யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

கொலை அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் – லண்டன் நீதிமன்றிக்கு வெளியே தமிழர்கள் போராட்டம்!

Recommended Posts

கொலை அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் – லண்டன் நீதிமன்றிக்கு வெளியே தமிழர்கள் போராட்டம்!

porotest.jpg

கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போதே நீதிமன்றத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் அரசியல் குறுக்கீடு மற்றும் அழுத்தம் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றம் திரும்பப் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

 

http://athavannews.com/கொலை-அச்சுறுத்தல்-விடுத-2/

 

 

பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Priyanga-720x450.png

கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது, பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அலுவலகங்களுக்கான சட்டத்தரணிகள் இந்த விடயத்தில் நடுநிலையை பேணுவதாக நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கிற்காக, பெர்னான்டோவின் சட்டத்தரணிகள் கடந்த புதன்கிழமையே நியமிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கிற்கு தயாராகுவதற்கு நேரம் வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சு உரிமைகோர மறுக்கின்றமையும் தம்முடைய பணி விவரங்களில் உள்ளடக்கப்படாத விடயங்கள் குறித்துக் காணப்படும் ராஜதந்திரிகளுக்கு உரியதான சிறப்புரிமையும் இதில் முக்கியத்துவம் பெறுகின்றது.

 

http://athavannews.com/பிரியங்க-பெர்ணான்டோவுக்/

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு