Jump to content

நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்கையே


Recommended Posts

நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்கையே (1)

பாகம் 1  

தூங்கி எழுஞ்சு கிளம்பி ரெடி ஆகவே மணி பன்னிரண்டு ஆச்சு. இன்று ஓய்வு நாள். அதனால் தாமதமாகவே எழுந்தேன். அக்கா காலைலயே இட்லி, பொங்கல்னு தலபுடலா ரெடி பண்ணி வச்சிருந்தா. என்ன எப்பவும் காய்ஞ்சு போன ப்ரெட் தானே இருக்கும். இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? அம்மா அளவுக்கு இல்லனாலும் ஓரளவுக்கு நல்லாவே சமைப்பா. அதனால தைரியமா சாப்பிடலாம். நான் சாப்பிட சாப்பிட “இன்னும் எடுத்துக்கோடா” என்று மேலும் ரெண்டு இட்லியை எடுத்து வைத்தாள் தட்டில். “போதும். இப்பவே இவ்வளோ சாப்டா அப்புறம் லஞ்ச் என்ன சாப்பிடுறது? வாயித்துல கொஞ்சமாச்சும் இடம் காலி இருக்கணும்” நான் தடுத்தேன். “டேய் அடி வாங்குவ. காலைலேயே எழுஞ்சு எல்லாம் ரெடி பண்ணிருக்கேன். நீதான் சாப்பிடனும். உன் மாமா வர நைட் ஆகிடும்” மண்டையிலே ரெண்டு கொட்டினாள். “உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. ஆமா எதுக்கு இப்ப இதெல்லாம் மெனக்கெட்டு செஞ்ச? இன்னைக்கு தீபாவளி கூட இல்லையே?” என்று நான் யோசிக்க மேலும் ஒரு கொட்டு நடு மண்டையில். “என்னை பார்த்தா எப்படிடா தெரியுது? ஓவரா கிண்டல் பன்ற. நா என்ன தீபாவளிக்கு மட்டும்தான் சமைக்கிறேனா?” கோவித்துக்கொண்டாள். “அட சும்மா சொன்னேன்க்கா. நீ அன்னைக்கு கூட சமைக்க மாட்டியே. அதான் சந்தேகமா இருக்கு இதெல்லாம் எதுக்குனு”, என்று நான் சிரிக்க “போதும்டா. அடுத்து பூரி கட்டைலே விழும் பாரேன்” முகம் சிவந்தது அவளுக்கு. “இதுக்குதான் கல்யாணம் பண்ணி கொடுத்த அக்கா வீட்டுல வந்து தங்க கூடாதுன்னு சொல்லுறது. மாமாவுக்கு விழ வேண்டிய அடியெல்லாம் இன்னும் நானே வாங்கிட்டு இருக்கேன்” நொந்துக்கொண்டேன். முறைத்துக் கொண்டே உள்ளே அவள் அறைக்கு சென்றவள் சிறிது நேரத்தில் ஒரு கவரோடு வெளியில் வந்தாள். நானும் சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்தேன். என் முன்னே வந்தவள் ஒரு வித தயக்கத்துடன் அந்த கவரை என்னிடம் நீட்டினாள். அவளது அந்த தயக்கத்திலேயே எனக்கு நன்றாக புரிந்துவிட்டது. “oh இதுக்குதான் இன்னைக்கு வாய்க்கு ருசியா breakfast ரெடி பன்னுனியோ?” என் முக மாற்றத்தை அவள் கவனிக்காமல் இல்லை. “டேய் கண்ணா, எனக்காகடா. ப்ளிஸ் இந்த முறையாவது சம்மதம் சொல்லேன். தெரிஞ்ச பொண்ணுதான்டா. உன் மாமாவோட பிரெண்டோட தங்கச்சி. ரொம்ப அழகா வேற இருக்கா. உனக்கு கண்டிப்பா பிடிக்கும். பாரேன்” அந்த கவரை என்னிடம் நீட்டினாள் கெஞ்சும் தோரணையில். “உன்கிட்ட பல முறை சொல்லிட்டேன். எனக்கு இப்ப கல்யாணம் செஞ்சிக்க ஐடியா இல்லைன்னு. கேட்க மாட்டியா நீ” முகத்தை இருக்கமாக்கிகொண்டே கேட்டேன். “என்னடா நீ, இதே அம்மா இருந்திருந்தா விட்டிருப்பாங்களா? என்னதான் நீ ஏமாத்திட்டு இருக்க. எல்லாரும் கேட்கராங்கடா உனக்கு எப்போ கல்யாணம்னு எந்த function போனாலும்” அவள் குரலில் ஒரு வருத்தம் தெரிந்தது. “ஏன் கேட்கறாங்க? நான் பையன் தானே. ஒரு முப்பது வயசு தாண்டட்டும் பண்ணிக்கிறேன்” நான் என் போனை எடுத்து தட்டிக்கொண்டே பேசினேன். “உனக்கு இப்பவே 29 ஆகுது. இன்னும் வெயிட் பண்ண முடியாது. பொண்ணோட ஜாதகம்லாம் பார்த்தாச்சு. நல்லா பொருந்தியிருக்கு. இது கண்டிப்பா நமக்கு செட் ஆகிடும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. நீ சொதப்பாம இருந்தா சரி. இந்தா இந்த கவர்ல இருக்கு. மேசை மேல வைக்கிறேன். அந்த போனை எடுத்து வச்சிட்டு பாரு” என்று coffee டேபிள் மீது அந்த கவரை வைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள். நானும் sofaவில்அமர்ந்து அந்த கவரை கையில் எடுத்தேன். கவர்ல அந்த பெயர் எழுதியிருந்தது. ம்ம்ம்ம் அதே பெயர் தான். ஐஸ்வர்யா . அந்த பெயரை படித்ததும் திடீரென்று ஒரு வருடல் மனதில். கவரை திறந்து பார்க்காமலே அதை திரும்பவும் மேசையிலேயே வைத்து விட்டு “அக்கா நா கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்” என்று குரல் கொடுத்துவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் வீட்டின் வெளியே இருந்த காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

‘யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்
வந்து வந்து நிக்கிற
என்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து
உன்னில் சிக்க வைக்கிற’

fmயில் பாடல். ஐஸ்வர்யா என்ற அந்த பெயரைப் பார்த்ததும் அப்செட் ஆகி காரை எடுத்து வெளியே வந்துட்டேன் எங்கேயாவது போயிட்டு வருவோம்னு. வானம் வேறு சிறு சிறு தூரலை தூவிக்கொண்டிருக்கையில் திடீர்னு இந்த பாடல் ஒளியேறியதும் மனதில் ஒருவித குதுகலம். நானும் வாயில் முணுமுணுத்த படியே பாடலைக் கேட்டுக்கொண்டே காரை ஓட்டினேன். மனதில் ஏதோ ஒரு நல்ல feel அந்த பாடலைக் கேட்கும்போது. சாலையில் வாகனங்கள் குறைவாகத்தான் இருந்தது. திடிரென்று யாரோ ஒரு பெண் எதிரே தன் ஸ்கூட்டியில் வேகமா வந்தவள் நிலை தடுமாறி என் கார் முன் வந்து மோத பார்த்தாள். நல்ல வேலை பிரேக் போட்டு காரை நிறுத்தினேன். இருந்தாலும் மோதிவிட்டாள். அங்கேயே ஸ்கூட்டியும் அவளும் விழுந்தார்கள். காரிலிருந்து அவசர அவசரமாக இறங்கி சென்று பார்த்தேன். நல்ல அடி அவள் கை கால்களில். ரத்தம் வேறு உடல் எங்கும். ஆனால் அவள் பாதி சுயநினைவில் இருந்தாள். வேறு வழி இல்லை. அவளை தூக்கி என் காரில் போட்டு கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தேன். மனதில் ஒரு வித பயமும் பதற்றமும்.அவ்வப்போது பின் சீட்டை திரும்பி திரும்பி பார்த்தேன். மருத்துவமனையை அடைந்ததும் அவசர சிக்கிச்சை பிரிவில் அவளை சேர்த்தேன். “DR. அஷ்வின்… யார் இவங்க உங்களுக்கு வேண்டப்பட்டவங்களா?” சக டாக்டர் ஜான் என்னிடம் கேட்கும் போது வேறு வழி இல்லாமல் “ஆம்” என்று தலை அசைத்து விட்டேன். அவள் பெயர் கூட தெரியாது. மயக்க நிலையில் இருந்தவளிடம் கேட்க கூட முடியவில்லை. அவளை அட்மிட் பண்ண register வேற பண்ணனும். என்னதான் நான் அந்த ஹாஸ்பிட்டல்ல பணி புரிந்தாலும் procedures follow பண்ணிதானே ஆகணும். என்னையும் அறியாமல் ஐஸ்வர்யா என்றே அவள் பெயரை எழுதினேன். எனக்கு அந்த பெயர்தான் சட்டென்று தோன்றியது. சிறிது நேரத்தில் அவளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வார்டில் அட்மிட் செய்தனர். மயக்கம் தெளியவில்லை. இவளோட குடும்பத்திற்கு எப்படி தெரியப்படுத்துரதுனும் தெரியல. கண்விழித்தால் தான் அவளிடம் தகவல் பெற முடியும். மறுநாள் காலையில் தான் கண் விழிப்பாள் என்று தெரிந்து விட்டது. சிறிது நேரம் அவள் அருகில் அமர்ந்திருந்தேன். நாளை அதிகாலையிலேயே ஹாஸ்பிட்டல் வர வேண்டும் duty இருக்கு. பேசாம நாளைக்கு வந்து பார்த்துக்குவோம் என்று கிளம்ப அந்த பெட் பக்கத்தில் இருந்த இருக்கையிலிருந்து எழுந்தேன். அவளை ஒரு முறை பார்த்தேன். அமைதியாக கண் மூடி படுத்திருந்தாள். நெற்றியில் ஒரு பக்க தலை முடி சரிந்து முகத்தை மறைத்திருந்தது. அழகாக அதை அவளது காதுகளின் பின்னால் எடுத்து விட்டேன். ஏனோ தெரியவில்லை அவளை பார்த்துட்டே இருக்கணும் போல தோன்றியது. ஒரு தேவதை போல இருந்தாள் அந்த வெள்ளை நிற வார்ட் உடையில். என்ன இது தேவதைனா சொல்லுறேன். ஆச்சர்யமாதான் இருக்கு எனக்கே. அட இந்த மனச ஒரு நிலைப்படுத்தனும் என்ன ஆச்சு எனக்கு? அடேய் அஷ்வின் இனியும் இங்க நிற்காதே. கிளம்பு என்று யாரோ என்னை விரட்டுவதை போன்ற உணர்வு. அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டுவிட்டு கிளம்ப முற்ப்பட்ட போது திடீரென்று என் கைகளை பிடித்தாள். மயக்கத்தில்தான் இருந்தாள். ஆனால் வாய் எதையோ முணுமுணுத்தது. அவளை ஒரு முறை பார்த்தேன். தெரியல ஏன் அங்க அவள் கைகளை எடுக்காமல் அப்படியே நின்று அவளை பார்த்தேன்னு. கூடவே இருக்கலாமான்னு ஒரு எண்ணம் எழுந்தது. எதனால் என்று சரியா தெரியல. ஆனா என்ன நினைத்தேனோ தெரியவில்லை. என் கைகளை பற்றியிருந்த அவளது கைகளை விலக்கி அங்கிருந்து கிளம்பினேன். ஒருமுறை என்னையும் அறியாமல் திரும்பி பார்த்தேன். கண்கள் மூடி இருந்தாள். திரும்பி நடக்க ஆரம்பித்தேன். மனதில் ஏதோ ஒரு நெருடல். யார் இவள்? ஒரு டாக்டரா எத்தனையோ பெண் நோயாளிகளின் கையை பிடித்திருக்கிறேன். ஆனால் இன்று இவள் என் கையை பற்றிய போது ஏதோ ஒரு வித்தியாசமான ஒரு feel. எனக்கே புரியாமல்தான் இருந்தது.

வீட்டிற்கு வர இரவு ஏழு மணியாகிவிட்டது. அக்கா வேறு பலமுறை எனக்கு கால் பண்ணியிருந்தாள். நான் அட்டென்ட் பண்ணவே இல்லை. ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்ததும் முகத்தை தூக்கி வைத்திருந்தாள். திடீரென்று என் சட்டையில் ரத்த கறைகளை கண்டவள் அதிர்ச்சியானாள். “என்னாச்சுடா? என்ன shirt லாம் ரத்தமா இருக்கு?” பதறினாள். “ஒரு accidentக்கா. ஒரு பொண்ணு. ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு வரேன். அதான் லேட் ஆச்சு” என்று கூறி விட்டு குளிக்க சென்றேன். குளித்து உடைமாற்றி உணவருந்திக்கொண்டிருந்த போது அப்பெண்ணைப் பற்றி விசாரித்தாள். “தெரிலக்கா யாருன்னு. நாளைக்கு போய் தான் விசாரிக்கணும்” என்று கூறியதும், “பொண்ணு safe தானே? பெருசா அடி இல்லல. உனக்கு ஏதாவது பிரச்சனை வருமாடா?” அக்கா ஏன் வருத்தப்படுகிறாள் என்று தெரிந்தது. “க்கா, நா மோதல. அவளே வந்து விழுந்தா. நாளைக்கு போலிஸ்ல அவ என்ன சொல்லுறானு பொறுத்துதான் இருக்கு.அவகிட்டதான் விசாரிப்பாங்க நாளைக்கு. போலிஸ்ல கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்துட்டுதான் வரேன்”. “என்னடா இது இப்பதான் கல்யாண பேச்சு எடுத்தேன். அதுக்குள்ள இப்படி நடந்திருக்கு. மனசு சரி இல்லடா” என்று புலம்பியபடியே தன் அறைக்குள் சென்றாள். டிவி முன் அமர்ந்து சேனலை மாற்றி கொண்டிருக்கும் போது சன் மியூசிக்கில் காலையில் கேட்ட அதே பாடல். அப்படியே sofaவில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாலும் நியாபகம் என்னவோ ஹாஸ்பிட்டல்லையே இருந்தது.

‘ஹோ…… நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே…
ஓஹோ ஹோ
நீ என்பதே நான் என்கிற நீ……யே…’

என் முன் coffee மேசை மேல் மதியம் நான் வைத்து சென்ற கவர் அப்படியே இருந்தது. ஐஸ்வர்யா என்று எழுதியிருந்த அந்த கவரை கண்கள் பார்த்து விட்டது. என்னையும் அறியாமல் அதை எடுத்து திறந்து அதில் இருந்த அந்த படத்தை பார்த்தேன். ஒரு கணம் என் கண்களை என்னாலே நம்ப முடிய வில்லை. accident ஆன அதே தேவதை அங்கு சிரித்துக்கொண்டிருந்தாள்……

தொடரும்…

மேகா

 

833465e2646667723c31a7af96740990?s=46&d=

PUBLISHED BY

மேகா

என் கற்பனைகளை எழுத்துக்களாய் தூவும் மேகம் நான்

 

 

கதாசிரியரின் அனுமதியுடன் இக்கதை இணைக்கப்படுகிறது

நெஞ்சாத்தியே (2)
பாகம் 2

மயக்க நிலையில் இருந்தவள் கண்விழித்து பார்த்த போது அதிகாலை மணி ஐந்து இருக்கும். தான் ஏதோ ஒரு தனி அறையில் படுத்திருப்பதை உணர்ந்தாள். கை நரம்பில் ஊசியின் மூலம் ட்ரிப்ஸ் ஏறி கொண்டிருந்தது. இன்னொரு கையில் கட்டு போடப்பட்டிருந்தது. அவளால் அசைக்க முடியவில்லை. யா நான் எங்க இருக்கேன் என்று முனுமுனுத்தப்படியே சுற்றிலும் தன் பார்வையை செலுத்தினாள். நான்கு படுக்கைகள் கொண்ட அறை அது. ஆனால் மற்ற மூன்று படுக்கைகளும் காலியாகவே இருந்தது. அவள் மட்டுமே இருந்தாள். யாரையும் காணவில்லை. வாஷ்ரூம் போக எழ முயற்ச்சித்தாள். அவளால் முடியவில்லை. இடுப்பு பகுதியில் பலமாக வலித்தது. “ஐயோ கடவுளே இது என்ன சோதனை? எழுந்திருக்க முடியலையே. வாஷ்ரூம் போகணுமே” என்று வலியை பொருத்துக்கொண்டு எழ பார்த்தாள். மீண்டும் மீண்டும் முயன்றும் முடியவில்லை அவளால். ஹாஸ்பிட்டல் வார்டில் இருப்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. ஆனால் வெளியே சிலர் பேச்சு குரல் ஒலித்தது மெதுவாக. நர்ஸா தான் இருக்கும் என்று நினைத்தவள் “சிஸ்டர்இ சிஸ்டர்” என்று பல முறை அழைத்தாள். உடல் பலவீனமாக இருந்ததால் அவளது மெல்லிய குரல் வேறு வெளியே இருந்தவர்களுக்கு கேட்க வாய்ப்பில்லைதான். திரும்ப திரும்ப கஷ்டப்பட்டு எழ தோற்று போய் சோர்ந்திருதாள். “ஏன் இப்படி ஒரு கஷ்டம் எனக்கு? யாரும் கூட இல்ல. யாரும் உதவிக்கும் வரல. நா என்ன செய்வேன். யாராவது வரக்கூடாதா கடவுளே” அவளின் உடலோடு மனமும் வலியில் சோர்ந்து போனது. திடீரென்று அறையில் யாரோ வரும் காலடி சத்தம். திடுக்கிட்டு பார்த்தவளுக்கு அவளையும் அறியாமலேயே மனதில் ஒரு சந்தோசம். அவள் தூங்கி கொண்டிருப்பாள் என்று நினைத்து அங்கு வந்தவனுக்கு அவள் விழித்திருப்பது அதுவும் தன்னை பார்த்ததும் ஏதோ எதிர்ப்பார்த்து காத்திருந்தவளைப் போல தன்னை நோக்கியதைக் கண்டு ஆச்சர்யமா இருந்தது. அவன் பேச வாய் எடுக்கும் முன்னே “டாக்டர் ப்ளிஸ் நர்ஸ் யாரையாவது இருந்தா வர சொல்லுங்க” அவள் கெஞ்சியது பார்த்து ஒன்றும் புரியாதவனாய் அவளைப் பார்த்தான். “என்னனு சொல்லுங்க? pயin அதிகமா இருக்கா?” அவள் அருகில் வந்தான். “இல்ல… அது வந்து” என்று தயங்கிவளிடம் “ம்ம்ம் சொல்லுங்க என்னனு. நான் டாக்டர்தானே” என்று அவன் கூறியதும் “வாஷ்ரூம் போகணும். என்னால எழுந்திருக்க முடியல”  என்று சட்டென்று கூறினாள். “ஏன் எழுந்திருக்க முடியல? வாங்க நா உதவி செய்யறேன்” என்று அவள் கையை பிடித்து எழ உதவி செய்தான். கஷ்டப்பட்டு எழுந்தவளால் நிற்க முடியவில்லை. அவன் மேல் சாய்ந்தாள். அவனும் எதிர்ப்பார்க்கவில்லை. அவளை பிடித்து பெட்டிலேயே அமர வைத்தான். ஐயோ இப்படி டாக்டர் மேலேயே விழ போனோமே என்று மனதில் ஒரு வித தயக்கம் வேறு தோன்றியது.

“எங்க pயin இருக்கு?”

“இடுப்பு பகுதில. அதான் எழுஞ்சு நிக்க முடில. நடக்க முடில டாக்டர்”

“ம்ம்ம்ம்… சரி இருங்க வந்துடுறேன்” என்று அறையின் வெளியில் சென்றவன் சில நிமிடங்களில் ஒரு நர்ஸ் உடன் வர சக்கர நாற்காலியை எடுத்து வந்தான். அந்த நர்ஸ் உதவியுடன் ஐஸ்வர்யாவை சக்கரநாற்காலியில் அமர செய்தான். பிறகு நர்ஸிடம் சொல்லி அவளை வாஷ்ரூம் அழைத்து செல்ல சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான். சரியாக ஆறு மணிக்கு ஒரு சர்ஜெரி இருக்கிறது. அவன் சென்றாக வேண்டும். மறுபடியும் தன வார்ட் அறைக்கு வந்தவள் அஷ்வின் அங்கு இல்லாததை பார்த்து நர்ஸிடம் வினவினாள். “அவர் ஒரு ளரசபநழn. உங்களை பரிசோதனை செய்ய வேற டாக்டர் வருவாங்க. ஏதவதுனா இந்த பெல்லை அழுத்துங்க. நான் வந்து பார்க்கறேன்” என்று அந்த நர்ஸ் படுக்கை பின்னால் சுவற்றில் இருந்த பெல்லை அவளுக்கு காண்பித்தாள். ‘அட இது நம்ம கண்ணுல படலையே’ ஐஸ்வர்யா அப்போதுதான் பார்த்தாள். “நர்ஸ் அவர் ளரசபநழn னு சொன்னீங்க. பட் எதுக்கு இங்க வந்தார். எனக்கு ஏதாவது சர்ஜெரி பண்ணனுமா?”  புரியாமல் தான் கேட்டாள் அவள். “டாக்டர் உங்க சநடயவiஎந தானே. அவர்தான் இங்க உங்கள அட்மிட் பண்ணினார். பார்த்துட்டு போகத்தான் வந்திருப்பார். ஆனா அங்க எங்களுக்கு செம்ம திட்டு விழுந்தது. உங்கள கவனிக்கலன்னு. ப்ளிஸ் நீங்க என்ன உதவினாலும் அந்த பெல்லை அழுத்துங்க. வந்துடுவோம். இப்போ ரெஸ்ட் பண்ணுங்க. விடிந்ததும் டாக்டர்ஸ் ரவுண்ட்ஸ் வருவாங்க. இந்த pயin பத்தி அவங்ககிட்ட சொல்லுங்க” அந்த நர்ஸ் படபடவென சொல்லி முடித்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள். ‘சொந்தக்காரரா? யார் அது? இதுக்கு முன்ன பார்த்ததில்லையே” ஐஸ்வர்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

 

காலை 11 மணியளவில் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து இரு போலீஸ்காரர்கள் மருத்துவமனையில் ஐஸ்வர்யாவை கண்டு அவளிடம் ளவயவநஅநவெ வாங்கினார்கள். ஸ்கூட்டியில் திடிரென்று ப்ரேக் பிடிக்காமல்தான் எதிரே வந்த காரில் மோதியதாக அவள் கூறியதால் அஷ்வினுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கூடவே அஷ்வினும் அங்கு இருந்தான். அவர்கள் கிளம்பியவுடன் அஷ்வினும் கிளம்ப முற்ப்பட்ட போது “தேங்க்ஸ் டாக்டர்” என்று ஐஸ்வர்யா கூற சற்று நின்று அவளை பார்த்தான்.

“எதுக்கு தேங்க்ஸ் உங்கள இப்படி அடிப்பட வச்சு படுக்க வச்சதுக்கா இல்ல அட்மிட் பண்ணதுக்கா?” அஷ்வின் மெல்லியதாக ஒரு சிரிப்பு.

“காலைல என்ன வந்து பார்த்து ஹெல்ப் பண்ணதுக்காக” ஐஸ்வர்யா புன்னகைத்தாள்.

“இல்ல உங்க வீட்டுல கைெழசஅ பன்னுனாப்ப அவங்க எல்லாரும் வெளியூர் பயணம் சென்றிருப்பதாக சொன்னாங்க. அதான் காலைல வந்து பார்த்துட்டு போனேன்” என்று அஷ்வின் சொன்னதும் ஐஸ்வர்யா அதிர்ந்தாள். “என் வீட்டு காண்டக்ட் னநவயடைள எப்படி கிடைச்சது?’ என்று அவள் முடிக்கும் முன்னரே அங்கு வந்து சேர்ந்தார்கள் அஷ்வினின் அக்கா பவித்ராவும் அவள் கணவன் வாசுவும். அவர்களைப் பார்த்த ஐஸ்வர்யா மேலும் திகைத்தாள். “இப்ப எப்படி இருக்கு ஐஷு? ரொம்ப வலியா?” பவித்ரா அவளை நலம் விசாரித்தாள்.

“பெரிய அடி ஒன்னும் இல்லக்கா. நல்லாத்தான் இருக்கேன். ஆமா நீங்க எப்படி இங்க?”

“அது வந்துஇ உன் அண்ணாவும் அண்ணியும் தான் எங்களை கூட இருந்து பார்த்துக்க சொன்னாங்க. ரெண்டு நாள்ல வந்துடுவாங்களாம். நீ கவலைப்படாத சரியா” பவித்ரா சொன்னதும் சரி என்றே தலை அசைத்தாள் ஐஸ்வர்யா. ஏனோ தெரியவில்லை அஷ்வின் தன் தம்பி என்பதை அவள் சொல்லாமல் விட்டுவிட்டாள். சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருக்கையில் அடிக்கடி ஐஸ்வர்யாவின் கண்கள் தன் கணவனோடு சற்று தள்ளி பேசிக்கொண்டிருந்த அஷ்வினை கவனிப்பதை பவித்ரா கவனிக்காமல் இல்லை. ‘ஐஷுவும் உன் தம்பி மாதிரிதான் பவி. கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருக்கா. உன் தம்பிய கேட்கலாம்னு இருக்கோம்னு சொன்னதுக்கே அதெல்லாம் வேணாம்னு கோவமா சொல்லிட்டு போயிட்டா வேற. மொத ரெண்டு பேரையும் மீட் பண்ண வச்சு பேச வச்சா ஒரு வேளை ஏதாவது நல்லது நடக்குமோ?” என்று அவளது போட்டோவை கொடுக்கும் போதே ஐஸ்வர்யாவின் அண்ணி தீபா சொன்னது நினைவில் இருந்தது பவித்ராவிற்கு. மனதிலே ஒரு கணக்கு போட்டாள் பவித்ரா. அஷ்வின் மேல் ஐஸ்வர்யாவிற்கு ஏதோ ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்ப்பட்டிருக்கிறது. இப்போ இவன் நம்ம தம்பின்னு தெரிஞ்சா அவ மனசு மாறினாலும் மாறிடும். சோ மொத தெரியாமலே இருக்கட்டும் என்று முடிவு செய்தவளாய் எழுந்து சென்று ஐஸ்வர்யா காதில் கேட்கும் வண்ணமே “டாக்டர்இ அவங்க எங்க சொந்தக்கார பொண்ணுதான். கொஞ்சம் நல்லா கவனிச்சு பார்த்துக்கோங்க. நாங்க கிளம்பறோம்” என்று உரக்க கூறினாள். அஷ்வினுக்கும் வாசுவுக்கும் ஒன்னும் புரியல. “என்ன டாக்டரா? என்ன யாரோ மாதிரி பேசர பவி?” வாசு புரியாமல் கேட்ட போதுஇ அவன் காலை மித்தித்தவள் “ஆமாங்க அவரு டாக்டர். இது ஹாஸ்பிட்டல். ஐஷு pயவநைவெ. நாம ஐஷுவோட கயஅடைல கசநைனெள “ என்று பவி ஏதோ சமாளித்தாள். பிறகு மெதுவாக “டேய் அவகிட்ட நீ என் தம்பின்னு சொல்லாத. தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத. புரியுதா” என்று மிரட்டினாள். “ஏன் ஏன் சொல்லக்கூடாது?” அஷ்வினும் புரியாமல் கேட்டான். “சொல்லுறத செய்டா. வீட்டுல வந்து சொல்லறேன். சொதப்பிடாத. கொன்னுடுவேன்” பவி முகத்தில் புன்னகையோடு மெல்லிய குரலில் அஷ்வினுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் அதட்டினாள். ஐஸ்வர்யாவிற்கு துளியும் சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டாள். பிறகு தன் கணவனைப் பார்த்து “வாங்க நமக்கு வேலை இருக்கு. கிளம்புவோம். அவர்கள் பேசட்டும்” என்று  இழுத்துக்கொண்டு கிளம்பினாள். அஷ்வினுக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன இது திடீர்னு அக்கா ஏதேதோ பேசறாளே. என்ன ஆச்சு இவளுக்கு திடீர்னு? என்று யோசித்தவன் திடீர்னு ஐஸ்வர்யா பக்கம் திரும்பினான். இவ்வளவு நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் தன்னைப் பார்த்ததுமே வேறு பக்கம் தலையை திருப்பி பாசாங்கு செய்ததை அவன் கவனிக்க தவறவில்லை.

 

தொடரும் ….

மேகா     


Pருடீடுஐளுர்நுனு டீலு
மேகா
என் கற்பனைகளை எழுத்துக்களாய் தூவும் மேகம் நான்

நெஞ்சாத்தியே (3)

பாகம் 3

“என்னக்கா ஆச்சு உனக்கு? திடீர்னு ஏன் ஹாஸ்பிட்டல்ல உளறிட்டு இருந்த அப்படி?” அஷ்வின் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் தன் அக்காவிடம் முகம் சுளித்தான். “இப்ப ஏன்டா என்ன திட்டுற? நான் செஞ்சா ஒரு அர்த்தம் இருக்கும். சும்மா கோவப்படாதடா கண்ணா” பவித்ரா அவனை சமாதானம் செய்தாள்.

“என்ன அர்த்தம்? அந்த பொண்ணுகிட்ட ஏன் நா உன் தம்பின்னு சொல்ல கூடாதுன்னு சொன்ன? அத சொல்லு மொத”

“டேய் அவளுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லையாம். என் தம்பிக்கு அவளை பார்க்கிறோம்னு அவ வீட்டுல சொல்லிருக்காங்க. அவ அப்பவே முடியாதுன்னு சொல்லிருக்கா. இப்ப நீதான் என் தம்பினு தெரிஞ்சா உன்கிட்ட பேசாம போயிடுவாடா. அதான் அப்படி சொல்ல சொன்னேன். அவளுக்கு தெரிய வேணாம் இப்போதைக்கு” பவித்ரா சொன்னதும் அஷ்வின் இன்னும் குழம்பினான்.

“இரு, இப்ப அவ எதுக்கு என் கூட பேசணும்னு நீ நினைக்கிற. அதான் பிடிக்கலன்னு சொல்லிட்டால. அப்புறம் எதுக்கு நீ இந்த கல்யாணத்தை நடத்த நினைக்கிற” அஷ்வின் புரியாதவனாய் கேட்டான்.

“உனக்கு பிடிச்சிருக்கேடா. எப்படி விட முடியும்?” பவித்ரா இப்படி சொன்னதும் திகைத்தான் அவன்.

“எது? எனக்கு பிடிச்சிருக்கா? நான் எப்போ பிடிச்சிருக்குன்னு சொன்னேன்?” குரலை கடுமையாக்கி புருவத்தை சுருக்கினான்.

“பிடிக்கலனா அவளை எதுக்குடா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி அப்போ அப்போ போய் கவனிச்சிக்கிற?” பவித்ரா கேட்டது சம்மந்தமே இல்லைன்னு அங்கிருந்த வாசுவுக்கும் புரிந்தது. இருந்தாலும் வாய் திறக்கவில்லை.

“என்னக்கா நீ. அவ என் கார்ல தானே வந்து மோதினா. நான் தானே அட்மிட் பண்ணனும். இதுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம். நீ என்ன உளருற?” கோவமானான் அஷ்வின்.

“அங்க தான்டா நீ கவனிக்கணும். ரோட்டுல அவ்வளோ கார் போகுது. அவ எதுக்கு உன் கார்ல மோதணும். அதோட ரோட்டுல எவ்வளோ பொண்ணுங்க accident ஆகராங்கதான். அவங்களலாம் நீ ஏன் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணல? யோசி தம்பி யோசி” பவித்ரா இப்படி கேட்டதும் தலையிலேயே கைவைத்து சோபாவில் அமர்ந்தான் அஷ்வின். வாசு மட்டும் பலமாக கை தட்டினான். “அட அட அட இது valid பாயிண்ட். பாரு என் ;பொண்டாட்டிக்கு எவ்வளோ அறிவுனு. நீ law படிச்சிருந்தா பெரிய வக்கீல் ஆகிருப்ப பவிம்மா. மிஸ் ஆச்சு” வாசு இப்படி கூறியதும் பவித்ரா சற்று பெருமையுடன் “நா சரியாதானே பேசறேன். பாருங்க உங்களுக்கு தெரியுது. என் கூட பொறந்தவனுக்கு தெரிய மாட்டுது. இவன படிக்க வச்சதுக்கு பேசாம நானே படிச்சிருந்தா ஜட்ஜ் ஆ கூட ஆகிருப்பேன்” என்று கூறினாள். “ஆமா பவிம்மா, இந்த அறிவுக்காகதான் உன்னோட husbandனு சொல்லிக்கவே ரொம்ப பெருமை படறேன்” வாசு இன்னும் அவளை உசுப்பேத்தி விட்டான். “சரி நீங்க ரெண்டு பேரும் காமெடி பண்ணி நீங்களே சிரிச்சிக்கோங்க. நா என் ரூம் போறேன்” என்று எழுந்த அஷ்வினை வலுக்கட்டாயமா பிடித்து அமர வைத்தாள் பவித்ரா. “டேய் நான் சொல்லுறதை கேளுடா கண்ணா. அக்கா சொல்லுறேன்ல. அவ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுடா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதுவரைக்கும் நீ கல்யாணம் வேணாம்னு சொன்னாப்பலாம் நா ஏதாவது சொல்லிருக்கேனா சொல்லு. உன்ன என் தம்பியா நினைக்கலடா. சொந்த பிள்ளையாதானே நினைக்கிறேன். அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னு ஆசைபடறேன்டா. உனக்கு அவளை விட வேற பொருத்தமான பொண்ணு இல்லைடா” பவித்ரா கெஞ்சும் தோரணையில் கேட்டதும் அஷ்வினின் உள்ளம் சற்று இளகியது. “அக்கா, இப்ப ஏன் இப்படிலாம் பேசர. அந்த பொண்ணுதான் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிட்டானு சொன்னியே. அப்புறம் எதுக்கு அவளை நான் கட்டிக்கணும்னு நினைக்கிற” அஷ்வின் சாந்தமாகவே கேட்டான். “அவளுக்கு ஒரு வேலை இந்த arrange marriage ல விருப்பம் இல்லாம இருக்கும் போல. ஆனா உன்ன அவளுக்கு பிடிச்சிருக்குடா. அது மட்டும் உறுதியா தெரியும். உன்ன அப்போ அப்போ பார்த்தாடா. அத நான் பார்த்துட்டேன்” பவித்ரா சிரித்தாள். “பார்த்தா பிடிக்கும்னு அர்த்தமா” அஷ்வின் கேட்டதும் “ஆமாடா நா கூட லவ் பண்ணும் போது இப்படிதான் தெரியாம தெரியாம பார்ப்பேன்” பவித்ரா சற்றே வெட்கம் கலந்த சிரிப்போடு கூறினாள். “பவிம்மா, என்னை கல்யாணத்துக்கு முன்னுக்கே லவ் பண்ணுனியா? சொல்லவே இல்ல என் கள்ளி” என்று வாசு ஆர்வத்துடன் கேட்டதும் “அட உங்கள யாரு லவ் பண்ணுனா. நா காலேஜ் படிக்கும் போது வடநாட்டு சேட்டு பையன் ஒருத்தன் கூட படிச்சான். பார்க்க ஷாருக்கான் மாதிரி இருப்பான். அவன் மேல தான் லவ்ஸ் எனக்கு” பவித்ரா வெட்கத்தோடு கூற, “அடிபாவி, இதெல்லாம் இவ்வளோ நாள் சொல்லவே இல்லையே நீ?” வாசு பல்லைக் கடித்தான். “அது ஒரு தலை ராகம்ங்க. நா மட்டும்தான் பார்ப்பேன் அவன. அவன் என்னை திரும்பி கூட பார்க்கல” பவித்ரா பெருமூச்சு விட்டாள். “அவனுக்கு டைம் நல்லாருந்துருக்கு போல பவிம்மா. நீ feel பண்ணாத. நான்தான் பண்ணனும்” வாசு இப்படி சொன்னதும் “என்ன யாருக்கு டைம் நல்லாருந்துச்சுனு சொன்னீங்க?” பவித்ரா முகம் சிவந்தது. “அது வந்து, எனக்குதான் டார்லிங். இல்லனா இவ்வளோ அழகான அன்பான அறிவான பொண்டாட்டி கிடைச்சிருப்பாளா சொல்லு” வாசு சிரித்துக்கொண்டே சமாளித்தான்.

 

இரவு உணவுக்கு பிறகு, அறையில் வந்து இளைப்பாறிய அஷ்வின் யாரோ அறை கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்து பார்த்தான். அங்கே அவன் மாமா வாசு நின்று கொண்டிருந்தான். “வாங்க மாமா உள்ள” என்று அழைத்தான். “உன்கூட கொஞ்சம் பேசணும் அஷ்வின். ப்ரீயா நீ?” வாசு கேட்க. “சொல்லுங்க மாமா. நான் எப்பவும் ப்ரீதான்” என்று அஷ்வின் அறையில் இருந்த நாற்காலியை எடுத்து அங்கு போட்டான் வாசு அமர. சிறிது நொடி மௌனத்திற்குப் பிறகு வாசு பேசத் தொடங்கினான். “ அஷ்வின் உன் பர்சனல் விஷயத்துல தலை இடறதா நினைக்காத. உன்கிட்ட அங்க இத பத்தி பேசிருந்தா உன் அக்கா feel ஆகிருப்பா. அதான் இங்க தனியா பார்த்து பேசறேன்” வாசு சொன்னதும் அஷ்வின் கூர்மையாக நோக்கினான். “உனக்கே தெரியும் உன் அக்காவுக்கு நீனா உயிர். உன்மேல அவ்வளோ பாசம் அக்கறை அவளுக்கு. நான் உன் அக்காவ பொண்ணு பார்க்க வரும் போது அவ சொன்னது ஒன்னே ஒண்ணுதான். அப்பா அம்மா இல்லாத என் தம்பிக்கு நான்தான் அம்மா. அவனை விட்டுடு வர முடியாது. என்னை பிடிக்கலன்னு சொல்லிடுங்கனு சொன்னா. அதுல தான் உன் அக்காவை எனக்கு ரொம்ப பிடிச்சது. உன் தம்பிக்கு அம்மாவா நீ இருக்க. அவனுக்கு ஒரு நல்ல  தந்தையா நான் இருப்பேன்னு வாக்கு கொடுத்துதான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். அதனாலதான் என்னவோ எங்களுக்கு பிறக்க இருந்த குழந்தையை அந்த கடவுள் அது இந்த மண்ணில் விழுறதுக்கு முன்னயே அவன்கூட கூட்டிக்கிட்டான் போல” வாசு மேற்கொண்டு பேச முடியாமல் தடுமாறினான். “மாமா” அஷ்வினால் பேச முடியவில்லை. அவன் மனம் வலித்தது. சிறிது இடைவெளிக்குப்பிறகு வாசு தொடர்ந்தான். “உன்னோட நல்லது கேட்டதுல எனக்கும் பங்கு உண்டு. உனக்கு நல்ல வாழ்கையை அமைச்சு தர்ற கடமை இருக்கு எங்களுக்கு. ஏனோ தெரியல இந்த பொண்ண அவளுக்கு என் நண்பன் வீட்டு functionல பார்த்ததுமே ரொம்ப பிடிச்சிடுச்சு, அன்னைல இருந்து இந்த பொண்ண உனக்கு கட்டி வைக்க ரொம்ப துடிச்சிட்டு இருக்கா. என்னால முடிஞ்சவரைக்கும் அவளை சந்தோசமா வச்சிருக்கேன் அஷ்வின். ஆனா உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சாதான் அவ இன்னும் நிம்மதியா இருப்பா. எங்க சந்தோசம் நீதான்ப்பா. நல்லா யோசிச்சு முடிவெடு” என்று அவன் தோளை தட்டிக்கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றான் வாசு. அவனது மாமா பேசி சென்ற பிறகு மனம் பாரமாக இருப்பதாய் உணர்ந்தான் அஷ்வின். பழைய ஞாபகம் அவனை சூழ்ந்து கொண்டது. எதை மறக்க நினைத்தானோ அது இன்னும் தன்னை விடாமல் துரத்துவதை உணர்ந்தான். எழுந்து சென்று தன் புத்தக அலமாரி கதவை திறந்தவன் அதிலிருந்த பெட்டி ஒன்றை வெளியில் எடுத்தான். நீண்ட நாட்களுக்குப் பின் அதை திறந்து பார்க்கிறான். பழைய புத்தகங்களோடு ஒரு greeting கார்ட். கவரை திறந்து வெளியில் எடுத்தான் அந்த கார்டை. உள்ளே ஒரு புகைப்படம். காலேஜில் எடுத்த படம் அது. அதையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான். கண்கள் கலங்கின. கார்டில் எழுதிய வரிகளைப் படித்தான் “ஐ லவ் யூ ஐஸ்வர்யா” என்று எழுதியிருந்தது. எட்டு வருடங்களுக்கு முன் அந்த விபத்து மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் அவனது அக்கா கருவில் இருந்த தன் குழந்தையை இழந்திருக்க மாட்டாள். அவனும் தன் வாழ்வில் மிக முக்கியமான ஒரு உயிரை இழந்திருக்க மாட்டான்.

தொடரும்

மேகா

833465e2646667723c31a7af96740990?s=46&d=

PUBLISHED BY

மேகா

என் கற்பனைகளை எழுத்துக்களாய் தூவும் மேகம் நான்

நெஞ்சாத்தியே (4)

பாகம் 4

இதுவரை கல்யாணத்தின் மேல் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமலேயே இருந்த அஷ்வின், அன்று  இரவு அவன் மாமா அவனிடம் பேசி சென்ற பிறகு ஒரு முடிவோடுதான் இருந்தான். அவனுக்காக இல்லாவிட்டாலும் அவன் அக்கா மாமா சந்தோஷத்துக்காகவாவது கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவெடுத்தான். ஆனா மனதில் ஒரு தயக்கம் இருக்கவே செய்தது. அந்த பெண்ணைத்தான் இவன் கல்யாணம் செய்துக்கணும்னு அக்கா பிடிவாதமாக இருக்கிறாள். arrange marriage என்றால் கூட இவனுக்கு எந்த கஷ்டமும் இருந்திருக்காது. ஆனால் தான் தான் அவளுக்காக பார்க்கப்பட்ட வரன் என்று அவளுக்கு தெரிவிக்காமலேயே அவள் மனதில் இடம் பிடித்தாக வேண்டும் இப்பொழுது. அதுதானே எப்படி என்று தெரியவில்லை நம்ம ஹீரோவுக்கு. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில மாட்டிவிட்டுட்டாளே இந்த அக்கா என்று மனதிலேயே திட்டினான். அவனுக்கு  ரெண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கிறது. அதற்குள் அவளிடம் பேசி அட் லீஸ்ட் ஒரு friend ஆவது ஆக வேண்டும் அவளோடு மொத. அதற்க்கு என்ன வழி என்று குழம்பிக்கொண்டிருந்தான். காலையில் இதே சிந்தனையாக எழுந்து கிளம்பிக் கொண்டிருந்தவனிடம் சில மாத இதழ்களை எடுத்து வந்து கொடுத்தாள் பவித்ரா. ஒன்றும் புரியாதவனாய் அவளை பார்த்து “எதுக்கு இந்த magazinesலாம்?” கேட்டான். “இதெல்லாம் ஐஷு கிட்ட கொடுடா. படிப்பால. பாவம் அவளுக்கு பொழுது போகணுமே” பவித்ரா சொன்னதும், “ஏன் நீதான் பார்க்க வருவியே அப்போ கொடுக்கறது” என்ற அஷ்வினை பார்த்தவள் “நா கொடுக்கறதும் நீ கொடுக்கறதும் ஒண்ணா டா. இத சாக்கா வச்சிட்டு அவள போய் பார்த்து பேசலாம்ல. இப்படி புரியாதவனா இருக்கியே. உனக்கெல்லாம் பொண்ணு பார்த்தேன் பாரு. மொத என்ன சொல்லணும்” என்று தன் தலையிலேயே அடித்துக்கொண்டாள் ஒரு புத்தகத்தை எடுத்து. “க்கா போதும். எனக்கு டைம் ஆச்சு. அந்த magazines லாம் ஒரு பைல போட்டு கொடு. நா கிளம்பறேன்” என்றவன் அந்த புத்தகங்களை ஒரு பையில் போட்டு வாங்கி கொண்டு கிளம்பினான்.

“கையில போனும் இல்ல. தூக்கமும் வர மாட்டுது. இன்னும் எத்தனை நாள்தான் இங்க இந்த அறைக்குள்ள இருக்கறதுன்னு தெரிலையே” ஐஸ்வர்யா தனக்குதானே புலம்பி கொண்டிருந்தாள். அவளது போன் ஹன்ட்பேக்கில் இருந்தது. “ஸ்கூட்டரை workshopக்கு அனுப்பி வச்சதா அந்த handsome டாக்டர் சொன்னாரே. என்னோட ஹன்ட்பேக் பத்தி சொல்லலையே” என்று யோசித்தவள், தன்னையும் மீறி ‘handsome டாக்டர்’ என்ற வார்த்தை வாயில் உதிர்த்ததை நினைத்து தனக்குள்ளே சிரித்தாள். திரும்ப வருவாரா அந்த டாக்டர்? என்ன இது திடிர்னு நாம எதுக்கு அந்த டாக்டரை பற்றி நினைக்கிறோம். பெயர் கூட தெரிலையே. என்ன பெயர்னு தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே. மறுபடியும் பார்த்தால் கண்டிப்பா கேட்கணும்” என்று தனக்குள் எண்ணி கொண்டிருந்தவள் திடீரென்று அவள் இவ்வளவு நேரம் நினைத்துக் கொண்டிருந்த அந்த ‘handsome டாக்டர்’ அவள் அறைக்குள் வந்ததும் திகைத்து போனாள். “ஹாய் என்னாச்சு? அதிர்ச்சியா பார்க்கறீங்க? ஆர் யூ ஓகே?” அஷ்வின் தான் கொண்டு வந்த பையை அங்குள்ள மேசை மீது வைத்தான். “ஆ … அதுவா… உங்களுக்கு ஆயுசு நூறு. இப்பதான் உங்களைப்பத்தி யோசிச்சேன்” என்று கூறினாள் ஐஸ்வர்யா. இப்படி அவள் சொன்னதும் அஷ்வின் திகைப்புடன் அவளை நோக்கியதை கண்டதும் , ‘ஐயோ அவசரப்பட்டு சொல்லிட்டோமோ. ஏதாவது நினைச்சிக்குவாரோ?’ என்று எண்ணியவள் சமாளிக்க தொடங்கினாள். “இல்ல, என்னோட ஹன்ட்பேக் எங்கனு தெரில. ஒரு வேலை அது உங்கக்கிட்ட இருக்குமோனு யோசிச்சிட்டு இருந்தேன். வேற ஒன்னும் இல்ல” நல்லாவே சமாளிக்கிறாளே என்று புரிந்தது அஷ்வினுக்கு. மனதுக்குள் ஏதோ ஒரு வயலின் ஓசை கேட்டது அவனுக்கு. ‘ஆஹா என்ன இது? ஒரு வேளை இவளுக்கு நம்மல பிடிக்குதோ அக்கா சொன்ன மாதிரி’ வயலின் ஓசை இன்னும் வேகமாகவே கேட்டது. “டாக்டர்! டாக்டர்!” ஐஸ்வர்யா திரும்ப திரும்ப அழைக்க அவளை பார்த்தான் சிந்தனையிலிருந்து விடுப்பட்டு. “எஸ் உங்க ஹன்ட்பேக் என் கார்ல இருக்கு. கொடுக்க மறந்துட்டேன். நாளைக்கு எடுத்து வந்து தரேன்” என்று அஷ்வின் பதிலளித்தான். “ரொம்ப தேங்க்ஸ். பத்திரப்படுத்தி வச்சதுக்கு. அது என்ன மேசைல ஏதோ பை” ஐஸ்வர்யாவின் கண்கள் அந்த புத்தகங்களின் மேல் சென்றது. “ஓ இதுவா புக்ஸ். அக்கா தர சொன்னாங்க உங்கக்கிட்ட. பொழுது போக படிப்பிங்கனு” அஷ்வின் அதை எடுத்து அவளிடம் நீட்டினான். ஆனால் ஐஸ்வர்யா அதை வாங்காமல் “எந்த அக்கா? யார்?” என்று கேட்டதும் அஷ்வினுக்கு அப்போதுதான் தான் வாய்தவறி உளறியது தெரிந்தது. “அது அது அவங்க நேத்து உங்கள பார்க்க வந்தாங்களே உங்க அக்கா தானே அவங்க. அவங்கதான் கொடுக்க சொன்னாங்க. காலைல இங்க வந்திருந்தாங்க. விசிடிங் hour மதியம்தானே. அதான் உள்ள வர முடில. என்ன வர்ற வழில பார்த்தாங்க. உங்கக்கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்தாங்க” அஷ்வின் சமாளித்தான். அடப்பாவி அக்கா இப்படி என்னையும் கடைசில நாடகமாட வச்சிட்டியே என்று மனதுக்குள்ளே கருவினான் தன் தமக்கையை. “oh அவங்களா. அப்போ நீங்களா என்னை பார்க்க வரல. இத கொடுத்துட்டு போகத்தான் வந்தீங்க” ஐஸ்வர்யா குரலில் ஒரு வருத்தம். அஷ்வினுக்கு ஏதோ ஒன்று மட்டும் புரிந்து விட்டது அவள் பேசிய விதத்தில் இருந்தே. என்ன இவ நமக்கு எந்த கஷ்டமும் கொடுக்காம நாம சொல்ல வேண்டிய டயலாக்லாம் இவ சொல்லுறாளே என்று எண்ணி சிரித்தான். ஐஸ்வர்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் சிரிக்கிறீங்க?” அவனைப் பார்த்தாள். “இல்ல, ஒன்னும் இல்ல. நீங்க புக்ஸ் படிங்க. நான் பிறகு வந்து பார்க்கிறேன். ஏதாவது ஹெல்ப் வேணும்னா இங்க நர்ஸ் கிட்ட சொல்லுங்க. நான் வந்து பார்க்கறேன்” என்று அங்கிருந்து கிளம்ப இருந்தவனிடம், “உங்கள என்னனு சொல்லுறது. என்னோட சொந்தக்கார டாக்டர்னா? பெயர் கூட தெரியாதே. சொல்லிட்டு போனா கூப்பிட சொல்லலாம்” அவள் அவன் பெயரை தெரிஞ்சிக்க விரும்புவதை புரிந்துக் கொண்டவனாய், “ம்ம்ம் அப்படியே சொல்லுங்க சொந்தக்கார டாக்டர்னு, நோ problem” என்று கூறி விட்டு சிரித்துக் கொண்டே வெளியேறினான். தான் அவன்  பெயரை கேட்டும் அவன் சொல்லாமல் சென்றது அவளுக்கு ஏமாற்றமாக தான் இருந்தது. என்ன இவன் பெயரை கூட சொல்லாம சிரிச்சிட்டு போறான். ஒரு வேளை நாம இவன பத்தி personala தெரிஞ்சிக்க நினைக்கிறது தெரிஞ்சிருக்குமோ? இனிமே அவன் வந்தா ரொம்ப பேச கூடாது நாம. கெத்தா இருப்போம்” என்று முனகியபடியே அந்த புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள். அடடே என்ன ஆச்சர்யம் அவள் கண்ணில் அந்த புத்தகம் பட்டதும் ஆசையாய் எடுத்து புரட்டினாள்

அன்று மாலை வீட்டிற்கு கிளம்புவதற்கு ரெடியாகி கொண்டிருந்தான். ஆனால் என்னவோ தெரியவில்லை அன்று அவன் எண்ணம் சிந்தனை எல்லாவற்றிலும் அவளே நிறைந்திருந்தாள். அக்காவிடம் பிடிக்காதவனைப் போல பாசாங்கு செய்தாலும் அவன் மனம் அவளை சுற்றியே வந்ததை அவனால் மறுக்க முடியவில்லை. நிச்சயமாக அவளின் மேல் ஒரு தனி அக்கறை பாசம் நிறைந்திருந்தது. அப்போ அப்போ அவள் இருந்த வார்டுக்கு கால் செய்து அவளின் உடல் நிலையை விசாரித்தான் காலையில் இருந்து. இவ்வளவு அக்கறை ஏன் அவள் மேல். அவனுக்கே ஆச்சர்யமாக தான் இருந்தது. அவளை பார்க்க வேண்டும் மனது துடித்தது. ஆனால் அடிக்கடி அவளை சென்று கண்டால் ஏதாவது தப்பா எடுத்துக் கொள்வாளோ? அவனில் இருந்த சுய கெளரவம் சற்று தடையாகவே இருந்தது. ஒரு டாக்டரா இருந்துக்கிட்டு எப்படி patient ஆ இருக்கற பொண்ணுகிட்ட க்ளோசா பழகுறது? மொத அவ டிஸ்சார்ஜ் ஆகி போகட்டும். பிறகு அவளை கண்டிப்பாக சந்திக்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று எண்ணினான். திடீரென்று அவனுக்கு அழைப்பு வந்தது. ஐஸ்வர்யா பார்க்க வேண்டும் என்று கூறுவதாக வார்டில் இருந்து அழைத்திருந்தார்கள். என்னவா இருக்கும் என்று எண்ணியவாறே அவளைக் காண சென்றவனை “வாங்க டாக்டர்” என்று சிரித்துக் கொண்டே பார்த்தாள். கலைந்த கேசம், அலங்காரம் எதுவுமே இல்லாத முகம், ஆனா அவன் கண்ணுக்கு அவள் தான் பிரபஞ்ச அழகியாக தோன்றினாள். எதையெல்லாம் பார்க்கும் போது நம் கண்கள் இமைக்க மறந்து போவோமோ அந்த மாதிரியான அழகி அவள். அவனும் இமைக்க மறந்துதான் போனான் அவளைப் பார்த்த அந்த நொடி. ஒரு வேளை அன்று அவன் அந்த சாலையில் கிடந்தவளை  தூக்கிய போது அவன் சட்டை காலரை பற்றி அவன் நெஞ்சோடு சாய்ந்தவளை ஒரு நொடி பார்த்தானே அப்பொழுதே அவள் மேல் அந்த ஈர்ப்பு வந்திருக்குமோ என்னவோ. “என்னாச்சு? கூப்பிட்டீங்கன்னு கால் வந்ததே?” அஷ்வின் அவளை பார்த்து கேட்டான். “இல்ல சொந்தக்கார டாக்டர்னு சொன்னா கூப்பிடுவாங்கன்னு சொன்னீங்களே. அதான் கூப்பிடுராங்களானு செக் பண்ணினேன்” அவள் சிரித்தாள். “ரொம்ப குறும்புக்கார பொண்ணா இருக்கீங்க. பார்த்துதான் பேசணும் போல” அஷ்வின் அவள் சாய்ந்திருந்த படுக்கையின் அருகில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான். “பின்ன நா உங்க பெயரை கேட்டும் சொல்லாமதானே போனீங்க. அதான் வேற வழி இல்ல”, என்று அவள் சொன்னதும் “இங்க இருக்கற நர்ஸ் கிட்ட என் பெயர் கேட்டிருக்கலாமே. சொல்லிருப்பாங்களே” அஷ்வின் வினவினான். ஒரு நொடி அவனைப் பார்த்தவள் “எனக்கு உங்க பெயரை நீங்க சொல்லித்தான் தெரிஞ்சிக்கணும்” அவன் கண்ணை பார்த்து சொன்னதும் அஷ்வினுக்கு உடல் சிலிர்த்தது. கொல்லாமல் கொல்கின்றதே இவளது காந்த கண்கள். அவள் கண்ணை பார்க்காமல் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினான். அந்த பெட்டின் மேல் பாரதியார் கவிதை புத்தகம் இருந்தது. பேச்சை மாற்ற நினைத்தவன் அதை கையிலெடுத்தான். “என்ன பாரதியார் கவிதைலாம் படிப்பீங்களா. மாடர்ன் பொண்ணா இருக்கீங்க. தமிழ் கவிதைலாம் படிக்கிறீங்க. சூப்பர்” ஏதோ சொல்லி வைத்தான். திடீர்னு கவிதை பற்றி அவன் பேசியதும் அவளுக்கு உள்ளூர ஒரு மகிழ்ச்சி. “ஆமா எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க படிச்சிருக்கீங்களா டாக்டர்” என்று அவள் கேட்டதும் “இல்லை, எனக்கு இதுல interest இல்ல. ஆனா சில கவிதைகள் தெரியும் பாரதியோட” என்று அஷ்வின் அந்த புத்தகத்தை புரட்டினான். அவள் கண்களை பார்க்காமல் இருக்கவே இந்த கவிதை டாபிக். “என்ன கவிதை. ஸ்கூல்ல ஓடி விளையாடு பாப்பா, அப்புறம் அச்சமில்லை அச்சமில்லை லாம் படிச்சதை சொல்லுறீங்களா?” அவள் முகத்தை சுளித்தாள். interest இல்லன்னு அவன் சொன்னது அவளுக்கு கோவமாகதான் இருந்தது அவன்மேல். ‘எவ்வளோ பெரிய கவிஞன். அவரோட கவிதைகளை படிக்க interest இல்லன்னு சொல்லுறானே இவன்’ மனதுக்குள்ளே திட்டினாள். “ஸ்கூல்ல படிச்ச கவிதையை சொல்லல. ஒரு 80s படத்துல கூட வரும்… தீர்த்த கரையினிலே. அது பிடிக்கும். அந்த சாங். ரொம்ப நல்லாருக்கும்” என்று அஷ்வின் சொன்னதும் அவள் முகத்தில் அத்துணை பொலிவு திடீரென்று . அவன் அந்த கவிதையை தான் சொல்லுவான் என்று நிச்சயம் அவள் எதிர்ப்பார்க்கவில்லை.

“தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே

பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்

வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி

பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி..”

அவள் அவ்வளவு அழகாக அந்த கவிதையை ஒப்புவித்தாள் மறுகணமே. வாயடைத்து போய் அவளை பார்த்தான் அவன். என்ன ஒரு அழகான குரல் அதுவும் கம்பீரமாக கவிதை சொல்கிறாள். அதன் ஒவ்வொரு வார்த்தையும் அவள் குரலில் கணீர் கணீர் என்று கேட்க ஒரு கணம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். “ டாக்டர், டாக்டர்” அவள் கை அசைத்து கூப்பிட்டாள். திடுக்கிட்டு சுயநினைவிற்கு வந்தவன் “எப்படி இந்த கவிதையை இவ்வளோ அழகா… ம்ம்ம்ம் சான்சே இல்ல. ரொம்ப ரொம்ப அருமை” அவன் பாராட்டியதை கேட்டு அவளுக்குள் அவ்வளவு ஆனந்தம். “எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கவிதை இது. படிக்கிற நமக்கே இப்படி ஒரு இன்பம் கிடைக்குதே. எவ்வளோ அனுபவித்து எழுதியிருப்பான் பாரதி” அவள் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். “எனக்கு அர்த்தம்லாம் அவ்வளவா தெரியாது. கேட்க பிடிக்கும். தட்ஸ் ஆல்” என்று அஷ்வின் கூறியதும் அவள் நிமிர்ந்து உட்கார்ந்து பேச தொடங்கினாள். “இந்த தீர்த்த கரையினிலே பாடல் காதலையும் அதன் பிரிவினால் உண்டாகும் வலியையும் அவ்வளோ அழகா எடுத்து சொல்லும் டாக்டர். for example இப்ப நாம யாரை அதிகமா விரும்பறோமோ அவர் மூலமா வரும் பிரிவுகள், உதாசீனம், சந்தேகம், சண்டைகள் என்று எது நடந்தாலும் நாம் நம் மனதிற்கு பிடித்தவர்களைதான் எப்பவுமே உடல் மற்றும் உள்ளம் ரீதியாக நெருங்கியிருக்க நினைப்போம். காதலையும் பிரிவையும் அதன் நுண்ணிய உணர்வுகளையும், விளைவுகளையும் அதன் தீர்வுகளையும் ஒரே பாட்டில் எந்த கவிஞனாலும் இத்துனை உணர்வுபூர்வமாக சொல்ல முடியாது. நாடி, நரம்பு, இரத்தம், தசை எல்லாவற்றிலும் காதல் கசிந்துருகினால் மட்டுமே ஒருவனால் இப்படி எழுத முடியும்” அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்கு எதையோ ஞாபகப்படுத்தியது. எதையோ அல்ல. யாரையோ. இதை வேறு ஒருத்தர் அவனிடம் சொல்லி கேட்ட ஞாபகம். “மறுபடியும் சொல்லுங்க… என்னமோ நாடி நரம்புனு சொன்னீங்களே அதை” என்று அவன் அதிர்ச்சியுடன் கேட்டதும் தயங்காமல் மறுபடியும் கூறினாள் அவள். “நாடி ,நரம்பு , இரத்தம் , தசை எல்லாவற்றிலும் காதல் கசிந்துருகினால் மட்டுமே இப்படி எழுத முடியும்னு சொன்னேன். ஏன் கேட்டீங்க?” அவள் புரியாமல் விழித்தாள். அதை கேட்டவனின் மனது ஒரு நிலையில் இல்லை. ஏதோ ஒன்று அவன் இதயத்தில் முள்ளாய் தைத்தது போன்றதொரு உணர்வு . “ம்ம்ம்ம்ம்ம்…. நத்திங். எனக்கு டைம் ஆச்சு. நா உன்ன நாளைக்கு வந்து பார்க்கறேன். சாரி” என்று அவள் பதிலுக்கு காத்திராமல் எழுந்து நடந்தான் அஷ்வின். ஐஸ்வர்யா திகைத்துப்போய் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன ஆச்சு இவருக்கு. ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?” தன்னை தானே கேட்டுக்கொண்டாள் ஒன்றும் புரியாதவளாய்.

தொடரும்

மேகா

833465e2646667723c31a7af96740990?s=46&d=

PUBLISHED BY

மேகா

என் கற்பனைகளை எழுத்துக்களாய் தூவும் மேகம் நான்View all posts by மேகா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பதியுங்கள். ...ஆவலுடன் வாசிக்கிறேன்.

Link to comment
Share on other sites

நன்றி நிலாமதி அக்கா

நெஞ்சாத்தியே (5)

பாகம் 5

ரெண்டு நாட்களாகியும் அஷ்வின் அவளை மறுபடியும் வந்து பார்க்காதது அவளுக்குள் ஏதோ ஒரு நெருடலாகவே இருந்தது. ஏன் வந்து பார்க்கவே இல்லை. என்ன காரணம்னு தெரியலையே. அவன் கடைசியாக பேசி சென்ற மறுநாள் காலையில் அவள் கண்விழித்துப் பார்த்த போது அவளது ஹேண்ட்பேக் அவள் பெட்டின் பக்கத்தில் இருந்த நாற்காலியின் மேல் இருந்தது. அஷ்வின் வந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு அவள் அவன் வருவான் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்ததுதான் மிச்சம். அவன் வரவே இல்லை. நர்ஸிடம் சொல்லி அவனை அழைக்க சொல்லியும் பார்த்தாள். தனக்கு சர்ஜெரி இருப்பதாகவும், பிறகு வந்து பார்ப்பதாகவும் சொல்லியதாக அந்த நர்ஸ் தெரிவித்தாள். அவளும் காத்திருந்து பார்த்தாள். ஆனால் அவன் வரவே இல்லை. என்ன ஆயிற்று இவனுக்கு? நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா? ஏன் வந்து பார்க்கவில்லை என்று எந்நேரமும் அவனது சிந்தனையிலேயே இருந்தாள். ‘என்ன இது, இப்ப எதுக்கு நான் அந்த டாக்டரை பத்தியே யோசிச்சிட்டு இருக்கேன் தேவை இல்லாம. அவன் வந்தா என்ன, வரலனா என்ன. இனிமே அவனை பற்றி யோசிக்கவே கூடாது’ என்ற முடிவில் புத்தகங்களை புரட்டினாள். ஆனால் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை. அவள் மனது ஒரு நிலையில் இல்லை. யாராவது நம்மை விட்டு விலகி விலகி செல்லும் போதுதான் இந்த மனம் அவரை நாடி செல்லுமாமே. அவள் விஷயத்தில் அது உண்மையாகவே இருந்தது. அவன் இவளை விட்டு தூரம் செல்ல செல்ல இவள் அவனை நெருங்கி கொண்டிருந்தாள் மனதளவில். இரண்டு நாட்களில் அவளது அண்ணனும் அண்ணியும் வெளியூர் பயணம் முடிந்து திரும்பினார்கள். இவளுக்கும் உடல் நிலை தேறியிருந்தது. அன்றே டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று அவளை பரிசோதித்த டாக்டரும் கூறியிருந்தார். ஆனால் அவளுக்கு அங்கிருந்து செல்வதில் விருப்பம் இல்லை. எதையோ விட்டு செல்வது போன்றதொரு மனநிலை. அவனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் அவனுக்கு அன்று சர்ஜெரி ஒன்று இருந்ததால் அவன் வந்து பார்க்க வாய்ப்பில்லை என்று நர்ஸ் மூலம் தெரிந்துக் கொண்டாள். பின் நர்ஸிடம் அவன் கொடுத்த புத்தகங்களை அவனிடம் கொடுத்து விட சொல்லி கொடுத்து விட்டு ஏதோ பரிக்கொடுத்த ஒரு மனதோடு வீடு திரும்பினாள். மனதில் ஒன்றே ஒன்று மட்டும் நினைத்தாள். மறுபடியும் அவனை சந்திக்கும் வாய்ப்பு ஒன்று கிடைத்தால், அதன் பிறகு அவனை பிரியாத ஒரு வரமும் கிடைத்தால் நலமே என்று.

சர்ஜெரி முடிந்து தன் அறைக்கு திரும்பியவனின் மேசையில் ஐஸ்வர்யா திருப்பி கொடுத்து விட்ட புத்தகங்கள். அதை பார்த்தவனுக்கு மனதில் ஏதோ ஒரு வலி இருக்கவே செய்தது. இன்று அவளுக்கு டிச்சார்ச் என்று அறிந்திருந்தான். அவளை பார்த்து வழி அனுப்பி வைக்க அவன் விரும்பினாலும், அவன் மனது அதற்கு ஒத்துழைக்கவில்லை. அவள் மூலமாக யாரோ ஒருவரின் நினைவு அவனுக்கு மேலும் மேலும் வருத்தத்தை கொடுத்தது. வாழ்வில் மறக்க நினைக்கும் சம்பவங்கள் அவன் கண் முன்னே நிழலாடுகின்றன. மனதை பாதித்த அந்த ஒருத்தர் அவன் வாழ்வில். ஒரு காலத்தில் கேலியும் கூத்துமாய் ஜாலியாய் சுற்றி திரிந்த அஷ்வின் இன்று முற்றிலும் மாறுபட்ட ஒருவனாய் இருக்கிறான். அந்த ஒரு நாள், ஒரு சம்பவம், ஒரு நபர் அவன் மொத்த வாழ்க்கையும் மொத்தமாக மாறி போக காரணகர்த்தா. ஐஸ்வர்யா என்ற பெயரை கேட்டாலே அவனுக்கு பழைய ஞாபகங்கள் வந்து கண்களை நனைக்கின்றன. அதிலும் இவளது ஒவ்வொரு செய்கையும் வேறு அவனை ஏதோ ஒன்று குத்தி கொல்கிற உணர்வை தருகிறது. இவளை நெருங்கவும் முடியாமல், விட்டு விலகவும் வழி இல்லாமல் இரண்டு நாட்களாக படாத பாடு பட்டான். அவனையும் அறியாமல் அவன் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள் அவள். இப்போது அவளை மறக்கவும் வழி இல்லை. அக்காவும் இவனை விடுவதாய் இல்லை. தினம் தினம் அவளைப் பற்றியே பேசி இன்னும் அவனை கொல்கிறாள். இதற்க்கெல்லாம் என்னதான் முடிவு என்று யோசித்து யோசித்து களைத்தும் போனான்.பிரச்னையை கண்டு ஓட ஓடத்தான் அது விடாமல் துரத்துகிறது. ஒருவேளை அதை எதிர்க்கொள்ள துணிந்து விட்டால்? ஐஸ்வர்யா என்பவள் அவன் வாழ்கையில் இருக்க வேண்டும் என்பது எழுத படாத விதி. அதனால் தான் அவன் ஓட ஓட அவள் இவனை துரத்திக் கொண்டிருக்கிறாள். என்னதான் நடக்கும் பார்த்துடலாம். நான் ஐஸ்வர்யாவை நேசிப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அவள்தான் என் வாழ்க்கை என்று இருந்தால், நிச்சயம் அவளை, அவளுக்கு பார்த்த வரனாக அல்லாமல் அவள் மனதில் இடம் பிடித்த அதே டாக்டராக அவளை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று மனதில் எண்ணினான். மேசையில் இருந்த அவளுக்கு மிகவும் பிடித்த அந்த பாரதி புத்தகத்தை கையில் எடுத்தான். புத்தகத்தை ஏதோ ஒரு யோசனையில் புரட்டியவன், அதில் ஒரு பக்கம் மட்டும் மடித்து இருப்பதைக் கண்டான். அது திறந்துப்பார்த்தான். தீர்த்தக் கரையினிலே பாடல் வரிகள் அது. அதோடு அவன் பார்வையை ஈர்த்த இன்னொரு வரிகளும் இருந்தது. ‘தேங்க்ஸ். ப்ளிஸ் கால் மீ. வில் வெயிட் போர் யூ. ஐஸ்வர்யா’ என்று எழுதப்பட்டு போன் நம்பரும் எழுதப்பட்டிருந்தது.

‘டேய் டார்லிங், எப்போ வீட்டுக்கு வருவ. im waiting போர் யூ’ காரை தன் வீட்டின் முன் பார்க் செய்து விட்டு கீழ் இறங்கியவன் தனக்கு வந்த whatsapp msg படித்து விட்டு புன்னகைத்தான். ‘வந்துட்டேன். வெயிட் பண்ணு குளிச்சிட்டு சாப்டுட்டு வரேன் செல்லம்’ என்று reply செய்தது விட்டு வீட்டினுள் நுழைந்தான். பவித்ரா அங்கே அவனுக்காகவே காத்திருந்தவள் போல் “அஷ்வின் உன்கிட்ட ரொம்ப முக்கியமா பேசனும்டா” என்று படபடப்புடன் கூறினாள். “என்னாச்சுக்கா. ஏதாவது பிரச்சனையா?” அஷ்வின் புரியாமல் கேட்டான். “ஆமாடா. உனக்கும் ஐஷுவுக்கும் கல்யாணம் நடக்காது போல. அவ அண்ணா உன் மாமாவுக்கு கால் பண்ணிருந்தாரு” என்று அக்கா மிக கவலையுடன் அவனைப் பார்த்தாள். “என்ன சொன்னாங்க?” அஷ்வின் தெரிந்துக்கொள்ளும் ஆவலில் கேட்டான். “அவ வேற யாரையோ லவ் பண்றாளாம்டா. அவ விருப்படியே கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு இருக்கறதா சொன்னாங்க. போச்சு. நமக்கு இல்ல அவ, நமக்கு இல்ல” இந்த திருவிளையாடல் படத்துல வர்ற தருமி நாகேஷ் மாதிரியே பேசிய அக்காவைப் பார்த்து பொங்கி எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் அஷ்வின். “சரிக்கா விடு, அதுக்கு நாம என்ன பண்ண முடியும் சொல்லு. அவ தான் வேற ஒரு பையனை லவ் பண்றாளே” அஷ்வின் இப்படி சொன்னதும் பவித்ராவுக்கு கோபம்தான் வந்தது. “எல்லாம் உன்னாலதான்டா. அப்பவே அவளுக்கு உன்ன பிடிசிருக்குன்னு சொன்னேன். அதை நீ பொருட்படுத்திக்கல. இந்த ஆறு மாசமா நாயா பேயா கத்திட்டு இருக்கேன் அவள போய் பாரு, பேசு, பழகுன்னு. கொஞ்சமாச்சம் காதுல வாங்குனியா நீ” பவித்ரா பொரிந்து தள்ளினாள். “க்கா எனக்கு அந்த பொண்ணு மேல எந்த அபிப்ராயமும் இல்லை. நா என்ன பன்றது?” அஷ்வின் முகத்தை பாவமாக வைத்திருந்தான். “மண்ணாங்கட்டி. எனக்கு வர்ற கோபத்துக்கு உன்ன அப்படியே கழுத்த நெருச்சி கொல்லனும் போல இருக்கு. பேசாதடா. இனி காலம் பூரா இப்படியே தனியாவே கெட. நா கேட்கப்போறது இல்லை” பவித்ரா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். அக்காவின் தோள்களை பிடித்து தன் பக்கம் திருப்பிய அஷ்வின், “க்கா இங்க பாரு. அவ இல்லனா என்ன? உலகத்துல வேற பொண்ணே இல்லையா சொல்லு. நீ பாரு அவளுக்கு கல்யாணம் நடக்குற அதே முகூர்த்தத்துல உன் தம்பி கல்யாணமும் நடக்கும். இது சத்தியம்” அஷ்வின் இப்படி உறுதியாக கூறியதை கண்ட பவித்ராவுக்கு திகைப்பாக இருந்தது. இவன் என்ன இவ்வளோ உறுதியா சொல்லுறான். பொண்ணு கின்னு பார்த்துட்டானா? பவித்ரா அவனை ஆச்சர்யமா பார்த்தாள். “என்னக்கா அப்படி பார்க்கற? நா சொன்னது நடக்கும். நீ என்னை நம்பு. சரியா?” அஷ்வின் அப்படி சொன்னதும் “என்னடா? வேற பொண்ணு ஏதாவது பார்த்துட்டியா? அப்படி இருந்தா சொல்லிடுடா. சஸ்பென்ஸ் தாங்கல” பவித்ரா ஆர்வமாக கேட்டதும் “அது நாளைக்கு நானே அவளை பார்க்க உன்னை கூட்டிட்டு போறேன்க்கா. நம்ம வீட்டு மருமகளை நீதான் மொத பார்த்து ஓகே பண்ணனும்” என்று சிரித்துக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்தான் அவன்.

குளித்து உணவருந்திய பிறகு படுக்கையில் சாய்ந்தவன் தன் போனை எடுத்து அவளுக்கு கால் செய்தான். ஒரே ரிங்கில் சட்டென்று காலை அட்டென்ட் செய்தாள் அவள், “அட என்ன டக்குனு எடுத்துட்ட. வெயிட் பண்ணிட்டு இருந்தியா” அஷ்வின் கேட்க “ஆமா, உன்கூட பேச, காலைல இருந்து வெயிட் பண்றேன். நீ என்னடானா இவ்வளோ பிஸியா இருக்க. போ பேசாத” கோபமும் சிணுங்கலும் கொஞ்சலும் கலந்த தொனியில் அவள் பேசியது அவனுக்கு அவ்வளவு அழகாக தெரிந்தது. “என்னம்மா பண்ணறது. என் ஜாப் அப்படி. ஆனா உன்ன ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன். இன்னைக்கு நீ அட்மிட் ஆகிருந்த வார்ட்க்கு கொஞ்சம் வேலையா போயிருந்தேன். பழைய மெமரிஸ்லாம் வந்துச்சு” அஷ்வின் இப்படி கூறியதும் கோபத்தை மறந்து ஐஸ்வர்யா “ஆமாவா? செம்ம போ. அதான் இன்னைக்கு எனக்கு பொறை ஏறுனுச்சா சாப்பிடும் போது மொத” சிரித்தாள். “ம்ம்ம்ம் ஆமா. அங்கதானே ஒரு தேவதை படுத்திருந்தாள். அவ ஞாபகம் வந்துடுச்சு. எவ்வளோ அழகு தெரியுமா அவ?” அஷ்வின் சொன்னதும் அவளுக்கு வெட்கம் கலந்த சிரிப்பு. “அவ்வளோ ஒன்னும் அழகில்லையே அவ. அதுவும் அந்த சமயத்துல மேக் ஆப் லாம் இல்லாம ரொம்ப டல்லா தான் இருந்திருப்பா” ஐஸ்வர்யா சொன்னதற்கு உடனே அவன் “அவ மேலான என் பார்வை அவளை பார்த்த சந்தோஷத்துல வர்றதுடா. அவ உருவம் இருந்தா போதும். என் சந்தோசம் என் கண்ணு முன்னாடி அழகா எனக்கு தெரியும் அவளை பார்த்த ஒரு கணம் என் இமைகளும் செயலற்றுதான் போச்சு. அவளை ரொம்ப பிடிக்கும் என்பதால் ரசிச்சிட்டுகிட்டே இருக்கேன். அதையும் தாண்டி கூர்ந்து பார்த்தாலும் சத்தியமா எந்த குறையும் இல்லை அவளிடம். பேரழகிதான் அவ” என்று அவன் சொல்ல சொல்ல தன்னை மறந்துதான் போனாள் அவள். இப்படியே சிறிது நேரம் காதலுடன் உடையாடல்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கையில் திடீரென்று ஐஸ்வர்யா நாளை நடக்க விருக்கும் முக்கிய சந்திப்பைப் பற்றி பேசினாள். “நாளைக்கு எல்லாம் சரியா பேசிடுவலடா. ஏதும் சொதப்பிட மாட்டியே” அவள் குரலில் ஒரு கலக்கம். “கவலைப்படாத. கண்டிப்பா உன் வீட்டுல எல்லார்ருக்கும் என்னை பிடிக்கும். நான் எல்லாம் சரியா பேசறேன்டா செல்லம்” அவன் சமாதானம் செய்தான். “இல்லடா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. அண்ணாவுக்கு விருப்பம் இல்லாததை போல இருக்கு. அவரோட friend ஓட தம்பிக்குதான் ஆரம்பத்துல கேட்டாங்க. நா முடியாதுன்னு சொல்லிட்டு இப்ப நம்ம லவ் மேட்டர் சொன்னதும் உடனே உன்னை பார்க்கணும்னு சொன்னது தான் ஒரு பக்கம் பயமா இருக்கு. நீ வந்து பேசும் போது உன்ன ஏதாவது சொல்லிடுவாங்களோனு” ஐஸ்வர்யா பயந்துதான் இருந்தாள். “என்ன சொல்லபோராங்க. முடியாதுன்னு சொல்லிட்டா உன்னை தூக்கிட்டு வந்துடுவேன் அவ்வளோதான்” அஷ்வின் சிரித்தான். “நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ என்ன காமெடி பன்ற லூசு” அவள் கோவமானாள். “கோவிச்சுக்காத டார்லிங். நாளைக்கு உன் அண்ணா நல்லாத்தான் பேசுவார் பாரேன். எனக்கு உன்ன நினைச்சாதான் பயமா இருக்கு. ஏதாவது மூன்றாம் உலக போர் வருமோனு” என்று அவன் தயங்கினான். காரணம் இல்லாமல் இல்லை. இன்னும் தான்தான் அவளுக்கு பார்க்கப்பட்ட வரன் என்ற விஷயத்தை அவன் அவளிடம் கூறாமலே இருந்தான். இந்த ஆறு மாதங்களில் ஐஸ்வர்யாவிற்கு அறிமுகமான டாக்டராகவே பழகி காதல் வயப்பட்டு இருவருமே உயிராக நேசித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவள் காதலிக்கும் அவளது மனதிற்கு பிடித்த காதலனாகத்தான் அவளைத் திருமணம் செய்துக் கொள்ள விரும்பினான். “நான் என்ன பண்ண போறேன் உன்ன. என்ன ஆனாலும் சரி நான் உன்கூட தான் வாழ்வேன். இதுல உறுதியா இருக்கேன்” அவள் ஆணித்தரமாக கூறினாள். “இதே வார்த்தையை நீ நாளைக்கும் சொல்வியா ஐஷு?” அஷ்வின் கேட்க, “கடைசி மூச்சு என் உடல்ல இருக்கற வரை சொல்லுவேன் அஷ்வின் என் வாழ்க்கை உன்னோடுதான் ” காதல் அவள் வார்த்தையில் கசிந்துருகியது.

தொடரும்

மேகா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா போகுது கதை ....தொடருங்கள் புலிக்குரல்.....!  😁

Link to comment
Share on other sites

பாகம் 6

காரை அந்த பிரமாண்ட உணவு விடுதியின் முன் நிறுத்திய அஷ்வின் பக்கத்தில் அமர்ந்திருந்த வாசுவை பார்த்து ஏதோ சைகை செய்தான். அவனும் புரிந்துக் கொண்டவனாய் பின்னால் திரும்பி “பவிம்மா, வந்தாச்சு. வா இறங்கி உள்ள போகலாம். அஷ்வின் காரை பார்கிங்ல போட்டுட்டு வரட்டும்” என்று கூற அவள் அஷ்வினை பார்த்தாள். “ஏன்டா அந்த பொண்ணு வந்திருக்குமா இந்நேரம்?” என்று அவனை பார்த்து கேட்டாள். “இன்னும் வரலக்கா. வந்துடுவா கொஞ்ச நேரத்துல. நா கூட்டிட்டு வரேன் உள்ள. on தெ வே அவ. நீங்க மொத உள்ள போங்க. reserve பண்ணிருக்கேன் டேபிள். என் பேரை சொல்லுங்க. உங்க சீட் காட்டுவாங்க. வந்திடுறேன்” என்று அவன் கூறியதும் காரிலிருந்து இறங்கி தன் கணவனோடு அந்த restaurantக்குள் நுழைந்தாள். அங்கு அவர்களை வரவேற்ற waitressயிடம் அஷ்வின் என்று பெயர் சொன்னதும் உடனே அவர்களுக்காக தயாராய் இருந்த மேசையை அவர் காட்ட அங்கு சென்று அமர்ந்தனர். தன் மனைவியின் முகம் கலை இழந்து காணப்பட்டதை கண்ட வாசு அவளைப் பார்த்து “என்னாச்சு பவி. ஏன் ஒரு மாதிரியா இருக்க? முகமே சரி இல்ல. கொஞ்சம் சிரியேன்” என்று கேட்டான். “ம்ம்ம்ம் ஒன்னும் இல்லைங்க. நல்லாத்தான் இருக்கேன்” என்று ஏதோ ஒப்புக்கு சிரித்து வைத்தாள் பவித்ரா. “அட என்கிட்ட சொல்ல மாட்டியா? ஏன் சோகமா இருக்க? அஷ்வின் கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லையா?” இப்படி வாசு கேட்டதும், “என்ன பேசறீங்க. இதுக்குதானே நா காத்திருந்தேன். அவன் சந்தோஷம்தானே முக்கியம்” என்று அவள் கூற “அப்போ உனக்கு இதுல சந்தோசம் இல்லையா?” வாசு திகைத்தான். “அப்படின்னு இல்லைங்க. யார விரும்புரான்னு தெரில. திடீர்னு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்னு இங்க கூட்டிட்டு வந்திருக்கான். யார் எவர்னு ஒன்னும் தெரில நமக்கு. நம்ம குடும்பத்துக்கு சரியா வருமானம் தெரில” பவித்ரா தயங்கினாள். “யாரா இருந்தா என்னம்மா. அத தெரிஞ்சிக்க தானே இங்க வந்திருக்கோம். இதுக்கப்பரம் பழகி தெரிஞ்சிக்க வேண்டியதுதான். அஷ்வின் மேல நம்பிக்கை வை. கண்டிப்பா அவன் நமகேத்த பொண்ணாதான் செலக்ட் பண்ணிருப்பான். மனச போட்டு குழப்பிக்காத” என்று வாசு கூறியதும் “அதுக்கில்லைங்க. எனக்கு அந்த பொண்ணு ஐஸ்வர்யாவைத்தான் நம்ம அஷ்வின்க்கு… “ என்று சொல்லி முடிப்பதற்குள், “வாசு!” என்று அங்கு இன்னொரு குரல் கேட்டு திரும்பினார்கள். ஆம் அங்கு ஐஸ்வர்யாவின் அண்ணன் சிவாதான் அவனை அழைத்தது. கூடவே அவன் மனைவி தீபாவும் தங்கை ஐஸ்வர்யாவும் நின்றிருந்தனர். அவர்கள் நிச்சயம் இந்த சந்திப்பை எதிர்ப்பார்த்திருக்க வில்லை. இவர்களைப் பார்த்ததும் எல்லாரும் ஒரு மேசையிலேயே அமர்ந்தனர். “என்னடா இங்க? surprise ah இருக்கு?” சிவாதான் கேட்டான். “அது சும்மா ஒரு முக்கியமான விஷயமா தான் வந்தோம்” வாசு சமாளித்தான். “நாங்களும் முக்கியமான வேலையாதான் வந்தோம். ஐஷுவுக்கு பார்த்திருக்கற பையனை மீட் பண்ண தான் வந்தோம். நீங்களும் இங்க இருக்கறது நல்லதா போச்சு. அவங்க வீட்டுல இருந்து வர்றாங்க. நீயும் இருந்தா நல்லாருக்கும்” சிவா வாசுவிடம் கூற அவன் திரு திருவென்று முழித்தான். பவித்ராவுக்கும் என்ன சொல்லறதுன்னு தெரில. ஐயோ அஷ்வின் வேற அந்த பொண்ண கூட்டிட்டு வருவானே. இவங்கள வச்சிக்கிட்டு அந்த பொண்ணுகிட்ட என்னத்த பேசறது என்று புரியாமல் தவித்தாள் பவித்ரா. “பவி தம்பிக்கு பார்த்த பொண்ணு கூட இங்க இப்ப மீட் பண்ண வர்றதா இருக்கா. அவன் கூடிட்டுதான் வர போயிருக்கான். அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்” வாசு சொன்னதும் “ஆமாவா. ரொம்ப நல்ல விஷயம்ப்பா. நா கூட ரொம்ப வருத்தப்பட்டேன். உனக்கு வாக்கு கொடுத்துட்டு திடீர்னு வேணாம்னு சொல்லரோமேனு. அதான் நீருல கூட வந்து பார்த்து பேசாம போன் லையே சொல்லிட்டேன். தப்பா எடுத்துக்காத வாசு. ஐஷு சந்தோஷம்தான் முக்கியம்னு இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டியதா போச்சு” என்று வருத்தமாகத்தான் சொன்னான் சிவா. உடனே பவித்ரா இடைமறித்து ”எங்களுக்கும் எங்க தம்பி சந்தோஷம்தான் முக்கியம். கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருந்தான். உங்க தங்கச்சி போட்டோ காட்டி கூட அவனுக்கு எந்த அபிப்ராயமும் இல்லன்னு சொன்னான். ஆனா இந்த பொண்ண அவனுக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. அதன் ஆச்சர்யமே. ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொன்னான். நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்” தங்கள் கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் கூறினாள். என்னதான் ஐஸ்வர்யா தங்கள் வீட்டு மருமகளா வரமுடிலயேனு உள்ளுக்குள்ள வருத்தம் இருந்தாலும் அதை அவள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அப்போது ஐஸ்வர்யா மேல் சிறிது கோவம் வேறு அவளுக்கு. என் தம்பி மாதிரி ஒரு நல்ல பையன் இவளுக்கு கிடைப்பானா? பார்க்கவும் நல்லா அழகா, நல்ல படிசிருக்கான், நல்ல வேலை, அன்பானவன். இதைவிட என்ன வேண்டும்? எந்த கொரங்கு பயல் கிட்ட மாட்டிகிட்டான்னு தெரில. மனதிலேயே கருவினாள். “எங்க ஐஷு விரும்பர பையனும் சும்மா இல்ல. அவரும் டாக்டர் தான். பெரிய surgeon. நல்ல குடும்பம். ஐஷுவ ரொம்ப நல்லா பார்த்துக்குவாருனு நம்பிக்கை இருக்கு” என்று தீபா பதிலுக்கு ரெண்டு பிட்டு போட்டு விட்டாள். இப்படியே யாருனே தெரியாத பொண்ணையும் மாப்பிளையையும் அவர்கள் மாறி மாறி புகழ்ந்து கொண்டிருக்கையில் அஷ்வின் அங்கு வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும் ஐஷு எழுந்து சென்று அவனது கையைப் பற்றினாள்.  “ஏன் இவ்வளோ லேட். இன்னைக்கும் லேட்டாதான் வருவீங்களா” என்று யாரும் பார்க்காத வண்ணம் கடிந்து கொண்டவள் பின் திரும்பி அங்கு அமர்ந்து அவர்கள் இருவரையும் அதிர்ச்சியோடு பார்த்தவர்களிடம் “அண்ணா, இவர்தான் நா சொன்னேன்ல. அஷ்வின்” என்று ஆவலுடன் கூறினாள்.

வாசுவும் பவித்ராவும் சிவா தீபாவுடன் காரில் கிளம்பி செல்ல, ஐஷு அஷ்வினுடன் தனியே காரில் ஏறி கொண்டாள். காரில் ஒன்றுமே பேசாமல் வந்த ஐஷுவைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. தன் காரின் cd பிளேயரை ஆன் செய்தான். ‘யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்
வந்து வந்து நிக்கிற…என்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து உன்னில் சிக்க வைக்கிற…’ பாடல் ஒலித்தது. அவளோடு எப்போதும் காரில் செல்லும் போது இந்த பாடல் ஒளியேறினால் மட்டும் ஆசையாய் அவன் கைகளைப்பிடித்து தோளில் சாய்ந்துக் கொள்பவள் அன்று ஏனோ அமைதியாக தன் பார்வையை இவன் பக்கம் திருப்பாமலேயே கார் ஜன்னல் பக்கமே வைத்து வெளியே வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தாள். கண்மட்டும் தான் வேடிக்கை பார்த்ததே தவிர அவள் மனம் வேறு எதையோ யோசித்தது. யோசித்தாள் என்று சொல்வதை விட அவன் மேல் கோபத்தின் உச்சத்தில் இருந்தாள் என்பதே சரி. அவனை அறிமுகம் செய்து வைத்த போது மொத்த குடும்பமே அதிர்ச்சியாய் அவளை பார்த்த போது அவளுக்கு சத்தியமாய் எதுவும் புரியவில்லை. அவர்களையும் அஷ்வினையும் மாறி மாறி பார்த்தாள். “அஷ்வின்! என்னடா இது? நீ ஐஷுவை பார்க்கவா எங்களை கூட்டி வந்த?” பவித்ரா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்துக் கேட்டபோது ஐஷுவும் திகைத்துப்போய் தான் நின்றாள். “க்கா, நா சொன்ன பொண்ணு ஐஸ்வர்யா தான். உங்களுக்கு எல்லாம் ஒரு surprise ஆ இருக்கட்டுமேனுதான்” என்று அஷ்வின் கூற பவித்ராவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அதோடு அங்கிருந்த அனைவரின் முகத்திலும் குதூகலம் தான். ஐஸ்வர்யாவுக்கு எல்லாம் அரையும் குறையுமாய் புரிய ஆரம்பித்தது. அஷ்வினின் போட்டோவை அவள் அண்ணி அவளிடம் கொடுத்த போது அதை பார்க்க மறுத்ததால் அவளுக்கு அஷ்வின் தான் அவளுக்காகப் பார்க்கப்பட்ட வரன் என்பது தெரியாமலேயே போனது. ஆனால் தீபாவிற்கும் சிவாவிற்கும் அவனை நன்றாக அடையாளம் தெரிந்தது. அதனால்தான் அஷ்வினை அவள் அறிமுகம் செய்து வைத்தபோது அவர்களும் திகைத்துப்போய் நின்றனர். அங்கு எந்த ஒரு குழப்பமும் வந்து விட கூடாதே ஐஸ்வர்யாவினால் என்று அஷ்வினின் மனதில் உள்ளூர ஒரு பயம் இருந்தாலும் அப்படி ஏதாவது அவள் கோவித்துக் கொண்டு ரகளை செய்தாலும் எப்படியாவது அதை சமாளிக்க தயாராகவே இருந்தான். ஆனால் அவன் எதிர்ப்பார்த்தது போல அங்கு எந்த குழப்பமும் நிகழவில்லை. அந்த சந்திப்பு மிக சுமூகமாகவும் மனநிரைவோடுமே நடந்தது. அனைவருமே எதிர்ப்பார்க்காத ஒரு இன்ப அதிர்ச்சியாய் அது இருந்தது. ஐஸ்வர்யா தன் முகத்தில் எந்த மாற்றத்தையும் காட்டிக்கொள்ளாமல், அமைதியாக புன்னகையுடனேயே இருந்தாள். ஆனால் மனதில் அவ்வளவு ஆத்திரம் ஏமாற்றம். இப்படி உண்மையை மறைத்து விட்டானே என்று. அதையெல்லாம் அங்கு வெளிப்படுத்தவில்லை அவள். ஆனால் அஷ்வினுக்கு அவள் என்ன நினைக்கிறாள் என்பது நன்றாகவே புரிந்தது. ஒரு வகையில் ஐஷுவின் மேல் அவனுக்கு இன்னும் காதல் கூடியது என்றே சொல்ல வேண்டும். அவனை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவள் கொண்டு நிறுத்தாமல் புரிந்து நடந்துக் கொண்டாள். வெகு நேரம் ஆகியும் ஒன்றுமே பேசாமல் வந்த ஐஷுவை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்தவன் நேராக ஒரு பூங்காவில் காரை நிறுத்தினான். “இறங்கி வா மா. உன்கூட பேசணும் கொஞ்சம்” என்று கார் என்ஜினை ஆப் செய்து விட்டு காரிலிருந்து இறங்கினான். அவளும் மறு வார்த்தை ஏதும் கூறாமல் இறங்கி நடந்தாள். அவளை பின்தொடர்ந்து அவனும் நடந்தான். சிறிது தூரம் சென்றதும் அவளது கையைப் பிடித்து நிறுத்தினான். கோவத்தில் அவன் கைகளை உதறினாள் அவள். அடடா மேடம் ரொம்ப கோவமா இருக்காங்களே. சமாதானம் செய்யணுமே இப்ப என்று சிறிது நொந்துக் கொண்டான். அவன் மேல் தான் தவறு. ஆறு மாதத்தில் ஒரு சந்தர்ப்பம் கூட அவன் உருவாக்கிக்கொள்ளவில்லை தான் யார் என்ற உண்மையை சொல்ல. இப்படி ஒரு நாளுக்காகத்தான் காத்திருந்தான். எல்லார் முன்னிலையிலும் அவனை அவளுக்கு தெரியப்படுத்த. “ஐஷு ப்ளிஸ் டி, என் மேல தப்புதான். உன்கிட்ட சொல்லாம இருந்ததுக்கு. என்ன திட்டு, சண்ட போடு, இல்ல ரெண்டு அடி கொடுத்தாலும் வாங்கிக்கிறேன். பட் இப்படி பேசாம மூஞ்சை தூக்கி வச்சிக்காத” அஷ்வின் அவள் முன்னே நின்று கெஞ்சும் தொனியில் பேசினான். அவள் முகத்தை திருப்பி கொண்டு தான் நின்றாள். “சத்தியமா உன்ன மொத மொத ஹாஸ்பிட்டல் ல அட்மிட் பண்ணுன போது நீதான் என் அக்கா சொன்ன ஐஸ்வர்யானு தெரியாது.எனக்கு அப்பவே உன்ன பிடிச்சிருந்துச்சுடி. உன்ன தூக்கும் போது என் நெஞ்சுல சாய்ஞ்ச அப்பவே என் மனசோட ஒட்டிட்டடி. உன்ன நீ யாருனே தெரியாமதான் உன்ன பிடிச்சது” அஷ்வின் மறுபடியும் அவள் கைகளைப்பிடித்தான். “கைய விடு அஷ்வின். எனக்கு ஒன்னே ஒண்ணுதான் தெரியனும் இவ்வளவு நாள்ல ஒரு தடவை கூட என்கிட்ட நீ யாருன்னு உண்மையை சொல்ல தோணலல. இத நேத்தாவது நீ சொல்லிருக்கலாம்ல. இன்னைக்கு என்னைய முட்டாள் ஆக்கிட்ட எல்லார் முன்னுக்கும். எதிர்ப்பார்க்கல உன்கிட்ட இதை” அவள் படபடவென்று கோபம் தெறிக்க பேசி தன கையை உதறினாள். “ஐஷு எல்லாருக்கும் ஒரு surprise கொடுக்கத்தான் அப்படி செஞ்சேன். உன்னை ஏமாத்தனும்னு நினைக்கல. இப்படிலாம் பெரிய வார்த்தை சொல்லாத. கோவத்துல வார்த்தையை விடற நீ” அஷ்வின் வருத்தப்பட்டு பேசினான். “ம்ம்ம்ம் இப்போ என் மேலதான் தப்பு. நான்தான் வார்த்தையை விடறேன். ஆனா எதனால பேசறேன்னு மட்டும் உனக்கு தெரியாதுல. உன்ன நம்பினேன் அஷ்வின். என்கிட்ட எதையும் மறைக்காம சொல்லுவன்னு நம்பினேன். ஆனா இவ்வளோ பெரிய உண்மையை மறைச்சிட்ட. அதான்டா தாங்க முடில. என்னைய விடு தனியா. என்கூட பேசவே பேசாத. உன்ன பார்க்கவே எரிச்சலா இருக்கு. ப்ளிஸ் லிவ் மீ alone” ஐஸ்வர்யா இந்த அளவுக்கு அவனை வெறுத்துப்போய் பேசுவாள் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லைதான். மனசு உண்மையிலேயே வலித்தது அவனுக்கு. அதற்க்கு மேல் ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்தான்.

அரைமணி நேரத்தில் அவன் நிறுத்தியிருந்த கார் இருக்கும் இடம் வந்து சேர்ந்தாள் அவள். அவன் கார் கதவின் ஓரத்தில் சாய்ந்துக் கொண்டு எதையோ பார்த்துக்கொண்டிருந்தான். முகம் கலையிழந்திருந்தது. நேராக அவனிடம் வந்தவள், தன் ஹன்ட்பேக்கிலேயே அவனை அடித்தாள். அதைத்தடுத்தான் அவன் கைகளை கொண்டு மறைத்து. “ஏன்டா, நா கோவமா இருந்தா அப்படியே விட்டுட்டு வந்துடுவியா? உன்னால கொஞ்ச நேரம் கூட அங்க நின்னு என்னை சமாதானம் செய்ய முடியலல” அவள் கோவத்தில் எரிந்து விழுந்தாள். அவளை அப்படி பார்த்ததும் குபீர் என்று சிரிப்பு வந்தது. இருப்பினும் அடக்கிக் கொண்டவன், “நீதான் உன்ன தனியா விட சொன்ன. நீ சொன்னததானே செஞ்சேன். இதுக்கும் கோவப்படற” அவன் கேட்டான். “ஆமா நீ செஞ்சது அப்படி. உன்மேல கோவப்பட கூட எனக்கு உரிமை இல்லையாடா? அவனவன் பொண்டாட்டி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கறான். உனக்கு ரொம்ப திமிர். சமாதனம் கூட பண்ண மாட்டுற. ஐ ஹேட் யூ, ஐ ஹேட் யூ, ஐ ஹேட் யூ!” என்று மறுபடியும் ஹன்ட்பேக்கினால் அவனை அடிக்க தொடங்கினாள். அதை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து கீழே போட்டவன் அவள் கைகளைப்பிடித்து தன் வசம் இழுத்தான். “விடு அஷ்வின். ஐ வில் கில் யூ” கத்தினாள் அவள். “கொல்லுனுதான் சொல்றேன்” என்று சிரித்துக்கொண்டே அவளது ஒரு கையை பிடித்து இழுத்தவன் இன்னொரு கையால் அவளது இடையை பிடித்தான். அவன் நெஞ்சோடு ஒரு மோது மோதியவள், சட்டென்று அவன் சட்டை காலரை இறுக்கமாகப் பிடித்தாள். அப்படியே அதிர்ச்சியில் அவனைப் பார்த்தாள். அவனுக்கு மிக அருகில். முதல் முறையாக. அவன் மூச்சுக்காற்றின் ஸ்பரிசத்தை அவளால் உணர முடியும் நெருக்கத்தில். மாவீரனையும் கட்டிபோடும் ஒரே ஆயுதம் பெண்ணின் விழிகள்தான்போல. அவளது அந்த காந்த கண்களால் மின்சாரத்தை அவன் உடல் முழுவதும் பாய்ச்சிய உணர்வு அவனுக்குள். அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “கடைசி மூச்சு வரை கூடவே இருப்பேன்னு சொன்னியேடி. இப்ப போறேன்னு சொல்லுற” என்று அவளிடம் கேட்க, “அதான் இருக்கமா பிடிச்சிருக்கியே விடாம. எங்க போறதாம்” நாணத்தோடு அவள் கூறினாள். “கத்தியின்றி ரத்தமின்றி, வலிகளைத் தாண்டிய ஒரு மரணம். மீண்டும் மீண்டும் மரணிப்பேன், உயிர்த்து எழும் சக்தியை உன் செவ்விதழ் கொடுக்குமெனில்… பிழைக்க செய்வாயா என்னை இப்பொழுதே கொன்று” கவிதை கூட வந்ததே அவனுக்கு அவள் இதழை முத்தமிடும் அந்த தருணத்திலும்,  மழை வந்து அவர்களை தழுவியது கூட அறியாமல்.

தொடரும்

மேகா

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நெஞ்சாத்தியே (7)

பாகம் 7

மணி இரவு 11 ஆகிவிட்டது. கால் பண்ணினான். நல்ல வேளை இன்னும் அவ தூங்கல. கால் அட்டென்ட் பண்ணினாள். “என்ன இந்த டைம் கால் பண்ணிருகிங்க?” என்று வினவினாள். “என்ன பன்ற? வீட்டுல எல்லாரும் முழிச்சிருக்காங்களா?” என்று கேட்டதும், “இல்ல தூங்கிட்டாங்க. நானும் இன்னும் கொஞ்ச நேரத்துல தூங்கிடுவேன்” என்று அவள் சொன்னதும் செம்ம ஹப்பி அவனுக்கு. அப்பாடா இன்னைக்கு ப்ளான் சக்சஸ்தான்னு மனசுல நினைச்சுக்கிட்டான். நிச்சயதார்த்ததை நாளைக்கு வச்சிக்கிட்டு இந்நேரம் அவளைப் பார்க்க வந்திருக்கிறான் யாருக்கும் தெரியாமல். “சரி இப்போ கிளம்பி வீட்டுக்கு வெளியே வா. சத்தம் போடாம” என்று அஷ்வின் சொன்னதும், “ஹேய் இந்த டைம்ல ஏன் வீட்டுக்கு வெளியே வரணும்? நாளைக்கு நம்ம engagement. என்ன விளையாடுறியா?” என்று மறுகேள்வி அவளிடம் இருந்து. “லூசு, சும்மா தொட்டதுக்கெல்லாம் கேள்வி கேட்காம ஒழுங்கா சொன்னதை செய். நான் வெளியேதான் வெய்ட் பண்றேன்” என்று சொன்னதும் “நீ என்ன பன்ற என் வீட்டுக்கு வெளியே? கிளம்பிடு. வீட்டுல பார்த்துட போறாங்க. பிரச்சனை ஆகிட போகுது” என்று படபடப்புடன் பேசினாள். “அதெல்லாம் பார்க்க மாட்டாங்க, நீ சத்தம் போட்டு காரியத்தை கெடுக்காத. சொன்னதை செய். அவ்வளோதான்” என்று கூறிவிட்டு காலை கட் பண்ணினான். அவள் வீட்டுக்கு சற்று தள்ளிதான் காரை நிறுத்திருந்தான். ஒரு பத்து நிமிஷத்துல தயங்கி தயங்கி வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.

“என்ன இந்த நேரத்துல வந்திருக்கிங்க?” அவனைப் பார்த்து ஒன்றும் புரியாதவளாய் கேட்டாள்.

“ம்ம்ம்ம் என்ன கட்டிக்க போறவளுக்கு குட் நைட் சொல்ல வந்தேன்” என்று அவன் சொன்னதும்,

“என்ன நக்கலா?” என்று அவனைப் பார்த்து முறைத்தாள்.

“பின்ன என்ன, சும்மா கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க? டைம் இல்ல. வா போலாம்” என்று அவள் கையைப் பற்றினான்.

“எங்க கூட்டிட்டு போறிங்க? என்னைய காணோம்னா தேடுவாங்க” அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“அதெல்லாம் சொல்ல முடியாது. உன்னால வர முடியுமா முடியாதா?” என்று அவன் கேட்டதும்.

“முடியாது போடா” என்றாள் அலட்சியமாக.

“என்னது டா வா? உனக்கு திமிர் ஜாஸ்த்தியா ஆச்சுடி. உன்ன இப்படிலாம் கூப்டா வர மாட்ட. என்ன செய்யனும்னு தெரியும்” என்று சொன்னதும், “உன்னால முடிஞ்சத செஞ்சிக்கோ. நான் போறேன்” என்று திரும்பி நடக்க முற்பட்டவளை இழுத்து அப்படியே தூக்கினான் அவன் கைகளால்.

“டேய் விடு. என்ன பன்ற நீ” என்று தன் கைகளால் அவன் தோள்களை சுற்றி பிடித்துக் கொண்டாள் பயத்தில்.

“டோன்ட் worry. கீழே போட்டுட மாட்டேன்” என்று சிரித்துக் கொண்டே அவளை அவன் கார் வரை தூக்கி கொண்டே சென்றான். “யாராவது பார்த்துட போறாங்கடா கீழ இறக்கி விடு ப்ளிஸ்” கெஞ்சினாள் ஐஸ்வர்யா. அவன் எதையுமே காதில் வாங்காமல் அவளை அணைத்தவாரே தூக்கிக்கொண்டு தன் கார் அருகில் சென்று கதவைத்திறந்து அதில் முன்சீட்டில் அவளை அமர வைத்தான்.

காரில் எங்கே போகிறோம்னு கேட்டுக் கொண்டே வந்தாள். ஆனால் அவன் வாயைத் திறக்கவே இல்லை. இந்த பொண்ணுங்களுக்கெல்லாம் எல்லாத்தையும் உடனே தெரிஞ்சிக்கணும். இல்லனா தலை சுக்கு நூறா வெடிச்சிடும் போல. கொஞ்சம் கூட பொறுமையே இல்லன்னு மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டு காரை ஓட்டினான். “அஷ்வின் நா பேசறது காதுல விழுதா இல்லையா? என்ன எங்கதான் கூட்டிட்டு போற சொல்லு” ஐஷு மறுபடியும் மறுபடியும் கேட்க பொறுமை இழந்தவனாய் ஒரு கையால் ஸ்டேரிங் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் கார் பின் சீட்டில் இருந்த துணியை எடுத்தான். “இப்ப நீ பேசாம வர போறியா இல்ல இந்த துணியை உன் வாயில சொருகி கட்டட்டுமா?” அஷ்வின் அதட்டியதும் மௌனமானாள் ஐஷு. அவனை மனதில் கருவிக் கொண்டே காரில் cd பிளேயரை ஆன் செய்தாள். வழக்கம் போல அதே பாடல் ஒலித்தது.

‘வாழ்க்க போகும் தூரம் நீயும் நானும் போகவேணும்
எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோ…ன்றுதே’

இந்த வரிகளை கேட்டதும் மெய்மறந்து தன் கரம் பற்ற போகும் தன் அன்பிற்குரியவனின் தோள்களில் சாய்ந்து கொண்டு அவனது ஒரு கை விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டாள். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையோடு தன் தோளில் சாய்ந்திருந்தவளின் நெற்றி பொட்டில் ஒரு மெல்லிய முத்தம் கொடுத்தவனை நிமிர்ந்துப் பார்த்தாள். “என்ன?” என்று தன் தலை அசைத்து கேட்டவாறு காரை செலுத்தினான். “இல்ல கேட்டா திட்டுவ. பரவால” என்று தன் முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளைப் பார்த்தால் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. “இன்னும் கொஞ்ச தூரம் தான் பொறுமையா இரு சரியா?” என்று அவள் கையைப் பிடித்தான் அவன். சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தியவன் ஐஷுவின் கண்களை கட்டினான். சரி அவன் ஏதோ ஒரு ப்ளான் ஓடு இருக்கிறான் என்று ஐஷுவிற்கு புரிந்தது. ஆனா என்ன செய்ய போகிறான் என்ற ஆவல் மட்டும் தலைத்தூக்கியது.

 

“இன்னும் கொஞ்ச தூரம் தான் பொறுத்துக்கடி…” என்றவன் காரை மறுபடியும் ஸ்டார்ட் பண்ணினான். ஒரு பத்து நிமிடங்களில் அவர்கள் வந்தடைய வேண்டிய இடத்தை வந்தடைந்தனர். தன் கண்கட்டை அவிழ்க்க சென்றவளின் கையை பிடித்தவன் “இப்ப வேணாம் ஐஷு. இன்னும் கொஞ்ச தூரம் நடந்து செல்லனும். நானே அவிழ்த்து விடறேன்” என்றவன் காரில் இருந்து இறங்கி ஐஷு பக்கமிருந்த கார் கதவை திறந்து விட்டான். தட்டு தடுமாறி எழுந்தவள் அவன் தோளை பற்றினாள். “அஷ்வின் இப்படி கண்ண கட்டிக்கிட்டு எப்படி நடக்கறதாம்? ஏன்டா என்ன இப்படி கொடும படுத்துற?” செல்லமாக கடிந்துக் கொண்டாள். “கொடுமை படுத்தல. உன்ன என் கைகள்ல தாங்கறேன். இதுகூட தெரிலையா என் ராணிக்கு” என்றவன் அவளை தன் கைகளில் ஏந்தினான். அவளது முத்துப் பற்கள் அந்த இரவிலும் பளிச்சென்று தெரிந்தது. கோபமாக இருந்தவளின் இதழ் விரிந்து மெல்லிய சிரிப்பொலி அந்த இரவின் நிசப்தத்தை கலைத்தது.

சிறிது தூர நடை பயணத்திற்கு பிறகு அவளை கீழே இறக்கி விட்டான். அவளுக்கும் எங்கு வந்திருக்கிறோம் என்றும் தெரியவில்லை. அவள் கைகளைப்பிடித்தவன் “கவனமா கால் எடுத்து வைத்து ஏறு ஐஷு. என்னை பிடிச்சிக்கோ. கவனம்” என்றான். அவளும் மிக கவனமாகவே கால் வைத்து ஏறினாள். பின் அவளை பிடித்து அமர வைத்தான். ஏதோ படகில் ஏறியது போன்ற உணர்வு அவளுக்கு. ஆம் அவளை அழைத்துக் கொண்டு அந்த ஏரிக்கு வந்திருந்தான் அவன். ஒரு படகை வாடகைக்கு எடுத்திருந்தான் முன்கூட்டியே. அதை event planner மூலமாக ஏற்பாடு செய்ந்திருந்தான். அதில் தான் இப்போது அவளை அழைத்துக்கொண்டு செல்கிறான். அவனே படகை செலுத்தினான். அந்த ஏரியின் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும். படகை நிறுத்தியவன் இப்போது தன் எதிரே இருந்த ஐஷுவின் கைகளை பிடித்தான். “அஷ்வின் எங்கடா கூட்டிட்டு வந்திருக்க?” ஐஷு ஆவலுடன் கேட்க அவளது கண்கட்டை அவிழ்த்து விட்டான். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு மின்மினி பூச்சி அவளது கையில் அமர்ந்தது. “என்ன இது?” என்று உற்று நோக்கியவள் கண்கள் அகல விரிந்தது. சுற்றிலும் பார்த்து அதிசயித்துப் போனாள். மின்மினி கூட்டத்திற்கு நடுவில் அவள். அங்கு ஒரு தேவதை போல அவன் கண்களுக்கு தெரிந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவள் துள்ளி எழுந்து சுற்றி சுற்றி பார்த்தாள்… ஆம் மின்மினி பூச்சிகள் அந்த ஏரி முழுவதும். அங்கிருந்த மரஞ்செடி கொடிகளிலெல்லாம் மின்மினி பூச்சிகளின் ஒளியால் பிரகாசித்தன. இதற்க்கு முன் அவள் இதை எல்லாம் அவள் வாழ்நாளில் பார்த்திராத ஒன்றாக இருந்தது. இன்று ஏதோ புது உலகத்தில் அவனுடன் அவள் இருப்பதை போன்றதொரு உணர்வு. “என்னால நம்பவே முடியல அஷ்வின். எவ்வளோ அழகா இருக்கு இந்த இடம். இதெல்லாம் பார்க்க எனக்கு அவ்வளோ ஹேப்பியா இருக்குடா. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு… இந்த மின்மினிகள் எல்லாம் இந்த இடத்தையே அவ்வளோ அழகா காட்டுது. ரெண்டு கண்ணு பத்தல எனக்கு” அவள் சந்தோஷத்தில் அவளையே மறந்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் எதிர்ப்பாராத தருணத்தில் “ஐஷு” என்று அழைத்ததும் அவள் அவனை பார்த்தாள். மின்மினி வெளிச்சத்தில் அவள் முகம் ஜொலித்தது. “ ஐஷு, வில் யூ மேரி மீ” என்று அவள் முன்னே கையில் ஒரு மோதிரத்தோடு நின்றிருந்தான். அவளுக்கு வார்த்தை வர வில்லை. கண்களில் கண்ணீர்தான் வந்தது. அவனை கட்டி பிடித்துகொண்டாள். தன் நெஞ்சோடு அணைத்தவன் அவள் நெற்றியில் ஒற்றை முத்தமிட அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கன்னத்தை தன் கைகளில் ஏந்தியவனாய் தன் முகத்தை அவள் அருகில் கொண்டு சென்றவன். “இனி நான் இருக்கற வரை உன் முகத்துல சிரிப்பை மட்டும்தான் பார்க்கணும் ஐஷு. சந்தோஷத்துல கூட நீ அழ கூடாது என்னைக்கும்” என்றவாறு அவளது கண்களில் முத்தமிட்டான். பின் அவளது கைவிரல்களைப் பிடித்து தான் வாங்கி வந்த மோதிரத்தை அணிவித்தான்.

அவளுக்கு வார்த்தை வரவில்லை. சிலையாகி நின்றிருந்தாள். ஆனால் கண்களில் அவ்வளவு சந்தோசம். “சத்தியமா இதை நான் எதிர்பார்க்கல. என்னால பேச கூட முடில” அவளால் பேச முடியவில்லைதான். “நீ பேச வேண்டாம். நான் பேசறதை மட்டும் கேள்” என்று அவளைப் பார்த்தான். “உன்னோட கண்ணுல தெரியுற இந்த சந்தோசத்தை வாழ்க்கை முழுவதும் நான் பார்க்கணும் உன் கூட இருந்து” என்று அவன் சொன்னதும் “இதை விட ஸ்பெஷலா நான் பீல் பண்ணாதே இல்லை” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு. “என்னால மட்டும்தான் உன்னை ஸ்பெஷலா பீல் பண்ண வைக்க முடியும். வேற யாராலும் முடியாது என் காதல் ராணி” என்று அவன் கூறியதும் “கடைசிவரைக்கும் என் கூடவே இருப்பியா அஷ்வின்?” என்று அவள் அவன் கண்களைப் பார்த்தாள். “கடைசிவரைக்கும் நான் மட்டும்தான் இருப்பேன் உன்கூட” என்று அவன் சொன்னதும் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அவன் தோள்களைப் பிடித்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். “என் வாழ்நாள்ல நா மறக்கணும்னு நினைச்ச நாள் இன்று. ஆனா இன்னைக்கு இந்த நாளை நான் என்னைக்குமே மறக்க கூடாதுன்னு நினைக்கிறேன்டா. எல்லாம் உன்னாலதான். என் பிறந்தநாளை நான் கொண்டாடியே பல வருடங்கள் ஆச்சு. இதை நான் கொண்டாடவே கூடாதுன்னு தான் உன்கிட்ட கூட ஆரம்பத்துல என் பிறந்தநாள் எப்போன்னு நீ கேட்டாப்ப கூட நான் சொல்லல. ஆனா நீ எப்படியோ தெரிஞ்சிக்கிட்டுதான் என் பிறந்தநாள் அன்னைக்கே engagement பிக்ஸ் பண்ணிருக்க போலனு எனக்கு ஒரு டவுட் இருந்தது. அதோட இன்னைக்கு என் பிறந்தநாளையும் கொண்டாடிட்ட. எனக்கு உண்மைலே இதெல்லாம் இன்ப அதிர்ச்சிதான்” என்று ஐஸ்வர்யா அவனைப் பார்த்து கூற அவன் அதிர்ச்சியாகிதான் போனான். “ஐஷு இன்னைக்கு உன் பிறந்தநாளா? எனக்கு தெரியாதே. நான் valentines day காகத்தான் இப்ப உன்கூட இப்படி celebrate பண்ணேன். உனக்கு இன்னைக்கு பர்த்டேனு சத்தியமா தெரியாது” அவன் இப்படி சொன்னதும்தான் அவளுக்கு ஞாபகமே வந்தது. “ஆமா அப்போ இது valentines day காகவா அஷ்வின்? சாரி நா…” அவள் செய்வதறியாது திகைத்தாள். “ஏன் உன் பிறந்தநாளை மாத்தி சொன்ன ஐஸ்வர்யா? என் கிட்ட ஏன் மறைச்ச?” அஷ்வின் மனம் ஒரு நிலையில் இல்லை. “அது மறைக்கல அஷ்வின். நான் மறக்கணும்னு நினைக்கிற நாள். அதான் சொல்லல” ஐஷு கண்கள் கலங்கியது. “ஐஷு ப்ளிஸ் அழாத. இப்பதானே சொன்னேன். நா இருக்கற வரை நீ அழ கூடாது. பரவால நா எதையும் கேட்கல. நீ மறக்கணும்னு நினைக்கிற ஒன்னை நா நியாபகப்படுத்த மாட்டேன்” அஷ்வின் இப்படி கூறியதும், அவன் கைகளைப் பிடித்தவள் “இல்லை உன்கிட்ட நான் எதையும் மறைக்க விரும்பல அஷ்வின். என் வாழ்க்கைல இருந்த ஒருத்தரை பற்றி நீ தெரிஞ்சிக்கணும். இன்னைக்கு நான் சொல்லியே ஆகணும் அவனைப்பற்றி உன்னிடம்” ஐஸ்வர்யா கலங்கிய கண்களுடன் பார்த்தாள்.

தொடரும்

மேகா 

நெஞ்சாத்தியே (8)

பாகம் 8

கார்த்திக்….. அதுதான் அவன் பெயர். என்னோட அத்தையோட மகன். என்னவிட மூனு வயசு மூத்தவன். ஆனா அவனை நான் மரியாதை கொடுத்து பேசியதே இல்ல. வாடா போடா னு தான் பேசுவேன். அம்மா அப்போ அப்போ கண்டிப்பாங்க. அப்படிலாம் பேசாத. ஒழுங்கா மாமா னு சொல்லி கூப்பிடு முறையோடனு. அதெல்லாம் நா காதுல வாங்குனதே இல்ல. அவனும் வம்பு பண்ணிட்டே இருப்பான் என்கிட்ட. “ஐஷு என்ன ஒரே ஒரு தடவ மாமான்னு கூப்பிடேன்” எத்தனையோ தடவ கேட்டிருக்கான். அப்போ தான் வேனும்லே “டேய் கார்த்திக், அதெல்லாம் கூப்பிட முடியாது. கிளம்புடா”னு சொல்லி சிரிப்பேன். அவன பார்க்கறதுக்காகவே எல்லா ஸ்கூல் holiday க்கும் ஊருல இருக்கற பாட்டி வீட்டுக்கு போயிடுவேன். ஒன்னா சேர்ந்து பட்டம் விடுறது, மழையில கடுதாசி கப்பல் விடறது, சைக்கிள் ஓட்டறது, ஆத்துல மீன் பிடிக்கிறது, மாங்கா அடிச்சு சாப்பிடுறதுனு செம்ம ஜாலியா போகும் ஸ்கூல் holiday. அங்க holidayக்கு மத்த cousins எல்லாரும் தான் வருவாங்க. ஆனா நா கார்த்திக் கூட தான் சுத்திட்டு இருப்பேன். அவன ரொம்ப ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல இருந்தே. எப்போதும் சிரிக்க வச்சிட்டே இருப்பான். அவன் இருக்கற இடம் எப்பவுமே கலகலப்பா தான் இருக்கும். ஒரு நாள் ஸ்கூல் holiday போயிருந்தாப்ப அங்க வந்திருந்த பெரியவங்க எல்லார் கிட்டயும் கார்த்திக்கு செம்ம திட்டு. என்னானு கேட்டாப்ப அவன் ஸ்கூல் எக்ஸாம்ல ரொம்ப கம்மியா மார்க் வாங்கிட்டான்னு திட்டிட்டு இருந்தாங்க. கார்த்திக் எப்பவுமே விளையாட்டுத்தனமாவே இருக்கானு அத்தை புலம்பிட்டு இருந்தாங்க. கார்த்திக்கு அப்பா இல்லை. அவனும் அத்தையும் தான். அவனோட எதிர்காலத்த பத்தி ரொம்பவே கவலையோட என் அம்மா கிட்ட பேசிட்டு இருந்தாங்க. எல்லாரும் கார்த்திக்கை திட்டறது எனக்கு பிடிக்கவே இல்ல. தனியா அமர்ந்து யோசிச்சிட்டு இருந்தேன் வீட்டு முன்னுக்கு இருந்த தோட்டத்துல. “ஹேய் ஐஷு, நீ இங்க இருக்கியா? உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன். இன்னைக்கு காத்து பலமா இருக்கு. உனக்கு தான் பட்டம் விட பிடிக்குமே. போலாமா” என்று கையில் இரண்டு பட்டங்களோடு நின்றிருந்தான். அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஒன்றும் பதில் கூறாமல் மறுபடியும் தலையை குனிந்து அமர்ந்தவாறே கையில் இருந்த குச்சியில் மணலில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தேன். என் பக்கத்தில் அமர்ந்தவன் “என்னாச்சு உனக்கு? ஏன் ஒண்ணுமே பேச மாட்டுற?” குரலில் வருத்தம் அவனுக்கு. எல்லாரும் அவனை அவ்வளவு திட்டியும் வருத்தப்படாதவன் நான் பேசலைன்னதும் சோகமகிட்டான். “எல்லாரும் உன்ன திட்டறாங்களே கார்த்திக். உனக்கு கொஞ்சங்கூட வருத்தமாவே இல்லையாடா?” நான் கேட்டதும் சிரித்தான். “நான் திட்டு வாங்குறது இன்னைக்கு நேத்தா நடக்குது? அதெல்லாம் பழகிடுச்சு ஐஷு” அவன் சிரித்துக் கொண்டே கூறினான். “என்னாது பழகிடுச்சா. சொரணை இல்லாத ஜென்மமாடா நீ?” கோவத்தில் கையில் இருந்த குச்சியாலே அவன் கையில் சுளீர் என்று அடித்தேன். “ஐயோ அம்மா… ஐஷு ஏன் அடிக்கிற? வலிக்குது” கத்தினான். “வலிக்குதுல? இப்படிதான் எனக்கும் வலிக்குது. என் முன்னுக்கு உன்ன எல்லாரும் திட்டும் போது” மறுபடியும் தலையை குனிந்து தரையைப் பார்த்தேன். “ஐஷு சாரி. நீ இவ்வளோ feel பண்ணுவனு நா நினைச்சு கூட பார்க்கல” அவன் கவலையோடு என்னைப் பார்த்தான். “என்கிட்ட எதுக்கு சாரி கேட்கற? அத்தைகிட்ட போய் கேளு. அவங்க மனச இவ்வளோ நாள் கஷ்டப்படுத்திருக்க. ஒரு Single mother ஆ இருக்கறது எவ்வளவு கஷ்டம். உனக்கு எப்படி அவங்கள அழ வைக்க மனசு வருது கார்த்திக்?” நா கேட்டதுக்கு அவன் அமைதியாகவே இருந்தான். “அவங்க மனச புரிஞ்சு நடந்துக்கடா. உன்கிட்ட அப்படி என்ன கேட்கறாங்க? நல்லா படிச்சு நீ நல்ல நிலைக்கு வந்தா இவ்வளோ நாள் அவங்க பட்ட கஷ்டத்துக்கு ஒரு அர்த்தம் இருக்கும்ல. அதோட நீ இப்படி எல்லார்கிட்டயும் திட்டு வாங்குறது எனக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? இப்படி நீ பண்ணிட்டு இருந்தா நா உன்கூட பேசவே மாட்டேன் போ” நா கோவித்துக் கொண்டது அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “ஐஷு இப்படிலாம் சொல்லாத. உன்ன கஷ்டப்படுத்துற மாதிரி இனி நான் நடந்துக்க மாட்டேன். என்ன இப்ப? நா நல்லா படிச்சு மார்க் வாங்கனும் அவ்வளோதானே. விடு அடித்த எக்ஸாம் பாரு எப்படி செய்யறேன்னு” கார்த்திக் இப்படி சொன்னதும் என் முகம் மலர்ந்தது. “உண்மையாவா? அப்போ நா சொன்னா என்ன வேணும்னாலும் செய்வியா?” நான் கேட்டதும் “என்ன செய்யனும்னு மட்டும் சொல்லு. ஐஷு சொல்லி செய்யாமல் போவானா இந்த கார்த்திக்?” அவன் ஆர்வமாக கேட்டான். “:நீ நல்லா படிச்சு டாக்டர் ஆகணும். முடியுமா?” நா ஆவலாய் கேட்டேன். “அவ்வளோதானே. டாக்டர் ஆகி காட்டறேன்” உறுதியாக கூறினான். “ நீ விளையாட்டுக்கு சொல்லலியே? டாக்டர் ஆகுறது சாதாரண விஷயம் இல்லைடா. பிரைவேட் ல படிச்சா நெறைய செலவாகும். goverment கோட்டால போகணும்னா நீ straight As எடுக்கணும் எல்லா சப்ஜெக் லயும்… உன் CGPA 4 இருக்கணும் A லெவல் எக்ஸாம் ல. முடியுமா உன்னால” நான் சந்தேகத்துடன் கேட்டேன். “ஏன் இவ்வளோ விளக்கம் கொடுக்கற. எல்லாம் தெரியும். ஐஷு மேல promise. கண்டிப்பா நடக்கும்” என்று அவன் சொன்னதும் அவ்வளோ ஆனந்தம் எனக்குள். “ஆனா ஒரு கண்டிஷன்” அவன் இப்படி சொன்னதும் அவனை பார்த்தேன். “நான் டாக்டர் ஆகணும்னா நீ என்ன மாமானு கூப்பிடனும் முடியுமா?” கார்த்திக் இப்படி கேட்டதும் “மொத ஒழுங்கா படிக்கு MBBS ஜாய்ன் பண்ணுடா லூசு” என்று மறுபடியும் அந்த குச்சியால் சுளீர் என்று வைத்தேன் அவன் காலிலே.

நான் புதுசா ஜாயின் பண்ணிருந்த சமயம் அது டீச்சிங் காலேஜ்ல.    ஹாஸ்டல்ல தான் தங்கிருந்தேன். கார்த்திக்கும் அதே ஊருல தான் மெடிக்கல் காலேஜ்ல 4TH இயர் படிச்சுட்டு இருந்தான். அப்போ அப்போ என்ன பார்க்க வருவான். ஒரு நாள் எக்ஸாம்க்கு படிசிட்டு இருந்தேன். ஜன்னல் வழியா ஏதோ ஒன்னு வந்து என் மேசை மேல விழுந்தது. ஒரு பேப்பர் குள்ள கல் வச்சு சுற்றப்பட்டு. எடுத்து திறந்து பார்த்தேன். “ஐஷு கீழ இறங்கி வா. பார்க்கணும். கார்த்திக்” னு எழுதிருந்தது. ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தேன் அங்கே கீழ கார்த்திக் வெயிட் பண்ணிட்டு இருந்தான். என்ன பார்த்ததும் வர சொல்லி கையசைச்சான். எதுக்கு இந்த டைம்ல வந்திருக்கான்னு. புரில. மணி வேற 12 ஆக இன்னும் பத்து நிமிஷம் தான் இருந்தது. ஹாஸ்டல்ல அந்த டைம் பையனுங்க யாரும் உள்ள வர முடியாது. இவன் ஏதோ ஹீரோ மாதிரி சுவர் ஏறி குதிச்சுதான் வந்திருக்கான்னு மட்டும் தெரிஞ்சது. அவசர அவசரமா யாரும் பார்த்துட கூடாதுன்னு பதுங்கி பதுங்கி கீழ இறங்கி போனேன். ஹாஸ்டல் வெளியே ஓர் ஓரமாய் நின்றிருந்தான். “எதுக்கு வந்த கார்த்திக்? இப்படி திடீர்னு?” பதற்றத்துடன் கேட்டேன். “அது அது வந்து ஐஷு… நான்… உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” அவனும் தடுமாறினான் ஏதோ பதற்றத்தில். “ஐயோ இப்போ எதையும் நின்னு கேட்க முடியாது. நாளைக்கு பார்க்கலாம். நானே கால் பண்றேன். bye” என்று அவசர அவசரமாக கூறி விட்டு திரும்பினேன். “ ஹேய் இரு இதையாவது வாங்கிட்டு போ” அவன் நிறுத்தினான். “என்ன” என்று கேட்க கையில் இருந்த ஒரு கார்டை நீட்டினான். இன்னொரு கையில் எதையோ வைத்திருந்தான்.. ஆனால் அதை தன் பின்னால் வைத்து மறைத்தான். நானும் ஏதோ பதற்றத்தில். அவன் நீட்டிய அந்த கார்டை வாங்கி கொண்டு ஓடி வந்து விட்டேன். “ஐஷு கண்டிப்பா கால் பண்ணு” அவன் கத்தியது மட்டும் காதில் விழுந்தது. என் அறைக்கு வந்ததும் முதலில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். அவன் அங்கு இல்லை. கிளம்பிவிட்டான். அப்போதுதான் எனக்கு உயிரே வந்தது. ஹாஸ்டல் வார்டன் கண்ணுல மாட்டுனா அவ்வளோதான். அதான் அங்கே நின்று நான் பேசவில்லை அவனோடு. அவன் கொடுத்த கார்ட் இன்னும் என் கையில்தான் இருந்தது. கவரை திறந்து வெளியில் எடுத்தேன். பிறந்தநாள் வாழ்த்து அட்டை அது. அப்போதுதான் ஞாபகம் வந்தது. ‘ஐயோ நம்ம பர்த்டே இன்னைக்கு. விஷ் பண்ணத்தான் வந்தானா. ச்சே அவன விஷ் பண்ண கூட விடாம துரத்திட்டோமே’ னு மனசு ரொம்பவே கஷ்டமா போச்சு. அவன் ரொம்ப அழகா கவிதை ஒன்னு எழுதிருந்தான் என் பிறந்தநாளுக்கு. படிச்சிட்டு மனசுக்குள் அவ்வளவு சந்தோசம். போன் எடுத்து கால் பண்ணினேன். “ஐஷு ஹெப்பி பர்த்டே. உன்கூட பேச முடியாம போச்சு” வருத்தமா தான் சொன்னான். “ரொம்ப தேங்க்ஸ் டா. எதிர்ப்பார்க்கவே இல்லை. எனக்காக எவ்வளோ ரிஸ்க் எடுத்து வந்த தெரியுமா. உன்ன மட்டும் யாராவது இங்க பார்த்திருந்தா அவ்வளோதான். போலிஸ்ல கம்பி எண்ண வச்சிருப்பாங்க” அவனை கடிந்துக் கொண்டேன். “இல்ல உன்கிட்ட முக்கியமா ஒன்னு பேசணும்னு வந்தேன். அதான்” கார்த்திக் சொல்ல “அப்படி என்ன முக்கியம். எதுவா இருந்தாலும் நாளைக்கு பார்த்து பேச வேண்டித்தானே. இல்ல கால் பண்ண வேண்டியதுதானே. என்னால உனக்கு ஏதாவது கஷ்டம் வந்துட்டா அப்பறம் அதையே நினைச்சு பீல் பண்ண மாட்டேனா நான். யோசிக்க மாட்டியா நீ?” நான் அவனை விடுவதாய் இல்லை. நல்லாவே திட்டினேன். “நா உனக்கு கால் பண்ணினேன் ஐஷு. நீ அட்டென்ட் பண்ணல. அதான் நேருல பார்க்க வந்துட்டேன்” அவன் சொன்னதும் “போன் SILENT ல இருக்கு. நாளைக்கு எக்ஸாம் அதான் படிசிட்டு இருந்தேன்” அப்போதுதான் ஞாபகம் வந்தது போன் SILENT ல போட்டது. “ஐஷு சாரி. நீ படி. ஆல் தெ வெரி பெஸ்ட்” கார்த்திக் மன்னிப்பு கேட்டதும் கொஞ்சம் கவலையானேன். என் பர்த்டே காக விஷ் பண்ண வந்தவனை போய் திட்டிட்டு இருக்கேனே. நா ஒரு அறிவில்லாதவனு என்னையே திட்டிக்கொண்டேன் மனதில். “கார்த்திக் நாளைக்கு evening மீட் பண்ணலாமா? அட் டைம்ஸ் square 6 pm. ஓகே வா?” நான் கேட்டதும் “ஐஷு நிஜமாவா? நா 5 மணிக்கே அங்க இருப்பேன். இது போதும்” அவன் குரலில் அளவில்லாத சந்தோசம் தெரிந்தது.

அன்று மாலை டைம்ஸ் square ல அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஒரு ரெண்டு hour மேலேயே ஆச்சு. அவன காணோம். கால் பண்ணி பார்த்தேன் சுவிட்ச் ஆப் னே வந்தது. ஏன் வரல? கண்டிப்பா வருவேன்னு சொன்னானேனு மனசுல ஒரே குழப்பம். அதோடு கோபம் வேறு வந்தது. நாளைக்கு எனக்கு இன்னொரு எக்ஸாம் வேற இருக்கு. அதுக்கு கூட prepare பண்ணாம இவன பார்க்க வந்தா இப்படி காக்க வச்சு கடைசி வரை வராமலே சதி பண்ணிட்டானேன்னு அவன் மேல பயங்க கோவம் வந்தது. இனி அவன் வந்து எவ்வளோ மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்கவே கூடாது. அவன் கூட பேசவே கூடாதுன்னு மனதில் ஒரு வைராக்கியத்தோடு ஹாஸ்டல் கிளம்பி சென்றேன். nite அவன் கிட்ட இருந்து எந்த msg உம் காலும் வரல. நானே கால் பண்ண நினைச்சாலும் என்னுடைய கோபம் தடுத்தது. அவனே கால் பண்ணட்டும் அது வரைக்கும் நாம கால் பண்ணி என்ன ஏதுன்னு கேட்கவே கூடாதுன்னு படுத்தும் தூங்கிட்டேன். மறுநாள் காலைல 6 மணிக்கே என் போன் அலறியது. அம்மா கிட்ட இருந்து கால். தூக்கத்துல எடுத்து “ஹெலோ” னு சொன்னாப்ப “ஐஷு, கார்த்திக்கு accident ஆச்சாம் டி. GH ல இருக்கானாம். நீ மொத போய் பாரு. நாங்க எல்லாரும் அங்கதான் வந்துட்டு இருக்கோம்” அம்மா சொன்னதை கேட்டு அதிர்ச்சியானேன்.

ஒரு வாரமா தவறாம கார்த்திக்கை பார்க்க வந்துட்டு இருக்கேன் GH க்கு. என் க்ளாஸ் முடிஞ்சதுமே வந்துடுவேன். கை கால் ல கட்டு போடப்பட்டு படுக்கைல தான் இருந்தான். ஆனா சுயநினைவு இருந்தது. நல்லாவே பேசினான். பெரியதாக ஒன்றும் இல்லாமல் கை காலோடு அடி பட்டு போனதேனு எல்லாரும் நிம்மதியாதான் இருந்தோம். அத்தைதான் ஹாஸ்பிட்டல்ல தங்கி பார்த்துக்கிட்டாங்க. ஏதாவது private hospital கூட்டிட்டு போகலாம்னு மத்த மாமா, பெரியப்பாலாம் சொன்னாப்ப கார்த்திக் ஒத்துக்கல. அங்கலாம் போனா நிறைய செலவாகும். அதான் எனக்கு ஒன்னும் இல்லல. இங்கேயே ட்ரீட்மென்ட் எடுத்துக்கறேன்னு சொல்லிட்டான். அவனுக்கு உதவி செய்ய எல்லாரும் தயாரா இருந்தும் அவன் மறுத்து விட்டான். டெய்லி அவன் கூட அமர்ந்து நிறைய பேசுவேன். அவனுக்கு பாரதினா ரொம்ப ரொம்ப பிடிக்கும். பாரதி கவிதை புத்தகம் எடுத்து வந்து அந்த கவிதைகளை எல்லாம் வாசிக்க சொல்லி கேட்பான். அவனுக்காகவே நானும் அந்த கவிதைகளை எல்லாம் படித்து காண்பிப்பேன். அப்போ தான் எனக்கும் பாரதி கவிதைகள் மேல காதல் வந்தது. அன்று தீர்த்த கரையினிலே கவிதையை வாசிச்சேன். அவனுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கவிதை அது. எனக்கு அதன் அர்த்தம் தெளிவாக விளங்க வில்லை. அப்போ அதன் விளக்கத்தை கூறினான். அதோடு அவன் கூறிய அந்த வார்த்தைகள் இன்னும் என் மனசுல பசுமரத்தாணி போல பதிஞ்சிடுச்சு. “காதலையும் பிரிவையும் அதன் நுண்ணிய உணர்வுகளையும், விளைவுகளையும் அதன் தீர்வுகளையும் ஒரே பாட்டில் எந்த கவிஞனாலும் இத்துனை உணர்வுபூர்வமாக சொல்ல முடியாது ஐஷு. நாடி, நரம்பு, இரத்தம், தசை எல்லாவற்றிலும் காதல் கசிந்துருகினால் மட்டுமே ஒருவனால் இப்படி எழுத முடியும். பாரதி ஒரு சகாப்தம். அவனை போல இனி ஒருத்தன் பிறக்க போவதில்லை” அவன் சொன்ன அந்த வார்த்தைகள் இன்னும் என் காதுல கேட்குது. அவனையே பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் அவன் பேசும் போதெல்லாம் அவன் கண்கள் ஏனோ மேல் நோக்கி நோக்கி சென்றுக் கொண்டிருந்தன. நான் அதை கவனிக்க தவற வில்லை. “கார்த்திக் உனக்கு ஒன்னும் இல்லையே? உடம்பு ஏதாவது பண்ணுதா?” அவனை கேட்டேன். “இல்ல ஐஷு எனக்கு ஒன்னும் இல்ல பயப்படாத. உன்கிட்ட ஒன்னு சொல்லணும். ரொம்ப நாள் சொல்லனும்னு வேய்ட் பண்ணிட்டு இருக்கேன்” கார்த்திக் சொல்லும் போது மறுபடியும் அவன் கண்கள் மேல் நோக்கி சென்றன. எனக்கு பயம் உண்டானது. “கார்த்திக், உனக்கு என்னமோ ஆகுதுடா. இரு நர்ஸை கூப்பிடுறேன்” என்று நான் எழுந்த போது என் கைகளைப் பிடித்தான். “இரு ஐஷு, நான் சொல்லுறத கேட்டுட்டு போ. நா உன்கூட பேசணும். கேட்டுடு ப்ளிஸ்” அவனால் பேச முடியவில்லை. நாக்கு சுழன்றது, கண்கள் மூடின… என் கையை இறுக்கமாக பிடித்தான். “கார்த்திக் கார்த்திக், உனக்கு என்ன ஆகுது, கண் திறந்து பாரு. என்ன பாரு கார்த்திக். என்ன பாருடா” நான் பயத்தில் அவன் கன்னத்தை அடித்து அவனை எழுப்பினேன். திடீரென்று அவன் கை கால்கள் இழுக்க ஆரம்பித்தது. பதறி போய் “டாக்டர் டாக்டர்” என்று கத்தினேன். என் சத்தம் கேட்டு நர்ஸ் சிலர் ஓடி வந்தனர். என்னை அறையை விட்டு வெளியே போக சொல்லிவிட்டு கதவை மூடினார்கள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பயத்தில் கண்களில் இருந்து கண்ணீராய் கொட்டியது. “கடவுளே அவனுக்கு ஒன்னும் ஆகிட கூடாது. எப்படியாவது காப்பத்தி கொடுத்துடு” வாய் விட்டே புலம்பி அழுதேன்.

கார்த்திக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ICU வில் சேர்க்கப்பட்டிருந்தான். அவன் மூளையில் ரத்தக் கசிவு. அதோடு நுரையீரலில் கட்டி இருந்த ரத்தத்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றியிருக்கிறார்கள். இதை எல்லாம் அப்பவே செய்யாம Careless ah இருந்திருக்காங்க டாக்டர்ஸ். ஒரு வாரமா அவனுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனை இருந்ததே கவனிக்காம விட்டுருக்காங்க. ட்ரைனிங் டாக்டர்ஸ் வச்சு சிகிச்சை அளித்து இப்போ இந்த நிலையில அவன். டாக்டரா வர வேண்டியவனை இப்படி அநியாயமா கோமாவுல வந்து விட்டுட்டாங்க. “இனிமே கார்த்திக் பொழைக்க மாட்டான்னு சொல்லிட்டாங்கம்மா. இன்னும் 24 மணி நேரம் தான்னு சொல்லிட்டாங்க. யாரு பார்க்கணுமோ கடைசியா போய் பார்த்துடுங்க” டாக்டரிடம் பேசிட்டு வந்த என் பெரியப்பா மனம் உடைந்து போய் அவர் தங்கையை கட்டி பிடித்துகொண்டு அழுதார். அத்தை மயங்கி விழுந்துட்டாங்க அப்பவே. அந்த நிமிடம் இந்த உலகமே நின்னு போன மாதிரி ஓர் உணர்வு. அவனை எல்லாரும் ஒவ்வொருவராக போய் பார்த்துட்டு வந்தாங்க. ஆனா என்னால முடியல. சத்தியமா எனக்கு தைரியம் இல்லை. யார் சொல்லியும் நான் போய் பார்க்கவே மாட்டேன்னு பிடிவாதமாக இருந்தேன். அப்போ என் அத்தை என் கையைப்பிடித்து “நீ கண்டிப்பா அவனை பார்க்கணும். நீ பார்க்கலனா அவனோட உயிர் நிம்மதியா போகாதும்மா. போய் பார்த்து என் மகனை நல்லபடியா அனுப்பி வைச்சிட்டு வா” என்று கண்ணீரோடு சொன்னதும் அவரை கட்டிப் பிடித்து அவ்வளோ நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் வெளியில் வந்தது.

அவன் கண்மூடி படுத்திருந்தான். அன்று அவன் முகம் அவ்வளவு பொழிவாக இருந்தது. அதுதான் என் வாழ்கையில் முதல் தடவை நான் icu வில் நுழைந்தது. சுற்றிலும் மருத்துவ கருவிகள். அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கே அவனை பார்த்தால் அழுதுவிடுவேனோன்னு நா பயந்தது போல அங்கு நடக்க வில்லை. அவன் நெற்றியில் கை வைத்து அவன் தலை முடியை கோதினேன். என் முகத்தில் ஏனோ தெரியவில்லை அந்த சமயம் மெல்லிய புன்னகை. அவன் கையை பிடித்தேன். “கார்த்திக், ஐஷு வந்திருக்கிறேன். நான் பேசறது உனக்கு கேட்குமா? நீ எங்கள விட்டு போக போறனு சொல்லுறாங்க. ஆனா நீ கண்டிப்பா திரும்பி வருவனு இப்பவும் நான் நம்பறேன். கார்த்திக் எங்கேயும் போக மாட்டான். என் கிட்ட என்னமோ சொல்ல வந்தியே. அதை சொல்லாமலே நீ போக போறியா சொல்லுடா” கண்களில் கண்ணீர் இப்போது. துடைத்துக்கொண்டு பேசினேன். “நான் வேய்ட் பண்ணுவேன் கார்த்திக். நீ என் கிட்ட என்ன சொல்ல வந்தனு தெரிஞ்சிக்க வெயிட் பண்ணுவேன். கண்டிப்பா எனக்கு அதை நீ தெரியப்படுத்தணும். இப்ப உனக்கு பிடிச்ச கவிதையை சொல்லட்டுமா கார்த்திக் . கேட்கறியா?

“தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே

பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்

வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி

பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப்போலவே பாவை தெரியுதடி

 

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி

வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுதுபார்

மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே

நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ

நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ….”

 

கண்களில் தாரை தரையாக கண்ணீர கொட்டியது இந்த கவிதையை நான் சொல்லும் போது. கடைசியா அந்த அறையை விட்டு வெளியாகும் வேலையில் ஒன்று ஞாபகம் வந்தது. வேகமாக திரும்பி அவனிடம் போனேன். அவன் என்னிடம் பல முறை கேட்டு நான் அவனை இதுவரை சொல்லி அழைக்காத அந்த வார்த்தை. முதலும் கடைசியுமாய் அவனைப் பார்த்து “மாமா!” என்று அழைத்தேன்.

 

ஐஸ்வர்யா சொல்லி முடிக்கும் போது அஷ்வினின் கண்களில் கண்ணீர். அவள் பார்த்திட கூடாது என்று அவள் அவனைப் பார்க்கும் முன்னே கண்களைத் துடைத்துக் கொண்டான். அந்த இருளில் அவன் அழுதது அவளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். அவனை கட்டி கொண்டு அழுதவளை அவன் அழாதே என்று தடுக்கவில்லை.

ஐஸ்வர்யாவை அவளது இல்லத்தில் இறக்கி விட்டு விட்டு அவன் தன வீட்டை வந்தடைந்த போது நள்ளிரவு மணி 2 இருக்கும். நேராக தன் அறைக்கு சென்று தன் கை கால் முகத்தை கழுவியவன். நேராக தன் அலமாரியைத் திறந்து அந்த கார்ட்டை வெளியில் எடுத்தான். “டேய் நீ கொடுக்க வேண்டிய கார்ட் என் Bag லையே இருக்குடா. இந்த தடவையும் சொதப்பிட்டியா” அஷ்வின் கேட்ட போது “ம்ம்ம்ம் பரவாலடா அதனால் என்ன. எனக்கென்னவோ என் காதலை நீதான் அவ கிட்ட சொல்ல போறனு தோணுது நண்பா” என்று கார்த்திக் அன்று அவனிடம் சொல்லியதற்கான அர்த்தம் இப்பொழுது தெளிவாகப் புரிந்தது அஷ்வினுக்கு. அந்த கார்டை திறந்து பார்த்தான். “ஐ லவ் யூ ஐஸ்வர்யா…. காதலுடன் உன் கார்த்திக்” என்று எழுதியிருந்தது.

தொடரும்

மேகா

நெஞ்சாத்தியே (9)

பாகம் 9

“டேய் மச்சான், நீ எங்க கூடத்தான் சுத்திட்டு இருக்க. அப்படி ஒன்னும் விழுந்து விழுந்து படிக்கிற மாதிரியும் தெரில. ஆனா எப்படிடா எல்லா செமெஸ்டர்லயும் full மார்க் அதுவும் க்ளாஸ்லையே நீதான் டாப். எப்படிடா முடியுது உன்னால. நம்ம புக் worm அஷ்வின் கூட ரெண்டாம் நிலைலதான் இருக்கான். அவன பார்த்து பிட்டு அடிச்சு ஒரு மார்க் அதிகமா வாங்கிடுறியோ?” சக நம்பர்கள் கிண்டலும் கேலியுமாய் கேட்கும் போது சிரித்த கார்த்திக், “ நண்பா, நீங்களாம் சின்ன வயசுல எக்ஸாம்ல பாஸ் ஆகணும், டாக்டர் ஆகணும்னு சாமி கிட்டதானே வேண்டிபீங்க… ஆனா எனக்கு மட்டும் ஸ்பெஷால அந்த சாமியே நீ டாக்டர் ஆகனும்னு சொன்னுச்சுடா. அதனால தான் இப்படி” என்று பதில் கொடுக்க அங்கு வந்த அஷ்வின் காதில் இதில் விழுந்தது. “என்ன சாமி வந்து சொன்னுச்சா? என்னடா புது கதை?” அங்கிருந்தவன்ல ஒருத்தன் கேட்க ‘போச்சுடா இவன் கதை சொல்ல ஆரம்பிச்சா இன்னைக்கு படத்துக்கு போன மாதிரிதான். மொதல்ல இவன இங்க இருந்து கிளப்பணும்னு’ மனதில் எண்ணிய அஷ்வின் “டேய் இன்னொரு நாள் சாவகாசமா உட்கார்ந்து கேளுங்க. எங்களுக்கு டைம் ஆச்சு படத்துக்கு. கிளம்பு கார்த்திக். நேரத்தோட போகணும். சீக்கிரம்”னு அவசரப்படுத்தினான். “இருடா கேட்கராணுங்க. சொல்லிட்டு வந்துடுறேன்”னு கார்த்திக் சொல்லவும் “டேய் அப்படியே ஐஷு பர்த்டேக்கு கிப்ட் வாங்கனும்னு  சொன்னியேடா. இது முக்கியமா இல்ல ஐஷுவுக்கு கிப்ட் முக்கியமா?” அஷ்வின் கேட்டதுதான் தாமதம், “என்னடா பொறுப்பில்லாம இங்க பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க. என் கழுத்த பிடிச்சு தர தரன்னு இழுத்துட்டு போக வேண்டாமா நீ. என்ன friendu டா நீ?” கார்த்திக் கோவமானான். அட இவன் இப்படிதான். எப்போ பாரு ஐஷு ஐஷு ஐஷு தான். அவனுக்கு எல்லாமே அவதான். எப்படி ஒரு மனுஷனால இப்படி பைத்தியமா ஒரு பெண்ணை காதலிக்க முடியும்? அஷ்வினுக்கு ரொம்ப நாளாவே இந்த கேள்வி மனதிற்குள். மருத்துவ கல்லூரியில் ஜாயின் பண்ணி நான்கு ஆண்டுகள் ஆயிற்று. சேர்ந்த முதல் நாளிலிருந்து இந்த நிமிஷம் வரை ஒரு நாள் கூட ஐஷு பத்தி பேசாமல் அவன் இருந்ததில்லை. அவன் பேசும் வார்த்தைகளில் அவள் நிறைந்திருந்தாள். அவன் பார்க்கும் காட்சிகளில் அவள் தெரிந்தாள், அவன் கேட்கும் பாடல்களில் இசையாகினாள், அவன் சுவாசிக்கும் காற்றில் மூச்சாகினாள். அட கண்ணாம்மாவை நினைத்து உருகி உருகி கவிதை பாடிய பாரதி கூட தோற்றுவிடுவானோ இவன் முன் என்றுதான் நினைக்க வைத்தான். கார்த்திக் கிராமத்தில் இருந்து வந்த பையன். ரொம்ப வெகுளித்தனமானவன். மனதில் எதையுமே வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசுபவன். ஆனால் யார் மனதையும் புண் படுத்த அறவே விரும்பாதவன். ஆரம்பத்தில் அவன் உடை, பேச்சு, பழக்க வழக்கம் இதை எல்லாம் பார்த்து சிட்டியில் இருந்து வந்த மாணவர்கள் அனைவருமே அவனை கேலிதான் செய்தனர். ஆனால் அவர்கள் அவனை கிண்டல் செய்கிறார்கள் என்பதை கூட அறியாதவனாய் அவர்களோடு சேர்ந்து சிரித்திருக்கிறான். அந்த சமயத்தில் எல்லாம் அஷ்வினுக்குதான் கோவம் வந்து கூட படிக்கும் சக மாணவர்களிடம் சண்டைக்கு போயிருக்கிறான். அது என்ன கார்த்திக் மேல் அவனுக்கு அவ்வளவு அக்கறை? எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து நட்பு எனும் ஒரு உன்னதமான உறவில் இணைந்தவனுக்கு கார்த்திக் மேல் உள்ள அக்கறை ஆச்சர்யப்படுவதர்க்கில்லை. கள்ளங்கபடமில்லாத கார்த்திக்கின் மனசும், வெகுளித்தனமான அவன் பேச்சும், இரக்ககுணமும், நண்பனுக்கு ஒன்னுனா எதையும் யோசிக்காம முன்னுக்கு வந்து நிக்கும் அந்த குணமும் அஷ்வினையும் அவனையும் ஆருயிர் நண்பர்களாக்கியது அந்த நான்கு ஆண்டுகளில். முதலாம் ஆண்டில் ஹாஸ்டலில் ஒரே ரூம் மேட் ஆகும் தருணத்தில் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துக் கொண்ட வேளையில் கார்த்திக்கோடு சேர்ந்து ஐஷுவும் அறிமுகமாகியிருந்தாள் அஷ்வினுக்கு, கார்த்திக் அவளைப்பற்றி கூறிய கதைகளில் மூலம்.

“ எனக்கு மூணு வயசு இருக்கும். நல்லா ஞாபகம் இருக்கு. என் அத்தையும் மாமாவும் முதல் முதலாக ஐஷுவை எங்க அம்மாச்சி வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருந்தாங்க ஊருக்கு. அங்கதான் ஐஷுக்கு பேர் சூட்டு விழா நடந்தது. குட்டி குட்டியா கை, கால். குண்டு குண்டா சின்ன கண்ணு, கரு கருன்னு முடி, கன்னத்த கிள்ளிட்டு ஓடிடுவேன். ஐஷு கத்தி அழுவா அப்போலாம். தொட்டில போட்டிருப்பாங்க. பக்கத்துலையே நின்னு பார்த்துட்டே இருப்பேன். என் வாழ்க்கைல அதுதான் first டைம் ஒரு பிறந்த குழந்தையை நான் பார்த்தது. மூணு வயசுல அது மட்டும் எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு. நான் வளர்ந்த பிறகு எத்தனையோ தடவை அம்மாச்சி சொல்லுவாங்க ‘எப்போதும் பொதுவா பையன் பொறந்தாதான் கெடா வெட்டி விழா கொண்டாடுவாங்க. ஆனா உன் மாமன், பொண்ணு பொறந்ததுக்கு கெடா வெட்டி ஊருக்கே விருந்து வச்சிருக்கான் பாரு’னு. அப்போ நான் என்ன சொல்வேன் தெரியுமா? ‘அம்மாச்சி ஐஷு பொறந்தது மாமாவுக்கு மட்டும் இல்ல. நம்ம குடும்பத்துக்கே வரம். நம்மல காக்க வந்த குல தெய்வம் அவ’ னு… அவள அவ்வளோ பிடிக்கும். ஆனா நா சொன்ன வார்த்த முற்றிலும் உண்மை. அவளை பிடிச்சதால மட்டும் நா சொல்லல. உண்மைலே இன்னைக்கு நா உயிரோட இருக்கவே அவ தான் காரணம். பத்து வயசுல பள்ளி விடுமுறைல எங்க க்ளாஸ்ல பினாங்கு தீவுக்கு ஒரு tour ஏற்பாடு பண்ணிருந்தாங்க. நாங்க கிராமத்துல இருந்தவங்க. பினாங்குலாம் எங்களுக்கு அமேரிக்கா மாதிரி. அதுவும் அப்போலாம் அங்க போக வசதி வாய்ப்புலாம் என் அம்மாவுக்கும் இல்ல. அப்பா இறந்த பிறகு ரொம்ப கஷ்டப்பட்டுதான் வளர்த்தாங்க. நான் ரொம்ப அடம் பிடிச்சுதான் அந்த tour போக அம்மாகிட்ட பணம் வாங்கி க்ளாஸ் டீச்சர் கிட்ட கட்டிருந்தேன். ஒரு பத்து பசங்க ரெண்டு டீச்சர் தான் போறதா இருந்தது. ஒரு van வாடகைக்கு எடுத்தாங்க. முதல் நாள் தான் ஐஷு ஊருக்கு வந்திருந்தா. அவ வந்தா என் கூடத்தான் விளையாடுவா. அவளுக்கு 7 வயசுதான் இருக்கும். மறுநாள் நான் tour போறேன். இங்க ஒருவாரம் இருக்க மாட்டேன்னு நான் சொன்னாப்ப ‘ஓ’னு அழ ஆரம்பிச்சிட்டா. எங்க போற நீ. அப்போ என் கூட யாரும் விளையாட மாட்டாங்களானு ஒரே அழுகை. எனக்கும் கவலையா போச்சு. அத்தை அவளை சமாதானப் படுத்தி தூங்க வச்சாங்க. மறுநாள் காலைல நான் கிளம்பும் போது நல்லா தூங்கிட்டு இருந்தா. அவ கிட்ட போயிட்டு ‘ஐஷு நான் போயிட்டு வரேன். நீ சமத்தா தூங்கு’ னு காதோரமா சொன்னேன். தூக்கத்திலேயே என் கையை பிடிச்சிக்கிட்டா. என்னைய அவ போகாதனு சொன்ன மாதிரியே இருந்தது. கையை விடுவிச்சு ஸ்கூலுக்கு கிளம்பி போனேன். அங்க எல்லாரும் தயாரா இருந்தாங்க கிளம்ப. நானும் மத்த பசங்க கூட van ல ஏறி உட்கார்ந்துட்டேன். ஆனா ஐஷு ஞாபகமாவே இருந்தது. ஐயோ என்னை தேடுவாளே தூங்கி எழுஞ்சதும்னு மனசு கவலையாவே இருந்தது. பிறகு ஒரு முடிவோட டீச்சர் கிட்ட போயிட்டு, டீச்சர் நான் tour வரல. எனக்கு வயிறு ரொம்ப வலிக்குதுனு பொய் சொல்லிட்டு வீட்டுக்கு ஓடியாந்துட்டேன். கட்டுன பணம் திரும்ப கொடுக்க முடியாதுன்னு வேற சொல்லிட்டாங்க. பரவால பணம் போனா போகுது என்ன விட்டா சரின்னு ஒரே ஓட்டம். வீட்டுக்கு வந்தாப்ப ஐஷு வாசல்லையே உட்கார்ந்து பார்த்துட்டு இருந்தா. என்ன பார்த்ததும் அவ முகத்துல அவ்வளோ சந்தோசம். அப்போ ஒன்னு தோணுச்சு ஐஷு சந்தோஷத்துக்காக எத வேணும்னாலும் செய்யலாம்னு. வீட்டுல tour போகாம ஓடியாந்துட்டேன், கட்டுன பணம் போச்சேன்னு அம்மா அடி பின்னிட்டாங்க. ஆனா எனக்கு அது வலிக்கல. ஐஷு கூட ஒரு வாரம் ஜாலியா வெளையாடலாம்னு சந்தோஷமாதான் இருந்துச்சு. அன்றைய நாள் அப்படியே போச்சு அம்மா கிட்ட திட்டும் அடியும் வாங்கியே. மறுநாள் நியூஸ்ல அதிர்சியான ஒரு செய்தி. அதுல பார்த்தாப்பதான் தெரிஞ்சது பினாங்கு தீவுக்கு போற வழில accident ஆகி எங்க ஸ்கூல் பசங்கள ஏத்திட்டு போன van பாலத்துல இருந்து கடல்ல விழுந்து அதுல இருந்த எல்லாருமே பலியாகிட்டாங்கனு. அது அவ்வளோ பெரிய அதிர்ச்சி எங்க கிராமத்து மக்களுக்கே. அம்மா என்ன கட்டிபிடிச்சிட்டு கதறி அழுதுட்டாங்க. வீட்டுல எல்லாருக்குமே தெரியும் நா ஐஷுகாகதான் tour போகாம வந்துட்டேன்னு. போயிருந்தா பொணமாத்தான் திரும்பியிருப்பேன். என் அம்மாச்சி சொன்னாங்க “அவ உன்ன காக்க வந்த சாமிடா. அவளோட கைய கெட்டியா புடிச்சிக்கோ. அவதான் உனக்கு”னு. அவங்க எந்த அர்த்ததுல அப்போ சொன்னாங்கனு தெரில. ஆனா என் மனசுல அது ஆழமா பதிஞ்சிடுச்சு. அவ என்ன சொன்னாலும் செஞ்சிடுவேன். அது என் நல்லதுக்குனு நான் நம்பினேன். ஐஷு ஒன்னு கேட்டு நான் மறுத்ததே இல்ல. அவ என் சாமி, என் தேவதை, என் உயிர். ஒரு வயசுக்கு அப்பறம் அவ மேல இருந்த அன்பு பாசம் எல்லாம் காதலா மாறிடிச்சு. அது காதல்னு நான் உணரும் வயசு வர்றதுக்கு முன்னவே அவதான் என் பொஞ்சாதின்னு நான் முடிவே பண்ணிட்டேன். அந்த உறவுக்கு என்ன அர்த்தம்னு கூட புரிஞ்சிக்க முடியாத வயசு அது. அவ என் சாமினா என் காதல் எனக்கு தெய்வீகமானதுதான். என்ன தவிர ஐஷுவ உசுரா பார்த்துக்க யாராலும் முடியாது. அப்படி பார்த்துக்க ஒருத்தன் வந்தா அது என் உசுரு இந்த மண்ண விட்டு போன பிறகாதான் இருக்கும்!” கார்த்திக் இதை குறைஞ்சது நூறு தடவைக்கு மேலேயே சொல்லிருப்பான்.

கார்த்திக்கும் ஐஷுவும் வேறு வேறல்லனு அஷ்வின் நன்கு அறிந்திருந்தான். இப்படி ஒரு பொண்ண உயிரா காதலிக்க தன்னால முடியுமான்னு அடிக்கடி ஒரு கேள்வி எழும் அவனுக்குள்ளே. கார்த்திக் ஐஷு காதல் ஒன்னு சேரணும்னு மனதார நினைத்தான். அதற்குதான் இந்த பர்த்டேக்கு அவளுக்கு propose பண்ண ஐடியா கொடுத்திருந்தான். “valentines day அன்னைக்கு பர்த்டே வருதுடா. இந்த சான்ஸ் எவனுக்குமே கிடைக்காது. ஒழுங்கா உன் பத்து வருட காதலை அவகிட்ட சொல்லிடு” அஷ்வின் சொன்னதும் “டேய் வேணாம்டா மச்சான். அடுத்த வருஷம் படிப்பு முடிஞ்சிடும். அவ ஆசைப்பட்ட மாதிரி ஒரு டாக்டர் ஆகிட்டு என் காதலை சொல்லறேன்டா” கார்த்திக் தயங்கினான். “டேய் இதுவே ரொம்ப லேட். நீ mbbs ஜாயின் பன்னுனாப்பவே சொல்லிருக்கணும். பொண்ணுங்க அவ்வளோ லேசுல ஓகே சொல்லிட மாட்டாங்க. நீ படிச்சு முடிச்சு வர்றதுக்கும் அவ நல்லா டைம் எடுத்து ஓகே சொல்லுறதுக்கும் சரியா இருக்கும்” அஷ்வின் எடுத்துக் கூற “இல்லடா பயமா இருக்கு அதான்” கார்த்திக் இழுத்தான். “ஓங்கி மண்டைலே போடுவேன்டா. இந்த நாலு வருஷத்துல ஒரு நாளாச்சும் உன் காதல் கதைய பத்தி சொல்லாம இருந்திருக்கியாடா? என்கிட்ட சொன்னத அவ கிட்ட போய் சொல்லுறதுக்கென்ன உனக்கு? ஒழுங்கா சொல்லிடு” அஷ்வின் கடிந்து கொள்ளவும் ஒரு வழியாய் சம்மதித்தான் கார்த்திக். அவர்கள் ப்ளான் செய்தப்படியே february 14 அன்று இரவு பன்னிரண்டுக்கு கார்த்திக் ஐஷுவைப் பார்க்க செல்ல தயாராக இருந்தான். மெடிக்கல் conference ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த அஷ்வினின் புத்தக பையிலேயே ஐஷுவிர்க்காக கார்த்திக் ஆசையாய் வாங்கியிருந்த பர்த்டே கார்ட் மாட்டிக்கொண்டது அங்கு சென்ற பிறகுதான் அவனுக்கே தெரியும். “டேய் ஐஷுக்கு நீ வாங்கிய கார்ட் என்னோட bag லயே இருக்குடா. இந்த தடவையும் சொதப்பிட்டியா” அஷ்வின் கால் செய்து கேட்ட போது “ம்ம்ம்ம் பரவாலடா அதனால் என்ன. எனக்கென்னவோ என் காதலை நீதான் ஐஷு கிட்ட சொல்ல போறனு தோணுது நண்பா” என்று கார்த்திக் சிரித்தான். “இப்படிலாம் சொல்லி தப்பிக்காத. உதை விழும்டா. ஒழுங்க வேற ஒரு கார்ட் வாங்கிட்டு போ. அப்படியே நீ வாங்கி இருந்த அந்த ரிங் ஐயும் மறந்துடாம எடுத்துட்டு போ. நல்ல செய்தியோட வா. வெயிட் பண்ணுவேன். all the வெரி பெஸ்ட்டா மச்சான்” அஷ்வின் வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தான் அவனை.

‘என்ன காக்க வந்த சாமிடா அவ. இன்னைக்கு நான் உயிரோட இருக்கேனா ஐஷுதான்டா காரணம்’ கார்த்திக் அன்றாடம் அஷ்வினிடம் சொன்ன வார்த்தைகள் அது. இன்னும் அவனது காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது. எட்டு வருடங்கள் கடந்தும். “அவனோட உயிரை காப்பாற்றிய சாமிடி நீ. ஆனா அவனோட உயிரை கொன்ன பாவிடி நா. இந்த உண்மையை நான் எப்படிடி உன்கிட்ட சொல்ல போறேன். எந்த உண்மையை மறக்க நினைச்சு இத்தனை நாள் மறக்க முடியாம பயந்து பயந்து ஓடினேனோ அந்த உண்மையை நான் எப்படி உன்கிட்ட சொல்ல போறேன் ஐஷு!” கார்த்திக் வாய்விட்டு கத்தி அவனது அறை ஜன்னலை ஓங்கி குத்தி அந்த கண்ணாடி ஜன்னல் சுக்கு நூறாகி அவன் கையைப் பதம் பார்த்தது. ரத்தம் வழிந்து ஓடியது அவன் கை விரல்களில். அவன் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது.

தொடரும்

மேகா.  

நெஞ்சாத்தியே (1௦)

பாகம் 1௦

பவித்ராவுக்கு அன்றிரவு தூக்கமும் வரவில்லை. வாசு பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். பதினான்கு பிப்ரவரி, அவள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். எட்டு வருடங்களுக்கு முன் அவள் வாழ்வில் நடந்த அந்த சம்பவம். இன்னும் ஒரு மறக்கமுடியாத நாளாய் அன்று. சற்று முன்னர் “ஏன் பவி இந்த நாள்லதான் நிச்சயதார்த்தம் நடக்கனும்னு பிடிவாதமா இருக்க? என்ன நாள்னு தெரியும்ல?” வாசு அவளிடம் கேட்டபோது அவனைப் பார்த்தாள் மெல்லியதாக சிரித்தபடியே. “என்னம்மா சிரிக்கிற? உன் மனசுல எவ்வளோ காயம் இருக்குனு எனக்கு தெரியாதா? இருந்தாலும் நீ முடிவு பண்ணுனா அதுல ஒரு காரணம் இருக்கும்னு நான் நம்பறேன்” வாசு அவளது தோள்களை பிடித்து அவள் கண்ணைப் பார்த்தான். அது ஆயிரமாயிரம் கதைகளை சொல்வது போல அவனுக்கு தோன்றியது. “என்னை நம்புரீங்கள்ல? உங்க மனைவி என்ன செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்னு உங்களுக்கு தெரிஞ்சா போதுங்க எனக்கு. வேற எதை பத்தியும் எனக்கு கவலை இல்லை. என்னோட தைரியம், பலம், நம்பிக்கை எல்லாமே நீங்கதான்” பவித்ரா அவன் நெஞ்சோடு சாய்ந்துக்கொண்டாள். அவள் கண்களின் ஓரத்தில் சிறு நீர்துளி. அவனது சட்டையை லேசாக நனைத்தது. வாழ்கையில் ஒரு பெண்ணுக்கு இதை விட வேற என்ன வேண்டும். தன் மனைவி மேல் உயிரையே வைத்திருக்கும் கணவன், அதற்கும் மேலாக அவள் மேல் நம்பிக்கை அவனுக்கு அதிகமாகவே இருந்தது. அவ என்ன முடிவு எடுத்தாலும் அது சரியாதான் இருக்கும்னு கண்ண மூடிக்கிட்டு சரி சொல்லுவான். அப்படிதான் அஷ்வின் ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் பிப்ரவரி பதினாலு அன்று வைச்சுக்கலாம்னு பவித்ரா சொன்ன போது தலை ஆட்டினான். ஆனால் இந்த முறை மனதில் ஒரு நெருடல். ஏன் இந்த தினத்தை அவள் தேர்ந்தெடுத்தாள். “ஒவ்வொரு வருஷமும் இந்த தினத்தை எல்லாரும் சந்தோஷமா கொண்டாடுவாங்க. ஆனா நமக்கு மட்டும் இது துயரமான ஒரு நாளா போச்சுங்க. எவ்வளவு வருடம் கடந்தாலும் நம்மனால மறக்க முடியாது. ஆனா கடந்து வரலாம்ல. அஷ்வின் கல்யாணம் ஒண்ணுதான் அதற்கான வழி. என் காயத்திற்கான மருந்து. இனி இந்த நாள் ஒரு சந்தோஷமான நாளா இருக்கணும் நம்ம எல்லாருக்குமே” பவித்ரா கலங்கிய கண்களுடன் கூறினாள். அவள் கண்ணீரை துடைத்து விட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்துக்கொண்டான் அவன் “இனி சந்தோசம் மட்டுமே நம்ம வாழ்க்கைல நிறைந்திருக்கும்மா” என்றபடியே. வாசு உறங்கிய பின்னும் அவளால் ஏனோ உறங்க முடியவில்லை. திடீரென்று பக்கத்துக்கு அறையில் டமார் என்று சத்தம் கேட்டு பாது போய் ஓடி சென்றுப் பார்த்தாள். அங்கு அஷ்வின் ஜன்னல் கம்பிகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு மரம் போல நின்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தரையை. தரையில் உடைந்த கண்ணாடி துண்டுகள். அவன் கைகளில் வேறு ரத்தம் வழிந்தது. அதை பார்த்து அதிர்ச்சியான பவித்ரா ஓடி சென்று அவன் கைகளைப் பற்றி இழுத்தாள். “என்னடா ஆச்சு அஷ்வின்? எப்படி இந்த கண்ணாடி உடைந்தது. உன் கையில வேற ரத்தம்?” அவனை பிடித்து உளுக்கினாள். அவன் பதில் பேச வில்லை. தலையை குனிந்திருந்தான். தரையில் அந்த பர்த்டே கார்ட் கிடந்தது. எடுத்து பார்த்தவள் ஒரு முறை அஷ்வினையும் பார்த்தாள். ‘ஐஷு யார்னு அஷ்வினுக்கு தெரிஞ்சிருக்குமோ?’ மனதில் ஒரு கலவரம் அவளுக்குள்ளே. யோசித்து நேரத்தை வீணாக்க முடியாது. முதலில் அவன் கையில் வழியும் ரத்தத்தை நிறுத்த வேண்டும் என்று எண்ணியவள் அவன் கையைப் பிடித்து அவன் அறையில் இருந்த குளியல் அறைக்கு அழைத்து சென்று அவன் கையை நீரில் கழுவினாள். பின் அவன் அறையில் இருந்த முதலுதவி பெட்டியை திறந்து அவன் காயத்திற்கு மருந்திட்டு கட்டுப் போட்டாள். அவன் அமைதியாக தன் பெட்டில் அமர்ந்திருந்தான். அவளும் அவனிடம் எதையும் கேட்கவில்லை. பின் தரையில் கிடந்த கண்ணாடி துண்டுகளை எடுத்து ஒரு பழைய நாளிதழில் வைத்து மடித்து அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு வெளியில் வந்தாள். அஷ்வினிடம் என்ன ஏது என்று கேட்க அவளுக்கு மனம் வரவில்லை அந்த கார்டை பார்த்த அடுத்த கணம். அமைதியாக ஒன்றும் பேசாமலே வெளியில் வந்து சோபாவில் சாய்ந்தாள்.

கார்த்திக்! “ஐஷு சந்தோஷமா இருக்கணும் கா எப்பவுமே. அது மட்டும்தான் என்னோட ஆசை. வேற என்ன பெருசா இருந்துட போகுது அவளை தவிர என் வாழ்க்கைல” கார்த்திக் கடைசியாக அவளிடம் கூறிய வார்த்தைகள். அஷ்வின் போலவே கார்த்திக்கும் அவள் தம்பியாகி போனான் அந்த நான்கு வருடங்களில். அவர்களது வீடு காலேஜ் ஹாஸ்டலில் இருந்து ஒரு மணி நேர பயணம்தான். அதனாலேயே சனி ஞாயிறு கிழமைகளில் அஷ்வினோடு கார்த்திக்கும் அங்கு வந்து தங்குவது வழக்கமாகிவிட்டது. அக்கா அக்கா என்று வாய் நிறைய கூப்பிடுவான். அந்த கள்ளங்கபடமற்ற அந்த சிரிப்பு மட்டும் இன்னும் அவள் கண்களில் இருந்து மறையவே இல்லை. “அக்கா நீங்க வேணும்னா பாருங்க குட்டி ஐஷு தான் வந்து பொறக்க போறா”, அன்று பேசிகொண்டிருக்கும் போது அவன் சொன்னதும் “எதுக்குடா ஐஷு பொறக்கணும் ஏன் குட்டி அஷ்வின் பொறக்க மாட்டானா?” என்று அஷ்வின் சண்டைக்கு வந்தான். “எங்கக்கா முகத்தை பாருடா. எவ்வளோ அழகா இருக்கு. கண்டிப்பா ஐஷு தான். அடிச்சு சொல்லுவேன். நீ வேணும்னா பாரு” கார்த்திக் உறுதியாக கூறினான். “ஏன்டா அடிச்சிக்கிறீங்க. யார் பொறந்தா என்ன. ரெண்டு மாமாணுங்க இருந்து பார்த்துக்கோங்க கண்ணும் கருத்துமா” பவித்ரா சிரித்தாள். “க்கா நீங்க அதெல்லாம் சொல்லவே வேணாம். விழாவே கொண்டாடிடலாம். ஐஷு பாப்பா தான் பொறப்பா பாருங்க. இந்த தாய் மாமன் எவ்வளோ சீர் செய்யறேன்னு மட்டும் பாருங்க” கார்த்திக் அவ்வளோ உரிமையோடு சொன்ன போது அஷ்வின் நெகிழ்ந்துதான் போனான், பவித்ராவும் கூட. “அது சரி அக்கா உங்களுக்கு வளைக்காப்பு எப்ப? இந்நேரம் செஞ்சிருக்கனுமே” கார்த்திக் கேட்டதும் பவித்ரா முகம் வாடியது. “அதுலாம் வீட்டுல அம்மா இல்லனா மாமியார் இருந்தா எடுத்து செஞ்சிருப்பாங்க. எங்களுக்குத்தான் யாருமே இல்லையே” பவித்ராவின் வாடிய முகத்தைக் கண்டவன் மனம் உண்மையிலேயே கலங்கியது. “என்னக்கா நீ. இதுக்கு போய் வருத்தப்படற. தம்பி நான் எதுக்கு இருக்கேன். இதோ அஷ்வின் இருக்கான். நீ பாரு. எப்படி சிறப்பா செய்யறோம்னு. எங்க ஊருல பெரிய விழாவே கொண்டாடுவோம். உங்களால தூரமா travel பண்ண முடியாதுல இப்ப. இல்லனா அங்கேயே கூட்டிட்டு போய் செய்வேன். அங்க நமக்கு ஒரு பெரிய சொந்தமே இருக்கு. எல்லாரும் ரொம்ப பாசக்காரங்க. இப்பவே அம்மாவுக்கு கால் பண்ணி கேட்டு நானே எல்லாத்தையும் செய்யறேன். டேய் செஞ்சிடலாம்தானே?” கார்த்திக் அஷ்வினிடம் கேட்டதும் “டேய் எனக்கு என்ன தெரியும்? திடீர்ன்னு சொல்லுற. என்ன செய்யறது?” திரு திருவென்று விழித்தான் அஷ்வின். “அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். கூட இருந்து எடுபிடி வேலை செய்டா தம்பி அண்ணனுக்கு. அது போதும்” கார்த்திக் சொல்லி நகைத்ததும் புருவத்தை உயர்த்தினான் அஷ்வின். ஒரு வாரத்தில் எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தது. வீடு அலாங்காரம், சமையல் எல்லாவற்றையும் கார்த்திக்கே முன்னின்று கவனித்தான். பவித்ராவிற்கு தாய்வீட்டு சீர் கார்த்திக்கின் ஊரிலிருந்தே வந்தது. அவனது அம்மாவை அவன் வரவழைத்திருந்தான். கார்த்திக்கின் அம்மாவும் பவித்ராவின் வளைக்காப்பு விழாவை மிகச் சிறப்பாகவே நடத்திக் கொடுத்தார். மூணு கட்டு சோறு அவள் முன் வைக்கப்பட்டது. “பவித்ரா இதுல ஒன்ன திறக்கனும்மா நீ. தயிர்சாதம், புளியோதரை, பொங்கல்னு மூணு விதமான சாதம் இருக்கு” னு அம்மா சொன்னதும் ஆசையாய் திறந்தவளுக்கு பொங்கல் தான் வந்தது. “அய் பொங்கல் வந்தா பொண்ணுதான்லம்மா. நீ சொன்னியே” கார்த்திக் தான் குதிச்சிட்டு இருந்தான். “ஆமாடா” அம்மாவும் சிரித்தார். சரி அடுத்த கட்டையும் திறங்க. இப்ப தெரிஞ்சிடும்” என்று அஷ்வின் சந்தேகத்தோடு கார்த்திக்கை பார்த்தான். அடுத்த கட்டை அவள் திறந்ததும் அதிலும் பொங்கலே வந்தது. எல்லாருக்கும் ஆச்சர்யம். மூனாவது கட்டிலும் அதே பொங்கல் தான். “ah நான் மூணு விதமான சாதம் தானே செஞ்சு வச்சேன். டேய் கார்த்திக் உன்ன மூணு சாதத்தையும் தானே கட்டி வைக்க சொன்னேன்” அம்மா கேட்டப்போது “அது எப்படி மூணும் பொங்கல் ஆணுச்சுனு எனக்கு தெரியும்மா. எல்லாம் நம்ம அண்ண பண்ணுன வேலை. பொண்ணுதான் வந்து பொறக்கனுமாம். தப்பி தவறி கூட பையன் பொறக்கரதுக்கான அறிகுறியே இருக்க கூடாதுன்னு இப்படி மூணுமே பொங்கலா கட்டி வச்சிருக்கான்” அஷ்வின் சொன்னதும் பவித்ரா சிரித்தாள். “டேய் மாப்ள, என்ன இப்ப பையனா பொண்ணானு தெரியனும்தானே. அதெல்லாம் ஆல்ரெடி ஸ்கேன் பன்னுனாப்ப சொல்லிட்டாங்கப்பா. மகாலட்சுமிதான் பொறக்க போறா” வாசு சந்தோஷமாக சொன்னதும் உடனே கார்த்திக் “ஐஸ்வர்யத்தோட தேவதை வர போறான்னு சொல்லுங்க மாமா” என்று குதூகலத்தோடு கூறினான். அன்று வளைகாப்பு விழா மிக சிறப்பாகவே நடந்தேறியது. கை நிறைய வளையல் குலுங்க கன்னம் ரெண்டிலும் சந்தனம் மணக்க பவித்ரா அமர்ந்திருந்தாள் அன்றிரவு. அனைவரும் உறங்க சென்ற பிறகும் கார்த்திக் அவளோடு பேசிக்கொண்டிருந்தான். “அக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களை இப்படி பார்க்க. இந்த சந்தோஷம் இந்த குட்டி பொண்ணு பிறந்ததும் இன்னும் இரட்டிப்பாகனும்” கார்த்திக் சொன்னதும் பவித்ராவின் கண்களில் கண்ணீர் திடீரென்று. “என்னக்கா ஆச்சு? ஏதாவது வலி எடுக்குதா சொல்லுங்க” பதற்றமானான் கார்த்திக். “இல்லடா. சந்தோஷமா இருக்கு. இதெல்லாம் எனக்கு எடுத்து செய்ய யாரும் இல்லைன்னு நினைச்சேன். உங்க மாமா, அஷ்வின் கிட்ட கூட நான் வாய் திறந்து கேட்கல. அவங்களுக்கும் தெரியாது. ஒவ்வொரு பெண்ணும் முதல் தடவை தாயாகும் போது இந்த சந்தோஷத்தை பெறனும்னு நினைப்பா. எனக்கும் அந்த ஆசை நிறையவே இருந்தது. ஆனா நடக்காதுன்னு நினைச்சேன்டா. இதெல்லாம் உன்னால தான்டா தம்பி” பவித்ரா தரையில் அமர்ந்திருந்த கார்த்திக்கின் தலையில் பாசமாக கை வைத்தாள். “அக்கா… இதுக்கு போய் ஏன் கண்கலங்குரீங்க. தம்பி நான் இருக்கேன்க்கா. இது என்னோட குடும்பம். அஷ்வின் என் உயிர் நண்பன். அவனோட குடும்பம் என் குடும்பம்க்கா. எனக்கு கூட பொறந்த அக்கா தங்கச்சி யாரும் இல்ல. உங்களைதான் என் அக்காவா நான் பார்க்கிறேன். ஒரு சகோதரியோட பாசம் இப்படிதான் இருக்கும்னு உங்ககிட்டதான் தெரிஞ்சிக்கிட்டேன். அதே மாதிரி ஒரு சகோதரனா இப்படிதான் அன்பை காட்டனும்னும் எனக்கு கிடைச்ச வரம் இது. ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா. ஐஷு தான் வர முடில. அவ இருந்திருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும்” கார்த்திக் சொன்னதும் “டேய் அவ ரொம்ப கொடுத்து வச்சவடா. உன்ன மாதிரி ஒரு பையன் தேடி எடுத்தாலும் கிடைக்க மாட்டான்” பவித்ரா மனதார கூறினாள். “அட போங்கக்கா. அவ கிடைக்க நான் தான் ஜென்மம் ஜென்மமாய் காத்திருக்கணும் போல. எப்போ அவ கிட்ட லவ்வை சொல்லி, எப்போ அவ வீட்டுல பேசி சம்மதம் கிடைச்சு… தெரிலக்கா நடக்குமான்னு” கார்த்திக் சோகமானான். “ஏன்டா. உன் சொந்த மாமா பொண்ணுதானே. என்ன பிரச்சனை வர போகுது?” பவித்ரா புரியாமல் கேட்க. “அதானே பிரச்சனையே. சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்ந்தோம். என்னை நம்பி அவளை விட்டுட்டு போவாங்க, வெளிய அனுப்புவாங்க என் கூட. என்னையும் ஒரு மகனா என் மாமா நினைச்சாரு. இப்ப போய் பொண்ண கட்டிக்கொடுங்கனு கேட்டா அப்பறம் அவரோட நம்பிக்கையை உடைச்ச மாதிரிதானே. அதான் தயக்கமாவே இருக்கு” கார்த்திக் வருத்தப்பட்டான். “ஏன் அப்படி நினைக்கிற. உன் மேல அவ்வளவு நம்பிக்கை வச்சவர் கண்டிப்பா அவர் பொண்ணை நீ நல்லா பார்துப்பனு நம்பிக்கை இருக்காதா? நீ கவலையை விடுடா. இந்த அக்கா வந்து பொண்ணு கேட்கறேன் உனக்காக. அவ நம்ம வீட்டு மருமக. என் தம்பிக்குத்தான். சரியா” பவித்ரா இப்படி கூரியதும் கார்த்திக் முகத்தில் ஒரு பரவசம். “அப்போ ஐஸ்வர்யாவ வந்து பொண்ணு கேட்பியாக்கா?”, கார்த்திக் ஆவலாய் கேட்க “நானே நடத்தி வைக்கிறேன் கல்யாணத்தை. என் கையாலேயே ஆரத்தி எடுத்து இந்த வீட்டு மருமகளா கூடிட்டு வரேன். இது சத்தியம்!” பவித்ரா உணர்ச்சிவசப்பட்டு கூறிய வார்த்தை அது அன்று. “இந்த வீட்டு மருமகளா என் தம்பி மனைவியா நான் ஐஸ்வர்யாவை இந்த வீடுக்கு கூட்டிட்டு வரேன்னு அன்னைக்கு சத்தியம் பண்ணினேன் இதே இடத்தில் அமர்ந்து. என்ன ஒன்னு கார்த்திக் இருக்க வேண்டிய இடத்தில் அஷ்வின் இருக்கிறான். ஆனா அவள சந்தோஷமா நான் பார்த்துக்கறேன்னு கார்த்திக்கு கடைசியா வாக்கு கொடுத்தேன். அது கண்டிப்பா நடக்கணும். ஐஸ்வர்யா அஷ்வினை கல்யாணம் பண்ணினாதான் சந்தோஷமா இருப்பாடா. அவ அவன் மேல உயிரா இருக்கா. கார்த்திக் உன் ஐஷுவ அஷ்வின் சந்தோஷமா நல்லா வச்சிப்பான்டா. உனக்கு ஐஷு எப்படியோ இப்ப அஷ்வினுக்கும் அவதான் வாழ்க்கை. இந்த நிச்சயதார்த்தம் எந்தவித தடங்கலும் இன்றி நடக்கணும் விடிந்ததும். கார்த்திக் நீதான் துணையா இருக்கணும்டா அக்காவுக்கு” பவித்ரா மனதில் உறுதியாக இருந்தாள். என்ன ஆனாலும் ஐஸ்வர்யாதான்  இந்த வீட்டு மருமகள்! அதில் எந்த மாற்றமும் கிடையாது. நாளை விடிந்ததும் அஷ்வின் ஐஸ்வர்யா நிச்சயம் நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்துடனே சோபாவில் சாய்ந்து அசதியில் உறங்கியும் போனாள் பவித்ரா. ஆனால் அஷ்வின் அறையின் விளக்கு மட்டும் எரிந்துக் கொண்டிருந்தது.

தொடரும்…

மேகா 

நெஞ்சாத்தியே (1 1)

பாகம் 11

அன்று மாலை நிச்சயதார்த்த விழா ஐஸ்வர்யாவின் இல்லத்தில் சிறப்பாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு வீட்டார் சார்பிலும் சொந்தபந்தங்களும் நண்பர்களும் கூடி இருந்தனர். விழாவும் கோலாகலமாகவே நடந்தேறியது. ஆனால் அஷ்வினின் கையில் அடிபட்டு இருந்ததை பார்த்துவிட்ட ஐஸ்வர்யாவுக்குதான் முகத்தில் கலையே இல்லை. “கொஞ்சம் சிரிங்க ப்ளிஸ்” என்று photographer வேறு அடிக்கடி சொல்லி சொல்லி படம் பிடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அவர் கவலை. படங்கள் அழகாக விழனுமே. ஐஸ்வர்யாவும் அப்போ அப்போ போட்டோவுக்காக மட்டும் சிரித்து வைத்தாள். அஷ்வின் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. எப்பவும் போலவே சாதாரணமாகவே இருந்தான். ஆனால் அன்று புடவையில் தேவதை போல அலங்காரம் செய்யப்பட்டு அவன் முன்னே நின்றிருந்த ஐஸ்வர்யாவை பார்த்து அவன் பிரமித்து போக வில்லை. வெகு சாதாரன ஒரு புன்னகை மட்டுமே வெளிப்படுத்தினான். தலை குனிந்து நின்றிருந்த ஐஸ்வர்யா அஷ்வினின் கை விரலில் மோதிரம் அணியும் போதுதான் அதிர்ச்சியுடன்   நிமிர்ந்து பார்த்தாள். அவள் எதிரே நின்றிருந்தவனைப் பார்த்து “என்னாச்சு” என்று மெதுவாக குரல் எழுப்பினாள். அவன் அவளைக் கண்டும் காணாதது போல இருந்தான். ஐஸ்வர்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அஷ்வின் அவளை அவ்வளவாகக் கண்டுக் கொள்ளாதது அவளுக்கு வேதனையாகவே இருந்தது. என்ன ஆச்சு இவனுக்கு? நைட் நல்லாதானே இருந்தான். இப்போ ஏன் நம்ம பார்த்தும் பார்க்காதது போல இருக்கிறான். முகத்தில் எந்த ஒரு சந்தோஷமும் இல்லை. எப்போதும் சிரித்தவன்னமே இருக்கும் அவன் முகம் இன்று ஏன் ஏதோ சோகம் குடிக்கொண்டிருப்பது போல தெரிகிறது? கையில் வேறு அடிப்பட்டிருக்கிறது? எப்படி நடந்தது. காலையில் வரும் குட் மார்னிங் மெசேஜ் வராத போதே ஐஸ்வர்யாவிற்கு ஏதோ சரி இல்லாத மாதிரியே தோன்றியது. அவள் மோதிரம் அணிவித்தப் பிறகு “சரி இப்போ மணமகன் மணமகள் விரலில் மோதிரத்தை அணிவிக்கவும்” என்று கூறியதும், பவித்ரா அஷ்வினிடம் நிச்சயதார்த்த மோதிரத்தை நீட்டினாள். முதலில் அதை சரியாக பார்க்காதவன் அதை வாங்கி அவள் விரலில் அணிக்கும் அந்த நொடியில் பார்த்துவிட்டான். அப்படியே அசைவற்று நின்று விட்டான். இந்த மோதிரம் எப்படி இங்கே? அதுவும் தன் அக்காவிடம்? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அன்று கார்த்திக் ஐஸ்வர்யாவைப் பார்த்து பிறந்தநாள் கார்ட் கொடுக்கும் போது இன்னொரு கையில் அவளிடம் கொடுக்காமல் மறைத்து வைத்திருந்த அதே மோதிரம்! இப்போது அஷ்வின் அதை அவள் கையில் அணிவிக்கிறான். அந்த மோதிரத்தை ஐஸ்வர்யாவிற்கு பரிசளிக்க வாங்கும் போது அந்த டிசைன் தான் அழகா இருக்கு. அதுதான் வேண்டும் என்று அதை தேர்ந்தேடுத்தவனே அஷ்வின் தான். “இதுக்குதான் டா உன்ன கூட்டிட்டு வந்தேன். என்ன விட உனக்குத்தான் நல்லா தெரியுது ஐஷுவிற்கு எது அழாகா இருக்கும்னு” கார்த்திக் அன்று கூறியபோது, “ஆமாடா உன் கதையலாம் டெய்லி கேட்டுட்டு இருக்கேனே. உன்னவிட எனக்குதான் அவளை பற்றி நெறைய தெரிஞ்சிருக்கு. எது பிடிக்கும் பிடிக்காதுன்னு” அஷ்வினுக்கு அன்று நடந்த அந்த நிகழ்வு மனக்கண் முன் வந்தது. “என்னடா பார்த்துட்டு இருக்க? சட்டுனு மோதிரத்தை அணிவி” பவித்ரா அவசரப்படுத்தினாள். பவித்ராவை பார்த்து ஒரு புன்னகை. அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் பவித்ரா வேறு பக்கம் தலையை திருப்பினாள். ‘என்னை மன்னிச்சிடுடா அஷ்வின். இந்த கல்யாணம் நடக்கணும். கார்த்திக்கு நான் செஞ்சுக் கொடுத்த சத்தியத்தை காப்பாத்த எனக்கு வேறு வழி தெரில’ மனதுக்குள்ளே கலங்கினாள் அவள்.

நிச்சயதார்த்த விருந்தும் முடிவுற்றது. உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் இன்முகத்துடன் அங்கிருந்து புறப்பட்ட வேளையில், அஷ்வின் ஐஸ்வர்யாவுடன் தனியே பேச வேண்டும் என்று சைகை காண்பித்தான். அவ்வளவு நேரம் கலையிழந்து காணப்பட்டவள் அஷ்வினிடம் இருந்து வந்த கண்ணசைவில் குதூகலித்தாள். அவள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் தன் காரை பார்க் செய்த இடத்தில் அவளுக்காக காத்திருப்பதாகக் கூறியவன் அங்கிருந்து புறப்பட்ட பத்து நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தாள் அவள். அவள் அண்ணி தீபாவிடம் அஷ்வினை பார்த்து பேச செல்வதாக கூறிவிட்டுதான் வந்திருந்தாள். அஷ்வினின் அக்காவும் மாமாவும் முன்கூட்டியே அவர்களது காரில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர். அவளுக்காக காரின் கதவில் சற்று சாய்ந்தபடி நின்றவாறே காத்திருந்தான். அவள் வருவதை பார்த்து விட்டான். அவளை காணாதவன் போல பாசாங்கு செய்தவண்ணம் வேறு திசையில் தன் பார்வையை திருப்பினான். “என்ன சார், வேறு எங்கேயோ பார்த்துட்டு இருக்கீங்க. என்ன யோசனை” அருகில் வந்தவள் அவன் எதிரே நின்று அவனைப் பார்த்தாள். “சும்மா மரம் செடி கொடி எல்லாம் பார்த்துட்டு இருக்கேன்” அவனும் ஏதோ சொல்லிவைத்தான். “அதான் நா வந்துட்டேன்ல இப்பவும் எதுக்கு மரஞ்செடிய பார்க்கணும்” சலித்துக் கொண்டாள் அவள். “ம்ம்ம்” அது மட்டும்தான் அவனிடம் இருந்து பதிலாக வந்தது. “என்னதான் ஆச்சு உங்களுக்கு? எப்படி கை அடிபட்டுச்சு?” அவனது கையைப் பிடித்து அவன் விரல்களைப் பார்த்தாள். கை விரல்கள் தான் காயமாக இருந்தது. அவள் அணிவித்த மோதிரம் அவன் கை விரலில் இல்லை. “ரிங் எங்க அஷ்வின்?” ஐஸ்வர்யாவின் முகத்தில் கலவரம். அவன் சொல்வதறியாது திகைத்தான். திடீரென்று அவள் கையைப் பிடித்து பார்ப்பாள் என்று அவன் நினைக்கவே இல்லை. அவள் வீட்டிலிருந்து வெளியாகும் போது அவன் விரலில் இருந்த மோதிரத்தை அவன் கழட்டி தன் pant பாக்கெட்டில் வைத்தான். “இல்ல விரல் காயமா இருக்குல. வலியா இருக்குனு கழட்டி வச்சிருக்கேன். ரிங் அழகா இருந்தது. யாரு சூஸ் பண்ணுனா” அவன் பேச்சை மாற்றினான். “நான்தாண்டா. உனக்கு பிடிச்சிருக்கா? தேடி தேடி வாங்கினேன்” அவள் சட்டென பூரித்துப்போனாள். “ம்ம்ம் வெரி நைஸ்” என்று கூறியவனின் கண்கள் அவளது மோதிரத்தின் மேல் சென்றது. “எங்கே நேற்று நான் கிப்ட் பண்ணுன ரிங் காணோம்?” அவன் கண்கள் தேடின. இதோ left hand ல இருக்கே. engagement ரிங் தான் ரைட் ஹென்ட்ல போடணும்னு அதை கழட்டி left ஹென்ட் ல போட்டுட்டேன். ஆனா அஷ்வின் இந்த ரிங் ரியல்லி வெரி நைஸ். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நேத்து நீ கிப்ட் பண்ணுன ரிங் விட இதுதான் ரொம்பவே மனசுக்கு பிடிச்சிருக்கு. என் செல்லம், எப்படிடா எனக்கு பிடிச்ச மாதிரியே வாங்கிருக்க” என்று பரவசத்துடன் அவன் கன்னத்தை கிள்ளினாள். “ஆ” என்று அந்த சிறு வலியால் மெல்ல கத்தியவனின் மனதில் சொல்லமுடியா ஒரு மரண வலி. அவளை உயிராய் நேசித்து, கைகளைப்பிடித்து கண்களைப் பார்த்து, காதல் மொழி பேசி, என் வாழ்வு உன்னோடுதான் என்று உறுதியளித்து, காதல், ஊடல், கூடல் என்று அவளை முழுதாக புரிந்துக் கொண்ட அஷ்வினால் அவளுக்கு பிடித்த அமைப்பில் ஒரு மோதிரத்தை தேர்ந்தெடுக்க முடியவில்லை. ஆனால் முன் பின் பார்த்திராவிட்டாலும் கார்த்திக் சொன்ன கதைகளின் மூலம் அவனுக்கு அறிமுகமாகிய ஐஸ்வர்யாவிற்கு எது பிடிக்கும் என்பதை அஷ்வினால் சரியாக கணிக்க முடிந்தது. எதனால் இப்படி? ஒரு வேளை இவள் என்னவள், எனக்கு சொந்தமாக போகிறவள், என் மனைவியாக போகிறவள், நான் தேர்ந்தெடுக்கும் எதுவும் அவளுக்கும் பிடிக்கும் என்ற அதீத நம்பிக்கையிலா? அல்லது எப்படி இருந்தாலும் நான் தேர்ந்தெடுப்பதுதான் அவளுக்கு பிடிக்கும், பிடித்தாகனும் என்ற ஒரு கர்வமா? அல்லது அதான் காதலை ஏற்றுக்கொண்டுவிட்டாளே, நானே கதியாக இருக்கின்றாளே, நான் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று சொல்லும் அளவிற்கு நான் அவளுக்கு முக்கியமாயிற்றே, இனி இந்த மோதிரத்தின் மூலம்தான் என் காதலை நான் அவளுக்கு உணர்த்த வேண்டுமா என்ற ஒரு வித அலட்ச்சியத்தாலா? ஏன் அவனால் அவளுக்கு பிடித்தது போல ஒரு மோதிரத்தை கூட தேர்ந்தெடுக்க முடியாமல் போனது? மனதில் ஆயிரமாயிரம் கேள்வி. அஷ்வின் அவளிடம் தன் காதலை சொல்லும் போது எப்படியும் இவளைத்தான் மணக்க வேண்டும், இவள்தான் என் வாழ்க்கை துணை, என் மனைவி, என்ற ஒரு மனநிலையில் தான் இருந்தான். ஒரு வேளை கல்யாணம் செய்துக்கொள்ளதான் ஒரு பெண்ணை பார்த்திருப்பானோ? கார்த்திக் போல அவள் கிடைப்பாளா மாட்டாளா என்ற விடை கூட தெரியாமல், அவள் கிடைக்காவிட்டாலும் அவளை தான் காதலிப்பேன், அவள்தான் என் சந்தோஷம், கடைசிவரை என் காதல் மட்டுமே வாழ்ந்தாலே போதும் நான் அவளோடு வாழாவிட்டாலும் கூட என்று எதையும் எதிர்ப்பார்க்காமல் காதலித்திருந்தால் அவளுக்கு எது பிடிக்கும் என்பதை சரியாக கணித்திருக்க முடியுமோ என்னவோ? ஆக காதலின் வெற்றி திருமணம் என்பது எவ்வளவு பெரிய தவறான கூற்று. காதலின் வெற்றி எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி காதலிப்பது மட்டுமே என்பது மட்டும் அப்போது அவனுக்கு புரிந்தது.

“என்னடா என்னை இங்க வர சொல்லிட்டு, நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன், நீ ஏதோ யோசிச்சிட்டு இருக்க” என்று அவன் கைகளைப் பிடித்தாள் அவள். காயம்பட்டிருந்த விரல்களைப் பிடித்ததால் வலியால் கத்தினான். கைகளை சட்டென்று விட்டவள் அவன் கைகளைப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கின. “சாரிடா. ரொம்ப வலியா இருக்கா? எப்படி காயமாச்சுனு கேட்டதுக்கு பதிலே இல்லையே?” அவள் அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள். “இல்ல பரவால. அது சின்ன accident நேத்து நைட்” அவன் சொன்னதுதான் தாமதம், “வாட்? accident ah? அஷ்வின் உங்களுக்கு ஒன்னும் ஆகலையே? எப்படி accident? கார்லயா? என்னடா சொல்லுற? உனக்கு ஒன்னும் இல்லையே? நல்லாதானே இருக்க? ஏன் என்கிட்ட சொல்லாம மறைச்ச?” அவ பாட்டுக்கு பட பட வென்று பதற்றதுடன் அவனை பிடித்து குலுக்கினாள். “ ஹேய் ஐஷு எனக்கு ஒன்னும் இல்ல. நீ நினைக்கிற மாதிரிலாம் இல்ல. வீட்டுல விண்டோ கண்ணாடி உடைஞ்சு கைல குத்திடுச்சு. தாட்ஸ் ஆல். ஏன் இப்படி பதற்ற படர?” அஷ்வின் அவளது கைகளை விடுவித்தான். “இல்ல நா பயந்துட்டேன் accident னு சொன்னதும். thank god. இப்பதான் நிம்மதியா இருக்குடா” என்று சொன்ன ஐஸ்வர்யாவை கூர்ந்து பார்த்தவன் “ஏன் பயம் accident னு சொன்னதும்?” என்று கேட்டான். “என்னடா அதான் சொன்னேனே. எட்டு வருஷத்துக்கு முன்ன இதே நாள்ல என் கசின் accident ஆனான்னு. அது இன்னும் நியாபகத்துல இருக்கு. உனக்கும் ஏதாவதுனா தாங்க மாட்டேன்டா சத்தியமா சொல்றேன்” ஐஷு கண்களில் கண்ணீர். அதை துடைக்க கை எடுத்தவனை ஏதோ ஒன்று தடுத்தது. “எனக்கும் இப்படி ஆனா தாங்க மாட்டேனா என்ன அர்த்தம்? நானும் கார்த்திக்கும் ஒன்னா ஐஷு?” சட்டென்று அஷ்வின் இப்படி கேட்டது அவளை என்னவோ செய்தது. “ஏன் இப்படி கேட்கற? கார்த்திக் accident ஆகி இப்ப இல்லாமல் போன பிறகும் நான் இத்தனை வருடங்கள் அதை நினைத்து கவலைப்பட்டிருக்கிறேன். ஆனால் வாழ்க்கையே இல்லைன்னு நான் நினைச்சதில்லையே. நீ என் வாழ்க்கைடா. எப்படி நீயும் கார்த்திக்கும் ஒன்னாக முடியும்?” அவள் குரல் தளர்ந்தது. ஒரு வேளை கார்த்திக்கை தான் காதலித்திருக்கலாம் என்று அஷ்வின் நினைக்கிறானோ? மனதில் ஒரு வினா எழுந்தது அவளுக்கு. “பிறகு ஏன் நீ உன் பிறந்தநாளை இவ்வளவு ஆண்டுகள் கொண்டாடுவதை விட்ட ஐஷு? அவன் மேல கொஞ்சம் கூட உனக்கு லவ் இல்லையா?” இதை அவன் ஐஷுவின் காதலனாக கேட்கவில்லை. கார்த்திக்கின் நண்பனாக தான் கேட்டான். கார்த்திக்கும் ஐஸ்வர்யாவும் ஒன்று சேர வேண்டும் என்று மனதில் அவ்வளவு எதிர்ப்பார்ப்புகளை சுமந்து கொண்டு இருந்த கார்த்திக்கின் நண்பன் அஷ்வினாக கேட்டான். அவள் ஆம் என்று சொன்னால் நிச்சயமாக அவனுக்கு சந்தோஷம்தான். “என்ன உளருற? காதலா? எப்படி காதல்னு தப்பா புரிஞ்சிக்கிட்ட அஷ்வின்? அவன எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும். ஒண்ணுமே அறியாத சின்ன வயசுல இருந்து பழக்கம். அவனை ரொம்ப பிடிக்கும்னுதான் சொன்னேன். ஆனா அது காதலா, நட்பா, அன்பா எதுன்னு எனக்கு சொல்ல தெரில. ஏன் அவனுக்கே என் மேல அந்த லவ் இருந்திருக்குமானு கூட எனக்கு தெரியாது. அவன் இறக்கும் போது எனக்கு பதினெட்டு வயசுதான். அப்போ அவன் மேல இருந்த அன்புக்கு என்ன பெயர்னு எனக்கு சத்தியமா தெரில. இப்ப எனக்கு 26 வயசு. கண்டிப்பா எது காதல்னு புரிஞ்சிக்கிற பக்குவமும் வயசும் இருக்கு. உன் மேல உள்ளதுதான் காதல். புரிஞ்சதா?” அவளது குரலில் கடுமை தெரிந்தது. கோபமாக இருக்கிறாள் என்பது மட்டும் தெளிவாகியது அவனுக்கு. “ஐஷு இங்க பாரு என்னை. உன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன். அது தப்புனா சாரி. மன்னிச்சிடு என்னை. இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்காத” அவன் கெஞ்சியதும் அவளும் சமாதானம் ஆகினாள். “போதும் போடா. இதுக்குதான் என்னை கூப்பிட்டியா? நா எவ்வளோ ஆசையா வந்தேன். பர்த்டே அதுவுமா ஏதாவது ஸ்பெஷலா கிப்ட் கிடைக்கும்னு வேற நினைச்சேன்” என்று அவனைப் பார்த்து கண்ணடித்தவளுக்கு சட்டென்று வெட்கமும் வந்தது. “ம்ம்ம்ம் ஸ்பெஷல் கிப்ட் ஒன்னு கொடுக்கத்தான் கூப்பிட்டேன் உன்ன” என்று அஷ்வின் எவ்வித முகபாவனையும் இல்லாமலே கூறினான். “ஐ… என்னவாம். உங்க wife eh காக்க வைக்க வேண்டாமே” என்று கொஞ்சலுடன் கூறியவளைப் பார்த்து “என்ன wife ah? அதுக்குள்ளையா?” என்று அஷ்வின் கேட்டான். “பரிசம் போட்டா பாதி பொண்டாட்டியாமே. சொன்னாங்களே” தலை குனிந்தவளைப் பார்த்தவன் ஒன்றுமே பேசாமல் தன் கார் கதவைத் திறந்து அந்த கவரை எடுத்தான். “ஐஷு இந்த கிப்ட் உண்மையிலே ரொம்ப ஸ்பெஷல். உனக்கு யாராலையும் தர முடியாத கிப்ட். என்னால மட்டும்தான் தரமுடியும். கண்டிப்பா இது ரொம்பவே ஸ்பெஷல் தான். திறந்து பாரு” என்று அவளிடம் அதை நீட்டினான். “அப்படி என்ன இருக்கு இதுல” என்று ஆவலோடு திறந்து பார்த்தாள். ‘ஐ லவ் யூ ஐஸ்வர்யா… காதலுடன் உன் கார்த்திக்’ அந்த வரிகளைப் பார்த்தவள் சிலையாகி போனாள். அதிர்ச்சியுடன் அஷ்வினைப் பார்த்தாள். “கார்த்திக்?” அவளுக்கு பேச்சு வரவில்லை. “ஆமா கார்த்திக் உனக்கு கொடுக்க வைத்திருந்த கார்ட். உன்ன propose பண்ண அவன் எட்டு வருடத்திற்கு முன் எழுதி வைத்திருந்த கார்ட். கடைசியா அவன் என்ன சொல்ல வந்தான்னு எப்படியாவது தெரிஞ்சிக்க நினைச்சியே. அது இதுதான். சின்ன வயசுல இருந்து உன் மேல இருந்த காதலைத்தான் சொல்ல வந்தான். அதை சொல்லாமலே போயிட்டான். ஆனா அது தெரிஞ்சும் நான் உன்கிட்ட சொல்லலனா அது நான் என் நண்பனுக்கு செய்யற துரோகம்! எந்த ஒரு காதலனும் தன காதலிக்கு தர நினைக்காத, தரவே முடியாத பரிசு இது. நான் தந்திருக்கிறேன் ஐஸ்வர்யா உனக்கு” முதன் முறையாக அவள் முன் அவன் கலங்கிய கண்களோடு நின்றான். கலங்கியது கண்கள் மட்டும் அல்ல இருவரின் நெஞ்சமும்தான்.

தொடரும்

மேகா                        .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.