யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
nunavilan

கடைசி ஒருநாள் போட்டி - நியூசிலாந்து வெற்றி பெற 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Recommended Posts

கடைசி ஒருநாள் போட்டி - நியூசிலாந்து வெற்றி பெற 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

வெல்லிங்டனில் நடைபெற்று வரும் 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 
கடைசி ஒருநாள் போட்டி - நியூசிலாந்து வெற்றி பெற 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
 
வெல்லிங்டன்:

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது.
 

இந்திய அணி முதல் 3 போட்டியில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது. விராட்கோலி இல்லாத அணி 4-வது போட்டியில் 92 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.

இதனால் இன்றைய கடைசி போட்டிக்கான அணியில் 3 மாற்றம் இருந்தது. காயத்தில் இருந்து குணம் அடைந்ததால் டோனி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல முகமது‌ஷமி, விஜய்சங்கர் ஆகியோரும் இடம் பெற்றனர். தினேஷ்கார்த்திக், குல்தீப்யாதவ், கலீல் அகமது ஆகியோர் கழற்றிவிடப்பட்டனர்.

நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. குப்திப்புக்கு பதிலாக முன்ரோ இடம் பெற்றார்.

‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. 18 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது.
 
ரோகித்சர்மா 2 ரன்னிலும், சுப்மன் ஹில் 7 ரன்னிலும் ஹென்றி பந்தில் ஆட்டம் இழந்தனர். தவான் 6 ரன்னிலும், டோனி 1 ரன்னிலும் போல்ட் பந்தில் ‘அவுட்’ ஆனார்கள்.
 
201902031131142557_1_india._L_styvpf.jpg


5-வது விக்கெட்டான அம்பதிராயுடு- விஜய் சங்கர் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுப்புடன் ஆடியது. இருவரும் நிதானமாகவே ஆடினார்கள். இதனால் 29-வது ஓவரில் தான் இந்தியா 100 ரன்னை தொட முடிந்தது.

சிறப்பாக விளையாடி வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் தனது அறிமுக அரை சதத்தை எடுப்பார் என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் 64 பந்தில் 4 பவுண்டரியுடன் 45 ரன்களை எடுத்த அவர் துரதிருஷ்டவசமாக ‘ரன்அவுட்’ ஆனார். 

இறுதியில் 49. 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது.  அதிகபட்சமாக அம்பதிராயுடு 90, விஜய் சங்கரும் ஹர்திக் பாண்டியாவும் தலா 45 ரன்களை எடுத்தனர். 

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மேட் ஹென்றி 4, பவுல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/03113114/1225882/NZvIND-5th-ODI-253-runs-target-in-New-Zealand.vpf

Share this post


Link to post
Share on other sites

இறுதி ஒருநாள் போட்டி – 35 ஓட்டங்களால் இந்தியா வெற்றி!

india-won.jpg

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இதனால் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

வெலிங்டனில் நடைபெற்ற ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் படி களமிறங்கிய அவ் அணி ஆரம்பத்தில் 18 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டைகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும் பின்னர் இணைந்த விஜய் சங்கர் மற்றும் அம்பத்தி ராயுடு ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். பின்னர் அணியின் ஓட்டம் 116 ஆக அதிகரித்த போது, விஜய் சங்கர் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மத்திய துடுப்பாட்ட வீரர்களின் உதவியுடன் இந்தியா அணி, 49.5 ஓவர்கள் நிறைவில் 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் அம்பத்தி ராயுடு 90 ஓட்டங்களையும், ஹார்டிக் பாண்டியா 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மாட் ஹென்றி 4, ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

இதன் பின்னர் 253 என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 44.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்று 35 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அவ்வணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் 44, கேன் வில்லியம்சன் 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் யூசுவெந்திர சஹால் 3 விக்கெட்களையும் மொஹமட் ஷமி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

இதனால் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்பட்டார்.

 

http://athavannews.com/இறுதி-ஒருநாள்-போட்டி-35-ஓட்/

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு