Jump to content

இந்த நாடாளுமன்ற காலத்தில் இல்லாவிட்டால், அடுத்த நாடாளுமன்றத்திலாவது தீர்வு வரலாம்: எம்.ஏ.சுமந்திரன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடாளுமன்ற காலத்தில் இல்லாவிட்டால், அடுத்த நாடாளுமன்றத்திலாவது தீர்வு வரலாம்: எம்.ஏ.சுமந்திரன்!

February 8, 2019
49337445_10211051480482760_6968547264818

“புதிய அரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன்றன. தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, அடுத்த நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன”

இப்படி தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்.

வசந்தம் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் இரவு ஒளிப்பரபான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

‘நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு என்பவற்றை வைத்துப்பார்க்கும்போது, புதிய அரசமைப்பை உருவாக்க இவர்கள் ஒரு புள்ளியில் ஒன்றிணைவார்கள் என்று நீங்கள் எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்?’ என சுமந்திரன் எம்.பியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.

அவர் அந்த நேர்காணலில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நான் சொன்னது, இந்த முயற்சி தோல்வியடையுமாக இருந்தால் அதற்கான பொறுப்பை ஏற்கத் தயார். ஒக்டோபர் புரட்சியின்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஒருவரும் நீதிமன்றம் போயிருக்காவிட்டால் அது தோல்வியடைந்துவிட்டது என்று நான் கருதியிருக்கமாட்டேன்.

இந்த முயற்சி தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரைக்கும் நான் அதில் ஈடுபடுவேன். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துதான் அதில் ஈடுபடவேண்டும் என்றும் இல்லை.

 

நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை வழிநடத்தல் குழுவில் அவர்களின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த இடைக்கால அறிக்கை வெளிவரவேண்டும் என்பது அனைவரதும் ஏகமனதான தீர்மானம்.

வழிநடத்தல் குழுவில் உள்ள எவரும் இதனை எதிர்க்கவில்லை. இடைக்கால அறிக்கையை அனைவரும் சேர்ந்து தயாரித்திருந்தார்கள்.

அது வெளிவருகின்றபோதுதான் எங்கள் நிலைப்பாட்டையும் காட்டவேண்டும் என்று ஒவ்வொருவரும் இணைத்துக்கொண்டார்கள்.

அது தவிர இது பேசி இணக்கப்பாட்டுக்கு வந்த விடயம். இந்த அரசமைப்பு விடயத்தில் நாங்கள் மூடிய அறைக்குள் பல கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் பேசி ஏதோ ஒரு இணக்கப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருந்திருக்கிறது.

ஆனால் அப்படியான இணக்கப்பாட்டுக்கு வந்த விடயத்தை மக்களிடத்தில் சொல்லுவதற்கான அரசியல் துணிவை இன்னமும் அவர்களிடம் நான் காணவில்லை.

 

புதிய அரசமைப்பு உரிய தருணத்தில் வரும் என்று நாங்கள் நம்புகின்றோம். பிரதமர் இப்படிச் சொல்லிவிட்டார், ஜனாதிபதி அப்படிக் கூறிவிட்டார் என்பதை வைத்து நாம் கணிப்புக்களை மேற்கொள்ளமுடியாது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தமது அரசியல் நிலைப்பாடுகள், இருப்புகள், பாதுகாக்கவேண்டியவைகள் எல்லாம் இருக்கும்.

இது அரசியல். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் அவர்களும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். நாட்டுக்காக இதனைச் செய்து முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு வரும்.

52 நாள்கள் புரட்சி வந்தபோது எல்லாருமே சொல்லிவிட்டார்கள் இது முடிந்த கதை, புதிய அரசமைப்பு நகர்வே இனிக் கிடையாது என்று எல்லாம் கூறினார்கள். இந்த அறிக்கை வராது என்று எல்லாருமே முடிவு கட்டிவிட்டார்கள். ஆனால் இது வந்திருகின்றது.

நம்பிக்கை அத்தியாவசியம். எதிர்வரும் மார்ச் மாதத்தில் இதைவிட மும்முரமாக இந்த வேலைகள் நடைபெறக்கூடும். நாங்கள் கையைக் கட்டிக்கொண்டிருந்தால் எதுவுமே நடக்கப்போவதில்லை.

இதைச் செய்யாமல் நாடு முன்னேற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். புதிய அரசமைப்பு தேவை என்று மஹிந்த ராஜபக்‌ஷவே சொல்கிறார். ஆனால், தேர்தல் வருகின்றபடியால் இப்போது செய்யமுடியாது என்று அவர் கூறுகின்றார். ஏன் அவர் தேவை என்று சொல்கின்றார்? அவருடைய காலத்தில் புதிய அரசமைப்பு தேவை என்று அவர் ஒருநாளும் சொல்லவில்லை. பிரதமரும் புதிய அரசமைப்பு தேவை என்கிறார்.

ஏதோ ஒரு தருணத்தில் – வெகுவிரைவில் அனைத்துத் தரப்பும் இணங்கிப் புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும் என்ற ஒரு புள்ளிக்கு வருவார்கள்.

ஒக்டோபர் சதிப் புரட்சிக் காலத்தைப் பார்த்தால், திரும்ப அரசு மாற்றப்படும் என்று எவருக்கும் நம்பிக்கை இருந்திருக்கவில்லை. ஆனால், அது மாற்றப்பட்டது. ஆகையால் சரியானதைச் செய்கின்றபோது அதற்கு அனைவரும் இணங்கி வரவேண்டிய கட்டாயத் தேவை உண்டு.

புதிய அரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன்றன. தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, அடுத்த நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன” என்றார்.

Link to comment
Share on other sites

நாங்கள் இதனை நம்பிடடம் திருவாளர் கழுவல் 1 - ரணில் மாத்தையா ... இதனை சொல்ல உங்களுக்கு மானம் ரோசம் இல்லை .... தமிழர்களின் பிணம் திண்ணும் ரத்த காட்டேறிகள் .....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

. புதிய அரசமைப்பு தேவை என்று மஹிந்த ராஜபக்‌ஷவே சொல்கிறார்.

இப்ப இதை சாெல்லுகிறார் என்றால்,  தேர்தல் வருகுது தமிழன் தலையில் மிளகாய் அரைக்க ஆயத்தம் என்று சாெல்லுகிறார். இதைக் கூட புரிஞ்சுகாெள்ள முடியாத அலுக்காேசு, புளகாங்கிதத்தில மிதக்குது. இதைச்சாெல்லி வாக்கு சேர்க்கலாம் என்று கணக்குப்பாேட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vinu-chakravarthy-vk-ramasamy-adhisaya-p

என்னையா இது.? ஒரு கல்ப காலத்துக்கு மேல நாமளே செத்துடுவம்..! இவுங்க இன்னும்....🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, அடுத்த நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன” என்றார்.

 

அடக்கடவுளே! ஆசை யாரை விட்டது.

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

இந்த நாடாளுமன்ற காலத்தில் இல்லாவிட்டால், அடுத்த நாடாளுமன்றத்திலாவது தீர்வு வரலாம்: எம்.ஏ.சுமந்திரன்!

வருமா? வரலாமா?

1 வருஷத்தில வரும் என்டு சொல்லி மக்களை 4 வருஷத்துக்கு மேல ஏமாத்தி, சுயநலன்களை நிறைவேற்றி  பிழைப்பு நடத்தியாச்சு.

இனி வரலாம் என்டு சொல்லி மக்களை இன்னொரு 5 வருஷத்துக்கு ஏமாத்திற பிளானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இந்த நாடாளுமன்ற காலத்தில் இல்லாவிட்டால், அடுத்த நாடாளுமன்றத்திலாவது தீர்வு வரலாம்: எம்.ஏ.சுமந்திரன்!

இதென்ன கோதாரியாய் கிடக்கு.......
அடுத்த தைப்பொங்கல்....அடுத்த சித்திரை வருசம்...வாற தீபாவளி....எண்ட  நல்ல தின நம்பிக்கையள் முடிஞ்சுது.....

இனி அடுத்த நாடாளுமன்றத்திலாவது!!!!!!!! 😕

கிழிஞ்சுது போ.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு தீர்வு வேண்டாம் 
நீங்கள் வீட்ட போங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தைச் செய்வது தொடர்பான நம்பிக்கை என்பது அவரவர் எண்ணங்களையும், முயற்சிகளையும், அவ்விடயம் தொடர்பான அவருக்கிருக்கும் அறிவையும் பொறுத்தது.

அதுபோலத்தான் சிங்களவர்களிடமிருந்து தமிழருக்கு ஒரு நீதியான தீர்வைப் பெற்றுக்கொடுத்துவிட  முடியும் என்கிற சுமந்திரனது நம்பிக்கையும். இதைச் சொல்வதற்கு அவருக்கிருக்கும் உரிமையை நாம் குறைகூற முடியாது. ஏனென்றால், அவரையும் அவர் சார்ந்த கட்சியையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தவர்களும் நாங்கள்தான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை...  அரசியலுக்கு கொண்டு வந்த,   சம்பந்தனுக்கு...  #####.
உங்கள், அரசியல் விளையாட்டுக்கள்.....  எமக்கு, வினையாகி வந்து விட்டது.
வெறுப்பாக இருக்கின்றது. 

முன்பு...  நன்றாக வாழ்ந்த ஒரு, சமூகத்தை
எதிர் கட்சி  தலைவராக... நாலு  வருசம், வீரகேசரி படித்தும்...
மண்டைக்குள்... ஒன்றும் உள்வாங்கிய மாதிரி தெரியவில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு.......
அடுத்த தைப்பொங்கல்....அடுத்த சித்திரை வருசம்...வாற தீபாவளி....எண்ட  நல்ல தின நம்பிக்கையள் முடிஞ்சுது.....

இனி அடுத்த நாடாளுமன்றத்திலாவது!!!!!!!! 😕

கிழிஞ்சுது போ.
 

தலீவா...வந்திட்டியா...இதைத்தானே உங்களிடம் எதிர்பார்த்தோம்...

Link to comment
Share on other sites

2 hours ago, ragunathan said:

சுமந்திரனது  .... அவரையும் ....  அனுப்பிவைத்தவர்களும் நாங்கள்தான். 

சுமந்திரனை மக்கள் அனுப்பவில்லை!

அவர் பின்கதவால் அரசியலுக்குள் புகுத்தப்பட்டு, வாக்குகளை மாற்றி தில்லுமுள்ளு செய்து வென்றவராக சோடிக்கப்பட்டவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் அற்ற கடந்த 10 ஆண்டுகளில் இவர்கள் சாதித்தது என்ன..?! இப்படி தேர்தலுக்கு தேர்தல் மக்கள் முன் பொய்களையும் சுத்துமாத்துக்களையும் முன் வைத்து தங்களை ஸ்தாபித்துக் கொண்டது தான். மக்கள் தொடர்ந்து ஏமாந்தது தான் மிச்சம்.

மக்கள் சரியானவர்களையும் சரியான கொள்கைகளையும் தேர்ந்தெடுக்கத் தெரியாத வரை இது தொடரும். 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

விடுதலைப்புலிகள் அற்ற கடந்த 10 ஆண்டுகளில் இவர்கள் சாதித்தது என்ன..?! இப்படி தேர்தலுக்கு தேர்தல் மக்கள் முன் பொய்களையும் சுத்துமாத்துக்களையும் முன் வைத்து தங்களை ஸ்தாபித்துக் கொண்டது தான். மக்கள் தொடர்ந்து ஏமாந்தது தான் மிச்சம்.

மக்கள் சரியானவர்களையும் சரியான கொள்கைகளையும் தேர்ந்தெடுக்கத் தெரியாத வரை இது தொடரும். 🙄

என்ன செய்வது? தமிழராய் பிறந்து துலைச்சிட்டுதுகள் என்று மானங்காத்தால், அதுகள் எங்களை வித்து சிங்களவனை குசிப்படுத்துதுகள். 

Link to comment
Share on other sites

 

3 hours ago, nedukkalapoovan said:

மக்கள் சரியானவர்களையும் சரியான கொள்கைகளையும் தேர்ந்தெடுக்கத் தெரியாத வரை இது தொடரும். 🙄

தமிழ்மக்கள் சரியானவர்களையும் சரியான கொள்கைகளையும் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அவர்களிடையே வளர்ந்துள்ள களைகளை முதலில் அழிக்கவேண்டும். அழித்தால் பயங்கரவாதிகள் என்ற பட்டத்தை உலக வல்லரசுகள் தமிழ்மக்களுக்குச் சூட்டி இந்தியனையும், சிறீலங்கனையும் மகிழவைக்கும். 

 

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

 

முன்பு...  நன்றாக வாழ்ந்த ஒரு, சமூகத்தை
எதிர் கட்சி  தலைவராக... நாலு  வருசம், வீரகேசரி படித்தும்...
மண்டைக்குள்... ஒன்றும் உள்வாங்கிய மாதிரி தெரியவில்லை.
 


 

வீரகேசரி படித்தால், எவன்தான் உருப்படுவான்?

'திவயின' படியுங்கோ!

யாழில் செய்திகள் இணைப்பவர்களும் 'திவயின' மூலமாகத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ragunathan said:

ஒரு விடயத்தைச் செய்வது தொடர்பான நம்பிக்கை என்பது அவரவர் எண்ணங்களையும், முயற்சிகளையும், அவ்விடயம் தொடர்பான அவருக்கிருக்கும் அறிவையும் பொறுத்தது.

அதுபோலத்தான் சிங்களவர்களிடமிருந்து தமிழருக்கு ஒரு நீதியான தீர்வைப் பெற்றுக்கொடுத்துவிட  முடியும் என்கிற சுமந்திரனது நம்பிக்கையும். இதைச் சொல்வதற்கு அவருக்கிருக்கும் உரிமையை நாம் குறைகூற முடியாது. ஏனென்றால், அவரையும் அவர் சார்ந்த கட்சியையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தவர்களும் நாங்கள்தான். 

 

அனுப்பி வைத்தவர்களுக்குத்தான் கேள்வி கேட்கும்  உரிமையும் இருக்கின்றது. குறைகுற்றங்களை சுட்டிக்காட்டும் தகுதியும் இருக்கின்றது.

அவர்களுக்கு வாக்களித்து அனுப்பியவர்கள் ஒன்றும் தெரியாதவர்களல்ல.

சம்பந்தனும் சுமந்திரனும் இன்றுவரை தங்களை நியாயபடுத்துகின்றார்களே தவிர செயலில் ஒன்றுமில்லை அல்லது அவர்களால் முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

எங்களுக்கு தீர்வு வேண்டாம் 
நீங்கள் வீட்ட போங்கோ 

தீர்வு இல்லையேல் ஓய்வு என்று அறிவித்த சுமத்திரனை யாராவது கண்டீர்களா ?

Link to comment
Share on other sites

11 hours ago, Maruthankerny said:

எங்களுக்கு தீர்வு வேண்டாம் 
நீங்கள் வீட்ட போங்கோ 

தீர்வு வேண்டாமா?

உங்களைப்போல நல்ல தமிழர்களும் யாழில் உலா வருவது, சந்தோசம்தான்.

Link to comment
Share on other sites

Image may contain: 1 person, standing and text

சுமிக்கு இன்று முதல் "யானைப் பாகன்" எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கிறேன்

Link to comment
Share on other sites

வீரனாக வாழ்ந்துவந்த தமிழன், தன் கடவுளையே தன் மொழியால் வணங்கமுடியாது பல நூறு வருடங்களுக்கு முன்னரே தோற்கடிக்கப்பட்டவன். தோற்றவனை எள்ளிநகையாட எலிகளும் யாழில் உலாவருவது ஒன்றும் புதுமையல்ல. 😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

49998227_612868419170988_646612068056694784_n.jpg?_nc_cat=111&_nc_ht=scontent-frt3-2.xx&oh=fb74072c84a63d275b9dfcff9bd5df58&oe=5CFF48F3

இந்த  வருடத்துக்குள்.... தீர்வு வரும் என்று சொன்னதெல்லாம், பொய்யா... கோபால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜன்மத்தில் தீர்வு இல்லாவிடில் அடுத்த ஜன்மத்தில் நிச்சயம் எடுத்து தருவேன் என்று சொல்லாமல் விட்டதை நினைத்து சந்தோசமடைவோம்

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

வீரனாக வாழ்ந்துவந்த தமிழன், தன் கடவுளையே தன் மொழியால் வணங்கமுடியாது பல நூறு வருடங்களுக்கு முன்னரே தோற்கடிக்கப்பட்டவன். தோற்றவனை எள்ளிநகையாட எலிகளும் யாழில் உலாவருவது ஒன்றும் புதுமையல்ல. 😔

கடவுளே உங்களை வீரத் தமிழனாகப் பார்க்க விரும்பவில்லை போலத் தெரிகிறது.

கடவுளை மாற்றிக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, thulasie said:

கடவுளே உங்களை வீரத் தமிழனாகப் பார்க்க விரும்பவில்லை போலத் தெரிகிறது.

கடவுளை மாற்றிக்கொள்ளுங்கள்.

கடவுளை மாற்ற தேவையில்லை. அரசன் அன்றே கொல்வான்   தெய்வம் நின்றுதான் கொல்லும் . சில கழிசறைகளை களையெடுத்தால் போதும். சமூகம் தானே திருந்திவிடும் . யாழ் களத்தில்கூட !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.