Sign in to follow this  
தமிழ் சிறி

சாரதி அனுமதி பத்திரத்தை மீளக்கையளித்தார் கோமகன் பிலிப்!

Recommended Posts

Bildergebnis für à®à¯à®®à®à®©à¯ பிலிபà¯

சாரதி அனுமதி பத்திரத்தை மீளக்கையளித்தார் கோமகன் பிலிப்!

கோமகன் பிலிப் பயணித்த கார் அண்மையில் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில், அவர் தனது சாரதி அனுமதி பத்திரத்தை மீளக்கையளித்துள்ளார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான கோமகன் பிலிப் (97), ஓட்டிச் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது தோழியும் காயமடைந்தார்.

மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக கோமகன் பிலிப் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்ததோடு, கோமகன் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் கூறினார்.

இதற்கிடையே, விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் கோமகன் பிலிப் மன்னிப்பு கோரி கடிதம் எழுதினார்.

இந்நிலையில், கோமகன் பிலிப் தனது சாரதி அனுமதி பத்திரத்தை பொலிஸ் நிலையத்தில் திருப்பி கையளித்துள்ளதாக  பக்கிங்ஹாம் அரண்மணை தெரிவித்துள்ளது.

http://athavannews.com/சாரதி-அனுமதி-பத்திரத்தை/

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this