யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Recommended Posts

மனிதர் ஒவ்வொருவருக்கும்  ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.


சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. 
மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.

இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை? ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான். 

இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️

 • Like 15
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites
On 2/2/2019 at 11:43 AM, மல்லிகை வாசம் said:

மனிதர் ஒவ்வொருவருக்கும்  ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.


சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. 
மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.

இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை? ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான். 

இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️

காலத்திற்கேற்ற பதிவிற்கு நன்றி! எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப் படும் போது நமக்கும் சுற்றியிருப்போருக்கும் நன்மை தருவன அல்ல என்று உலகில் நடக்கும் சம்பவங்களே சாட்சி சொல்கின்றன. தேசியவாதிகளால் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எதையும் இன்று சுட்டிக் காட்ட முடியவில்லை! 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

16 minutes ago, Justin said:

காலத்திற்கேற்ற பதிவிற்கு நன்றி! எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப் படும் போது நமக்கும் சுற்றியிருப்போருக்கும் நன்மை தருவன அல்ல என்று உலகில் நடக்கும் சம்பவங்களே சாட்சி சொல்கின்றன. தேசியவாதிகளால் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எதையும் இன்று சுட்டிக் காட்ட முடியவில்லை! 

இங்கேயுமா  ராசா...??

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, விசுகு said:

 

இங்கேயுமா  ராசா...??

விசுகர், தேசியவாதிகள் என்று நான் எழுதிய போது நினைத்தது ட்ரம்ப், விக்ரர் ஊர்பான், நைஜல் fபராஜ், மோடி போன்ற பேர்வழிகளை. வேறெந்த அர்த்தமும் இல்லை. அடையாளங்களில் அதிகம் ஆபத்தான அடையாளம் என்று தீவிர தேசிய அடையாளங்களை நான் கருதுவதால் அப்படிக் குறிப்பிட்டேன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Justin said:

காலத்திற்கேற்ற பதிவிற்கு நன்றி! எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப் படும் போது நமக்கும் சுற்றியிருப்போருக்கும் நன்மை தருவன அல்ல என்று உலகில் நடக்கும் சம்பவங்களே சாட்சி சொல்கின்றன. தேசியவாதிகளால் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எதையும் இன்று சுட்டிக் காட்ட முடியவில்லை! 

உண்மை தான் ஜஸ்ரின். காலணித்துவ காலத்திலோ அல்லது அடக்குமுறை அதிகமாக இருக்கும் வேளைகளில் ஒரு தனிநபரோ, குழுவோ தம் அடையாளத்தை உணர்ந்து அதைப் பேணுவதற்கான வழிகளை முன்னெடுத்தல் தவறில்லை. இங்கே அவர்களின் அடையாளம் பல்வேறு காரணிகளால் வரையறுக்கப்படுகிறது (மொழி, மதம் என்பவை மிக மிக குறுகிய உதாரணங்கள் மட்டுமே). பல்வேறு காரணிகள் கூட்டாகச் சேர்ந்தும் ஒரு அடையாளத்தைக் கொடுக்க முடியும்.

எனினும் நீங்கள் சொல்வது போல 'எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப்படும் போது' ஆரோக்கியமற்ற ஓர் சூழல் உருவாகிறது. ஏனெனில் ஓர் குழுவானது தாம் சாராத ஏனைய குழுக்களின் அடையாளங்ககளப் புரிந்து மதிக்காத போது அங்கே முரண்பாடுகள் தோன்றுகின்றன. 

இன்று நாமெல்லாம் பரந்து வாழும் பல்லின நாடுகளில் ஓர் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது அமைதியான வாழ்க்கை வாழ முடிகிறது என்றால் ஒரு சில அடையாளங்களாவது பரஸ்பரம் மதிக்கப்படுவதனால் தான். மீண்டும், இந்த அளவீடு இடத்துக்கு இடம் மாறுபடலாம். தனிமனிதரையோ, குழுவையோ பொறுத்தும் இது பற்றிய அனுபவம் மாறுபடும்.

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி ஜஸ்ரின். 😊 இவ்வாறான கருத்துக்கள் தான் தலைப்பை மேலும் சுவாரசியமாக்கும்! 😊

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படிப்பட்டவராக இருந்தாலும் இறந்த பின் தான் புகழுவார்கள்.

ஈழப் பிரியன் அண்ணை, புகழ் என்பது மற்றவர்கள் உங்களுக்குத் தரும் அடையாளமல்லோ? அது இருக்கும் போது வந்தால் என்ன போனால் பிறகு வந்தால் என்ன?

Share this post


Link to post
Share on other sites

அன்பையும், பன்பையும் அடையாளமாக்கி மணம் வீச செய்த மல்லிகையின் வாசம் வாசல் வரை கமகமக்கிறது.....!  😁

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

நல்ல ஒரு சிந்தனை...!

நான் என்பது தான் அடையாள,ம் எனப் பலர் கருதுகின்றார்கள்|

எனினும்....உற்று நோக்கும்போது...நான் என்பது அகங்காரம் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு எனபது புரியும்!

நான் என்னும்  அகந்தை....ஓரளவுக்கு மனிதனின் பொருளாதார வளர்ச்சிக்கு...உந்துதலை அளிக்கின்றது என்பதும் உண்மை தான்!

ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை அது முன்னோக்கி நகர்த்தும் எனப்தும் உண்மை!

எமது சமூகங்களில்....இந்த அடையாளங்கள் பெரிதும் உதவவில்லை ...என்றே நினைக்கிறேன்!

தனது அடையாளத்தைப் பாடும் புலவர்களுக்கு அள்ளிக்கொடுத்ததும்....தனது அடையாளத்தை நிலை நிறுத்தக் கோவில்களும் ..கோபுரங்களும் கட்டியதும் தான் எமது வரலாற்றின் பெரும்பகுதியாகும்!

அப்பூதியடிகள் போன்று....அடையாளத்தை நிலை நிறுத்த அன்னதான மடங்களும்,....அனாதை விடுதிகளும்....மருத்துவ சாலைகளும் அமைத்தவர்கள்  வெகு சிலரே! ஆணவம் அகன்ற நிலையில்... தனது அடையாளத்தை...அடக்கி வாசித்து....திருநாவுக்காரசரின் அடையாளத்துக்குள் மறைந்து ...சமூகப் பணிகளை முன்னெடுத்தார்!

எனினும் நாவுக்காரசரை விடவும் ...அவரது அடையாளமே....இன்னும் வாழ்கின்றது!

சி;எ உண்மைகளை....நாம் ஏற்றுக்கொள்ளாத வரையில்...நமது சமூகத்தில் பெரும் முன்னேற்றத்தை....நாம் எதிர்பார்க்க முடியாது!

பெருமளவிலான பணக்கையிருப்பு எம்மிடமிருந்தும்.....போரின் வடுக்களினால்   பாதிக்கப்படட....உறவுகள்...பெண்கள்...குழந்தைகள்...அனாதைகள் என...எல்லோரையும் கை விட்டு விட்டுத்....தனி மனித அடையாளங்களை நிலை நிறுத்தவே முனைந்தோம்! இதைச் செய்தவர்கள் சாதாரணமாக மனிதர்கள் அல்ல! எமது சமூகத்தைத் துயரங்களிலிருந்து...தூக்கி விடப் புறப்படடவர்கள்! தனி மனித அடையாளங்கள்...சமூக முன்னேற்றத்துக்கு...இங்கே உதவவில்லை!

ஜஸ்டின் ...மேலே குறிப்பிட்ட்து போலத்  தனிமனித அடையாளங்கள்...காலப்போக்கில் அழிந்து போய் விட....செய்த செயல்களின் பயன்கள் மட்டும்.....காலத்தால் அழிந்து போகாது...சமூக வளர்ச்சிக்கு என்றும் துணை போகும்!

நன்றி....மல்லிகை வாசம்!

 • Like 7

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, புங்கையூரன் said:

நான் என்பது அகங்காரம் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு எனபது புரியும்!

நான் என்னும்  அகந்தை....ஓரளவுக்கு மனிதனின் பொருளாதார வளர்ச்சிக்கு...உந்துதலை அளிக்கின்றது என்பதும் உண்மை தான்!

ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை அது முன்னோக்கி நகர்த்தும் எனப்தும் உண்மை!

எமது சமூகங்களில்....இந்த அடையாளங்கள் பெரிதும் உதவவில்லை ...என்றே நினைக்கிறேன்!

ஜஸ்டின் ...மேலே குறிப்பிட்ட்து போலத்  தனிமனித அடையாளங்கள்...காலப்போக்கில் அழிந்து போய் விட....செய்த செயல்களின் பயன்கள் மட்டும்.....காலத்தால் அழிந்து போகாது...சமூக வளர்ச்சிக்கு என்றும் துணை போகும்!

அடையாளம் பற்றிய தங்கள் பார்வையை இன்னொரு கோணத்தில் அழகாகச் சொன்னீர்கள். ஆன்மீீீக ரீதியான அகங்காரம் என்ற விளக்கம் தான் உண்மையானது எனினும், சடப்பொருள் உலகில் சில 'சமாளிப்புக்களைச்' செய்ய வேண்டியதன் அவசியமும் புரிகிறது.

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி புங்கையூரான் அண்ணா! 😊

Share this post


Link to post
Share on other sites
41 minutes ago, மல்லிகை வாசம் said:

அடையாளம் பற்றிய தங்கள் பார்வையை இன்னொரு கோணத்தில் அழகாகச் சொன்னீர்கள். ஆன்மீீீக ரீதியான அகங்காரம் என்ற விளக்கம் தான் உண்மையானது எனினும், சடப்பொருள் உலகில் சில 'சமாளிப்புக்களைச்' செய்ய வேண்டியதன் அவசியமும் புரிகிறது.

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி புங்கையூரான் அண்ணா! 😊

வழிமொழிகிறேன்...

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

வரலாற்றை சுமந்து

அதனை  தம்முடையதாக்கி  தொடர்பவர்கள் அனைவரையும் பார்த்தால்

அவர்கள் தமது அடையாளங்களை  பேணுபவர்களாகவே  இருக்கிறார்கள்

போர்கள் அல்லது வன்முறைகள் கூட இந்த அடையாளத்தை  பேணும்

அல்லது பாதுகாக்கும் ஒரு கருவியே.

அதன்படி   போரில் வென்றவர்கள்

அல்லது வலிமையானவர்களே  இன்றும்

தமது  அடையாளங்களை  பேண  முடிகிறது

இன்று நாமெல்லாம் உலகமெல்லாம்  பரந்து  கலந்து வாழ்கின்ற  போதும்

அதிலும் ஒரு அளவேனும்  கட்டுப்பாடுகளும்

கவனத்திலெடுத்தலும்

காவுதலும் இருக்கவே  செய்கிறது

இந்த  நிலை  தற்காலிகமானது  மட்டுமே

எப்ப  வேண்டுமானாலும்

எப்படி  வேண்டுமானாலும் மாற்றமடையலாம்

 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, விசுகு said:

வரலாற்றை சுமந்து

அதனை  தம்முடையதாக்கி  தொடர்பவர்கள் அனைவரையும் பார்த்தால்

அவர்கள் தமது அடையாளங்களை  பேணுபவர்களாகவே  இருக்கிறார்கள்

போர்கள் அல்லது வன்முறைகள் கூட இந்த அடையாளத்தை  பேணும்

அல்லது பாதுகாக்கும் ஒரு கருவியே.

அதன்படி   போரில் வென்றவர்கள்

அல்லது வலிமையானவர்களே  இன்றும்

தமது  அடையாளங்களை  பேண  முடிகிறது

இன்று நாமெல்லாம் உலகமெல்லாம்  பரந்து  கலந்து வாழ்கின்ற  போதும்

அதிலும் ஒரு அளவேனும்  கட்டுப்பாடுகளும்

கவனத்திலெடுத்தலும்

காவுதலும் இருக்கவே  செய்கிறது

இந்த  நிலை  தற்காலிகமானது  மட்டுமே

எப்ப  வேண்டுமானாலும்

எப்படி  வேண்டுமானாலும் மாற்றமடையலாம்

 

இது உண்மை. அடையாளங்கள் வெல்வதால் மட்டுமல்ல, சில சமயங்களில் அடக்கப்படும் போதும் கூர்மை பெற்று மிகையாக வெளிப்படுவதுண்டு. தமிழர்களின் அடையாளம் கூர்மையடைய எங்களை அடக்கியது ஒரு  காரணம். 9/11 இன் பின்னர் அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ சம்பவங்கள் அதிகரித்தன. இங்கேயெ பிறந்து அமெரிக்க அடையாளத்தை மட்டுமே பிரதானமாக வைத்திருந்த பல இளம் முஸ்லிம்கள் தமது முஸ்லிம் மத அடையாளத்தை தாடி மூலமோ பர்தா உடை மூலமோ வெளிக்காட்ட இந்த துவேஷ சம்பவங்கள் தூண்டலாக இருந்ததாக நம்புகிறார்கள். இது மனித இயல்பென நினைக்கிறேன். 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
37 minutes ago, Justin said:

இது உண்மை. அடையாளங்கள் வெல்வதால் மட்டுமல்ல, சில சமயங்களில் அடக்கப்படும் போதும் கூர்மை பெற்று மிகையாக வெளிப்படுவதுண்டு. தமிழர்களின் அடையாளம் கூர்மையடைய எங்களை அடக்கியது ஒரு  காரணம். 9/11 இன் பின்னர் அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ சம்பவங்கள் அதிகரித்தன. இங்கேயெ பிறந்து அமெரிக்க அடையாளத்தை மட்டுமே பிரதானமாக வைத்திருந்த பல இளம் முஸ்லிம்கள் தமது முஸ்லிம் மத அடையாளத்தை தாடி மூலமோ பர்தா உடை மூலமோ வெளிக்காட்ட இந்த துவேஷ சம்பவங்கள் தூண்டலாக இருந்ததாக நம்புகிறார்கள். இது மனித இயல்பென நினைக்கிறேன். 

இந்த  தாக்குதலும் 

துவேச அதிகரிப்புக்கூட

உண்மையில் தானாக  வந்தததா??

வரவழைக்கப்பட்டதா?? என்ற  கேள்வியும் இல்லாமலில்லை.....

Share this post


Link to post
Share on other sites

அடையாளங்களும் அடையாளப்படுத்தல்களும் குறிப்பிட்ட கால, உடன் சூழல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆண்-பெண் என்ற பால் அடையாளம் ஒன்றே ஆதியிலிருந்து நிரந்தரமாக உள்ளது. இன, மத, மொழி, சாதி, பிரதேச, பண்பாட்டு அடையாளங்கள் காலவோட்டத்தில் மாறி வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். 

அடையாளத்தை முன்னிறுத்துவது தனியன்களாக இல்லாமல் கூட்டாக ஒரு இலக்கை அடைவதற்கும், அல்லது ஒரு குழுவோடு தம்மை அடையாளப்படுத்தி இயங்கவும் உதவுகின்றது. அரசியலில் சிங்களப் பேரினவாதம் சிங்கள, பெளத்த அடையாளங்களைப் பாவித்து தமிழர்களை ஒடுக்குவதும், தமிழர்கள் தமிழ்த் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி போராடித் தோற்றதும் எமது வரலாறு. தமிழர்கள் தமிழ்பேசும் இனம் என்ற அடையாளத்துக்குள் முஸ்லிம்களை அடக்க முற்பட்டதும், அதை முஸ்லிம்களோ, மலையகத் தமிழரோ ஏற்காமல் போனதும் தமிழ்த் தேசிய அடையாளத்தை பலவீனப்படுத்தியது.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இனமாக ஒன்றுபட்டாலும் இன்று அடையாளச் சிக்கலில் மாட்டுப்பட்டு உள்ளனர். கனடியத் தமிழர், பிரித்தானியத் தமிழர், ஜேர்மனியத் தமிழர் என்று புகலிட நாடுகளுக்கு ஏற்ப புதிய அடையாளங்களைப் பூணுவதும், அதே நேரத்தில் தமது பூர்வீக கிராமம், பிரதேச அடையாளங்களையும் தொடர்வதும் என்று மாறிக்கொண்டே போகின்றது. 

பிற நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், முஸ்லிம் அடையாளம் என்று பெண்கள் முக்காடு அணிவதும் அரசியல் அடையாளமே. 70 களில் முக்காடு அணியாமல் பெண்கள் நடமாடிய எகிப்திய கெய்ரோ, ஈரானிய தெஹ்ரான் போன்ற நகரங்களில் மேற்கு நாட்டவர்கூட தலையை மறைத்துக் கொள்வதும் அடையாள அரசியலினால்தான். 

உலகில் உள்ள வளங்கள் பல்கிப் பெருகியுள்ள மனித இனத்திற்குப் போதாது என்பதால் ஒடுக்குபவர்களும், ஒடுக்கப்படுவர்களும் அடையாளங்களைச் சுமந்துதான் தமது இருப்பைப் பேண முயல்கின்றன. எனவே அடையாளம் என்பது ஒரு சமூகத்தின் இருப்பை எப்பாடுபட்டாவது தக்க வைத்துக்கொள்ள ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பைத் தக்கவைத்து கொள்ளவேண்டுமானால் இன்னொரு சமூகத்தை அடக்குமுறை செய்யவேண்டும் அல்லது அடக்குமுறைக்கு எதிராக போராடவேண்டும். 

ஆகவே, பிறரின் அடையாளங்களை மதித்து அன்பைச் சொரிந்து மனிதர்கள் ஒற்றுமையாக வளங்களைப் பகிர்ந்து இப்பூமியில்  வாழலாம் என்பது கனவாகத்தான் இருக்கும்!

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, கிருபன் said:

ஆண்-பெண் என்ற பால் அடையாளம் ஒன்றே ஆதியிலிருந்து நிரந்தரமாக உள்ளது. இன, மத, மொழி, சாதி, பிரதேச, பண்பாட்டு அடையாளங்கள் காலவோட்டத்தில் மாறி வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். 

அரசியலில் சிங்களப் பேரினவாதம் சிங்கள, பெளத்த அடையாளங்களைப் பாவித்து தமிழர்களை ஒடுக்குவதும், தமிழர்கள் தமிழ்த் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி போராடித் தோற்றதும் எமது வரலாறு. தமிழர்கள் தமிழ்பேசும் இனம் என்ற அடையாளத்துக்குள் முஸ்லிம்களை அடக்க முற்பட்டதும், அதை முஸ்லிம்களோ, மலையகத் தமிழரோ ஏற்காமல் போனதும் தமிழ்த் தேசிய அடையாளத்தை பலவீனப்படுத்தியது.

கனடியத் தமிழர், பிரித்தானியத் தமிழர், ஜேர்மனியத் தமிழர் என்று புகலிட நாடுகளுக்கு ஏற்ப புதிய அடையாளங்களைப் பூணுவதும், அதே நேரத்தில் தமது பூர்வீக கிராமம், பிரதேச அடையாளங்களையும் தொடர்வதும் என்று மாறிக்கொண்டே போகின்றது. 

பிற நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், முஸ்லிம் அடையாளம் என்று பெண்கள் முக்காடு அணிவதும் அரசியல் அடையாளமே. 70 களில் முக்காடு அணியாமல் பெண்கள் நடமாடிய எகிப்திய கெய்ரோ, ஈரானிய தெஹ்ரான் போன்ற நகரங்களில் மேற்கு நாட்டவர்கூட தலையை மறைத்துக் கொள்வதும் அடையாள அரசியலினால்தான்

 

 

On 2/3/2019 at 3:43 AM, மல்லிகை வாசம் said:

மனிதர் ஒவ்வொருவருக்கும்  ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.


சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது;  
ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.

இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். 

இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️

 

கிருபன், மேலே நீங்கள் எழுதிய கருத்துகளையும், எனது தலைப்பான பதிவையும் மீண்டும் ஒரு முறை நன்கு வாசித்துப் பார்த்தால் நான் சொல்ல வந்த கருத்துக்கும், நீங்கள் கொடுத்த பதிலுக்குமான முரண்பாடு நன்கு புரியும். 😊

நீங்கள் குறிப்பிட்ட தேசிய, சர்வதேச அளவில் அல்லது இனம், மொழி, மதம், ஆண், பெண் என்ற பாரிய பாகுபாட்டின் அடிப்படையில் நான் எனது ஆரம்பப் பதிவை எழுதவில்லை. எனது பதிவின் நோக்கம் எவ்வாறு ஓர் தனி மனிதனானவன் தன்னுடன் உறவாடுவோரின் / தொடர்பாடுவோரின் அடையாளத்தை / தனித்துவத்தைப் நன்கு புரிந்துகொண்டு அவற்றை மதித்து நடப்பதன் மூலம் தான் தொழிற்படும் தளங்களாகிய குடும்பம், வேலைத்தளம், கல்விச்சாலை, வழிபாட்டு இடங்கள் ஏனைய சிறு சமூக அமைப்புகளில் (இது யாழ் இணையம் போன்ற சமூக மன்றங்கள் / வலைத்தளங்களுக்கும் பொருந்தும்!) நேர்மறையான நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் கோடிட்டுக் காட்டுவது தான்.

நீங்கள் குறிப்பிட்ட தேசிய, சர்வதேச, அரசியல், சமூக அளவிலான உலகப்பார்வை தேவையான ஒன்று என்பது மறுப்பதற்கு இல்லை. இந்த விடயங்களில் தேடலும், அறிவும் ஓர் தனி மனிதனுக்குத் தேவை தான். ஆனால் இந்த விவகாரங்களில் அவனது கட்டுப்பாடு (control) அல்லது செல்வாக்கு (influence) மிகக் குறைவாகவே இருக்கும். தனி ஒருவனின் சக்திக்கு மீறியது. ஆனால், நான் மேற்குறிப்பிட்ட அவன் தினமும் தொழிற்படும் தளங்களில் அவனால் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவி-பிள்ளைகள் இடையான புரிந்துணர்வையோ அல்லது ஓர் வகுப்பறையில் ஆசிரியர்-மாணவன்-மாணவர்கள் இடையேயான புரிந்துணர்வையோ சொல்லலாம். இவ்வாறு இச்சிறு குழுக்களில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒருவரின் அடையாளத்தை, மற்றவர் புரிந்து நடப்பதால் ஏற்படும் நல்லிணக்கம் அல்லது இசைவு நிலை (harmony) மற்றய சிறு சிறு குழுக்களுக்கும் பரவ முடியும். இதை வலியுறுத்தவே இப்பதிவை எழுதினேன். என்ன காரணமோ தெரியவில்லை இந்தத்திரி சற்று வேறு திசையில் பயணித்துவிட்டது! 😃

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, கிருபன் said:

ஆகவே, பிறரின் அடையாளங்களை மதித்து அன்பைச் சொரிந்து மனிதர்கள் ஒற்றுமையாக வளங்களைப் பகிர்ந்து இப்பூமியில்  வாழலாம் என்பது கனவாகத்தான் இருக்கும்!

 

அந்த அளவுக்கு உயர்ந்த குறிக்கோள் எனக்கில்லை, கிருபன். 😁 

உலக அரசியல் அதற்கு இடம்கொடுக்காது. எனினும், அப்படி ஒரு கனவு கண்டு கனவோடு மட்டும் நின்றுவிடாது, மேலே கூறியபடி சிறு அளவிலேனும், நமது சக்திக்குட்பட்ட வகையில் சக மனிதரைப் புரிந்து மதித்துப் பழகினால் நமக்கு ஒரு குறையும் வரப்போவதில்லையே! தற்போது இருப்பதை விட சிறிய முன்னேற்றம் கண்டாலும் அது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான வெற்றி தானே! 😊

On 2/8/2019 at 9:46 AM, மல்லிகை வாசம் said:

இன்று நாமெல்லாம் பரந்து வாழும் பல்லின நாடுகளில் ஓர் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது அமைதியான வாழ்க்கை வாழ முடிகிறது என்றால் ஒரு சில அடையாளங்களாவது பரஸ்பரம் மதிக்கப்படுவதனால் தான். மீண்டும், இந்த அளவீடு இடத்துக்கு இடம் மாறுபடலாம். தனிமனிதரையோ, குழுவையோ பொறுத்தும் இது பற்றிய அனுபவம் மாறுபடும்.

 

 

Share this post


Link to post
Share on other sites
47 minutes ago, மல்லிகை வாசம் said:

இவ்வாறு இச்சிறு குழுக்களில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒருவரின் அடையாளத்தை, மற்றவர் புரிந்து நடப்பதால் ஏற்படும் நல்லிணக்கம் அல்லது இசைவு நிலை (harmony) மற்றய சிறு சிறு குழுக்களுக்கும் பரவ முடியும். இதை வலியுறுத்தவே இப்பதிவை எழுதினேன். என்ன காரணமோ தெரியவில்லை இந்தத்திரி சற்று வேறு திசையில் பயணித்துவிட்டது! 😃<span>

இந்தப் பதிவை பல தடவைகள் வாசித்திருந்தேன். ஆனாலும் அடையாளம் என்பது மிகவும் சிக்கலான சொல். திரியை வேறு திசையில் நகர்த்த முனையவில்லை. எனக்கு அடையாளம் மேல் உள்ள பல குழப்பங்களை மாத்திரமே பதிந்தேன். அதில் அடையாள அரசியல் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை!

தனித்துவமாக இருக்கும் ஒவ்வொருவரும் அடையாளங்களைப் பூணுவது ஏதோ ஒரு வகையில் பிற அடையாளங்களில் இருந்து வேறுபடுத்தவும், அடையாளங்களின் அடைப்படையில் ஒன்றிணையவும்தான். அடையாளங்களை மதித்து ஒன்றிணைந்து சமூகங்கள் வாழுகின்றன. ஆனால் அதே சமூகங்கள் பிரச்சினைகள் என்று வரும்போது இலகுவாக அடையாளங்களின் அடைப்படையில் பிரிந்து முரண்படுகின்றன. இப்படியான அடையாளச் சிக்கலில்தான் இருக்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, கிருபன் said:

எனக்கு அடையாளம் மேல் உள்ள பல குழப்பங்களை மாத்திரமே பதிந்தேன். அதில் அடையாள அரசியல் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை!

தனித்துவமாக இருக்கும் ஒவ்வொருவரும் அடையாளங்களைப் பூணுவது ஏதோ ஒரு வகையில் பிற அடையாளங்களில் இருந்து வேறுபடுத்தவும், அடையாளங்களின் அடைப்படையில் ஒன்றிணையவும்தான். அடையாளங்களை மதித்து ஒன்றிணைந்து சமூகங்கள் வாழுகின்றன. ஆனால் தே சமூகங்கள் பிரச்சினைகள் என்று வரும்போது இலகுவாக அடையாளங்களின் அடைப்படையில் பிரிந்து முரண்படுகின்றன. இப்படியான அடையாளச் சிக்கலில்தான் இருக்கின்றோம்.

இது தமிழர் அரசியல் சம்பந்தமான கட்டுரைகளில் 'அடையாளம்' என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்பட்டதன் பாதிப்பாக இருக்கலாம், கிருபன்.

எனினும் தனிமனித அடையாளம் என்பது ஒருவரது தனித்துவத்தை (uniqueness / individuality / identity) குறிக்கும் சொல்லாகும். மேலும் அடையாளம் என்பது 'பூணப்படுவது அல்ல' - இயல்பாக அமைவது; அது மனிதனுக்கு பிறப்பிலேயே இயற்கையாக அமைந்த (nature) குணாதிசயங்கள் மற்றும் சூழலின் தாக்கத்தால் அவனில் ஏற்படும் 'இயல்பான' மாற்றங்களின் விளைவான ஓர் அம்சமாகும். 

பூணப்படுவது உண்மையான அடையாளம் அல்ல - அது முகமூடி - வேஷம் - போலி; பல அரசியல் தலைவர்கள் அல்லது இன்னும் பலர் தமது சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவது. ஆனால் இது ஓர் தனி மனிதனின் உண்மை இயல்பை சரியாக வெளிக்கொணர்ந்து காட்டாது.

சமூகப் பிரச்சினை என்று பல்வேறு வடிவங்களில் மனித குலம் பிளவுபட்டிருந்தாலும், தனிமனித அடையாளத்தை (தனதும், பிறரதும்) நன்கு புரிந்துணர்ந்த மனிதர்கள் சமுதாய வகுப்பை / குழுவைத் தாண்டி சக மனிதருடன் நல்லுறவைப் பேணலாம் என சாதாரணமாக நமது நாளாந்த வாழ்க்கையில் அனுபவரீதியாகக் காரணலாம். 😊

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, மல்லிகை வாசம் said:

இது தமிழர் அரசியல் சம்பந்தமான கட்டுரைகளில் 'அடையாளம்' என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்பட்டதன் பாதிப்பாக இருக்கலாம், கிருபன்.

எனினும் தனிமனித அடையாளம் என்பது ஒருவரது தனித்துவத்தை (uniqueness / individuality / identity) குறிக்கும் சொல்லாகும். மேலும் அடையாளம் என்பது 'பூணப்படுவது அல்ல' - இயல்பாக அமைவது; அது மனிதனுக்கு பிறப்பிலேயே இயற்கையாக அமைந்த (nature) குணாதிசயங்கள் மற்றும் சூழலின் தாக்கத்தால் அவனில் ஏற்படும் 'இயல்பான' மாற்றங்களின் விளைவான ஓர் அம்சமாகும். 

பூணப்படுவது உண்மையான அடையாளம் அல்ல - அது முகமூடி - வேஷம் - போலி; பல அரசியல் தலைவர்கள் அல்லது இன்னும் பலர் தமது சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவது. ஆனால் இது ஓர் தனி மனிதனின் உண்மை இயல்பை சரியாக வெளிக்கொணர்ந்து காட்டாது.

சமூகப் பிரச்சினை என்று பல்வேறு வடிவங்களில் மனித குலம் பிளவுபட்டிருந்தாலும், தனிமனித அடையாளத்தை (தனதும், பிறரதும்) நன்கு புரிந்துணர்ந்த மனிதர்கள் சமுதாய வகுப்பை / குழுவைத் தாண்டி சக மனிதருடன் நல்லுறவைப் பேணலாம் என சாதாரணமாக நமது நாளாந்த வாழ்க்கையில் அனுபவரீதியாகக் காரணலாம். 😊

அடையாளம் என்பது எளிமையான விடயம் அல்ல என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் இயற்கையான அடையாளம் என்று நீங்கள் குறிப்பிடுவது ஒவ்வொருவரின் குணாதிசயங்கள் என்றால் அது பிறப்பினலும் வாழும் சூழலினாலும் கட்டியமைக்கப்படுவது. வாழும் சூழல் என்று வரும்போது பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தி ஒருவரின் morality ஐ செதுக்கும். அதுவும் நிலையானது அல்ல.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, கிருபன் said:

வாழும் சூழல் என்று வரும்போது பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தி ஒருவரின் morality ஐ செதுக்கும். அதுவும் நிலையானது அல்ல.

கண்டிப்பாக கிருபன். 😊 ஒரு தனிமனிதனின் அடையாளம் என்பது கால ஓட்டத்தில் பல்வேறு பரிணாமங்களில் மாறக்கூடியது தான்.  ஆகவே, தான் தொடர்பாடும் / உறவாடும் சக மனிதர்களில் மட்டுமல்ல தன்னிலும் ஏற்படும் மாற்றங்களையும் புரிந்துகொண்டு நடப்பவன் கூட்டுறவான, ஒத்திசைவான ஒரு சமூகம் ஒன்றின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறான் என்பது எனது கருத்து.

இருந்தாலும் கூட, அடையாளம் என்ற சொல் ஆன்மிகப் பார்வையில் மேலே புங்கையூரான் சொன்னது போல ஆழமான பொருளுடையது. 'நான் என்பது என் ஆத்மா' என்று முழுமையாகத் தெளிவு பெற்றவன் ஞானி ஆகிறான். அவன் சக மனிதர் மற்றும் அனைத்து உயிரினங்களில் தன்னைக் காண்கிறான். அவ்வாறு தெளிவு பெறாத நாம் உலக வாழ்வெனும் மாயையில் சிக்கிப் போராடுகிறோம், குழம்புகிறோம். நான் மேலே கூறிய மாற்றங்களை மேலும் புரிந்து கொண்டு, உலகியலில் செயற்பட இந்த ஆன்மிகப் பார்வையும் அவ்வப்போது கைகொடுக்கிறது. யோகா, தியானம் என்பவை சிறு உதாரணங்கள். 😊 ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றி கிருபன். 😊

Share this post


Link to post
Share on other sites
On 2/3/2019 at 3:43 AM, மல்லிகை வாசம் said:

 நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.


சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. 

முற்றிலும் உண்மை.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

முற்றிலும் உண்மை.

அடையாளம் என்பது தனித்துவமானது. அனேகமானவர்கள் தமக்கான அடையாளத்தை அறியாமலேயே வாழ்வை முடித்துவிடுவார்கள். ஒவ்வொரு பிறப்பிற்குள்ளும் அந்தப்பிறப்பிற்கான இரகசியம் ஒளிந்திருக்கிறது அவற்றைப் பற்றி ஆழமாக அறிய முற்படுவதில்லை. அறிந்து கொண்டவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்களாக திகழ முடியும். அடையாளத்தை அடையாளம் கண்டு கொள்வது எப்படி?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, வல்வை சகாறா said:

அடையாளத்தை அடையாளம் கண்டு கொள்வது எப்படி?

மிக நல்ல, மிக முக்கியமான கேள்வி அக்கா. 😊

உங்களுக்கு இது பற்றிய விளக்கம் அதிகம் தேவையிராது என நினைக்கிறேன். உங்களதுப் பிடித்த 'ஆன்மாவுடன் பேசுதல்' என்பதே மிகச்சுருக்கமான ஆனால் நேரடியான பதிலாக இருக்கும்! 😊

எனினும் மற்றோருக்கும் புரியக்கூடியதாக இருக்கும் என்பதால் இது பற்றிய எனது பார்வையை இங்கு பதிய நினைக்கிறேன்:

நமது அடையாளத்தை / தனித்துவத்தை உணர்வதற்கு பல்வேறு தத்துவாசிரியர்களும், ஞானிகளும், ஆன்மீக நெறியாளர்ளும் பல்வேறு நெறிமுறைகளையும், விளக்கங்களையும் தந்து சென்றுள்ளனர். இவை மதங்கள், ஆன்மீக இயக்கங்கள், தத்துவ சமூகங்கள் மூலமாகக் காலம் காலமாக உலகெங்கும் வாழும் சாமானிய மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது / சொல்லப்படுகிறது. 

கடல் போன்ற விசாலமான இந்த விடயங்களின் சாராம்சம் 'உன்னை அறி' என்பது இற்றை வரை எனக்குள்ள புரிதல். பல்வேறு மதங்கள் பற்றிய விமர்சனங்கள் இருப்பினும் , மதங்களிலுள்ள நல்ல அம்சங்களாக இருப்பவை என்னவென்று பார்த்தால் 'நம்மை அறியும்' வழிமுறைகளை சடங்குகள், பிரார்த்தனைகள், விரதங்கள் மூலமாக மறைமுகமாக நம் நாளாந்த வாழ்வில் கடைப்பிடிக்கச் செய்தமை தான். மனச் சுத்தியுடன் விரதமிருந்து பிரார்த்தனை செய்யும் போது நமக்கு ஏற்படும் ஓர் தெய்வீக உணர்வு ஓர் சிறு உதாரணமாகும். எனினும் முறையற்ற, போலியான சில சடங்குகளால் தான் மதங்கள் மீதான விமர்சனம் எழுகிறது. இவற்றுக்கான காரணம் ஓர் மதம் தூய்மையான நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டாலும், காலம் காலமாக உள்வாங்கப்பட்ட குப்பைகளாகும். எனவே இந்தக் குப்பைகளை மட்டும் விலக்கி நல்ல விடயங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடிப்பது நமது அடையாளத்தை அறிய ஓர் வழியாக அமையும்.

அப்போ மத நம்பிக்கை இல்லாதோர் என்ன பண்ண? மதத்துக்கான மாற்று வழிகள் தான் தத்துவ சமூகங்கள், ஆன்மீக இயக்கங்கள் காட்டும் மார்க்கமாகும். எனினும், மதங்கள் போல் இவற்றின் மீதும் விமர்சனங்கள் உண்டு. எனவே இங்கும் நாம் சரியான நெறிமுறைகளை ஆராய்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

உண்மையில் மேற்கூறிய எல்லா நெறிகளும், இயக்கங்களும் நம்மை நாமே உணர வழிகாட்டிகளாக இருக்கின்றன. விவேகானந்த சுவாமிகள் சொன்னது போல் "நதிகள் வேறு, ஆனால் அவை சென்று கலக்கும் சமுத்திரம் ஒன்றே". என்னைப் பொறுத்தவரை ஆன்மீகம் என்பதே எல்லா மதங்களின் அடிப்படையாகும். ஆன்மீகம் + கலாச்சாரம் = மதம். எனவே வெவ்வேறு கலாச்சாரங்களில் ஆன்மீக நெறி வெவ்வேறு மதங்களாக உருவெடுத்துள்ளது என்பது எனது கருத்து.

இந்த நெறிமுறைகள் ஆரம்பநிலையில் தன்னை அறிய முனைவோருக்குக் கைகொடுக்கலாம். எனினும் அனுபவம் அதிகமாக சுய விசாரணை செய்து நாமாகவே நமக்குள்ளேயே அந்தத் தெளிவைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது சான்றோர் வாக்கு. தினமும் தியானம், பிரார்த்தனை, சுய விசாரணை இவற்றிற்குச் சிறிது நேரமாவது ஒதுக்குதல் நமது அடையாளம் பற்றிய தெளிவைத் தரும். அத்துடன் மேற்கூறிய ஏதாவது ஒரு நெறிமுறையும் கைகொடுக்கும். 

ஆக்கபூர்வமான பங்களிப்புக்கு நன்றி சகாறா அக்கா. 😊

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

எல்லாத்தையும் வாசிக்கவும் களைக்குதே மல்லிகைவாசம்.

எல்லோருக்கும் அடையாளம் உண்டுதான் எனினும் எல்லோரும் ஆன்மீகத்தில் பற்றுக்கொண்டு தம் அடையாளங்களை அறிய முயன்றால் .., அது இயல்பு வாழ்வை ஏற்றுக்கொள்ளுமா????

சக மனிதரை மதிக்கத் தெரிந்தாலே போதுமே அதைவிட்டு சக மனிதரின் அடையாளத்தை அறிந்து அதன்பின் அவரை மதிப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாததே. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்   பிரிட்டனிலும் லைபீரியாவிலும் பதிவு செய்யப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து வளைகுடாவில் பதற்றநிலை அதிகரித்துள்ளது. பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட பிரிட்டிஸ் கொடியுடன் காணப்பட்ட ஸ்டெனா இம்பெரோ என்ற எண்ணெய் கப்பலை 23 மாலுமிகளுடன் கைப்பற்றியுள்ள ஈரான் குறிப்பிட்ட கப்பல் கடல்சார் விதிமுறைகளை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட கப்பலை ஈரானிய கடற்படையினர் பன்டர் அபாஸ் துறைமுகத்திற்கு எடுத்துசென்றுள்ளனர் என தெரிவித்துள்ள  ஈரானிய செய்திச்சேவையொன்று மாலுமிகள் கப்பலிலேயே உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. ஈரானின் மீன்பிடிப்படகொன்றுடன் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்தே குறிப்பிட்ட கப்பல் கைப்பற்றப்பட்டது என ஈரானிய செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை ஹார்முஸ் ஜலசந்திப்பகுதியில் கப்பலை சிறிய படகுகளும் ஹெலிக்கொப்டரும் சுற்றி வளைத்ததாக கப்பலின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை லைபீரிய கொடியுடன் காணப்பட்ட பிரிட்டனில் இருந்து இயங்கிய மற்றொரு எண்ணெயக்கப்பலையும் ஈரான் கைப்பற்றியுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. மெஸ்டர் என்ற இந்த கப்பலை சிறிது நேரம் தடுத்து வைத்திருந்துவிட்டு பின்னர் அதனை ஈரானிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர் என அந்தநாட்டின் செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது.   https://www.virakesari.lk/article/60815
  • உழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்   அண்ணாச்சி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் சரவணபவன் ராஜகோபால். தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னை நகரிலுள்ள சிறிய கிராமத்தில பிறந்தவராவார். தனது 12 வயதில் இருந்து உழைக்க ஆரம்பித்தார். அப்போது போக்குவரத்து வசதி கூட இல்லாத அந்த அந்த கிராமத்தில் இருந்து பிழைப்பிற்காக சென்னைக்கு வந்த ராஜகோபால், முதலில் ஒரு சிறிய  ஹோட்டல் ஒன்றில் மேசை துடைக்கும் பணியாளராகவே  தனது பணியை தொடங்கினார். பின்னர் ஹோட்டல் டீ மாஸ்டருடன் பழகி டீ போடுவது எப்படி என்பதை கற்று கொண்டு டீ  மாஸ்டராக மாறினார். இதன் பின்னர் பலசரக்குக்டை ஒன்றை தொடங்கினார். அப்போது பகல் வேளையில் கடைக்கு வந்த ஒருவர் அண்ணாச்சி சமான்களை சீக்கிரம் தாருங்கள். இங்க ஹோட்டல் கூ ட இல்லை என்று கூறியுள்ளார். 1981 ஆம் ஆண்டு தனது கடைக்கு வந்த நபர் கூறிய வார்த்தைகள் ராஜ கோபால் மனதில் ஹோட்டல் திறக்கும் எண்ணத்தை விதைத்தது. அதே ஆண்டில் டிசம்பர் மாதம் இன்னொருவர் நடத்தி வந்த கமாட்சி பவன் ஹோட்டலை விலைக்கு வாங்கி ஹோட்டல் தொழிலை ஆரம்பித்தார். இந்த ஹோட்டலை பின்னர் சரவணபவன் என பெயர் மாற்றினார். படிப்படியாக ஹோட்டல்  சரவணபவனின் கிளைகள் முளைத்தன. ஹோட்டல் தொழிலில் ராஜகோபால் உச்சத்தை தொட்டார். சென்னையில் 25 கிளைகள் உட்பட உலகம் முழுவதும் 46  கிளைகள் இப்போது  உள்ளன. சைவ உணவு என்றாலே சரவணபவன் ஹோட்டல் தான் என சொல்லும் அளவுக்கு தரமான சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. தீவிர முருக பத்தரான ராஜகோபால் கிருகானந்த வாரியாரின் சீடனாகவும் விளங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கச்சினா விலையில் வனத்திருப்பதி என்ற பிரமாண்ட கோயிலை நிர்மாணித்தார். இந்நிலையில் தான் ஜோதிடர் ஒருவர் மூன்றாவதாக திருமணம் செய்தால் நீங்கள் மேலும் உச்சத்திற்கு செல்லாம் என்று ஆலோசனை கூற ராஜகோபாலின் வாழ்க்கையே புரண்டுபோனது . 1990 களில் கடைசி காலங்களில் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் ஜீவ ஜோதி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் ஜீவஜோதி இதற்கு சம்மதிக்கவில்லை. அதற்கு மாறாக சரவணபவன் ஹோட்டலில் பணிபுரிந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். குறித்த பெண் திருமணமான அடுத்த சில நாட்களிலே அவரது கணவரை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்று கொலை செய்து விடுகிறது. விசாரணையில் கணவரை ராஜகோபால் சொல்லி தான் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. அதன் பின் சிறையில் அடைக்கப்பட்ட  ராஜகோபால் ஒரு வழியாக போராடி 2003 ஆம் ஆண்டு ஜூலை பிணையில் வெளியே வந்தார். ஆனால் அவரால் வழக்கில் இருந்து நிரந்தரமாக வெளியே வரமுடியவில்லை. இதனை தொடர்ந்து  உயர்நீதிமன்றம் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை  கொடுத்தது. இதை எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதிமன்றம் சென்றார். ஆனால் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தியதுடன் கடந்த ஜூலை 7 ஆம் திகதி சரணடையுமாறு உத்தரவிட்டது. நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் சரணடைய இயலாது எனக் கூறி கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் ராஜகோபால். தொடர்ந்து உடல்நல பிரச்சினையால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகோபால், நேற்று உயிரிழந்தார். கடும் உழைப்பால் பெரும் புகழ் பெற்றவர், ஒரே ஒரு தவறால், வாழ்நாள் சரிவைச் சந்தித்தார்.   https://www.virakesari.lk/article/60777
  • முஸ்லிம்களின் பேரம்­பே­சலை பறித்­தெ­டுக்கும் தேர­வாத வியூகம்   முஸ்லிம் சமூ­கத்தின் கூட்­டுப்­பொ­றுப்பை உணர்த்தி பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்கள், எதைச் சாதித்­தனர், இந்­தப்­ப­தவி விலகல் உணர்த்­திய செய்­திகள் என்ன? இந்தக் கேள்­வி­களின் எதி­ரொ­லி­களே முஸ்லிம் அர­சியல் களத்தின் எதிர்­கால நகர்­வு­களைக் கட்­டியங் கூறப் போகின்­றன முஸ்லிம் பெயர்­தாங்­கிய ஒரு சில இளை­ஞர்­களின் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களை ஒட்­டு­மொத்­த­மாக முஸ்லிம் சமூ­கத்தின் மீது திணிக்க முயன்ற, தேர­வா­தி­களின் பிர­யத்­த­னங்­களை, இப்­ப­தவி வில­கல்­களால் முறி­ய­டிக்க முடிந்­ததை மட்டும் எல்­லோரும் ஏற்றுக் கொண்­டே­யாக வேண்டும். முஸ்லிம் எம்­.பி.க்­களை மீண்டும் அமைச்­ச­ர­வைக்குள் உள்­வாங்கும் அரச உயர் மட்­டத்தின் முயற்­சிகள் இத­னையே உணர்த்­து­கின்­றன.  எதிர்­வரும் தேர்­தல்­களில் முஸ்லிம் பிர­தே­சங்­களில் காலூன்­று­வ­தற்கு அரச தரப்பு எடுக்கும் இர­க­சிய இரா­ஜ­தந்­தி­ரங்­களும் இந்த முயற்­சிக்குள் உள்­ளன. கண்டி, போகம்­பரை மைதா­னங்­களில் வானு­யர எழுந்த முஸ்லிம் விரோ­தக்­கு­ரல்­க­ளுக்கு பிர­தமர் உட்­பட அர­சாங்­கத்தின் முக்­கிய தரப்­புக்கள் பதி­ல­ளிக்­கா­ததை சந்­தே­கத்­துடன் நோக்­கிய முஸ்­லிம்கள் நிதான போக்­குள்ள தேசிய கட்­சி­களின் தலை­மை­களே ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வர வேண்­டு­மெ­னவும் விரும்­பு­கின்­றனர். தேர  வாதத்­துக்கு  துணை­போகும் தலை­மை­களில் அவர்கள் நாட்டம் காட்­ட­வில்லை என்­பதும் தெளி­வு­ப­டு­கி­றது  இன்னும் சில காலத்­துக்கு தங்கள் தலை­மைகள் அமைச்சுப் பொறுப்­புக்­களை ஏற்­காது கூட்டுப் பொறுப்பைப் பேணினால் இன­வா­தத்­துக்கு தலை­சாய்க்கும் தேசிய கட்­சி­களின் பாரம்­ப­ரி­யங்­களை இல்­லாமல் செய்­து­வி­டலாம்.எனவே அமைச்சுப் பொறுப்­புக்கள் தற்­போ­தைக்கு தேவை­யில்லை எனவும் முஸ்லிம் அர­சியல் தளத்தில் பேசப்­ப­டு­கி­றது.இன, மத, சமூ­கங்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு குறுக்­காக நிற்கும் எந்தக் கோரிக்­கை­க­ளையும் ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி ஏற்றுக் கொண்­ட­தில்லை.ரணிலின் தலை­மைக்கு முன்னர், நடந்த சில சம்­ப­வங்­க­ளாலே, ஐ.தே.கவும் பௌத்த தேசி­ய­வாதத் தலை­மை­யாகப் பார்க்­கப்­பட்­டது. இந்­தப்­பார்­வை­களை படிப்­ப­டி­யாக தாரா­ள­வாதப் பக்கம் திசை­தி­ருப்­பி­யது ரணிலின் தலை­மையே! இத­னாலே தெற்கில் ஆழக்­கா­லூன்ற ஐ.தே.வுக்கு முடி­யா­துள்­ளது. இத­னால்தான் ராஜ­ப­க் ஷக்­க­ளுக்கு நிக­ராக, சிங்­கள பௌத்த வாக்­கு­களைப் பெறும் நோக்­குள்ள சிலர், ரணிலின் தலை­மையை மாற்றக் கோரு­கின்­றனர். இச்­சிந்­த­னை­களின் ஏணிப்­ப­டி­க­ளி­லி­ருந்தே சிறு­பான்­மை­யினர், குறிப்­பாக முஸ்­லிம்கள் அடுத்த அர­சாங்­கத்தை தெரி­வ­தற்­கான நகர்­வு­களில் இறங்க வேண்டும். கட்­சி­க­ளல்ல இங்கு பிர­தானம். கட்­சி­களின் தலை­மை­களைப் புடம்­போ­டு­வதில் தருணம் தப்­பாத சிந்­த­னையே எமது தலை­மை­க­ளுக்கு அவ­சியம். உண்­மையில் ஜன­நா­ய­க­வாதத் தாராள சிந்­த­னையால் ஆட்­சி­களைப் பிடிக்கும் பல சந்­தர்ப்­பங்­களை ரணில் தவ­றி­யி­ருந்­தாலும் தனது அர­சியல் முத­லீ­டு­களில் கடும்­போக்­கு­வாதம், இன­வாதம், தேர­வா­தத்தை அவர் வைப்­பி­லிட்­ட­தில்லை. ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குப் பின்னர் கிளம்­பி­யுள்ள ஓர­வஞ்­சனைச் சமாந்­த­ரங்கள், சித்­தாந்­தங்­களை முறி­ய­டிக்கப் பொருத்­த­மான ஆளு­மையை ஓர­ள­வுக்­கா­வது முஸ்­லிம்­களும் முஸ்லிம் தலை­மை­களும் அடை­யாளம் கண்­டுள்­ளன. அர­சுக்கு எதி­ரான சகல பிரே­ர­ணை­களும் தோற்­க­டிக்­கப்­பட்­டதும் இந்­தப்­புரிதல்­க­ளில்தான்.இத­னால்தான் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு கிடைப்­பதைத் தடுக்கும் தூர­நோக்குச் சிந்­த­னைகள் படிப்­ப­டி­யாக பல விஸ்­வ­ரூ­பங்­களில் வெளிப்­ப­டு­கின்­றன.  இக் காலத்தில் முஸ்லிம் எம்.­பி.க்கள் மிக விழிப்­புடன் செயற்­ப­டு­வது பாராட்­டுக்­கு­ரி­யது. முஸ்லிம் எம்­.பி.க்­களை அமைச்­சுப்­ப­த­வி­களை எடுக்­க­வி­டாமல் தடுப்­ப­த­னூ­டாக, அடிப்­ப­டை­வா­தத்தின் சாயல்கள் இன்னும் வீழ­வில்­லை­யென்ற விம்­பத்தைக் காட்­டு­வதும், முஸ்லிம் பிர­தே­சங்­களில் ஐக்­கிய தேசிய கட்சித் தலை­மைகள் இல­கு­வாக நுழை­வதைத் தடுக்­க­வுமே, இந்தக் கோஷங்கள் தலை­யெ­டுக்­கின்­றன. இல்­லா­விட்டால் எதற்கு இப்­போதும் ரிஷாத் பதி­யுதீன் மீது விரல்கள் நீட்­டப்­பட வேண்டும்? ஈஸ்டர் தினத்­தாக்­கு­த­லுக்குப் பின்னர்   ரிஷாத்தின் மீது   முந்­நூறு  குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­திய கடும்­போக்­கர்கள் இன்னும் ஓய்ந்­த­பா­டில்லை.  தாக்­குதல் நடந்து மூன்று மாதங்­க­ளா­கி­விட்­டன. ஒரு நாளைக்கு ஒரு குற்­றச்­சாட்டை முன்­வைத்­தாலும் தொண்­ணூறு குற்­றங்­க­ளுக்கே சாத்­தியம். மூன்று மாதத்தில் முந்­நூறு குற்­ற­மென்றால் ஒரு மாதத்­துக்கு நூறு குற்­றங்கள்."சைபர்" குற்­றங்­களைச் செய்­வ­தற்கும் (இணைய குற்றம்) இக்­கால இடை­வெளிகள் சந்­தர்ப்­ப­ம­ளிக்­காது. இவர்­களின் கோரிக்­கைகள், குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு அஞ்சி, அமைச்சுப் பத­வி­களைப் புறந்­தள்­ளு­வது முஸ்லிம் சமூ­கத்தின் பேரம்­பேசலை கடும்­போக்­கர்­க­ளுக்கு கைய­ளித்­த­தா­கி­விடும். இதுவே மீண்டும் அமைச்­சுக்­களைப்  பொறுப்­பேற்கத் தூண்­டு­கின்­றது. இன்­றுள்ள நிலை­மை­களில் பிர­தேச அபி­வி­ருத்­தி­களைத் துரி­தப்­ப­டுத்தி வாக்­கா­ளர்­களைத் தக்­க­வைக்க முடி­யுமா? என்றும் சிலர் சிந்­திக்­கலாம். “கடும்­போக்­கர்­க­ளுக்கு அர­சாங்கம் அஞ்­ச­வில்லை, முஸ்­லிம்கள் இணங்­க­வில்லை” என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கே அமைச்­சுக்­களைப் பொறுப்­பேற்க வேண்டி உள்­ளது.இல்­லா­விட்டால் தேர­வா­தமும், கடும்­போக்கும் சிறு­பான்­மை­யி­னரின் பேரம்­பே­சலைக் கையி­லெ­டுத்த கதை­யாகி நிலை­மைகள் குரங்கு ஆப்­பி­ழுத்த கதை­யாக நேரி­டலாம். கல்­முனை உள்­ளிட்ட தமிழ் முஸ்லிம் சமூ­கங்கள் முரண்­படும் விட­யங்­க­ளுக்­கான தீர்வை தேர­வா­தத்­துக்குத் துணை­போகும் தலை­மை­க­ளிடம் எதிர்­பார்த்து சிறு­பான்மைத் தலை­மைகள்,ஏட்­டிக்குப் போட்­டி­யான காய்­களை நகர்த்­து­வது,எமது அபி­லா­ஷை­களை எடுப்பார் கைப்­பிள்­ளை­யாக்கி விடும்.சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­க­ளுக்கு தேர­வா­தத்தில் தீர்­வு­கிட்­டா­தென்ற தெளி­வு­க­ளூ­டா­கவே, உள்­ளக நிர்­வாக முரண்­பா­டுகள் தீர்க்­கப்­பட வேண்­டி­யுள்­ளது தற்­போது பர­வ­லாகப் பேசப்­படும் முஸ்லிம் விவாகச் சட்டம் மெது­மை­யான கோணத்தில் ஆரா­யப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளித்­ததும் ரணிலின் தாராண்­மை­வா­தம்தான். இஸ்­ரேலை வர­வ­ழைத்த ஜே.ஆர். ஜெய­வர்­தன, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை இரண்டு வரு­டங்கள், தாரை­வார்த்த பிரே­ம­தாச ஆகி­யோரின் நேர்­கோ­ண­லான சிந்­த­னைக்கு இட­ம­ளித்­தி­ருந்தால் ரணி­லாலும் தெற்கில் நிலைப்­பட்­டி­ருக்க முடியும். 2002 முதல் 2004 வரை, ரணிலும் இதே தவறைச் செய்­த­தாக சிலர் வாதிட்­டாலும் வெளிநா­டு­களின் கண்­கா­ணிப்­புக்குள் அந்த அரசு இருந்­ததால் எழு­மாந்­த­மாக அவர்­களால் செயற்­பட முடி­ய­வில்லை. முடிந்­தாலும் அவர்­களால் நிலைக்க இய­ல­வில்லை. இந்­தக்­கா­லப்­ப­கு­தியில் இவர்கள் நடந்து கொண்ட முறைகள், வடக்கு கிழக்கில் தனி இராச்­சியம் கோரிய ஆயு­த­தா­ரி­களின் மன நிலை­களைப் புரிந்து கொள்ள உதவியது. இதன்பின்னர்தான் ரணிலின் ராஜதந்திரங்களைச் சிலர் கண்டுகொண்டனர்.  ஐக்கிய தேசிய கட்சியின் சாரதியாக ரணில் இருக்கும் வரை முஸ்லிம்கள் அந்த பஸ் வண்டியில் பயணிக்கக் கூடாதென மு.கா, தலைவர் அஷ்ரப் ஏன் சொல்லியிருப்பார் என்பதையே இப்போது ஆராய வேண்டி­யுள்ளது. இருபது வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் ஒன்றித்திருந்த  தெற்கு முஸ்லிம்களைத் தனித்துவக் கட்சியில் ஈர்ப்பதற்கு வேறு வழியின்றியே இந்தத் தாரக மந்திரத்தை அஷ்ரப் பாவித்திருப்பார்.கிழக்கு முஸ்லிம்களை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தாலும் தெற்குத் தளம்   அஷ்ரபுக்கு ஒரு சவாலாக இருந்ததாலேயே இந்தத் தாரக மந்திரம் பாவிக்கப்பட்டதோ தெரியாது. அரசியல் சிந்தனைகள் காலவோட்டத்துக்கு ஏற்ப மாறவேண்டுமே தவிர, வேத வாக்குகளல்ல. - சுஐப் எம் காசிம்- https://www.virakesari.lk/article/60756
  • உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி, சிங்கள-பௌத்த மற்றும் ஹிந்திய அரச பயங்கரவாதிகளினது திட்டமிட ஈழத் தமிழினவழிப்புக்கு இதுவரை பல தசாபங்களாக பெரும் துணை நின்ற சம்மந்தனின் ஆயுள் நெருங்குவதால், ஹிந்திய பயங்கரவாதிகள் தமது தமிழின அழிப்புக்கு தொடர்ந்து துணை செய்யக்கூடிய ஒருவரை தேடிவந்த நிலையில், வட மாகாணசபையில் சுயநலத்திற்காக தமிழர் நலத்தை அடகுவைக்க தயங்கமாட்டேன் என நிரூபித்த சத்தியமூர்த்தியை மடக்கியுள்ளதாக தெரிகிறது. சம்மந்தனின் பின்னர் வரும் தேர்தலிலிருந்து ஈழத்தமிழரை ஏமாற்றியபடி தமிழின அழிப்பை வழிநடத்த சத்தியமூர்த்தியை ஹிந்திய பயங்கரவாதிகள் தெரிவுசெய்துள்ளதாக வவுனியா தகவல்கள் கூறுகின்றன. பலமாத முயற்சிகளின் பின்னர் தற்போது இந்த சதித்திட்டத்தை ஹிந்திய பயங்கரவாதிகள் அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர். அதன் முதற்கட்டமாகவே மேற்படி சந்திப்பு 2 மணித்தியாலங்களாக ஹிந்திய பயங்கரவாதிகளின் தமிழக முகவர்களுடன் நடந்துள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக ஈழத் தமிழின அழிப்புக்கு ஹிந்திய பயங்கரவாதிகளின் முகவராக பெரும் துணைபுரியும், செயற்பட்டு வரும் சோமசுந்தரம் நிரஞ்சன் என்பவரும் இந்த சந்திப்புக்களில் கலந்துகொண்டுள்ளமை (மேலே இணைக்கப்பட்ட படங்களில் காணலாம்) மேற்படி தகவல்களை தற்போது முழுமையாக உறுதி செய்துள்ளது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்த நிரஞ்சன், அவரது தகப்பனார் சோமசுந்தரம் அடித்த கொள்ளைகளை விடுதலைபுலிகள் தடுத்து நிறுத்தியதால் சிங்கள அரச பயங்கரவாதிகளுடனும் பின்னர் ஹிந்தியப் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட்டு வந்ததாக யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் கூறுகின்றனர்.   அதன் பின்னர் இந்த நிரஞ்சன் என்பவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஹிந்திய பயங்கரவாதிகளின் முழுநேர முகவராக செயற்பட்டு வருவதாக தெரிகிறது. புலம் பெயர்ந்து இந்தியாவிலும் பின்னர் இன்னோரு நாட்டிலும் வாழ்ந்துவரும் இவர் மாதத்துக்கு ஓரிரு தடவைகள் இலங்கை சென்று வருவதாகவும் அடிக்கடி வவுனியாவில் தங்குவதாகவும் தெரியவருகிறது.   ஈழத் தமிழின அழிப்புக்கு பெரும் துணைபுரியும் இந்தப் பயங்கரவாத முகவர்களுடன் கனடா குகதாசன், பிரித்தானிய தமிழர் பேரவையின் ஞாநி, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் இளங்கோ ஆகியோரும் இணைந்து செயற்படுவது நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
  • ஈழத்து இந்துக் கோயில்­களின்  தொன்மை குறித்த ஆய்வு மாநாடு தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்­பாடு மற்றும் இந்து சமய, விவ­கார அமைச்சின் வழி­காட்­டலில் இயங்கும் இந்து சமய, கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் இவ்­வ­ரு­டத்­திற்­கான ஆய்வு மாநாடு “இரு­பதாம் நூற்­றாண்­டுக்கு முற்­பட்ட ஈழத்து இந்­துக்­கோ­யில்கள் – தொல்­பொ­ருட்­களும் இலக்­கிய மர­பு­களும்” எனும் தொனிப்­பொ­ருளில் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்து சம­யத்தைப் பொறுத்­த­வ­ரையில் கோயில்கள் பிர­தான இடம் வகிப்­பன. இந்து கலா­சாரம் கோயிலை மையப்­ப­டுத்­திய கலா­சா­ர­மா­கவே விளங்­கு­கின்­றது. அழிந்­த­னவும் அழி­யா­த­ன­வுமாய் விளங்கும் கோயில்கள் பற்றித் தொல்­பொ­ருட்கள், இலக்­கிய மர­பு­க­ளி­ன­டி­யாகச் செவ்­வை­யான முறையில் ஆராய வேண்­டி­யதும் அந்த ஆராய்ச்­சியின் முடி­வு­களை ஒழுங்­காகப் பதி­வு­செய்ய வேண்­டி­யதும் நமது பிர­தான கட­மைகள் என்­பதைச் சம­கால இலங்­கையின் சமூக அர­சியல் நிலை­மைகள் எமக்குத் துலாம்­ப­ர­மாக உணர்த்தி நிற்­கின்­றன. ஈழத்தில் இந்து சம­யத்தின் தொன்­மை­யையும் அங்கு அது பெற்­றி­ருந்த செல்­வாக்­கையும் உணர்த்­து­வ­ன­வாக அமை­கின்ற இந்­துக்­கோ­யில்­களை அவற்றின் வர­லாற்றுப் பெரு­மை­யோடு சான்­று­களின் ஊடாக மீட்­டெ­டுப்­பதே இந்த ஆய்வு மாநாட்டின் பிர­தான நோக்­க­மாகும்.   பூர்­வீகக் காலம் முத­லாக இலங்­கையில் இந்து சமயம் நில­வி­வ­ரு­கி­றது. அது இந்­துக்­க­ளது நம்­பிக்­கையில் மாத்­தி­ர­மன்றிச் சிங்­கள பௌத்த மக்­க­ளது நம்­பிக்­கை­யிலும் நிலை­பெற்று வந்­துள்­ளது. இன்றும் நிலை­கொண்­டுள்­ளது. திருக்­கே­தீஸ்­வரம், திருக்­கோ­ணேஸ்­வரம், கதிர்­காமம் முத­லான தலங்கள் கடல் கடந்து பர­விய பெருமை உடை­ய­னவாய்த் திகழ்ந்­தன. காலத்­துக்குக் காலம் அரி­ய­ணை­யே­றிய சிங்­கள, தமிழ் அர­சர்கள் புதி­ய­ன­வாகப் பல ஆல­யங்­க­ளையும் சதுர்­வேதி மங்­கலம் முத­லா­ன­வற்­றையும் நிறுவி அவற்றின் பிர­பா­ல­னத்தின் பொருட்டு மானி­யங்­க­ளையும் வழங்­கி­னார்கள். அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, யாழ்ப்­பாணம், கோட்டை முத­லான இரா­ச­தா­னி­களில் அவ்­வாறு நிறு­வப்­பட்ட கோயில்கள் பல கில­ம­டைந்­து­விட்­டன.  தொல்­பொருட் சின்­னங்­க­ளூ­டா­கவே அவற்றின் பெரு­மை­யையும் வர­லாற்­றையும் மீட்­டெ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஈழத்து இந்­துக்­கோ­யில்­களுள் பல தமக்­கான இலக்­கி­யங்­க­ளையும் பெற்று விளங்­கி­யுள்­ளன. அவ்­வா­றான இலக்­கியச் சிறப்­புற்ற கோயில்கள் கூடச் சில இன்று மண்­மே­டா­கவும் காடு­மண்­டியும் காட்­சி­ய­ளிக்­கின்­றன. அத்­தகு கோயில்­களை அந்த இலக்­கி­யங்­க­ளூ­டா­கவே மீட்­டெ­டுக்­கக்­கூ­டி­ய­தா­யுள்­ளது. எனினும் பல கோயில்கள் முற்­கா­லத்தில் போலவே இன்றும் பேரோடும் புக­ழோடும் வழி­பாட்டு நடை­மு­றை­க­ளோடும் நிலை­பெற்­றுள்­ளன. இத்­தகு நிலையில் “இரு­பதாம் நூற்­றாண்­டுக்கு முற்­பட்ட ஈழத்து இந்துக் கோயில்­கள்–­தொல்­பொ­ருட்­களும் இலக்­கிய மர­பு­களும்” என்ற ஆய்­வுப்­பொ­ருண்­மையில் தொல்­பொருட் சின்­னங்கள், சாச­னங்கள், தமிழ், சிங்­கள, சமஸ்­கி­ருத, பாளி இலக்­கிய மர­புகள் மற்றும் வெளி­நாட்­ட­வர்கள் எழு­தி­வைத்த குறிப்­புக்கள் போன்­ற­வற்றை ஆய்வு மூலா­தா­ரங்­க­ளாகக் கொண்டு ஆய்வுக் கட்­டுரை சமர்ப்­பிக்க விரும்­பு­ப­வர்கள் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் பதி­னைந்தாம் திக­திக்கு முன்­ப­தாகத் தங்­களின் ஆய்வுக் கட்­டு­ரை­களைப் “பணிப்­பாளர், இந்து சமய, கலா­சார அலு­வல்கள் திணைக்­களம், இல. 248 1/1, காலி வீதி, கொழும்பு– 4” என்னும் முக­வ­ரிக்குப் பதிவுத் தபா­லிலோ அல்­லது hindudir@gmail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கோ அனுப்பி வைக்­கலாம். கட்­டுரை சமர்ப்­பிக்கும் ஆய்வாளர்கள் தமிழில் பன்னிரண்டு புள்ளியளவில் A4 அளவு தாளில் எட்டுப்பக்கங்களுக்கு மேற்படாமல் மேற்கோள், குறிப்புப்பட்டியல், உசாத்துணை நூற்பட்டியல், கட்டுரைச் சுருக்கம், கட்டுரையாளர் விபரம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும் என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது   https://www.virakesari.lk/article/60755