Jump to content

சிறப்புப் பார்வை: ‘இளையராஜா 75’ல் ரிலீஸாகாத பின்னணி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புப் பார்வை: ‘இளையராஜா 75’ல் ரிலீஸாகாத பின்னணி!

69.jpg

-இராமானுஜம்

தமிழ் திரையுலகம் சாதனையாளர்களை கௌரவிக்க, தங்கள் துறைக்கு நன்மை செய்தவர்களை பாராட்ட, விழாக்கள் பலவற்றை நடத்தியிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பாராட்டு விழாக்களை பலமுறை நடத்தியிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இவர்கள் இருவரும் சம்பளமாக பணம் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இளையராஜாவின் பாராட்டு விழா அப்படிப்பட்டதாக இருக்கவில்லை.

1976 மே 14 அன்று வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் மறைந்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, இந்திய சினிமாவில் 42 ஆண்டு காலம் பல மொழிகளில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்தவர். இளையராஜா தனது இசை பயணத்தில் மூன்றாம் தலைமுறையோடு பயணித்துக் கொண்டிருக்கிறார். இளையராஜாவிடம் 500 படங்களுக்கு மேல் கீபோர்டு பிளேயராக பணியாற்றிய A.R.ரஹ்மான் 1992ல் ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் வரை தமிழ் சினிமாவில் பறந்து வந்த ராஜாவின் கொடி இறங்கியது.

இளையராஜாவுக்கு 75 வயது நிறைவடைவதையொட்டி, அவரை கௌரவிக்கும் வகையில் ‘இளையராஜா - 75’ எனும் பெயரில் சென்னையில் இரண்டு நாள் விழா நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்தது. ஏற்கெனவே நடந்த விழாக்களை தமிழ் திரையுலகம் ஒன்றுபட்டு ஒற்றுமை உணர்வுடன் நடத்தினார்கள். அவ்விழாக்கள் தமிழ் சினிமாவில் வரலாறாக மாறியது. இளையராஜாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்த அவர் வாங்கியுள்ள சம்பளம் சுமார் 3.5 கோடி என்கிற தகவல் தமிழ் திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

69a.jpg

ஆர்மோனிய பெட்டியுடன் சென்னை வந்த ராசய்யா என்ற இளைஞனை இளையராஜாவாக மாற்றி உச்சி முகர்ந்து உயரத்தில் அமர்த்தி அழகு பார்த்தது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தான். தனது இசைத் திறமையால் வளர்ந்திருந்தாலும் அதற்கு அடித்தளமிட்டு, வாய்ப்புகளை வழங்கியது தயாரிப்பாளர்களே. அவர்களது சங்கம் நடத்தும் பாராட்டு விழாவை எந்த விதமான சன்மானமும் வாங்காமல் கலந்து கொள்கிறேன் என கூறுகிற பக்குவம், பெருந்தன்மை இளையராஜாவிடம் இல்லை. அதன் ஆதங்கம், எதிரொலியை பிப்ரவரி 2 அன்று சென்னையில் நடந்த முதல் நாள் நிகழ்ச்சியில் காண முடிந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். இளையராஜாவின் இசை வளர காரணமாக இருந்த இயக்குனர்களும், பாடலாசிரியர்களும், தயாரிப்பாளர்களும் முதல் நாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக இளையராஜாவின் இசையை தன் பாடல் வரிகள் மூலம் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்த கவிஞர் வைரமுத்து; அப்பாடல் வரிகள், இசையை காட்சிகள் மூலம் திரையரங்குகளுக்கு கொண்டு சென்ற இயக்குனர் பாரதிராஜா இருவருமே விழாவுக்கு வரவில்லை. அவர்கள் இந்த விழாவில் இடம்பெறுவதே இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

இளையராஜாவை பெருமைப்படுத்தும் விழாவில் அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள் ராஜாவுடனான அனுபவங்களை, அவரது இசை ஆளுமையை பற்றி பேசியிருப்பதற்கான ஏற்பாடுகளை விழா ஏற்பாட்டாளர்கள் செய்யத் தவறிவிட்டு, கிடைத்தவர்களை வைத்து சோபையான நிகழ்ச்சிகளை அரங்கேற்றியது கண்டு விழாவுக்கு வந்தவர்களின் முகம் இருண்டுபோனதைக் காண முடிந்தது. இந்த விழாவுக்கு A.R.ரஹ்மானை கலந்து கொள்ள சம்மதிக்க வைத்த இயக்குனர் பார்த்திபன் தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததற்கான காரணமும் புரிந்தது. இது போன்ற விழாக்களில் நிகழ்ச்சிகளை வடிவமைப்பதிலும், ஒருங்கிணைப்பதிலும் கைதேர்ந்த பார்த்திபன் கூறிய ஆலோசனைகளை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் நிராகரித்ததால் நடக்கப் போகிற சொதப்பல் நிகழ்ச்சிகளுக்கு தானும் காரணமாகிவிடக் கூடாது என்ற சுய மரியாதையே அவரை ராஜினாமா கடிதம் கொடுக்க வைத்தது என்கின்றனர்.

69b.jpg

A.R.ரஹ்மான் விழா அரங்கிற்குள் நுழைந்த போது அரங்கம் அதிர கைத்தட்டல் ஒலித்தது. இளையராஜாவை கௌரவிக்க மேடையேறிய போது அவர் மூலம் தன் பெருமை பேசவைக்க பலமுறை முயற்சித்தார் இளையராஜா. அதனை ஒற்றை வரி பதிலில் முடிவுக்கு கொண்டு வந்தார் ரஹ்மான். “என்னிடம் 500 படங்களுக்கு வேலை செய்ததை நீ கூறவில்லையே?” என இளையராஜா கூறிய போது, ‘அவரைப் பாராட்ட வந்த மேடையில் இதெல்லாம் தேவையா?’ என்ற குரல்களை ரசிகர்கள் மத்தியிலிருந்து கேட்கமுடிந்தது. "உங்களிடம் ஒரு படம் வேலை செய்தாலே எல்லா அனுபவமும் கிடைக்கும்” என்ற ஒற்றை வரி பதிலில் தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தினார் ரஹ்மான்.

வரலாறு அறியாதவர்கள் தலைமை பொறுப்பில் இருந்து நடத்துகிற விழாக்கள் அமெச்சூர் தனமாக இருக்கும் என்பதை முதல் நாள் விழா நிகழ்ச்சிகள் பறைசாற்றியது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு அறிவும், அனுபவமும், ஆளுமையும் மிக முக்கியமானது. நடிகையாக இருந்தால் மட்டும் போதுமானதல்ல என்பதை சுஹாசினி, அவரது தங்கை, சர்ச்சைக்குரிய நடிகை கஸ்தூரி ஆகிய ரிட்டயர்டு நடிகைகளை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஏற்பாடு செய்ததில் வெளிப்பட்டது நிகழ்ச்சி வடிவமைப்பாளர்களின் அமெச்சூர் தனம்.

பொதுவான ஒரு விழாவில் தங்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை அரங்கேற்றும் விதமாக நிகழ்ச்சிகளை அரங்கேற்ற அனுமதித்த விஷாலின் முடிவு எதிர்வரும் நாட்களில் பிரச்சினைகளையும், விவாதத்தையும் திரையுலகில் ஏற்படுத்தும். அவருக்கு எதிராக இயக்குனர்கள் சங்கம் கண்டனங்களை வெளிப்படுத்தவும் கூடும். ஏனென்றால், தமிழ் சினிமாவில் இளையராஜா பங்களிப்பு இல்லாமல் வெற்றிப் படங்களை இயக்கியவர்கள் T.ராஜேந்தர், ஷங்கர், S.J.சூர்யா, ஹரி, சுந்தர்.சி ஆகியோர். இவர்கள் இளையராஜாவிடம் இசையமைக்க கேட்டு வருவது போன்று டிராமா ஒன்றை நடத்தியதில் தெரிந்தது இளையராஜாவின் ஆதங்கமும், நடிகர் விஷாலின் வெறுப்பும்.

இளையராஜா தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் அஷ்டாவதனியாக தனி ராஜாங்கம் நடத்தி தனது படங்களை வெற்றி பெற வைத்ததுடன், அப்படத்தின் பாடல்களை தனது இசையால் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கச் செய்தவர் T.ராஜேந்தர். சிம்புவை சீண்ட விரும்பியவர்கள் ராஜேந்தரை காமெடியானாக சித்தரித்து கலாய்க்கும் வகையில் நிகழ்ச்சியை வடிவமைத்து அரங்கேற்றியது அறுவை ரகம் மட்டுமல்ல, சாதனையாளரை அவமானப்படுத்தியதற்கு ஈடானது. மற்ற நால்வரையும் அவமானப்படுத்தியது எப்படி?

நாளை தொடரும்.

 

https://minnambalam.com/k/2019/02/03/69

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா 75: கரை சேர்த்த கமல்

40.jpg

இராமானுஜம்

இளையராஜா 75 முதல் நாள் நிகழ்ச்சி நடிகர் சங்க நிகழ்ச்சிபோல நடந்தது. நடிகர் விஷாலைச் சுற்றி அரணாக இருந்துகொண்டு பிறரை நெருங்கவிடாமல் அவரைத் தங்கள் விருப்பப்படி ஆட்டுவித்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் கட்டுப்பாட்டில் முதல் நாள் நிகழ்ச்சிகள் இருந்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இயக்குநர்கள் ஷங்கர், சுந்தர்.சி, ஹரி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்துப் பரிகாச நாடகத்தை அரங்கேற்றியதற்கு இதுதான் காரணம். இது பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக இரண்டாம் நாள் நிகழ்ச்சியைத் தயாரிப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் நிகழ்ச்சி வண்ணமயமாக மாறியதைக் காண முடிந்தது.

தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணியில் இருக்கும் திரைக் கலைஞர்களில் இளையராஜாவின் இசையைக் கேட்டு, உணர்ந்து, பயணித்தவர்கள் அதிகம் பேர் இல்லை என்றே கூறலாம். அதனால்தானோ என்னவோ இளைய கலைஞர்கள் இரண்டாம் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. அவருடன் பயணித்த தெலுங்கு நடிகர்கள் மோகன் பாபு, வெங்கடேஷ் இருவரும் வந்திருந்து வணங்கி வாழ்த்தியது தாய்மொழி கடந்து ராஜா இசை அரசாங்கம் நடத்தியதை உணர்த்தியது.

முதல் நாள் நடந்த டிராமாவில் கிண்டலடிக்கப்பட்ட இயக்குநர் ஷங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருந்து மேடையேறி ராஜாவை வாழ்த்தியதும் அவருடன் இணைந்து பணியாற்ற இயலாமல் இருப்பதற்கான காரணத்தை விவரித்ததும் மனதை நெகிழச் செய்தன.

“நான் ராஜா சாரின் இசை கேட்டு வளர்ந்தவன். எனது முதல் படத்தில் இளையராஜாவை இசையமைக்க வைக்க முடிவு எடுத்த பின் அவரிடம் என்னால் வேலை வாங்க முடியுமா என்ற தயக்கம், தாழ்வு மனப்பான்மை, பயம் ஆகியவை அவருடன் இணைய முடியாமல் போகச் செய்துவிட்டன. சிறு வயது முதல் ராஜாவின் இசையைக் கேட்டு, உணர்ந்து வளர்ந்தவன் நான். ராஜாவின் ரசிகனாகவே இன்றும் நான் இருக்கிறேன்” என அவர் மிகுந்த பணிவுடன் சொன்னபோது அரங்கம் ஆர்ப்பரித்தது.

40a.jpg

மணி ரத்னம் படம் மூலம் தான் பாடலாசிரியராக மாறியதை, மணி ரத்னம் மேடைக்கு வந்தபோது இளையராஜா பகிர்ந்துகொண்டார்.

ரஜினியை ராஜா மேடைக்கு அழைத்த போது தனது வழக்கமான ஆன்மிக பாணியில் ராஜாவுடனான தனது அனுபவங்களை ரஜினி கூறினார். "இளையராஜா சுயம்பு - இது அபூர்வமானது அதனாலேயே அதற்குச் சக்தி அதிகம், அதனால் தான் 42 ஆண்டுகள் கடந்தும் இளையராஜா இசை உலகில் ஆட்சி செய்கிறார். ஆன்மீகத் தேடலில் ரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்து உணர வைத்த சாமி அவர். சரஸ்வதி அவருடன் இருப்பதால் லட்சுமியும் அவருடன் இருக்கிறார். என் படங்களைக் காட்டிலும் கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை இசையமைத்துக் கொடுத்தவர் இளையராஜா” எனக் கூறி விழாவைக் கலகலப்பாக்கினார்.

அதுவரை இயல்பான இசைக் கச்சேரி நிகழ்வாகக் கடந்துகொண்டிருந்த நிகழ்ச்சி கமல் வருகைக்குப் பின் சூடு பிடித்தது என்றால் மிகையில்லை. நேற்றைய நிகழ்ச்சியைக் கலகலப்பாக, அறிவுப்பூர்வமானதாக, அர்த்தமுள்ளதாக மாற்றி தனக்கும் இளையராஜாவுடனான நட்பை, தொழில் உறவைக் காதலுடன் கட்டிப்பிடித்து ராஜாவுக்கு முத்தம் கொடுத்து நிகழ்ச்சியைப் பெரும் வெற்றியாக மாற்றினார் கமல்ஹாசன்.

தமிழ் சினிமாவின் இரு துருவங்களில் ஒருவர், பரபரப்பான அரசியல்வாதி என்பதைக் கடந்து ஒரு கலைஞனாக, ராஜாவின் பரம ரசிகனாகவே மாறினார் கமல்ஹாசன். நேற்றைய தினம் இசைக்கச்சேரியில் பாடப்பட்ட பாடல்களில் எட்டுக்கும் மேற்பட்ட பாடல்களை தன் மகள் ஸ்ருதி ஹாசனுடனும், மற்றும் பிற பாடகர்களுடனும் இணைந்து பாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

வந்தோமா வாழ்த்தினோமா என்று பிற நடிகர்களைப் போல அல்லாமல் விழாவைத் தன் வசப்படுத்தி தயாரிப்பாளராக சங்கத்துக்குப் பெருமை சேர்த்தார். திரைத்துறை ஆளுமையாக எந்த நிலையிலும் தன்னால் பிரகாசிக்க முடியும் என்பதைத் தான் பாடிய பாடல்கள் மூலம் நிரூபித்தார். இப்படி ஒரு நிகழ்வு விழாவில் அரங்கேறும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் அரங்கில் அமர்ந்திருந்தபோதே தன்னை அரசியலுக்கு வா என்று அழைத்த சகோதரன் இளையராஜா என்பதைப் பகிரங்கமாக சொன்னார் கமல். என்னை நன்றாகப் பாட வைத்த வாத்தியார் இளையராஜா என்று புகழாரம் சூட்டினார் கமல்.

40b.jpg

ஒரு கட்டத்தில் கமலும் - ராஜாவும் இணைந்து பாடிய போது நெகிழ்ந்து ராஜாவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போது அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. கதாநாயகிக்குக் கொடுக்க வேண்டியதை எனக்குக் கொடுத்து விட்டார் என ராஜா கூறிய போது , நான் ராஜாவின் இசையைக் காதலிப்பவன் இந்த மேடையில் முத்தம் கொடுப்பது பொருத்தமானது. இது எங்களது மேடை என்றார் கமல். ஒரு திரை ஆளுமையை அதற்கு இணையான திரை ஆளுமை பாராட்டுவது அபூர்வமானது.

முதல் நாள் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் அதனைச் செய்தார் இரண்டாம் நாள் கமல்ஹாசன் அந்தப் பெருமையைத் தன்வயப்படுத்தி இளையராஜாவைப் பெருமைப்படுத்தினார்.

மோசமான நிகழ்ச்சி வடிவமைப்பால் தடுமாறிக்கொண்டிருந்த விழாவை தன் ஆளுமையால் கரை சேர்த்து தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கௌரவம் தேடிக் கொடுத்திருக்கிறார் கமல்.

(பஞ்சு அருணாச்சலத்தை மறந்த - பண்ணைபுரம்

கங்கையைக் கைகழுவிய ராஜா 

 

https://www.minnambalam.com/k/2019/02/04/40

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புப் பார்வை: இளையராஜாவின் செயற்கை மறதி!

69.jpg

இராமானுஜம்

இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் பண வரவையும், இளையராஜாவுக்கு பண வரவுடன் கூடிய பாராட்டு மழையையும் வழங்கியிருக்கிறது.

திரையுலகில் வளர்ந்த பின், நட்சத்திர அந்தஸ்தை அடைந்த பின் தொடங்கிய இடத்தைத் திரும்பி பார்ப்பதும், தொடக்கத்துக்கு காரணமாக இருந்தவர்களையும் பெரும்பான்மையானவர்கள் நன்றி உணர்வுடன் நினைவுகூர்வது அரிதாகிவருகிறது. இளையராஜாவின் 42 ஆண்டு காலத் திரையுலக இசைப் பயணத்தை வெற்றிகரமாக பயணிக்க அடித்தளமிட்டுக் கொடுத்தவர் தயாரிப்பாளர், இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர் எனப் பன்முகத் தன்மை கொண்ட அமரர் பஞ்சு அருணாச்சலம்.

தமிழ் சினிமாவில் சாதனை புரிந்த இளையராஜா நேற்றைய நிகழ்ச்சியில் தனது இசை குரு டி.வி. கோபாலகிருஷ்ணனை மேடையேற்றி அறிமுகம் செய்து ஆசிர்வாதம் வாங்கினார். அதன் பின் திரைப்பயணத்தில் தனக்கு ஆதர்சமாக, துணையாக இருந்தவர்களின் புகைப்படங்களை வரிசைப்படுத்தி அவர்களைப் பற்றிப் பெருமையுடன் கூறினார். ஆனால், அவருக்கு முதல் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தை நினைவுகூரவும் பெருமைப்படுத்தவும் இல்லை. அவர் அப்போது வாய்ப்பு வழங்கவில்லை என்றால் இளையராஜா இந்த நிலையை எட்டுவதற்குத் தாமதமாகியிருக்கும்.

அன்னக்கிளி என்ற படத்தின் பாடல்கள் மூலம் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் யார் அந்த இளையராஜா என்று கேட்க வைத்த படத்தின் தயாரிப்பாளர் அமரர் பஞ்சு அருணாச்சலம். அவர் இல்லை என்றாலும் அவர்களது குடும்பத்தினரை மேடையேற்றி கெளரவப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமையை விழா நடத்திய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இளையராஜாவும் செய்யத் தவறினார்கள்.

இசைத் திறமை மட்டும் இருந்தால் போதாது அழகிய பாடல் வரிகளும், மக்கள் ரசிக்கும்படியான காட்சியமைப்புகளும் இடம் பெற்றால் மட்டுமே அது வெற்றிகரமான திரைப்படமாகும் என்பது இளையராஜாவுக்கு தெரியாமல் இல்லை. தனது வளர்ச்சிக்கானவர்கள் எனப் பட்டியலிடப்பட்டதில் அவர் எந்த இயக்குனரையும் அடையாளப்படுத்தவில்லை. இது ஒரு வரலாற்றுப் பிழை. உலகம் அறிந்த, அவரது வளர்ச்சிக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த இயக்குனர்களையும் பாடலாசிரியர்களையும் இளையராஜா நினைவுகூரவே இல்லை.

உடனிருந்து உழைத்து அவர் உயர்வுக்கு உரமிட்ட சொந்த சகோதரனையும் இருட்டடிப்பு செய்த கொடுமையும் அங்கே அரங்கேறியது.

கங்கை அமரனை இளையராஜா கண்டு கொள்ளாதது ஏன்?

பாரதிராஜாவும் - வைரமுத்துவையும் இருட்டடிப்பு செய்யப்பட்டது ஏன்?

நாளை...

 

https://minnambalam.com/k/2019/02/04/69

 

Link to comment
Share on other sites

பல ஊடகங்களும், இணையத்தளங்களும், சமூகவலைத்தளத்தில் எழுதி வருகின்றவர்களும் பாராட்டியும் நெகிழ்ந்தும் எழுதி வரும் இளையராஜாவின் 75 வயதையொட்டிய இவ் நிகழ்வில் உள்ள எந்த நிறைகளையும் பற்றிக் குறிப்பிடாமல் வெறுமனே குறைகளை மட்டுமே  எழுதுகின்றது மின்னம்பலம்.

ஆர்கெஸ்ரா வைத்திருக்கும் ஒருவர் காசு வாங்காமல் இசை கச்சேரி வைக்க வேண்டும் எனில் ஆர்கெஸ்ராவில் பணி புரிகின்ற அனைத்து இசைக்கலைஞர்களும் இலவசமாக (ஹங்கேரியன் இசைக் கலைஞர்கள் உட்பட) பணியாற்றினால் மட்டுமே சாத்தியம் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாதளவுக்கு இளையராஜாவின் மேல் காழ்ப்புணர்வுடன் அவரை மட்டுமே பிரதானமாக இலக்கு வைத்து இப் பத்தியை எழுதி வருகின்றனர். ஒரு நிகழ்வில் எந்தெந்த படங்களை வைக்க வேண்டும் மற்றும் எவரை அழைக்க வேண்டும் என்பதெல்லாம் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் பணி என்பதை கூட மறந்து விடுகின்றனர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் புகழ்ழ்சியை மட்டும் பார்க்காமல் மற்றைய பக்கத்தையும் பார்க்கவேண்டும் கனம் கோட்டார் அவர்களே!

இளையராஜா என்ற மனிதனைப் பற்றி யார் என்ன விமர்சனம் வைத்தாலும் அவர் இசை மேல் இருக்கும் மதிப்பு குறைவதில்லை. இளையராஜா இசையைக் கேட்காமல் ஒருநாளும் கழிவதில்லை😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா 75: தவிர்த்துவிட்ட தருணங்கள்!

27.jpg

இராமானுஜம்

தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு நடத்திய பாராட்டு விழாவுக்கு யாரை எல்லாம் அழைக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் யாரை அழைக்கக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினார் என்கின்றனர் விழா நடத்தியவர்கள்.

இளையராஜாவின் 42 ஆண்டு கால திரை இசைப் பயணத்தில் தவிர்க்க முடியாத ஆளுமைகள் அவரது சகோதரர் கங்கை அமரன், அவருடைய மண்ணின் மைந்தர்கள் இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர் வைரமுத்து.

திரைப்படத்துக்கு இசை எப்படி முக்கியமோ அது போன்று அதில் இடம்பெற்ற பாடல்களுக்குத் தங்கள் குரல் மூலம் உயிர் கொடுத்தவர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி உள்ளிட்டோர். இவர்கள் அனைவரையும் இளையராஜா 75 நிகழ்வில் தவிர்த்துவிட்டார்கள்.

வைரமுத்துவுக்கும் ராஜாவுக்கும் நடைபெற்ற வாக்குவாதமே இன்று வரை அவர்களது பிரிவைத் தொடரச் செய்கிறது. இதனைச் சரிசெய்ய அவர்களது நலம் விரும்பிகள் பலமுயற்சிகளை மேற்கொண்டும் அதற்கு ராஜா உடன்படாததால் இணைப்பு நடக்கவில்லை. வைரமுத்து இளையராஜாவுடன் இணைந்து செய்த பங்களிப்பு காலம் கடந்தும் ரசிகனை பரவசப்படுத்தக்கூடியது.

இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிகளின் குவியலாக இருப்பவர். எளிதில் உணர்ச்சிவசப்படும் சுபாவம் கொண்டவர். அன்னக்கொடியும் கொடிவீரனும் பட விழாவில் நண்பன் என்ற உரிமையில் ராஜாவை ஒருமையில் திட்டிய காரணத்தால் இருவரும் இரு துருவங்களாகவே இன்று உள்ளனர்.

இளையராஜாவின் இசைப் பயணத்தில் அவர் அதிகப் படங்களை ஒப்புக் கொண்ட காலங்களில் அனைத்துத் தயாரிப்பாளர்களின் படங்களும் தாமதமாகாமல் இசைக்கோர்ப்பு நடைபெறப் பின் பலமாக இருந்தவர் அவரது சகோதரர் கங்கை அமரன். குடும்பப் பிரச்சினை இவர்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தியது.

இளையராஜாவுக்கு விழா எடுத்தவர்கள் அவரது திரைப்பயணத்தில் பிரதான பங்களிப்பு செய்தவர்களும் கலந்துகொள்ளும் வகையில் இரு தரப்புடனும் பேசி ஒற்றுமைப்படுத்தி குதூகலமான விழாவாக நடத்தியிருந்தால் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பெருமைக்குரிய விழாவாக ‘இளையராஜா 75’ நிகழ்ச்சி பதிவாகியிருக்கும்.

 

 

https://minnambalam.com/k/2019/02/05/27

 

Link to comment
Share on other sites

15 minutes ago, கிருபன் said:

தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு நடத்திய பாராட்டு விழாவுக்கு யாரை எல்லாம் அழைக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் யாரை அழைக்கக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினார் என்கின்றனர் விழா நடத்தியவர்கள்.

இளையராஜாவின் 42 ஆண்டு கால திரை இசைப் பயணத்தில் தவிர்க்க முடியாத ஆளுமைகள் அவரது சகோதரர் கங்கை அமரன், அவருடைய மண்ணின் மைந்தர்கள் இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர் வைரமுத்து.

 

 

 

ஆனால் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பத்திரியாளர்கள் இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு 'இவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியும் வரவில்லை' என்று தான் விசால் குறிப்பிட்டு இருக்கின்றார்.

 

15 minutes ago, கிருபன் said:

இளையராஜா 75: தவிர்த்துவிட்ட தருணங்கள்!

 

இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிகளின் குவியலாக இருப்பவர். எளிதில் உணர்ச்சிவசப்படும் சுபாவம் கொண்டவர். அன்னக்கொடியும் கொடிவீரனும் பட விழாவில் நண்பன் என்ற உரிமையில் ராஜாவை ஒருமையில் திட்டிய காரணத்தால் இருவரும் இரு துருவங்களாகவே இன்று உள்ளனர்.

 

 

பாரதிராஜாவுடன் பிரிவு ஏற்பட்டு பல தசாப்தங்களாகி விட்டன. நான் நினைக்கின்றேன் கொடி பறக்குது தான் கடைசிப் படம் என. இவர்களின் பிரிவுக்கு சரியான காரணம் எவரும் சொல்லவில்லை. ஆனால் அன்னக்கொடி நிகழ்வில் பாரதிராஜா இளையராஜாவை மேடையில் வைத்தபடியே ஏக வசனத்தில் பேச, இளையராஜா சூடாக பதில் கொடுத்து இருந்தது சரி.

இராமானுஜம்: இந்த பெயர் குறிக்கும் சமூகத்தில் இருக்கும் பலர் எப்பவுமே இளையராஜாவை மதிப்பது இல்லை என்பதுக்கு காரணம் அனைவரும் அறிந்தது தானே

Link to comment
Share on other sites

42 minutes ago, கிருபன் said:

வெறும் புகழ்ழ்சியை மட்டும் பார்க்காமல் மற்றைய பக்கத்தையும் பார்க்கவேண்டும் கனம் கோட்டார் அவர்களே!

இளையராஜா என்ற மனிதனைப் பற்றி யார் என்ன விமர்சனம் வைத்தாலும் அவர் இசை மேல் இருக்கும் மதிப்பு குறைவதில்லை. இளையராஜா இசையைக் கேட்காமல் ஒருநாளும் கழிவதில்லை😁

இளையராஜாவை இராமானுஜம் புகழ்ந்தால் தான் இனி அவருக்கு புகழ் கிடைக்கும் என்ற நிலையில் இளையராஜா இல்லை. ஆனால் ஒரு நிகழ்வில் இருக்கும் குறைகளை மட்டுமே தூக்கிப் பிடித்து எழுதுவது தர்மமாக ஆகாது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  இளையராஜாவுக்கான இந்த இருநாள் விழாவில் கமலகாசன்,ரகுமான்,ரஜனிகாந்த் ஆகியோர் பங்குபற்றியிருக்காவிட்டால் இன்னும் அருவருப்பான கதைகள் கருத்துக்கள் வந்து கொண்டேயிருக்கும்.
தென்னிந்திய அனைத்து இசைக்கலைஞர்களும் சேர்ந்து கொண்டாடியிருக்கவேண்டிய பெருவிழா பல விமர்சனங்களுடன் முடிவடைந்தது ஒருவித சோகமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2019 at 4:31 PM, கிருபன் said:

இளையராஜா தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் அஷ்டாவதனியாக தனி ராஜாங்கம் நடத்தி தனது படங்களை வெற்றி பெற வைத்ததுடன், அப்படத்தின் பாடல்களை தனது இசையால் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கச் செய்தவர் T.ராஜேந்தர்.

 

 

எல்லோரும் வந்திருந்தால் , நிகழ்ச்சி ஓர் இருவர் புகழ் பாடாமல் சம நிலையில் பல ராஜாக்களை கண்டிருக்கும்.

80ம் ஆண்டுகளில் வெளி வந்த நான்கு ராஜாக்களின் (பாரதிராஜா, இளையராஜா, பாக்யராஜ், செல்வராஜா) வெற்றி படைப்புகளுக்கு, ஈடு இணையான படங்களை தனி மனிதனாக கொடுத்தவர் T ராஜேந்தர். 40 ஆண்டுகள் ஆனாலும் அவர் பேசிய வசனமும், படைத்த பாடல்களும் இன்றும் நிலைத்து நிக்கின்றன 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.