Jump to content

இதைவிட எளிமையாக ஆபத்தை உணர்த்த முடியாது! -கதவைத் தட்டும் பேரழிவு: தீர்வு எங்கே உள்ளது?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட எளிமையாக ஆபத்தை உணர்த்த முடியாது! -கதவைத் தட்டும் பேரழிவு: தீர்வு எங்கே உள்ளது?

15.jpg

நரேஷ்

பிரச்சினைகள் எவ்வளவு வலுவானவையாக இருந்தாலும், தீர்வுகள் என்றும் எளிமையானவைதான். இயற்கையும் எளிமையானதுதான். அந்த எளிமையைப் புரிந்துகொள்ள முடியாமல் முட்டி மோதும் இடத்தில்தான் முரண் தொடங்குகிறது.

பசுமைப் புரட்சியும், நஞ்சான உணவும் நிலமும் நீரும் மிகப் பெரிய பிரச்சினைகள்தான். ஆனால் அவற்றின் தீர்வு மிக எளிமையானது. அந்த எளிமையைப் புரியவைப்பதுதான் கடினமான வேலை. அதைச் சிறப்பாகச் செய்தவர்களுள் ஒருவர் நம்மாழ்வார்.

உரங்களை வெறும் உப்புதான் என்றார் அவர். ‘கருவாட்டுல உப்பு போடுறது நுண்ணுயிரிகள் உற்பத்தியாகாம இருக்கத்தான். அதையே நிலத்துல போட்டா நிலத்துலையும் நுண்ணுயிரிகள் உற்பத்தியாகாதுதானயா. வெறும் உப்பத் தின்னு செடி நெடு நெடுனு வளர்ந்தாலும் அதுல என்னையா நுண்ணூட்டம் இருக்கப்போகுது’ என்று பாமர மொழியில் பேசினார் அவர்.

அந்த எளிமைதான் இன்று இயற்கை விவசாயமும் நஞ்சில்லா உணவும் இவ்வளவு பெரிய விழிப்புணர்வைப் பெற்றிருப்பதற்கான காரணம். பிரச்சினைகளை புரியவைப்பதுதான் தீர்வை நோக்கிச் செல்வதற்கான முதல் படி.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் மக்களுக்குப் புரியாத மொழிகளிலேயே பேசப்படுகின்றன. புவி வெப்பமயமாதல், பசுமை இல்ல வாயுக்கள், வெப்பச் சலனக் கதிர்வீச்சு என்று என்னதான் தமிழ்ப்படுத்தினாலும் சாதாரண மக்களுக்கு அவை அந்நியமானவைதான். இந்தச் சூழல் பிரச்சினைகளை சாதாரண மொழியில் புரியவைக்க வேண்டியது சூழலியல் செயற்பாட்டாளர்களின் தலையாய கடமை.

அவற்றுக்காக நாம் பெரிதாகப் படிக்க வேண்டியதில்லை. எளிமையான மனிதர்களின் செயல்களைக் கவனிப்பதும், காது கொடுத்துக் கேட்பதும் போதும். புவி வெப்பமயமாதலுக்கும் நிலத்தடி நீரை நாம் உறிஞ்சுவதற்கும் உள்ள தொடர்பினை மிகவும் எளிமையாக ஒரு விவசாயி விளக்கினார். அது அவ்வளவு எளிமையாக இருந்தது. அவ்வளவு உண்மையாக இருந்தது. அதுதான் இன்றைய தேவை.

“ஒரு சோத்துப் பானை எடுத்துக்கங்க. அதுல தண்ணி ஊத்தி அரிசி போட்டு கொதிக்க வெக்கிறீங்க.. அப்போ என்ன ஆகுது? தண்ணி சூடாகி ஆவியாகிடும். அந்த நீரோட பதத்தை உறிஞ்சி அரிசி வெந்துவரும். இப்போ அரிசிக்குப் பதிலா மண்ணும் தண்ணியும் ஊத்தி கொதிக்கவெச்சா, தண்ணி ஆவியாகி மண்ணு மட்டும் இருக்கும். இப்போ தண்ணியே ஊத்தாம, மண்ணை மட்டும் கொட்டி சட்டிய சூடு பண்ணா என்ன ஆகும்? மண்ணு கொதிச்சுப் போயிடும்..” என்றார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விவசாயி ஞானப்பிரகாசம்.

இதுக்கும் புவி வெப்பமயமாதலுக்கும் என்ன சம்பந்தம்..?

“என்ன தம்பி..? இன்னும் புரியலையா. அந்த சோத்துசட்டிதான் நம்ம பூமி. பூமியோட மையத்துல கொதிச்சிட்டுகிற வெப்பம்தான் அடுப்பு. நிலம்தான் மண்ணு. நிலத்துக்கு அடில இருக்க நீரை நாம தொடர்ந்து எடுத்துட்டே இருக்கோம். இப்போ நிலத்துக்கு அடியில நீரே இல்லாம போகுது. அப்போ பூமியோட மையத்துல இருந்து வர்ற வெப்பத்துனால மண்ணு சூடாகி வெப்பத்தைக் கக்குது. காத்து அந்த மண்ணுல இருந்து வர்ற வெப்பத்தை எடுத்துட்டு சூடாகுது.”

“நிலத்துக்கு அடியில நீர்தான், பூமியோட மையத்துல இருந்து வெப்பம் நிலத்தை நேரடியா தாக்காம பாதுகாத்தது. பூமியில இருந்து வர்ற வெப்பத்துல ஆவியாகி காத்தோட ஈரப் பதத்துல கலக்கும். இல்ல மண்ணோட கலந்து வெப்பத்தைச் சீரா வெச்சிக்கும். நம்ம தண்ணிய பூரா உறிஞ்சு எடுத்துட்டோம்னா, மண்ணு மட்டும்தான் சூடாகும். அந்த வெப்பம் புவியிலையும் காத்துலையும்தான பரவும்..?” என்று கேட்டார்.

15a.jpg

பேசிவிட்டு வந்து அறிவியல் தரவுகளைச் சோதித்துப் பார்த்தபோது சரியாக இருந்தது. சூரியனிலிருந்து 14.96 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பூமிக்கு, சூரியனிலிருந்து வரும் வெப்பத்தைவிட, பூமியின் நடுப்பகுதியிலிருந்து (Earth core) 6371.393 கிலோமீட்டர் தூரம் மட்டுமே இருக்கும் நிலத்துக்கு வரும் வெப்பம்தான் அதிகம். அந்த வெப்பம் காற்று மண்டலத்தை (atmosphere) தாக்காமல் பார்த்துக்கொள்வது கடலும் நிலத்தடி நீரும்தான். அந்த வெப்பம் முழுமையாக நிலத்தின்மீது செலுத்தப்பட்டால், சோற்றுச்சட்டியில் வேகும் கறியைப் போல நாம் வெந்துவிடுவோம் என்றார்.

ஆபத்தை இதைவிட எளிமையாக விளக்க முடியுமா என்ன?

15b.png

“நம்ம பயன்படுத்துணும்தான் நிலத்துக்கு மேல ஆறுகளையும், அருவிகளையும், நீர்நிலைகளையும் கொடுத்துவெச்சது இயற்கை. நாம பயன்படுத்தக் கூடாது என்பதாலதான் பூமிக்கு அடியில கண்ணுக்குப் புலப்படாத ஆழத்துல நிலத்தடி நீரை மறைச்சுவெச்சது இயற்கை. வழங்கப்படுறத மதிக்காம, சுரண்டிப் புடுங்குறது தப்பில்லீங்களா..?”

இந்தக் கேள்விக்கு நவீனத்தால் பதில் கொடுக்க முடியுமா?

https://minnambalam.com/k/2019/02/10/15

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவும் நிதர்சனமான உண்மைகள்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதவைத் தட்டும் பேரழிவு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி!

13.jpg

வேளாண்மையில் உச்சத்தில் இருந்த ஆஸ்திரேலியாவில் வறட்சியின் கோர தாண்டவம்

நரேஷ்

எந்த நாட்டில் வறட்சி வந்திருந்தாலும் இவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்காது. ஏனென்றால், உலகமே அதன் உற்பத்தித் திறனையும் வளர்ச்சியையும் பார்த்துத் திக்குமுக்காடி நின்றிருந்தது. உலகிலேயே விவசாய விளைச்சலில் முதல் இடத்தில் இருந்த நாடு ஆஸ்திரேலியா. தண்ணீரைத் தேட அவர்களிடம் இல்லாத தொழில்நுட்பமே இல்லை. ஆஸ்திரேலியாவைத் தன் முன்னோடியாக நினைத்துச் செயல்பட்ட நாடுகள் ஏராளம். அவர்கள் கண்களுக்கு விளைச்சலும், தொழில்நுட்பமும் மட்டும்தான் தெரிந்தன. தேவையற்ற அளவற்ற அந்த உற்பத்திக்காகச் சுரண்டப்பட்ட வளங்களின் கதை வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. அதனால்தான் தற்போது சுரண்டப்பட்ட தடங்களின் விளைவுகளை இயற்கை பதிவு செய்துவருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. ஒன்று, தான் ஈன்ற குட்டியைத் தனது வயிற்றுப் பைகளில் அடைகாத்துத் தத்தி தத்தி நகரும் கங்காரு வாழும் ஒரே நிலம். மற்றொன்று, தனது வயல் விளைச்சல்களில் உலக நாடுகளையே அசரவைத்து அமைதியாக இருக்கும் அதே நிலம்.

13a.jpg

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை அரிசி விளைச்சலில் கம்பீரமாக நின்றது கங்காரு தேசம். இங்கே ஒரு விளக்கம் தேவை. அரிசி விளைச்சலில் உலக நாடுகளில் முதன்மை வகிப்பது சீனா. ஆண்டுக்கு 205 மில்லியன் மெட்ரிக் டன். இரண்டாவது இடத்தில் இந்தியா. 155 மில்லியன் மெட்ரிக் டன். ஆனால், ஆஸ்திரேலியாவின் விளைச்சலோ 9 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் கீழேதான். இப்படியிருக்க உலக நாடுகள் ஏன் ஆஸ்திரேலியாவிடம் வியந்து பார்க்கிறது?

சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் விளைச்சல் பரப்பளவு, ஆஸ்திரேலியாவின் விளைச்சல் பரப்பளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். மொத்த அரிசி கொள்முதல் கணக்குப்படி ஆஸ்திரேலியா ஒன்றுமில்லைதான். ஆனால் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் ஒரு ஹெக்டேருக்கான விளைச்சல் சதவிகிதம் 3 முதல் 5 டன்கள். ஆனால், ஆஸ்திரேலியாவின் ஒரு ஹெக்டேருக்கான விளைச்சல் சதவிகிதம் 10 டன்கள்! உலகத்திலேயே ஒரு ஹெக்டேருக்கான விளைச்சல் சதவிகிதத்தில் ஆஸ்திரேலியாதான் முதலிடம். இன்றுவரை இது அசைக்க முடியாத சாதனை!

13b.jpg

தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அவர்கள் செய்த வித்தைகளையெல்லாம் வியந்து பார்த்து வாயடைத்துப்போனது உலகம். தரமான விளைச்சலுக்குத் தகுதியாக விதைத்தல் அவசியம் அல்லவா? அப்படித் தேர்ந்தெடுத்த நிலத்தில் விதைப்பதற்கு என்று அவர்களிடம் ஒருமுறை உண்டு. உலகிலேயே முதன்முதலாகக் கடைப்பிடிக்கப்பட்ட முறை. ஆஸ்திரேலியர்கள் அரிசி விளைவிக்கும் நிலத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆய்வாளர்கள் அந்த நிலத்தைப் பரிசோதித்து அனுமதி கொடுத்த பின்பே நிலப்பதப்படுத்துதல் தொடங்கும். நெல் விவசாயிகளுக்கு என்று பிரத்யேகமாகச் சில விதிமுறைகள் உண்டு. அதைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கியிருந்தது ஆஸ்திரேலிய அரசு.

பொதுவாக அக்டோபரின் இறுதியில் விதைத்து ஏப்ரலின் முதலில் அறுவடைக்கு வரும் பட்டத்துக்கு, ஜூலை மாதம் முதலே உழுவதும் வரப்பு அமைப்பதுமாக நிலத்தைத் தயார் செய்ய ஆரம்பித்துவிடுவர். அக்டோபர் கடைசியிலிருந்து நவம்பர் முதல் வாரத்துக்குள் விதைத்தல் முடிவடையும். அதிகப்படியான நிலப்பரப்பு உள்ளமையால் விதைப்பதற்கு சில காலம் எடுக்கும். அதனாலேயே ஆஸ்திரேலியர்கள் விமான விதைப்பையே நம்பியிருந்தனர்.

'விமானத்தில் விதைகளைத் தூவி விவசாயம் செய்யும் அளவுக்கான தொழில்நுட்ப வளர்ச்சி கண்டிருந்தவர்கள் அவர்கள். அறுவடை இயந்திரங்களைப்போல, விதைப்பதற்கென்றே பிரத்யேகமான விதை தூவும் விமானங்கள் வாடகைக்குக் கிடைத்தன. இரண்டு வாரங்கள் நடக்க வேண்டிய விதைப்புப் பணியினை, இரண்டு நாட்களில் முடித்தனர்.

13c.jpg

அவர்கள் பயன்படுத்தும் அறுவடை இயந்திரங்களைப் பார்த்தால், படங்களில் வரும் மான்ஸ்டர்கள் போலிருக்கும். விவசாயத்துக்கு ஆஸ்திரேலியர்கள் வழங்கும் பொருளாதார இடத்தை அவர்கள் உபயோகப்படுத்தும் கருவிகளின் பிரம்மாண்டத்தை வைத்தே கணக்கிட்டுவிடலாம். பயிர் அறுவடைக்குத் தயாரானதும் அவர்கள் அடித்துக்கொள்வது அந்த ராட்சதக் கருவிகளுக்காகத்தான். மார்ச் அல்லது மே மாதத்தின் தொடக்கத்தில் அறுவடை ஆரம்பிக்கும். 'கம்பைன்ட் ஹார்வெஸ்டர்ஸ்' என்று அழைக்கப்படும் அந்த இயந்திரங்கள், வைக்கோலைப் பிரித்து வெட்டிக் கட்டுவது, நெற்கதிர்களை டிராக்டர்களில் ஏற்றுவது என்று மாதக்கணக்கில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் சில மணித்துளிகளில் முடித்துவிடும்.

ஆனால், இவ்வளவு பெரிய தொழில்நுட்ப பிரம்மாண்டங்கள் இப்போது ஏற்பட்டிருக்கும் வறட்சியைப் போக்க சின்னஞ்சிறிய உதவியைக்கூடச் செய்ய முடியவில்லை. எங்கே தவறியது தொழில்நுட்பம்?

https://minnambalam.com/k/2019/02/14/13

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2019 at 3:25 AM, கிருபன் said:

இதைவிட எளிமையாக ஆபத்தை உணர்த்த முடியாது! -கதவைத் தட்டும் பேரழிவு: தீர்வு எங்கே உள்ளது?

15.jpg

நரேஷ்

பிரச்சினைகள் எவ்வளவு வலுவானவையாக இருந்தாலும், தீர்வுகள் என்றும் எளிமையானவைதான். இயற்கையும் எளிமையானதுதான். அந்த எளிமையைப் புரிந்துகொள்ள முடியாமல் முட்டி மோதும் இடத்தில்தான் முரண் தொடங்குகிறது.

பசுமைப் புரட்சியும், நஞ்சான உணவும் நிலமும் நீரும் மிகப் பெரிய பிரச்சினைகள்தான். ஆனால் அவற்றின் தீர்வு மிக எளிமையானது. அந்த எளிமையைப் புரியவைப்பதுதான் கடினமான வேலை. அதைச் சிறப்பாகச் செய்தவர்களுள் ஒருவர் நம்மாழ்வார்.

உரங்களை வெறும் உப்புதான் என்றார் அவர். ‘கருவாட்டுல உப்பு போடுறது நுண்ணுயிரிகள் உற்பத்தியாகாம இருக்கத்தான். அதையே நிலத்துல போட்டா நிலத்துலையும் நுண்ணுயிரிகள் உற்பத்தியாகாதுதானயா. வெறும் உப்பத் தின்னு செடி நெடு நெடுனு வளர்ந்தாலும் அதுல என்னையா நுண்ணூட்டம் இருக்கப்போகுது’ என்று பாமர மொழியில் பேசினார் அவர்.

அந்த எளிமைதான் இன்று இயற்கை விவசாயமும் நஞ்சில்லா உணவும் இவ்வளவு பெரிய விழிப்புணர்வைப் பெற்றிருப்பதற்கான காரணம். பிரச்சினைகளை புரியவைப்பதுதான் தீர்வை நோக்கிச் செல்வதற்கான முதல் படி.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் மக்களுக்குப் புரியாத மொழிகளிலேயே பேசப்படுகின்றன. புவி வெப்பமயமாதல், பசுமை இல்ல வாயுக்கள், வெப்பச் சலனக் கதிர்வீச்சு என்று என்னதான் தமிழ்ப்படுத்தினாலும் சாதாரண மக்களுக்கு அவை அந்நியமானவைதான். இந்தச் சூழல் பிரச்சினைகளை சாதாரண மொழியில் புரியவைக்க வேண்டியது சூழலியல் செயற்பாட்டாளர்களின் தலையாய கடமை.

அவற்றுக்காக நாம் பெரிதாகப் படிக்க வேண்டியதில்லை. எளிமையான மனிதர்களின் செயல்களைக் கவனிப்பதும், காது கொடுத்துக் கேட்பதும் போதும். புவி வெப்பமயமாதலுக்கும் நிலத்தடி நீரை நாம் உறிஞ்சுவதற்கும் உள்ள தொடர்பினை மிகவும் எளிமையாக ஒரு விவசாயி விளக்கினார். அது அவ்வளவு எளிமையாக இருந்தது. அவ்வளவு உண்மையாக இருந்தது. அதுதான் இன்றைய தேவை.

“ஒரு சோத்துப் பானை எடுத்துக்கங்க. அதுல தண்ணி ஊத்தி அரிசி போட்டு கொதிக்க வெக்கிறீங்க.. அப்போ என்ன ஆகுது? தண்ணி சூடாகி ஆவியாகிடும். அந்த நீரோட பதத்தை உறிஞ்சி அரிசி வெந்துவரும். இப்போ அரிசிக்குப் பதிலா மண்ணும் தண்ணியும் ஊத்தி கொதிக்கவெச்சா, தண்ணி ஆவியாகி மண்ணு மட்டும் இருக்கும். இப்போ தண்ணியே ஊத்தாம, மண்ணை மட்டும் கொட்டி சட்டிய சூடு பண்ணா என்ன ஆகும்? மண்ணு கொதிச்சுப் போயிடும்..” என்றார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விவசாயி ஞானப்பிரகாசம்.

இதுக்கும் புவி வெப்பமயமாதலுக்கும் என்ன சம்பந்தம்..?

“என்ன தம்பி..? இன்னும் புரியலையா. அந்த சோத்துசட்டிதான் நம்ம பூமி. பூமியோட மையத்துல கொதிச்சிட்டுகிற வெப்பம்தான் அடுப்பு. நிலம்தான் மண்ணு. நிலத்துக்கு அடில இருக்க நீரை நாம தொடர்ந்து எடுத்துட்டே இருக்கோம். இப்போ நிலத்துக்கு அடியில நீரே இல்லாம போகுது. அப்போ பூமியோட மையத்துல இருந்து வர்ற வெப்பத்துனால மண்ணு சூடாகி வெப்பத்தைக் கக்குது. காத்து அந்த மண்ணுல இருந்து வர்ற வெப்பத்தை எடுத்துட்டு சூடாகுது.”

“நிலத்துக்கு அடியில நீர்தான், பூமியோட மையத்துல இருந்து வெப்பம் நிலத்தை நேரடியா தாக்காம பாதுகாத்தது. பூமியில இருந்து வர்ற வெப்பத்துல ஆவியாகி காத்தோட ஈரப் பதத்துல கலக்கும். இல்ல மண்ணோட கலந்து வெப்பத்தைச் சீரா வெச்சிக்கும். நம்ம தண்ணிய பூரா உறிஞ்சு எடுத்துட்டோம்னா, மண்ணு மட்டும்தான் சூடாகும். அந்த வெப்பம் புவியிலையும் காத்துலையும்தான பரவும்..?” என்று கேட்டார்.

15a.jpg

பேசிவிட்டு வந்து அறிவியல் தரவுகளைச் சோதித்துப் பார்த்தபோது சரியாக இருந்தது. சூரியனிலிருந்து 14.96 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பூமிக்கு, சூரியனிலிருந்து வரும் வெப்பத்தைவிட, பூமியின் நடுப்பகுதியிலிருந்து (Earth core) 6371.393 கிலோமீட்டர் தூரம் மட்டுமே இருக்கும் நிலத்துக்கு வரும் வெப்பம்தான் அதிகம். அந்த வெப்பம் காற்று மண்டலத்தை (atmosphere) தாக்காமல் பார்த்துக்கொள்வது கடலும் நிலத்தடி நீரும்தான். அந்த வெப்பம் முழுமையாக நிலத்தின்மீது செலுத்தப்பட்டால், சோற்றுச்சட்டியில் வேகும் கறியைப் போல நாம் வெந்துவிடுவோம் என்றார்.

ஆபத்தை இதைவிட எளிமையாக விளக்க முடியுமா என்ன?

15b.png

“நம்ம பயன்படுத்துணும்தான் நிலத்துக்கு மேல ஆறுகளையும், அருவிகளையும், நீர்நிலைகளையும் கொடுத்துவெச்சது இயற்கை. நாம பயன்படுத்தக் கூடாது என்பதாலதான் பூமிக்கு அடியில கண்ணுக்குப் புலப்படாத ஆழத்துல நிலத்தடி நீரை மறைச்சுவெச்சது இயற்கை. வழங்கப்படுறத மதிக்காம, சுரண்டிப் புடுங்குறது தப்பில்லீங்களா..?”

இந்தக் கேள்விக்கு நவீனத்தால் பதில் கொடுக்க முடியுமா?

https://minnambalam.com/k/2019/02/10/15

விஞ்ஞானத்தை எளிமையாகச் சொல்வது வேறு, எளிமையாக்குகிறோம் என்று தவறான தகவல்களைச் சொல்வது வேறு. இந்தக் கட்டுரையாளர் செய்திருப்பது இரண்டாவது வேலை! 

1. பூமியின் மையம் 6000 மைல்கள் ஆழத்தில் இருக்கிறது. அதன் வெப்ப நிலை கிட்டத் தட்ட 12, 000 டிகிரி பரனைட் வரை இருக்கலாம். இந்த வெப்பம் பூமியில் இருந்து வெளியேறுவது உண்மை. சமுத்திரங்களின் அடியில் உருவாகும் நீக்கல்கள் வெடிப்புகளால் இந்த வெளியேற்றம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனிதர்கள் பூமியில் இருந்து எடுத்துக் கொள்ளும் நீரினால் அல்லது நன்னீரினால் இந்த வெப்பம் அதிகரிக்க வாய்ப்பில்லை. ஏன்? உலகில் உள்ள நன்னீரின் 0.3% மட்டும் தான் மனிதனால் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறது. பெரும்பாலானது எமக்கு எட்டாத வகையில் தென் வட துருவங்களில் பனிக்கட்டியாக இருக்கிறது. இந்த 0.3% நீரை நாம் பயன்படுத்துவதால் பூமியின் நீர் இழக்கப் படப் போவதில்லை- நிச்சயமாக பூமியின் மைய வெப்பம் பூமியை அதிகம் சூடாக்கப் போவதில்லை.

2. பூமியின் மிகப் பெரிய வெப்ப மூலம் சூரியன். பூமியில் இருந்து 90 மில்லியன் மைல்களில் சூரியன், ஆனால் நாசாவின் கணிப்பின் படி சூரியனின் மேற்படையான corona இன் வெப்பநிலை 1.8 மில்லியன் டிகிரி பரனைட். பூமியை நோக்கி வரும் சூரியக் கதிர் வீச்சின் 70% இனை பூமி உறிஞ்சிக் கொண்டு, 30% இனை  திருப்பித் தெறிக்கிறது. உறிஞ்சல்/தெறித்தல், இந்த இரு நிகழ்வுகளாலும் பூமி சூடாகிறது. சூடாகிறது என்றால் சும்மா இரும்பை மரத்தைப் போல சூடாவதில்லை. பூமியின் காற்று மண்டலத்தில் இருக்கும் நீராவியும், காபனீரொட்சைட்டும், சிறிதளவு மீதேனும் தமது சிறந்த வெப்பக் கொள்ளளவினால் சூரிய வெப்பத்தை உறிஞ்சி பூமியைச் சூடாக்குகின்றன. இப்படி அதிகரித்த காபனீரொட்சைட்டினாலும், மீதேனாலும் பூமி அதிக வெப்பமடைவது தான் "பச்சை வீட்டு விளைவு" எனப்படுகிறது. இது 1950 இல் இருந்து அதிகரிக்கும் காபனீரொட்சைட்டின் அளவோடு சேர்ந்து பூமி வெப்பம் அதிகரிக்க பிரதான காரணமாக பெருவாரியான விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. 

 "உரம் உப்பு அது மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லும், கருவாடு போல" என்று நம்மாழ்வார் சொன்னாரா தெரியாது. ஆனால் இதுவும் முழு உண்மையில்லை. தாவரங்களுக்கு உரமாக வழங்குவது N, P, K என்ற மூன்று கனிமங்களைத் தான். கருவாட்டில் பாவிப்பது செறிவான கறியுப்பு. இரண்டுக்கும் செயற்படும் விதத்தில் பெரிய வேறுபாடு உண்டு. 

எளிய விளக்கங்கள் அழகாக இருக்கும், ஆனால் எல்லா சமயங்களிலும் தரவுகளால் நிரூபணமாவதில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை... வாழ்வு, வாழ்வதற்கே ... இந்தப் பூமி உருண்டை.... உருவானது.
இயற்கையை... எதிர்க்கும், மனிதன் என்னும் மிருகம், 
இந்தப் பூமியை... நாசமாக்கி, அழிந்து போவான். என்பது.. விரைவில் நடக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

இயற்கை... வாழ்வு, வாழ்வதற்கே ... இந்தப் பூமி உருண்டை.... உருவானது.
இயற்கையை... எதிர்க்கும், மனிதன் என்னும் மிருகம், 
இந்தப் பூமியை... நாசமாக்கி, அழிந்து போவான். என்பது.. விரைவில் நடக்கும். 

சிறியர், இயற்கையை மனிதன் எதிர்ப்பதில்லை! சில இடங்களில் தன் வாழ்வைப் பாதுகாக்க தன் முயற்சியினால் புதிய தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறான், அவ்வளவு தான். இதை அளவுக்கதிமாகச் செய்யும் போது இயற்கைச் சூழல் பாதிக்கப் படுகிறது. உதாரணமாக ஆரம்பத்தில் எம் முன்னோர் ஒரே இடத்தில் குடியிருந்து பயிர் செய்ய ஆரம்பித்த போது நீர் தேவைப் பட்டது. ஆற்றங்கரைகளில் மட்டுமே பழைய மனித நாகரிகங்கள் தோன்றியதன் காரணம் இது தான். அணை கட்டுதல், நிலத்தடி நீர் பாவித்தல் என்பன உருவான பின்னர் உலகில் எங்கேயும் மனிதர்கள் பயிர் செய்து வாழலாம் என்ற வசதி உருவானது. மனிதனின் புதிய தயாரிப்புகள் மனித இனத்திற்கு தப்பி வாழும் ஒரு தகுதியை வழங்கின. இதை மனிதனுக்கு யார் கொடுத்தது? இயற்கை அவனுக்கு வழங்கிய விசேடமான மூளையே இந்தத் தகுதியை அவனுக்கு வழங்கியது.

மனிதனும் தன் நவீனத்துடன் இயற்கையின் ஒரு பகுதியாக வாழ முடியும்! இயற்கையைக் காக்கிறோம் என்ற பெயரில் நாம் திரும்பவும் குகைகளில் போய் வாழ வேண்டிய அவசியம் இல்லை! 

Link to comment
Share on other sites

16 hours ago, Justin said:

விஞ்ஞானத்தை எளிமையாகச் சொல்வது வேறு, எளிமையாக்குகிறோம் என்று தவறான தகவல்களைச் சொல்வது வேறு. இந்தக் கட்டுரையாளர் செய்திருப்பது இரண்டாவது வேலை! 

1. பூமியின் மையம் 6000 மைல்கள் ஆழத்தில் இருக்கிறது. அதன் வெப்ப நிலை கிட்டத் தட்ட 12, 000 டிகிரி பரனைட் வரை இருக்கலாம். இந்த வெப்பம் பூமியில் இருந்து வெளியேறுவது உண்மை. சமுத்திரங்களின் அடியில் உருவாகும் நீக்கல்கள் வெடிப்புகளால் இந்த வெளியேற்றம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனிதர்கள் பூமியில் இருந்து எடுத்துக் கொள்ளும் நீரினால் அல்லது நன்னீரினால் இந்த வெப்பம் அதிகரிக்க வாய்ப்பில்லை. ஏன்? உலகில் உள்ள நன்னீரின் 0.3% மட்டும் தான் மனிதனால் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறது. பெரும்பாலானது எமக்கு எட்டாத வகையில் தென் வட துருவங்களில் பனிக்கட்டியாக இருக்கிறது. இந்த 0.3% நீரை நாம் பயன்படுத்துவதால் பூமியின் நீர் இழக்கப் படப் போவதில்லை- நிச்சயமாக பூமியின் மைய வெப்பம் பூமியை அதிகம் சூடாக்கப் போவதில்லை.

2. பூமியின் மிகப் பெரிய வெப்ப மூலம் சூரியன். பூமியில் இருந்து 90 மில்லியன் மைல்களில் சூரியன், ஆனால் நாசாவின் கணிப்பின் படி சூரியனின் மேற்படையான corona இன் வெப்பநிலை 1.8 மில்லியன் டிகிரி பரனைட். பூமியை நோக்கி வரும் சூரியக் கதிர் வீச்சின் 70% இனை பூமி உறிஞ்சிக் கொண்டு, 30% இனை  திருப்பித் தெறிக்கிறது. உறிஞ்சல்/தெறித்தல், இந்த இரு நிகழ்வுகளாலும் பூமி சூடாகிறது. சூடாகிறது என்றால் சும்மா இரும்பை மரத்தைப் போல சூடாவதில்லை. பூமியின் காற்று மண்டலத்தில் இருக்கும் நீராவியும், காபனீரொட்சைட்டும், சிறிதளவு மீதேனும் தமது சிறந்த வெப்பக் கொள்ளளவினால் சூரிய வெப்பத்தை உறிஞ்சி பூமியைச் சூடாக்குகின்றன. இப்படி அதிகரித்த காபனீரொட்சைட்டினாலும், மீதேனாலும் பூமி அதிக வெப்பமடைவது தான் "பச்சை வீட்டு விளைவு" எனப்படுகிறது. இது 1950 இல் இருந்து அதிகரிக்கும் காபனீரொட்சைட்டின் அளவோடு சேர்ந்து பூமி வெப்பம் அதிகரிக்க பிரதான காரணமாக பெருவாரியான விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. 

 "உரம் உப்பு அது மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லும், கருவாடு போல" என்று நம்மாழ்வார் சொன்னாரா தெரியாது. ஆனால் இதுவும் முழு உண்மையில்லை. தாவரங்களுக்கு உரமாக வழங்குவது N, P, K என்ற மூன்று கனிமங்களைத் தான். கருவாட்டில் பாவிப்பது செறிவான கறியுப்பு. இரண்டுக்கும் செயற்படும் விதத்தில் பெரிய வேறுபாடு உண்டு. 

எளிய விளக்கங்கள் அழகாக இருக்கும், ஆனால் எல்லா சமயங்களிலும் தரவுகளால் நிரூபணமாவதில்லை! 

உங்களது இவ்வாறான விளக்கம் இணைய வெளியில் தேவையான ஒன்றே.ஏனெனில் தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் சமூகவலைத்தளங்கள் யூ ரியுப் போன்ற தளங்கள் மூலம் உண்மைக்கு புறம்பான பல தகவல்கள் மிக வேகமாகப் பரவுகின்றன. 

சுற்றுப்புச்றசூழல், இயற்கை வைத்தியம், பாட்டி வைத்தியம், வெங்காயம் முன்னோர்கள் வெட்டி விழுத்தினார்கள்  என்று பல உண்மைக்கு முரணான தகவல்கள் பரவ அதை நம்பி அப்பாவி மக்களும் வலைத்தளங்களில் பகிர அளவு கணக்கிடலாமல்  மூடப்பழக்கங்கள் பரப்பப்படுகின்றன. 

Link to comment
Share on other sites

7 minutes ago, tulpen said:

உண்மைக்கு புறம்பான தகவல்களை திணிக்கவேண்டிய அவசியம்  ஏகாதிபத்தியத்திற்கே அதிகம் உள்ளது. வியாபாரம் சுரண்டல் கொள்ளையடிப்பது என மனித குலத்திற்கு விரோதமான செயல்களை செய்பவர்களுக்கே பெய்கள் சொல்லவேண்டிய அவசியம் அதிகம் உள்ளது. அதற்காக அவர்கள் மரபணு மாற்றம் நல்லது என்பார்கள், நிலத்தடி நீர் குறைவதால் ஆபத்தில்லை என்பார்கள், இரசாயன உரப்பாவனையால் மண்ணுக்கும் மனிதருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பார்கள். ஏனெனில் இது சார்ந்த வியாபாரம் அவர்கள் கைகளில் உள்ளது. பொய் என்பது ஏகாதிபத்தியத்திற்கு புதிதில்லையே ! அன்று ஒரு பொய்யை சொல்லி வியட்நாமுக்குள் நுளைந்து பல லட்சம் மக்களை கொன்றார்கள், ஈராக்குள் அணு ஆயுதங்கள் இருக்கின்றது என்று பொய்சொல்லி அந்த நாட்டையே சிதைத்தார்கள், இப்படி எத்தனையோ உள்ளது. ஆங்கில மருத்துவத்தை தமிழர்கள் நுகரத்தொடங்கி நூறு வருடம், ஆனால் மக்கள் பல்லாயிரம் வருடங்களாக தமிழர் நிலத்தில் வாழ்கின்றார்கள். இன்னும் இதை தொட்டுப்பாக்காதவர்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் வருத்தங்களை சந்திக்கவில்லையா இல்லை போர்கள் காயங்களை சந்திக்கவில்லையா ? அவர்கள் நம்பிய அவர்களது பரம்பரை வயித்தியங்களுடகாகத்தான் வாழ்க்கையை தொடர்ந்தார்கள். நாம் எமது முன்னோர்கள் வளி எதையும் முட்டாள்தனம் மூடப்பழக்கம் என்று சொல்ல முடியாது அதே நேரம் மேற்குலக ஏகாதிபத்தியம் சொல்வதை நாம் உண்மை என்றும் ஏற்க முடியாது. சமூக வலைத்தளங்கள் யூரியுப் போன்றவற்றால் தான் ஏகாதிபத்திய குள்ளநரிகளின் தந்திரத்தை சாமானிய மக்கள் ஓரளவேனும் அறிய உதவியாக இருக்கின்றது. ஆங்கிலேயர் எம்மை அடிமைப்படுத்தி ஆண்டதின் பின்னர் வெள்ளையாய் இருக்கின்றவன் பொய்சொல்ல மாட்டான், மேற்கத்திய பல்கலைக்கழங்களின் ஆய்வுகள் உண்மையாய் இருக்கும் என்ற அடிமைப்புத்தி எம்மில் பலரிடம் இயல்பில் இருக்கின்றது. இந்த அடிமை இயல்போடு நாம் எதையும் அணுகவோ ஏற்கவே வேண்டிய அவசியம் இல்லையே ! அறிவியல் சான்றுகள் ஆய்வுகள் இவைகளை விட முக்கியம் மனிதநேயத்தோடு யார் ஒவ்வொரு விசயத்தையும் அணுகுகின்றார் என்பதேயாகும். அறிவியல் ஆய்வுகள் பல்கலைக்கழகங்கள் மருத்துவம் என அனைத்தும் வியாபார சூழ்ச்சிக்குள் உள்ளவை. அதனால் எம்மவர்களது  மூடப்பழக்கம் அமரிக்கா தான் உண்மையான அறிவியல் அவன் சொனனால் சரி எம்மவர் சொன்னால் பிழை என்ற அணுகுமுறை ஏற்புடையதல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, சண்டமாருதன் said:

சண்டமாருதன்,

நிறைய எழுதியிருக்கிறீர்கள். ஆனால் வழமை போல சுரண்டல் ஏகாதிபத்தியம் என்ற கருத்து நிலையைத் தாண்டி உண்மை பொய் என்று பிரித்தறியும் முயற்சி எதுவும் நீங்கள் செய்யவில்லை. அரசியலையும், அறிவியல் விளக்கங்களையும் ஒன்றாகப் போட்டுக் குழம்பி  குதிரைக்கு முன்னால் வண்டிலைப்  பூட்டும் உங்கள் நடைமுறை யாரும் எது சொன்னாலும் "அவர் ஏகாதிபத்திய வாதியா? உழைப்பாளியா" என்று பார்த்து தரவுகளின் நம்பகத் தன்மையை உரசிப் பார்க்கிறது.

இதை நான் மாற்ற முயலப் போவதில்லை! என் கடமை என்று நான் கருதுவதுபோலியான விளக்கங்களை எளிய விஞ்ஞானத் தரவுகளாக யார் பரப்ப முனைந்தாலும் அதைச் சுட்டிக் காட்டுவது. நிலத்தடி நீரை அதிகம் பாவிப்பதால் புவியின் சில பிரதேசங்களில் வரட்சி வரும், வந்திருக்கிறது. அதுவா இங்கே விளக்கப் பட்டிருக்கிறது? நிலத்தடி நீரைப் பாவிப்பதால் பூமி வெப்பமடைவதாக ஒரு போலியான ஆதாரமற்ற பொய் சொல்லப் பட்டிருக்கிறது. அதற்கே என் எதிர்க் கருத்தும் ருல்பெனின் சிலாகிப்பும். இவை போன்ற போலி அறிவியல் கருத்துகள் உங்கள் சுரண்டல்-ஏகாதிபத்திய கருத்து நிலையை முன்னேற்ற உதவினால் தாராளமாக அவற்றை நீங்கள் ஏற்று பெருப்பித்துச் சிலாகிக்கலாம்! ஆனால், சுரண்டலை எதிர்க்கும் உங்களுக்கும், இன்று சுரண்டலை வழி நடத்தும் ட்ரம்ப் போன்ற பொய்யில் தோய்ந்த அரசியல் வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இந்த அறிவியல் மறுப்பில்? என்னைப் பொறுத்த வரையில் ஒரு வித்தியாசம் கூட இல்லை! நீங்கள் இருவருமே உங்கள் நம்பிக்கைகளுக்காக உண்மையை வளைக்கும் நபர்கள்! அவ்வளவே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

மனிதனும் தன் நவீனத்துடன் இயற்கையின் ஒரு பகுதியாக வாழ முடியும்! இயற்கையைக் காக்கிறோம் என்ற பெயரில் நாம் திரும்பவும் குகைகளில் போய் வாழ வேண்டிய அவசியம் இல்லை! 

இவர் தொடர்ந்து ஆட்சி செய்தால் மனிதன் குகைகளிலேயே வாழவேண்டிய நிலை வரும்.  இயற்கை அழிவுகளுக்கு துணை போய்க்கொண்டிருப்பவர்.

உலகத்திலை நடக்கிற இயற்கை அழிவெல்லாம் சின்னச்சின்ன பிரச்சனையாம்.

donald trump à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

33 minutes ago, Justin said:

சண்டமாருதன்,

நிறைய எழுதியிருக்கிறீர்கள். ஆனால் வழமை போல சுரண்டல் ஏகாதிபத்தியம் என்ற கருத்து நிலையைத் தாண்டி உண்மை பொய் என்று பிரித்தறியும் முயற்சி எதுவும் நீங்கள் செய்யவில்லை. அரசியலையும், அறிவியல் விளக்கங்களையும் ஒன்றாகப் போட்டுக் குழம்பி  குதிரைக்கு முன்னால் வண்டிலைப்  பூட்டும் உங்கள் நடைமுறை யாரும் எது சொன்னாலும் "அவர் ஏகாதிபத்திய வாதியா? உழைப்பாளியா" என்று பார்த்து தரவுகளின் நம்பகத் தன்மையை உரசிப் பார்க்கிறது.

இதை நான் மாற்ற முயலப் போவதில்லை! என் கடமை என்று நான் கருதுவதுபோலியான விளக்கங்களை எளிய விஞ்ஞானத் தரவுகளாக யார் பரப்ப முனைந்தாலும் அதைச் சுட்டிக் காட்டுவது. நிலத்தடி நீரை அதிகம் பாவிப்பதால் புவியின் சில பிரதேசங்களில் வரட்சி வரும், வந்திருக்கிறது. அதுவா இங்கே விளக்கப் பட்டிருக்கிறது? நிலத்தடி நீரைப் பாவிப்பதால் பூமி வெப்பமடைவதாக ஒரு போலியான ஆதாரமற்ற பொய் சொல்லப் பட்டிருக்கிறது. அதற்கே என் எதிர்க் கருத்தும் ருல்பெனின் சிலாகிப்பும். இவை போன்ற போலி அறிவியல் கருத்துகள் உங்கள் சுரண்டல்-ஏகாதிபத்திய கருத்து நிலையை முன்னேற்ற உதவினால் தாராளமாக அவற்றை நீங்கள் ஏற்று பெருப்பித்துச் சிலாகிக்கலாம்! ஆனால், சுரண்டலை எதிர்க்கும் உங்களுக்கும், இன்று சுரண்டலை வழி நடத்தும் ட்ரம்ப் போன்ற பொய்யில் தோய்ந்த அரசியல் வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இந்த அறிவியல் மறுப்பில்? என்னைப் பொறுத்த வரையில் ஒரு வித்தியாசம் கூட இல்லை! நீங்கள் இருவருமே உங்கள் நம்பிக்கைகளுக்காக உண்மையை வளைக்கும் நபர்கள்! அவ்வளவே! 

கருத்துக்கு நன்றிகள்

நீங்கள் அறிவியல் சார்ந்த விடயங்களை முன்வைப்பது வேறு விசயம் ஆனால் நான் மேற்கோள் காட்டிய கருத்தில் எமது முன்னோர் வழிவந்த மரபுவளிமுறைகள் மூடநம்பிக்கைகாளக மறுதலிக்கப்படுகின்றது. 

59 minutes ago, சண்டமாருதன் said:

சுற்றுப்புச்றசூழல், இயற்கை வைத்தியம், பாட்டி வைத்தியம், வெங்காயம் முன்னோர்கள் வெட்டி விழுத்தினார்கள்  என்று பல உண்மைக்கு முரணான தகவல்கள் பரவ அதை நம்பி அப்பாவி மக்களும் வலைத்தளங்களில் பகிர அளவு கணக்கிடலாமல்  மூடப்பழக்கங்கள் பரப்பப்படுகின்றன. 

உண்மைக்கு புறம்பன ஒரு பாட்டி வைத்தியத்தை வைத்தோ அல்லது முன்னோர்களின் வழிமுறைகளை வைத்தோ ஒரு இனக்குழுமம் பல ஆயிரமாண்டுகள் மேன் நோக்கி வளர்ந்து வந்திருக்க முடியாது. அறிவியல் ஊடாக ஒரு அரசியல் நடப்பதால் தான் இன்று எம்மை நாமே நிராகரிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம், தனியே அறிவியலாயின் இந்த முரண்பட்ட மறுதலிப்பு நிலை வர வாய்ப்பில்லை. அறிவியல் வரவேற்கப்படவேண்டியது நீங்கள் அதை அணுகும் விதத்திலும் பிரச்சனையில்லை ஆனால் அது என்னுமொரு மக்க ள் குழுமத்தை வியாபாரமாகவே மறைமுக ஆக்கிரமிப்பு ஆயுதமாகவே பயன்படுத்தமுற்படும் போது அது சார்ந்த கருத்துக்களே இவைகள். 

அறிவியலை முதலாளித்துவம் தனது மூலதனமாக்கிக்கொள்ளும் என்பது போன நூற்றாண்டிலேயே நடமுறைக்கு வந்த ஒன்று, அதனால் எதுவும் சந்தேகத்துக்கு உட்படுவது ஆரோக்கியமானது என்பது எனது கருத்து.. மட்டுமல்லாமல் நாம் இங்கு பேசும் விடயங்கள் பொது வெளியில் என்னும் விரிவாக பேச முற்படுகின்றது. அதற்கு பலவிதமான பின்னூட்டங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. 

அறிவியல் மற்றும் பயமுறுத்தல்களுக்கு பின்னால் உள்ள அரசியல்தான் அறிவியலை விட பிரதானமானது என்ற அடிப்படையிலேயே எனது கருத்துக்கள் அமைகின்றது. உண்மை பொய் என்பது இங்கு எப்போதும் கேள்விக்குறியே தவிர முற்றுப்புள்ளியாகாது. 

Link to comment
Share on other sites

14 hours ago, சண்டமாருதன் said:

கருத்துக்கு நன்றிகள்

நீங்கள் அறிவியல் சார்ந்த விடயங்களை முன்வைப்பது வேறு விசயம் ஆனால் நான் மேற்கோள் காட்டிய கருத்தில் எமது முன்னோர் வழிவந்த மரபுவளிமுறைகள் மூடநம்பிக்கைகாளக மறுதலிக்கப்படுகின்றது. 

உண்மைக்கு புறம்பன ஒரு பாட்டி வைத்தியத்தை வைத்தோ அல்லது முன்னோர்களின் வழிமுறைகளை வைத்தோ ஒரு இனக்குழுமம் பல ஆயிரமாண்டுகள் மேன் நோக்கி வளர்ந்து வந்திருக்க முடியாது. அறிவியல் ஊடாக ஒரு அரசியல் நடப்பதால் தான் இன்று எம்மை நாமே நிராகரிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம், தனியே அறிவியலாயின் இந்த முரண்பட்ட மறுதலிப்பு நிலை வர வாய்ப்பில்லை. அறிவியல் வரவேற்கப்படவேண்டியது நீங்கள் அதை அணுகும் விதத்திலும் பிரச்சனையில்லை ஆனால் அது என்னுமொரு மக்க ள் குழுமத்தை வியாபாரமாகவே மறைமுக ஆக்கிரமிப்பு ஆயுதமாகவே பயன்படுத்தமுற்படும் போது அது சார்ந்த கருத்துக்களே இவைகள். 

அறிவியலை முதலாளித்துவம் தனது மூலதனமாக்கிக்கொள்ளும் என்பது போன நூற்றாண்டிலேயே நடமுறைக்கு வந்த ஒன்று, அதனால் எதுவும் சந்தேகத்துக்கு உட்படுவது ஆரோக்கியமானது என்பது எனது கருத்து.. மட்டுமல்லாமல் நாம் இங்கு பேசும் விடயங்கள் பொது வெளியில் என்னும் விரிவாக பேச முற்படுகின்றது. அதற்கு பலவிதமான பின்னூட்டங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. 

அறிவியல் மற்றும் பயமுறுத்தல்களுக்கு பின்னால் உள்ள அரசியல்தான் அறிவியலை விட பிரதானமானது என்ற அடிப்படையிலேயே எனது கருத்துக்கள் அமைகின்றது. உண்மை பொய் என்பது இங்கு எப்போதும் கேள்விக்குறியே தவிர முற்றுப்புள்ளியாகாது. 

சண்டமாருதன் நான் கூறிய விடயத்தை நீங்கள் புரிந்து கொண்ட முறையில் தவறு இருப்பதாக எனக்கு படுகிறது. நீங்கள் கூறியது ஏகாதிபத்தியம், சுரண்டல் போன்ற  பெரிய விடயங்களை பற்றியது. நான் கூறியது தற்போதய எமது நடைமுறை வாழ்வில் தமிழ் இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களூடான போலியான அறிவியல் பரப்புரைகள் பற்றியது. இவை எமது மக்களுக்கு உண்மை தகவல்கள் சென்றடைவதை தடுக்கின்றது என்பது எனது கருத்து. எனது அனுபவத்தில் எனது முகநூலுக்கு அல்லது வட்ஸ்அப்  கு வந்த பல  முன்னோர் அறிவியல் என்ற பல தகவல்கள் போலியானவை, தவறானவை முட்டாள்தனமானவை. இது தொடர்பாக பேசும்போது உங்களைப்போலவே பலரும் கேட்கும் கேள்வி எமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா என்பது தான். இந்த ஒற்றைக்கேள்வியில் பதில் தேடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

முன்னோர்கள் என்பவர்கள் யார்?  உலகம் உருவாகிய நாளில் இருந்து பரிணாம வளர்ச்சியில் மனிதன் உருவான நாளில் இருந்து எம்மை போல் வாழ்ந்த மனிதர்கள் தானே அவர்களில் அறிவாளிகளும் இருந்திருப்பார்கள் முட்டாள்களும் இருந்தருப்பார்கள். பல தவறுகளைச் செய்திருப்பார்கள் அவர்களுக்கு பின் வந்த வம்சாவளி முன்னோர்கள் அதை திருத்தியிருப்பார்கள். அதைப்போலவே நாங்களும்  அவற்றை திருத்தி எமது எதிர்க்கால சந்த‍திக்கு கொடுப்பதில் என்ன தவறு கண்டீர்கள். காலத்திற்கு காலம் தமது தவறுகளை திருத்தி முன்னேற்றம் கண்டு வருவது தானே மனித சமுதாயம். முன்னோர்கள் சொன்னவை ஒன்றும்  மாற்றமுடியாத வேத வாக்குகள் அல்ல. அவர்களும் எம்மை போன்ற பலமும் பலவீனமும் உடைய மனிதர்களாக தான் வாழ்ந்தார்கள். உலக வரலாற்றில் முன்னோர்கள் சொன்னதை அப்படியே நம்பி அதை எதிர்கால சந்த‍திக்கு கொடுக்கும் போஸ்ட் மன் வேலையை  மட்டும் உலகில் இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு தலைமுறையும் செய்திருந்தால்  இன்றைய  அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டிருக்குமா? 

ஆங்கில வைத்தியத்தை தமிழர்கள் நுகர தொடங்கி 100 வருடங்கள் தான் அதற்கு முன்பும் தமிழர்கள் நோய்களைச் சந்திக்கவில்லையா என்று கேட்டிருந்தீர்கள். தமிழர்கள் மட்டுமல்ல ஆங்கிலேயர்கூட  அந்த நவீன மருத்துவம் கண்டு பிடிக்க முன்னர்  பரம்பரை வைத்தியங்கள் மூலம் தால் உயிர் வாழ்ந்தார்கள். தமிழர்களிடம் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்த முன்னோர்களிடம் இப்படியான பாரம்பரிய வைத்திய முறை இருந்த‍து. அதன் போதாமை தான் நவீன மருத்துவத்தை கண்டு பிடிக்க வேண்டிய தேவையை மனித குலத்திற்கு ஏற்படுத்தியது. நீங்கள் கூறும் ஆங்கில வைத்தியத்தை கண்டு பிடித்தவர்களும் ஒரு முன்னோர்கள் தானே. நவீன மருத்துவத்தை கண்டு பிடித்த மனிதன் அது  முழுவதும்  பூரணமானது என்று நம்பவில்லை. அதில் உள்ள குறைபாடுகளையும் அறிந்தே இருந்தான். அதனால் தான் ஒவ்வொரு மருந்து பக்கெட் உள்ளேயும் மருந்தின் பக்கவிளைவுகளை விளக்கும் leaflet வைக்க‍ப்டுகிறது. பக்க விளைவு குறைந்த மருந்துகளுக்கான புதிய ஆய்வுகளும் அதறக்காகவே மேற்கொள்ள படுகின்றன. அதுமட்டுமல்ல  வைத்தியத்துறையை மேம்படுத்த தொடர்ச்சியான ஆய்வுகள் இன்றும் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறாக புதிய ஆய்வுகள் கண்டுபிடிப்புக்கள் நடத்தபடாமல் இருந்தால் 30 ம் 35 ம் நூற்றாண்டில் வாழப்போகும் மக்கள் எம்மை முட்டாள் முன்னோர்கள் என்று சொல்லுவார்கள். ஆகவே தொடர்ச்சயான மனித சிந்தனையில் மாற்றங்கள். அறிவியல் ஆராய்சிகள் நடத்த‍ப்பட வேண்டும். முன்னோர்கள் சொன்னார்கள் என்று முட்டாள்தனமான நம்பக்கூடாது. இதுவே ஜஸ்ரினின் கருத்தை சிலாகித்து  நான் கூறிய கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, சண்டமாருதன் said:

சண்டமாருதன், பதிலுக்கு நன்றிகள். கேள்விகள் கேட்பதால் தான் விஞ்ஞானமே உருவானது. ஆனால், கேள்விகளைக் கேட்டு விட்டு, ஊகங்களை வெளிப்படுத்தி விட்டு படுத்துத் தூங்காமல் அளவீடுகள், கணிப்பீடுகள் என்று ஆய்வுகளை முன்னெடுத்ததால் தான் விஞ்ஞானம் வளர்ந்ததது. அந்தத் தேடலையும் முயற்சியையும் முன்னோரின் அறிவுமேன்மை பேசுவோரும், நவீன அறிவியலின் நீரூபிக்கப் பட்ட கோட்பாடுகளைக் கேள்வி கேட்போரும் செய்ய வேண்டும் என்பதே என் கோரிக்கை. இது வரையில் இந்தத் தரப்பிடம் இருந்து எந்த தேடல் முயற்சியையும் நான் காணவில்லை!. ஏனெனில் இந்தக் கேள்விகள் ஒரு வியாபார முயற்சி தவிர வேறெதுவும் இல்லை என்பது என் கருத்து. இல்லாவிட்டால் ஏன் எதையும் இலக்கங்கள், தரவுகளால் நிரூபிக்க இயலாமல், யாரோ ஒருவர் யூரியூபில் கமெராவுக்கு மிக அருகில் நின்று பேசுவது மட்டுமே ஆதாரமாகக் காட்டப் படுகிறது. 

மேலே நீங்கள் இணையத்தில் தேடி இணைத்திருக்கும் முதல் வீடியோ பார்த்தேன். அது வே நல்லதொரு உதாரணம் நீங்கள் தேடலே இன்றி கேள்விகள் மட்டும் கேட்கிறீர்கள் என்பதற்கு.  இவர் மிக மெதுவாக அறுத்தி உறுத்திச் சொல்லி விட்டால் மட்டுமே பூமி வெப்பமாதல் என்பது பயப் பூச்சாண்டி காட்டும் சதியாகி விடுமா? என்ன நகைச்சுவையிது? 1950 இல் இருந்து கானீரொட்சைட்டும் உலக வெப்பனிலையும் ஒரே பாதையில் பயணிப்பதை வரைபாகக் காட்டியிருக்கிறார்கள். அளக்காமலே 400,000 வருடங்கள் முன்பில் இருந்து பூமியின் வெப்ப நிலையை மதிப்பிடும் நுட்பங்கள் இந்தக் கோட்பாட்டை உறுதி செய்திருக்கின்றன. நீராவி காபனீரொட்சொட்டை விட சிறந்த வெப்ப வாங்கி என்பதைத் தவிர அந்த வீடியோவில் இருக்கிற மிகுதி கருத்துக்கள் வெறும் பிதற்றல்கள். இதை ஏன் அவர் யு ரியூபில் செய்கிறார்? என் ஊகம், இவரது வீடியோவை clickbait என்ற காசு பார்க்கும் முறையுடன் யாரோ இணைத்து உங்களுக்கு விற்கிறார்கள். முயற்சியே இன்றி ஒருவர் நாற்காலியில், தெருவில் குந்தியிருந்து உங்களுக்கு பொய்களை விற்றுக் காசு பார்க்கிறார். சுரண்டலை எதிர்க்கும் நீங்கள் அதைப் பரப்பி விட்டு கடின உழைப்பால் விளைந்த அறிவியல் "அரசியல் சதி" என்று முறையிடுகிறீர்கள்! இந்த முரண் நகை உங்களுக்கு உறைக்கவே இல்லையா? உங்கள் போன்ற தெளிவு பெற விரும்பும் பொது மக்களுக்காக நாசா மிக நேர்த்தியாக விளக்கங்கள் தருகிறார்கள். எல்லாமே ஏகாதிபத்திய அமெரிக்க அரசான நாசாவின் கண்டு பிடிப்புகள் அல்ல, எல்லா ஆய்வுகளையும் தொகுத்து இங்கே தருகிறார்கள். நீங்கள் பார்க்காமல் மறுதலித்தாலும், இந்தத் திரியைப் பார்ப்போர் சென்று பார்த்து தெளிவு பெற இதை இணைக்கிறேன்: 

https://climate.nasa.gov/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

சண்டமாருதன் நான் கூறிய விடயத்தை நீங்கள் புரிந்து கொண்ட முறையில் தவறு இருப்பதாக எனக்கு படுகிறது. நீங்கள் கூறியது ஏகாதிபத்தியம், சுரண்டல் போன்ற  பெரிய விடயங்களை பற்றியது. நான் கூறியது தற்போதய எமது நடைமுறை வாழ்வில் தமிழ் இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களூடான போலியான அறிவியல் பரப்புரைகள் பற்றியது. இவை எமது மக்களுக்கு உண்மை தகவல்கள் சென்றடைவதை தடுக்கின்றது என்பது எனது கருத்து. எனது அனுபவத்தில் எனது முகநூலுக்கு அல்லது வட்ஸ்அப்  கு வந்த பல  முன்னோர் அறிவியல் என்ற பல தகவல்கள் போலியானவை, தவறானவை முட்டாள்தனமானவை. இது தொடர்பாக பேசும்போது உங்களைப்போலவே பலரும் கேட்கும் கேள்வி எமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா என்பது தான். இந்த ஒற்றைக்கேள்வியில் பதில் தேடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

முன்னோர்கள் என்பவர்கள் யார்?  உலகம் உருவாகிய நாளில் இருந்து பரிணாம வளர்ச்சியில் மனிதன் உருவான நாளில் இருந்து எம்மை போல் வாழ்ந்த மனிதர்கள் தானே அவர்களில் அறிவாளிகளும் இருந்திருப்பார்கள் முட்டாள்களும் இருந்தருப்பார்கள். பல தவறுகளைச் செய்திருப்பார்கள் அவர்களுக்கு பின் வந்த வம்சாவளி முன்னோர்கள் அதை திருத்தியிருப்பார்கள். அதைப்போலவே நாங்களும்  அவற்றை திருத்தி எமது எதிர்க்கால சந்த‍திக்கு கொடுப்பதில் என்ன தவறு கண்டீர்கள். காலத்திற்கு காலம் தமது தவறுகளை திருத்தி முன்னேற்றம் கண்டு வருவது தானே மனித சமுதாயம். முன்னோர்கள் சொன்னவை ஒன்றும்  மாற்றமுடியாத வேத வாக்குகள் அல்ல. அவர்களும் எம்மை போன்ற பலமும் பலவீனமும் உடைய மனிதர்களாக தான் வாழ்ந்தார்கள். உலக வரலாற்றில் முன்னோர்கள் சொன்னதை அப்படியே நம்பி அதை எதிர்கால சந்த‍திக்கு கொடுக்கும் போஸ்ட் மன் வேலையை  மட்டும் உலகில் இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு தலைமுறையும் செய்திருந்தால்  இன்றைய  அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டிருக்குமா? 

ஆங்கில வைத்தியத்தை தமிழர்கள் நுகர தொடங்கி 100 வருடங்கள் தான் அதற்கு முன்பும் தமிழர்கள் நோய்களைச் சந்திக்கவில்லையா என்று கேட்டிருந்தீர்கள். தமிழர்கள் மட்டுமல்ல ஆங்கிலேயர்கூட  அந்த நவீன மருத்துவம் கண்டு பிடிக்க முன்னர்  பரம்பரை வைத்தியங்கள் மூலம் தால் உயிர் வாழ்ந்தார்கள். தமிழர்களிடம் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்த முன்னோர்களிடம் இப்படியான பாரம்பரிய வைத்திய முறை இருந்த‍து. அதன் போதாமை தான் நவீன மருத்துவத்தை கண்டு பிடிக்க வேண்டிய தேவையை மனித குலத்திற்கு ஏற்படுத்தியது. நீங்கள் கூறும் ஆங்கில வைத்தியத்தை கண்டு பிடித்தவர்களும் ஒரு முன்னோர்கள் தானே. நவீன மருத்துவத்தை கண்டு பிடித்த மனிதன் அது  முழுவதும்  பூரணமானது என்று நம்பவில்லை. அதில் உள்ள குறைபாடுகளையும் அறிந்தே இருந்தான். அதனால் தான் ஒவ்வொரு மருந்து பக்கெட் உள்ளேயும் மருந்தின் பக்கவிளைவுகளை விளக்கும் leaflet வைக்க‍ப்டுகிறது. பக்க விளைவு குறைந்த மருந்துகளுக்கான புதிய ஆய்வுகளும் அதறக்காகவே மேற்கொள்ள படுகின்றன. அதுமட்டுமல்ல  வைத்தியத்துறையை மேம்படுத்த தொடர்ச்சியான ஆய்வுகள் இன்றும் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறாக புதிய ஆய்வுகள் கண்டுபிடிப்புக்கள் நடத்தபடாமல் இருந்தால் 30 ம் 35 ம் நூற்றாண்டில் வாழப்போகும் மக்கள் எம்மை முட்டாள் முன்னோர்கள் என்று சொல்லுவார்கள். ஆகவே தொடர்ச்சயான மனித சிந்தனையில் மாற்றங்கள். அறிவியல் ஆராய்சிகள் நடத்த‍ப்பட வேண்டும். முன்னோர்கள் சொன்னார்கள் என்று முட்டாள்தனமான நம்பக்கூடாது. இதுவே ஜஸ்ரினின் கருத்தை சிலாகித்து  நான் கூறிய கருத்து. 

முன்னோர்கள் முட்டாள்களா என்ற கேள்விக்கு நான் பதிலாகச் சொல்வது: "அவர்கள் இருந்த நிலையில் அவர்கள் தங்கள் இயலுமைக்குட்பட்டு தங்கள் பங்களிப்பச் செய்தார்கள். அதனால் அவர்கள் முட்டாள்கள் அல்ல, புத்தி சாலிகளே"

ஆனால், "முன்னோர்கள் தந்த ஆரம்ப அறிவை அப்படியே சோபாவில் சாய்ந்திருந்து நான் ஏற்றுக் கொள்வேன், புதிதாக எதுவும் சேர்க்க மாட்டேன்!" என்று சொல்லும் நம்மாளுகள் சுத்த சோம்பேறிகள். எங்கள் முன்னோர்கள் இவர்கள் மாதிரி இருந்திருந்தால் நாம் இன்றும் புல்வெளியில் இரைதேடி அலையும் மனித இனமாகவே இருந்திருப்போம்! 

Link to comment
Share on other sites

27 minutes ago, Justin said:

 என் ஊகம், இவரது வீடியோவை clickbait என்ற காசு பார்க்கும் முறையுடன் யாரோ இணைத்து உங்களுக்கு விற்கிறார்கள். முயற்சியே இன்றி ஒருவர் நாற்காலியில், தெருவில் குந்தியிருந்து உங்களுக்கு பொய்களை விற்றுக் காசு பார்க்கிறார். சுரண்டலை எதிர்க்கும் நீங்கள் அதைப் பரப்பி விட்டு கடின உழைப்பால் விளைந்த அறிவியல் "அரசியல் சதி" என்று முறையிடுகிறீர்கள்! இந்த முரண் நகை உங்களுக்கு உறைக்கவே இல்லையா? உங்கள் போன்ற தெளிவு பெற விரும்பும் பொது மக்களுக்காக நாசா மிக நேர்த்தியாக விளக்கங்கள் தருகிறார்கள். எல்லாமே ஏகாதிபத்திய அமெரிக்க அரசான நாசாவின் கண்டு பிடிப்புகள் அல்ல, எல்லா ஆய்வுகளையும் தொகுத்து இங்கே தருகிறார்கள். நீங்கள் பார்க்காமல் மறுதலித்தாலும், இந்தத் திரியைப் பார்ப்போர் சென்று பார்த்து தெளிவு பெற இதை இணைக்கிறேன்: 

19 hours ago, சண்டமாருதன் said:

அறிவியலை முதலாளித்துவம் தனது மூலதனமாக்கிக்கொள்ளும் என்பது போன நூற்றாண்டிலேயே நடமுறைக்கு வந்த ஒன்று, அதனால் எதுவும் சந்தேகத்துக்கு உட்படுவது ஆரோக்கியமானது என்பது எனது கருத்து.. மட்டுமல்லாமல் நாம் இங்கு பேசும் விடயங்கள் பொது வெளியில் என்னும் விரிவாக பேச முற்படுகின்றது. அதற்கு பலவிதமான பின்னூட்டங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது

நாம் இங்கு பேசும் விடயத்தை விட அதிகமாக பொதுவெளியில் பேசுகின்றார்கள் என்பதையும் அவை ஆரோக்கியமானது என்பதைம் நான் ஏற்கனவே காணொளியோடு இணைத்த கருத்தில் தெரிவித்திருக்கின்றேன் தவிர இது உண்மை இது பொய் என்ற வரையறுப்புகள் இல்லை ஆனால் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சியின் பிரகாரம் இவை அவசியமாகின்றது.

தெருவில் குந்தியிருந்து பொய்களை விற்கின்றார்கள் என்கின்றீர்கள்,,  சதாம் உசைன் தனது எணணையை அமரிக்க டாலரில் விற்கமாட்டேன் என்றபோதும் கடாபி மறுத்தபோதும் இந்த கோட்டு சூட்டுபோட்ட மீடியாக்கள் எல்லாம் அவர்களை உண்மை பேசியா தீவிரவாதியாக்கி நாடுகளையும் மக்களையும் நாசமாக்கி கொன்றார்கள் ?  இந்த உலகத்தில் பல போர்களை தொடுத்து வறுமைகளை ஏற்படுத்தி பல மில்லியன் மக்களை கொன்றும் சாவுக்கும் காரணமாகி நாடு நகரம் உடமைகள் அழிவுக்கும் காரணமாக இருக்கும் மனிதநேயமற்ற செயலின் பிரதான சக்தியாக இருக்கும் அமரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நாசாவோ இல்லை அவர்களது அறிவுக்கூடங்களோ அறிவியலை கண்டுபிடிக்கின்றது என்பது மீது உங்களுக்கு மதிப்பிருப்பது உங்கள் விருப்பம் ஆனால் இந்த அறிவியல் மானுடத்திற்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் பொருட்டு மனிதநேய நோக்குடன் வளர்க்கப்படுகின்றது என்பதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை.  எம்மவர்கள் பொய் சொல்லி பிதற்றுகின்றார்கள் என்றால் அமரிக்கா என்ன உண்மை சொல்லியா இந்த உலகத்தை சுரண்டுகின்றது ?

நீங்கள் எப்படி எகாதிபத்தியத்திற்கு எதிர்விளையை தெருவில் குந்தியிருந்து பொய்களை விற்கின்றார், பிதற்றுகின்றார், காசு பார்க்கின்றார் என்று மறுதலிக்கின்றீர்களோ அதேயேதான் நான் இந்த கோட்டு சூட்டு போட்ட அமரிக்க நாசா பல்கலைக்கழகங்கள் அறிவியல் போன்றவற்றைக் கொண்டு இவ்வுலகில் அழிவுகளை செய்கின்றார்கள், சுரண்டுகின்றார்கள், அப்பாவி மக்களை கொல்கின்றார்கள் அவர்கள் உழைப்பை சுரண்டுகின்றார்கள்,  தம்மை நியாயப்படுத்த பொய்களை சொல்கின்றார்கள்,   இவர்கள் சொல்வதை அப்படியே நம்பவேண்டிய அவசியம் இல்லை. இவர்களின் கடந்த கால போர்களும் சரி இன்றைய சுரண்டல் அணுகுமுறைகளும் சரி மனிதநேயமற்றது ஆதலால் எதை சென்னாலும் அதை சந்தேகத்தோடு அணுகுவதே ஆரோக்கியமானது. இதன் அடிப்படையிலேயே பல காணொளிகள் உருவாகின்றது. உண்மை பொய்களுக்கு அப்பால் இவைகள் புதிய சிந்தனை முறைகளை தோற்றுவிக்கின்றது, அதுவே பிரதானமானது என்பது எனது நிலைப்பாடு.  இவ்வாறான சிந்தனை முறை கணிசமானளவு வெற்றியும் பெற்றுள்ளது, முன்பெல்லாம் ஒரு விவாதத்தில் தமது தரப்பு நியாததை சொல்ல அமரிக்க ஆய்வுகளையும் அறிக்கைகளையும் முன்வைப்பார்கள் இப்போது அவைகள் தவிர்க்கப்படுகின்றது, அவை மீதான நம்பிக்கை இழக்கத்தொடங்கிவிட்டது. இவற்றுக்கு கணிசமானளவு சமூகவலைத்தளங்களில் செயற்படுபவர்கள் பங்களிப்பும் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சண்டமாருதன் said:

நாம் இங்கு பேசும் விடயத்தை விட அதிகமாக பொதுவெளியில் பேசுகின்றார்கள் என்பதையும் அவை ஆரோக்கியமானது என்பதைம் நான் ஏற்கனவே காணொளியோடு இணைத்த கருத்தில் தெரிவித்திருக்கின்றேன் தவிர இது உண்மை இது பொய் என்ற வரையறுப்புகள் இல்லை ஆனால் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சியின் பிரகாரம் இவை அவசியமாகின்றது.

தெருவில் குந்தியிருந்து பொய்களை விற்கின்றார்கள் என்கின்றீர்கள்,,  சதாம் உசைன் தனது எணணையை அமரிக்க டாலரில் விற்கமாட்டேன் என்றபோதும் கடாபி மறுத்தபோதும் இந்த கோட்டு சூட்டுபோட்ட மீடியாக்கள் எல்லாம் அவர்களை உண்மை பேசியா தீவிரவாதியாக்கி நாடுகளையும் மக்களையும் நாசமாக்கி கொன்றார்கள் ?  இந்த உலகத்தில் பல போர்களை தொடுத்து வறுமைகளை ஏற்படுத்தி பல மில்லியன் மக்களை கொன்றும் சாவுக்கும் காரணமாகி நாடு நகரம் உடமைகள் அழிவுக்கும் காரணமாக இருக்கும் மனிதநேயமற்ற செயலின் பிரதான சக்தியாக இருக்கும் அமரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நாசாவோ இல்லை அவர்களது அறிவுக்கூடங்களோ அறிவியலை கண்டுபிடிக்கின்றது என்பது மீது உங்களுக்கு மதிப்பிருப்பது உங்கள் விருப்பம் ஆனால் இந்த அறிவியல் மானுடத்திற்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் பொருட்டு மனிதநேய நோக்குடன் வளர்க்கப்படுகின்றது என்பதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை.  எம்மவர்கள் பொய் சொல்லி பிதற்றுகின்றார்கள் என்றால் அமரிக்கா என்ன உண்மை சொல்லியா இந்த உலகத்தை சுரண்டுகின்றது ?

நீங்கள் எப்படி எகாதிபத்தியத்திற்கு எதிர்விளையை தெருவில் குந்தியிருந்து பொய்களை விற்கின்றார், பிதற்றுகின்றார், காசு பார்க்கின்றார் என்று மறுதலிக்கின்றீர்களோ அதேயேதான் நான் இந்த கோட்டு சூட்டு போட்ட அமரிக்க நாசா பல்கலைக்கழகங்கள் அறிவியல் போன்றவற்றைக் கொண்டு இவ்வுலகில் அழிவுகளை செய்கின்றார்கள், சுரண்டுகின்றார்கள், அப்பாவி மக்களை கொல்கின்றார்கள் அவர்கள் உழைப்பை சுரண்டுகின்றார்கள்,  தம்மை நியாயப்படுத்த பொய்களை சொல்கின்றார்கள்,   இவர்கள் சொல்வதை அப்படியே நம்பவேண்டிய அவசியம் இல்லை. இவர்களின் கடந்த கால போர்களும் சரி இன்றைய சுரண்டல் அணுகுமுறைகளும் சரி மனிதநேயமற்றது ஆதலால் எதை சென்னாலும் அதை சந்தேகத்தோடு அணுகுவதே ஆரோக்கியமானது. இதன் அடிப்படையிலேயே பல காணொளிகள் உருவாகின்றது. உண்மை பொய்களுக்கு அப்பால் இவைகள் புதிய சிந்தனை முறைகளை தோற்றுவிக்கின்றது, அதுவே பிரதானமானது என்பது எனது நிலைப்பாடு இவ்வாறான சிந்தனை முறை கணிசமானளவு வெற்றியும் பெற்றுள்ளது, முன்பெல்லாம் ஒரு விவாதத்தில் தமது தரப்பு நியாததை சொல்ல அமரிக்க ஆய்வுகளையும் அறிக்கைகளையும் முன்வைப்பார்கள் இப்போது அவைகள் தவிர்க்கப்படுகின்றது, அவை மீதான நம்பிக்கை இழக்கத்தொடங்கிவிட்டது. இவற்றுக்கு கணிசமானளவு சமூகவலைத்தளங்களில் செயற்படுபவர்கள் பங்களிப்பும் உள்ளது. 

நாசா இணைப்பு உங்களுக்கல்ல! நீங்கள் இணைத்த பொய்யான தகவல்களைப் பரப்பும் ஆரோக்கியமற்ற இணைப்பை சரி பார்க்க விரும்புவோருக்கு  ஒரு வாய்ப்பு. மேலும் நான் சொன்னது போல, நாசா சொல்வதெல்லாம் நாசா கண்டு பிடித்தவை மட்டுமல்ல- இந்தியா, ரஷ்யா, சிங்கப்பூர் என்று பல நாடுகளின் பல இனங்களின் ஆய்வுகள் இவை. அதை விடுங்கள், உங்களுக்கு அறிய ஆவல் இல்லா விட்டால் நான் பொறுப்பல்ல!

ஆனால், ஏகாதிபத்தியம், அமெரிக்க exceptionalism என்பவற்றை எதிர்க்க தெருவோரம் இருந்து தனக்கே விளங்காத அறிவியலை தவறாக விவரிப்பது தான் அவசியமான எதிர் வினையா? அதனால் தானே நீங்களும், அந்த யுரியூப் நபரும் ட்ரம்பும் ஒரே வகையினர் என நான் முதலே சொன்னேன்?

நீங்கள் இங்கே புதிய அறிவியல் கருது கோள்கள் பற்றி சொல்லியிருக்கும் கருத்துகளுக்கு ஆதாரங்கள் எங்கே? எங்கே அமெரிக்காவினதும் மேற்குலகினதும் நிறுவனங்களின் அறிவியல் தகவல்களை இப்போது ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்? எங்கே எப்போது இப்படியான தவறான தகவல்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டு புதிய திசையில் ஆறிவை முன்னகர்த்தியது என்று சொல்லுங்கள்,  ஆதாரம் காட்டுங்கள்.

இணைய உலகம் என்பது யார் நினைப்பதையும் வந்து கொட்டி விட்டுப் போகக் கூடிய குப்பை மேடு என உங்களுக்குத் தெரியாதா? அந்த இணைய உலகில் , சோசியல் மீடியாவில் ஒரு அறிவியல் கோட்பாட்டுக்குக் கிடைக்கும் ஆதரவும் எதிர்ப்பும் தான் அந்தக் கோட்பாட்டின் உண்மைத் தன்மைக்கு உரைகல்லா? நீங்கள் ஒரு எழுத்தாளரல்லவா? நூலகம், நூல்கள், நம்பிக்கையான தகவல் மூலங்கள் இவை எதுவும் உங்களுக்குத் தெரியாதா? மில்லியன் கணக்கானோரில் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து பேசும் ஒரு விஞ்ஞானியைக் கூட உங்களால் கண்டு பிடித்து நம்ப முடியவில்லை என்றா சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 விஞ்ஞானிகளில் சிலர் தற்போதைய புவி வெப்பமடைதல் என்பது இயற்கையாக நடக்கின்றது. மனிதரின் செயற்பாடுகளால் இல்லை என்று உறுதியாக நிற்கின்றார்கள். ஆனால் புவி வெப்பமடைவது இயற்கையோ, செயற்கையோ தொடர்ந்தும் நடக்கின்றது. மனிதர்கள் வாழத் தேவையான நன்னீர் குறைவடையும்போது மனித இனம் ஆபத்துக்கு உள்ளாவது தவிர்க்கமுடியாது. ஆனால் வியாபாரிகள், முதலாளிகளுக்கு ஆபத்தான காலத்திலும் பணம் பார்க்க வழிதேவை. அதை அரசியல்வாதிகள் மூலம் பெற்றுக்கொள்ள  சில விஞ்ஞானிகளும், சட்டவாதிகளும் கட்டாயம் உதவுவார்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

நாசா இணைப்பு உங்களுக்கல்ல! நீங்கள் இணைத்த பொய்யான தகவல்களைப் பரப்பும் ஆரோக்கியமற்ற இணைப்பை சரி பார்க்க விரும்புவோருக்கு  ஒரு வாய்ப்பு. மேலும் நான் சொன்னது போல, நாசா சொல்வதெல்லாம் நாசா கண்டு பிடித்தவை மட்டுமல்ல- இந்தியா, ரஷ்யா, சிங்கப்பூர் என்று பல நாடுகளின் பல இனங்களின் ஆய்வுகள் இவை. அதை விடுங்கள், உங்களுக்கு அறிய ஆவல் இல்லா விட்டால் நான் பொறுப்பல்ல!

ஆனால், ஏகாதிபத்தியம், அமெரிக்க exceptionalism என்பவற்றை எதிர்க்க தெருவோரம் இருந்து தனக்கே விளங்காத அறிவியலை தவறாக விவரிப்பது தான் அவசியமான எதிர் வினையா? அதனால் தானே நீங்களும், அந்த யுரியூப் நபரும் ட்ரம்பும் ஒரே வகையினர் என நான் முதலே சொன்னேன்?

நீங்கள் இங்கே புதிய அறிவியல் கருது கோள்கள் பற்றி சொல்லியிருக்கும் கருத்துகளுக்கு ஆதாரங்கள் எங்கே? எங்கே அமெரிக்காவினதும் மேற்குலகினதும் நிறுவனங்களின் அறிவியல் தகவல்களை இப்போது ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்? எங்கே எப்போது இப்படியான தவறான தகவல்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டு புதிய திசையில் ஆறிவை முன்னகர்த்தியது என்று சொல்லுங்கள்,  ஆதாரம் காட்டுங்கள்.

இணைய உலகம் என்பது யார் நினைப்பதையும் வந்து கொட்டி விட்டுப் போகக் கூடிய குப்பை மேடு என உங்களுக்குத் தெரியாதா? அந்த இணைய உலகில் , சோசியல் மீடியாவில் ஒரு அறிவியல் கோட்பாட்டுக்குக் கிடைக்கும் ஆதரவும் எதிர்ப்பும் தான் அந்தக் கோட்பாட்டின் உண்மைத் தன்மைக்கு உரைகல்லா? நீங்கள் ஒரு எழுத்தாளரல்லவா? நூலகம், நூல்கள், நம்பிக்கையான தகவல் மூலங்கள் இவை எதுவும் உங்களுக்குத் தெரியாதா? மில்லியன் கணக்கானோரில் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து பேசும் ஒரு விஞ்ஞானியைக் கூட உங்களால் கண்டு பிடித்து நம்ப முடியவில்லை என்றா சொல்கிறீர்கள்?

நீங்கள் நாசாவில் இருந்து ஆதராங்களை முன்வைத்தாலும்  சரி ஹர்வார்ட் யுனிவெர்சிட்டியில் இருந்து முன்வைத்தாலும் இல்லை வேறு எந்த நாட்டிலிருந்தும் ஏகாதிபத்திய சுரண்டல்வாதிகளின் கைக்கூலிகளாக விஞ்ஞானிகள் அறிக்கைகளை விட்டாலும் சரி அவைமீதான் சந்தேகங்கள் அதன் பின்னால் உள்ள சுரண்டல் அரசியல் சூழ்ச்சிகள் குறித்த கேள்விகள் எழுப்பப் பட்டுக்கொண்டே இருக்கும்.. அவை சாமான்ய மனிதர்களால் எழுப்பப்படும்.. அறிவியலும் , விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முதலில் முதலாளித்துவத்தின் மூலதனங்கள் தவிர இவ்வுலகில் மானுடர்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழவேண்டும் என்று மனிதநேய நோக்கில் கண்டுபிடிக்கப்படுவதில்லை. ஒரு சிறு உதாரணத்திற்கு  ஒரு கைதொலைபேசிவாங்க சாமான்யன் ஒருவனின் ஒருமாத சம்பளம்  வேறுபல நாடுகளின் ஒரு வருட சம்பளம்  என்னும் சில நாடுகளின் சாமான்யனால் வாங்க வாய்ப்பே இல்லை. அதன் சேவைக்கு ஒரு நாள் சம்பளம்.. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு சிறு அலகே எவ்வளவு உழைப்பை உறிஞ:சுகின்றது !!  இவ்வாறு விவசயாயம் எண்ணைவளங்கள் மருத்துவம் ராணுவம் போர்கள் என அனைத்திலும் இந்த வளர்ச்சி சுரண்டுபவனின் விருபத்திற்கு உட்பட்டே இருக்கின்றது. பல லட்சம் உயிர்களை ஆண்டுதோறும் காவுவாங்கிக்கொண்டிருக்கின்றது. நீங்கள் அறிவியலை கடவுளாக அணுகினால் நான் அதை சாத்தான் ஓதும் வேதமாக அணுகுகின்றேன். நீங்கள் பிரமிப்பாக உற்சாகத்தோடு பார்த்தால் நான் அதை அறத்திற்கு எதிரானதாக அச்சத்தோடு பாரக்கின்றேன். 

யார்வேண்டுமானாலும் பேசினால் இணையம் குப்பைமேடா ? யார் யார் எல்லாம் பேசவேண்டும் ? முதலாளிள் அவர்களின் அடிவருடிகள் கோட்டுசூட்டுபோட்டவன் இப்படி யாரின் கையில் இருக்கவேண்டும் குப்பைமேடு புனிதமாவதற்கு ? இறுதியாக ஒன்றைக் கூறுகின்றேன்: இங்கே விஞ்ஞானத் தரவுகள் ஆதராங்கள் அதன் மீதான சரிபிழை பார்த்தல்கள் எனது கருத்துக்களின் கருப்பொருள் இல்லை. யார் முன்வைக்கின்றார்கள் அவர்களின் அறம் மனிதநேயம் சார்ந்த வழித்தடம் என்ன இவைகள் மனிதகுலத்திற்கு எற்படுத்திய ஏற்படுத்தும் நன்மை தீமைகள் என்ன என்ற நோக்கே என்னிடம் உள்ளது. ஆதலால் அடிப்படை அணுகுமுறையிலேயே கருத்துக்கள் முரண்படுகின்றது. இருந்தபோதும் நீங்கள் முன்வைக்கும் அறிவியல் சார்ந்த கருத்துக்ள் நியாயங்களை உள்வாங்கிக்கொள்கின்றேன். உங்களிடம் இருந்து நிறய விசயங்களை இத்திரியில் மட்டுமல்லாதது ஏனைய திரிகளிலும் அறிந்துகொள்ள முடிகின்றது. நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2019 at 4:41 PM, சண்டமாருதன் said:

குறைந்த பட்சம் சொல்லும் ஒரு தகவலுக்கு ஆதாரம் தரக் கூடியவர்கள் தான் செவி மடுக்கப் பட வேண்டும் என்பது எனது கருத்து! ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒரு சிவப்புக் கண்ணாடியை போட்டுக் கொண்டு உலகத்தைப் பார்த்தால் உங்களுக்குச் சிவப்பாக எல்லாம் தெரியும்! அது எனக்குத் தெரியாவிட்டால் என் பார்வை பிழையென்று அர்த்தமில்லை! விடயங்களை case by case ஆக அணுகுவது என் பழக்கம். இது என் தொழிலின் வழி வந்தது. உங்கள் முறை வேறு. அது உங்கள் உரிமை, அவ்வளவு தான் சொல்ல முடிந்தது இந்த விடயத்தில்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.