180828-125328.jpg

                              கண்ணகை அம்மனுக்கு முன்னால் தினுசு தினுசான எண்ணெய் தீபங்கள் சுடர்விட்டு எரிகின்றன. மூலவர் பூசை முடிந்து தெற்கு வாசலில் பூசை நடக்குது.அர்ச்சகர் அம்பாளுக்கு தீபம் காட்டிவிட்டு யாராவது தேவாரமும் புராணமும் பாடும்படி அழைக்கின்றார்.அவர் மீண்டும் அழைக்க ஒவ்வொருவரும் மற்றவர் முகம்பார்க்க அடியேன் முன்னே வந்து மனமுருகிப் பாடுகின்றேன்.மெய் சிலிர்க்கின்றது.அப்படியே உள்வீதி சுற்றிவந்து வசந்த மண்டபத்தில் பூசை ஒலிபெருக்கியில் சத்தமாய் நடக்கின்றது. பஞ்சபுராணம் பாடும்படி அர்ச்சகர் அழைக்கின்றார்.மற்றவர்கள் பின்னால் நிற்கும் எனக்கு வழி விடுகின்றனர். அவர் ஒலிபெருக்கியில் நின்று பாடும்படி சொல்கின்றார்.என்ன ஒரு பெரும்பேறு. என்னை மறந்து நான் பாடுகின்றேன்.பின்பு மூலவர் சந்நிதியில் அம்பாளின் முன்னால் எம்மை அழைத்து காளாஞ்சி தந்து கௌரவிக்கின்றார்கள்.

                                                                            20180828-134155.jpg
                                                மீண்டும் கிளம்பி முள்ளியவளையில் அத்தான் அக்கா வீட்டுக்கு வருகின்றேன்.அக்காவும் இரு வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டார். அங்கு அத்தானுடன் இருந்து கதைத்து சிரமபரிகாரம் செய்துவிட்டு கிளம்பி தண்ணீரூற்று பிள்ளையார் கோவிலுக்கு வருகிறோம். நான் சுமார் ஆறுமாதம் வரை தண்ணீரூற்றில் வேலை செய்திருக்கின்றேன்.அக்காலங்களில் தினமும் மாலை அந்தக் கேணியில் இருக்கும் தொட்டிகளில்தான் தோய்ந்து குளிப்பது. அப்போது அங்கு கிண்ணியாவைப் போல் ஆறேழு தொட்டிகள் இருக்கும்.அவற்றில் நீர் ஊற்றேடுத்து பெருகி வரும். இயற்கையை ரசித்து கொண்டே நீராடலாம். ஆனால் சுடுதண்ணீர் இல்லை.சுற்றிவர முப்போகமும் விளைந்து கொண்டிருக்கும் வயல்கள். நிலத்தை நிகத்தால் சுரண்டினால் நீர் வரும் பூமி. இப்பொழுது அந்தத் தொட்டிகளைக் காணவில்லை. ஒரே கேணியாக்கி பெரிய மதிலால் மூடிக் கட்டியிருக்கிறார்கள்.அது எனக்கு ரசிக்கவில்லை.

                                                                        20180828-134208.jpg

யாத்திரை தொடரும்........!

சம்பவம் : தெய்வம் எங்காவது பொய் சொல்லுமா, சொன்னதே எனக்காக சொன்னது.... மாலை ஆறு மணியானால் வீட்டில் பித்தளை விளக்கு,ஒரு மேசை லாம்பு, ஒரு அரிக்கன் லாம்பு பளிங்கு போல் துடைத்து மண்ணெண்ணெய் விட்டு திரியெல்லாம் கத்தரித்து விளக்கேற்றுவார்கள்.அந்த நேரம் எனக்கு ராகுகாலம். நான் வீட்டை விட்டு வளவுகளுக்குள் ஓடி விடுவேன்.பெரும்பாலும் பின்னாலே நாலுவீடு தள்ளி இருக்கும் பெரியம்மா(அம்மா,மாமா,குஞ்சம்மா,சின்னம்மா எல்லோருக்கும் அக்கா) அங்கு போய் விடுவேன்.அங்கு எனக்கு அண்ணாவும் அக்காவும் இருக்கினம்.என்ர தெய்வம் அக்கா என்னை அறைக்குள் தள்ளி விடும்.வாசலில் தான் இருந்து கொண்டு தன்னை சுற்றி சீலை சட்டைகள் தைப்பது போன்ற பாவனையில் பரப்பி வைத்திருப்பா.அல்லது கடகத்தில் புளியம்பழம் கொட்டி பரப்பி உடைத்து கொண்டிருப்பா.பிசாசுகள் என்னை எல்லா இடமும் தேடிக்கொண்டிருக்கும். இங்கேயும் வரும்.

உவன் தம்பி உங்க நிக்கிறானோ. யார் சுவியோ அவன் இஞ்ச வந்து எத்தனை நாள். இஞ்ச வரேல்ல. குரங்கு படிக்கிற கள்ளத்தில் எங்கேயோ போய் ஒளிச்சுட்டுது.வரட்டும் காலை முறித்து அடுப்புக்கை வைக்கிறன் என்று விட்டு போய் விடுவினம். பின்பு அக்கா தன்பாட்டில் அங்கிருந்து பாடும்.இந்து லேடிஸ் ஸ்டூடன்ற்.நல்லா படிப்பா.ஒருநாளும் பெரியம்மாவும் அக்காவும் எனக்கு அடித்ததே இல்லை.ஆங்கில பாட்டுக்கள் பாபா பிளாக் சீப், டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார், ரெய்ன் ரெய்ன் கோ எவேஎல்லாம் முற்றத்தில் நின்று நடித்து நடித்து பாடுவா.நானும் கூட சேர்ந்து பாடுவேன். ஜாக் & ஜில் பாடினால் இருவரும் தண்ணியோடு விழுந்து உருளுவார்கள்.நாங்களும்தான், பின்பு ஹா ஹா என்று சிரிப்பு வேற. உச்சிமீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று பாரதியாரை விட ஆவேசத்தில் 45 டிகிரியில் கையை உயர்த்தி பாடினால் விழுந்த வானம் மீண்டும் போய் ஒட்டி கொள்ளும். மற்றும் பாடப்புத்தகங்களில் வரும் கதைகள் பாடல்கள் எல்லாம் நீ படி என்று சொல்லாமலே என் தலைக்குள் ஏற்றி விடும். சிலேட்டு இல்லை கொப்பி பென்சில் இல்லை இதுதான் படிப்பு என்று தெரியாமலே படித்திருக்கிறேன்.

 சில காரணங்களால் மனிசி பிள்ளைகளையும் பார்க்காமல் நான் பிரான்சிக்கு வருகிறேன்.என் எண்ணம் இரண்டு சாவியுடன் இங்கு வேலை செய்யலாம் என்று.ஆனால் இங்கு சட்டதிட்டங்கள் கடுமை. பாஷை தெரியாது.ஆங்கில எழுத்துக்கள் ஆனால் ஆங்கிலமாய் உச்சரிப்பு இல்லை. ஒரு போர்த்துகீஸ்காரனிடம்  வேலை செய்கிறேன்.ஒருத்தர் வந்து நின்று நெடுநேரம் எனது வேலையை பார்த்து கொண்டு நிக்கறார்.கொஞ்ச நேரத்தில் எனக்கு பாஷை தெரியாது என்பதை புரிந்து கொண்டு நீ நல்லா வேலை செய்கிறாய் என்று சைகையாலும் சிறிது ஆங்கிலத்திலும் பாராட்டுகிறார். நானும் ஆங்கிலத்தில் எனது வீரப்பிரதாபங்களை அள்ளி விடுகிறன். சற்று நேரத்தி அவர் தனது கார்டை காட்டி நான் போலீஸ் நாளை காலை ஸ்டேசனுக்க வா என்று எனது கார்டை வாங்கி கொண்டு விலாசம் தந்து விட்டு போய் விட்டார்.அடுத்த நாள் நான் அங்கு சென்றபோது ஒரு மொழிபெயர்பாளருடன் விசாரணை நடந்து இனிமேல் இப்படி செய்யக்கூடாது இந்நாட்டில் இது குற்றம் என்று சொல்லி விடுகிறார்கள்.வெளியே வந்தால் எனக்கு வேலை தந்தவரும் உள்ளே இருந்து வாரார்.
             பின்பு நான் இங்கு "அடாப் "(addap)பில் மூன்றுமாதம் படித்தேன். அங்கு ஒரு வியட்னாம் ஆசிரியர். அவர் படிப்பிக்கும் போது கொப்பியில் எழுத சொல்வதில்லை."எக்ரி தான் லு தெத்" தலையில் எழுது என்று சொல்லுவார். மிகத்  தேவையான வாக்கியங்களை வகுப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் மீன்டும் மீன்டும் கேள்வி கேட்டு பதில் சொல்ல வேண்டும். உதாரணமாக இந்த இடத்துக்கு எப்படி போவது. வழி சொல்லுவது. கடையில் சாமான்கள் வாங்குவது என்று அன்றாடம் புழக்கத்தில் உள்ள வாக்கியங்கள்.பிற்காலத்தில் இந்த படிப்பு எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. வங்கிகளில் கடன் வாங்கவும், எலக்ரிக் கடைகளில் கடனுக்கு சாமான்கள் வாங்குவதற்கும்.

யாழ் இந்துவில் படிக்கும்போது ஏ .எஸ் கனகரட்னம் மாஸ்டர். ஆங்கில வகுப்பு எடுப்பவர்.வேட்டி சட்டையுடன் வருவார்.prefact கார் வைத்திருந்தார்.அவர் அதிகமாக எங்களுக்கு ஆங்கில வகுப்பை விடுதியில் உள்ள சாப்பாட்டு அறையில்தான் நடத்துவார்.அது ஒதுக்கு புறமாக இருப்பதால் யாருடைய இடையூறும் இருக்காது. அங்கு பாடப்புத்தகத்தில் வரும் கதைகளை நாங்கள் புத்தகத்தை பார்த்தே அந்தந்த பாத்திரங்களாக இருந்து நடிக்க வேண்டும்.சிங்கம் முயல் கதையை எல்லோரும் மாறி மாறி பேசி நடிக்க வேண்டும்.ஒருத்தரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.அப்போது ஒரு டேப்ரெக்காடர் இரண்டு பெரிய வீல் மேலே நாடாவுடன் சுற்றி கொண்டிருக்கும்.அதில் ஆங்கிலத்தை எப்படி உச்சரிப்பது, இருவர் எப்படி உரையாடுவது என்று எல்லாம் இருக்கும்.அதை முதல் பத்து நிமிடம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.பின்பு அதே போல் உரையாட வேண்டும். எல்லாம் ஞாபகத்தில் வந்து போகின்றது.....!

                      ஒருநாள் எனக்கும் அத்தானுக்கும்  (மாமாவின் மகன்)  மாமா சம்பல் அடி அடித்து போட்டு (எங்கட குழப்படியும் அப்படியானதுதான், அதை விட குறைவான தண்டனைக்கு சட்டத்தில் இடமில்லை). வெய்யிலில் முழங்காலில் இருத்தி விட்டு நெற்றியில் கல்லும் வைத்து விட்டு அங்கால வேலை செய்து கொண்டு இருக்கிறார்.சூரியனும் கொளுத்துது.வியர்வை ஆறாய் ஓடுது.ஒரு கட்டத்தில் அவர் எழுந்து சந்தியில் இருக்கும் கடைக்கு போகிறார். குஞ்சு குருமன் எல்லாம் படலையில் நிலையெடுத்து நின்று தகவல் குடுக்குதுகள்.அத்தை ஓடி வந்து கல்லை எடுத்து போட்டு தேசிக்காய் தண்ணியை  கெதியாய் குடிக்கத்  தருகிறா.நியூஸ் வருகுது "ஆள் வருது, ஆள் வருது "என்று உடனே நாங்கள் அந்த பொசிசனில் நிலையெடுத்து நிக்கிறம். எல்லோரும் ஆங்காங்கே போய் விட்டனர்.(அப்போது எங்களுக்கு 22/23 வயதிருக்கும்.இப்ப பிள்ளைகளைத் தொட முடியுமா). மாமா வந்து விட்டார். பெரியம்மாவுக்கு தகவல் போய் அவ தம்பியாரை பேசிக் கொண்டு வருகிறா. அவவுக்கு மட்டும்தான் மாமா கப்சிப். மாநாடு நடக்கிறது. இவங்கள் சேர்ந்திருந்தால்தான் பிரச்சினை இவர்களை பிரித்து விடுவது என்ற முடிவு ஏகமனதாக எடுக்கப் படுகிறது.தம்பியை நான் முள்ளியவளைக்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என்று அக்கா சொல்கிறா. அதன் நிமித்தம் அத்தான் அக்காவுடன் முள்ளியவளைக்கு வருகிறேன்....!
 

 • Like 6

Share this post


Link to post
Share on other sites
On 2/20/2019 at 11:15 AM, suvy said:

யாத்திரை .....(14)

                                    IMG-20181018-WA0015.jpg


 

சுவி அண்ணாவின்,   திவ்ய-தேசத்தில்-திருத்தல-தரிசனத்தில்,
யாழ் இந்துக் கல்லூரி வைரவ கோவிலும், அந்த கூர் மதிலும்,  மைதானமும் வந்தது.... மிக மகிழ்ச்சியாக உள்ளது.
இன்னும்... அந்த இனிய நாட்கள், வராதா என்ற ஏக்கமும் வந்தது.

சுவி... அந்த வைரவர் கோவிலுக்கு,  எதிர் பக்கம்  உள்ள  கடையில்... "கீரை வடை"   விற்பார்கள்.
அதன்.. சுவையோ... சுவை. மலிவோ.. மலிவு, வடையோ... பென்னாம்  பெரிசு.  
அந்த நேரம்..  அதன் விலை, 25  சதம்  மட்டுமே....
இப்போதும்... அந்தக் கடை, உள்ளதா? ✒️

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 2/21/2019 at 3:29 PM, ஈழப்பிரியன் said:

பத்மாகபே என்னாச்சு?

ஈழப்பிரியன்..... நீங்கள், பத்மா கடையில்... 
சைக்கிள் கடை மணியன், காசில்....   சாப்பிட்ட  ஆளா நீங்கள்.
அப்படி... என்றால், நெருங்கி வந்து விட்டோம்... மச்சான்.  🤪 😝 🤑  😍
 

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, suvy said:

  கண்ணகை அம்மனுக்கு முன்னால் தினுசு தினுசான எண்ணெய் தீபங்கள் சுடர்விட்டு எரிகின்றன. மூலவர் பூசை முடிந்து தெற்கு வாசலில் பூசை நடக்குது.அர்ச்சகர் அம்பாளுக்கு தீபம் காட்டிவிட்டு யாராவது தேவாரமும் புராணமும் பாடும்படி அழைக்கின்றார்.அவர் மீண்டும் அழைக்க ஒவ்வொருவரும் மற்றவர் முகம்பார்க்க அடியேன் முன்னே வந்து மனமுருகிப் பாடுகின்றேன்.மெய் சிலிர்க்கின்றது.அப்படியே உள்வீதி சுற்றிவந்து வசந்த மண்டபத்தில் பூசை ஒலிபெருக்கியில் சத்தமாய் நடக்கின்றது. பஞ்சபுராணம் பாடும்படி அர்ச்சகர் அழைக்கின்றார்.மற்றவர்கள் பின்னால் நிற்கும் எனக்கு வழி விடுகின்றனர். அவர் ஒலிபெருக்கியில் நின்று பாடும்படி சொல்கின்றார்.என்ன ஒரு பெரும்பேறு. என்னை மறந்து நான் பாடுகின்றேன்.பின்பு மூலவர் சந்நிதியில் அம்பாளின் முன்னால் எம்மை அழைத்து காளாஞ்சி தந்து கௌரவிக்கின்றார்கள்.

இந்த குடுப்பினை எல்லாருக்கும் வராது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

சுவி... அந்த வைரவர் கோவிலுக்கு,  எதிர் பக்கம்  உள்ள  கடையில்... "கீரை வடை"   விற்பார்கள்.
அதன்.. சுவையோ... சுவை. மலிவோ.. மலிவு, வடையோ... பென்னாம்  பெரிசு.  
அந்த நேரம்..  அதன் விலை, 25  சதம்  மட்டுமே....
இப்போதும்... அந்தக் கடை, உள்ளதா? ✒️<span>

சிறி வெள்ளிக்கிழமைகளில் மதியம் கடையில் வாங்கி சாப்பிடும்படி காசு தருவார்கள்.அனேகமாக பத்மாகபேயிலும் மைதான மூலைக்கடையில் கீரைவடையும் மாறிமாறி சாப்பிடுவேன்.கீரைவடை 10 சதத்திற்கு வாங்கியதாகவே ஞாபகம்.ஒரு வடை சாப்பிட்டாலே போதும்.

இந்த வயிரவர் கோவிலில் ஒரு குண்டு ஐயர் இருந்தவர்.அந்த நேரம் அவரை பகிடி பண்ணுவோம்.கோவிலுக்குள் இருந்து தவளை பிடித்து எங்கள் மீது எறிவார்.

Share this post


Link to post
Share on other sites

சுவி அண்ணா, தங்கள் அனுபவப் பகிர்வுகள் எம்மையெல்லாம் தாயகத்துக்கு மீண்டும் கூட்டிச் செல்கின்றன. உங்கள் வாழ்க்கை அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி வெளியிடக்கூடிய ஆற்றலை உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன். வாழ்த்துக்கள்!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, தமிழ் சிறி said:

சுவி அண்ணாவின்,   திவ்ய-தேசத்தில்-திருத்தல-தரிசனத்தில்,
யாழ் இந்துக் கல்லூரி வைரவ கோவிலும், அந்த கூர் மதிலும்,  மைதானமும் வந்தது.... மிக மகிழ்ச்சியாக உள்ளது.
இன்னும்... அந்த இனிய நாட்கள், வராதா என்ற ஏக்கமும் வந்தது.

சுவி... அந்த வைரவர் கோவிலுக்கு,  எதிர் பக்கம்  உள்ள  கடையில்... "கீரை வடை"   விற்பார்கள்.
அதன்.. சுவையோ... சுவை. மலிவோ.. மலிவு, வடையோ... பென்னாம்  பெரிசு.  
அந்த நேரம்..  அதன் விலை, 25  சதம்  மட்டுமே....
இப்போதும்... அந்தக் கடை, உள்ளதா? ✒️

                 20180816-172129.jpg

இதுதான் வயிரவர் கோவில். அது ஒரு அம்மன் கோவில்.முன்பு அது எமது உறவினரின் வீட்டுக்குள் இருந்தது. பின்பு அந்த காணி பள்ளிக்கூடத்துக்கு கொடுத்ததும் அவர்கள் கோவிலை அப்படியே விட்டு விட்டார்கள். நான் படிக்கும்போதும் கீரைவடை  பத்துசதம்தான்.பக்கத்தில் முருகன் பேக்கரி இருந்தது. அதில் சீனி ஒழுக ஒழுக  பனிஸ் ஐந்து சதத்துக்கும் , பூ பிஸ்கட் மேலே பூவாய் ஐசிங் செய்தது ஐந்து சதத்துக்கு கை நிறைய அள்ளித் தருவினம்.  ரோஸ்பான் அரை றாத்தல் கால் றாத்தல் என்று இருக்கும்.நல்ல ருசி.அந்தக் குண்டு ஐயர் இப்பொழுது இல்லை.(நீங்கள் சொல்லத்தான் ஞாபகம் வருது இன்னொரு ஐயரின் சம்பவம் ஒன்று). மில்லிய ஐயர் ஒருவர் பூசை பண்ணுகிறார். அவரையும் காத்திருந்து சந்தித்து விட்டு வந்தேன்.  😁

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

யாத்திரை ....(18).
                 
                   20180828-134859.jpg

                       பிள்ளையாரையும் நன்றாகத் தரிசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு புளியங்குளம் வீதியூடாக வவுனியா வந்து  கொழும்பு நோக்கி செல்கின்றோம். அங்கு வவுனியா பன்சாலையை (விகாரை) கடந்து போகும்போது அன்று அங்கிருந்த தேக்கங்காடும், பின்னால் இருந்த பெரிய கருங்கல்லுக்குழியும் (எந்நேரமும் நீர் நிறைந்திருக்கும். புதிதாய் யாராவது அந்த நீரில் புழங்கினால் சலக்கடுப்பு இலவசம்).அதைச் சுற்றி வாழ்ந்த மக்களும் நினைவில் வந்து போகின்றார்கள்.
கொழும்பில் சகோதரியின் வீட்டில் தங்கி சிரமபரிகாரம் செய்து இரவு உணவையும் முடித்துக் கொண்டு நள்ளிரவில் விமானநிலையம் வந்து மீண்டும் கட்டார் விமானத்தில் பயணம் செய்து பாரிஸ் வருகின்றோம்.விமானத்தில் விஷாலின் " துப்பறிவாளன்" மற்றும் அமிதாப் நடித்த இன்னொரு படமும் பார்த்தேன். விமானத்தை விட்டிறங்கி வெளியே வர எனது மகளும் பேரனும் வந்திருந்து வரவேற்கிறார்கள்....!

                பாரிஸில் எனது பெறாமகளின் திருமணம்.அதற்காக அவசரமாய் வரவேண்டி இருந்தது. அது முடிந்து அடுத்தடுத்த நாள் மீண்டும் விமானத்தில் பெர்லின் நகருக்கு பயணமாகின்றோம்.ஜன்னலால் கீழே பார்க்கின்றேன்.
                                                  " தலையின் மேல் நின்று கூத்தாடும் மேகங்கள் 
                                                              காலின் கீழ் நகரும் விமானத்தில் 
                                                                                பறக்கும்போது "
கவிதையாய் மனசு பறக்கின்றது.அங்கு எனது மச்சாளின் வீடுகுடிபூரல். அதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. அங்கு நாங்களும் மச்சாள் சகலன் எல்லோருமாய் பெர்லின் முருகன் கோவிலுக்கு செல்கின்றோம். அங்கும் ஒரு ஆச்சரியம் காத்திருக்கு எனக்கு. வசந்த மண்டபத்தில் பூசை நடக்கின்றது. அன்று கோவில் திருவிழா நடந்து கொடி இறக்கும் நாள். அந்த கோவிலிலும் நல்லூர் திருவிழாக்களின் வரிசைப்படிதான் திருவிழா நடப்பது வழக்கம். ஐயரும் பஞ்சபுராணம் படிக்க அழைப்பு விடுகின்றார். அடியேனும் சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்த பக்தர்களிடம் நான் பாடவா என்று கேட்கிறேன்.அவர்களும் பெரிய மனதுடன் எனக்கு வழிவிட ஒலிபெருக்கியில் மெய்சிலிர்க்க கண்களில் நீர் வடிய பாடுகின்றேன் . பின்பு சுவாமி எழுந்து வந்து பார்த்திருக்க கொடி இறக்கம் நடைபெறுகின்றது. கொடியேற்றம் பார்ப்பவர்கள் கொடி இறக்குவதும் பார்ப்பது சிறப்பு. எங்களுக்கும் நல்லூர் முருகனின் கொடியேற்றமும் பெர்லின் முருகனின் கொடியிறக்கமும் தரிசிக்கும் பெரும்பேறு கிட்டியது முன் செய் புண்ணியம்.

                         வான்முகில் வழாது பெய்க மலிவலஞ் சுரக்க மன்னன் 
                                கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க 
                         நான்மறை அறங்கள் ஒங்க நற்றவம் வேள்வி மல்க 
                                  மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்......!

                                   இதுவரை என்னுடன் சேர்ந்து எங்களுடைய திவ்ய தேசத்தின் சில திருத்தலங்களை தரிசித்து வந்த அனைத்து உறவுகளையும் நன்றியுடன் என்றும் நினைத்திருப்பேன்.எங்காவது பிழைகள் இருந்தால் தயவுடன் பொறுத்தருள வேண்டும். கோயில் யாத்திரை சிலருக்கு சில சமயம் சலிப்பு தட்டலாம் என நினைத்ததால்தான் என் வாழ்வின் ஒரு சில சம்பவங்களை உங்களுடன் சேர்ந்து நானும் நினைவு கூர்ந்தேன்.அவற்றையும் நீங்கள் ரசித்து படித்தும் ஊக்கமும் தந்திருக்கின்றிர்கள். உங்களுக்கும் எல்லா நலன்களும் கிட்டட்டும். நன்றி....

                                                                    20180828-093508.jpg     

                                                                                                                  Image associée

சம்பவம் : முல்லைத்தீவில் அத்தான் ஒரு கந்தோரில் வேலை செய்கிறார்.அவர் அந்த சுற்றுவட்டாரம் முழுதும் பிரசித்தமானவர்.அவர் அங்கு என்னை ஒரு கராஜில் சேர்த்து விட்டார். அப்போது அந்த ஒரு கராஜ்தான் அங்கிருந்தது. காலையில் அவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது மாலையில் பேரூந்தில் வீட்டுக்கு வருவது.(5 கி.மி.இருக்கும்).அங்கு ட்ரக்டர் வேலைகள் ஈஸியாக இருந்தது.பக்கத்தில் ஒரு தியேட்டர்.மாலை ஆறு மணியானால் ஊரெல்லாம் கேட்கும்படி  "நிலவோ அவள் இருளோ " என்னும் பாடல் ஒலிக்கும்.தினமும் இதே பாடல்தான். கையை கழுவிட்டு கிளம்பிடுவேன். ஒருநாள் பஸ் இல்லை. அங்கிருந்து நடந்து வீட்டுக்கு வருகின்றேன்.அதுவும் ஒவ்வொரு அடியையும் எண்ணிக்கொண்டு.அதுக்கு பதிலா "ராமா ராமா" என்று சொல்லியிருந்தாலும் ராமன் தரிசனம் தந்திருப்பான்.

                 அங்கு தினமும் மாலையில் நாலைந்து உத்தியோகத்தர்கள் எங்கள் வீட்டில் கூடுவார்கள். எல்லோரும் காட்ஸ் விளையாடுவார்கள். நான் அங்கு 304 நன்றாகவும், பிரிட்ஜ் சுமாராகவும் விளையாட கற்றுக்கொண்டேன். பின்னாளில் நான் திருமணமாகி நல்லூரில் இருக்கும் பொழுது இந்தியன் ஆர்மி அடிக்கடி ஊரடங்கு சட்டமும்,ஆறுமணி ஊரடங்கு சட்டமும் போடுவார்கள்.அப்போது அங்கு எனக்கு பொழுது போகவில்லை.நிறைய மச்சாள்மார். எல்லோருக்கும் 304 விளையாட பழக்கி விட்டேன்.அவர்களும் சில நாளிலேயே சிறப்பாக கற்று கொண்டார்கள்.அவர்களில் சிலர் பிரான்ஸ் வந்திருந்தனர்.எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தோம். அப்போதும் காட்ஸ் விளையாட கை குறையும் பொது கை கொடுத்து உதவினார்கள். ஏதோ என்னால் முடிந்த உதவி.

                       பின்பு தண்ணீரூற்றில் இருக்கும் அத்தானின் நண்பர் தனது கராஜில் வேலை செய்ய என்னை தரும்படி அத்தானிடம் கேட்க அவரும் முல்லைத்தீவு முதலாளியிடம் சொல்லி விட்டு தண்ணீரூற்றில் வேலை செய்தேன். அது வீட்டுக்கு பக்கத்தில் சைக்கிளில் போய் வந்தேன்.தினமும் அந்த கோயில் தொட்டிகளில்தான் தோய்ந்து குளிக்கிறது. எமது விட்டு கிணறு சுமார் நாற்பது முழ ஆழம். ஒரு வாளி தண்ணி ஊற்றிவிட்டு அடுத்தது அள்ளுவதற்கிடையில் மேல் காய்ந்து விடும்.

                        ஒருநாள் இரவு எனது நண்பன் என்னை தேடி கொண்டு ஓடி வாரான். டே சுவி அந்த ஐயர் நான் காரில் வரும்போது தடுமாறி கார்மேல் விழுந்திட்டார்.நான் பயத்தில் என்று ஓடி வந்திட்டேன் என்று சொன்னான். நீ வீட்டுக்குள் இரு நான் பார்த்துட்டு வாறன் என்று அங்கு போனேன்.அவர் மிகவும் வயதானவர். சாந்தியை கண்டால் சைக்கிளில் இருந்து இறங்கி வளைவு தாண்டி சென்று பின் ஏறி ஓட்டுபவர்.சந்தியில் அப்படி இறங்கும் போதுதான் தடுமாறி காரின் மேல் விழுந்துடார். சிலர் அங்கு  நிக்கினம். நான் அவரை கூட்டிக் கொண்டு அவரது சைக்கிளை பக்கத்தில் ஒரு வீட்டில் விட்டுவிட்டு ஆஸ்பத்திரி ஓடலி ஒருவர் அங்கிருந்தவர்.அவரிடம் கூட்டிச்சென்று சில சிராப்புகள்தான், மருந்து போட்டு விட்டு வீட்டில் விட்டு விட்டு வந்தேன்.அடுத்த நாள் நண்பனுடன் சைக்கிளையும் எடுத்து சென்று குடுத்து  கதைத்து விட்டு வந்தோம். அதன் பின் அந்த ஐயர் சைக்கிள் ஓடுவதே இல்லை.......!

யாழ் இணையம் அகவை 21 

ஆக்கம் சுவி......! 

 • Like 13

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்..... நீங்கள், பத்மா கடையில்... 
சைக்கிள் கடை மணியன், காசில்....   சாப்பிட்ட  ஆளா நீங்கள்.
அப்படி... என்றால், நெருங்கி வந்து விட்டோம்... மச்சான்.  🤪 😝 🤑  😍
 

சிறி நீங்கள் எனக்கு பிறகு தான் படித்திருக்கலாம்.

இந்துவைச் சுற்றி இருந்தவர்களில் என்னோடு படித்தவர்கள் ஜெகா தாயாபரன் லோகேந்திரன் கப்பல் பாலா பாபு கோடீசின் தம்பி கிரி.இவர்களெல்லாம் சுவியின் அயலவர்கள்.

நீங்கள் சைக்கிள்கடை எனும்போது ஒரு பழைய சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.
அதையே இந்த வருட யாழுக்கான அகவை21 ஆக எழுதலாம் என்றிருக்கிறேன்.6ம் திகதி சன்பிரான்ஸ்சிஸ்கோ போகிறேன் அதன் பின் ஒரு மாதம் யாழ் தான் தஞ்சம்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 2/20/2019 at 3:45 PM, suvy said:

கொஞ்சம் புரிந்தாலும் அவரின் அறிமுகத்துக்காக காத்திருந்தேன்.அவர் எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். நிஜமாகவே ஆச்சரியமான விடயம்."முனி" என்றும் "தனி" என்றும் யாழில் பெயர்கொண்ட கனிவான அந்த இளைஞர் பெயருக்கு ஏற்றாற் போல் ராஜாவாகவே இருந்தார். வீட்டில் இருந்து கதைத்து கொண்டிருந்தோம். வெய்யில் நேரமாய் இருந்ததால் ஜூஸ் ட்ரேயில் வந்தது.மூவரும் எடுத்து குடித்துக் கொண்டே கதைத்தோம்.(இப்படி விருந்தினர் வரும் போதுதான் எனக்கும் ட்ரேயில் உபசரிப்பு நடக்கும்).


              பின்பு வெளியே நடந்து இந்து மைதானத்துக்குள்ளால் சென்று பள்ளிக்கூடத்தையும் பார்த்து கதைத்து கொண்டே  கே .கே . எஸ் வீதிக்கு வந்தோம். அருகே நீலாம்பரி ஹோட்டலுக்கு போகலாம் என்று ஜீவன் அழைத்துச் சென்றார். அங்கு வேலை செய்ப்பவர்கள் எல்லோருக்கும் ஜீவனை நன்றாக தெரிந்திருக்கின்றது. அங்கு வடையும் பால் தேநீரும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தோம். மீண்டும் நாளை கண்டிப்பாக சந்திக்கலாம் என்று கூறி பிரிந்து சென்றோம். நானும் அடுத்தநாள் அவர்களுக்கு ஒரு நினைவுப்பரிசு கொடுக்கவேண்டும் என்று தயார் நிலையில் இருந்தேன்.ஆனால் பின்பு அவர்களை சந்திக்க முடியவில்லை. தனி  அவசரமாக ஊருக்கு போய் விட்டதாக ஜீவன் தகவல்  சொன்னார்.

கொஞ்ச வேலைக்கான அழைப்புக்கள் வர ஊர் செல்ல நேர்ந்தது மீண்டும் ஓர் நாள் சந்திக்கலாம் அண்ண நன்றி நினைவு கூர்ந்தமைக்கு :)

Share this post


Link to post
Share on other sites

.

நீங்கள் கூறிய மூன்று கோவில்களுக்கு நானும் போய்யிருந்தேன்
நாவற்குழி திருவாசக மடம்,வற்றாப்பளை அம்மன் கோவில்,மற்றும் தண்ணீருற்று பிள்ளையார் கோவில்....அந்த கோவில் ஐயர் கடந்த வருடம்   ஒரு மோட்டர்  சைக்கிள் விபத்தில் இறந்து விட்டார்.

தண்ணீருற்று எனது மனைவியின் த‌ந்தையின் ஊர். திருமணம் முடிக்கமுதல் அந்த பக்கம் சென்றதில்லை.  திருமணத்தின் பின்பு பலதடவை சென்று வ‌ந்திட்டேன்..

On 2/23/2019 at 9:38 PM, suvy said:

தண்ணீரூற்றில்

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 2/6/2019 at 4:42 PM, மியாவ் said:

அசாதரமான நிகழ்வு...

சாதரணமாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் ஐயா... 

தாங்கள் கோயிலுக்குள் சென்ற உடன் பரவச நிலை பெற்றதாக பதிந்திருந்தீர்கள்... 

சிறு வயதிலிருந்தே கோவிலுக்கு சென்றால் ஒரு உணர்வும் ஏற்பட்டதில்லை, சிவன் கோவிலை தவிற...

சிவன் கோவிலினுள் அமைதி நிலையை அடையும் என் மனதானது... பதிமூன்று வயதிலிருந்து இதை உணர துவங்கினேன்... கோவில் என்றாலே சிதறி ஓடுபவன் , இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் திருவேற்காட்டில் கட்டபட்டுள்ள சிவன் கோவிலுக்கு சில முறை தன்னிச்சையாக சிில முறை சென்று வந்தாகி விட்டது...

--தங்களின் பயண அனுபவத்தை தொடருங்கள் ஐயா...

இதில் முக்கியமான ஒரு விடயம், ஒரு தாய் ஒருத்தர் தனது பிள்ளைகளை படகின் கரையில் இருந்து வைத்துக்கொண்டு இருந்திருக்கிறார்.குளிரும் தெறிக்கும் கடல் நீருமாக கைகள் எல்லாம் விறைத்திருந்திருக்கின்றது. பிள்ளையொன்று நீருக்குள் தவறி விட்டது. இருட்டில் யாருக்கும் தெரியவில்லை. கரையில் வந்த பின்தான் அதை தெரிந்து கொண்டனர்......!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மியாவ்.....!  😁

Share this post


Link to post
Share on other sites

அனுபவ பதிவு நல்லாயிருக்கு, சுவி..! 

பகிர்விற்கு மிக்க நன்றி..!!  sermain.gif

சில நேரம் அலுவலக கணனியில் யாழ்க் களம் தெரியும்..படிப்பதுண்டு.

நீங்கள் சொல்லிய இந்து பள்ளி (இதுக்கு பேரு கல்லூரியா..? - நாங்கள் அதை 'பள்ளிக்கூடம்' என்றுதான் சொல்வது ! ) அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் ஒரு உலா வந்தேன்.. 

 • மைதானதுக்கு அப்பால ரோட்ல கார் 'ஏசி' பொருத்தும் காரஜ் ஒன்னு கீதுபா..
 • இந்தண்டை சந்தியில, ரெண்டு மளிகை கடையும், கணனி திருத்துற கடைகூட  கீது..
 • ரோட்டுக்கு இப்பால  வூடுக அல்லாம் கொஞ்சம் கேரளா ஸ்டைலு..

ஊரு சூப்பரா கீது.. vil-heureux.gif

மத்தபடி ஆளுக..? vil-cligne.gif

Share this post


Link to post
Share on other sites
On 2/22/2019 at 9:23 AM, suvy said:

ஒருநாள் எனக்கும் அத்தானுக்கும்  (மாமாவின் மகன்)  மாமா சம்பல் அடி அடித்து போட்டு (எங்கட குழப்படியும் அப்படியானதுதான், அதை விட குறைவான தண்டனைக்கு சட்டத்தில் இடமில்லை). வெய்யிலில் முழங்காலில் இருத்தி விட்டு நெற்றியில் கல்லும் வைத்து விட்டு அங்கால வேலை செய்து கொண்டு இருக்கிறார்.சூரியனும் கொளுத்துது.வியர்வை ஆறாய் ஓடுது.ஒரு கட்டத்தில் அவர் எழுந்து சந்தியில் இருக்கும் கடைக்கு போகிறார். குஞ்சு குருமன் எல்லாம் படலையில் நிலையெடுத்து நின்று தகவல் குடுக்குதுகள்.அத்தை ஓடி வந்து கல்லை எடுத்து போட்டு தேசிக்காய் தண்ணியை  கெதியாய் குடிக்கத்  தருகிறா.நியூஸ் வருகுது "ஆள் வருது, ஆள் வருது "என்று உடனே நாங்கள் அந்த பொசிசனில் நிலையெடுத்து நிக்கிறம். எல்லோரும் ஆங்காங்கே போய் விட்டனர்.(அப்போது எங்களுக்கு 22/23 வயதிருக்கும்.இப்ப பிள்ளைகளைத் தொட முடியுமா). மாமா வந்து விட்டார். பெரியம்மாவுக்கு தகவல் போய் அவ தம்பியாரை பேசிக் கொண்டு வருகிறா. அவவுக்கு மட்டும்தான் மாமா கப்சிப். மாநாடு நடக்கிறது. இவங்கள் சேர்ந்திருந்தால்தான் பிரச்சினை இவர்களை பிரித்து விடுவது என்ற முடிவு ஏகமனதாக எடுக்கப் படுகிறது.தம்பியை நான் முள்ளியவளைக்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என்று அக்கா சொல்கிறா. அதன் நிமித்தம் அத்தான் அக்காவுடன் முள்ளியவளைக்கு வருகிறேன்....!

சுவி நான் திருமணமாகி மகன் பிறந்த பின்பும் எனது தகப்பனார் ஒருநாள் தடியோடு வந்து ஏதோ சிந்தனையில் கலியாணமும் கட்டி பிள்ளையும் பொத்துப் போட்டாய் இல்லையென்றால் தோல் உரியும் என்று எச்சரித்துவிட்டு சென்றார்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 2/23/2019 at 9:38 PM, suvy said:

 

இதுவரை என்னுடன் சேர்ந்து எங்களுடைய திவ்ய தேசத்தின் சில திருத்தலங்களை தரிசித்து வந்த அனைத்து உறவுகளையும் நன்றியுடன் என்றும் நினைத்திருப்பேன்.எங்காவது பிழைகள் இருந்தால் தயவுடன் பொறுத்தருள வேண்டும். கோயில் யாத்திரை சிலருக்கு சில சமயம் சலிப்பு தட்டலாம் என நினைத்ததால்தான் என் வாழ்வின் ஒரு சில சம்பவங்களை உங்களுடன் சேர்ந்து நானும் நினைவு கூர்ந்தேன்.அவற்றையும் நீங்கள் ரசித்து படித்தும் ஊக்கமும் தந்திருக்கின்றிர்கள். உங்களுக்கும் எல்லா நலன்களும் கிட்டட்டும். நன்றி....

                                                             யாழ் இணையம் அகவை 21 

ஆக்கம் சுவி......! 

சுவி அண்ணா, தெய்வீக அனுபவமும், பயண அனுபவமும் மிகச் சிறப்பான முறையில் தொகுக்கப்பட்ட உங்கள் பயணத்தொடரை வாசித்தமை இனிய அனுபவமாக இருந்தது. 

இங்கு பகுதிகளாகப் பகிரப்பட்டவையை ஒன்று சேர்த்து PDF வடிவில் இங்கு பகிர்ந்து கொண்டால் மீள் வாாசிப்புக்கு இலகுவாக இருக்கும். யாழில் அந்த வசதி இருக்குமோ தெரியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

வாசிக்க நன்றாக இருக்கிறது அண்ணா. நானும் இப்போதான் போய்வந்தாலும் உங்கள் எழுத்து புதிதாகக் கேட்பது போல் இருக்கண்ணா.

Share this post


Link to post
Share on other sites
On 2/12/2019 at 5:13 PM, Justin said:

அருமையான தரிசனங்களுக்கு நன்றி சுவியர்! நானும் யோகேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் யோகா பயின்றேன், அது நல்லை ஆதீனத்திற்கு அருகில் இருக்கும் மண்டபம் என நினைக்கிறேன், சரியா? 

நல்லூர் திருவிழா வரும் அதே காலத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது ஆசனக் கோவில் (தலைமைக் கோவில்) எனப் படும் அடைக்கலமாதா ஆலய திருவிழாவும் வரும். அதனால் எல்லா நாட்களும் நல்லூர் போகக் கிடைக்காது. ஆனாலும், நல்லூரின் சப்பறத்திருவிழாவுக்கும், தேருக்கும் வீட்டில் மச்சம் புளங்காமல் குடும்பமாகப் போய்வருவோம். மதஸ்தானம் என்பதைத் தாண்டி நல்லூர் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய அடையாளம், எங்கள் எல்லாருக்கும் பொதுவானது! 

அப்பொழுது யோகேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வகுப்புகள் தொடங்கவில்லை ஜஸ்ட்டின்.....!

அடைக்கலமாதா கோவிலுக்கு அண்மையில் ஒரு கடையும் வைத்திருந்தேன். அதனால் அந்த கோவிலுக்கும் அடிக்கடி செல்வதுண்டு.அன்று சின்னக்கடையடியில் ஒரு பல் வைத்தியர் இருந்தவர்.ஒருமுறை எனக்கு கொடுப்பு பல்லில் வலியெடுக்க அதை சீர்செய்து ஈயத்தால் அடைத்து விட்டவர்.அது நான் லிபியா சென்று பின்பு பிரான்ஸ் வந்தபின்பும் கனகாலம் நன்றாக இருந்தது.ஒரு நாலைந்து வருடத்துக்கு முன்தான் அது கழன்று  விடட்து. அதன்பின் இங்கு ஐந்தாறு தரம் அடைத்து விட்டேன். அதிநவீன உபகரணங்களுடன் செய்கிறார்கள். ஆனால் ஒரு வருடம்கூட நிக்குதில்லை. இப்பொழுது நான் அதை அப்படியே விட்டு விட்டேன். ஞாபகம் வந்தது அதுதான் எழுதினேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜஸ்ட்டின்.....!  😄

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this