யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

விண்டிஸ் அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் – இங்கிலாந்து நிதான ஆட்டம்!

Recommended Posts

விண்டிஸ் அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் – இங்கிலாந்து நிதான ஆட்டம்!

விண்டிஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 231 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்து நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள், மற்றும் T-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வரும் நிலையில், 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியது.

செயின்ட் லூசியாவில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற விண்டிஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதற்கமைய இன்றயை முதல் நாள் ஆட்ட நிறைவில், தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தடிாய இங்கிலாந்து அணி, 4 விக்கட்டுக்களை இழந்து, 231 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில், ஜோஸ் பட்லர் 67 ஓட்டங்களுடனும், பென் ஸ்டொக்ஸ் 62 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடுகின்றனர். பந்து வீச்சில், கீமோ போல் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இரு அணிகளுக்கும் இடையில் முன்னர் நடைபெற்று முடிந்த இரு போட்டிகளிலும் விண்டிஸ் அணி வெற்றி பெற்றதுடன், 3 போட்டிகள் கொண்ட  தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், ஆறுதல் வெற்றியை எதிர்ப்பார்த்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இதன் பின்னர், ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட T-20 தொடரிலும் இங்கிலாந்து அணி, விண்டிஸ் அணியுடன் மோதவுள்ளது.

Dy966X0X4AInfbw.jpg

 

http://athavannews.com/விண்டிஸ்-அணிக்கு-எதிரான-3/

 

 

Share this post


Link to post
Share on other sites
Live
1st ODI (D/N), England tour of West Indies at Bridgetown, Feb 20 2019
  • 4.png&h=84&w=84
    WI
    360/8
  • 1.png&h=84&w=84
    ENG
    90/0 * (10.2/50 ov, tgt 361)
England require another 271 runs with 10 wickets and 39.4 overs remaining
 

இங்கிலாந்துக் கெதிரான 50 ஓவர் போட்டியில் மேற்கிந்திய நாயகன் கெயில் 12 தடவை 6 அடித்து 135 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு