யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பிழம்பு

ஏன் வருகிறது புற்றுநோய்... தடுப்பது எப்படி? #WorldCancerDay

Recommended Posts

 

 

கூர்மையான கொடுக்குகளையும், அகன்ற கால்களையும் கொண்டு மணலைப் பறித்து உள்ளே செல்லும் நண்டைப்போல, உடலின் உள்உறுப்புகளைப் பறித்தபடி பரவும். ஓரிடத்தில் அடித்தால், மறைந்து மற்றோர் இடம் வழியாக வெளியே வரும் நண்டினைப் போல புதிதாக ஓரிடத்தில் தோன்றும். உட்கூறு மற்றும் புற்று உயிரணுக்களின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து ஏறத்தாழ 200 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

ஏன் வருகிறது புற்றுநோய்... தடுப்பது எப்படி? #WorldCancerDay

`தூள்' படத்தில் சொப்னாவுக்கு `கேன்சர்' வந்தது பற்றி விவேக்கும், மயில்சாமியும் காமெடியாகப் பேசிக்கொள்வதைக் கேட்கும்போது நமக்குச் சிரிப்பு வரும். காமெடியாகப் பேசப்பட்ட  அந்த விஷயம், இன்றைக்குப் பெரிய `டிராஜிடி'யாக உருவெடுத்து நிற்கிறது.

ஆம்... இதுவரை 50-60 வயதில் உள்ளவர்களை மட்டுமே பாதித்த புற்றுநோய், கடந்த 15 ஆண்டுகளாக சொப்னாவின் வயதையொத்த இளைஞர்களையும் ஆண், பெண் பாகுபாடின்றி பாதிக்கத் தொடங்கிவிட்டது. அதுமட்டுமன்றி நகர்ப்புறவாசிகளையே புற்றுநோய் அதிகம் பாதிக்கும் என்ற நிலைமாறி, கிராமப்புறங்களில் வாழ்பவர்களையும் பாதிக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்நிலை என்றால், வளர்ந்த நாடுகளில் சிறு வயதுக் குழந்தைகளும் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

புற்றுநோய்

 

இத்தகைய மாற்றங்கள் நிகழக் காரணம் என்ன..? அவற்றுக்கான தீர்வு என்ன என்பதை அறிவதற்குமுன் புற்றுநோய் பற்றி அறியவேண்டியது அவசியம். 

5,000 ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்து மற்றும் கிரேக்க மருத்துவர்களால் புற்றுநோய் அடையாளம் காணப்பட்டது. நமது உடலில் சீராக இயங்கும், செல் சைக்கிள் (Cell cycle) என்ற உயிரணு ஃபேக்டரியானது, சாதாரணமாக நமது உடல் வளர்ச்சிக்கு உதவும் உயிரணுக்களின் உற்பத்தியை டி.என்.ஏ-க்கள் மூலம் நிர்வகிக்கிறது. இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாகச் செய்து, நமது திசுக்களின் வளர்ச்சியையும், உடல் ஆரோக்கியத்தையும் காக்கின்றன.

 

இந்த உற்பத்திப் பணியின்போது டி.என்.ஏ-க்களில் ஏற்படும் மிகச் சிறிய தவறு (DNA error) புதிய உயிரணுக்களை மிக அதிகமாக உருவாக்குவதுடன் அவற்றைக் கட்டுப்பாடு இல்லாமல் வளரச் செய்கிறது. இதனால் உருவாகும் புற்றுநோய், அருகிலுள்ள திசுக்களை (Local spread) ஆக்கிரமித்து அழிப்பதுடன் ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது.

டாக்டர்

கூர்மையான கொடுக்குகளையும், அகன்ற கால்களையும் கொண்டு மணலைப் பறித்து உள்ளே செல்லும் நண்டைப்போல, உடலின் உள்உறுப்புகளைப் பறித்தபடி பரவும். ஓரிடத்தில் அடித்தால், மறைந்து மற்றோர் இடம் வழியாக வெளியே வரும் நண்டினைப் போல புதிதாக ஓரிடத்தில் தோன்றும். உட்கூறு மற்றும் புற்று உயிரணுக்களின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து ஏறத்தாழ 200 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. புற்று அணுக்கள், அருகிலுள்ள திசுக்களை ஆக்கிரமித்து அழிப்பதுடன் ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. இப்படியாகப் பரவும் புற்று அணுக்கள் சில, அறிகுறிகளாக வெளிப்படவும் செய்கின்றன.

- திடீர் எடையிழப்பு 
- பசியின்மை
- வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல்
- தொடர் இருமல்
- குரல் மாற்றம்
- காரணமற்ற ரத்தசோகை
- ஆறாத புண் அல்லது வடுக்கள்
- சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள்
- வெள்ளைப்படுதல் 
- மாதவிடாய் நின்ற பிறகு வரக்கூடிய ரத்தப்போக்கு 

இப்படிப் பாதிப்புக்குள்ளாகும் இடம் மற்றும் உறுப்பைப் பொறுத்து, இவை ஒவ்வொன்றும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக அறியப்படுகின்றன.

புற்றுநோயை ஒற்றை நோயாக விளக்க முடியாது. ஒவ்வோர் உறுப்பின் புற்றுநோய்க்கும் ஒவ்வொரு காரணி இருக்கக்கூடும். கூரான சொத்தைப் பல்லின் உராய்வுகூட வாய்ப்புற்றுக்குக் காரணமாகலாம். பிளாஸ்டிக் பையில் சேமிக்கப்பட்ட உணவு, இரைப்பைப் புற்றுக்கு காரணமாகலாம். மரபணுக்கள், பெருங்குடல் புற்றுக்குக் காரணமாகலாம். கதிரியக்கச் சூழலில் பணிபுரிவது ரத்தப் புற்றுக்கு காரணமாகலாம். இவைதவிர நுரையீரல், மார்பகம், இரைப்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புற்றுநோய் ஏற்படலாம் என்றாலும் நுரையீரல், குடல், இரைப்பை மற்றும் மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்களே மிகப்பெரும் உயிர்க்கொல்லியாக உருவெடுக்கின்றன.

உலக அளவில் ஆண்டுதோறும் 18.1 மில்லியன் மக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்தப் புற்றுநோய், அவற்றில் ஏறத்தாழ 9.6 மில்லியன் மக்களைக் கொன்றுவிடுகிறது. அதாவது, ஆறு மரணங்களில் ஒரு மரணம் புற்றுநோயால் ஏற்படுகிறது. இந்த இறப்பு விகிதங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களிடம் அதிகம் காணப்படுகிறது என்பதும், பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் வறுமையால் தக்க சிகிச்சை எடுக்க முடியாத நிலைக்கு ஆளாகின்றனர் என்பதும் பெருந்துயரம்.

புற்றுநோய்

இந்திய அளவில் பெண்கள் மார்பகப் புற்றுநோயாலும், ஆண்கள் வாய்ப் புற்றுநோயாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதாவது, ஆண்டுக்குச் சராசரியாக 8 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின் (ICMR) புள்ளி விவரங்கள் கூறுகின்றன. புற்றுநோய் குறித்த சரியான விழிப்புஉணர்வு இல்லாததால் ஆரம்பகட்டத்தில் (ஸ்டேஜ் I & II) வெறும் 26 சதவிகிதத்தினர் மட்டுமே சிகிச்சைக்காகச் செல்கிறார்களாம். ஆனால், ஸ்டேஜ் III & IV நிலையில் பலருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதால் ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் குழு கூறுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 39 சதவிகிதம் புற்றுநோய் அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சி தருகிறது.

 

எய்ட்ஸ்

அதிகரித்து வரும் மனிதனின் வாழ்நாள், மேம்படுத்தப்பட்ட மருத்துவத் தொழில்நுட்பங்கள், கேன்சர் ஸ்கிரீனிங் (Cancer Screening) எனப்படும் பிரத்யேகப் பரிசோதனைகள் என மருத்துவ முன்னேற்றங்கள் அனைத்தும் புற்றுநோயை அதிகளவில் கண்டறியச் செய்துள்ளன. ஆனாலும் ஆண், பெண், ஏழை, பணக்காரன் என எந்தவித பேதமுமின்றி அனைத்து தரப்பு மக்களிடையே புற்றுநோய் பெருகக் காரணம் என்ன..? என்ற கேள்விகளுக்கு பதிலாகக் கிடைப்பது, `மனிதன்' என்ற ஒற்றைச் சொல்தான். 

ஆமாம். புற்றுநோய் வர தனித்தனியாகக் காரணங்கள் கண்டறியப்படவில்லை என்றாலும், `கார்சினோஜென்ஸ்' (Carcinogens) என்ற புற்று ஊக்கிகளைக் காரணிகளாகக் கைகாட்டுகிறது மருத்துவ உலகு. புற்றுநோய் ஊக்கிகள் என்ற இந்த கார்சினோஜென்களில் முன்னிற்பது, புகையிலை. அதாவது, புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்படும் சிகரெட், சுருட்டு, பீடி ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான ரசாயனப் பொருள்கள் நிறைந்துள்ளன. அவற்றில் நிக்கோட்டினைத் தவிர, ஆர்சனிக், அமோனியா, பென்சீன், நைட்ரோஸமைன்கள், அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் மற்றும் புகைக்கும்போது காற்றில் கலக்கும் `கானிகோடின்' (Conicotine), `கார்பன் மோனாக்சைடு' (Carbon Monoxide), `தையோசயனேட்ஸ்' (Thiocyanates) ஆகிய நச்சுப்பொருள்கள், புகைப்பவருக்கு மட்டுமல்லாமல் அருகில் உள்ளவர்களுக்கும் (Passive Smoking) புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.

புகை

நுரையீரல், நாக்கு, தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் என அனைத்து உறுப்புகளிலும் புகையிலை புற்றுநோயைத் தோற்றுவிப்பதுடன், 8 விநாடிகளுக்கு ஒரு மரணத்தையும் ஏற்படுத்துகிறது. 
புகையிலை மட்டுமன்றி வாகனங்களின் புகையில் நிறைந்துள்ள வேதிப் பொருள்கள், CFC, கதிர் இயக்கம், செயற்கை உரங்கள், ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக், மரத்துகள்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, செயற்கை நிறசேர்க்கைகள், சுவையூட்டிகள் மற்றும் மதுபானங்கள், ஹெச்.ஐ.வி, ஹெச்.பி.வி, ஹெபடைட்டிஸ் போன்ற நோய்த்தொற்றுகள், புற ஊதாக் கதிர்கள் என இந்தக் கார்சினோஜென்களின் பட்டியல் நீளும்.

இவற்றுடன் போதுமான உடற்பயிற்சியின்மை, உடல் பருமன், மேற்கத்திய உணவுகள், சமச்சீரற்ற உணவுமுறை, தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவையும் புற்றுநோய் வருவதற்கான காரணங்களாகக் கூறுகின்றனர் புற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள். ஆக, 5 முதல் 10 சதவிகிதம் மட்டுமே பாரம்பர்ய மரபணுக்கள் வாயிலாகவும், பெரும்பான்மை சதவிகிதம் சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் புற்றுநோய் பாதிக்கிறது. அதைத் தவிர்ப்பது மனிதனின் கைகளில்தான் உள்ளது.

புற்றுநோய் பாதிக்காமல் தடுப்பதற்கான முறைகள் பற்றிப் பார்ப்போம்.

- புகையிலை மற்றும் மதுப்பழக்கத்தை அறவே கைவிடுவது.
- காற்று, மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பது.
- உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன், நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த இயற்கை உணவுகளை அதிகம் உட்கொள்வது.
- கதிரியக்கம் உள்ள இடங்களில் தகுந்த பாதுகாப்புடன் பணியாற்றுவது.
- ஹெச்.பி.வி (HPV), ஹெபடைட்டிஸ் போன்ற வைரஸ் நோய்களைத் தடுக்க, மருத்துவரின் பரிந்துரைப்படி தகுந்த இடைவெளியில்தடுப்பூசி போட்டுக்கொள்வது என இவையனைத்தும் முதன்மைத் தடுப்புமுறைகளாகும்.

மாமோகிராம்

கேன்சர் ஸ்கிரீனிங் (Cancer Screening) எனப்படும் மாமோகிராம் (Mammogram), `பாப் ஸ்மியர்' (Pap Smear), பி.எஸ்.ஏ (PSA), சி.இ.ஏ (CEA) போன்ற ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு, புற்றுநோய் அறிகுறிகளைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்துச் சிகிச்சை மேற்கொள்வது இரண்டாம் தடுப்பு நிலையாகும். இவைஅனைத்துக்கும் மேலாக, வாழ்க்கைபற்றிய உறுதியான நம்பிக்கையுடனும், நல்ல உணர்வுடனும் இருப்பது முழுமையான நிலையாகும்.

புற்றுநோயை வெல்ல மன உறுதியும் முறையான சிகிச்சையும் எவ்வளவு முக்கியமோ, அதேபோல, விழிப்புஉணர்வும் மிக அவசியம்.
இன்று பிப்ரவரி 4... உலகப் புற்றுநோய் விழிப்புஉணர்வு நாள்!

உலகத்தினர் அனைவரும், ஒன்றுகூடி புற்றுநோயை வென்றிடப் போராடும் நாள் இது. புற்றுநோய் குறித்த விழிப்புஉணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமளிக்கவும் கடைப்பிடிக்கப்படும் இந்நாளில், `முற்றிலுமாக என்னால், நம்மால் அழிக்க முடியும்' என்று ஒன்றுபடுவோம். புற்றுநோயை வெல்வோம்..!

I AM..!
AND...
I WILL..!

https://www.vikatan.com/news/health/148827-a-story-about-world-cancer-day.html#cmt-sec

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயரிழந்த இளைஞனின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு வருகை தந்த இளைஞனின் உறவினர் அடையாளம் காட்டியுள்ளார். கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த  செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். தென்மராட்சியிலிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்றிரவு புறப்பட்டனர் என்று இளைஞனின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தப்பித்த அனைவரும் தென்மராட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் ஒரே ஒரு பிள்ளையான இவர் தாயாருடனே  வாழ்ந்து வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  மானிப்பாய் - இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.   இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது.  ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர்.  அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  https://www.virakesari.lk/article/60852
  • (முகநூல் பக்கத்தில் இருந்து )  அண்மையில் நடந்த பத்தாம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பலருக்கு யாழ்பாணத்தில் நடந்த படுகொலைகளை பற்றி தெரிந்திருக்கவில்லை. நாங்கள் அதனை தெரியப்படுத்த எடுத்த பல முயற்சிகளில் இரண்டுதான் வெற்றி பெற்றது.  முதலாவது சங்கங்களின் சங்கமத்தில் இலங்கை தமிழ் சங்கத்தின்(ITSC) சார்பில் அலங்கரிக்கபட்ட பாடை.   இந்த பாடை ஊர்வலத்தை மேலும் மேம்படுத்தியது . இரண்டாவது இந்த மாநாட்டின் விழா மலருக்கு எழுதிய கவிதை. இலங்கை தமிழரால் நான்காவது மகாநாட்டில் 1974 நடந்த அநியாயங்களை மறக்க முடியாது. அந்த மகாநாடுதான் பல தடைகளையும் கடந்து முதல் முறையாக எந்த  ஒரு அரசாங்கத்தினதும் பல்கலைகழகத்தினதும் ஆதரவில்லாமல் நடந்தது. தயவுசெய்து இந்த கவிதையை எல்லோருடனும் பகிருங்கள். பலருக்கு தெரியபடுத்த ஒரு வழி.  
  • யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் காவலில்  ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை வழிமறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/60850
  • அமெரிக்க தலைநகரில் ஆயிரக்கணக்கான பணத்திற்கு கொள்கையை வென்றெடுக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் இவை ' லோபியிங்' (lobbying) என அழைக்கப்படும். சகல மேற்குலக நாடுகளில் கூட இப்படியான அமைப்புக்கள் இருந்தாலும் உலகின் மிக்வும் பொருளாதார இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்குகள் காரணமாக அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் தான் இவை அதிகம்.  (https://www.hklaw.com/en)  உள்ளூர் நிறுவனங்கள் உட்பட பல வெளிநாட்டு அரசுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கூட தமது கொள்கை மாற்ற உதவிக்கு இவ்வாறு அணுகுவதுண்டு.  சிங்கள அரசு கூட இவ்வாறு  முன்னர் இழந்த ஜி.எஸ். பி. வரி சலுகையை மீளப்பெற ஒரு அமைப்பை பணம் கொடுத்து அணுகி இருந்தது.  ஆக, பணம் இருந்தால் எமது மீது உள்ள தடைகள் மட்டுமல்ல தனி நாடு இல்லாவிட்டாலும் ஒரு சுயாட்சியை கூட இலங்கையில் தமிழர்கள் பெறலாம். தமிழர்களிடம் அதற்கான பணமும், கொடுக்கும் மனமும் உள்ளது என .நம்பலாம். ஆனால், அதற்கான தலைமை தான் இல்லை.  
  • அமெரிக்க அரசிடமும், மக்களிடமும் தன் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கி, உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக  அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தை பாகிஸ்தான் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்ற பின், பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் அமெரிக்காவுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதனால், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பல்லாயிரம் கோடி நிதியுதவியை கடந்த 2018 ஜனவரி முதல் நிறுத்தி விட்டார். இதனால், பாகிஸ்தானுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப்பை நாளை சந்திக்க இருக்கிறார். டிரம்ப் பதவியேற்று ஏறக்குறைய 4 ஆண்டுகள் முடியும் நிலையில், தற்போதுதான் பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க உள்ளார். இந்நிலையில், அமெரிக்க அரசிடமும், அதன் மக்களிடமும் தனது நாட்டை பற்றி ஏற்பட்டுள்ள தவறான எண்ணத்தை மாற்றவும், இவர்களிடம் தனது நட்டை  பற்றி உயர்வான எண்ணத்தை ஏற்படுத்தவும் ‘ஹாலண்ட் அண்ட் நைட்’ என்ற அமெரிக்க நிறுவனத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. இது தொடர்பாக, இந்த நிறுவனத்தின் ஆலோசகர் ரெய்னால்ட்சுடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு இருக்கிறார். இந்த ‘ஜால்ரா’ வேலையை செய்வதற்காக, அந்த நிறுவனத்துக்கு பாகிஸ்தான் அரசு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளது.இது தொடர்பாக குரேஷி கூறுகையில், ``ஹாலண்ட் அண்ட் நைட் நிறுவனம் பாகிஸ்தான் தூதரகத்துடன் இணைந்து செயல்பட்டு, அமெரிக்கா மீது பாகிஸ்தான் வைத்திருக்கும் நல்லெண்ணத்தை திறம்பட எடுத்துரைக்கும்,’’ என்றார். இந்த நிறுவனத்தின் ஆலோசகர் ரெய்னால்ட்ஸ், நியூயார்க் நகரத்தின் முன்னாள் காங்கிரஸ் எம்பி.யாக இருந்தவர். அவர் கூறுகையில், ``எங்கள் நிறுவனத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து, இந்த பொறுப்பை ஒப்படைத்த பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பாகிஸ்தான்-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு, புரிந்துணர்வு தொடர்பாக வலுவான நம்பிக்கையை உருவாக்கும் முயற்சிகளில் எங்கள் நிறுவனம் செயல்படும்,’’ என்று கூறினார்.சவுதி இளவரசர் உதவி:அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு பாதித்துள்ளது. இந்த உறவை சீராக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஈடுபட்டுள்ளார். இதற்கு, சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் உதவி வருகிறார். டிரம்பின் மருமகன் ஜரேட் குஷ்னருடன் சல்மான் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். அவர் மூலமாகதான், டிரம்ப் - இம்ரான் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தூதர் இல்லத்தில் தங்கல்:பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், தனது நாட்டில் பல்வேறு செலவுகளை குறைப்பதற்கான சிக்கன நடவடிக்கைகளை இம்ரான் எடுத்துள்ளார். தனது அமெரிக்க பயணத்திலும் இதை அவர் பின்பற்றுகிறார். அமெரிக்காவில் அவர் நட்சத்திர ஓட்டலில் தங்கவில்லை. பாகிஸ்தான் தூதரின் இல்லத்திலேயே தங்குகிறார்.    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511798