• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
குமாரசாமி

கொள்ளையனுக்கு முற்காலத்தை நினைவூட்டும் தண்டனை கொடுத்த இளைஞர்கள்.

Recommended Posts

10 minutes ago, போல் said:

அது தான் உண்மை!

சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் இராணுவ கும்பல்கள் ஒருபக்கம் சட்டவிரோத புத்தர் சிலைகளை நிறுவிக்கொண்டு மறுபுறத்தில் சகல சமூக விரோத செயல்களிலும் வழிகாட்டிகளாகவும் பங்காளிகளாகவும்  இருந்து கொண்டு புத்தர் சிலை என்பது காட்டுமிராண்டிகளின் சின்னம் என்பதை நிலைநிறுத்தி வருகின்றனர். இவர்களின் காட்டுமிராண்டித் தனத்தைக் கட்டுப்படுத்த தமிழர் பகுதியில் உரிய கட்டமைப்புகள் தற்போது இல்லை.

இந்தப் பின்னணியில் வேறுவழியின்றி தமது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும், சமூகவிரோத கும்பல்களை கட்டுப்படுத்தும், காமுகர் பிடியிலிருந்து தப்பும் முயற்சியில், நீதியை நிலைநிறுத்தும் முயற்சியில், தமது பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் மக்கள் தாங்களே ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

28 minutes ago, கிருபன் said:

ஊருக்குப் போய்வந்த நண்பர் சொன்னது. அங்கு பொலிஸும் இராணுவமும்தான் ஒன்றில் களவெடுக்கப் போவது அல்லது களவு எடுப்பவர்களுடன் கூட்டாகச் சேர்ந்துகொள்வது. இந்த இலட்சணத்தில் நீதி கிடைக்கும் என்றும் சொல்லமுடியாது!

அப்படி என்றால் சிங்களம் எதை அங்குள்ளவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றதோ அதை தான் அவர்கள் செய்கின்றனர்.

சிங்களம் இப்படியான எதிர்வினைகளை தான் எம் சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்கும். ஒரு படித்த மெச்சூரிட்டி கூடிய சமூகமாக அங்குள்ளவர்கள் மாறுவது சிங்களத்தின் நீண்டகால இனவழிப்பு திட்டத்துக்கு எதிராக போய்விடும். எனவே சிந்திக்க முடியாதவர்களாக, வன்முறையை முதல் தெரிவாக எடுப்பவர்களாக எம் மக்கள் மாறினால் அதனால் இலகுவாக இனவழிப்பை தொடர முடியும்.

இப்பவும், இந்த செயலின் மூலமும் சிங்களத்தின் நோக்கங்கள் தான் நிறைவேறுகின்றது. நாம் மேலும் மேலும் முட்டாள்களை அதிகம் கொண்ட சமூகமாக, நாகரீக வளர்ச்சியடையாத குழுமமாக, உலகின் பொதுப்பண்புக்கு மாறானவர்களாக ஆகிக் கொண்டு சிங்களத்தின் கனவை நிறைவேற்றுகின்றோம்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, நிழலி said:

ஆகவே அங்கே பொலிஸ் தவறு செய்யுது, காசு வாங்குது (கொடுப்பதும் தமிழ் மக்கள் தான்), எனவே மக்கள் காட்டுமிராண்டிகளாக மாறி தாமே திடீர் நீதிவான்களாக ஆகி விசாரணை எதுவும் இன்றி தண்டனை கொடுக்கும் தவறை செய்யலாம்.

தவறுக்கு தவறு சரியாகிப் போச்சு! அப்படித்தானே.

இப்ப சும்மா ரெண்டு தட்டு போட்டது பிழையெண்டால்....

கோழிகள்வர்கள் கூட மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு, பொட்டா, பூவா என்று கேட்டு தண்டனை வழங்கிய படியால் தான், போராட்ட காலத்தில், ஆவா கோஸ்டிகள், பெண்களுடன் சேட்டை  விடும் கோஸ்டிகள்,   தூள் கோஸ்டிகள் எல்லாம் துண்டைக் காணம், துணியைக் காணம் எண்டு  வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி போனவையள் எண்டது நிழலியருக்கு மறந்து போனதேன்?

Edited by Nathamuni
 • Like 2

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, நிழலி said:

அப்படி என்றால் சிங்களம் எதை அங்குள்ளவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றதோ அதை தான் அவர்கள் செய்கின்றனர்.

சிங்களம் இப்படியான எதிர்வினைகளை தான் எம் சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்கும். ஒரு படித்த மெச்சூரிட்டி கூடிய சமூகமாக அங்குள்ளவர்கள் மாறுவது சிங்களத்தின் நீண்டகால இனவழிப்பு திட்டத்துக்கு எதிராக போய்விடும். எனவே சிந்திக்க முடியாதவர்களாக, வன்முறையை முதல் தெரிவாக எடுப்பவர்களாக எம் மக்கள் மாறினால் அதனால் இலகுவாக இனவழிப்பை தொடர முடியும்.

இப்பவும், இந்த செயலின் மூலமும் சிங்களத்தின் நோக்கங்கள் தான் நிறைவேறுகின்றது. நாம் மேலும் மேலும் முட்டாள்களை அதிகம் கொண்ட சமூகமாக, நாகரீக வளர்ச்சியடையாத குழுமமாக, உலகின் பொதுப்பண்புக்கு மாறானவர்களாக ஆகிக் கொண்டு சிங்களத்தின் கனவை நிறைவேற்றுகின்றோம்.

கள சூழ்நிலைகளை சிறிதும் உணர்ந்தவராக உங்கள் கருத்து அமையவில்லை!

உங்கள் கோணத்தில் சிந்திப்பதென்றால் அதற்கான ஒரே தீர்வு உடனடியாக சிங்கள-பௌத்த இராணுவ மற்றும் போலீஸ் கும்பல்களை வட மாகாணத்தில் இருந்து அப்புறப்படுத்துவதும் நீதியை ஏற்படுத்தக் கூடிய காவல்துறை கட்டமைப்பை ஏற்படுத்துவதும் தான்!

இது உடனடியாக சாத்தியமில்லை என்றால் தற்போதைய கள யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழிகள் இல்லை! இங்கு நடந்த சம்பவம் ஒரு குழுவினால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் இல்லை. சமூக விரோத செயல் இடம்பெற்ற போது அயலவர்களால் / ஊர் மக்களால் சடுதியாக ஒன்று கூடி, சூழ்நிலைக்கேற்ப செயற்படுத்தப்பட்ட இயற்கை நீதி!

இதற்கு காரணம் 10 வருடங்களாக தமிழ் மண்ணில் பரவலாக நடக்கும் 95% ஆன சமூக விரோத செயல்கள், தமிழின விரோத காட்டுமிராண்டித் தனங்கள் அனைத்திலும் சிங்கள-பௌத்த இராணுவ மற்றும் போலீஸ் பயங்கரவாதக் கும்பல்களின் நேரடி பங்களிப்பு தான். 

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, Nathamuni said:

இப்ப சும்மா ரெண்டு தட்டு போட்டது பிழையெண்டால்....

கோழிகள்வர்கள் கூட மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு, பொட்டா, பூவா என்று கேட்டு தண்டனை வழங்கிய படியால் தான், போராட்ட காலத்தில், ஆவா கோஸ்டிகள், பெண்களுடன் சேட்டை  விடும் கோஸ்டிகள்,   தூள் கோஸ்டிகள் எல்லாம் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி போனவையள் எண்டது நிழலியருக்கு மறந்து போனதேன்?

நீங்கள் கோழிக் களவர்களை மின் கம்பத்தில் வைத்து புலிகள் / போராளிகள் போட்ட காலத்துடன் அங்கிருந்து வந்து விட்டீர்கள் என நினைக்கின்றேன். புலிகள் ஆரம்பகாலத்தில் செய்த இப்படியான வேலைகள் பிழை எனக் கருதியதால் தான், தமிழீழ காவல் படை, நீதிமன்றம் என்பனவெல்லாம் அமைத்து சிங்கள அரசின் நீதித்துறையை விட சிறப்பாக நீதி வழங்கினார்கள். அதற்கென்றே தனித்து தமிழீழ சட்டக்கோவை உருவாக்கினார்கள். இணையத்தில் தேடினால் அவர்களின் சட்டங்கள் பற்றிய ஆவணங்கள் கிடைக்கலாம்,வாசித்துப் பாருங்கள்.

அவர்களின் நிர்வாகம் இயங்கி வந்த காலத்தில் விசாரணை இன்றி எவரும் தண்டிக்கப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இருந்தனர்; அது புலிகளின் தளபதியாக இருந்தால் கூட...

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, போல் said:

கள சூழ்நிலைகளை சிறிதும் உணர்ந்தவராக உங்கள் கருத்து அமையவில்லை!

உங்கள் கோணத்தில் சிந்திப்பதென்றால் அதற்கான ஒரே தீர்வு உடனடியாக சிங்கள-பௌத்த இராணுவ மற்றும் போலீஸ் கும்பல்களை வட மாகாணத்தில் இருந்து அப்புறப்படுத்துவதும் நீதியை ஏற்படுத்தக் கூடிய காவல்துறை கட்டமைப்பை ஏற்படுத்துவதும் தான்!

இது உடனடியாக சாத்தியமில்லை என்றால் தற்போதைய கள யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழிகள் இல்லை! இங்கு நடந்த சம்பவம் ஒரு குழுவினால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் இல்லை. சமூக விரோத செயல் இடம்பெற்ற போது அயலவர்களால் / ஊர் மக்களால் சடுதியாக ஒன்று கூடி, சூழ்நிலைக்கேற்ப செயற்படுத்தப்பட்ட இயற்கை நீதி!

இதற்கு காரணம் 10 வருடங்களாக தமிழ் மண்ணில் பரவலாக நடக்கும் 95% ஆன சமூக விரோத செயல்கள், தமிழின விரோத காட்டுமிராண்டித் தனங்கள் அனைத்திலும் சிங்கள-பௌத்த இராணுவ மற்றும் போலீஸ் பயங்கரவாதக் கும்பல்களின் நேரடி பங்களிப்பு தான். 

ஊர் மக்கள் சேர்ந்து ஒருவரை பிடிப்பது வேறு, இது எல்லா இடங்களிலும் நடக்கும் ஒன்று. ஆனால் தாமே விசாரணை செய்வதும், தண்டனை கொடுப்பதும், படம் பிடித்து அதை பகிர்வதும் நாகரீக சமூகத்தின் நடவடிக்கை அல்ல. அப்படி கொடுத்தும் கடைசியில்  பொலிசில் தான் கொடுத்து உள்ளார்கள். அதை முதலியே செய்து இருக்கலாம்.

இதனால் அந்த நபர் திருந்துவார், இனி களவு செய்ய மாட்டார் என நினைத்தால், நீங்கள் குற்றம் / தண்டனை பற்றிய யதார்த்தம் அறியாதவராக இருப்பவர் என தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கு. அவர் முன்னை விட அதிகம் தைரியமும், வன்மமும் கொண்டவராக தான் ஆகும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, நிழலி said:

நீங்கள் கோழிக் களவர்களை மின் கம்பத்தில் வைத்து புலிகள் / போராளிகள் போட்ட காலத்துடன் அங்கிருந்து வந்து விட்டீர்கள் என நினைக்கின்றேன். புலிகள் ஆரம்பகாலத்தில் செய்த இப்படியான வேலைகள் பிழை எனக் கருதியதால் தான், தமிழீழ காவல் படை, நீதிமன்றம் என்பனவெல்லாம் அமைத்து சிங்கள அரசின் நீதித்துறையை விட சிறப்பாக நீதி வழங்கினார்கள். அதற்கென்றே தனித்து தமிழீழ சட்டக்கோவை உருவாக்கினார்கள். இணையத்தில் தேடினால் அவர்களின் சட்டங்கள் பற்றிய ஆவணங்கள் கிடைக்கலாம்,வாசித்துப் பாருங்கள்.

அவர்களின் நிர்வாகம் இயங்கி வந்த காலத்தில் விசாரணை இன்றி எவரும் தண்டிக்கப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இருந்தனர்; அது புலிகளின் தளபதியாக இருந்தால் கூட...

இதனுள் போனால் பல விடயங்களை விவாதிக்க வேண்டி வரும்.

சிம்பிளாக சொல்வதானால், புலிகளோ, வேறு இயக்கங்களோ, தமிழீழ காவல்துறையோ தமக்கு உரிய வேலைகளை, லஞ்சம் இல்லாமல் செய்த போது எல்லாம் சரியாக இருந்தது.

மக்களுக்கு எந்த கவலையும் இருக்க வில்லை.

இப்போது சிங்கள போலீசார், தமது பகுதியினை மட்டுமில்லாது, எமது பகுதிகளையும் நாசமாக்கி கொண்டிக்கின்றனர்.

ஆகவே மக்கள் தம்மை, தமது உடமைகளை பாதுகாக்க வேண்டிய தேவை தோன்றி உள்ளது.

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, Nathamuni said:

இவ்வாறான செயல்களால் ஒருவர் திருந்தியோ அல்லது இவ்வாறு செய்கின்றவர்கள் பயப்பட்டோ இனி தவறு செய்ய மாட்டார்கள் என நீங்கள் நம்புகின்றீர்கள். ஆனால் நான் அப்படி நம்பவில்ல. இது இந்த நபரை மேலும் கெடுத்து இவர் போன்றவர்களை மேலும் வளர்த்தெடுக்கவே உதவும் என நான் நம்புகின்றேன்.

தீர்வு இல்லாத வெறும் தண்டனைகள் மேலும் மேலும் குற்றவாளிகளையே உருவாக்கும்.

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, நிழலி said:

இதை தண்டனை என்று கருதுவதால் தான் நீங்கள் குழம்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இது மக்களின், கோபம், இயலாமை, விரக்தி.....

போனவாரம் தான் சிங்கள அமைச்சர் சொன்னார், யாழ்ப்பாணத்தில்  வாள் வெட்டு கோஸ்டிகள் கட்டுப்படுத்தப்பட்டனர் என. 

இந்த வாரம் மீண்டும் கைவரிசை காட்டி விட்டனர்.

இங்கே UK யில் கூட, neighbhourhood watch உள்ளது. அதன் அர்த்தம், பக்கத்தில் என்ன நடக்கின்றது என்பதை கவனிப்பது. வீதியில் கூட பதாதைகளை வைத்துள்ளனர். திருடர்களுக்கு எச்சரிக்கை செய்ய. அதேவேளை வீட்டுக்குள் வந்த திருடனை தாக்குவதே சிக்கலானது இங்கே.... அப்படி ஒரு சமூக, சட்ட  அமைப்பு.

அதேபோல, இந்த திருடனோ, அவனது கூட்டாளிகளோ, இந்த ஏரியா ஆபத்தானது, சாத்துவார்கள், முகமும் தெரிஞ்சு போச்சு என்ற எச்சரிக்கை எண்ணம், வந்திருக்கும்.

நாலு சாத்து சாத்துவது, அங்கே சமூக அமைப்பு. 

போலீஸ்க்காரர் , இவர் போன்ற திருடர்களை, பூட்டிய அறைக்குள், தலை கீழாக கட்டி தொங்க விட்டு, மிளகாய் தூள் கண்ணுக்குள் அடிக்கும் சித்திரவதை அங்கே தான் நடக்கின்றது. அதை நாம் பார்ப்பதில்லை.

ஆனால் இந்த தட்டுக்கு மட்டும் கவலைப் படுவது.... சரிதானா?

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, நிழலி said:

ஊர் மக்கள் சேர்ந்து ஒருவரை பிடிப்பது வேறு, இது எல்லா இடங்களிலும் நடக்கும் ஒன்று. ஆனால் தாமே விசாரணை செய்வதும், தண்டனை கொடுப்பதும், படம் பிடித்து அதை பகிர்வதும் நாகரீக சமூகத்தின் நடவடிக்கை அல்ல. அப்படி கொடுத்தும் கடைசியில்  பொலிசில் தான் கொடுத்து உள்ளார்கள். அதை முதலியே செய்து இருக்கலாம்.

மீண்டும் சொல்கிறேன் உங்கள் தர்க்க ரீதியான விவாதம் "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பதற்கு ஒத்ததாகும்! கள சூழ்நிலைகளை சிறிதும் உணர்ந்தவராக உங்கள் கருத்து அமையவில்லை!

சிங்கள-பௌத்த இராணுவ மற்றும் போலீஸ் பயங்கரவாதக் கும்பல்களின் ஆதரவு /பாதுகாப்பு தமக்கு இருக்கும் என்ற துணிவில் திருட்டுகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் திருடர்கள் சமூக விரோதிகள் இதன் பின்னர் அந்த பகுதிக்கு செல்ல அச்சப்படுவர்! இது தான் உண்மை! அது தான் அந்த மக்கள் சாதித்த சாதனை! இது இயற்கை நீதி! எழுதப்பட்ட சட்டங்களை விட வலிமையானது இயற்கை நீதி! எனவே கடைசியில் போலீசிடம் கொடுத்துள்ளார்கள் என்பது உண்மையை உணர மறுக்கும் விதண்டாவாதம்!

11 minutes ago, நிழலி said:

இதனால் அந்த நபர் திருந்துவார், இனி களவு செய்ய மாட்டார் என நினைத்தால், நீங்கள் குற்றம் / தண்டனை பற்றிய யதார்த்தம் அறியாதவராக இருப்பவர் என தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கு. அவர் முன்னை விட அதிகம் தைரியமும், வன்மமும் கொண்டவராக தான் ஆகும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

நீங்கள் கருதுவது போல ஊர்மக்களின் தண்டனையால் இவர் திருந்தமாட்டார் என்றால், அதனது கருத்து அவருக்கு ஊர் மக்கள் கொடுத்த தண்டனை போதாது என்பது தான்!

பல நாகரிகமான நாடுகளில் கசையடி தண்டனை இன்றும் உண்டு!

Share this post

Link to post
Share on other sites

திருடுவது குற்றம்,  ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் ஒருவரை உடல்ரீதியாக அடித்து துன்புறுத்தி காயப்படுத்துவது. ஒரு குற்றத்திற்கு என்னுமொரு குற்றம் தீர்வாகாது.  

தமிழர்களது போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு சிங்கள அரச இயந்திரத்தை அனுசரித்து வாழலாம் என்ற முடிவுக்கு பெரும்பான்மை மக்கள் வந்தபின் அவர்களது காவல்துறை சரியில்லை என்பதில் எந்த நியாயமும் இல்லை. 

திருடுபவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்லாம் தவிர தண்டனை வழங்குவது  குற்றமே.  தண்டனையை நீதிமன்றமே வழங்க முடியும். நீதி கிடைக்காத பட்சத்தில் நீதி கேட்டுப் போராடவேண்டியதுதான். போராடியும்  கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்து போராடவேண்டியதுதான். ஆலமரம் புளியமரத்தின் கீழ் இருந்து பஞ்சாயத்து செய்யுமளவுக்கு கூட அதிகாரமற்ற இடத்தில் யார் வேண்டுமானலும் யாருக்கும் தண்டனை கொடுக்கலாம் என்பது தவறு. வேண்டுமானால்  போராடி அதிகாரத்தை கையில் எடு.. இன்ன இன்ன குற்றங்களுக்கு இன்ன இன்ன தண்டனை என்பதற்கான ஒப்புதலை மக்களிடம் இருந்து வாங்கி  யார் யார் தண்டனை வழங்க யோக்கியதை உள்ளவர் என்பதை வரையறை செய்து பின்னர் தண்டனை வழங்கலாம். 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

இன்றைய கால கட்டத்தில் நாங்கள்  தவிர்க்கவேண்டியது தூரநோக்கற்ற சிந்தனையும் செயல்களும். சம்பவம் நடக்கும்போது நாம் அருகில் நிற்கிறோம் என்று வைத்துக்கொண்டாலும்கூட எங்களில் எத்தனைபேர் தண்டனை வழங்கும் அந்த ஊர்வாசிகளுடன் சேர்ந்து கள்வனை அடித்திருப்போம். இந்தச் செயலை ஆதரிக்கும் உறவுகளில் எத்தனைபேர் தமது பிள்ளைகளை நீயும் போய் இரண்டு தட்டு தட்டிட்டு வா என்று அனுப்பிவைப்பார்கள். மொத்தத்தில் நாங்கள் இல்லாத ஒரு ஊருக்கு வழிகாட்டுகிறோம்.

 நாங்கள் இன்றைய யதார்த்தத்தை உணராமல் புலிகள் அன்று அதைச் செய்தார்கள் இதைச்செய்தார்கள் என்று  இல்லாத புலிகளைப்பற்றி பேசி அந்த நாள் கனவில் வாழ்ந்து வாழ்க்கையை முடிக்க எவரும் தயாரில்லை.  நாட்டில் அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செய்யவேண்டிய வேலைகளை மக்கள் இன்று  செய்து கொண்டிருக்கிறார்கள். இன அழிப்பு அரசின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. எதிரி போரில் அழித்ததுபோக மீதியை  எமது மக்களின் சமுக, கல்வி,  பொருளாதார கட்டமைப்புகளைச் சிதைப்பதானால் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறான். 

இதை புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு இளைய சமுதாயத்தை மழுங்கடிக்க போதைப் பொருளை தாராளமாக விற்பனைக்கு விட்டிருக்கிறான். அராஜகத்தை வளர்த்தெடுக்க வாள்வெட்டுக் குழுக்களை ஏவிவிட்டிருக்கிறான். தமிழினம் காட்டுமிராண்டித்தனமான இனம் என்று  சர்வதேசத்துக்கு சாட்சியுடன் சொல்கிறான். படிப்படியாக தமிழினமும் ஒரு பொறுப்புள்ள இனமாக  ஒன்றிணைந்து சக மனிதர்களை அனுசரித்து  வாழ்வதிலிருந்து விடுபட்டு  ஒரு கேவலமான நிலைக்கு தள்ளப்படுகிறது.

Share this post

Link to post
Share on other sites

எல்லோரும் களவு எடுத்தவனை பற்றியே கதைக்கின்றிர்கள் ..... திருவாளர் கள்ளர் அவர்கள் இதுக்கு முன்னும் பல வீட்டில் இருந்து திருடி வந்திருக்கின்றார்.  ஒரு நிமிடம் களவு கொடுத்தவனை யோசித்து பாருங்கள். அவன் இன்னும்  இருக்கின்றானா அல்லது விட்டத்தில் தொங்குகின்றானா தெரியவில்லை......!  😒

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

அடுத்த வீட்டில் இந்தக் கள்வரால் நடந்த அநியாயம் உங்களுக்கு தவறாகப் தெரியவில்லை 

கள்வனுக்கு வலிக்குது மரியாதை போகுதென்று புலம்புகிறீர்கள். இப்படிப்பட்ட கள்வரால் பணம், பொருள், மானம் மரியாதை, உயிர் இழந்து அடிஉதைபட்டு இருக்கும் அப்பாவிகளுக்காக அழுதிருக்கிறீர்களா? அடுத்த வீட்டில் நடந்த சம்பவம் உங்களை மனிதாபிமானம் பேசவைக்குது. இதுவே உன்கடவீட்டில் நடந்திருந்தால் இப்படி பேசுவீர்களா? எனது அயல் கிராமத்தில் வயதான அம்மா சாப்பிடுவதற்காக தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பிக்கும்போது மின்சாரம் நின்று  
விட்டது. நேரம் பாத்து கூரை வழியாக இறங்கியவன் அவரை கொலை செய்து, காதோடை அறுத்து அவரின் தாேட்டை காெண்டு பாேய்விட்டான். அவர் எவ்வளவு துடித்திருப்பார்? இது உங்கள் அம்மாவாக, சகாேதரியாக, மனைவியாக இருந்திருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா? சிங்களம் எங்கள் இனத்தை சுறணை இல்லாத காட்டு மிராண்டிகளாக உருவாக்குவதாேடு, நிரந்தரமாக சிங்களப்படை வடக்கில் நிரந்தரமாக தங்கியிருப்பதற்காக இதுபாேன்ற செயல்களை ஊக்குவிக்கிறான். இவன் குற்றவாளிகளை தண்டிப்பானா? நீதிமன்றம் பாேனால், எங்கள் பகற்காெள்ளை சட்டத்தரணிகள் மறுநிமிடமே வெளியில காெண்டு வந்துவிடுவினம். எம்மவருக்கு வேறவழியில்லை பாம்பை கண்டால் யாரும் யாேசித்துக்காெண்டிருக்க மாட்டார்கள். இதில் தண்டனை காெடுப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்று சாெல்ல முடியாது. ஆனால் இந்த திருடனையாே, அவன் குழுவையாே கண்டால் மக்கள் எச்சரிக்கையாய் இருக்கமுடியும்.
 • Like 2

Share this post

Link to post
Share on other sites

கள்ளனை பிடிச்சு அடிக்கிறதாலே இந்த கள்ளன் திருந்துவானோ இல்லையோ  இதை பார்க்கும் மற்ற கள்வர்களுக்கு ஒரு பயம் வரும்...எதற்கும் ஒரு எல்லை இருக்குது அல்லவா?...இவரை பிடித்து அடிக்காமல்,கொள்ளாமல் போலீசிடம் கொடுத்தால் பயம் விட்டுப் போகும்...திருப்பி பிணையில் வந்தும் இதைத் தான் செய்ய மனம் சொல்லும் ..இப்ப இவரை அடையாளம் காட்டிய படியால் அங்கு இருப்பவர்கள் அவதானமாக இருக்க சந்தர்ப்பங்கள் அதிகம்...திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் களவை ஒழிக்க முடியாது ...கூலி வேலைக்கு போயாவது குடும்பத்தை காப்பாத்தாமல்[ஊரில் கூலி வேலைக்கு ஆட்கள் இல்லை. ] குறுக்கு வழியில் இலகுவாய் அடுத்தவர் சம்பாதித்த பணத்தை அடைய நினைக்கும் இவரைப் போன்றவர்களுக்கு இந்த தண்டனை காணாது என்றே நான் நினைக்கிறேன்.

 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, சண்டமாருதன் said:

திருடுவது குற்றம்,  ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் ஒருவரை உடல்ரீதியாக அடித்து துன்புறுத்தி காயப்படுத்துவது. ஒரு குற்றத்திற்கு என்னுமொரு குற்றம் தீர்வாகாது.  

தமிழர்களது போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு சிங்கள அரச இயந்திரத்தை அனுசரித்து வாழலாம் என்ற முடிவுக்கு பெரும்பான்மை மக்கள் வந்தபின் அவர்களது காவல்துறை சரியில்லை என்பதில் எந்த நியாயமும் இல்லை. 

திருடுபவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்லாம் தவிர தண்டனை வழங்குவது  குற்றமே.  தண்டனையை நீதிமன்றமே வழங்க முடியும். நீதி கிடைக்காத பட்சத்தில் நீதி கேட்டுப் போராடவேண்டியதுதான். போராடியும்  கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்து போராடவேண்டியதுதான். ஆலமரம் புளியமரத்தின் கீழ் இருந்து பஞ்சாயத்து செய்யுமளவுக்கு கூட அதிகாரமற்ற இடத்தில் யார் வேண்டுமானலும் யாருக்கும் தண்டனை கொடுக்கலாம் என்பது தவறு. வேண்டுமானால்  போராடி அதிகாரத்தை கையில் எடு.. இன்ன இன்ன குற்றங்களுக்கு இன்ன இன்ன தண்டனை என்பதற்கான ஒப்புதலை மக்களிடம் இருந்து வாங்கி  யார் யார் தண்டனை வழங்க யோக்கியதை உள்ளவர் என்பதை வரையறை செய்து பின்னர் தண்டனை வழங்கலாம். 

 சிறிய விடயங்களுக்கும் போராடி வெற்றி பெறலாம் என்பதற்கு நிறைய நாடுகள் உள்ளன.

ஆனால் இலங்கையில் அது சாத்தியப்பட அறிகுறிகளே இல்லை.

உதாரணத்திற்கு ஒரு கஞ்சா கடத்தல் விவகாரத்தில் சுமந்திரனின் ஆதிக்கம்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

கடுகு திருடுவதை கண்டு பிடித்து தண்டனை கொடுப்பவர்கள் மிளகு திருடுபவனை கோட்டை விடுகிறார்கள் ஆனால் அவர்கள் திருடிக்கொண்டே இருக்கிறார்கள்  மிளகு க்காரர்கள்

இதை புலிகள் காலத்தில் ஒப்பிடுவதும் நல்லதல்ல புலிகள் தண்டனை கொடுத்ததை இப்பவும் நம்மவர்கள் பலர் ஏற்றுக்கொள்ள வில்லை நடந்த பக்க சார்பான நடவடிக்கைகள் மூலம்  அதாவது பூரணமான விசாரணை இன்றி தண்டனை கொடுத்த தாகும் 

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கடுகு திருடுவதை கண்டு பிடித்து தண்டனை கொடுப்பவர்கள் மிளகு திருடுபவனை கோட்டை விடுகிறார்கள் ஆனால் அவர்கள் திருடிக்கொண்டே இருக்கிறார்கள்  மிளகு க்காரர்கள்

இதை புலிகள் காலத்தில் ஒப்பிடுவதும் நல்லதல்ல புலிகள் தண்டனை கொடுத்ததை இப்பவும் நம்மவர்கள் பலர் ஏற்றுக்கொள்ள வில்லை நடந்த பக்க சார்பான நடவடிக்கைகள் மூலம்  அதாவது பூரணமான விசாரணை இன்றி தண்டனை கொடுத்த தாகும் 

அப்படியே விசாரணைக்கு பிறகு நிரூபிக்கபட்டிருந்தாலும் குடுக்கபட்ட தண்டனை சரி என்கிறீர்களா...

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, satan said:

அடுத்த வீட்டில் இந்தக் கள்வரால் நடந்த அநியாயம் உங்களுக்கு தவறாகப் தெரியவில்லை 

கள்வனுக்கு வலிக்குது மரியாதை போகுதென்று புலம்புகிறீர்கள். இப்படிப்பட்ட கள்வரால் பணம், பொருள், மானம் மரியாதை, உயிர் இழந்து அடிஉதைபட்டு இருக்கும் அப்பாவிகளுக்காக அழுதிருக்கிறீர்களா? அடுத்த வீட்டில் நடந்த சம்பவம் உங்களை மனிதாபிமானம் பேசவைக்குது. இதுவே உன்கடவீட்டில் நடந்திருந்தால் இப்படி பேசுவீர்களா? எனது அயல் கிராமத்தில் வயதான அம்மா சாப்பிடுவதற்காக தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பிக்கும்போது மின்சாரம் நின்று  
விட்டது. நேரம் பாத்து கூரை வழியாக இறங்கியவன் அவரை கொலை செய்து, காதோடை அறுத்து அவரின் தாேட்டை காெண்டு பாேய்விட்டான். அவர் எவ்வளவு துடித்திருப்பார்? இது உங்கள் அம்மாவாக, சகாேதரியாக, மனைவியாக இருந்திருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா? சிங்களம் எங்கள் இனத்தை சுறணை இல்லாத காட்டு மிராண்டிகளாக உருவாக்குவதாேடு, நிரந்தரமாக சிங்களப்படை வடக்கில் நிரந்தரமாக தங்கியிருப்பதற்காக இதுபாேன்ற செயல்களை ஊக்குவிக்கிறான். இவன் குற்றவாளிகளை தண்டிப்பானா? நீதிமன்றம் பாேனால், எங்கள் பகற்காெள்ளை சட்டத்தரணிகள் மறுநிமிடமே வெளியில காெண்டு வந்துவிடுவினம். எம்மவருக்கு வேறவழியில்லை பாம்பை கண்டால் யாரும் யாேசித்துக்காெண்டிருக்க மாட்டார்கள். இதில் தண்டனை காெடுப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்று சாெல்ல முடியாது. ஆனால் இந்த திருடனையாே, அவன் குழுவையாே கண்டால் மக்கள் எச்சரிக்கையாய் இருக்கமுடியும்.

கள்வனுக்கு வலிக்குது மரியாதை போகுது என்று இங்கு எவரும் கருத்தை முன்வைக்கவில்லை. களவு எங்கும் நியாயப்படுத்தப்படவில்லை மாறாக தண்டனை கொடுக்கும் முறையே இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.. நீங்கள் இந்த சம்பவத்தை முழுக்க முழுக்க உணர்ச்சிவசத்தால் அணுகுகின்றீர்கள். இங்கு வழங்கப்படும் தண்டனையும்  அவ்வாறே அணுகப்படுகின்றது. இதை இவ்வாறே சரி என்று நியாயப்படுத்தினால் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படமாட்டாது மாறாக குற்ங்கள் பெருகுவது மட்டுமல்ல  சிறு குற்றங்கள் பெருங் குற்றங்களாக பரிணமிக்கும். தெருவுக்கு நாலுபேர் கூடி அவர்களுக்கு எது குற்றம் என்று படுகின்றதோ அவர்களுக்கு தண்டனை கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். 

இலங்கை அரசு  சமூக இயல்புநிலையையும் சமநிலையையும் குலைப்பதை போரிற்கு பின்னரான தனது நடவடிக்கையாக கொண்டுள்ளது. அப்போதுதான் இந்த மக்கள் கூட்டத்தை தனக்கேற்றதுபோல் வைத்திருக்கமுடியும்.  இதற்காகவே வாள்வெட்டுக்குழுக்களை  கண்டும் காணாமலும்  அனுமதிப்பதும் கஞ்சா போதைப் பொருட்கள் பாவனையை வரலாற்றில் என்றுமில்லாதவாறு யாழில் மறைமுகமாக அனுமதித்தும் உள்ளது. 

இவற்றை எல்லாம் அவர்கள் சிங்களவர்களை கொண்டு செய்வதில்லை மாறாக தமிழர்களின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி செய்கின்றார்கள். இந்த பொருளாதார சமநிலையை குலைப்பதுயார் என்று பார்த்தால் அதில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு பெருமளவு உள்ளது. தினமும் ஆயிரத்து இரு நூறு ருபாவுக்கு கூலிக்கு போய் ஆயிரம் ருபாவை நுண்கடனுக்கு வட்டிகட்டும் ஒரு தரப்பு மக்கள் கைகால்களில் மறைமுகமாக விலங்கிடப்பட்ட அடிமைகளாக உள்ளார்கள். என்னுமொருபுறம் மதம் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் பல லட்சங்களை வெளிநாடுகளில் இருந்து உழைப்பின்றி பெற்றுக்கொள்ளும் மக்கள் கூட்டம். பொருளாதார சமநிலையை  வெளிநாடுகளில் இருந்து போகும் பணம் சீர்குலைக்கின்றது. புதிய வர்க்க ஏற்றதாள்வுகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தகின்றது.  இந்த ஏற்றதாழ்வுகள் முரண்பாடுளில் இருந்துதான் குற்றங்கள் முளைக்கின்றது அதையே பேரினவாதம் வளர்க்கின்றது. முன்பு எப்படி தமிழர்களது மத சாதிய பிரதேசவாத முரண்பாடுகளை பேரினவாதம் போராட்டத்தை சிதைக்க பயன்படுத்தியதோ அவ்வாறே ஒரு ஸ்திரமான சமூகம் கட்டமைப்புக்கு எதிராக இப்போது பயன்படுத்துகின்றது. 

என்னுமொரு இனத்தால் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட இனத்துள் ஒரு குற்றம் நடக்கும்போது அதற்கான பின்னணி என்ன அதற்கு வழங்கப்படும் தண்டனையின் பின் விழைவு என்ன என்பதை அறிவுபூர்வமாக அணுகுவதே  பிரயோசனத்தை கொண்டுவரும்  தவிர உணர்ச்சிவசப்பட்டு எந்த பலனும் இல்லை. 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
34 minutes ago, மியாவ் said:

அப்படியே விசாரணைக்கு பிறகு நிரூபிக்கபட்டிருந்தாலும் குடுக்கபட்ட தண்டனை சரி என்கிறீர்களா...

சில தண்டனைகளை சரி என்பேன் சில தண்டனைகளை பிழை என்ன்பேன்  ஆனால் தீர விசாரிக்காமல் கொடுக்கப்பட்ட தண்டனைகளை பிழையென்பேன்

Share this post

Link to post
Share on other sites
31 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சில தண்டனைகளை சரி என்பேன் சில தண்டனைகளை பிழை என்ன்பேன்  ஆனால் தீர விசாரிக்காமல் கொடுக்கப்பட்ட தண்டனைகளை பிழையென்பேன்

தீர விசாரித்து நிரூபித்திருந்தாலும் கூட குடுக்கபட்ட தண்டனை பிழை தான்...

இதுவே ஒரு சிறுமியை களவாட முயல்பவனுக்குண்டான வாதம் வேறு திசையில் இருந்திருக்கும்...

தண்டனைகள் தர்ம ரீதியுனுள் அடங்கி இருக்க வேண்டும் என்பது எனது வாதம்....

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, மியாவ் said:

தண்டனைகள் தர்ம ரீதியுனுள் அடங்கி இருக்க வேண்டும் என்பது எனது வாதம்....

நீதிபதி அப்படி பார்ப்பதில்லை சாட்சிகளும் சந்தர்பங்களும் சுற்றவாளியை கூட குற்றவாளியாக நிருபிக்கும் போது அங்கே தண்டனை உறுதிப்படுத்தப்படுகின்றது 

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீதிபதி அப்படி பார்ப்பதில்லை சாட்சிகளும் சந்தர்பங்களும் சுற்றவாளியை கூட குற்றவாளியாக நிருபிக்கும் போது அங்கே தண்டனை உறுதிப்படுத்தப்படுகின்றது 

விசாரணை நடத்தி நிரூபிக்கபட்டிருந்தாலும் குடுக்கபட்ட தண்டனை முறை சரியா தவறா??

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, மியாவ் said:

விசாரணை நடத்தி நிரூபிக்கபட்டிருந்தாலும் குடுக்கபட்ட தண்டனை முறை சரியா தவறா??

குற்றம் நிருபிக்கடுமாயின் தண்டனை சரிதான் ஆனால் தண்டனை கொடுக்க இவர்கள் யார் (மக்கள்)  தண்டனைகள் எல்லாவற்றுக்கும் சிறந்தது என்றால் ஒரு பொய் சொல்வதும் குற்றமே அப்படியானால் தண்டனை கொடுக்க வெளிக்கிட்டால் இந்த உலகத்தில் ??

ஒவ்வொரு குற்றங்களுக்கும் தண்டனை வகுக்கப்பட்டுள்ளது அதையே கொடுக்க வேண்டும் அடிப்பது அல்ல அவனும் மனிதன் தான் 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

இலங்கை ஒரு ஜனநாயக நாடு.  அங்கு புலிகள் ஜனநாயகமாக தெரிவு செய்ய படாமல் தாமே ஒரு சட்டத்தை வகுத்திட முடியாது.  கு‌ற்ற‌ம் புரிந்தவர்களை இலங்கை நீதிமன்றத்திலோ அல்லது இலங்கை காவல் துறையிடமோ ஒப்படைத்து இருக்க வேண்டும். 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, ரதி said:

கள்ளனை பிடிச்சு அடிக்கிறதாலே இந்த கள்ளன் திருந்துவானோ இல்லையோ  இதை பார்க்கும் மற்ற கள்வர்களுக்கு ஒரு பயம் வரும்...எதற்கும் ஒரு எல்லை இருக்குது அல்லவா?...இவரை பிடித்து அடிக்காமல்,கொள்ளாமல் போலீசிடம் கொடுத்தால் பயம் விட்டுப் போகும்...திருப்பி பிணையில் வந்தும் இதைத் தான் செய்ய மனம் சொல்லும் ..இப்ப இவரை அடையாளம் காட்டிய படியால் அங்கு இருப்பவர்கள் அவதானமாக இருக்க சந்தர்ப்பங்கள் அதிகம்...திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் களவை ஒழிக்க முடியாது ...கூலி வேலைக்கு போயாவது குடும்பத்தை காப்பாத்தாமல்[ஊரில் கூலி வேலைக்கு ஆட்கள் இல்லை. ] குறுக்கு வழியில் இலகுவாய் அடுத்தவர் சம்பாதித்த பணத்தை அடைய நினைக்கும் இவரைப் போன்றவர்களுக்கு இந்த தண்டனை காணாது என்றே நான் நினைக்கிறேன்.

இவர்கள் சிறிய கள்ளர் - ஏழைகள். பெரிய கள்ளர் வாள் வெட்டு குழுக்களையும் சுவிஸ்குமார் போன்ற கொலைகாரரையும் உங்கள் அண்ணரையும்  பிள்ளையானையும் துணைக்கு வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன செய்யலாம்?

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • 'தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு' என்ற திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தனி நபர் விமர்சனங்களைத் தவிர்த்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். நன்றி.
  • படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'நச்சுத்தன்மையுள்ள ஆண்மை' (Toxic Masculinity)க்கு எதிராகப் பேசுகிறது கில்லட் விளம்பரம். இருபால் அடையாளங்களில் சேராத, உறுதியான பாலின அடையாளம் இல்லாதவர்கள் தங்கள் அடையாளம் பற்றி பெருமையாக உணர ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான கோப்பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது பட்வைசர் மதுபான நிறுவனம். பெரு நிறுவனங்கள் முற்போக்கான சமூக லட்சியங்களுக்காக செயல்படுவது 'வோக் கேபிடலிசம்' (woke capitalism) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக காட்டப்படும் எடுத்துக்காட்டுகளில், சில நிறுவனங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப செயல்படுவதாக பகட்டாக காட்டிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் நினைக்கும் அளவுக்கு இந்த வோக் கேபிடலிசம் புதிய விவகாரம் அல்ல. 1850ல், சமூக முன்னேற்றம் நெடுந்தூரம் செல்லவேண்டிய நிலைமையில் இருந்தது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாக, அமெரிக்க பிரச்சாரகர் எலிசபெத் கேடி ஸ்டான்ட்டன் என்பவர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மகளிர் உரிமை மாநாட்டில் பேசி சர்ச்சையை உருவாக்கினார். அது ரொம்ப பெரிய ஆசை என்று அவருடைய ஆதரவாளர்களே கூட கருதினர். இதற்கிடையில் பாஸ்டன் நகரில், திரையில் வெற்றி பெற முடியாத ஒரு நடிகர் ஒரு கண்டுபிடிப்பாளராக தன் அதிர்ஷ்டத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தார். ஒரு பட்டறை ஷோரூமில் சிறிய இடத்தை அவர் வாடகைக்கு எடுத்திருந்தார். மரத்தில் எழுத்துகளை செதுக்குவதற்கு தனது மெஷினை விற்பது அவருடைய திட்டமாக இருந்தது. ஆனால், மரத்தில் எழுத்துருக்களை செதுக்குவது அப்போது வழக்கொழியத் தொடங்கிவிட்டது. அந்த இயந்திரம் நுட்பமான தொழில்நுட்பம் கொண்டது. ஆனால் அதை வாங்க யாரும் விரும்பவில்லை. நம்பிக்கை இழந்திருந்த அவரை, விற்க முடியாமல் கிடந்த தையல் மெசின்களை பார்க்கும் படி அந்த பட்டறையின் உரிமையாளர் அழைத்தார். அது சரியாக விற்கவில்லை. பல தசாப்தங்களாக பலர் முயற்சி செய்தும், அந்த மெஷினை விற்பனைக்கு ஏற்ற அளவில் யாராலும் தயாரிக்க முடியவில்லை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஐசக் மெரிட் சிங்கர் வாய்ப்பு தெளிவாக இருந்தது. தையல் பெண்மணிகளுக்கு அதிக சம்பளம் தர வேண்டியிராத காலம் அது - நியூயார்க் ஹெரால்டு பின்வருமாறு கூறியிருந்தது: ``தங்கள் வேலைக்கு மிகக் குறைந்த அளவு ஊதியம் தரப்படும் வேறு பெண் தொழிலாளர்கள் இல்லை அல்லது கடினமாக உழைக்கும் வேறு பெண்களை பார்த்திருக்க முடியாது'' என்று அந்தப் பத்திரிகை கூறியுள்ளது. ஆனால், துணி தைக்க அதிக நேரம் தேவைப்பட்டது - ஒரு சட்டை தைக்க 14 மணி நேரம் ஆனது. எனவே வேகமாக துணி தைக்க ஏதாவது செய்ய முடியுமா என்ற தேவை அப்போது இருந்தது. தையல் பெண்மணிகளுக்கு மட்டும் தான் அந்தச் சிரமம் என்றில்லை: பெரும்பாலான மனைவியரும், மகள்களும் துணி தைக்க வேண்டும் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. சமகால எழுத்தாளர் சாரா ஹாலே கூறியுள்ளபடி, அந்த ``ஒருபோதும் முடிவுறாத - எப்போதும் தொடக்கமாகவே உள்ள'' அந்த வேலையானது பலரையும் ``சர்வகாலமும் துயரத்திலேயே இருக்கும் நபர்களாக'' ஆக்குவதாக இருந்தது. பாஸ்டன் தொழிலகத்தில், கண்டுபிடிப்பாளர் அந்த மெஷினைப் பார்த்து சொன்னார்: ``பெண்களை அமைதியாக வைத்திருக்கும் ஒரே விஷயத்தையும் மாற்றிவிட நீங்கள் விரும்புகிறீர்கள்'' என்று கூறினார். திரையில் தோற்றுப் போய், கண்டுபிடிப்பாளராக மாறிய அந்த நபர் ஐசக் மெர்ரிட் சிங்கர். பகட்டாக உடுத்தக் கூடிய, கவர்ச்சியுள்ள மற்றும் தாராள சிந்தனை உள்ளவராகவும், அதேசமயம் கடுமையானவராகவும் இருந்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமுதல் சிங்கர் தையல் மிஷின் 1851 பேடண்ட் உரிமை பெற்றது திருத்த முடியாத அளவுக்கு, நிறைய பெண்களுடன் காதல் கொண்டவராக இருந்த அவர் குறைந்தது 22 குழந்தைகளுக்குத் தந்தையானார். பல ஆண்டுகளாக அவர் மூன்று குடும்பங்களைப் பராமரித்து வந்தார். மூன்று பேருக்குமே, மற்ற இரு குடும்பங்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும் இன்னொருவரையும் அவர் திருமணம் செய்து கொள்வார். அவர் தன்னை அடித்தார் என்று யாராவது ஒரு பெண் புகார் சொல்வார். அவருடைய நடத்தை சில பெண்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தியது என்றாலும், இயல்பாக சிங்கர் மகளிர் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர் அவருடைய வாழ்க்கை வரலாறை எழுதிய ரூத் பிரான்டன், ``பெண்ணிய இயக்கத்துக்கு உறுதியாக முதுகெலும்பை உருவாக்கிய மனிதர்'' என்று அவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தையல் மெஷினுக்கான அடிப்படையான மாதிரியை சிங்கர் உருவாக்கினார். ``ஊடூசி வட்டமான பாதையில் அசைவதற்குப் பதிலாக, அது நேர்க்கோட்டில் முன்னும் பின்னும் செல்லும் வகையில் வடிவமைக்க விரும்புகிறேன். ஊசியின் பட்டை, வளைவான ஊசியை கிடைமட்டமாக நகர்த்துவதற்குப் பதிலாக, நேரான ஒரு ஊசி மேலும் கீழும் செல்வது போல உருவாக்க விரும்புகிறேன்'' என்று தொழிலகத்தின் உரிமையாளரிடம் அவர் கூறினார். சிங்கர் தனது மெஷின்களுக்கு காப்புரிமை பெற்று, விற்பனை செய்யத் தொடங்கினார். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது: முதலாவது வடிவமைப்பு நன்கு செயல்பட்டது. ஒரு மணி நேரத்தில் ஒரு சட்டையைத் தைக்க முடிந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிங்கர் மிஷின் விளம்பரம் - 1900 துரதிருஷ்டவசமாக, மற்ற கண்டுபிடிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட மற்ற கருவிகளையும் அது சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. பள்ளம் உள்ள, கண் போன்ற துளையுள்ள ஊசி, முடிச்சு போடும் தையல், துணியை உள்ளே தள்ளுவதற்கான நுட்பம் கொண்டவை என பல அப்போது பயன்பாட்டில் இருந்தன. 1850களின் ``தையல் மெஷின் போர்'' நடந்த காலத்தில், தையல் மெசின் தயாரிப்பாளர்கள், தங்கள் மெசின்களை விற்பதைவிட பிற தயாரிப்பாளர்கள் மீது காப்புரிமை மீறியதாக வழக்குப் போடுவதில்தான் அவர்கள் தங்கள் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர். கடைசியில் ஒரு வழக்குரைஞர் அவர்களை ஒன்று சேர்த்தார். ஒரு நல்ல தையல் மெஷினை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் நான்கு தரப்பினரிடம் இருந்தன. அவற்றுக்கு லைசென்ஸ் வாங்கி, ஒன்றாக பயன்படுத்தி ஏன் தைக்கக் கூடாது என யோசித்தார். சட்டப் போராட்டங்களில் இருந்து விடுபட்டு, தையல் மெஷின் மார்க்கெட் சூடு பிடித்தது - அதில் சிங்கர் ஆதிக்கம் செலுத்தியது. போட்டியாளர்களைவிட அவருடைய தொழிற்சாலைகள் எப்படி வித்தியாசமாக இருந்தன என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தனிப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, மாற்றிக் கொள்ளக் கூடிய பாகங்களைக் கொண்டதாக இருந்த ``அமெரிக்க முறையிலான'' மெஷின் என்ற வகையில் மற்றவர்கள் தயாரித்தனர். அப்போதும் இந்த நடைமுறைக்கு சிங்கர் மாறுவற்கு தாமதமானது. கைகளால் தயாரிக்கப்பட்ட பாகங்களையும், கடைகளில் வாங்கப்பட்ட போல்ட், நட்களையும் கொண்டு அவருடைய மெஷின்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் சிங்கரும், அவருடைய வர்த்தக பங்காளர் எட்வர்ட் கிளார்க்கும் வேறொரு வழியில் முன்னோடிகளாக இருந்தனர். சந்தைப்படுத்துதலில் அவர்கள் முன்னோடிகளாக இருந்தனர். தையல் மெஷின்கள் விலை அதிகமாக இருந்தது. சராசரி குடும்பம் பல மாதங்கள் சேமித்தால் தான் அதை வாங்க முடியும் என்றிருந்தது. மெஷின்களை தவணை கட்டணத்தில் அளிக்கும் திட்டத்தை கிளார்க் முன்மொழிந்தார். குடும்பத்தினர் மாதம் சில டாலர்கள் வாடகைக்கு அந்த மெஷின்களை எடுத்துக் கொள்ளலாம். வாடகையாக அவர்கள் செலுத்திய பணம், மெஷினின் விலையை எட்டிவிட்டால், அந்த மெசின் அவருக்குச் சொந்தமாகிவிடும். முந்தைய ஆண்டுகளில் இருந்த மெதுவாக தைக்கும், அதிகம் நம்பியிருக்க முடியாத மெஷின்களில் இருந்து அவர்கள் விடுபடுவதற்கு இது உதவிகரமாக இருந்தது. சிங்கர் நிறுவனத்தின் ஏஜென்ட்களும் அதற்கேற்ப பணியாற்றினர். மெஷினை வாங்கும் போது, அதை பொருத்திக் கொடுப்பதுடன், அது நன்கு செயல்படுகிறதா என பார்ப்பதற்கு அவ்வப்போது சென்று வந்தனர். அப்போதும் சந்தைப்படுத்தலில் ஒரு பிரச்சினை இருந்தது. பெண்ணின வெறுப்பு என்ற ரூபத்தில் பிரச்சினை வந்தது. "தையல் மெசினை திருமணம் செய்ய முடியும்போது..." இதற்கு இரண்டு கார்ட்டூன்களை ஸ்டான்டன் உருவாக்கினார். ஒரு தையல் மெசினை உங்களால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், ஏன் ``தையல் மெசினை'' வாங்குகிறீர்கள் என்று ஓர் ஆண் கேட்பது போல ஒரு கார்ட்டூன் இருந்தது. பெண்கள் தங்களது ``அறிவை வளர்த்துக் கொள்ள'' கூடுதல் நேரம் கிடைக்கும் என்று விற்பனையாளர் சொல்வது போல இன்னொரு கார்ட்டூன் இருந்தது. அதில் சொல்ல வந்த விஷயம் புரிந்து கொள்ளப்பட்டது. விலை உயர்ந்த இந்த மெஷின்களை பெண்களால் இயக்க முடியுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. தன் சொந்த வாழ்க்கையில் பெண்களை எந்த அளவுக்கு மரியாதைக் குறைவாக நடத்தியிருந்தாலும், இந்த மெஷினை பெண்கள் பயன்படுத்தலாம் என்பதை நிரூபிப்பதில் தான் அவருடைய வியாபாரம் சார்ந்திருந்தது. நியூயார்க் பிராட்வே பகுதியில் ஒரு கடையை அவர் வாடகைக்கு எடுத்து, இந்த மெசின்களை எப்படி பயன்படுத்துவது என்று காட்டுவதற்காக சில இளம் பெண்களை பணிக்கு அமர்த்தினார். அங்கு நல்ல கூட்டம் கூடியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption1907 எடுக்கப்பட்ட விளம்பர புகைப்படம் முடிவெடுக்கும் நபர்களாக பெண்கள் உருவாகலாம் என்பதாக சிங்கரின் விளம்பரங்கள் இருந்தன. ``தயாரிப்பாளரால் நேரடியாக குடும்பத்தின் பெண்களுக்கு விற்கப்படுகிறது'' என்று விளம்பரம் செய்தார். பெண்கள் நிதி சுதந்திரம் பெற ஆசைப்பட வேண்டும் என்ற அர்த்தத்தை அது உருவாக்கியது. ``நல்ல பெண் தையல் தொழிலாளி ஆண்டுக்கு ஆயிரம் டாலர் சம்பாதிக்க முடியும்'' என்று விளம்பரம் செய்தார். 1860 ஆம் ஆண்டு வாக்கில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இப்படி புகழ்ந்தது: வேறு எந்த கண்டுபிடிப்பும் நமது தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கு ``இவ்வளவு பெரிய விடுதலையை'' அளிக்கவில்லை என்று எழுதியது. தையல் பெண்மணிகள், ``குறைவான உழைப்பில், நல்ல வருமானத்தை'' ஈட்டத் தொடங்கினர். அப்போதும், "ஆணின் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு'' என்று கூறி, தி டைம்ஸ் பத்திரிகை பாலின பெருமை பேசியது. ஒரு பெண்மணியை நாம் கேட்டால் தெரிந்துவிடும். 1860ல் வெளியான Godey's Lady's Book and Magazine-ல் சாரா ஹாலே இப்படி கூறியுள்ளார்: ``ஊசியுடன் வாழ்ந்த பெண்மணி, இரவில் ஓய்வெடுக்க முடிகிறது. குடும்ப வேலைகளை கவனிக்கவும், மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபடவும் பகல் பொழுதில் பெண்ணுக்கு நேரம் கிடைக்கிறது. இது உலகிற்கு பெரிய லாபம் இல்லையா?'' என்று அவர் கூறியுள்ளார். வோக் கேபிடலிசம் என்னும் 'முற்போக்கு முதலாளித்துவம்' பற்றி இன்றைய காலக்கட்டத்தில் நிறைய சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அதிக அளவில் பீர் மற்றும் ரேஸர்களை விற்பவையாக அவை உள்ளன, சரிதானா? சில்லரை வருமானங்களில் தாம் அக்கறை காட்டுவதாக சிங்கர் கூறினார். மிக உயர்வான சுய அக்கறையுள்ள உந்துதல்களால் சமூக முன்னேற்றத்தை முன்னெடுக்க முடியும் என்பதற்கு அவர் நிரூபணமாக இருக்கிறார். https://www.bbc.com/tamil/global-51125872
  • "இந்தியர்கள் மீது நேசம், கீதையின் பெயரால் பதவியேற்பு" : பத்மஸ்ரீ விருது பெற்ற பிரிட்டன் எம்.பி பாப் ப்ளாக்மேன் படத்தின் காப்புரிமைTWITTER/BOBBLACKMAN கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரிட்டன் ஹரோ ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரான பாப் ப்ளாக்மேனுக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது இந்திய அரசு. சரி யார் இந்த பாப் ப்ளாக்மேன்? பாப் ப்ளாக்மேன் இந்திய அரசுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர். காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டவர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரோ ஈஸ்ட் பகுதியில் பெரும்பான்மையாக இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தியாவை பூர்வீகமாக இல்லாத போதும் அங்கு நின்று வென்றார் பாப் ப்ளாக்மேன். ஹவுஸ் ஆஃப் காமான்ஸில் நாடாளுமன்ற உறுப்பினராக பகவத்கீதை மற்றும் பைபிள் மீது உறுதிமொழி எடுத்துப் பதவியேற்றவர் பாப் ப்ளாக்மேன். தனது ட்விட்டரின் முகப்பு படமாக இந்திய பிரதமர் மோதியுடன் இருக்கும் புகைப்படத்தையே பாப் ப்ளாக்மேன் வைத்துள்ளார். 'பாரத் மாதா கி ஜே' பத்ம ஸ்ரீ விருது பெற்றது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், இந்த விருது பிரிட்டனில் வாழும் அனைத்து இந்தியர்களுக்குமானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ட்வீட்டில் ஜெய்ஹிந்த் மற்றும் பாரத மாதா கி ஜே என்ற ஹாஷ்டேகுகளை பயன்படுத்தி உள்ளார். https://www.bbc.com/tamil/global-51255035  
  • சோதனை செய்ற ஆட்களை வைரஸ் பீடிக்க கடவது.