Sign in to follow this  
பிழம்பு

பாதிரியார்களின்- பாலியல் இச்சைகள்!!

Recommended Posts

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்த பாப்­ப­ர­சர் போப் பிரான்­சிஸ் முதல் தட­வை­யாக ஒரு விட­யத்­தைப் பகி­ரங்­க­மாக ஏற்­றுக்­கொண்­டார். உல­க­ள­வில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­திய விட­யம் அது. கன்­னி­யாஸ்­தி­ரி­கள் மீதான பாதி­ரி­மார்­க­ளின் பாலி­யல் சேஷ்­டை­கள், வதை­கள் உண்­மையே என்­பதை முதல் தட­வை­யா­கப் போப் பிரான்­சிஸ் ஏற்­றுக்­கொண்­டமை கவ­னம்­பெற்­றது.

உல­க­ள­வில் இருந்து வரும் இந்­தப் பிரச்­சினை பல நாடு­க­ளி­லும் இனம் காணப்­பட்­டி­ருக்­கி­றது. 2014ஆம் ஆண்­டி­லி­ருந்து 2016ஆம் ஆண்­டுக்கு இடை­யில் கன்­னி­யாஸ்­திரி ஒரு­வ­ரைப் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­தார் என்ற குற்­றச்­சாட்­டில், இந்­தி­யா­வின் பஞ்­சாப் மாநில ஜலந்­தர் மறை­மா­வட்ட ஆயர் பிரான்கோ கைதா­கி­னார். அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று கன்­னி­யாஸ்­தி­ரி­கள் போராட்­டம் நடத்­தி­னர். இந்­தப் போராட்­டத்­தில் பங்­கு­கொண்ட கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளைத் திருச்­சபை இட­மாற்­றம் செய்­தி­ருந்­தது. நிலமை இவ்­வா­றி­ருக்க, இந்­தியா முழு­வ­தும் பாதி­ரி­யார்­க­ளால் பாலி­யல் தொல்­லைக்கு ஆளா­கும் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் குறித்­தும், அவர்­க­ளின் நேரடி அனு­ப­வங்­கள் குறித்­தும் செய்தி நிறு­வ­னம் ஒன்று ஆய்­வொன்றை மேற்­கொண்­டது.

அந்த ஆய்வு தரும் அதிர்ச்சி
பாதி­ரி­யார்­கள் அவர்­க­ளின் அந்­த­ரங்க அறைக்­குள் வலுக்­கட்­டா­ய­மாக அழைத்­துச் சென்­ற­தை­யும் பாலி­யல் உற­வுக்கு உட்­ப­டு­மாறு வற்­பு­றுத்­தி­ய­தை­யும் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் ஆதங்­கத்­து­டன் கூறி­னர். இயேசு பிரா­னின் தூதர்­கள் என்று நம்­பிய பாதி­ரி­யார்­களே தங்­க­ளின் உட­லில் அத்­து­மீ­றிக் கை வைத்­த­தை­யும் இன்­னும் பிற­சம்பவங்களையும் பல்­வேறு தேவா­ல­யங்­க­ளில் பணி­பு­ரி­யும் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் தயங்­கித் தயங்கி வெளியே கூறி­யுள்­ள­னர். தனது கதையை ஆரம்­பிக்­கும் கன்­னி­யாஸ்­திரி ஒரு­வர், ‘’அவர் குடித்­தி­ருந்­தார்’’ என்று கூறினார்.

சில நிமி­டங்­க­ளி­லேயே தொடர்ச்­சி­யாக நடந்த பாலி­யல் அத்­து­மீ­றல் குறித்­துக் கூறி­யுள்­ளார் பிறி­தொரு கன்­னி­யாஸ்­திரி. கத்­தோ­லிக்­கத் தலைமை, தங்­க­ளைக் காப்­ப­தில் அதிக சிரத்தை எடுத்­துக் கொள்­வ­தில்லை என்­றும் வேதனை தெரி­வித்­தார். ஆசியா, ஐரோப்பா, தென் அமெ­ ரிக்கா மற்­றும் ஆபி­ரிக்கா உள்­ளிட்ட பகு­தி­க­ளில் கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளைப் பாலி­யல் வதைக்கு உள்­ளாக்­கிய பாதி­ரி­யார்­கள் மற்­றும் பேரா­யர்­கள் குறித்து வத்­திக்­கான் நிர்­வா­கத்­துக்­குத் தெரி­யும் என்­றும் அதை நிறுத்­து­வ­தற்­குக் குறைந்த அள­வி­லான முயற்­சி­க­ளையே வத்­திக்­கான் எடுத்­தது என­வும் கடந்த ஆண்­டின் அறிக்கை ஒன்று கூறு­கி­றது. சில கன்­னி­யாஸ்­தி­ரி­கள், ‘‘பாலி­யல் முறைகேடு எல்லா இடத்­தி­லும் வழக்­க­மான ஒன்­று­தான்’’ என்று நினைக்­கின்­ற­னர். சிலர், ‘’அரி­தான ஒன்று’’ என்­கின்­ற­னர். எவ­ரும் இது­கு­றித்து வெளிப்­ப­டை­யா­கப் பேசத் தயா­ராக இருப்­ப­தில்லை. பெரும்­பா­லா­னோர் தங்­க­ளின் அடை­யா­ளம் மறைக்­கப்­பட வேண்­டும் என்ற விதி­யின் பேரில் தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­யைப் பேசி­யுள்­ள­னர்.

போராட்­ட­மும் அதன் விளை­வு­க­ளும்
கடந்த ஆண்­டில், கேரள மாநி­லத்­தில் கன்­னி­யாஸ்­தி­ரி­யைப் பாலி­யல் வன்புணர்வு செய்­த­தா­கக் கூறப்­பட்ட குற்­றச்­சாட்­டில் பேரா­யர் பிராங்கோ மூலக்­கல் கைது செய்­யப்­பட்­டார். ஆனால் அதற்கு முன்­பாக அந்­தக் கன்­னி­யாஸ்­திரி எதிர்­கொண்ட பிரச்­சி­னை­கள் ஏரா­ளம். 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை கோட்­ட­யம் அருகே குரு­வி­ளங்­காடு பகு­தி­யில் உள்ள தேவா­ல­யத்­தில் பணி­யாற்­றி­ய­வர் பாதி­ரி­யார் பிராங்கோ மூலக்­கல். இவர், தான் பணி­யாற்­றிய காலத்­தில் கன்­னி­யாஸ்­திரி ஒரு­வரை மிரட்டி 13 முறை வன்­பு­ணர்­வில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு ­கி­றது.

இது தொடர்­பா­கப் பாதிக்­கப்­பட்ட கன்­னி­யாஸ்­திரி அப்­போது தேவா­ லய நிர்­வா­கி­ க­ளி­டம் முறைப்­பாடு அளித்­தும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. இதை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட கன்­னி­யாஸ்­திரி குரு­வி­ளங்­காடு பொலி­ஸில் முறைப்­பா­ட­ ளித்­துள்­ளார். குற்­றச்­சாட்­டுக்கு ஆளான பாதி­ரி­யார் பிராங்கோ மூலக்­கல், பஞ்­சாப் மாநி­லம் ஜலந்­த­ரில் பேரா­ய­ராக இருந்து வரு­கி­றார். ஆனால், கன்­னி­யாஸ்­திரி கூறும் குற்­றச்­சாட்டு ஆதா­ர­மற்­றது, பொய்­யா­னது என்று பிராங்கோ மறுத்து வந்­தார். முறைப்­பாடு அளித்து 70 நாள்­கள் ஆகி­யும் பேரா­யர் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்று குற்­றம் சாட்­டிய கன்­னி­யாஸ்­தி­ரி­கள் 5 பேர் 14 நாள்­கள் போராட்­டம் நடத்­தி­னர். உல­கின் கவ­னத்­துக்கு இந்த நிகழ்வு வந்­த­தும் பாதி­ரி­யார் கைதா­னார்.

மற்­றொரு கன்­னி­யாஸ்­திரி மனம் திறக்­கி­றார்
டெல்­லி­யின் வறு­மை­யான பகு­தி­க­ளில் பணி­யாற்றி வரும் கன்­னி­யாஸ்­திரி ஒரு­வ­ரி­டம் பேசி­ய­போது, ‘‘15 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால், ஒரு தேவா­ல­யத்­தில் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்­தேன். அந்­தப் பாதி­ரி­யா­ருக்கு என் மேல் ஈர்ப்பு இருந்­த­து­போல உணர்ந்­தேன். ஒரு நாள் இரவு நிகழ்­வொன்­றுக்­குச் சென்ற பாதி­ரி­யார் இரவு தாம­த­மாக வந்­தார். 9.30 மணிக்கு மேல் இருக்­கும். என்­னு­டைய அறை­யைத் தட்­டி­னார். ‘’உன்­னைப் பார்க்க வேண்­டும். உன்­னு­டைய ஆன்­மிக வாழ்க்கை குறித்­துப் பேச வேண்­டும்’’ என்­றார். நான் கத­வைத் திறக்­க­வில்லை. வலுக்­கட்­டா­ய­மா­கத் தள்­ளிக் கத­வைத் திறந்­தார். என்­னால் போதை­யின் வாச­னையை உணர முடிந்­தது. ‘‘நீங்­கள் நிதா­னத்­தில் இல்லை. உங்­க­ளு­டன் பேசத் தயா­ராக இல்லை’’ என்­றேன். முத்­தம் கொடுக்க முயன்­றார். எங்­கெல்­லாம் முடி­யுமோ அங்­கெல்­லாம் தொட்­டார். அவரை வேக­மா­கத் தள்­ளி­விட்­டு­விட்­டுக் கத­வைப் பூட்­டி­னேன். அது பாலி­யல் பலாத்­கா­ரம் இல்லை என்­றா­லும் அது ஓர் அச்­சு­றுத்­தும் நிகழ்­வாக இருந்­தது. இது­கு­றித்து என்­னு­டைய மூத்த கன்­னி­யாஸ்­தி­ரி­யி­டம் சொன்­னேன். அவர், பாதி­ரி­யா­ரு­டன் மீண்­டும் சந்­திப்­பு­கள் நிக­ழாத வண்­ணம் பார்த்­துக்­கொண்­டார். நடந்­தவை குறித்து, தேவா­லய அதி­கா­ரி­க­ளுக்­குப் பெய­ரி­டப்­ப­டாத கடி­தங்­களை எழு­தி­னேன். ஆனால், நட­வ­டிக்கை எது­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை’’ என்­றார்.

புனி­தத்­துக்­கும் வேட்­டை­யா­ட­லுக்­கும் இடை­யில்…
கத்­தோ­லிக்க வர­லாறு முழு­வ­தும் பெண்­கள் தங்­க­ளு­டைய புனி­தத் தன்­மை­யைக் காத்­துக் கொள்­வ­தற்­காக, தியா­கி­க­ளாக மாறி உயிர் துறந்த சம்­ப­வங்­கள் நிறைய நிகழ்ந்­தி­ ருக்­கின்­றன. புனி­தர் அகதா, திரு­ம­ணம் செய்­து­கொள்ள மறுத்­த­தால், மார்­ப­கங்­க­ளைக் கிழித்­துக் கொல்­லப்­பட்­டார். தனது புனி­தத்­தன்­மை­யைக் காத்­த­தற்­கா­கப் புனி­தர் லூசி, உயி­ரு­டன் எரித்­துக் கொல்­லப்­பட்­டார். வன்­பு­ணர்வு செய்ய முயன்ற ஒரு­வ­ரால் புனி­தர் மரியா கொரேட்டி, 11 வய­தில் கொல்­லப்­பட்­டார். ‘’இது புனி­தத்­துக்­கும் வேட்­டை­யா­ட­லுக்­கும் இடை­யி­லான போராட்­டம்’’ என்­கி­றார் டெல்­லி­யைச் சேர்ந்த தத்­து­வ­வி­யல் அறி­ஞர் ஷாலினி மூலக்­கல்.

ஏன் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் முறை­யி­டு­வ­தில்லை?
பாதி­ரி­யா­ருக்கு எதி­ராக முறை­யி­டு­வது என்­றால் தேவா­லய நிர்­வா­கத்­தில் அவர்களுக்கு மேலாக இருப்­ப­வர் மீது குற்­றம் சுமத்­து­வது. இது ஏரா­ள­மான வதந்­தி­க­ளுக்­கும் தேவா­லய அர­சி­ய­லுக்­கும் வழி­வ­குக்­கும். இது அவ­ர­வர் நற்­பெ­ய­ருக்­குக் களங்­கம் விளை­விக்­க­லாம். அது­மட்­டு­மல்­லா­மல் மத ரீதி­யான அர­சி­யல், பெண்­கள் என்­றாலே குறைச்­ச­லாக மதிப்­பி­டும் நம்­பிக்கை உள்­ளிட்­டவை கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளின் அமை­திக்கு ஊக்­கம் அளித்­து­வி­டு­கின்­றன. இன்­னும் சில கன்­னி­யாஸ்­தி­ரி­களோ, தங்­க­ளது முறைப்­பாடு தாங்­கள் சார்ந்­துள்ள தேவா­ல­யத்­தின் பெய­ரைக் குலைக்­கும் என்­றும் ஏனைய மத அமைப்­பு­க­ளின் விமர்­ச­னங்­களை எதிர்­கொள்ள வேண்­டும் என­வும் அஞ்­சு­கின்­ற­னர்.

குடி­போ­தை­யில் இருந்த பாதி­ரி­யாரை எதிர்­கொண்ட கன்­னி­யாஸ்­திரி, ‘’நான் உண்­மை­யைச் சொன்­னால், தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வேனோ என்ற பயம்­தான் வெளியே சொல்­லா­த­தற்கு முக்­கிய கார­ணம். பாதி­ரி­யார்­க­ளுக்கு எதி­ராக முறை­ யி­டும்­போது, தங்­க­ளின் சொந்த மதத்­தி­ன­ரையே, தங்­க­ளின் மத உய­ர­தி­கா­ரி­க­ளையே எதிர்க்க வேண்டி வரு­கி­றது’’ என்­கி­றார். கன்­னி­யாஸ்­திரி ஷாலினி மூலக்­கல் மேலும் கூறும்­போது, ‘’நாங்­கள் கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளா­கவே இருந்­தா­லும் கூட, அமை­தி­யாக இருக்­கவே முயற்­சிக்­கி ­றோம். பாலி­யல் அனு­ப­வங்­களை எதிர்­கொள்­ளும் பெண், அதை மறைத்து எல்­லாம் சரி­யாக இருக்­கி­றது போன்ற தோற்­றத்தை ஏற்­ப­டுத்­தவே முயல்­கி­றாள்’’ என்­றார்.

https://newuthayan.com/story/13/பாதிரியார்களின்-பாலியல்-இச்சைகள்.html

Share this post


Link to post
Share on other sites

சாமியார்களும், கத்தோலிக்க பாதிரிமாரும் இயற்கைக்கு மாறாக காமத்தை அடக்குவதால் வரும் பிரச்சனைகளே! இவர்கள் திருமணம் செய்து தமது வாழ்க்கையை வாழலாமே?!
காம இயல்பற்றவர்கள் அல்லது அவ்வுணர்வு முற்றிலும் இல்லாதவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடலாமே!

கொஞ்சம் அதிக பிரசங்கிதனமா இருந்தாலும் மனதில்பட்டதை எழுதினேன்.

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, ஏராளன் said:

சாமியார்களும், கத்தோலிக்க பாதிரிமாரும் இயற்கைக்கு மாறாக காமத்தை அடக்குவதால் வரும் பிரச்சனைகளே! இவர்கள் திருமணம் செய்து தமது வாழ்க்கையை வாழலாமே?!
காம இயல்பற்றவர்கள் அல்லது அவ்வுணர்வு முற்றிலும் இல்லாதவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடலாமே!

கொஞ்சம் அதிக பிரசங்கிதனமா இருந்தாலும் மனதில்பட்டதை எழுதினேன்.

திருமணம் செய்தால் ஒன்றோடுதான் இருக்க வேணும் அதுதான் சாமிமார்....:14_relaxed:

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, ஏராளன் said:


காம இயல்பற்றவர்கள் அல்லது அவ்வுணர்வு முற்றிலும் இல்லாதவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடலாமே!

 

காம  இயல்பற்றவர்கள் என்று  சொல்லக்கூடிய மனிதர்கள் இந்தப் பூமியில் யாரும் இல்லை.

Share this post


Link to post
Share on other sites

என்னைப்பொறுத்த வரைக்கும் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் இருந்து மாமா வேலை பார்ப்பவர்கள் அல்லது தூதுவர்களாக இருப்பவர்களை இல்லையேல் மந்திர வேலை பார்ப்பவர்களை அடியோடு இல்லாதொழிக்க வேண்டும்.
 

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, ஏராளன் said:

சாமியார்களும், கத்தோலிக்க பாதிரிமாரும் இயற்கைக்கு மாறாக காமத்தை அடக்குவதால் வரும் பிரச்சனைகளே! இவர்கள் திருமணம் செய்து தமது வாழ்க்கையை வாழலாமே?!
காம இயல்பற்றவர்கள் அல்லது அவ்வுணர்வு முற்றிலும் இல்லாதவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடலாமே!

கொஞ்சம் அதிக பிரசங்கிதனமா இருந்தாலும் மனதில்பட்டதை எழுதினேன்.

இது மேலோட்டமாக பார்க்க கூடிய விடயம் இல்லை 
சமூக போராளிகள் எல்லோருமே இதனால் பல சிக்கலை 
சந்திப்பவர்கள்தான் .... எல்லோருமே சாதாரண மனிதர்களை காட்டிலும் 
உணர்ச்சி மிகுந்தவர்கள். பதின்ம வயதில் காதல் தோல்வி உற்றால் தற்கொலை 
செய்வது இதனால்தான் இவர்களிடம் உணர்ச்சி மிகுந்துநிற்கும்.

இவர்கள் எதற்காக போராட போனார்களோ அதே கொள்கையில் 
மிகுந்த பற்றும் அதற்காக கொடுக்கும் அர்ப்பணிப்பும் ஏராளமாக இருக்கும்.
கால போக்கில் காமம் குறுக்கிடும்போது  அதை எப்படி கையாள்வது என்பது?
ஏற்கனவே பயிற்சி கொடுக்க பட்டு இருப்பின் தப்பித்து கொள்கிறார்கள் 
எஞ்சியவர்கள் மாட்டி கொள்கிறார்கள்.

இராணுவம் கெரில்லா போராளிகள் கடுமையான உடல் பயிற்சி 
மற்றும் பெண்கள் இல்லாத காடுகளில் முகாம் போட்டு தங்குவது 
தவறியவருக்கு கடுமையான தண்டனை போன்றவற்றால் பயிற்சி பெறுகிறார்கள் 

முன்னைய சமண புத்த சைவ முனிவர்மார் காமத்தை அடக்க கூடிய 
மஞ்சள் மற்றும் பல மூலிகைகளை உணவோடு கலந்து கொள்ளவார்கள் 
தவிர சுவாசத்தால் தமது உடலை கட்டுப்படுத்தும் பயிற்சி பெறுகிறார்கள் 

காமத்தை கடடவிழ்த்து விட்ட்டாலும் நான் மாட்டி கொள்ள மாடடேன் 
எனும் வெற்றிடம் இருக்கும் ... கிறிஸ்தவ பாதிரிமார் ...... ஹிந்து சாமிமார் 
இராணுவ கொமாண்டோ மார்   வெறி பிடித்த காம மிருகம் ஆகி விடுகிறார்கள் 
எமது ஊரிலேயே இது நடந்து இருக்கிறது ......... நாம் கேள்வி கேட்க போனால் 
நீங்கள் போய் உங்கள் கோவில் வேலையை பாருங்கள் என்று எம்மை விரட்டி விடுவார்கள் 
வெளியே கசிந்தால் சேர்ச்சு வண்டவாளம் வெளியே வந்துவிடும் என்று மூடி மறைக்கவே 
பெரிய முயற்சி செய்வார்கள் ...... இவைதான் பாதிரிமாரை மீண்டும் மீண்டும் தப்பு செய்ய 
அனுமதிக்கிறது ...... ஊர்மக்கள் கூடி ஒருவரை புரட்டி எடுத்தால் ... அடுத்து வருபவர் ஒழுங்காக இருப்பார்.

அடுத்தவன் மதத்தை பற்றி அக்கறை கொள்ளாமல் எனது மதம் 
புனிதமாக இருக்க வேண்டும் என்று எண்ணி அதை சரி செய்ய எந்த மதவாதியும் 
துணியப்போவதில்லை .............. நான் இங்கு யாழிலேயே ஹிந்து மதம் பற்றி எழுதினால் 
என்னை கிறிஸ்த்தவன் ஆக்கி விடார்கள். 
பிரச்சனை பாதிரிமார் சாமிமார் இல்லை .... மதம் பிடித்த மூடர்கள்தான் முக்கிய காரணம். 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

என்னைப்பொறுத்த வரைக்கும் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் இருந்து மாமா வேலை பார்ப்பவர்கள் அல்லது தூதுவர்களாக இருப்பவர்களை இல்லையேல் மந்திர வேலை பார்ப்பவர்களை அடியோடு இல்லாதொழிக்க வேண்டும்.
 

இப்போ கோவில் குளம் வேலையிடம் பாராளுமன்றம் என்று பாலியல் புகாத இடமே இல்லைப் போல இருக்கு.அதுக்குள் முற்றாக நிற்பாட்டுவதென்றால் எப்படி?

ஒருகாலத்தில் அமெரிக்க உயர்தர பாடசாலைகளில் கொண்டம் வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுதல் வைத்தார்களாம்.அதே மாதிரி இனி எல்லா இடங்களிலும் பாதுகாப்பா ஏதாவது செய்யுங்கோ என்று இருக்க வேண்டியது தான்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

ஒருகாலத்தில் அமெரிக்க உயர்தர பாடசாலைகளில் கொண்டம் வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுதல் வைத்தார்களாம்.அதே மாதிரி இனி எல்லா இடங்களிலும் பாதுகாப்பா ஏதாவது செய்யுங்கோ என்று இருக்க வேண்டியது தான்.

பாதிரியார், சாமிகளுக்கு ‘Condom’ supply செய்தால், அவர்களிடம் போகும் பக்தர்கள் பாதுகாப்பாக இருப்பார்களா?

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, thulasie said:

பாதிரியார், சாமிகளுக்கு ‘Condom’ supply செய்தால், அவர்களிடம் போகும் பக்தர்கள் பாதுகாப்பாக இருப்பார்களா?

தவறு செய்யத் தான் போகிறேன் என்றால் அதற்கான பாதுகாப்பு மட்டுமே.

Share this post


Link to post
Share on other sites
22 minutes ago, ஈழப்பிரியன் said:

தவறு செய்யத் தான் போகிறேன் என்றால் அதற்கான பாதுகாப்பு மட்டுமே.

பாலியல் தவறு செய்யும் பாதிரிமார், சாமியாருக்கு ‘Condom’ சப்ளை செய்து, செய்வதை  பாதுகாப்பாக செய்யுங்கள் என்று ஊக்குவிக்கிறீர்களா?

Share this post


Link to post
Share on other sites

எல்லா மதங்களிலும் உந்த சாமிமார், பாதிரிமார், பிக்குகள், லெப்பையல், பண்ற அட்டகாசம், சொல்லி மாளாது.

மக்களை ஏமாத்தி காசினை தானமாக பெற்று, பிறகென்ன.... திண்டு, குடித்து, ******, சந்தோசமாக இருக்கினம்...

இப்படி வேலை டென்ஷனில் இருப்பதுக்கு, பேசாம ஒரு நல்ல இடமா பாத்து ஒக்கார வேண்டியதுதான்.... 😤

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஒருகாலத்தில் அமெரிக்க உயர்தர பாடசாலைகளில் கொண்டம் வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுதல் வைத்தார்களாம்

அப்பிடியெண்டால் படிப்பிக்கிற நேர அட்டவணையிலை அதுக்கும் நேரம் ஒதுக்கவெல்லோ வேணும். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, Nathamuni said:

எல்லா மதங்களிலும் உந்த சாமிமார், பாதிரிமார், பிக்குகள், லெப்பையல், பண்ற அட்டகாசம், சொல்லி மாளாது.

... 😤

மதவாதிகளைவிட, நாத்திகம் பேசும் கூட்டங்கள் செய்யும் அட்டகாசம், மதவாதிகளைவிட மிஞ்சியதாயிருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, thulasie said:

மதவாதிகளைவிட, நாத்திகம் பேசும் கூட்டங்கள் செய்யும் அட்டகாசம், மதவாதிகளைவிட மிஞ்சியதாயிருக்கிறது.

மதத்தின் பெயரால் அட்டகாசம் செய்வதை பலர் விரும்பவில்லை
 

Share this post


Link to post
Share on other sites
26 minutes ago, putthan said:

மதத்தின் பெயரால் அட்டகாசம் செய்வதை பலர் விரும்பவில்லை
 

அட்டகாசம் - யார் விரும்புவார்கள்?

மதவாதிகளை விட,  நாத்திகக் கூட்டங்கள் செய்யும் அக்கிரங்கள், அநியாயங்கள் சொல்லி மாளாது.

Share this post


Link to post
Share on other sites
On 2/12/2019 at 5:58 PM, thulasie said:

அட்டகாசம் - யார் விரும்புவார்கள்?

மதவாதிகளை விட,  நாத்திகக் கூட்டங்கள் செய்யும் அக்கிரங்கள், அநியாயங்கள் சொல்லி மாளாது.

மதவாதிகள் மதத்தின் பெயரால் சமுகத்திற்கு தீங்கு விளைவிற்கும் செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுகொள்ள்முடியாது...

நாத்திகவாதிகளை எவனும் க‌ண்டுகொள்வதில்லை....நாத்திகவாதிகள் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ,கெடுதல்  செய்யக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை சனத்திற்க்கு உண்டு.....ஆனால் மதவாதிகளுக்கு கடவுள் நம்பிக்கையாளன் என்ற கவசம் உண்டு...

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this