Sign in to follow this  
குமாரசாமி

ஹிகாத் ஆயுதக்குழுவின் இராணுவ மரியாதையுடன் ஹிஸ்புல்லாவுக்கு வரவேற்பு.

Recommended Posts

ஹிகாத் ஆயுதக்குழுவின் இராணுவ மரியாதையுடன் ஹிஸ்புல்லாவுக்கு வரவேற்பு.

kattankudy

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89ஆவது விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட ஹிகாத் ஆயுதக்குழுவினரால் இராணுவ மரியாதையுடனான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழர்களை அழிப்பதற்காக முஸ்லீம் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கினேன் என ஹிஸ்புல்லா சில வருடங்களுக்கு முதல் காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.

காத்தான்குடியில் பெருந்தொகையானவர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆயுதப்பயிற்சிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் வெளிவந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்ட வரவேற்றில் துப்பாக்கிகளுடன் இராணுவ மரியாதையை காத்தான்குடி ஹிகாத் ஆயுதக்குழு வழங்கியுள்ளது 

kattankudy 1

kattankudy

மூலத்தை காண இங்கே அழுத்தவும்.

Share this post


Link to post
Share on other sites

இலங்கையில் ஒரு பாடசாலை விழாவிற்கு வருகை தரும் அதிதிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட முடியுமா?

ராணுவ அணிவகுப்பு மரியாதை என்பது ராணுவ மற்றும் பொலிஸாரினால் மட்டுமே வழங்கப்பட முடியுமேயன்றி, ஒரு பாடசாலயினால், அந்தப் பாடசாலை மாணவர்களைக் கொண்டு வழங்கப்பட முடியாது. 

பாடசாலை மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்படுதல் என்பது நினைத்துப் பார்க்கமுடியாதவொன்று. 

இவர்கள் முஸ்லீம் ஊர்காவல்ப் படைவீரர்கள் என்றால்க் கூட, பாடசாலையினுள் ராணுவ மரியாதை செய்யவேண்டிய தேவை என்ன?

இப்படியான ஒரு சம்பவத்தைத் தமிழ்ப் பாடசாலை ஒன்றில் நினைத்துப் பார்க்க முடியுமா? அல்லது சிங்களவர்கள்தான் அப்படியான ஒரு நிகழ்வை இதுவரை காலமும் ஒரு பாடசாலையில், அந்த மாணவர்களைக் கொண்டு நடத்தியிருப்பார்களா?

இவை விளையாட்டுத் துப்பாக்கிகள் என்று ஒரு பேச்சிற்கு எடுத்துக்கொண்டால்க் கூட, தவறாகுமே? 

ஏதோ குழப்பம் இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

படம் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாமோ என்று தேடிப் பார்த்தேன். ஆனால், பின்னணியில் உள்ள கடைத்தெரு, கூகிள் மப்பில் அதே பெயர்களுடன், மைதான வாயிலுக்கு முன்பாக இருக்கிறது. ஆக, அணிவகுப்பு நடைபெற்ற இடம் சரியானதுதான். 

இது எப்படிச் சாத்தியம்? 

Share this post


Link to post
Share on other sites

 

7 hours ago, ragunathan said:

படம் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாமோ என்று தேடிப் பார்த்தேன். ஆனால், பின்னணியில் உள்ள கடைத்தெரு, கூகிள் மப்பில் அதே பெயர்களுடன், மைதான வாயிலுக்கு முன்பாக இருக்கிறது. ஆக, அணிவகுப்பு நடைபெற்ற இடம் சரியானதுதான். 

இது எப்படிச் சாத்தியம்? 

இது National Cadet corps எனப்படும் அணியில் உள்ளவர்கள். NCC coprs ஆனது இலங்கை பாதுகாப்பு படையால் பாடசாலை மாணவர்களுக்காக இயக்கப்படும் கடேட் குழு. பல நாடுகளில் இவ்வாறான கடேட் அணியினர் உள்ளனர்.

மட்டக்களப்பில் கல்லடி பாலத்துக்கு அருகில் மட்டக்களப்பு அலுவலகம் அமைந்து இருக்கு என அறிய முடிகின்றது. மட்டக்களப்பில் உள்ளானவர்கள் உறுதிப்படுத்தலாம்.

மூத்த பத்திரியையாளராக இருந்து கொண்டு துரைரட்ணம் அவர்கள் இவ்வாறு பொறுப்பற்ற செய்திகளை வெளிவிடுவது எதிர்காலத்தில் ஹிஸ்புல்லா போன்ற பச்சை இனவாதிகளுக்கு அனுகூலமாக அமைந்து விடும்.

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிழலி விளக்கத்திற்கு

Share this post


Link to post
Share on other sites

2009 மே க்கு முன் திரைமறைவில் நடந்த காட்சிகள்.. இப்பே கண்முன்னே நிகழ்த்தப்படுகின்றன.

இந்த கேவலத்தனத்தால் தான் யாழ்ப்பாண இடம்பெயர்வை இவர்கள் சந்திக்க நேரிட்டது. இன்றேல்.. இப்போது யாழ்ப்பாணம்.. இன்னொரு காத்தான்குடியாக மாறி இருக்கும் எப்பவோ. இப்பவும் எப்பவும்.. அந்த ஆபத்து இருந்தே வருகிறது. 

15 hours ago, நிழலி said:

இது National Cadet corps எனப்படும் அணியில் உள்ளவர்கள். NCC coprs ஆனது இலங்கை பாதுகாப்பு படையால் பாடசாலை மாணவர்களுக்காக இயக்கப்படும் கடேட் குழு. பல நாடுகளில் இவ்வாறான கடேட் அணியினர் உள்ளனர்.

அவர்கள் ஆயுத அணிவகுப்பை நடத்த பாடசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனரா...?????!

பிரித்தானியாவில் நானறிந்த வரை கண்டதில்லை. கனடாவில் இருக்குமோ..??! ஏன் நாங்கள் கல்வி கற்ற காலத்தில் சாரணிய அணிவகுப்பே இருக்கும்..  மாணவர்களிடம் ஆயுதத் திணிப்பு.. சிறுவர் போராளிகள்.. சிறுவர் இராணுவத்தில் இருந்து எப்படி வேறாகிறது...???!

இது முஸ்லீம் ஜிகாத்.. ஊர்காவல் படையின் எச்சம் என்பதில்.. என்ன சந்தேகம்.!!!

Share this post


Link to post
Share on other sites

முனிவர் வந்து விளக்கம் தந்தால்தான் உண்டு?

Share this post


Link to post
Share on other sites

நிழலி தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார்.

Share this post


Link to post
Share on other sites
42 minutes ago, thulasie said:

நிழலி தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார்.

நன்றாக வாசித்து கருத்தெழுத பழகவும்! நிழலியே  மட்டக்களப்பில் இருந்து யாரையாவது உறுதிப்படுத்த சொல்லியிருக்கிறார்?

Share this post


Link to post
Share on other sites
28 minutes ago, Eppothum Thamizhan said:

நன்றாக வாசித்து கருத்தெழுத பழகவும்! நிழலியே  மட்டக்களப்பில் இருந்து யாரையாவது உறுதிப்படுத்த சொல்லியிருக்கிறார்?


எனக்கு ஒன்றை வாசித்து கிரகிக்கும் அறிவு, உங்களை விட குறைவு அண்ணே!

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this