Jump to content

குருவும் சீடர்களும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குருவும் சீடர்களும்

குருவும் சீடர்களும் நீர்நிலை அருகாக போகும்போது ஒரு தேள் நீரில் தத்தளித்து கொண்டிருந்ததை  குரு பார்த்தார், உடனே  குரு தனது கையினால் தேளை தண்ணீரிலிருந்து வெளியே போடமுயன்றார். தேள் குருவின் கையில் கொட்டிவிட்டது, இதனால் குரு கையை உதற தேள் திரும்ப தண்ணீரில் விழுந்துவிட்டது, உடனே திரும்பவும் கையினால் தேளை எடுக்க அது திரும்ப கொட்ட இப்படி சில தடவைகளின் பின்னர் தேளை மீட்டு கரையில் விட்டுச்சென்றார்.
இதனை பார்த்துக் கொண்டிருந்த சீடனொருவன் குருவிடம் குருவே தேள் கொட்ட கொட்ட ஏன் அதை மீட்க முனைந்தீர்கள் என்று கேட்டான், குரு கூறினார் தேளின் சுபாவம் கொட்டுவது அதை கொட்ட கொட்ட மீட்டுவிடுவது எனது சுபாவம் என்றாராம்.
இந்த கதையை அடிக்கடி எனது தந்தையார் கூறுவார், நான் கேட்டேன் குரு ஏன் முட்டாள் தனமாக செயற்பட்டார்?! ஒரு தடியினால் தேளை தூக்கி போட்டுவிட்டு சென்றிருக்கலாமே! தந்தை சிரித்து கொண்டு சென்றுவிட்டார்.
சொல்லுங்க மக்களே நான் கேட்டது தப்பா?

Link to comment
Share on other sites

37 minutes ago, ஏராளன் said:

குரு கூறியது முழுவதும் தவறல்ல...

குருவின் சுபாவம் முட்டாள் தனமாக இருக்கலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு உருவகக் கதை..... 

நீங்கள் தெரிந்து கொள்வதற்காக கேட்டீர்கள். நீங்களாக தெரிந்து கொள்ளட்டும் என்று அப்பா சென்று விட்டார். ....!

கதையில் குருவுக்கு தேளை முறையாக பிடிக்காத தெரியும். ஆனால் சீடனுக்கு இதன் மூலம் அவர் பாடம் நடத்துகிறார். நீ துன்பப்படுபவர்களுக்கு உதவும்போது சில சமயம்  அவர்களால் உன் மனசு காயப்படும்படி நேரிடலாம், அதுக்காக நீ மனம் தளரக்கூடாது., உதவுவதையும் நிறுத்த கூடாது. அறிவுள்ள சீடன் புரிந்து கொள்ளுவான்.(அட என்ற மூளையும் வேலை செய்யுதுபோல கிடக்கு)....!  😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவின் செயல் சரியானதே!

குரு படித்தவர் எனினும் மனிதர் தானே!

தடியைத் தேடும் கால் இடைவெளிகள்...அந்தத் தேள் இறந்து விடக்கூடும்....அல்லது அவரது மனம் மாறி விடவும் கூடும்!

அதனாலேயே உடநடியாகச் செயல் பட்டார்!😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மியாவ், சுவியண்ணா, புங்கையண்ணா, ரதியின் சிரிப்புக்கும்.
நானும் புரிந்து கொண்டேன் சுவியண்ணா மற்றும் புங்கையண்ணா, பகுத்தறிதல் என்ற ஒன்றால வாற கேள்விதான் அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா யோசித்திருப்பார், இந்தப் பெடிய எந்தக் குருவிடம் அனுப்பிறது என்று.

கையால், விரல்களால் பிடித்து தூக்கலாம், தடியால் அவ்வாறு செய்ய முடியாது அல்லவா ஏராளா என்று நிணைத்தவாறே நடந்திருப்பார். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதம்ஸ்.

தவழ முயல்கிறேன்.

Link to comment
Share on other sites

நிஜத்தில் இப்படிப்பட்ட ஜீவகாரணியம் உள்ள குருவை பார்க்கமுடியாது. அதனால் கதையில் உருவாக்கி உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

இந்த கதையை அடிக்கடி எனது தந்தையார் கூறுவார், நான் கேட்டேன் குரு ஏன் முட்டாள் தனமாக செயற்பட்டார்?! ஒரு தடியினால் தேளை தூக்கி போட்டுவிட்டு சென்றிருக்கலாமே! தந்தை சிரித்து கொண்டு சென்றுவிட்டார்.
சொல்லுங்க மக்களே நான் கேட்டது தப்பா?

அது தானே வழமையில் தேளைக் கண்டால் காலில் போட்டிருக்கும் செருப்பையாவது கழட்டி அடித்துவிடுவோம்.
எப்படி கொட்டக் கொட்ட தேளை கரை சேர்ப்பது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நிஜத்தில் இப்படிப்பட்ட ஜீவகாரணியம் உள்ள குருவை பார்க்கமுடியாது. அதனால் கதையில் உருவாக்கி உள்ளார்கள். 

ஒரு சில மனிதர்கள் மகான்களாக உயிர் நேயம் மிக்கவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் தானே!

1 hour ago, ஈழப்பிரியன் said:

அது தானே வழமையில் தேளைக் கண்டால் காலில் போட்டிருக்கும் செருப்பையாவது கழட்டி அடித்துவிடுவோம்.
எப்படி கொட்டக் கொட்ட தேளை கரை சேர்ப்பது?

எங்கட வீட்ட வருகை தரும் பெரும்பாலான விச உயிரிகள் (பாம்பு, சிலந்தி, தேள், மட்டத்தேள்) கொல்லப்படாது தூரமாக வெளியேற்றிவிடுவோம்.

Link to comment
Share on other sites

2 hours ago, ஏராளன் said:

ஒரு சில மனிதர்கள் மகான்களாக உயிர் நேயம் மிக்கவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் தானே

இருக்கலாம்.அவர்கள் மனிதர்களக இருப்பார்கள். மகான்கள் என்று பெயரெடுத்தவர்கள் அப்படி அல்ல. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.