Jump to content

நாங்கள் துடுப்பாட்டப்போட்டியில் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்கலாமா?. நாங்கள் சிறிலங்கனா?

Recommended Posts

சிங்கக்கொடியைத் தூக்கி சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கிவிட்டு அரசியல் விளையாட்டு என்று பேசித்திரியும் புத்திசீவிகளிடையே ( புத்தியாகத் தங்கள் வசதிக்கேற்ப சீவிப்பவர்கள்) பல இடர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்தும் தமிழ்க் கொடியைத் தூக்கித் தமிழுணர்வைக் காட்டிய அந்த இளைஞன் உண்மையான வீரன் அதற்கும் அப்பால் தமிழன். எங்களுடைய சகோதரன்

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply

நமது எதிர்ப்பை எந்தவளியில் காட்டனுமோ அந்த வளியில் காட்டனும் எமக்குள்ளேயே காட்டி எந்த பிரயோசனமும் இல்லை.

இருந்தாலும் நமது சில ஈழத்து தமிழ் உறவுகழ் Sri Lanka தேசியகொடி சின்னம் பொறிக்கபட்ட ஆடை (ரி .சேட்) அனிந்து வலம் வருவது வேதனைக்குரிய விடயம்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டல் திருட்டை ஒளிக்கமுடியது என்பது போல் அவர்களாய் திருந்தனும்.

Link to comment
Share on other sites

எந்த அணியின் ஆட்டத்தை ரசிப்பதற்கும் யாரும் தடை போடமுடியாது.... தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டே இந்திய அணிக்கு கொடி பிடிக்கும் கூட்டம் இருக்கத் தானே செய்யுது... அப்போது மட்டும் மெளினிகளாக இருந்துவிட்டு இலங்கை அணிக்கு ஆதரவு தருவதில் பிழையிருப்பதாக சொல்வதை நான் ஏற்கவில்லை... துவேஷிகளாக எம்மை இனங்காட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை... இலங்கை அணியில் தான் ஒரு தமிழன் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளவேண்டாம்.... ஒன்று தான் என்பதில் திருப்தி இல்லாவிட்டாலும் அந்த ஒன்று தான் பல வெற்றிகளுக்கு காரணம் என்பதில் தமிழனாக நான் பெருமைப் படுகிறேன்.... !!!

விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்ப்பதே நல்லது... ஏதோ அதிலையும் எங்க எதிர்ப்பைக் காட்டித் தான் எங்க தமிழ் உணர்வை தமிழன் என்ற உணர்வை நிரூபிக்க களத்தில கன பேர் ஆசைப்படுகினம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

aaaaaaes7.jpg

pulixy6.jpg

-Cricinfo-

இவர் மேற்கிந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்பதாகவே தென்படுகிறது. இவர் தமிழுணர்வுடன் இந்தக் கொடியைச் சுமந்திருப்பதாக சொல்வது ஏற்புடையதாக இல்லை. அவர் விடுதலைப்புலிகள் பற்றியும் போராட்டம் பற்றியும் அறிந்து செயற்பட்டிருக்கலாம்.. அல்லது யாரேனும் உதவியுடன் தூண்டுதலின் பேரில் செயற்பட்டிருக்கலாம்..! எதுஎப்படி இருப்பினும் இது விடுதலைப் போராட்டம் பற்றி தகவலைக் காவிச் செல்ல மிகவும் உதவியுள்ளது..!

யாழ் களத்தில் கிரிக்கெட்டை எதிர்ப்போம் என்று பனர் செய்யக் கோரிய போதே தெட்டத்தெளிவாகச் சொன்னோம் இணையத்தில் பனர் பிடிப்பதிலும் மைதானத்தில் பிடிக்க முயலுங்கள் அதுதான் பயனளிக்கும் என்று..! இன்று அதுதான் உண்மை என்றும் ஆகியுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் செயற்பாடாகட்டும் இந்தச் செயற்பாடாகட்டும் இவை அதிகம் சர்வதேச பிரச்சார எல்லைகளைத் தொட்டுள்ளது..! தமிழர்கள் செய்யத் துணியாததை சர்வதேச மன்னிப்புச்சபையும் இந்த நபரும் செய்ததை புலம்பெயர் தமிழர்கள் தங்கள் வெற்றி என்று பறைசாற்றுவது.. கேவலமான கையாலாகாத நிலை..!

மேற்கிந்திய தீவில் புலிக்கொடி தமிழீழத் தேசியக் கொடி பிடிக்க தடையில்லை. எத்தனை தமிழர்கள் கிரிக்கெட் பார்க்கப் போயினர்..??! எத்தனை தமிழர்கள் பிரச்சாரங்களை முன்னெடுக்கப் போயினர்..! வெறுமனவே இணையத்தில் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்றால்.. இப்போ ஈழம் கிடைச்சிருக்க வேண்டும்..! சாத்தியமா..!

கிரிக்கெட் களத்தை பிரச்சாரக் களமாக்க வேண்டி தமிழர்கள் கிரிக்கெட் அணியை விமர்சிப்பதில் காலம் கழித்தனரே தவிர.. வேறெதும் செய்யவில்லை..! இந்த இளைஞர் கொடியைப் பிடித்தது தமிழர் ஒருவர் பிடிப்பதிலும் கூடிய தாக்கமுள்ளதாகவே உள்ளது. நன்றி நண்பரே. அமெரிக்கப் பிரபல்யம் ஒருவர் புலிச்சின்னம் போட்ட பெனியனை தொலைக்காட்சி நிகழ்ச்சியென்றில் அணிந்ததற்காக மன்னிப்புக் கேட்டது போல நிலை இங்கு வரவாய்ப்பில்லை என்றே எண்ணுகின்றோம்..! தமிழர்கள் சாதிக்க மறந்ததை சாதித்த பெருமை இந்த இளைஞரைச் சாரும். அன்று தென்னாபிரிக்க மக்களின் விடுதலைக்காக ஒரு இந்திய காந்தி போனது போல.. இந்த இளைஞரைப் பார்க்க வேண்டியுள்ளது..! :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படங்களுக்கான நம்பகத்தன்மையை அதிகரிக்க வேண்டின் குறித்த படங்களுக்கான நேரடி இணைப்பை சம்பந்தப்பட்டவர்கள் தர வேண்டும்..! குறிப்பிட்ட இணையத்தளத்தில் இவற்றைக் காண்பது சிரமாமாக உள்ளதே..! :lol::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்காலபோவான்.

இவர் மேற்கிந்தியத் தீவைச் சார்ந்தவர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும். என்ன தமிழர்கள் எல்லோரும் வெள்ளை நிறத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாதங்களை நியாயப்படுத்துவதற்காக தெரியாத விடயங்களை நியாயப்படுத்தாதீர்கள்.

யாழ் களத்தில் கிரிக்கெட்டை எதிர்ப்போம் என்று பனர் செய்யக் கோரிய போதே தெட்டத்தெளிவாகச் சொன்னோம் இணையத்தில் பனர் பிடிப்பதிலும் மைதானத்தில் பிடிக்க முயலுங்கள் அதுதான் பயனளிக்கும் என்று..! இன்று அதுதான் உண்மை என்றும் ஆகியுள்ளது.

ஒரு மனிதனால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு தான் இயலும். யாழ்களத்தில் நம்மவர்கள் பனர் கட்டினபோது, அதை எதிர்த்த நீங்கள் ஏன் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் போய் ஆதரவாகக் கொடி பிடிக்கவில்லை? உங்களுக்கு இருக்கின்ற நிலமை தான் மற்றவர்களுக்கும்.

தவிர, யாழ்களத்தில் பனர் கட்டுவதால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லையே. தன்னால் இயலுமானதைச் செய்கின்றார்கள். அதை ஏன் தடுக்க வேண்டும். உங்களால் என்ன முடியுமோ அதைச் செய்யுங்கள். மற்றவர்கள் செய்கின்றபோது இடையில் நின்று புரணி கதைக்காதீர்கள்.

குறித்த சகோதரன் உண்மையில் சாதனையாளன் தான். இவ்வாறு நடந்து கொண்டதற்குப் பிற்பாடு பொலிஸ் அவரைக் கைது செய்ததைக் காட்டினார்கள். பிற்பாடு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழத் தேசியக் கொடி: சிறீலங்கா அணி அதிர்ந்து போனது

மேற்கிந்தியத் தீவுகளில் நேற்று அவுஸ்ரேலியா - சிறீலங்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் தமிழீழத் தேசியக் கொடி தாங்கியவாறு ரசிகர் ஒருவர் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

துடுப்பெடுத்தாட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அவுஸ்ரேலியா வீரர்கள் அவுஸ்ரேலித் தேசிக்கொடியினையும், சிறீலங்கா வீரர்கள் சிறீலங்கா தேசியத் கொடியினை தாங்கியவாறு மைதானத்தினுள் செல்லும் போது அங்கு வந்த ரசிகர் ஒருவரால் தமிழீழத் தேசியக் கொடியினை இரு கைகளிலும் தாங்கியவாறு மைதானத்தின் நடுவே சென்று பார்வையாளர்களின் கவனத்தைத் திசை திருப்பியுள்ளார்.

இதனையடுத்து தமிழீழத் தேசியக் கொடியினைத் தாங்கிச் சென்றவர் மைதான பாதுகாவலரால் மைதானத்தின் நடுவிலிருந்து வெளியேற்றப்பட்டதும் அவர் பின்னர் மைதானத்தைத் சுற்றி ஓடி தமிழீழத் தேசியக் கொடியினை காட்டினார்.

தமிழீழத் தேசியக் கொடி மைதானத்தில் காட்டப்பட்டதால் சிறீலங்கா அணியினர் மற்றும் பார்வையிட வந்த சிங்கள மக்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகினர்.

criket-kodi1.jpg

criket-kodi2.jpg

criket-kodi3.jpg

Pathivu

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்காலபோவான்...

இவர் மேற்கிந்தியத் தீவைச் சார்ந்தவர் என்று **க்கு எப்படித் தெரியும். என்ன தமிழர்கள் எல்லோரும் வெள்ளை நிறத்தில் பிறந்தவர்களா? **து வாதங்களை நியாயப்படுத்துவதற்காக தெரியாத விடயங்களை நியாயப்படுத்தாதீர்கள்.

அவர் மேற்கிந்தியாவை சேர்ந்தவர் அல்ல என்று எப்படி உங்களுக்குத் தெரியும். உங்கள் வாதமே நியாயம் என்பதற்காக தமிழர் என்று அப்படிச் சொல்கிறீர்கள்.. இப்படி பதில் கேள்வி எழுப்ப அதிக நேரம் எடுக்காது.

நாமறியக் கூடிய அளவிலேயே கரிபியனிக்கு இந்த சீசனில் (கிரிக்கெட் நடக்க) கொலிடே போனவர்கள் பல தமிழர்கள்..! அவர்கள் என்ன செய்தார்கள்..??! அப்போ யாழ் களம் சுப்பரின் கொல்லையைத்தான் சுற்ற உதவுதா..??! :lol::huh:

Link to comment
Share on other sites

எந்த அணியின் ஆட்டத்தை ரசிப்பதற்கும் யாரும் தடை போடமுடியாது.... தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டே இந்திய அணிக்கு கொடி பிடிக்கும் கூட்டம் இருக்கத் தானே செய்யுது... அப்போது மட்டும் மெளினிகளாக இருந்துவிட்டு இலங்கை அணிக்கு ஆதரவு தருவதில் பிழையிருப்பதாக சொல்வதை நான் ஏற்கவில்லை... துவேஷிகளாக எம்மை இனங்காட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை... இலங்கை அணியில் தான் ஒரு தமிழன் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளவேண்டாம்.... ஒன்று தான் என்பதில் திருப்தி இல்லாவிட்டாலும் அந்த ஒன்று தான் பல வெற்றிகளுக்கு காரணம் என்பதில் தமிழனாக நான் பெருமைப் படுகிறேன்.... !!!

விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்ப்பதே நல்லது... ஏதோ அதிலையும் எங்க எதிர்ப்பைக் காட்டித் தான் எங்க தமிழ் உணர்வை தமிழன் என்ற உணர்வை நிரூபிக்க களத்தில கன பேர் ஆசைப்படுகினம்....

வணக்கம் நண்பரே

விளையாட்டை விளையாட்டாகா பார்க்க வேண்டும் என நீங்கள்சொல்லுவதை ஏற்று கொள்கின்றேன்.ஆனால் விளையாட்டிலும் துவேசம் பார்க்கும் சிங்களத்தின் மீது அது சரிவராது.தமிழ்ழ் தெரியாது என சிங்கலத்தில் முரளி சொன்னதை நான் என்காதால் கேட்டேன் இலங்கை அணிகளில் எத்தனை தமிழர்கள்ள் இருகின்றனர்.

.கிரிக்கட்டில் எத்தனை சிறந்த தமிழர்கள் இருகின்றனர்.அவர்களை எல்லாம் கணக்கெடுகிறார்களா இல்லையே

முரளியும் ஆர்னல்டும் இருகிறார்கள் என நீங்கள் சொல்லலாம் ஆனால் இருவரும் தமிழைகடின மொழியாகவும் இழி மொழியாகவும் பார்ப்பவர்கள்.லண்டனில் 2003ம் ஆண்டு வெம்பிளி பிரதேசத்தில் நடந்த விளையாட்டு விழாவுக்கு நான் செல்லும் வாய்பு கிடைத்தது.அன்று அவுஸ்திரேலியா கிரிக்கட் வீரர் பிரட் லீ மற்றும் இங்கிலாந்து கிறிக்கட் வீரர்கள் சிலரையும் கொண்ட அணீக்கும் தமிழீழ அணிக்கும் போட்டி நடந்தது.அதில் பிரட்லீக்கு விழுந்த அடியை சொல்லி வேலையில்லை.இது சிறந்த உதாரணமே ஏன் நாம் யாழ்பானத்தில் கல்வி கற்கையில் அமலன் விமலன் என சிறந்த வீரர்கள் சென்றலிலும் பரியோவானிலும் இருந்தார்கள் அதுக்கு பிறகு பற்பல சிறந்த வீரர்கள் ஆனால் 96ம் ஆண்டில் இருந்து இன்றுவரை இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டவர்களில் 2 தமிழர்கள் ஆக சிங்களம் விளையாட்டை விளையாட்டாகவா பார்கின்றது.

கொழும்பு இந்துக்கல்லூரி கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கியது தொடந்து 3 முறை அகில இலங்கை சம்பியானாகியது அதில் இருந்த வீரர்களில் எத்தனை பேர் இலங்கை உதைபந்தாட்ட அணியில் உள்வாங்கப்பட்டார்கள்

ஹொக்கியில் கொழும்பின் பிரபல கழகங்களின் வீரர்களாக தமிழ் வீரர்கள் இருகின்றார்கள் அதில் எத்தனைபேர் இலங்கை தேசிய அணியில் இருகின்றார்கள்

ஆக விளையாட்டிலும் இனவாதம் பார்க்கும் இலங்கைக்கு சப்போட் பண்ணு என சொல்லுவது முட்டாள்தனம்.

நீங்கள் சொல்லுவது சரி துவேசிகளாக உங்களை இனம் காட்ட வேண்டியதில்லை என ஆனால் சிங்களவன் அதை செய்வானா என்னுடன் சில சிங்கள மாணவர்கள் கல்வி கற்கிறார்கள் சில வேளையில் படிப்பு நிமித்தம் என் அறைக்கு வரக்கூடும் அப்போது அறையில் இருக்கும் தலைவரின் படத்தை பார்த்து சங்கடப்படுவார்கள்.கடைசியாக விமானநிலையம் தாக்கபட்ட அன்று என்னுடன் அவர்கள் சரிவர கதைக்க கூட இல்லை திலீபன் அண்ணாவை பற்றி படு கேவலமாக கதைபார்கள் அப்போது சண்டைவரும் என் கருத்தை ஏற்று கொள்ள மறுப்பார்கள்.இராணுவம் செய்த படுகொலைகளை புலிகள் செய்ததாக என்னிடம் சொல்லுவார்கள்.தங்கட இராணுவம் அப்படி செய்யாதாம்.என்னதான் ஆதாரங்களை காட்டினும் ஏற்றுகொள்ள மாட்டார்கள் அது மட்டுமல்ல என்னுடன் இலங்கை அமைச்சர் ஒருவரின் மகன் படிகிறார் அவருக்கு ஜேர்மன் காதலி அண்மையில் இங்கு தமி மாணவர்கள் பலர் அரசியல் தஞ்சம் கேட்டு கிடைபதாககூறி இது சிங்களவர்களுக்கு எதிரானது என அவரும் அவரின் இலங்கையில் சம்பந்தபடாத அவரின் ஜேர்மன் காதலியும் என் கண் முன்னமே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தனர்.

எல்லா இடமும் துவேசம் இருக்குது சிங்களவரிடம் இலங்கையிலும் சரி வெளிநாட்டிலும் சரி அண்மையில் மாமனிதர் ஜெயக்குமார் அண்னா அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட கவுன்ஸிலருக்கு சிங்களவர் கடிதம் அனுப்பி உள்ளனர் மன்னிப்பு கேட்கவேணும் என சொல்லி

இது எல்லாம் துவேசமே மொத்த சிங்கள இனமும் துவேசம் காட்டூம் போது நாமும் எமது எதிர்பை அங்கயே காட்ட வேண்டும் குட்ட குட்ட இனியும் குனிந்தால் ஈழத்தமிழன் என்னும் இனமே இருக்காது இலங்கையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் மேற்கிந்தியாவை சேர்ந்தவர் அல்ல என்று எப்படி உங்களுக்குத் தெரியும். உங்கள் வாதமே நியாயம் என்பதற்காக தமிழர் என்று அப்படிச் சொல்கிறீர்கள்.. இப்படி பதில் கேள்வி எழுப்ப அதிக நேரம் எடுக்காது.

நாமறியக் கூடிய அளவிலேயே கரிபியனிக்கு இந்த சீசனில் (கிரிக்கெட் நடக்க) கொலிடே போனவர்கள் பல தமிழர்கள்..! அவர்கள் என்ன செய்தார்கள்..??! அப்போ யாழ் களம் சுப்பரின் கொல்லையைத்தான் சுற்ற உதவுதா..??! :lol::huh:

முன்பொரு முறை அவுசுதிரேலியாவில் கிரிக்கட் போட்டியின் போது விமானமூலம் சாகசம் காட்டி சிறிலங்கா இன அடக்குமுறையை வெளிக்கொணர்ந்திருந்தார்கள். அந்த விமான ஒட்ட்டி ஒரு வெள்ளையர். ஆனால் நிகழ்வின் பின்னால் ?

இங்கு ஓடியவர் மேற்கிந்தியர். நிகழ்வின் பின்னால்?

உங்களுக்கு விபரமாக அறிவிக்காதது தவறு தான். பகிரங்க மன்னிப்புக் கேட்கும்படி இதை ஒழுங்கு செய்த தமிழரிடம் கேட்கலாமா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மேற்கிந்தியனுக்கு எம் கொடியைத் தூக்கிக் கொண்டு திரியவோ, பொலிசிடம் அடிவாங்கவோ வேண்டிய தேவையில்லையே. எனவே எமது வாதம் தான் ஸ்ரோங்காக இருக்கும். :huh:

நான் இது பற்றி இது வரைக்கும் விவாதிக்கவே இல்லாததால் எனது தரப்பு நியாயம் என்று எதுவுமே முதல் எழுதியிருக்கவில்லை. உங்களின் கருத்துக்குப் பதில் எழுதியது தான் முதலாவது கருத்து எனவே என் வாதம் என்று எதையுமே நியாயப்படுத்த தேவை எனக்கில்லை.

நீங்கள் சொல்வது போல கரிபியன் தீவுக்கு எம்மக்கள் சுற்றுலா போனார்களா என்பதை நான் அறியேன். எனவே தெரியாத விடயம் பற்றி நான் மூக்கை நுழைக்கவில்லை.

ஆனால் யாழ்களம் சுப்பரின் கொல்லைக்குச் சுத்துகின்றது என்பதை உணர்ந்த பின்னரும் நீங்கள் இங்கேயே குப்பை கொட்டுவது ஏன்? யாழ்களத்தில் இருக்கின்ற உறவுகள் சுற்றுலாவிற்குப் போயிந்தால் அவர்களுக்குச் சொல்லாம். யாருமே போகாதபோது சுப்பரின் கொல்லைக்குள் சவுண்டு எல்லாம் தேவையா?

Link to comment
Share on other sites

எதுக்கும் கொஞ்சம்யோசிச்சு கதையுங்கோ இது சிலவேளை அரசியலாயும்மிருக்கலாம் சர்வதேச மன்னிப்புசபையை புலியளோட சேர்த்து முடிச்சுபோடுற வேலையாயியுமிருக்கலயம்.ஆராவத

Link to comment
Share on other sites

ஒரு மேற்கிந்தியனுக்கு எம் கொடியைத் தூக்கிக் கொண்டு திரியவோ, பொலிசிடம் அடிவாங்கவோ வேண்டிய தேவையில்லையே. எனவே எமது வாதம் தான் ஸ்ரோங்காக இருக்கும். :huh:

நான் இது பற்றி இது வரைக்கும் விவாதிக்கவே இல்லாததால் எனது தரப்பு நியாயம் என்று எதுவுமே முதல் எழுதியிருக்கவில்லை. உங்களின் கருத்துக்குப் பதில் எழுதியது தான் முதலாவது கருத்து எனவே என் வாதம் என்று எதையுமே நியாயப்படுத்த தேவை எனக்கில்லை.

நீங்கள் சொல்வது போல கரிபியன் தீவுக்கு எம்மக்கள் சுற்றுலா போனார்களா என்பதை நான் அறியேன். எனவே தெரியாத விடயம் பற்றி நான் மூக்கை நுழைக்கவில்லை.

ஆனால் யாழ்களம் சுப்பரின் கொல்லைக்குச் சுத்துகின்றது என்பதை உணர்ந்த பின்னரும் நீங்கள் இங்கேயே குப்பை கொட்டுவது ஏன்? யாழ்களத்தில் இருக்கின்ற உறவுகள் சுற்றுலாவிற்குப் போயிந்தால் அவர்களுக்குச் சொல்லாம். யாருமே போகாதபோது சுப்பரின் கொல்லைக்குள் சவுண்டு எல்லாம் தேவையா?

அப்ப நிலமை இப்படியாகி விட்டது போல

வெளிநாட்டவர்களுக்கு கூட நம்ம பிரச்சனை தெரியுது வீண் விதண்டாவதம் செய்வது இல்லை

*************

நீக்கப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மேற்கிந்தியனுக்கு எம் கொடியைத் தூக்கிக் கொண்டு திரியவோ, பொலிசிடம் அடிவாங்கவோ வேண்டிய தேவையில்லையே. எனவே எமது வாதம் தான் ஸ்ரோங்காக இருக்கும். :lol:

நான் இது பற்றி இது வரைக்கும் விவாதிக்கவே இல்லாததால் எனது தரப்பு நியாயம் என்று எதுவுமே முதல் எழுதியிருக்கவில்லை. உங்களின் கருத்துக்குப் பதில் எழுதியது தான் முதலாவது கருத்து எனவே என் வாதம் என்று எதையுமே நியாயப்படுத்த தேவை எனக்கில்லை.

நீங்கள் சொல்வது போல கரிபியன் தீவுக்கு எம்மக்கள் சுற்றுலா போனார்களா என்பதை நான் அறியேன். எனவே தெரியாத விடயம் பற்றி நான் மூக்கை நுழைக்கவில்லை.

ஆனால் யாழ்களம் சுப்பரின் கொல்லைக்குச் சுத்துகின்றது என்பதை உணர்ந்த பின்னரும் நீங்கள் இங்கேயே குப்பை கொட்டுவது ஏன்? யாழ்களத்தில் இருக்கின்ற உறவுகள் சுற்றுலாவிற்குப் போயிந்தால் அவர்களுக்குச் சொல்லாம். யாருமே போகாதபோது சுப்பரின் கொல்லைக்குள் சவுண்டு எல்லாம் தேவையா?

நீங்கள் கருத்தை சரிவர நோக்கவில்லை..!

இவர் மேற்கிந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்பதாகவே தென்படுகிறது. இவர் தமிழுணர்வுடன் இந்தக் கொடியைச் சுமந்திருப்பதாக சொல்வது ஏற்புடையதாக இல்லை. அவர் விடுதலைப்புலிகள் பற்றியும் போராட்டம் பற்றியும் அறிந்து செயற்பட்டிருக்கலாம்.. அல்லது யாரேனும் உதவியுடன் தூண்டுதலின் பேரில் செயற்பட்டிருக்கலாம்..! எதுஎப்படி இருப்பினும் இது விடுதலைப் போராட்டம் பற்றி தகவலைக் காவிச் செல்ல மிகவும் உதவியுள்ளது..!

இது தாம் நாம் எழுதிய கருத்து..! நாமே சொல்லிவிட்டோம் என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்று..! அப்புறமும் மல்லுக்கட்ட நினைப்பது..!

உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். கரிபியனுக்கு சுற்றுலா செல்வது மேற்கில் வழமையான நிகழ்வு..! தமிழர்கள் நமக்கு அறிந்த பலர் சென்றிருக்கின்றனர். அவர்களை எல்லாம் நீங்க அறிஞ்சிருக்கனும் என்றது எப்படி எதிர்பார்க்கிறது..! ரெம்பவே அதிகமா பேசுறீங்க. விசயத்தோட பேசுங்க. மூக்கை நுழைக்கிறமுன்னா சரக்கில்லாமல் நுழைக்கிறதில்ல நாங்க..! :huh:

நீங்கள் நினைக்கிறீங்க யாழுக்காலதான் இப்படி நடக்கனும் என்று..! அப்படி நடக்கிறதா தெரியல்ல..! சோ.. இதற்கு..??! :lol:

Link to comment
Share on other sites

'' எம்மவர்கள் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் ஏதாவது கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றனரா..??!""

இதுதான் என்னுடைய அங்கலாய்ப்பும்

நமக்குள்தான் நாம் கதைத்துக்கொள்கின்றோம் செயல்பாடு?

செயல்படுத்தவேண்டியவர்கள் செயல்படுகின்றார்களா?

Link to comment
Share on other sites

எம்மக்கள் ஈழம் கேட்க முன்பே தமிழ்மக்களை அழிப்பு வேலைகளை(1958) சிங்களம் தொடங்கி இன்று வரை 80,000 மேற்பட்ட தமிழ்மக்களை கொலை செய்துள்ளனர். எவ்வளவோ சொத்துகளை அழித்து லட்சக்கணகான தமிழ்மக்களை அகதியாக்கியுள்ளனர்.

இவ்வளவையும் மறந்து விளையாட்டில் ஆதரிப்பது எப்படி முடியும்?

Link to comment
Share on other sites

"புதினம்" இணையத்தளம் புலிக் கொடியை தாங்கியபடி மைதானத்திற்குள் ஒரு தமிழர் ஓடினார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதை ஒரு தமிழர் செய்திருப்பார் என்றுதான் நானும் நம்புகிறேன்.

வேற்று நாட்டவர் எமது கொடியைத் தாங்கிக் கொண்டு இப்படி எல்லாம் ஓட மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அவர்களே மேற்கு இந்திய தீவுகளில் தமிழகத்தில் இருந்து கூலிகளாக கொண்டு செல்லப்பட்ட பூர்வீகத்தமிழகர்கள் பலர் உள்ளனர்....... இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தேயிலைத்தொழிலாளர்கள் போல...... மேற்கிந்திய தீவுகள் அணியில் உள்ள சர்வான் என்பவர் பூர்வீகத்தமிழர் ஆவார் சரவணன் என்பதன் சுருக்கமே சர்வான் .அந்த அணியில் வெஸ்டர் ஆறுமுகம் என்பவர் நிரவாகப்பிரிவில் பண்யாற்றுகிறார். இவர்கள் யாருக்கும் தமிழ் தெரியாது ஏனென்றால் இவர்கள் முன்னோர் கல்வியறிவில்லாதவர்கள் வெள்ளைய ஆட்சியாளர்களால் அடிமைகள் போல் வேலை வாங்க மட்டுமே கொண்டுசெல்லப்பட்டனர் ...அவர்கள் வழித்தோன்றல்களாகிய இவர்கள் தமிழ் தெரியாவிட்டாலும் தங்கள் மூதாதையரின் பெயர்களைக்கொண்டு தங்களை தமிழினத்தவர் என அடையாளம் கண்டு தமிழர் மீது இரத்த பாசம் கொண்டவர்கள் .....அத்தகைய தமிழர் கூட இவ்வாறு கொடி காட்டியிருக்கலாம்... இதைப்போல் தமிழ் தெரியாமல் வாழும் தென்னாப்பிரிக்க தமிழர்கள் பலர் ஈழ விடுதலைப்போருக்கு மிகவும் உதவுவதாக கேள்விபட்டுள்ளேன்.அவர்களில் பலர் ஆசிரியர்களை தமிழகத்தில் இருந்து வரவழைத்து தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கின்றனர்.புலம் பெயர்ந்த ஈழ மக்களே உங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறான நிலை வந்து அவர்கள் அடையாளம் கேள்விக்குறியாகாமல் இருக்க கண்டிப்பாக வீட்டில் தமிழ் சொல்லிக்கொடுங்கள் ...

Link to comment
Share on other sites

உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழத் தேசியக் கொடி: சிறீலங்கா அணி அதிர்ந்து போனது

மேற்கிந்தியத் தீவுகளில் நேற்று அவுஸ்ரேலியா - சிறீலங்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் தமிழீழத் தேசியக் கொடி தாங்கியவாறு ரசிகர் ஒருவர் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

துடுப்பெடுத்தாட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அவுஸ்ரேலியா வீரர்கள் அவுஸ்ரேலித் தேசிக்கொடியினையும், சிறீலங்கா வீரர்கள் சிறீலங்கா தேசியத் கொடியினை தாங்கியவாறு மைதானத்தினுள் செல்லும் போது அங்கு வந்த ரசிகர் ஒருவரால் தமிழீழத் தேசியக் கொடியினை இரு கைகளிலும் தாங்கியவாறு மைதானத்தின் நடுவே சென்று பார்வையாளர்களின் கவனத்தைத் திசை திருப்பியுள்ளார்.

இதனையடுத்து தமிழீழத் தேசியக் கொடியினைத் தாங்கிச் சென்றவர் மைதான பாதுகாவலரால் மைதானத்தின் நடுவிலிருந்து வெளியேற்றப்பட்டதும் அவர் பின்னர் மைதானத்தைத் சுற்றி ஓடி தமிழீழத் தேசியக் கொடியினை காட்டினார்.

தமிழீழத் தேசியக் கொடி மைதானத்தில் காட்டப்பட்டதால் சிறீலங்கா அணியினர் மற்றும் பார்வையிட வந்த சிங்கள மக்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகினர்.

http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&

Link to comment
Share on other sites

புலிக்கொடியுடன் உலக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி மைதானத்தில் நுழைந்து பரபரப்பு ஏற்படுத்திய தமிழ் இளைஞர்

சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியின் போது புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழீழ தேசியக்கொடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் மைதானத்தில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இலங்கையில் தமிழ் மக்கள் மீதான சிங்கள இன ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தும் ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையாக தமிழீழத் தேசியக் கொடியுடன் துணிச்சலாக வந்த உறவுக்கு தாயகத்தில் இருந்து தமிழீழத் தாயக மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழத் தாயக உறவுகளின் கூட்டமைப்பினர் விடுத்துள்ள அறிக்கை:

தாயகத்தில் தமிழினத்தை கொன்றொழித்து கொடூரமாக வதைத்துக்கொண்டு இருக்கும் சிங்கள அரசாங்கத்தின் முகத்தை அனைத்துலக மட்டத்தில் அம்பலப்படுத்தும் வகையில் உலகக்கிண்ண துடுப்பாட்டத்தில் சிறிலங்கா விளையாடும் தொடரும் போட்டிகளில் இத்தகைய ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டமையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதுகின்றோம்.

தொடரும் துடுப்பாட்டப் போட்டிகளில் இன்னும் அதிகமாக எமது உறவுகள் எங்கள் தமிழீழ தேசியக்கொடியை மைதானத்திலும் அரங்கிலும் காட்டுவதோடு சிங்கள அரசாங்கத்தின் கொடூரத்தை சித்தரிக்கும் படங்களையும் காட்டி மகிந்த அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்.

இதனை புலம்பெயர் மக்களால் செய்யமுடியும். இதுவே செய்வதற்கான சந்தர்ப்பம் என்று அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

-புதினம்

இந்த துணிச்சலான இளைஞனுக்கு எனது பாராட்டுக்கள்.

லிசான் நீங்கள் எப்போது இப்படி கொடியோடு ஓடப்போகிறீர்கள்

:lol:

Link to comment
Share on other sites

மேற்படி விடயம் தொடர்பாக நான் ஒரு பேப்பருக்காக எழுதிய கடிதத்தை இத்துடன் இணைக்கிறேன்.

உலகக் கிண்ண கிரிக்கெற் ஆரம்பமாகி கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டு ரசிகர்களும் தத்தமது நாடுகளின் `ரீசேர்ட்களை' அணிந்தவாறு தத்தம் நாடுகளின் கொடிகளையும் தமது அபிமான வீரர்களின் படங்களையும் கையில் தாங்கியவாறு மைதானத்தில் ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்

அதிலே புலத்திலே வாழுகின்ற தமிழர்கள் சிலர் சிங்க இலச்சினை பொறித்த ஆடைகளை அணிந்தவாறே சிங்களத்தின் தேசியக் கொடியினை ஏந்தியவாறு ஆடிப் பாடுவதைப் பார்க்கும் போது வெறுப்பும் வேதனையும் கோபமும் வருகிறது.

இதைப்பற்றி சிறிலங்கா அணியினருக்கு ஆதரவளிக்கும் சிலருடன் பேசியபோது அரசியலும் விளையாட்டும் வேறு. அதையும் இதையும் கலக்க வேண்டாம் என்று தத்துவம் பேசுகின்றனர்.

அரசியலும் விளையாட்டும் வேறு வேறானவை தான். அவை இரண்டையும் ஒன்றோடு ஒன்று கலக்கக் கூடாது தான். ஆனால் யதார்த்தம் அப்படியா இருக்கிறது. உலகத்தில், குறிப்பாக சிறிலங்காவில் அரசியலும் விளை

யாட்டும் வேறு வேறாகத் தான் பார்க்கப்படுகின்றதா? சிங்களத்தின் பேரினவாதம் விளையாட்டுக்குள் மூக்கை நுழைக்கவில்லையா?

இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் காலங்காலமாக உருவாகிக் கொண்டுதானிருக்கி றார்கள். திரு மகாதேவன் சதாசிவம் என்ற கிரிக்கெட் வீரருக்கு இணையான துடுப்

பாட்ட வீரர் ஒருவர் சிறிலங்காவில் இன்னும் உருவாகவில்லை என்று பல வெளிநாட்டு கிரிக்கெட் வல்லுனர்கள் கூடக் குறிப்பிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே சுதந்திரம் கிடைத்த பின்னர் தமிழ் பேசும் வீரர்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

ஏன் சிறிலங்கா அணியில் முரளிதரன் மற்றும் றசல் ஆர்னோல்ட் போன்ற தமிழ் வீரர்களுக்கு இடமளிக்கப்பட்டு இருக்கிறது தானே என்ற ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.ஆனால் இவர்கள் அணியில் தொடர்ந்து இடம்பிடித்திருப்பதற்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயமே. இதுபற்றி ஏற்கனவே பல இடங்களிலும் பேசப்பட்டிருப்பதால் அதனை இந்த இடத்தில் தவிர்த்துக் கொள்கிறேன்.

சரி இத்தனைக்குப் பின்னரும் இலங்கை அணியில் ஏனைய வீரர்களைப் போன்ற சமமான உரிமைகளுடன் தான் நடாத்தப்படுகிறார்களா என்று பாருங்கள்.மிகவும் திறமையான எத்தகைய நிலமைக்கும் ஏற்ற விதத்தில் அதற்கேற்ப அனுசரித்து துடுப்பாடக் கூடிய றசல் ஆர்னோல்ட் இதுவரை 20 இற்கும் மேற்பட்ட தடவைகள் அணியை விட்டு நீக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்டார் என்ற விபரத்தை கடந்த வாரம் நடைபெற்ற இலங்கை-தென்னாபிரிக்கா இடையிலான போட்டியின் போது பிரபல வர்ணனையாளர் ரொனி கிரெக் (Tony Greg) குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி 'சிறிலங்கா அணி எப்போதெல்லாம் சரியாக ஆடவில்லையோ அப்போதெல்லாம் தெரிவாளர்கள் முதலில் கத்தியைப் பிரயோகிப்பது றசல் ஆர்னோல்ட் க்குத் தான்' என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டார். இதற்கான காரணத்தை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ரொனி கிறெக் ஆதங்கப்பட்டார். சிங்களத்தின் பேரினவாத வெறியைப் புரிந்து கொண்டவர்களுக்கு அதற்கான காரணத்தை அறிந்து கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது.

அடுத்ததாக மற்றொரு உலகப் பிரசித்தி பெற்ற வீரரான முத்தையா முரளிதரனுக்கு அணியின் உதவித் தலைவர் பதவியைக் கூட வழங்க விரும்பாத சிங்களம் தமது வெற்றிக்காக மட்டும் முரளியை `கறிவேப்பிலையைப்' போலப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.இந்த நிலை தமிழர்களுக்கு மட்டும் தான் என்று நினைத்துவிட வேண்டாம். அணியில் தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்கா

Link to comment
Share on other sites

இந்த நிலை தமிழர்களுக்கு மட்டும் தான் என்று நினைத்துவிட வேண்டாம். அணியில் தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்கா
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.