• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

மில்லியன் கணக்கான ஹிந்து பக்தர்கள் கும்பமேளா பெரும் குளியலில் பங்கேற்பு!

Recommended Posts

82791-untitled-design-1-720x430.jpg

மில்லியன் கணக்கான ஹிந்து பக்தர்கள் கும்பமேளா பெரும் குளியலில் பங்கேற்பு!

இந்தியாவின் வடக்கு நகரான பிரயாக்ராஜில் இடம்பெற்றும் கும்பமேளா சமய நிகழ்வுகளில் மில்லியன் கணக்கான தீவிர ஹிந்து பக்தர்கள் கலந்து கொண்டதுடன், மாபெரும் குளியலிலும் ஈடுபட்டனர்.

“ஷாஹி ஸ்னான்” எனப்படும் கும்பலாக நீராடும் நிகழ்வில் பங்கேற்றனர். பலர் காவியுடை அணிந்த வண்ணமும், ஒரு சிலர் நிர்வாணமாகவும் மாபெரும் குளியலில் ஈடுபட்டு சமய நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். கும்பமேளா அல்லது கும்ப திருவிழா என்று அழைக்கப்படும் இந்த சமய நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தொடக்கம் இடம்பெற்றது.

கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் குளிர்ந்த நீரில் நீராடி திருநீறால் நெற்றியில் பட்டை பூசி ஊர்வலமாக செல்கின்றனர்.

‘மவுனி அமாவசம்’ அல்லது சந்திரன் நாள் என்ற மிகச்சிறப்பான தினத்தில் யாத்திரிகர்கள் தமது குடும்பத்தினருடன் இணைந்து வேண்டுதல்களையும், குறைகளையும் கடவுள்களிடம் முன்வைக்கின்றனர்.  மூன்று நதிகள் கலக்கும் இடத்தில் நீராடுவதால் தமக்கு மிகுந்த தூய்மையும், எதிர்சக்திகளில் இருந்து பாதுகாப்பும் கிடைப்பதாக பக்தர்கள் எண்ணுகின்றனர்.

அத்துடன் கும்பமேளா பிராத்தனைகள் தமக்கு வாழ்க்கை மற்றும் மரணத்திற்கு இடையில் ஒரு நல்ல தருணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.இவ்வாறான கும்பமேளா யாத்திரைகள் சுமார் 2000 வருட பாரம்பரியத்துடன் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறையும் இந்தியாவின் நான்கு நகரங்களையும், மூன்று ஆறுகளையும் இணைக்கும் வகையில் கும்பமேளா பண்டிகை நடத்தப்பட்டு வருகின்றது.

http://athavannews.com/மில்லியன்-கணக்கான-ஹிந்து/

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

 திரிவேணி சங்கமத்தில் நீராடக் கொடுப்பினை வேண்டும்.பகிர்வுக்கு நன்றி தமிழ்சிறி ......!   🌺

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, suvy said:

 திரிவேணி சங்கமத்தில் நீராடக் கொடுப்பினை வேண்டும்.பகிர்வுக்கு நன்றி தமிழ்சிறி ......!   🌺

கொடுப்பனவுக்கு முன்னர், சுத்தமும் முக்கியம் அல்லவா, சுவியர்.

Image result for thriveni holy

ஹரிதுவார் சுத்தமான இடம்என்று அறிகிறேன்.

Image result for haridwar holy place

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites

உலகத்திலே மிக அழுக்கான நதிகள் என அடையாளம் காணப்பட்ட நதிகளுள்  இந்த புனித நதி என அழைக்கப்படும் கங்கையும் ஒன்று.

https://goo.gl/images/DPTuCi

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, tulpen said:

உலகத்திலே மிக அழுக்கான நதிகள் என அடையாளம் காணப்பட்ட நதிகளுள்  இந்த புனித நதி என அழைக்கப்படும் கங்கையும் ஒன்று.

https://goo.gl/images/DPTuCi

இந்த நதி நிறைய போத்தல்களில் அடைத்து இங்கு சில தமிழ் கடைகளில் 'கங்கா' நீர் புனித நீர் என சொல்லி விற்கின்றனர்.

என் மாமி இறந்த சடங்கு செய்ய வந்த ஐயர், கங்கை நீரை (அதாவது கடும் அசுத்த நீரை) மாமியின் உடல் மீது தெளிக்க சொல்லி ஒரு பேணியில் கொடுத்தார். தெளித்து முடிந்து என் மனைவி அவரிடம் பேணியை கொடுக்கும் போது, பிராமணர் அல்லாத என் மனைவி கொடுப்பதை கையால் வாங்கினால் தீட்டு என்பதால் அதை அவர் அருகில் ஒரு துணியில் வைத்து விட்டு போகச் சொன்னார்.

ஆனால் 31 இற்கு என் மனைவியின் அக்கா குடும்பம் கொடுத்த அரிசி, மரக்கறி, பணம் எல்லாவற்றையும் பல்லை இளித்துக் கொண்டு வாங்கிக் கொண்டு போனார்.

 • Like 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, suvy said:

 திரிவேணி சங்கமத்தில் நீராடக் கொடுப்பினை வேண்டும்.பகிர்வுக்கு நன்றி தமிழ்சிறி ......!   🌺

என் வாழ்நாளில் ஒரு நாளாவது திரிவேணி சங்கமத்தில்  நீராட  வேண்டுமென  நேர்த்தி வைத்துள்ளேன்.

Share this post

Link to post
Share on other sites

நானும் இப்படியான நதிகளில் எல்லாம் நீராட மாட்டேன் ...இங்க லண்டனில் கடலில் குளித்து விட்டு வீ ட்டை வந்து சோப் போட்டு குளிக்கும் மட்டும் அரியண்டமாய் இருக்கும்... போன வருசம் ஜரோப்பிய நாட்டுக்கு ஹொலிடே போயிருந்த போது நாயும்,மனிசரோட சேர்ந்து கடலில் குளிக்குது 😶

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, ரதி said:

இஞ்சை உப்பிடி எல்லாத்துக்கும் அரியண்டம் பாத்துத்தான் உடம்பிலை எதிர்ப்புசத்தியே இல்லாமல் போச்சுது தங்கச்சி.....

இவங்கள் வெள்ளைக்காரர் சேற்றிலை குளிக்கிறதுக்கெண்டே அலைஞ்சு திரியுறாங்கள்....

எங்கடை சனம் என்னடாவெண்டால்  சுத்தம் சுகாதாரம் போத்தில் தண்ணியும் 68குளிசையோடையும் திரியினம். 😩

Schlammbad à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, குமாரசாமி said:

வெள்ளையல் கக்கா இருந்தால் கூட கழுவுவது இல்லை...நாங்கள் அப்படியா அண்ணா? தவிர எங்கடையாக்களுக்கு நூதனம் பார்த்து தான் வருத்தம் வந்தது என்று சொல்லுற மாதிரி இருக்கு உங்கட கதை 😕

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, நிழலி said:

இந்த நதி நிறைய போத்தல்களில் அடைத்து இங்கு சில தமிழ் கடைகளில் 'கங்கா' நீர் புனித நீர் என சொல்லி விற்கின்றனர்.

என் மாமி இறந்த சடங்கு செய்ய வந்த ஐயர், கங்கை நீரை (அதாவது கடும் அசுத்த நீரை) மாமியின் உடல் மீது தெளிக்க சொல்லி ஒரு பேணியில் கொடுத்தார். தெளித்து முடிந்து என் மனைவி அவரிடம் பேணியை கொடுக்கும் போது, பிராமணர் அல்லாத என் மனைவி கொடுப்பதை கையால் வாங்கினால் தீட்டு என்பதால் அதை அவர் அருகில் ஒரு துணியில் வைத்து விட்டு போகச் சொன்னார்.

ஆனால் 31 இற்கு என் மனைவியின் அக்கா குடும்பம் கொடுத்த அரிசி, மரக்கறி, பணம் எல்லாவற்றையும் பல்லை இளித்துக் கொண்டு வாங்கிக் கொண்டு போனார்.

உண்மை நிழலி. இது போல அபத்தங்களை அவமானங்களை மதம் என்ற பெயரிலும் கலாச்சாரம் என்ற பெயரிலும் சொந்த அறிவை அடகு வைத்து ஏற்றுக்கொண்டு வாழும் வரை தமிழர்கள் முன்னேறப்போவதில்லை. பத்தாம்பசலி சடங்குகளுக்கு அர்ததம் கண்டுபிடிப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள உதவுமே தவிர உலக மக்களுடன் இணைந்து அவர்களுக்கு இணையாக  எம்மை கெளரவமான மனிதர்களாக தலை நிமிர்ந்து வாழ உதவப்போவதில்லை. 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

வெள்ளையல் கக்கா இருந்தால் கூட கழுவுவது இல்லை...நாங்கள் அப்படியா அண்ணா? தவிர எங்கடையாக்களுக்கு நூதனம் பார்த்து தான் வருத்தம் வந்தது என்று சொல்லுற மாதிரி இருக்கு உங்கட கதை 😕

வெள்ளையளை பாத்தும் இன்னும் திருந்தேல்லையெண்டு  பெரியவாள் சொல்கிறார்கள்.ஆகவே கக்காவுக்கு போனால் ரிசு பாவிக்கவும். 😩

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

சென்ற ஆடி அமாவாசையில் நான் கீரிமலையில்தான் நீராடினேன். கேணியும் சின்னகேணிதான்.உங்களுக்கும் தெரியும்தானே. எக்கச்சக்கமான சனம். கடலில் சுவாமி தீர்த்தமாடினார். எல்லோரும் பாத்திரங்களில் தீர்த்தம் சேகரித்து கொண்டோம்.....!

யோசித்து பார்த்தால் எல்லாவற்றிலும் சுத்தமும் அசுத்தமும் சேர்ந்தே உள்ளது. கொழும்பில் சந்தைகளில் கங்குங் உட்பட கீரை வகைகளை வாங்கி சமைக்கிறோம். ஆனால் அவை வளரும் இடங்களை பார்த்தால் சாப்பிட யோசிக்க வேண்டி வரும்.நிறைய சொல்லலாம் ஆனால் வீண் விவாதமாகி கொண்டு போகும்.

2 hours ago, நிழலி said:

இந்த நதி நிறைய போத்தல்களில் அடைத்து இங்கு சில தமிழ் கடைகளில் 'கங்கா' நீர் புனித நீர் என சொல்லி விற்கின்றனர்.

என் மாமி இறந்த சடங்கு செய்ய வந்த ஐயர், கங்கை நீரை (அதாவது கடும் அசுத்த நீரை) மாமியின் உடல் மீது தெளிக்க சொல்லி ஒரு பேணியில் கொடுத்தார். தெளித்து முடிந்து என் மனைவி அவரிடம் பேணியை கொடுக்கும் போது, பிராமணர் அல்லாத என் மனைவி கொடுப்பதை கையால் வாங்கினால் தீட்டு என்பதால் அதை அவர் அருகில் ஒரு துணியில் வைத்து விட்டு போகச் சொன்னார்.

ஆனால் 31 இற்கு என் மனைவியின் அக்கா குடும்பம் கொடுத்த அரிசி, மரக்கறி, பணம் எல்லாவற்றையும் பல்லை இளித்துக் கொண்டு வாங்கிக் கொண்டு போனார்.

தயவு செய்து குறை நினைக்க வேண்டாம் நிழலி. இது ஒரு பிதுருக்கு செய்யும் சடங்கு என்பதால் சொல்லுகிறேன். உங்களுக்கு, நீங்கள்தானே போய் ஐயரை அழைத்து வந்தனீங்கள். அவர் தான் கற்ற முறைப்படி தன்  கடமையைத்தான் செய்கிறார். கங்கை நீர் சுத்தம் இல்லை என்று கருதினால் அதை ஏன் நீங்கள் வாங்கி வர வேண்டும். ஒரு சுத்தமான பாத்திரத்தில் பைப் தண்ணீரை கொடுத்தால், அதை அவர் கங்கையை நினைத்து மந்திரம் ஜெபித்து விட்டு தெளிக்க சொல்லுவார். 

நீங்களாக மனம் விரும்பி கொடுப்பதை அவர் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டு போக வேண்டும், அதைத்தான் அவர் செய்துள்ளார்.  அதை நீங்கள் இழிவு படுத்துவது உங்களுக்குத்தான் ஆகாது. 

எனது தாயாரின் அந்திம கிரிகைகளுக்கு நாங்கள்தான் எல்லாம் செய்தோம். ஐயரை அழைக்கவில்லை. 31 க்கு  ஐயரை கூப்பிட்டு எல்லா தானமும் குடுத்து துடக்கு கழித்து அவரை அனுப்பி விட்டு  பின் நாங்கள் சமைத்து படைத்தோம்....!   😁

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, suvy said:

உதுல்ல என்ன குறை நினைப்பதுக்கு சுவி அண்ணா? கருத்துகள் பரிமாறத்தானே இந்த களம்

இவை நான் செய்தது அல்ல. என் மனைவியின் அம்மாவின் இறப்புக்கு பின் நிகழ்ந்தவை. மனைவியின் மூத்த சகோதரி குடும்பமே எல்லாவற்றையும் பொறுப்பெடுத்து செய்தனர். நான் இதில் பார்வையாளன் மட்டுமே. கங்கை நீரை ஐயர் தான் கொண்டு வந்தார்.

ஆனால் கண்டிப்பாக என் மரணத்தின் பின் இவ்வாறு நடக்காது. எந்த மதச் சடங்கும், சாதியத்தை வலியுறுத்தும் செயற்பாடுகளும் இருக்காது. மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் இதை உறுதியாக சொல்லியுள்ளேன். பார்வைக்கு வைத்த பின் முடிந்தால் பல்கலைக்கழகத்துக்கு / கல்லூரிக்கு கொடுக்க சொல்லித்தான் பெயரையும் பதிந்து இருக்கின்றோம் நானும் மனைவியும்.அத்துடன் அப்பாவின் மரணத்தின் பின்னர் இதுவரைக்கும் இப்படி ஆண்டுத் துவசம், அது இது என்று எதுவும் செய்யவில்லை..

சரி, உங்களிடம் ஒரு கேள்வி

கங்கை நீரை புனிதமான நீர் என இப்பவும் நம்புகின்றீர்களா?

 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites

ஓம் , நான் அதை பரிபூரணமாக  நம்புகின்றேன்......!

எதையும் இல்லை இல்லை என மறுப்பதற்கு கன அறிவு தேவையில்லை. இருக்கு என சொல்பவனுக்குத்தான் அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதையும் நிரூபித்தால் கூட அதை அறிவால் மறுத்துக்கொண்டே  போகலாம். அதனால்தான் பெரும்பாலும் ஒதுங்கி விடுவது. 

முற்பகல் செய்ய பிற்பகல் விளையும் என்பார்கள். அது எனக்கு பொருந்தும்.ஏனெனில் நானும் மோசமாக நாத்திகம் பேசியவன்தான். சோதிடம் சொல்ல வந்தவரை வீதியால் திருத்தி விட்டேன். எல்லாம் எழுதினால் திரி நீண்டு விடும்......!  😁

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, suvy said:

முற்பகல் செய்ய பிற்பகல் விளையும் என்பார்கள். அது எனக்கு பொருந்தும்.ஏனெனில் நானும் மோசமாக நாத்திகம் பேசியவன்தான். சோதிடம் சொல்ல வந்தவரை வீதியால் திருத்தி விட்டேன். 

பிற்காலத்தில் நிறைய துன்பப்பட்டு விட்டீர்கள் போல தெரிகிறது. ஆன்மீகம் நிம்மதி தரும்.

Share this post

Link to post
Share on other sites

அதிகம் துப்பரவு பார்த்துத்தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துபோயுள்ளது. குழந்தைகள் துப்பரவில்லாத இடங்களில் விளையாடி பக்டீரியாக்கள், பங்கசுக்கள், வைரசுக்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளும்போது உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகின்றது. அதற்காக வயிற்றோட்டத்தைக் கவனிக்காமல் விட்டால் உயிர்போய் விடும் ஆபத்தும் உள்ளது என்பதையும் மறுக்கவில்லை.

எனவே அழுக்கு மிகுந்த கங்கையில் முங்கிக் குளித்து எல்லாக் கிருமிகளையும் பெற்று உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம் என்பதால் கங்கையை புனிதமாகக் கருதுவதில் தப்பில்லை!😀

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

எனது தந்தையார் தனது தந்தையின் சாவீட்டில் ஐயரை அழைக்கவில்லை, தேவாரம் பாடி சுண்ணம் இடித்து கொள்ளிகுடம் சுமந்தவர்.
தனது சாவின் பின்னரும் வெடி கொழுத்தகூடாது, மேளம் பிடிக்ககூடாது, ஐயரையும் கூப்பிடகூடாது. 24 மணிநேரத்துக்குள்ள உடலை எரித்துவிட சொல்லியிருக்கிறார்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, suvy said:

ஓம் , நான் அதை பரிபூரணமாக  நம்புகின்றேன்......!

எதையும் இல்லை இல்லை என மறுப்பதற்கு கன அறிவு தேவையில்லை. இருக்கு என சொல்பவனுக்குத்தான் அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதையும் நிரூபித்தால் கூட அதை அறிவால் மறுத்துக்கொண்டே  போகலாம். அதனால்தான் பெரும்பாலும் ஒதுங்கி விடுவது. 

முற்பகல் செய்ய பிற்பகல் விளையும் என்பார்கள். அது எனக்கு பொருந்தும்.ஏனெனில் நானும் மோசமாக நாத்திகம் பேசியவன்தான். சோதிடம் சொல்ல வந்தவரை வீதியால் திருத்தி விட்டேன். எல்லாம் எழுதினால் திரி நீண்டு விடும்......!  😁

நாத்திகம் பேசியது இல்லை, ஆத்திகம் உச்சகட்டமாக பேசிய பொழுதே கடவுளை முழுவதுமாக ஏற்றது கிடையாது... கண்டதில்லை என்பதால்... இந்த உணர்வு இருந்தது, சரியாக பற்கள் வாய்க்குள் முளைத்தமை... டைனோசருக்கும் அதே, அது முற்றும் அழிந்து அடுத்த பரிணாம மனிதனுக்கும் அதே... 

கடவுள் என்ற நிலை இருக்கிறது என்று இப்பொழுது ஆளமாக நம்புகிறேன், பலவற்றை கண்ணின் முன்னாலேயே கண்டாகிவிட்டது... நேற்று மாலையும் கூட... கடவுளின் நிலையும் கூட இயற்கையை போல தானே நிகழ்வது தான்... பிரபஞ்சத்திற்க்கு எப்படி ஒரு மையப் பொருள் தேவைப் படுகிறதோ அதற்க்கும் அவ்வாறே தேவைப் படுகிறது... 

அவதார் படத்தில் ஒரு வசனம் வரும் "அவர் க்ரேட் எய்வா டசின்ட் டேக் சைட்ஸ், இட் ஹெல்ப்ஸ் தி பேலன்ஸ் ஆஃப் தி லைஃப்" என்று... இது உண்மை என்று வாதிடவில்லை, இயல்பாக நிகழும் நிகழ்வுகளை ஏற்று கொள்ளும் மனது, இந்த கருத்தை எந்த அளவு உள் சென்று பாவிக்கிறது??...

கடவுள் நிலையை நம்புகிறேன், ஆனால் சடங்குகளை சிறிதளவு கூட மேற் கொண்டது இல்லை... சடங்குகள் சஞ்சரிக்கும் இடங்களில் இருந்தால் மறுப்பதுவும் இல்லை...

கடவுள் நிலையை நம்புகிறேன், கடவுளை நம்புவது இல்லை...

எனக்கு நிகழ்வது போல் என் மாமாவிற்க்கு நிகழ்ந்ததை கண் கூடே பார்த்திருக்கிறேன்... அவர் பார்ப்பதை நான் பார்ப்பதற்க்கு அதிகாரமும் உரிமையும் இல்லை... அதனால் என் பின்னால் அவர் என்ன சமிங்ஞ்சையை கண்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று...

நிகழ்ந்த பலவற்றில் ஒன்ரை இங்கு பகிற்கிறேன்...

நான் முன்னதாக வேலை பார்த்த பள்ளியில் எனது கம்ப்யூட்டர் இருக்கைக்கு எதிரே ஒரு ஜன்னல் இருக்கும்... அந்த ஜன்னலின் வழியே ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே வானை பார்க்க இயலும்... சரியாக அந்த குறிப்பிட்ட இடத்திற்க்கிடையில் ஒரு பறவை பறந்த படியே ஒரே இடத்தில் அசையாமல் நிலை கொண்டிருந்தது... முதல் முறை அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, மறு நாளும் அது நிகழ்ந்தது... பிறகு சிறிது ஆச்சர்யம்... அவ்வளவே...

இது என்ன மாறுதலை ஏற்படுத்தியது, நேற்று மாலை நிகழ்ந்தது என்ன மாற்றத்தை நிகழ்த்த போகிறது என்று தெரியவில்லை... ஆனால் குறிப்பிடும் இது போன்ற சம்பவங்கள் நிகழும் பொழுது நானும் ஏதாவது என்னால் ஆன கிறுக்கு தனத்தை பதிந்து விட்டு அவ்விடத்தைவிட்டு நகற்வேன்...

--பறவை வந்துச்சாம் பறந்துச்சாம் நின்னுச்சாம்... இப்ப என்ன ஆய் போச்சு...

Edited by மியாவ்
 • Like 2

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Jude said:

பிற்காலத்தில் நிறைய துன்பப்பட்டு விட்டீர்கள் போல தெரிகிறது. ஆன்மீகம் நிம்மதி தரும்.

குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவு பெரிய துன்பம் எதுவும் இறையருளால் ஏற்படவில்லை ஜுட்..... அதுக்காக ஆஹா ஓஹோ என்று பெரிய பணக்காரரும்  இல்லை. நன்றாக படித்தேன். n r t b யில் நல்ல பதவியில் வேலை செய்தேன். அப்பா இல்லை.சகோதரிகள் திருமணம். பின்  சவூதி போய் 5 வருடம் நன்றாக சம்பாதித்தேன். பின் ஊரில் திருமணம் ,கடை, காராஜ் என்று பிஸினஸ். அமைதி படையின் அட்டூழியங்கள் , கொழும்பு வந்திருந்து  லிபியாபோய் சம்பாதித்தேன். பின் ஊர் வந்து "விதி" திரத்த பிரான்ஸ் வந்து பிள்ளைகளையும் மனசுக்கு திருப்தியாக ஆளாக்கி விட்டு  கொஞ்சம் மூச்சு விட்டு எதைப்பற்றியும் மனிசி கவலைப்படும் அளவு நான் கவலைப்படுவதில்லை.பேரப்பிள்ளைகளை ரசித்து கொண்டு (பெத்த பிள்ளைகளின் குறும்புகளை ரசிக்க நேரம் இருந்ததில்லை) உங்களுடன் கதைத்து கொண்டிருக்கிறேன்.....!   😁

மியாவ்: நாங்கள் எங்கோ தூரத்தில் இருப்பதையும், செய்திகளையும் நம்புகிறோம், வியக்கிறோம். ஆனால் எமக்கு அருகில் நிகழ்பவற்றை  கவனிக்க தவறி விடுகிறோம். நான் எழுதும் திவ்ய தேசத்தில் சில அனுபவங்களை எழுதிக் கொண்டு வருவேன்.....! 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, suvy said:

மியாவ்: நாங்கள் எங்கோ தூரத்தில் இருப்பதையும், செய்திகளையும் நம்புகிறோம், வியக்கிறோம். ஆனால் எமக்கு அருகில் நிகழ்பவற்றை  கவனிக்க தவறி விடுகிறோம். நான் எழுதும் திவ்ய தேசத்தில் சில அனுபவங்களை எழுதிக் கொண்டு வருவேன்.....! 

திவ்ய தேசத்திற்க்கு வழி சொல்ல இயலுமா??

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, tulpen said:

உண்மை நிழலி. இது போல அபத்தங்களை அவமானங்களை மதம் என்ற பெயரிலும் கலாச்சாரம் என்ற பெயரிலும் சொந்த அறிவை அடகு வைத்து ஏற்றுக்கொண்டு வாழும் வரை தமிழர்கள் முன்னேறப்போவதில்லை. பத்தாம்பசலி சடங்குகளுக்கு அர்ததம் கண்டுபிடிப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள உதவுமே தவிர உலக மக்களுடன் இணைந்து அவர்களுக்கு இணையாக  எம்மை கெளரவமான மனிதர்களாக தலை நிமிர்ந்து வாழ உதவப்போவதில்லை. 

எம்மை பெற்றவர்களுக்கு பிதிர்கடன் செய்வதையும் அவர்களை இறந்த நாளில் நினைவு கூர்வதையும் அவமானம் எனவும் அறிவற்ற செயல் எனவும்  கூறும் நீங்கள் எந்த  அளவு முன்னேறி உள்ளீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளது. நீங்கள் அதை செய்யாமல் இருக்கலாம் ஆனால் அதை செய்பவர்களை அறிவிலிகள் என்று கூற உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.எத்தனையோ ஆயிரம் ஏன் லட்சம்  டாலர்கள் சம்பளமாக பெறும் சிலிக்கன் வலியை சேர்ந்த பலர்  ஊர்வந்து அவரவர் தாய் தந்தையரின் பிதிர் கடன்களை  முறைப்படி செய்துவிட்டு போவதை நாம் நிறையவே பார்த்துள்ளோம். அது நாம்  எம்மை பெற்றவர்களுக்கு செய்யும் மரியாதை. கெளரவமான மனிதர்களாக தலை நிமிர்ந்து வாழ படிப்பும் முயற்சியும் நல்ல மனமும் இருந்தால் போதும். அதை கொண்டுவந்து மதத்துடனும் கலாச்சாரத்துடனும் ஏன்  முடிச்சு போடுகிறீர்கள்.

Edited by Eppothum Thamizhan

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Eppothum Thamizhan said:

இறந்தவர்களை நினைவு கூரல் என்ற விடயத்தை  தவறு என்ற இங்கு எந்த இடத்திலும் பேசப்படவில்லை. நீங்கள் தேவையில்லாமல் டென்ரன் ஆகின்றீர்கள் பொதுவாக இப்படிப்பட்ட விவாதங்கள் கருத்து பகிர்வுகள் எவையும் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிப்பவை அல்ல.

எம்மீது திணிக்கப்பட்ட மூடப் பழக்கங்களையும் அர்த்தமற்ற சடங்குகளைப்பற்றிய பொதுவான  விவாதமே இது.  கேள்வி கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. இது புதிய விடயம் அல்ல. ஏற்கனவே இவ்வாறான விவாதங்கள் நடைபெற்ற பல பத்தாம்பசலி பழக்கங்கள் சடங்குகள் பல கைவிடப்பட்டுள்ளன.  எதிரகாலத்திலும்  எமது அறிவார்ந்த தலைமுறையால் இவை  கேள்வி கேட்கப்பட்டு   விவாதங்கள் நடத்தப்பட்டு காலத்திற்கொவ்வாத stupid பழக்கங்கள்  ஒழிக்கப்படும். இதை தனிப்பட்ட ரீதியில் எடுத்து கோபம் அடையாதீர்கள். 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this