Jump to content

சவேந்திரசில்வாவின் நியமனம் எதனை உணர்த்துகிறது? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சவேந்திரசில்வாவின் நியமனம் எதனை உணர்த்துகிறது?

யதீந்திரா 
அண்மையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் புதிய இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். சவேந்திரசில்வா சர்ச்சைக்குரிய 58வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தவர். இவரது கட்டiயின் கீழ் இயங்கிய படையினரே, இறுதி யுத்தத்தின் போது, பாரியளவிலான மனித உரிமை மீறல்களிலும் போர்க் குற்றங்களிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர் மீது போர்க்குற்றசாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடர்வதற்கு, போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்டியங்கிவரும் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டம் என்னும் அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. இந்த நிறுவனம் யஸ்மின் சூக்காவின் தலைமையில் இயங்கிவருகிறது. இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை ஆராய்வதற்கென ஜ.நா செயலாளர் நாயகம் பன்கிமூனால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுனர் குழுவில் சூக்காவும் ஒருவர். இந்த பத்தி ஆராய முற்படும் விடயம் வேறு. அதாவது, இவ்வாறான பல்வேறு விமர்சனங்கள் மற்றும் அழுத்தங்கள் இருக்கின்ற போதும் அரசாங்கம் ஏன் அவற்றை கருத்தில் கொள்ளவில்லை? ஒரு வேளை மகிந்த ராஜபக்ச இவ்வாறானதொரு விடயத்தை செய்திருந்தால் அதற்கு இலகுவாக பதலளிக்க முடியும் ஆனால் ஜெனிவா பிரேரணையை முழுமையா அமுல்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கும் புதிய அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்வதை எவ்வாறு விளங்கிக்கொள்வது?

யுத்தம் நிறைவுற்றதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச அரசின் மீது சர்வதேசளவில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறானதொரு சூழலில்தான், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜக்கிய நாடுகள் சபையின் பிரதி நிரந்தரவதிவிடப் பிரதிநிதியாக (னுநிரவல Pநசஅயநெவெ சுநிசநளநவெயவiஎந) நியமிக்கப்பட்டிருந்தார். சில்வா இந்தப் பொறுப்பில் 2015 வரையில் இருந்தார். சிறிலங்கா இராணுவத்தின் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சூழலில்தான், சில்வா ஜ.நாவில் இலங்கைக்கான ராஜதந்திரியாக நியமிப்பட்டிருந்தார். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் பலர் ராஜதந்திர பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். ஆனால் ஒருவர் இராணுவ சேவையிலிருக்கும் போதே, ஜ.நாவின் ராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்டவர் சவேந்திர சில்வா ஒருவர்தான். இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் மகிந்த அவ்வாறானதொரு நியமனத்தை செய்திருந்தார். ஆனால் மகிந்த அவ்வாறு நடந்துகொள்வது ஆச்சரியமான ஒன்றல்ல ஏனெனில், அவர் சர்வதேச கடப்பாடுகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை உதாசீனம் செய்திருந்தார். ஆனால் புதிய அரசாங்கத்திலும் அது எவ்வாறு தொடர முடியும்? ஏன் தொடர்கிறது?

அடுத்த மாதம் ஜெனிவா அமர்க்களம் ஆரம்பமாகவுள்ளது. மாதம் முழுவதும் ஜ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்பிலும், சர்வதேச அழுத்தங்கள் தொடர்பிலும் விவாதங்கள் இடம்பெறலாம். ஆனால் இங்கு கேட்க வேண்டிய கேள்வி – இவ்வாறான அழுத்தங்கள் தொடர்பில் சிங்கள ஆளும் வர்க்கம் அச்சமடைந்திருக்கிறதா? அவ்வாறு அச்சமடைந்திருந்தால் போர்க் குற்றங்கள் புரிந்ததாக குற்றச்சாட்டுக்கள் உள்ள சவேந்திர சில்வாவை இராணுவ தலைமை அதிகாரியாக நியமித்திருக்குமா? இங்கு பிறிதொரு விடயத்தையும் நோக்க வேண்டும். இராணுவ தலைமை அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம்தான் இருக்கிறது. எனவே மைத்திரிபால சிறிசேனதான் அவ்வாறானதொரு நியமனத்தை செய்திருக்கிறார். அவ்வாறாயின் அதனை ஏன் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கவில்லை?

shavendra silva

சர்வதேச அழுத்தங்களை தமிழர் தரப்புக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வது போல் சிங்கள அளும் தரப்பு எடுத்துக் கொள்ளவில்லை. மிகவும் வலுவான ராஜதந்திர பாரம்பரியம் உள்ள சிங்கள ஆளும் வர்க்கம் அவ்வாறான அழுத்தங்களை கையாளுவதில் போதுமான அனுபவங்களையும் ஆற்றலையும் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே அவ்வாறான அழுத்தங்களை பொருட்படுத்ததாமல் தங்களது வழியில் அவர்களால் செல்ல முடிகிறது. இந்த பின்புலத்தில் நோக்கினால் சவேந்திர சில்வாவின் நியமனம் மேற்குலக அழுத்தங்களை, சிறிலங்கா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதையே காண்பிக்கிறது.

பல்துருவ உலக ஒழுங்கில் (அமெரிக்கா, சீனா, ரஸ்யா மற்றும் இந்தியா போன்ற வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகள்) ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட வல்லரசுகளை கையாளுவதன் மூலம் மனித உரிமைகள் விவகாரத்தை கையாள முடியும் என்னும் உண்மையை கொழும்பு துல்லியமா அறிந்து வைத்திருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுடன் கொழும்பு நெருக்கமான உறவை பேணிவருகிறது. மனித உரிமைகள் தொடர்பான அழுத்தங்கள் என்பதே மேற்குலக அழுத்தங்கள்தான். ஆனால் அந்த மேற்குலகின் மனித உரிமை வாதத்தை சீனாவோ ரஸ்யாவோ ஏற்றுக் கொள்வதில்லை. உண்மையில் மனித உரிமைகள் என்பது ஒரு உலகளாவிய சிந்தனைமுறை என்று கூறிக்கொண்டாலும் கூட, உண்மையில் யதார்த்தில் அது ஒரு பொய். இதனை மனித உரிமைகளை மீறும் நாடுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இதனை சிறிலங்கா துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறது. அந்த வகையில், மேற்குலகம் மனித உரிமைகள் என்னும் அடிப்படையில் அழுத்தங்களை பிரயோகிக்க முற்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கு கொழும்பு அதிகம் சீனாவை நோக்கி சாயும். கொழும்பு அதிகம் சீனாவை நோக்கி சாய்வதை இந்தியா விரும்பாது. இந்த முரண்பட்ட நலன்களை கொழும்பு மிகவும் வெற்றிகரமாக கையாள முடியுமென்று நம்புகிறது. இந்த நிலையில் சர்வதேச அழுத்தங்கள் என்பது சிங்கள ஆளும் வர்க்கத்தை பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையில்லை. அது ஒரு பிரச்சினையாக இருக்குமென்று அவர்கள் கருதினால் இவ்வாறு உதாசீனப் போக்குடன் செயற்பட்டிருக்க மாட்டார்கள்.

இந்த இடத்தில் எழும் கேள்வி – அவ்வாறாயின் இதுவரை தமிழர் தரப்பு மேற்கொண்டுவந்த செயற்பாடுகளின் ஒட்டுமொத்த விளைவு என்ன? கூட்டமைப்பு சில விடயங்களுக்கு உரிமை கோருகிறது. கூட்டமைப்பு இந்த விடயங்களை சரியாக செய்யவில்லை என்று பிறிதொரு தரப்பு கூறிவருகிறது. புலம்பெயர் அரசியல் செயற்பாட்டார்களோ தாம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக கூறுகின்றனர். இவ்வளவு செயற்பாடுகளுக்கு மத்தியிலும் ஏன் கொழும்பு மேற்குலக அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை. புலம்பெயர் அமைப்பை சேர்ந்த ஒருவர் இவ்வாறு கூறியதாக எனது நண்பர் வழியாக அறிந்தேன். சுமந்திரன், ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் நிற்பதுதான் சரியானது. அதனைத்தான் மேற்குலக ராஜதந்திரிகள் விரும்புகின்றனர். அப்போதுதான் போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படுமாம். எவ்வளவு அப்பாவித்தனமான நம்பிக்கை. இந்த அப்பாவித்தனமான நம்பிக்கையுடன் கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் கழிந்துவிட்டது. எனவே இப்போது கடந்த ஒரு தசாப்தகால தமிழ் அரசியல் நடவடிக்கைளை மதிப்பீடு செய்வதற்கு ஒவ்வொருவரும் தயாராக வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் சர்வதேச அழுத்தத்தை சிங்கள ஆளும் வர்க்கம் ஒரு பாரதூரமான விவகாரமாக பார்ப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு பார்த்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் சவேந்திர சில்வாவை இராணுவ தலைமை அதிகாரியாக நியமித்திருக்கமாட்டார்கள். சவேந்திரசில்வாவின் நியமனம் சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் அபரிமிதமான நம்பிக்கையுள்ளவர்களுக்கு ஒரு தெளிவான செய்தியாகும்.

 

http://www.samakalam.com/செய்திகள்/சவேந்திரசில்வாவின்-நியம/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.