Jump to content

கொள்ளையனுக்கு முற்காலத்தை நினைவூட்டும் தண்டனை கொடுத்த இளைஞர்கள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Jude said:

இவர்கள் சிறிய கள்ளர் - ஏழைகள். பெரிய கள்ளர் வாள் வெட்டு குழுக்களையும் சுவிஸ்குமார் போன்ற கொலைகாரரையும் உங்கள் அண்ணரையும்  பிள்ளையானையும் துணைக்கு வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன செய்யலாம்?

நிச்சயமாக வாள் வெட்டு குழுக்கள் கட்டுப்படுத்த பட வேண்டும்...பிள்ளையான் இப்ப உள்ளுக்குள்ள தான் இருக்கிறார்...அவர் செய்த தப்பிற்கு எதோ ஒரு வகையில் தண்டனை அனுபவிக்கிறார்...என்ர அண்ணரும் லண்டனில் ஜெயில் இருந்து விட்டுத் தான் போனவர்...அவர்கள் இப்பவும் கடத்தல்,கப்பம் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள் என்றால்,நீங்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்தால் அவர்களுக்கு தண்டனையை கொடுங்கள்...அதில் எந்த ஆட் சேபனையும் இல்லை.

பெரிய கள்வர்கள் தப்பு செய்கிறார்கள் என்பதற்காக சிறிய கள்வர்கள் தப்பு செய்வதை பார்த்திட்டு இருக்கேலாது ...லண்டனில கள்வனை பிடித்தால் நாங்கள் அடிக்க வேண்டிய தேவை இல்லை...இங்கு சட்டம் தன் கடமையை செய்யும்...அங்கு பொலீசும் சேர்ந்து களவெடுப்பதால் தான் சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய தேவை அங்குள்ள மக்களுக்கு வந்தது...மக்கள் விழிப்பாய் இருந்து 4,5 கள்ளங்களை பிடித்து இப்படி அடித்தால் களவும் குறையும்,பொலீசுக்கும் ஒரு பாடமாய் இருக்கும் .

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
1 hour ago, Paanch said:

முகம்மது நபி என்ற காட்டுமிராண்டி 7 ம் நூற்றாண்டில் பிதற்றிய  சட்டத்தின் கீழ் நடை பெறும் தண்டனை முறைகளை நாகரீக வளர்சசி அடை ந்த சமுதாயத்தில்ஏற்றுக்கொள்ள முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருடன் என்று சந்தேகப்பட்டவரை பொதுமக்கள் அதுவும் பொதுவெளியில் அடித்துச் சித்திரவதை செய்வது என்பது நியாயமானதல்ல இதை நான் ஆதரிக்கவுமில்லை ஆனால் இந்தக்காணொளி இரு விடையங்களை உணர்த்துகிறது ஒன்று காவல்துறையிலும் நீதித்துறையிலும் மக்கள் இதுவரை எந்தவித நம்பிக்கையும் வைக்கவில்லை (பொலீசில குடுத்தாச்சு இனிமேல் இவர்பாடு அவ்வளவுதான் எனும் மனோபாவத்தைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும்வண்ணமான செயற்பாடுகளை போலீஸ்தரப்பில் இதுவரை ஈடுபடவில்லை) நீதித்துறை என்பது இதுவரை தமிழர்களில் அனேகமான வழக்குரைஞர்கள் அறம்சார்ந்து தமது தொழிலைச்செய்வதில்லை.

இரண்டாவது கூட்டுச்சமூகப் பொறுப்பு என்பது பற்றிய புரிதல் இதுவரை யாருக்கும் இல்லாமலிருப்பது. கடந்தகாலங்களில் இவை ஓரளவு இருந்தது அவை குடும்பங்களுக்கு இடையே நடைபெறும் திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின்போது தபிநபர் ஒழுக்கம் குடும்பம் மற்றும் அவர்களது உறவினர்களது சுய ஒழுக்கம் இவைகளை முக்கியமானதாகக் கருதியிருந்ததால் அறம்சாராத விடையங்கள் தவிர்க்கப்பட்டன அல்லது அதில் ஈடுபடுவதைத் தானாகவே தடைசெய்தது ஆனால் இப்போது சுயநலப்போக்கு பணம் பகட்டு தட்டிச்சுத்தல் இவைகளை அனேகமானவர்கள் பின்பற்றுவதால் சமூக விழுமியங்களைக்காக்க எவை தேவையோ அவை அனைத்தும் மறுக்கடிக்கப்பட்டுள்ளது.

சிறுவயதில் நான் வெளியால போய் விளையாட்டுத்தனமாக எதாவது தவறு செய்தாலும் அம்மா முதலில் கூறும் வாக்கியம் வாடா விதானையிட்டை உன்னை மக்கோணாவில கொண்டுபோய்ச் சேர்த்துவிடுகிறன் என, வீட்டுவளவுக்குள் விதானை வந்தாலே அயலட்டை விசாரிக்கத் தொடங்கும் என்னக்க காலையில உங்க விதானை வந்த சிலமனாக்கிடக்குது என. தவிர ஏதாவது விடையமாக போலீஸ் வீட்டுக்குள் வரவேண்டுமாகிலும் விதானையுடனேயே சம்பந்தப்பட்ட வீடுகளுக்குள் விசாரணை செய்யும் நடைமுறை அப்போது இருந்தது.

இப்போதெல்லாம் அப்படி இல்லை ஏழாலை வடக்கைச்செர்ந்த்த ஒருதன் இளம்பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதன் பின்னதாக அவனது தம்பியார் இப்போது ஊருக்குள்ள கசிப்புக்காச்சி வித்து தெல்லிப்பளைப் பகுதியில் பெரிய ஒரு வீடு கட்டுறான் ஆனால் அதே ஊரார் அவன் கசிப்புக் காய்ச்சி வித்தாலும் குடி வெறி இல்லாதவன் என நற்சாட்சிப்பத்திரம் குடுக்குதுகள் அதுவும் இளம்பெண்கள் மத்தியில் சரியான மவுசு ஒரு தென்னக்ச் சினிமா கதாநாயகனுக்கு இருக்குமாப்போல என வைத்துக்கொள்ளுங்கோவன்.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தபோது குடாநாட்டார் எல்லோரும் விஜை ஆன்டனி மற்றும் நடிகர் விஜையது அம்மாவினது நாக்கமூக்கப்பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடக் குவிந்தவையள் இவர்களுக்கு இன்னமும் வேணும். இரவில நித்திரை இல்லாது வயித்தில நெருப்பைக்கட்டிக்கொண்டு வாழும் காலம் குடாநாட்டு மக்களுக்கு வரவேண்டும்.

Link to comment
Share on other sites

17 hours ago, ரதி said:

நிச்சயமாக வாள் வெட்டு குழுக்கள் கட்டுப்படுத்த பட வேண்டும்...பிள்ளையான் இப்ப உள்ளுக்குள்ள தான் இருக்கிறார்...அவர் செய்த தப்பிற்கு எதோ ஒரு வகையில் தண்டனை அனுபவிக்கிறார்...என்ர அண்ணரும் லண்டனில் ஜெயில் இருந்து விட்டுத் தான் போனவர்...அவர்கள் இப்பவும் கடத்தல்,கப்பம் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள் என்றால்,நீங்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்தால் அவர்களுக்கு தண்டனையை கொடுங்கள்...அதில் எந்த ஆட் சேபனையும் இல்லை.

பெரிய கள்வர்கள் தப்பு செய்கிறார்கள் என்பதற்காக சிறிய கள்வர்கள் தப்பு செய்வதை பார்த்திட்டு இருக்கேலாது ...லண்டனில கள்வனை பிடித்தால் நாங்கள் அடிக்க வேண்டிய தேவை இல்லை...இங்கு சட்டம் தன் கடமையை செய்யும்...அங்கு பொலீசும் சேர்ந்து களவெடுப்பதால் தான் சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய தேவை அங்குள்ள மக்களுக்கு வந்தது...மக்கள் விழிப்பாய் இருந்து 4,5 கள்ளங்களை பிடித்து இப்படி அடித்தால் களவும் குறையும்,பொலீசுக்கும் ஒரு பாடமாய் இருக்கும் .

எனக்கு திருட்டு பயலே பாட்டு தான் நியாபகம் வருகிறது...

"நத்திங் இஸ் இல்லீகல் அன்லெஸ் யூ கெட் காட்" என்ற பழமொழியும் நியாபகம் வருகிறது...

Link to comment
Share on other sites

6 hours ago, tulpen said:

முகம்மது நபி என்ற காட்டுமிராண்டி 7 ம் நூற்றாண்டில் பிதற்றிய  சட்டத்தின் கீழ் நடை பெறும் தண்டனை முறைகளை நாகரீக வளர்சசி அடை ந்த சமுதாயத்தில்ஏற்றுக்கொள்ள முடியாது. 

நாகரீக வளர்ச்சியடைந்த சமுதாயம்....! அது சிறீலங்காவிலும் உள்ளதா....? எந்தப் பகுதியில் உள்ளது.…?? சிறீலங்காவில் அது இருந்திருந்தால் நீங்கள் சுவிசிலும் நான் யேர்மனியிலும் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிராது உறவே. 🤔

Link to comment
Share on other sites

1 minute ago, Paanch said:

நாகரீக வளர்ச்சியடைந்த சமுதாயம்....! அது சிறீலங்காவிலும் உள்ளதா....? எந்தப் பகுதியில் உள்ளது.…?? சிறீலங்காவில் அது இருந்திருந்தால் நீங்கள் சுவிசிலும் நான் யேர்மனியிலும் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிராது உறவே. 🤔

நீங்கள் கூறியதை மனவருத்தத்துடன் முழுமையாக  ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை எனக்கு. 

Link to comment
Share on other sites

7 minutes ago, Paanch said:

நாகரீக வளர்ச்சியடைந்த சமுதாயம்....! அது சிறீலங்காவிலும் உள்ளதா....? எந்தப் பகுதியில் உள்ளது.…?? சிறீலங்காவில் அது இருந்திருந்தால் நீங்கள் சுவிசிலும் நான் யேர்மனியிலும் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிராது உறவே. 🤔

பொதுவாக விவாதம் செய்தால் தவறு...

இலங்கை என்று எடுத்துக்கொண்டால் அங்கு எண்ணி பார்க்காத அளவு கொடூரங்கள் நடந்தேரியுள்ளது...

நடத்திவிட்டு வெள்ளையும் சொள்ளையுமாக உலகின் ஒரு பகுதியில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியுமில்லாமல் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு வலம் வருகின்றனர்... உலக நாடுகளும் வெக்கமே இல்லாமல் அந்தஸ்து கொடுத்து வேடிக்கை பார்க்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில மாதங்களுக்கு முன் யாழ்களத்தில் ஒருவர் அருமையான கருத்தை பதிந்திருந்தார். கருத்தென்பதை விட யதார்த்தமும் அதுவே. அவர் பெயரை மறந்து விட்டேன், இந்த தலைப்புக்கு அது பாெருத்தமான படியால் இங்கு குறிப்பிடுகிறேன். முதலில் அவருக்கு எனது நன்றி. "எல்லாேருக்கும் ஒரு பிரச்சனை என்பது: தங்கள் வீட்டுக்கதவை தட்டும்வரை அடுத்தவர் பிரச்சனையாகவே காணப்படும். பல வியாக்கியானங்களும் பட்டிமன்றங்களும் வைக்கப்படும்."

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.