Jump to content

ஆவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம் ; தெருக்களில் உலாவரும் முதலைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளிலிருந்த முதலைகள் வெளியேறி தெருக்களில் உலாவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

51429955_1009177202604398_67392241904920

ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் வரலாறு காணாத  மழை பெய்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

51375828_1009177245937727_22298088810500

வீடுகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். சிலர் தங்களின் வீட்டு கூரைகளில் தஞ்சமாடைந்துள்ளனர்.

51081737_1009177089271076_62539014759786

தொடர்ந்து மழை பெய்வதால் குவின்ஸ் லேன்டிலுள்ள அணை திறந்து விடப்பட்டது. அதிலிருந்து வெளியேறிய நீர் கைரனஸ், டவுன்ஸ்வில்லே பகுதிகளில் பாய்ந்து செல்கிறது. அணைகளிலிருந்த முதலைகள் வெளியேறி தெருக்களில், உலாவருகின்றன. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

51078999_1009177152604403_61224268405114

பல இடங்களில் மண்சரிவும், மின் வெட்டும் நிலவுகிறது. தொடர்ந்து வெள்ளம் அதிகரிப்பதையடுத்து மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.

52065958_1009177175937734_74109298712636

எனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் தங்கியிருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/49405

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா.. முதலையையும், கனடா குளிரையும் நினைத்தால்... 
அவைகள்  நல்ல நாடுகள் என்றாலும்... ஒரு பயம்  வரத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அவுஸ்திரேலியா.. முதலையையும், கனடா குளிரையும் நினைத்தால்... 
அவைகள்  நல்ல நாடுகள் என்றாலும்... ஒரு பயம்  வரத்தான் செய்யும்.

                       à®¤à¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯ 

 à®¤à¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

சிறித்தம்பி! ஆகக்கடும் குளிரெண்டால் வீட்டுக்கை போசாமல் போர்த்து மூடிக்கொண்டாவது படுத்திடலாம். ஆனால் முதலை பாம்பு வீட்டுக்கை வருமெண்டு நினைச்சால் நித்திரையே வராதெல்லே..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு இன்னும் வெளியால வரேல்லையோ🙄 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

பாம்பு இன்னும் வெளியால வரேல்லையோ🙄 

 

கடும் வெயில் என்டால் தான்....பொந்துகளுக்கு உள்ளே.. இருக்கேலாமல் ....பாம்புகள் ஊருக்குள்ள எட்டிப்பார்க்கும்...., ரதி....!

8822466_orig.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

                         à®¤à¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

சிறித்தம்பி! ஆகக்கடும் குளிரெண்டால் வீட்டுக்கை போசாமல் போர்த்து மூடிக்கொண்டாவது படுத்திடலாம். ஆனால் முதலை பாம்பு வீட்டுக்கை வருமெண்டு நினைச்சால் நித்திரையே வராதெல்லே..😀

Bildergebnis für spinne gif  Bildergebnis für spinne gif

குமாரசாமி அண்ணை...... முன்பு ஒரு முறை புங்கையூரான்  சொன்னார்.
சப்பாத்தை  கழட்டி வைத்து விட்டு போடும் போது... புலுமச் சிலந்தியும்  உள்ளுக்கை க இருக்குமாம்.
இப்படி இருந்தால்... வேலைக்குப் போற அவசரத்திலை   ஜக்கெற்  போட்டுக் கொண்டு போகும் போது...
அதுக்குள்ளை....  புலுமச் சிலந்தி இருந்தால், என்ன கதி.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Bildergebnis für spinne gif  Bildergebnis für spinne gif

குமாரசாமி அண்ணை...... முன்பு ஒரு முறை புங்கையூரான்  சொன்னார்.
சப்பாத்தை  கழட்டி வைத்து விட்டு போடும் போது... புலுமச் சிலந்தியும்  உள்ளுக்கை க இருக்குமாம்.
இப்படி இருந்தால்... வேலைக்குப் போற அவசரத்திலை   ஜக்கெற்  போட்டுக் கொண்டு போகும் போது...
அதுக்குள்ளை....  புலுமச் சிலந்தி இருந்தால், என்ன கதி.😎

காலமையில எழும்பி.....நிலைமை இப்படி எண்டால்.....எப்படி வேலைக்குப் போறதாம்?

01836939-ea4e-42d8-8a88-5465e368930d.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புங்கையூரன் said:

காலமையில எழும்பி.....நிலைமை இப்படி எண்டால்.....எப்படி வேலைக்குப் போறதாம்?

01836939-ea4e-42d8-8a88-5465e368930d.jpg

safe_image.php?d=AQBZEcaJ-fyfRbDp&url=https%3A%2F%2Ft.co%2FOmBhUwa4Oh&ext=gif&_nc_hash=AQD2p4TA6LXgSfHs

வேலை.. இடத்துக்குப் போய்.... ஒண்டுக்கு,   இருக்க வேண்டியதுதான். 🤪 😝

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.