Jump to content

தற்போதுள்ள களச் சூழலின்படி, தந்தை செல்வா போன்று சம்பந்தன் ஐயாவும் ஈற்றில் கடவுள் தான் தமிழ் மக்களை காப்பாற்றுவார் என்று கூறுகின்றாரோ தெரியாது - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்


Recommended Posts

இன அழிப்புக்களுக்கு மத்திய தேசிய கொடியின் கீழ் நிற்கக்கூடிய மனநிலையில் தமிழர்கள் இல்லை!

 
 

தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் பெரும்பான்மையினரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கின்றது, பெரும்பான்மையினர் மாற மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் சம்பந்தன் ஐயா இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வார இறுதி தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைமை தேசிய சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில் வடக்கு கிழக்கில் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இது தொடர்பில் தமது நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

சுதந்திர தினம் சம்பந்தமாக கட்சி ரீதியாக முடிவுகள் இதுவரை காலத்தில் எடுக்கப்படவில்லை.

கடந்த காலத்தில் சம்பந்தன் ஐயாவும் சுமந்திரனும் சுதந்திர தின நிகழ்வுகளில் நல்லெண்ணத்தினை வெளிப்படுத்தும் வகையில் பங்கெடுத்திருந்தார்கள்.

தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் பெரும்பான்மையினரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கின்றது, பெரும்பான்மையினர் மாற மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் சம்பந்தன் ஐயா இல்லை.

தற்போதுள்ள களச் சூழலின்படி, தந்தை செல்வா போன்று சம்பந்தன் ஐயாவும் ஈற்றில் கடவுள் தான் தமிழ் மக்களை காப்பாற்றுவார் என்று கூறுகின்றாரோ தெரியாது.

என்னைப் பொறுத்த வரையில் 70 ஆண்டுகளுக்கு மேலாக எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருக்கும் இன ரீதியான அழிப்புக்களுக்கு மத்திய தேசிய கொடியின் கீழ் நிற்கக்கூடிய மன ரீதியான தயார் நிலை தமிழர்களுக்கு ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

http://battinaatham.net/description.php?art=18641



 

Link to comment
Share on other sites

... சிறிக்கு கூத்தமைப்பில் வெடி போட சும் கும்பல் காத்திருப்பது தெரிந்ததே! இதே போதும் ...!

... சிறியின் கருத்துக்கு, சுமந்திர செம்புகளின் கருத்துக்கள் ... வரவில்லையே?????😜
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.