Jump to content

இந்தியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி!

285323-720x450.jpg

இந்தியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், நியூசிலாந்து அணி 80 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

வெலிங்டனில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டிம் செய்பர்ட், 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், காலீல் அஹமட், குர்ணல் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 220 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 139 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 80 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக, டோனி 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளையும், லொக்கி பெர்குசன், மிட்செல் சான்ட்னர், இஸ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டேர்ல் மிட்ஷெல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்தின் டிம் செய்பர்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்த தோல்வியானது ரி-20 போட்டிகளில் இந்தியா அணி பெற்றுக்கொண்ட மிகப் பெரிய தோல்வியாக அமைந்துள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு, அவுஸ்ரேலியா அணிக்கெதிராக 49 ஓட்டங்களால் பெற்ற தோல்வியே இந்தியாவின் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை மறு தினம் ஒக்லாந்தில் நடைபெறவுள்ளது.

 

http://athavannews.com/நியூசிலாந்து-அணிக்கெதி-15/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.