Jump to content

காலையில் திருமணம் .. ! உணவு விருந்தில் சண்டை .. ! இரவு விவாகரத்து பெற்ற புதுமண தம்பதிகள் ..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் திருமணம்.. உணவு விருந்தில் சண்டை.. பர்ஸ்ட் நைட் நடக்காமலே விவாகரத்து பெற்ற புதுமண தம்பதிகள்..!

wedding3454-600-1548948205.jpg

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு உணவருந்த தம்பதிக்குள் ஏதோ ஒரு பிரச்சினைக்காக சண்டை நடந்ததால் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.வீட்டை கட்டி பார்.. கல்யாணத்தை நடத்தி பார் என்பது பழமொழி.. இதை பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பார்கள். அத்தகைய திருமணத்தில் யாருக்கும் எவ்வித மனக்கசப்பும் ஏற்படாத அளவுக்கு பார்த்து கொள்வதில் இரு வீட்டாரும் கவனமாக இருப்பர்.

அந்த வகையில் அவரவர் பழக்கத்திற்கேற்ப சடங்குகளை பார்த்து பார்த்து செய்வர். அப்படியும் ஒரு சில திருமணங்களில் சிறு சிறு பிரச்சினைகள் எழத்தான் செய்கிறது. ஆனால் அவை வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் பனிபோல் விலகிவிடும்.

கல்யாண மண்டபம்

ஆனால் குஜராத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல் அந்த திருமணத்திலும் சண்டை வந்தது. அப்போது என்ன நடந்தது என்பது தெரியுமா. திருமணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு, விருந்து என கல்யாண மண்டபமே அமர்க்களப்பட்டது.

உணவுக் கூடம்

இதையடுத்து காலை முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து உறவினர்களின் பரிசு பொருட்களை பெறுவதும், போட்டோ எடுப்பதுமாக தம்பதி படு பிஸியாக இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து உணவு அருந்த உணவுக் கூடத்துக்கு சென்றனர்.

உறவினர்களுக்குள் சண்டை

அப்போது நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவரிடையே திடீரென உணவு விஷயத்தில் ஏதோ சண்டை ஏற்பட்டது. பின்னர் சரியாகிவிடும் என பார்த்தால் சண்டை முற்றியது. உடனே இரு வீட்டாரும் வந்து சமாதான்ம செய்வர் என நீங்கள் நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பில்லை. இரு வீட்டாரும் சேர்ந்து உணவுக் கூடத்தில் கட்டி புரண்டு சண்டையிட்டனர்.

விவகாரத்து

பின்னர் பரிமாறப்பட்ட உணவுகளை ஒருவர் மீது ஒருவர் வீசினர். தட்டுகளும் பறந்தன. போலீஸார் வந்து பிரச்சினை தீர்ந்தபாடில்லை. பின்னர் புதுமணத் தம்பதி தங்களது வழக்கறிஞர்களை திருமண மண்டபத்துக்கு வரவழைத்தனர். அங்கேயே அப்பவே விவாகரத்து பெற்றுவிட்டு சென்றனர். கடைசி வரை அவர்களுக்குள் என்ன சண்டை நடந்தது என்றே தெரியவில்லை.

https://tamil.oneindia.com/news/india/ahmedabad-couple-get-divorced-after-fighting-lunch-340149.html

டிஸ்கி :

மணமகன் : எனக்கு இனிப்பு பிடிக்கும் .. !

மணமகள்: அப்புடியா எனக்கு காரம் ரொம்ப பிடிக்கும் ..!

அப்ப சரி .. நம்ம ரெண்டு பேருக்குள்ள தீர்க்கமுடியாத கருத்து வேறுபாடு வந்துருச்சு .. 😝

          --  விவாகரத்து --

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

காலையில் திருமணம்.. உணவு விருந்தில் சண்டை.. பர்ஸ்ட் நைட் நடக்காமலே விவாகரத்து பெற்ற புதுமண தம்பதிகள்..!

 

டிஸ்கி :

மணமகன் : எனக்கு இனிப்பு பிடிக்கும் .. !

மணமகள்: அப்புடியா எனக்கு காரம் ரொம்ப பிடிக்கும் ..!

அப்ப சரி .. நம்ம ரெண்டு பேருக்குள்ள தீர்க்கமுடியாத கருத்து வேறுபாடு வந்துருச்சு .. 😝

          --  விவாகரத்து --

தேன்நிலவு ... அதாங்க... முதலிரவு  நடக்காமலே...  தம்பதிகள் பிரிந்ததால், இரு பக்கமும்  சேதாரம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதைத்தான் "தந்தையுமானவன்" கதையில் முன்பே எழுதியிருந்தேன். அதற்காக என்னை எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்று யாரும் பாராட்ட வேண்டாம்.......!  😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தேன்நிலவு ... அதாங்க... முதலிரவு  நடக்காமலே...  தம்பதிகள் பிரிந்ததால், இரு பக்கமும்  சேதாரம் இல்லை.

இப்பவெல்லாம் முதலிரவு தேனிலவு எண்ட அந்த மாதிரியான சம்பவங்களை சேதாரமாய் எடுக்கிறதில்லை. :cool:

சேர்ந்திருந்து தேத்தண்ணி குடிச்சம் கோப்பி குடிச்சம் எண்ட பட்டியல்லை வரும்.😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் முதலிரவு தேனிலவு எண்ட அந்த மாதிரியான சம்பவங்களை சேதாரமாய் எடுக்கிறதில்லை. :cool:

சேர்ந்திருந்து தேத்தண்ணி குடிச்சம் கோப்பி குடிச்சம் எண்ட பட்டியல்லை வரும்.😅

அதுவும் சரிதான் அவனவன் (ள்) கல்யாணம் கட்டாமலே குடித்தனம் நடத்தி விட்டு செல்கிறான் (ள்) தெரியுமே:grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தொழில் நுட்ப வசதி ...வேகமான காதல்  அவசர திருமணம் .. சகிப்பு  பொறுமை அற்ற தால்  விவாக  ரத்து

 இனி  வருங்காலம்  இப்படியாக தான் இருக்க போகிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.