கிருபன் 2,830 Report post Posted February 10 ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் -நூல் அறிமுக விழா : February 10, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் நூல் நேற்று சனிக்கிழமை 9 ஆம் திகதி காலை மன்னாரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் நகர மண்டபத்தில் அந்த சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் எஸ்.ஜே.நிக்சன் குரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டதோடு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனும்; விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் வரவேற்புரையினையும், நாடறிந்த எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமாகிய வெற்றிச்செல்வி (சந்திரகலா) அறிமுக உரையினையும் நிகழ்த்தினர். பிரபல எழுத்தாளரும், மன்னார் கல்வி வலய ஆசிரிய ஆலோசகருமாகிய எம்.சிவானந்தன் (துறையூரான்) மதிப்பீட்டுரை நிகழ்த்தினார்.இதன் போது குறித்த நூழ் வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டது.குறித்த வெளியீட்டு நிகழ்வில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/112700/ Share this post Link to post Share on other sites