Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 

 

 

"லண்டனிலிருந்து சுதா வந்திருக்கிறாள் வீ க்கென்ட்  பின்னேரம்  வாறீயா போய் சந்திப்போம்"

"யார் மச்சான் சுதா"

"டேய் டேய் சும்மா பம்மாத்து விடாத முந்தி நீ சுழற்றிகொண்டு திரிஞ்சாய் கலா,   அவளோட போவள் 'இரட்டை பின்னல்'  அவளைத்தான் சொல்லுறன்"

"கலா ...."

" டேய் நீ எனக்கு விசரை கிளப்பாதை"

"யாரப்பா போனில் சுதா,கலா என்று  முழுசிக்கொண்டிருக்கிறீயள்"

 

"மச்சி வைடா மனிசி வாராள் பிறகு ,நான் எடுக்கிறன்"

"குகன் எடுத்தவன் யாரோ கலாவின்ட பிரண்டாம் சுதா லண்டனிலிருந்து ந்திருக்கிறாளாம், மீட் பண்ண வரட்டாம்."

"போய் மீட் பண்ணுங்கோவன்"

"மீட் பண்ணலாம் , சுதா யார் என்று யோசிக்கிறன்"

"என்ன உங்களுக்கு டிமஞ்சியா கிமஞ்சியா எதாவது வந்திடுதே"

" ஏனப்பா அப்படி கேட்கிறீர்"

"பின்ன என்ன கலியாணம் கட்டின புதிசில ஒரு நாள் நித்திரையில் புலம்பினீங்கள் 'சுதா பிளீஸ் கலாவிட்ட கேட்டு சொல்லும் என்று'

அதுகளா தான் இருக்கும்"

"ஓமடியாத்த ஞாபகம் வருது நீர் இன்னும் மறக்கவில்லை,அப்ப போய் மீட் பண்ணிவிட்டு வாரன் இரும் குகனுக்கு சொல்லுவம் சனிக்கிழமை சந்திக்க வாரன் என்று"

"மச்சி நான் வாரன் என்ன கொண்டு போவம்? போத்தலை வாங்கி கொண்டு போவமோ"

"இல்லை மச்சி தனியா வந்திருக்கிறாள்"

"அப்ப நான் கட்டாயம் வாரன்"

 

"சனிக்கிழமை உமக்கு எதாவது புராகிராம் இருக்கோ டாலிங்"

" இல்லை நானும் உங்களாடவாரது என்றால் வாரன்"

"அவள் தனியா ந்திருக்கிறாளாம் ,குகனும் தனியத்தான் வாரானாம்"

"யாருடன் வந்து நிற்கிறாளாம்"

"அவளின்ட அக்கா சிட்னியில் இருக்கிறாளாம் அங்க தான்"

"பின்ன சரி நீங்கள் அவளை போய் சந்தியுங்கோ நான் என்ட அக்கா வீட்டை போய்யிட்டு வாரன்"

சனிக்கிழமை எழுந்தவுடன் மனைவியடமும் சொல்லாமல் சலூனுக்கு சென்றான்.

"ஐயா வாங்கோ ,வழமையா வெட்டுறமாதிரி  நல்லா ஒட்டவெட்டிவிடவோ"

"சீ சீ மீடியத்தில வெட்டிவிடும் தம்பி"

வெட்டி முடிந்தவன் கண்ணாடியை பின்னுக்கு வைத்து

"இந்த வெட்டு சரியோ"

"அளவு சரி ,ஆனால் நரை நல்லாய் தெரியுது போல கிடக்கு"

"டை அடிச்சு விடட்டே"

"அடிச்சுவிடடா தம்பி, இந்த மீசையையும் டிரிம்ப் பண்ணி அதுக்கும் உந்த சாயத்தை பூசி விடு"

"என்ன ஐயா வழமையா உதுகளை நீங்கள் செய்யிற இல்லை என்ன விசேசம்"

"அடுத்த கிழமை கலியாணவீட்டை போகவேணும் அதுதான்"

"இப்ப எங்கன்ட ஆட்களின் கலியாண சீசன் முடிஞ்சுதே ஐயா ,யார் வெள்ளைக்காரங்களின்ட கலியாணமோ"

"ஒம் ஒம் வெள்ளையின்ட "

சொல்லியபடியே கண்ணடியை பார்த்து 'லுக் சொ ஸ்மார்ட்' என மனதில் நினைத்து சிரித்து கொண்டான்.

"எவ்வளவு தம்பி"

"40 டொலர்"

"வழமையா 15டொலர்தானே எடுக்கிறனீர்"

.

"டை அடிச்சது மீசை டிரிம்ப் பண்ணினது அதுதான் ஐயா"

கடன் ட்டையை தேச்சுப்போட்டு நன்றி சொல்லி விட்டு வீடு திரும்பினான்.

"இது என்னப்பா புதுசா இன்றைக்கு டை அடிச்சு இருக்கிறீயள் "

"சும்மா ...பாபர் கேட்டான் அடிக்கட்டோ என்று ஒம் என்று சொல்லி போட்டன்"

"நான் எத்தனை தரம் சொன்னனான் டை அடியுங்கோ எண்டு "

"அது இன்றைக்கு பின்னேரம் சுதா வை மீட் பண்ணவேணும் "

"நான் சொல்லும் பொழுது,புத்தர் சொன்னவர் இயற்கையோட வாழவேண்டும் எண்டு சொல்லி போட்டு இப்ப டை அடிச்சிருக்கிறீயள்"

"கி கி கி ம்ம்ம்ம்ம்ம்"

" போர போக்கை பார்த்தால் சுதாவுடன் ஒடிவிடுவியள் போல கிடக்கு.. பின்னேரம் நானும் வாரன்"

"போடி விசரி ,கண நாளைக்கு பிறகு சந்திக்க போறன் அதுதான்"

"இஞ்சருங்கோ உங்களான, என்னோட படிச்ச பெடியள் யாரும் வந்து நான் கொஞ்சம் மெக்கப் போட்டுக் கொண்டு தனியா போறன் என்றால் விடுவியளே"

"நீ அப்படி போக மாட்டாய் என்று தெரியும் தானே ,நீ டமிழ் பெண்ணாச்சே"

"ஆம்பிளைகள் எல்லாம் சிங்களேமே"

"சரியப்பா நீரும் உம்மட பெடியள் வந்தா போய் ந்தியும்"

"எனக்கு வேற வேலையில்லை,உந்த 96 படம் வந்திச்சிதே அதுக்கு பிறகு உந்த கிழடுகளுக்கு எல்லாம் சுதி ந்திட்டுது"

எனகூறியபடியே சமையல் வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.

 

"இஞ்சாரும் இந்த பாண்ட்ஸ்க்கு இந்த சேர்ட் மச்ச பண்ணுமே"

"மாப்பிள்ளை இன்றைக்கு ஒரே குசியா தான் இருக்கிறார், மட்ச் பண்ணுது போடுங்கோ"

ஆடைகள அணிந்து வாசனை திரவியங்களை அடித்து விட்டு இரண்டு மூன்று தடவை கண்ணாடியில் பார்த்து விட்டு

"டார்லிங் எப்படி ஸ்மார்ட்டா இருக்கிறனோ"

"ஓம் நல்ல  ஸ்மார்ட்டா இருக்கிறீயள் என்ட கண்ணே பட்டிடும் போல கிடக்கு ,உங்களையா குகனையா கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கிறது  என கொன்வூயூஸ் ஆக போறாள் சுதா"

"தாங்ஸ்"

"உந்த செல்லத்துக்கு குறைச்சல் இல்லை,அது சரி நீங்கள் குகனை கூட்டிக்கொண்டு போறீயளோ அல்லது அவர் வருவாரோ"

"அவன் தன்னூடைய பெண்ஸ் காரை கொண்டு வாரன் என்று சொன்னவன் ,அதில போவம்"

" இப்ப இரண்டு பேருக்கும் போட்டி வரும் போல் கிடக்கு"

குகனின் கார் குறித்த நேரத்திற்கு முதலே வந்துவிட்டது.

"குகன் வந்திட்டான் நான் போயிட்டு வாரன்"

"ஒம் ஒம் போன மாதிரியே திரும்பி வந்திடுவேணும்"

"பயப்பிடாதயும், சுதா தான் வந்திருக்கிறாள் கலா வந்திருந்தால் சில நேரம் அவளோட ஒடியிருப்பேன் கி கி கி கி"

"அடி செருப்பால , போயிட்டு வாங்கோ போன உடனே டெக்ஸ்ட் பண்ணுங்கோ"

குகன் அழைப்பு மணியை அடித்தான்.சுதாவின் அக்கா கதவை திறந்து இருவரையும் வரவேற்றாள்.

"இருங்கோ சுதா பிள்ளைகளோட டெலிபோனில் கதைக்கிறாள் வந்திடுவாள்"

சொல்லி முடிக்க முதலே மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சுதா

சுதாவை கண்டவுடன் இருவரும் திகைத்து விட்டார்கள் முன்பு  இருந்ததை விட மிகவும் அழகாக இருந்தாள்,இரட்டை பின்னல் போய் தலைமுடி  மிகவும் அழகாக  வெட்டப்பட்டிருந்தது ,உடல் நிறமும் கொஞ்சம் கூடியிருந்தது அத்துடன் லண்டன் ஆடை அவளின் அழகை மேலும் மெருகூட்டியது.

"ஹலோ குகன் எப்படி சுகம் ஒடி வந்து கையை குழுக்கினாள்"

"ஹலோ சுரேஸ் உங்களில் அவ்வளவு மாற்றமில்லை அப்ப பார்த்த மாதிரியே இருக்கிறீயள்"

"அவன் மார்க்கண்டேயர் பரம்பரையை சேர்ந்தவன்" என்றான் குகன்

,

மூவரும் பழைய நண்பர்கள் நண்பிகளை பற்றி விசாரித்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிவதில் ஆர்வம் காட்டினார்கள்.

"உங்களுடன் வரும் கலா இப்ப எங்க இருக்கிறாள்"

"எனக்கு வடிவாய் தெரியவில்லைஊரில் தான் இருக்க வேணும் என்று நினைக்கிறன்"

 

"ஏன் அவளுக்கு வெளிநாடுகளுக்கு போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ"

"அவள் அங்க டீச் பண்ணுவதாக கேள்விப்பட்டனான் ஆனால் ஒரு தொடர்புமில்லை"

 

"வட்ஸ் அப், பேஸ் புக் என்றும் ஒரு தொடர்புமில்லையோ"

"சீ சீ"

"நாங்கள் பெடியங்கள் எல்லாம் சேர்ந்து 72 கிளப் என்று வைச்சிருக்கிறோம் நீங்களும் ஜொய்ன்ட் பண்ணலாம்" என்றான் குகன்.

"நோ நோ ,  இதால நான் பெரிய பிரச்சனையில் மாட்டுப்பட்டு இப்ப தான்  வாழ்க்கை சுகுமா போகுது"

"அப்படி என்ன பிரச்சனையை நாங்கள் தரப்போறம்"

"எல்லா ஆண்களும் ஒரு மாதிரியில்லை...."

அந்த பதிலுக்கு பிறகு சுரேஸ் கலாவைப்பற்றி கேட்கவில்லை.

தேனீர் அருந்திய பின்பு இருவரும் விடை பெற்றனர்.

காரில் பயணிக்கும் பொழுது

"மச்சான் இப்பவும் கலா ஊரில் தான் இருப்பாளே"

"என்னை கேட்கிறாய்,அவளின்ட சினேகிதி சுதாவுக்கே தெரியவில்லையாம் பிறகு எனக்கு எப்படி தெரியும்"

 

"அடுத்த மாதம் ஊருக்கு போறன் போய் பார்க்கலாம் என்று யோசிக்கிறன்"

" தனிய போறீயோ குடும்பத்துடன் போறீயோ"

"குடும்பத்தோட போறன்"

"மனிசி விட்டால் போய் சந்திச்சு போட்டு வா"

"மனிசி ஒன்றும் சொல்லமாட்டாள்"

"பிறகு என்ன ,போய் அப்ப சொல்லாத லவ்வை இப்ப சொல்லி பார்

கி கி கி ....."

வீட்டில இறக்கும் பொழுது குகன் நக்கலாக

"குட் லக் மச்சி"என்றான்.

 

"இஞ்சாரும் உவள் கலா ஊரில் தான் இருக்கிறாளாம்"

"அப்ப அடுத்த மாதம் ஐயா கலாவை சந்திக்கப்போறார்"

Edited by putthan
 • Like 14
 • Thanks 1
 • Haha 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்ல நல்ல மனைவியா இருக்கிறாவே! தரவுகள் சேகரிக்கப்படுதோ?!

 • Like 1
Link to post
Share on other sites
2 minutes ago, ஏராளன் said:

பரவாயில்ல நல்ல மனைவியா இருக்கிறாவே! தரவுகள் சேகரிக்கப்படுதோ?!

யாவும் கற்பனை என்று போட மறந்து போனேன்......😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மனிசி நல்லா நம்புது கலாவை...... !  😁  

 • Like 1
Link to post
Share on other sites
4 minutes ago, suvy said:

மனிசி நல்லா நம்புது கலாவை...... !  😁  

நம்ம நடிப்பு அப்படி😄

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

நம்ம நடிப்பு அப்படி😄

நானும் ஒரு வசனம் சேர்க்க மறந்திட்டன். முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி  தீபாவை நம்பிய மாதிரி......!  😊

 • Like 1
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

"இஞ்சாரும் உவள் கலா ஊரில் தான் இருக்கிறாளாம்"

"அப்ப அடுத்த மாதம் ஐயா கலாவை சந்திக்கப்போறார்"

ஐயா கலாவை சந்திப்பாரோ? 

கடவுளேயெண்டு ஆட்டோகிராப் கமலா மாதிரி  காட்சி குடுக்காமல் இருக்கவேணும். :grin:

au_zpsmkbobp7y.jpg

 • Like 1
Link to post
Share on other sites
18 hours ago, ஏராளன் said:

பரவாயில்ல நல்ல மனைவியா இருக்கிறாவே! தரவுகள் சேகரிக்கப்படுதோ?!

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்....தரவுகள் சேகரித்தாச்சு

18 hours ago, suvy said:

மனிசி நல்லா நம்புது கலாவை...... !  😁  

சுரேஸின்ட மனிசியை சொல்லுறீயள் போல....

4 hours ago, குமாரசாமி said:

ஐயா கலாவை சந்திப்பாரோ? 

கடவுளேயெண்டு ஆட்டோகிராப் கமலா மாதிரி  காட்சி குடுக்காமல் இருக்கவேணும். :grin:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ....குமாரசாமி...ஐயா சந்திக்காமல் இருப்பாரே

4 hours ago, பெருமாள் said:

உள்குத்து ஒன்றும் இல்லைத்தானே ?

சீ சீ எல்லாம் வெளிகுத்து தான்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இவவை சந்தித்த கதை வேணாம்😪...உங்கட ஆளை சந்தித்த கதையை எழுதுங்கள்😉

 

 • Like 1
Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

எங்களுக்கு இவவை சந்தித்த கதை வேணாம்😪...உங்கட ஆளை சந்தித்த கதையை எழுதுங்கள்😉

 

இதனை ஆமோதிக்கிறேன்.😃

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்ப புத்தன் ஊருக்குப் போனது கலாவப் பார்க்கத்தானா? பவர்பாண்டியும் 96ம் கலந்து நல்லதொரு மிக்சர். இந்த இரு சினிமாவும் பலரை பாடாய் படுத்துவது அதன் விமர்சனங்கள் மூலம் அறியக்கூடியதாயுள்ளது. ஏதோ நடத்துங்க. பாராட்டுக்கள் புத்தன்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கலாவை சந்திக்கும்போது ...
காலவும் காதலை ஏற்றுக்கொண்டு 
சேர்ந்துவாழுவோம் என்றால் 
படத்தின் பெயர் 69 என்றா வரும்?

ஏன் என்றால் கிளப் 72 என்று இருக்கிறதே ....

 • Like 1
Link to post
Share on other sites
9 hours ago, ரதி said:

எங்களுக்கு இவவை சந்தித்த கதை வேணாம்😪...உங்கட ஆளை சந்தித்த கதையை எழுதுங்கள்😉

 

அமைதி அமைதி கலாவை சந்திச்ச கதை வரும்....

5 hours ago, nunavilan said:

இதனை ஆமோதிக்கிறேன்.😃

100 டொலர் கடன் கொடுங்கோ என்றால் ஆமோதிக்க மாட்டிங்கள் ...சுரேஸின் விடுப்பை கேட்க ஆமோதிக்கிறீயள்😂

Edited by putthan
Link to post
Share on other sites
5 hours ago, Kavallur Kanmani said:

அப்ப புத்தன் ஊருக்குப் போனது கலாவப் பார்க்கத்தானா? பவர்பாண்டியும் 96ம் கலந்து நல்லதொரு மிக்சர். இந்த இரு சினிமாவும் பலரை பாடாய் படுத்துவது அதன் விமர்சனங்கள் மூலம் அறியக்கூடியதாயுள்ளது. ஏதோ நடத்துங்க. பாராட்டுக்கள் புத்தன்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்... சீ சீ .....புத்தன் போனது பிள்ளைகளின் சங்கீத நிகழ்சிக்காக ......சுரேஸ் சில நேரம் அப்படியான எண்ணத்துடன் போய் இருக்கலாம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2019 at 4:49 AM, putthan said:

ஹலோ குன் எப்படி சுகம் ஒடி வந்து கையை குழுக்கினாள்"

லண்டனில் இருந்து வந்த சுதா கக் பண்ணாமல் எப்படி கை கொடுத்தா?

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

லண்டனில் இருந்து வந்த சுதா கக் பண்ணாமல் எப்படி கை கொடுத்தா?

சனம் கிண்ட   வெளிக்கிடுது....:cool:
முருகப்பெருமான்ரை மறுபெயர் குகன் எண்டும் சொல்லுவினம்.......அரோகரா 😂

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கதை ...புத்தன்!

இளமைக்கால நினைவுகள்...மிகவும் வலிமையானவை! எனக்கும் பல நினைவுகள்...அவ்வப்போது வந்து போகும்!

கல்லறையோ அல்லது காஸ் அடுப்போ.....யாருக்குத் தெரியும்?

அங்கு செல்லும் வரை...நினைவுகளைப் பொத்தி வைத்திருக்கத் தான் விருப்பம்! ஏனெனில்...அவை புனிதமானவை என நாம் நம்புகிறேன்!

ஓரு புகையிரதப் பயணத்தைப் போன்றே...வாழ்க்கை நகர்ந்து செல்லுகின்றது! தரிப்பிடங்களில்...இறங்கி மீண்டும் பயணத்தைத்  தொடர்கிறோம்!

அதே புகையிரதப் பாதையில்....திரும்பிக் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள்......முன்னையது போல இருக்காது!

அது தான் வாழ்க்கை!

தொடர்ந்தும் எழுதுங்கள்! நன்றி....!

 

 

 

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2019 at 11:44 PM, Maruthankerny said:

கலாவை சந்திக்கும்போது ...
காலவும் காதலை ஏற்றுக்கொண்டு 
சேர்ந்துவாழுவோம் என்றால் 
படத்தின் பெயர் 69 என்றா வரும்?

ஏன் என்றால் கிளப் 72 என்று இருக்கிறதே ....

பிறந்த வருடமாயும் இருக்கலாம் தானே .

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2019 at 6:10 PM, putthan said:

யாவும் கற்பனை என்று போட மறந்து போனேன்......😂

நம்பிட்டம் 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

பிறந்த வருடமாயும் இருக்கலாம் தானே .

யார் புத்தனுக்கா ?...ரொம்ப ஓவராய் இல்லை...புத்தனுக்கு 50 வயசு எப்பவோ முடிஞ்சிட்டுது🙄 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

யார் புத்தனுக்கா ?...ரொம்ப ஓவராய் இல்லை...புத்தனுக்கு 50 வயசு எப்பவோ முடிஞ்சிட்டுது🙄 

 

அப்படியா ????

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அப்படியா ????

அவரே எதோ ஒரு திரியில் சொன்னதாய் நினைவு...பிறந்த நாளுக்கும் வாழ்த்தி இருந்தோம் 

Link to post
Share on other sites
On 2/9/2019 at 1:23 AM, ஈழப்பிரியன் said:

லண்டனில் இருந்து வந்த சுதா கக் பண்ணாமல் எப்படி கை கொடுத்தா?

சுதாவின் கணவன் ஒரு சந்தேக பேர்வழி .....என்று நினைச்சுக்கொள்ளுங்கோவன்....:14_relaxed:

On 2/9/2019 at 1:48 AM, குமாரசாமி said:

சனம் கிண்ட   வெளிக்கிடுது....:cool:
முருகப்பெருமான்ரை மறுபெயர் குகன் எண்டும் சொல்லுவினம்.......அரோகரா 😂

சனம், நான் கலாவை சந்திச்ச கதையை எழுத முதல அவையள் எழுதி போடுவினம் போல இருக்கு

On 2/9/2019 at 10:50 AM, புங்கையூரன் said:

நல்ல ஒரு கதை ...புத்தன்!

இளமைக்கால நினைவுகள்...மிகவும் வலிமையானவை! எனக்கும் பல நினைவுகள்...அவ்வப்போது வந்து போகும்!

கல்லறையோ அல்லது காஸ் அடுப்போ.....யாருக்குத் தெரியும்?

அங்கு செல்லும் வரை...நினைவுகளைப் பொத்தி வைத்திருக்கத் தான் விருப்பம்! ஏனெனில்...அவை புனிதமானவை என நாம் நம்புகிறேன்!

ஓரு புகையிரதப் பயணத்தைப் போன்றே...வாழ்க்கை நகர்ந்து செல்லுகின்றது! தரிப்பிடங்களில்...இறங்கி மீண்டும் பயணத்தைத்  தொடர்கிறோம்!

அதே புகையிரதப் பாதையில்....திரும்பிக் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள்......முன்னையது போல இருக்காது!

அது தான் வாழ்க்கை!

தொடர்ந்தும் எழுதுங்கள்! நன்றி....!

 

 

 

வருகைக்கும்  கருத்து பகிர்வுக்கும் ந‌ன்றிகள் ....தொடரும் என‌து கிறுக்கள்கள் 

17 hours ago, பெருமாள் said:

பிறந்த வருடமாயும் இருக்கலாம் தானே .

கலாவை சந்திக்கும் பொழுது விபரமாய் எழுதுகிறேன்:14_relaxed:

Link to post
Share on other sites
15 hours ago, அபராஜிதன் said:

நம்பிட்டம் 

நன்றிகள் வாசித்தமைக்கு நம்ப‌வேணும்:14_relaxed:

 • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.