Jump to content
Sign in to follow this  
nunavilan

பெளத்தம் வளர்த்த தமிழர்கள்

Recommended Posts

 
 
Langes Tharmalingam
பெளத்தம் வளர்த்த தமிழர்கள் : கலாநிதி எஸ் தியாகராஜா

அண்மைக் காலமாக புத்தர் சிலைகளும் அரசமரங்களும் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களை நோக்கி இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டு உள்ளது. ஏ9 கனகராஜன்குளப் பகுதியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட புத்த சிலை ஒன்று இன்று நள்ளிரவின் (31/08/2016) பின்னர் இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கும் பெளத்தத்துக்கும் உள்ள உறவை முற்றாக நிராகரிக்கும் இச்செய்திகள், ஆய்வுகள் பெளத்தம் சிங்கள மக்களின் ஏகபோகமான மதமாகக் காட்டுகின்றனர். மருத்துவ கலாநிதியான எஸ் தியாகராஜா வரலாற்றுத்துறையிலும் பட்டம் பெற்றவர். இவர் தேசம் சஞ்சிகையில் எழுதிய தொடர் கட்டுரையின் சாரம்சத்தை இங்கு பதிவிடுகிறோம். (2003)

யாழ்ப்பாணத்தில் பௌத்த மதச் சின்னங்கள் இருப்பதால் அங்கு சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறுவது அறியாமை. மாறாகத் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதே உண்மை. மேலும் கி மு 500 முதல் ஏறக்குறைய 1500 ஆண்டுகள் பௌத்த மதம் தமிழகத்தின் முக்கிய மதங்களில் ஒன்றாக விளங்கியது. சாதிப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத தமிழர்கள், பிறப்பினால் மேல் சாதி – கீழ் சாதி எதுவும் இல்லையெனப் போதித்த பௌத்தத்தை இலகுவாக ஏற்றுக் கொண்டனர்.
நாகப்பட்டினம் சூடாமணி விகாரம்:
தமிழகத்தில் பௌத்தமதம் தழைத்தோங்கிய மற்றொரு நகரம் நாகப்பட்டினமாகும். பல பௌத்த விகாரைகளைக் கொண்டிருந்த இப்பட்டினம் பிரசித்திபெற்ற சூடாமணி விகாரத்தைக் கொண்டிருந்தது. ஸ்ரீ விஜயத்து மன்னனால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த விகாரம் திராவிடக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டு, மூன்று மாடிகளுடன் கோபுர வாசலையும் கொண்டிருந்ததாக லெய்டன் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
தொல்லியல் கண்டுபிடிப்புகள்:
சமீப காலங்களில் காவிரிப் பூம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் பௌத்த விகாரைகளின் அடித்தளங்களும், பௌத்தமத கருவூலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காவிரிப்பூம்பட்டினத்தில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்குரிய புத்தரின் கற்சிலைகளும், கி.மு.முதலாம் நூற்றாண்டிற்குரிய செப்புத் திருவுருவும் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன.
மதுரையில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குரிய பிராமி எழுத்துக்கள் வரையப்பட்ட பௌத்த மதக்குகைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. இவை யாவும் தமிழகத்தில் பௌத்தமதம் பரவியிருந்த ஒரு காலகட்டத்தை எடுத்துக் காட்டுகின்றன.
சூடாமணி விகாரத்தின் கோபுரம்:
கி.பி.10ஆம் நூற்றாண்டின் பின்னர் பௌத்தம் சிறிது சிறிதாகத் தனது ஆதிக்கத்தை இழந்து 13ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்திலிருந்து இல்லாமலே போய்விட்டது. சூடாமணி விகாரமும் ஆதரிப்பார் இல்லாது அழிவுற்ற நிலையை அடைந்துவிட்ட போதிலும் அதன் கோபுரம் 19ஆம் நூற்றாண்டு வரை உயர்ந்து நின்றது.
17ஆம் நூற்றாண்டின் சீன யாத்திரீகரான லின் கியு, நாகப் பட்டினத்துறையை அடைவதற்கு வெகு தூரத்திலிருந்தே இக்கோபுரத்தைத் தனது கப்பலிலிருந்து காணக் கூடியதாக இருந்ததைப் பதிவு செய்துள்ளார்.
பல நூற்றாண்டுகளாக இந்துக்களாலும், பௌத்தர்களாலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்த சூடாமணி விகாரமும், அதன் கோபுரமும் 1867ஆம் ஆண்டில் பிரெஞ்சு கிறிஸ்தவ சங்கத்தினரால் இடிக்கப்பட்டுத் தரை மட்டம் ஆக்கப்பட்டது.
பௌத்த மகாகாவியம்:
தமிழ்நாட்டில் பௌத்தமதம் உன்னத நிலையை அடைந்திருந்த காலத்தில் மணிமேகலை, உதயணன் காதை, குண்டலகேசி, நீலகேசி, வீரசோழியம் ஆகிய காப்பியங்கள் தமிழ்ப்பௌத்தப் புலவர்களால் இயற்றப்பட்டன.
மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரின் மணிமேகலைக்கு நிகரான இன்னொரு பௌத்த காவியம் உலகின் வேறெந்த மொழியிலும் இன்றுவரை உருவாகவில்லை என்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழர் நாகரீகத்தின் உச்சநிலையை எடுத்தியம்பும் காவியங்கள் என்றும் மேனாட்டு அறிஞர் அலெயின் டானியலு எடுத்து உரைக்கிறார். (Leidon Copper Plates இராஜராஜ சோழன் 1 வழங்கிய ஆனைமங்கலச் செப்பேட்டுச்சாசனம்.)
இன்று பௌத்தத்தின் பாதுகாவலர்கள் எனப் பீற்றிக்கொள்ளும் சிங்களவர்களால் மணிமேகலை, குண்டலகேசி, நீலகேசி, உதயணன் காதை, வீரசோழியம் ஆகிய தமிழ்ப்பௌத்த காப்பியங்களுக்கு நிகரான ஒரு பௌத்தமத காவியத்தை இருபத்துமூன்று நூற்றாண்டுகளாகத் தரமுடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
தமிழ் பௌத்தஞானிகள் இயற்றிய பாளி மொழி இலக்கியங்கள்;
தமிழகத்தைச் சேர்ந்த பௌத்த ஞானிகளும், துறவிகளும் பௌத்தமத மொழியான பாளி மொழியைப் பயின்று, அந்த மொழியிலேயே பல பௌத்த சமய இலக்கியங்களை உருவாக்கியிருக்கின்றார்கள். (இராசவேலு, க. திருமூர்த்தி, கோ. தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள், சென்னை 1995.)
தமிழகத்திற்கும் இலங்கைக்குமிடையே நிலவிய பௌத்த கலாச்சாரத் தொடர்புகளை எடுத்துரைக்கும் உபாசக ஜனலங்கார (Upasaka Janalankara) என்ற பாளி நூலில் தமிழகத்தின் பௌத்த துறவிகளைப் பற்றியும், அவர்கள் உருவாக்கிய பாளி இலக்கியங்களைப் பற்றிய விவரங்களும் தரப்பட்டுள்ளன. (தனபாக்கியம், ஜி. இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக்கலாச்சாரமும், சென்னை 2001. பக. 256-258.)
புத்தகோசர்:
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானிகளில் காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் குறிப்பிடத்தக்கவர். இலங்கையை மகாநாமன் (கி.பி.409-431) ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அநுராதபுரம் மகா விகாரையில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த புத்தகோசர் “விசுத்தி மார்க்கம்” என்ற பௌத்தமத நூலை பாளிமொழியில் இயற்றினார்.
புத்த தத்தர்:
உறையூரைச் சேர்ந்த புத்ததத்த மகாதேரர், தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் மதுரத்த விலாசினி, வினய வினிச்சயம், உத்தர வினிச்சயம், ரூபாரூப விபாகம் ஆகிய பௌத்த நூல்களை எழுதியுள்ளார். பின்னர் இவர் இலங்கைக்கு வந்து தங்கி இருந்த காலத்தில் ஜினாலங்காரம், தந்ததாது, போதிவம்சம், ஆகிய நூல்களை இயற்றியபின் திரும்பி காவிரிப்பூம்பட்டினம் சென்றடைந்தார்.
காவிரிப்பூம்பட்டினத்தில் காளிதாசரின் பௌத்தப் பெரும்பள்ளியில் தங்கி அபிதம்மாவதாரம் என்ற காவியத்தை உருவாக்கினார். புத்ததத்தரின் நூல்கள் இன்று இலங்கையின் பௌத்தசங்கத்தினரால் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஆச்சாரிய தருமபாலர்:
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தின் பௌத்த மகாவிகாரையின் மகாதேரராக இருந்தவர் ஆச்சாரிய தருமபாலர். இவர் இலங்கைக்கு வந்து அநுராதபுரம் மகாவிகாரையில் தங்கியிருந்த பொழுதில் தமிழகத்துப் பௌத்தப் பள்ளிகள் வைத்திருந்த பழைய தமிழ் உரைகளையும் இலங்கையிலிருந்த பாளி உரை நூல்களையும் ஆராய்ந்து திரிபிடகத்திற்கு பதினான்கு உரைகளை எழுதியுள்ளார். ஆச்சாரிய தருமபாலர் பல்லவ அரச வம்சத்தைச் சேர்ந்தவராவார். கந்தவம்சம் என்னும் நூல் இவர் இயற்றிய பௌத்த நூல்களை பட்டியலிட்டுச் சொல்கிறது.
அநிருத்த தேரர்:
பாண்டிய நாட்டில் மதுரையிலிருந்த சோம விகாரையின் தலைவராக இருந்தவர் அநிருத்த தேரர். இவர் எழுதிய அபிதர்மார்த்த சங்கிரகம் என்ற பாளி நூல் இலங்கைப் பௌத்த சங்கத்தினராலும், பர்மா பௌத்த சங்கத்தினராலும்; படித்துப் பேணப்பட்ட பிரபல பௌத்த காவியம். பரமத்த வினிச்சயம், காமரூபப் பரிச்சேதம் ஆகியன இவர் எழுதிய மற்ற நூல்களாகும்.
காஸ்யப தேரர்:
சோழநாட்டில் காவிரிப் பட்டினத்தைச் சேர்ந்த காஸ்யப தேரர் விமதிவிச்சேதனி, விமதிவிநோதின், மோகவிச்சேதனி, அநாகத வம்சம் ஆகிய பௌத்த தர்ம உரை நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களும் இலங்கையின் பௌத்த சங்கத்தினரால் பேணப்பட்ட இலக்கியங்களே.
இவ்வாறு தமிழ்நாட்டின் பௌத்த சங்கத்தைச் சேர்ந்த ஞானிகளும், துறவிகளும் காலத்திற்குக் காலம் இலங்கைக்கு வந்து இலங்கையின் தேரவாத பௌத்த கோட்பாடுகளை ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்த சம்பவங்களும், அதே போன்று இலங்கையின் பௌத்த சங்கத்தைச் சேர்ந்த தேரர்கள் தமிழகத்தில் பரவியிருந்த மகாயான பௌத்தத்தை ஆதரித்து வந்த செய்திகளும் இலங்கையிலுள்ள பௌத்த பாளி நூல்களில் பொதிந்து கிடக்கின்றன.
இன்று இலங்கையில் பௌத்தம் சிங்கள மக்கள் கடைப்பிடிக்கும் மதமாக இருப்பினும், சரித்திர காலத்தில் பௌத்தம் தமிழ் மக்களின் முக்கியமான மதங்களில் ஒன்றாகவே இருந்தது. (சீனி. வேங்கடசாமி. பௌத்தமும் தமிழும், சென்னை 1978 )
கி.மு.400 முதல் கி.பி.600 வரை ஆயிரம் ஆண்டுகளாக பௌத்தம் தமிழகத்தில் பிரபல்யமான ஒரு மதமாக இருந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டின் பின்னரே சைவசமயக் குரவர்களும், நாயன்மார்களும் தோன்றி பௌத்தத்தை தமிழகத்திலிருந்து முற்றாக இல்லாதொழித்தனர்.
1. இலங்கையிலும் இந்தியாவிலும் கண்டெடுக்கப்பட்ட கி.மு.200ம் ஆண்டிற்குரிய “பௌத்த சக்கரம்” என்றழைக்கப்படும் நாணயங்கள், தமிழகத்தின் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களே எனப் பிரித்தானிய அகழ்வாராய்ச்சியாளர்கள் இனம் காணுகின்றார்கள்.(Codrington,H.W. Ceylon Coins and Currency, Colombo, 1924)
2. கி.மு.300ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் கொற்கைப் பாண்டியர்கள் யானையைத் தங்கள் அரச சின்னமாகக் கொண்டிருந்தது அவர்களது பௌத்த மத சார்பைக் குறிப்பதாக நாணய இயல் வல்லுநர் லோவந்தால் கருதுகிறார்.(Loventhal, Rev. E. The Coins of Tinnevelly, Madras, 1938 )
கி.பி.25ஆம் ஆண்டில் பாண்டியர்கள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சியை ஆரம்பித்த பின்னரே தங்கள் சின்னத்தை மீனாக மாற்றினார்கள். மீன் சின்னமும் பௌத்தமதச் சின்னமே என லோவந்தால் தெரிவிக்கிறார்.(Loventhal, Rev. E. The Coins of Tinnevelly, Madras, 1938)
3. தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைக்கு இணையான ஒரு பௌத்த மத காவியம் இன்றுவரை உலகில் வேறு எந்த மொழியிலுமே உருவாகவில்லை என்பதே பல மேலைநாட்டு அறிஞர்களின் அபிப்பிராயம்.(Alain Danielou. Introduction to Maniekhalai The Dancer with the Magic Bowl, New York, 1989)
4. காவிரிப் பூம்பட்டினத்திலும், நாகைப் பட்டினத்திலும் நடைபெற்ற அகழ்வுகளில் காணப்பட்ட கிறீஸ்தவ காலத்திற்கு முற்பட்ட, பௌத்த விகாரங்களின் அடித்தளங்களும், பௌத்த ஸ்தூபிகளும், கருவூலங்களும், புத்தபிரானின் உருவச் சிலைகளும், தமிழகத்தில் பௌத்தமதம் பரவியிருந்த ஒரு காலகட்டத்தை எடுத்துக்காட்டுகின்றன. (நடன காசிநாதன்: பூம்புகாரும் அகழ்வாய்வும், சென்னை, 1999.)
இவ்வாறே கந்தரோடை அகழ்வுகளில் காணப்பட்ட பௌத்த மதச் சின்னங்கள் அக்கால மக்கள் மேற்கொண்ட மதச்சார்புகளை எடுத்துக் காட்டுகிறதேயன்றி வேறேதும் அர்த்தமில்லை. கந்தரோடையில் பௌத்த மதச் சின்னங்கள் காணப்படுவதால் அவ்விடத்தில் ஒரு காலத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்பது அபத்தமான வாதமாகும்.

Image may contain: one or more people, people standing and outdoor
 
 
 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • 1974 நவம்பர் 13 நியூயோர்கின் லாங் ஐலண்டில் அமிட்டிவில் என்ற  நகரத்தில் அதிகாலை திடீர் என துப்பாக்கிவேட்டுச்சத்தங்கள் கேட்டன,ஒரு வீட்டில் இருந்த இளைஞன் திடீரென அதிகாலை எழுந்துவீட்டில் உள்ளவர்களை எல்லாம் துப்பாக்கி எடுத்து கொரூரமாக சுட்டு கொலை செய்துவிட்டான். அதன் பின் அவன் போலீஸாரால் உடனடியாக கைது செய்யப்பட்டான். 6 கொலைகள் நடைபெற்றுமுடிந்தன தன் தாய் தந்தை சகோதரக்ள் சகோதரிகள் என அனைவரையும் அவன் சுட்டுக்கொன்றிருந்தான்,இந்த சம்பவங்களால் அந்த  வீட்டை யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை இருந்தும் மிக குறைவான விலைக்கு விற்கப்பட்ட அந்த வீட்டிற்கு அடுத்து குடி வந்தவர் தவறுதலாக எடுத்த ஒரு புகைப்படம் தான் இது ,பல ஆண்டுகளாக வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.   இந்த புகைப்படத்தின் பின்னால் இருக்கும் கதை என்ன? இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பேயா? வாருங்கள் முழுமையாக காணலாம். அமிட்டிவில் ஹாலிவுட்டில் பல்வேறு பேய் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த பேய்ப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படியாகக் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அமிட்டி வில் ஹாரர். இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. உண்மையிலேயே அந்த வீட்டில் என்ன நடந்ததோ அது அந்த திரைப்படத்தில் வரும் காட்சிகளை விடக் கொடூரமானதாகவும் திகில் நிறைந்ததாகவும் இருந்தது. இதற்கு முன்னர் இப்படி ஒரு சம்பவத்தையே கேள்விப்படாத பலருக்கு இந்த சம்பவம் தெரிந்ததும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியமைதான் இதைத் திரைப்படமாகவும் எடுக்கக் காரணமாக அமைந்ததது. இந்த காணொளியில் நாம் அமிட்டிவில் பேய் வீடு குறித்தும் அங்கு நடந்தவற்றையும் தற்போது அந்த வீட்டில் நடப்பவைகளையும் பார்க்கலாம் வாருங்கள்.   அழகான வீடு அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் அமிட்டிவில் இங்குள்ள ஒரு வீட்டில் தான் இந்த விஷயம் நடந்தது. இந்த வீடு வழக்கம் போல மற்ற வீடுகளைப் போலத் தான் இருந்தது. இதை வீடு என்பதை விடப் பங்களா என்றே சொல்லலாம். இந்த வீட்டில் சன்ரூம், பேக் பேட்டியோ, டெக், போட்ஹவுஸ் என்ற சகல வசதிகளும் இருந்தன. பொதுவாக அமெரிக்காவில் இந்த வசதிகள் பெரும்பாலான வீடுகளில் இருக்கும்.   1970  களில் இந்த வீட்டில் டிஃபோ என்பவரின் குடும்பம் வசித்து வந்தது. அவர் வீட்டில் அவர், அவர் மனைவி மற்றும் அவரின் 5 குழந்தைகளும் வசித்து வந்தனர். இந்நிலையில் நவம்பர் மாதம் ஒருநாள் அதிகாலை 3.15 மணிக்கு இந்த வீட்டில் ஒரு சம்பவம் நடக்கிறது டிஃபோவின் 23 வயது மகன் ரொனால்டு டிஃபோ என்பவர் அதிகாலை 3.15 மணிக்கு எழுந்து வீட்டிலிருந்த 0.35மிமீ துப்பாக்கியை எடுத்து வீட்டில் உள்ள மற்றவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குச் சென்று அங்குத் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் வரிசையாகச் சுட்டுக் கொலை செய்தார். அவர் தனது தாய், தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேரைக் கொரூரமாக கொலை செய்கிறான் இவன்   கைது இந்த தகவல் அதிகாலை போலீசாருக்கு தெரிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த ரொனால்டை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்த போது அவன் கூறியபதில் அவ்ர்களை திக்குமுக்காடவைத்தது தன்னை ஏதோ ஒரு குரல் அப்படிச்செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும். அது தன்னை மூளைச் சலவை செய்து அப்படிச் செய்ய வைத்துவிட்டதாகவும் வாக்கு மூலம் அளித்தான் அவன். ஆனால் போலீசார்  ஆரம்பத்தில் இவன் தண்டனையிலிருந்து தப்பிக்க ஏதோ பொய் கூறுகிறான் என்றுதான் நினைத்தார்கள்   பாழடைந்த வீடு 6 பேர் கொலைசெய்யப்பட்ட வீடு என்பதால் அந்த பகுதியில்உள்ள மக்கள் அந்த வீட்டை ஒரு பயங்கரமான வீடாகவே பார்த்தனர். வீட்டில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர். ரொனால்டும் சிறைக்குச் சென்று விட்டார். அந்த வீட்டில் யாருமே வசிக்க வில்லை. வீடும் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்பட்டது.   கோட்டில் ரொனால்டு மீது நடந்த வழக்கில் அவருக்கு 6 ஆயுள் தண்டனை கிடைத்தது. இவர் தற்போது நியூயார்க்கில் உள்ள ஒரு சிறையில் இன்றும் கைதியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் இவர் சிறைக்குச் சென்றதும்  வீடு அந்த வீடு விற்பனைக்கு வந்தது. ஆனால் யாரும் இந்த வீட்டை வாங்க முன்வரவில்லை அந்த வீட்டில் அமானுஷ்யமான சக்திலக்ள் இருப்பதாக பலர் நம்பியமையே இதற்கு காரணம்,மிகக்குறை1975ம் ஆண்டு ஜார்ஜ் லட்ஸ் என்பவர் இந்த வீட்டை விலைக்கு வாங்கினார். அதனால் இந்த வீட்டின் மதிப்பு மிகவும் குறைந்துகொண்டே சென்றது கிட்டத்தட்ட இவ்வளவு பெரிய பங்களாவை வெறும் 80 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு ஜார்ஜ் லட்ஸ் என்பவர் வாங்கினார். அவர் தனது மனைவி கேத்தி, மற்றும் மகன்கள் டேனியல் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோருடன் அந்த வீட்டிற்குக் குடி புகுந்தார். குறைந்த விலையில் வீடு வாங்கிவிட்டு செட்டில் ஆகிவிட்டதாக நினைத்து லட்ஸ் ஆரம்பத்தில் மிகவும்  சந்தோஷமாக இருந்தார். ஆனால் அந்த சந்தோஷம் வெகு நாட்களுக்கு நிலைக்கவில்லை. வீட்டிற்குள் அவர்கள் குடிவந்ததும் ஏதோ ஒரு வித அமானுஷ்யத்தை உணர துவங்கினர். அவர்களை யாரோ கண்காணிப்பது போலவும், அவர்களைச் சுற்றி யாரோ ஒருவர் இருப்பது போலவும் அவர்கள் உணர்ந்தனர். இது மட்டுமல்ல தினம் தினம் ஏதோ ஒரு விடயம் வித்தியாசமாக நடக்கத் துவங்கியுள்ளது.   samayam tamil லட்ஸ் அவர் வீட்டின் சுவர்களிலிருந்து பிசுபிசுப்பான ஏதோ ஒரு விஷயம் வெளியேறுவதைக் கவனித்துள்ளார். அது என்னவென்று அவருக்குப் புரியவில்லை. அதன்பின் அவர் வீட்டின் அருகே உள்ள பன்று யாரும் இல்லாத வீட்டை உற்றுப் பார்த்து மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தது. அதன் கண்களில் சிவப்பு நிறங்களில் ஏதோ தெரிந்துள்ளது. ஆனால் இவர் பார்க்கும் போது வீட்டிற்குள் எதுவுமில்லை.அமெரிக்காவை உலுக்கிய திகில் சம்பவம் இதை விட உச்சகட்டமாக லட்ஸ் இரவு தூங்கும் போது ஒருமுறை அதிகாலை நேரத்தில் விழித்து  எழுந்துள்ளார். அப்பொழுது அருகில் படுத்திருந்த அவரது மனைவி படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே அந்தரத்தில் மிதந்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் இவர் பதறி எழுந்துள்ளார். உடனே மனைவி கட்டிலில் விழுந்துவிட்டார் விடயம் இதோடு முடிந்துவிடவில்லை 
  • கொரோனாவால் திணறும் அமெரிக்கா! தியாகங்களை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது- பகிரங்கப்படுத்திய ட்ரம்ப் நாம் இப்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 4 வாரங்களுக்குதான் நாம் சில தியாகங்களைச் செய்யப் போகிறோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், “அமெரிக்காவில் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதற்கு மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம். நாம் இப்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 30 நாட்களுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும அரசு வழிகாட்டலின்படி விதிமுறைகளைக் கடைபிடித்து கொரோனா தொற்றைக் குறைக்க வேண்டும். அடுத்த 4 வாரங்களுக்குதான் நாம் சில தியாகங்களைச் செய்யப் போகிறோம், இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் நாம் சமூக விலக்கலைக் கடைபிடித்து, அதீதிமான சுத்தத்தை கடைபிடித்து, வீட்டுக்குள்ளே இருப்புதான் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் வெல்ல முக்கியமான ஆயுதம், அந்த பெரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடியும். நாம் அடுத்துவரும் வாரங்களில் லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரைக் காப்பாற்றப் போகிறோம் என்ற சிந்தனையில் இருங்கள் மிகச்சிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் ஆகியோருடன் கலந்துபேசி அமெரிக்கா கொரோனா வைரஸுக்கு எதிராகப் பணியாற்றி வருகிறது. கொரோனா வைரஸிலிருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள தேவையான மருத்துவம், சிகிச்சை, தடுப்பு மருந்துகள் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றத்தை பெற்று வருகிறோம் மருத்துவ ரீதியாக நாம் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறோம். உலகில் எந்த நாடும் செய்யாத அளவுக்கு அதிகமான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து வருகிறோம். கொரோனா வைரஸுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்து அதை பரிசோதிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதித்துள்ளது. மக்களை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற அமெரிக்கா எடுத்து வரும் முக்கியமான முயற்சிகளில் இது மைல்கல்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி பத்து லட்சத்து 15 ஆயிரத்து 877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, பலியானவர்களின் எண்ணிக்கையானது ஐம்பதாயிரத்து 3218 பேராக உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆராயிரத்து 88 பேர் பலியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/usa/80/140447?ref=home-imp-flag
  • Poverty will kill them before the virus Developing countries face economic collapse in Coronavirus fight, therefore the international financial organizations and rich nations must Protect Developing Nations from Coronavirus Pandemic.india’s Coronavirus lockdown means there are billions of people living with hunger .SriLanka , Pakistan ,Bangladesh facing the same problems. சுமக்க முடியாத  சுமைகளை சுமந்தபடியே  பெரியவர் குழந்தைகள் என  தாண்ட முடியாத ஒரு தூரத்தை  தாண்ட  முயற்சிக்கின்றனர்  நிலவின் துணையோடு  நீண்டதூரம் போகிறார்கள்  அன்று ஒரு நாள் போர்  தின்று முடித்த பூமியில்  இருந்து போனவர் போலவே  ஏதோ விதி என்றும் சிலர்  தமக்குள் பேசிக்கொள்கின்றனர்  யாரும் யாரையும் பற்றி  சிந்திக்கும் நிலையில்  அவர்கள் இல்லை  அன்றன்றாடு கூலி வேலை  செய்து உழைப்பவனை  அந்த நகரங்கள்  அவர்களை பசியொடு  விரட்டியிருக்கிறது  எதை எடுப்பது  எதை விடுவது  என்றும் தெரியாமல்  விதிப் பொட்டலங்களை  தலையில் காவியபடி  மனிதம் அலைந்துகொண்டிருக்கிறது  சத்தம் இல்லாமல்  ஒரு யுத்தம் நடக்கிறது  கோவில் குளம்  நகரம் கிராமம்  எல்லாமே அமைதியாகிவிட்டன  குழந்தைக்கு பால் இல்லை குடிப்பதற்கு தண்ணி இல்லை  பசியும் பட்டினியும் துயரமுமாக  ஏழை நாடுகளை இன்னும்  துயரப்படுத்துகிறது  கோரோனா  ஏதோ ஒரு பாதை  திறக்கும் என்ற  நம்பிக்கையை மட்டும்  கையில் பிடித்தபடி  நாளை எப்டியோ  ஊர் போய் சேரும்  கனவோடு  தாய் பிள்ளை  நடக்க முடியாதவன் ஊனமுற்றவன் என்று  ஊர்வலம் போகிறது  போர் தின்று முடித்த  பூமியில் கிடந்த  அகதி முகாமைப் போல்  அது இருக்கிறது.            
  • சுட்டுக் கொல்பவர்களுக்குப் பதவி உயர்வும், பாராட்டும் அரசு அளிப்பதைக் கண்டு இந்தப் பெலிசுக்காரரும் அதனை எண்ணிச் சுட்டிருக்கலாம். 😮 
  • நாம் வாழும் பூமியானது தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்பதும், இதனால் தான் இரவு பகல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த பூமி திடீரென சுற்றுவதை நிறுத்தினால் என்னவாகும் என்பது பற்றி என்றாவது கற்பனை செய்து பார்த்துள்ளீர்களா? ஒருவேளை அப்படி நடந்தல் என்னவாகும் என்பது பற்றி த்தான் பார்க்கப்போகின்றோம். பூமி சுற்றுவது சடுதியாக நிற்குமானால் நாம் உடனடியாக தூக்கி எறியப்படுவோம் பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது இவ்வாறு சுற்றும் பூமியானது திடீரென்று தனது சுழற்சியை நிறுத்தினால், பூமியில் நிலையாக பிணைக்கப்படாத அத்தனை உயிரனங்கள் மற்றும் பிற பொருட்கள் அத்தனையும் மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் தூக்கி எறியப்படும்.     எப்படி இருக்கும்? அதாவது ஒரு நிமிடத்திற்கு 28 கிலோ மீட்டர் வேகத்திலும், ஒரு வினாடிக்கு சுமார் அரை கிலோ மீட்டர் வேகத்திலும் நம்மை ஒரு பொருளின் மீது வீசி எறிந்தால் அதன் விளைவு எவ்வளவு மோசமானதாக இருக்கும் என சற்று யோசித்துப் பாருங்களேன்..! பெரிய சுனாமி..! கடல் நீரும் பூமியுடன் முழுமையாக பிணைக்கப்பட்டிருக்கவில்லை...! எனவே பூமி திடிரென தனது சுழற்சியை நிறுத்துவதால் உண்டாகும் விளைவானது ஒரு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தும். இது சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் 28 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு மிகப்பெரிய தீவை கூட ஒரு நிமிடத்தில் கடலுக்குள் மூழ்க செய்துவிடும் அளவிற்கு வேகமாகவும், மிக பெரியதாகவும் இருக்கும். இதனால் நிலத்தில் வாழும் ஒரு உயிர் கூட மிஞ்ச முடியாது...! மிக பெரிய நாள்..! பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்திய போதிலும் சூரியனை சுற்றுவது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும். எனவே வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் முற்றிலுமாக இருளிலும், அடுத்த ஆறு மாதங்கள் முற்றிலுமாக பகலாகவும் தான் இருக்கும். இதனால் ஒரு வருடத்தில் உள்ள 367 நாட்களும் ஒன்று சேர்ந்து, 8760 மணி நேரம் கொண்ட ஒரே ஒரு நாளாக தான் இருக்கும். மிகப்பெரிய அழிவு தொடந்து ஆறு மாதங்களாக சூரியனை நோக்கி இருக்கும் பகுதிகளில், வெப்பநிலை நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான வெப்பநிலை இருக்கும். இதனால் தொடந்து ஆறு மாதங்கள் வெயிலில் இருக்கும் பகுதிகள் வெப்பநிலை அதிகரித்து வறண்ட பாலை வனமாகவும், தொடந்து ஆறு மாதங்கள் இருளில் இருக்கும் பகுதிகள் பனிப்பொழிவு அதிகரித்து பனிப் பிரசேதங்களாகவும் தான் இருக்கும். வினோதமான நிகழ்வு இந்த சூழ்நிலை மாற்றங்களை தாங்க முடியாமல் நுண்ணுயிரிகள் கூட முற்றிலுமாக அழிந்துவிடும். சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதற்கு பதிலாக, மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும். அதுமட்டுமின்றி இந்த வினோதமான நிகழ்வானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.மைய நீக்கவிசை இல்லாத காரணத்தினால் சூரியனை நோக்கிய பகுதியை நோக்கி சூரியனின் ஈர்ப்புவிசை காரணமாக கடல் நீர் சூரியனின் பக்கம் செல்லும் ஆனால் பாறைகளே உருகுமளவிற்கு காணப்படும் மிகப்பெரும் வெப்பம் காரணமாக கடல் நீர் முழுவதும் ஆவியாகி பூமி வறண்ட ஒரு பாறையாக மாற்றமடையும்.கடல் நீர் ஆவியாகியதும் மிக வறண்ட மிகப்பெரிய மலைகள் தோன்றும் இவையெல்லாம் கடலின் அடியில் மூழ்கியிருந்த பள்ளத்தாக்குகள்தான் மலைகளாக மாற்றமடையும்.வெப்பமான பகுதியில் அதிக காற்றுவீசும்  திடிரென சுழற்சியை நிறுத்துவதினால் வழிமண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தினால் வீசும் காற்றின் வேகமானது ஒரு மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பினை விட பல மடங்கு வலிமையானதாக இருக்கும். இதனால் மிகப்பெரிய கட்டிடங்கள் கூட இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போகும். முற்றிலும் புவியின் மத்தியபகுதி வட தென் பகுதிகளை சற்று பருமனாக காணப்படும் புவி மிகவேகமாக சுற்றுவதன் காரணமாக ஏற்படும் மைய நீக்கவிசையினாலேயே கடல் நீர் பூமியின் மத்திய ரேகைப்பகுதில் அதிகமாக சேர்ந்திருக்கின்றது.பூமி சுழல்வது நின்றுவிட்டால் மத்தியரேகையில் அதிக அளவில் காணப்படும் கடல் நீர் பூமியின் துருவப்பகுதியை நோக்கி கிலோமீட்டர் உயரமான சுனாமியலைகளாக சென்றடையும்.எதிரில் இருக்கும் அனைத்தும் துடைத்தெறியப்படும்   அழிந்துவிடும் பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்திய அடுத்த நொடியே, புவியின் காந்தப்புலம் பாதிப்படையும் இது இல்லாமலேயே போகலாம் ,புவிக்காந்தப்புலம் உருவாக்கம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படவில்லை பூமியின் வெளியோடு ஒரு வேகத்திலும் பூமியின் மையப்பகுதி வேறு வேகத்துடனும் சுழல்வதாலேயே  காந்தப்புலம் உருவாவதாக நம்பப்படுகின்றது எனவே பூமி சுற்றுவது நின்றுவிட்டால் காந்தப்புலம் இல்லாமலேயே போய்விடலாம் . இதனால் சூரியனிடம் இருந்து வரும் புற ஊத கதிர்களினால் பூமியில் இருக்கும் மீத உயிர்களும் முற்றிலுமாக அழிந்துவிடும்...! தாவரங்கள் அனைத்தும் அழிந்துவிடும் ஒளித்தொகுப்பு நடைபெறாது உயிர்களுக்கு உணவே இருக்காது,புவியின் காற்றுமண்டலம் பாதிப்படையும் எமக்கு கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜனின் அளவு மாற்றமடையும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.  எனவே இந்த பூமியானது நமக்கு தெரிந்த இந்த நீர், நிலம், காற்று மட்டும் அல்லாமல், ஈர்ப்பு விசை, காந்த மண்டலம், பூமியின் சுழற்சி ஆகிவற்றை கொண்டு இயற்கையாகவே நம்மை பாதுகாத்து வருகிறது என்பதே உண்மை...!! புவியின் சுழற்சி சடுதியாக நிறுத்தப்பட எந்த சாத்தியமும் இல்லை ஆனால் சுழற்சி வேண்டுமானால் படிப்படியாக நிகழலாம் ஆனால் இதற்கும் மில்லியன் கணக்கான வருடங்கள் எடுக்கும் எனவே யாரும் பயப்படத்தேவையில்லை.tamil info facts
×
×
 • Create New...