• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

வந்தேறு குடிகள், சிங்களவர்களே. ஆதாரத்துடன் நிரூபிப்பேன். விக்கிரமபாகு கருணாரட்ன.

Recommended Posts

Image may contain: 1 person, text

தமிழர்களே இலங்கைத்தீவின் பூர்வ குடிமக்கள். புத்த பிக்குவிற்கு பதிலடி கொடுத்த சிங்களவர்.....!!

பெப் 07,2019

இலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முது கெலும்பிருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமான விவாதமொன்றுக்கு வரவேண்டும். இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.

சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், வடக்கு தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும் தேரருக்குக் கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். வந்தேறுகுடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோருவது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் காரசாரமான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு: எல்லாவல மேதானந்த தேரர் ஒரு கல்விமானாக இருந்துகொண்டும், வரலாறு தெரிந்தும் சிங்கள மக்களைக் குஷிப்படுத்துவதற்கு போலிக் கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு இதுதான் வரலாறு இதிகாசம் என்றும் சுட்டிக் காட்டுகின்றார்.

இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இங்கு வந்த பின்னர்தான் பௌத்த மதம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது.

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது.

மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்.

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் எல்லாவல மேதானந்த தேரர் இது விடயம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்குத் தயாரா?அவர் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் என நான் சவால் விடுக்கிறேன்.

இப்படித் தெரிவித்தார் நவசமசமாஜக்கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுபினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.

(இது ஒரு மீள் பதிவாகும்)

Rasan Sri

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு   மூணாறு,  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந்தேதியன்று அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசித்து வந்த 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளின் மேல் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல், வீடுகளை மூடியது. அங்கு வசித்த 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து விட்டனர். இதில் 3 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீதமுள்ள 75 பேர் மண்ணுக்குள் சிக்கி கொண்டனர். தப்பி வந்த 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட 7-ந்தேதி மட்டும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கடந்த 7-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 52 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் 6-ம் நாளான நேற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. நவீன எந்திரங்கள் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த பாறைகள் தகர்த்து அகற்றப்பட்டன. நேற்று நடந்த மீட்பு பணியின்போது, வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான சிறுவன் உள்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் மண்ணுக்குள்ளேயே 5 நாட்களுக்கும் மேல் இருந்ததால் அவர்களின் முகம், உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன. இதன் காரணமாக அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. தேயிலை தோட்ட உரிமையாளர்களின் உதவியுடன் அவர்கள் யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3 உடல்கள் மீட்கப்பட்டதன் மூலம், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. 7-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) மீட்பு பணி தொடர்ந்து நடைபெற உள்ளது. https://www.dailythanthi.com/News/India/2020/08/13022049/The-death-toll-from-Moonar-landslides-has-risen-to.vpf
    • மக்கள் எமக்கு நல்ல பாடத்தை தந்துள்ளார்கள் – செல்வம் அடைக்கலநாதன்   மக்களின் சிந்தனை கூட்டமைப்பிற்கு உணர்தப்பட்டிருக்கின்றதுடன், எமக்கு நல்லபாடத்தை தந்திருக்கின்றார்கள் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா – கற்குழிபகுதியில் இன்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், “இந்த தேர்தலில் எமது இருப்பை கேள்விக்குறியாக்கியவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்றிருக்கின்றார்கள். தமிழர்கள் பூர்விகமானவர்கள் இல்லை என்று சொல்லும் அவர்கள். அந்த சிந்தனையை எப்படியும் நிலைநாட்டுவார்கள். எமது மக்களின் வாக்களிப்பை பார்க்கும்போது தேசியத்தை விட அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதை பார்க்கமுடிகின்றது. போரினால் பாதிக்கபட்ட மக்கள் அதனை எதிர்பார்பது தவறில்லை. ஒரு குடும்பம் எனக்கு அனைத்து வசதியும் கிடைத்திருப்பதாக கருதுகின்றபோது தான் அந்த இயலாமையை ஏனையவர்கள் பயன்படுத்த முடியாதநிலை ஏற்படும்.எனவே இந்த சூழலைவன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி கையாளப்போகின்றோம் என்பது மிகவும் சவாலானவிடயம். ஏனெனில் பெரும்பாண்மை பெற்றுள்ள அரசாங்கம் அபிவிருத்தியையும் முன்னெடுத்து அதனுடன் இணைந்து தேசியத்தின் தன்மையை உடைக்கின்ற செயற்பாட்டையும் மேற்கொள்ளும் இவை எமக்கு சவாலாகஇருக்கபோகின்றது. எனவே நாங்கள்தூங்கமுடியாது.எமது மண்ணைகாக்கின்ற பொறுப்பு எம் தலைமேலேசுமத்தப்பட்டிருக்கின்றது. தேர்தலின்போது கூட்டமைப்பிற்குள்ளேயும் பல பிரச்சினைகள் இருந்தது. வெளியில் இருந்தும் பலர் விமர்சித்தார்கள். எங்களுக்குள்ளேயே நாம் சண்டையிட்டோம். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி சிங்கள கட்சிகள் தமது காரியத்தை செயற்படுத்தியுள்ளார்கள்.” – என்றார்.   https://newuthayan.com/மக்கள்-எமக்கு-நல்ல-பாடத்/
    • பாலகி கமலா தாயார் சியாமளா கோபாலன். இன்று ஒரு ஜேர்மன் வானொலியில் தமிழிச்சி என்றே கூறினார்கள் 
    • வேல்முருகா வேல்முருகா  வேல்முருகா வேல் வேல்முருகா வேல்முருகா  வேல்முருகா வேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தண்டாயுதபாணி தெய்வத்துக்கு அரோகரா வள்ளிக்குறத்தியின் உள்ளம் கவர்ந்தவா வாராயோ வேல் முருகா மனக்குன்றிலேறும் பரங்குன்றநாதா வேலேறி வா முருகா புள்ளிக் கலாபமயில் துள்ளி அமர்ந்தவா புகழாளும் வேல் முருகா புறம் வென்ற நாதன் முகம் வந்த பாலா கொடியோடு வா முருகா ராஜாதி ராஜனே சந்யாசி கோலனே நீராடும் வேல் முருகா பழம் தந்தநாதா பழம் கண்டநாதா உன் பாதங்கள் தா முருகா செந்தூரில் மண்ணிலே நின்றாடி வென்றவா சீரலைவாய் வேல் முருகா உன் மந்தகாசம் அதில் நெஞ்சமாரும் நிலை என்றும் வேணும் முருகா வண்டாடும் சோலையும் கொண்டாடும் வேலவா வாராயோ வேல் முருகா வரம் தந்து ஆள மலை நின்ற தேவா உன் நாமங்கள் தேன் முருகா  
    • யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கு மூவரின் பெயர்கள் தேர்வானது   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவின் பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டுள்ளது. உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் முறையே இரண்டாவது, மூன்றாவதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஆகிய இருவரும் முறையே நான்காவது, ஐந்தாவது இடங்களையும் பெற்றுள்ளனர். https://newuthayan.com/யாழ்-பல்கலைக்கழக-துணைவே-2/ சற்குருவிற்கு நல்ல ஆளுமையிருக்கு  👍