• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
பிழம்பு

இணைய தொழில்நுட்பம்: இளைய தலைமுறையினருக்கு தீங்கு விளைவிக்கிறதா?

Recommended Posts

ரொரி செலன்-ஜோன்ஸ் பிபிசி தொழில்நுட்ப செய்தியாளர்
 
 •  
தொழில்நுட்பம்?படத்தின் காப்புரிமை SOPA Images

தற்கொலைக்குத் தூண்டுவது, ஸ்மார்ட் போன்களுக்கு இளைய தலைமுறையினர் அடிமையாவது என, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நல்லதைவிட தீங்கே அதிகம் என்ற குற்றச்சாட்டு சமீபத்திய நாட்களில் எழுந்துள்ளது.

இணையம் நம் மனநலன் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? நம் மனஅழுத்தத்தை எப்படி கையாள்வது என்று பல கேள்விகள் எழுகின்றன.

2017ல் பிரிட்டனில் மோலி ரசல் என்ற 14 வயது சிறுமி தன் உயிரை மாய்த்து கொண்டார். இதனை குறிப்பிட்டு சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிக்கின்றன என்று பிரிட்டன் மக்கள் சுட்டிக்காட்டத் தொடங்கினர்.

சமூக ஊடகங்களில் மோலி பார்த்த சில புகைப்படங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தன்னை தானே வருத்திக் கொள்வது குறித்த படங்களை பார்த்தே மோலி தன் உயிரை எடுத்துக்கொண்டதாக அவரது தந்தை நம்புகிறார்.

அந்த சம்பவத்தையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் இதுபோன்ற புகைப்படங்களை நீக்குவதாகக் கூறியது.

மோலி ரசல் Image caption மோலி ரசல்

இது மட்டுமல்லாமல் ஸ்மார்ட் போன்களை அல்லது மற்ற சாதனங்களை நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பது தீங்கு விளைவிக்கலாம் என்ற வாதமும் இங்கு முன்வைக்கப்படுகிறது. எவ்வளவு நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து பிரிட்டன் அரசாங்கத்தின் நான்கு தலைமை மருத்துவ அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதில் ஒருவரான சேலி டேவிஸ் கூறுகையில், ஸ்மார்ட் போன்களின் திரைகளை அதிக நேரம் பார்ப்பது தீங்கு விளைவிக்குமா என்று ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

சிறுவர்கள் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் போன் பயன்படுத்தக்கூடாது. மேலும் அவர்கள் படுக்கை அறைக்கு போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது.

பெரியவர்கள் சிறியவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். உணவு உண்ணும் நேரத்தில் போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஆனால் கேல் நியூபோர்ட், சாதனங்களுடனான நம் உறவை பற்றி யோசிக்க வேண்டும் என்கிறார். உங்கள் வேலைக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தொழில்நுட்பம் உங்களை பயன்படுத்த விடக்கூடாது என்று கூறுகிறார்.

ஸ்மார்ட் போன் குறித்து அவர் அளிக்கும் முதல் குறிப்பு இதுதான்: "உங்களை வைத்து பணம் பார்க்கும் செயலிகளை முதலில் உங்கள் போனில் இருந்து எடுத்துவிடுங்கள். அப்போது அந்த நிறுவனங்களால், உங்கள் நேரத்தையும் கவனத்தையும் வீணடிக்க முடியாமல் போகும்."

டெஸ்க்டாப் கணிணிகளில் இந்த செயலிகளை பயன்படுத்துவது தவறில்லை. ஸ்மார்ட் போன்களுக்கு நாம் அடிமையாகி இருப்பதே இங்கு பிரச்சனை. நாம் இணையத்திலிருந்து தொடர்ந்து பல தகவல்களை எடுத்துக்கொண்டே இருக்கிறோம். மற்றும் அதற்கு நம் கருத்துகளை பதிவு செய்து வருகிறோம்.

நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தத்தை நாம் எப்படி கையாள்வது என்று தீர்வு சொல்கிறார் மைக்கெல் ஆக்டன் ஸ்மித். Calm என்ற ஸ்மார்ட் போன் செயலி. இது தியானம் மற்றும் தூக்கமின்மைக்கான தீர்வைத் தரக்கூடும்.

CALM செயலிபடத்தின் காப்புரிமை CALM

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்கள் மனநலத்தை மேம்படுத்துவது என்பது சற்று முரணாக இருக்கலாம். ஆனால், இங்கு தொழில்நுட்பம் பிரச்சனை இல்லை என்றும், இதனால் நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கங்கள் இரண்டுமே இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

ஸ்மாரட் போனின் பயன்கள் அதன் எதிர்மறை அம்சங்களை குறைக்கிறது என்கிறார். ஆனால், கணிணி அறிவியல் கல்வி பயின்று, எழுத்தாளராக இருக்கும் கார்ல் நியூபோர்ட் சமூக ஊடக கணக்குகள் ஏதுமின்றி வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

அவரிடம் ஒரு பழைய ஐபோன் இருந்தாலும், அதை பெரிதும் கார்ல் பயன்படுத்துவதில்லை. "ஏதேனும் மிகவும் முக்கியமான விஷயத்துக்கே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவேன். தொழில்நுட்பம் என் வாழ்க்கையை மாற்ற அனுமதிக்க மாட்டேன்" என்று அவர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/science-47191442

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • படத்தின் காப்புரிமை kovai police கோயம்புத்தூரில் ஒரு வாலிபர் பல்வேறு  வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்ப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் அருகே ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இரவு 10.30 மணிக்கு வந்து, வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து படுக்கை அறை ஜன்னல் அருகே சென்று துணியை விலக்கி படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் வீடியோ காட்சி பதிவாகியிருந்தது.  இதனால் அதிர்ச்சியான அந்நபர் அக்கம்பக்கத்து வீடுகளிடமும் விசாரித்தார். அதில் மூன்று வீடுகளில் படுக்கை அறையை வாலிபர் ஒருவர் எட்டிப்பார்க்கும் காட்சி பதிவாகியுள்ளது.  வாலிபரின் இரு சக்கர வாகன பதிவு எண்ணை வைத்து காவல்துறை இவரை தேடி வருகிறது. அந்த வாலிபர் படுக்கை அறைகளை எட்டிப்பார்க்கும் சைக்கோ மனநிலை கொண்டவராக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி கூறுகிறது. ''எதற்காக அந்த நபர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறார், பொருட்களை திருடுவதற்கா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்துடன் வந்தாரா என்பது மர்மமாகவே உள்ளது. மேலும், அவர் பார்ப்பதற்கு வடமாநிலத்தில் இருந்து இங்கு வந்தவர் போல் தெரிகிறது. சமீப காலங்களாக இதுபோன்ற மர்ம நபர்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, காவல்துறை அந்த நபரை கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ள கோரிக்கை வைத்துள்ளோம்,'' என அப்பகுதியில் வசிக்கும் பழனி தெரிவிக்கிறார்.https://www.bbc.com/tamil/india-51159418
  • திருச்சி நகரத்தில் சாலையோரம் வசித்துவந்த பெண் ஒருவரை லாரி ஓட்டுநர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையோரம் பிச்சையெடுத்து வந்த பெண் ஒருவர் உணவு மற்றும் பணஉதவியை எதிர்பார்த்து பலரிடம் உதவி கேட்டுள்ளார். அவருக்கு உதவி செய்வதாகக் கூறி லாரி ஓட்டுநர் சதீஸ்குமார் கடந்த புதன் கிழமையன்று (ஜனவரி 15) அவரை மறைவான இடத்திற்குக் கூட்டிச்சென்று அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியபோது, அப்பெண் அலறியுள்ளார். அவருக்கு காயங்கள் ஏற்பட்டதால், சதீஸ்குமார் அங்கிருந்து தப்பித்துள்ளதாக வழக்கு பதிவுசெய்த விசாரணை அதிகாரி ஜெயா பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''சதீஸ்குமார் இதற்கு முன்னர் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்துவருகிறோம். பாதிக்கப்பட்ட பெண் காயங்களுடன் காந்தி மார்க்கெட் பகுதிக்கு வந்துள்ளார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டறைக்குத் தகவல் கொடுத்ததால், அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பதில் அளிக்கும் நிலையில் அவர் இல்லை என்பதால், தற்போதுவரை கிடைத்த தகவலை வைத்து, சதீஷ்குமாரை கைது செய்துள்ளோம். அப்பெண்ணின் உடல்நலம் தேறிய பின்னர், விசாரணை செய்வோம்,'' என ஆய்வாளர் ஜெயா தெரிவித்தார். சதீஸ்குமார் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்தியாக வழக்குப் பதிவாகியுள்ளது என ஜெயா தெரிவித்தார். ''அப்பெண்ணின் பெற்றோர் காலமாகிவிட்டார்கள். அவருடைய உறவினர் ஒருவர் சென்னையில் இருப்பதாக அவர் கூறுகிறார். உறவினர்களிடம் பேசி அவருக்கு பாதுகாப்பு கிடைக்குமா என விசாரிப்போம் அல்லது வழக்கு முடிந்த பின்னர், பெண்களுக்கான அரசு நடத்தும் பாதுகாப்பு இல்லத்திற்கு அவரை அனுப்பிவைப்போம்,'' என ஜெயா தெரிவித்தார்.https://www.bbc.com/tamil/india-51160208
  • படத்தின் காப்புரிமை ARUN SANKAR / Getty தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பொது வெளியில் தெரிவித்து, வதந்தி பரப்பி, பொது அமைதியை குலைக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலை கழக உறுப்பினர்கள் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த ஜனவரி14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ல் சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்ற நிகழ்வு நடத்தப்பட்டது என பொய்யான தகவலை பேசியுள்ளார் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கூறுகிறார்கள். ''தந்தை பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ரஜினிகாந்த் வதந்தியைப் பரப்புகிறார். அவர் குறிப்பிட்டது போன்ற ஒரு நிகழ்வு நடக்கவில்லை. அவர் பரப்பும் வதந்தி பொது அமைதியை குலைக்கும் நோக்கத்தில் இருப்பதால், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் செய்துள்ளோம்,'' என திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தெரிவித்தார். அதே போல கோவையிலும் ரஜினிகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் நேற்று திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகர தலைவர் நேருதாஸ் தலைமையில் அளிக்கப்பட்ட புகாரில், ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக  திருப்பூரிலும் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினி பேசியது என்ன? கடந்த செவ்வாயன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். "1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். தகவல் இல்லை இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். 'பிளாக்'கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய 'பப்ளிசிடி மேனேஜர்' என சோ அட்டையிலேயே வெளியிட்டார்" என்று குறிப்பிட்டார். இந்நிலையில், "சின்ன விஷயங்களுக்கெல்லாம் வழக்கு போடும் தமிழக அரசு தங்களுடைய இயக்கத்தின் மூலவராக கருதப்படும் பெரியார் மீது செய்யப்பட்ட இழிவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாம் சில நாட்கள் கவனித்துப் பார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது திரைப்படம் திரையிடப்படும் அரங்குகளுக்கு முன்னால் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு அனைவரும் தயாராக இருப்போம்," என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். "உண்மை சம்பவத்தை ரஜினி திரித்து கூறியிருப்பதாகவும், பெரியாரின் வாகனம் நோக்கி ஜன சங்கத்தினர்தான் செருப்பு வீசியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த திராவிடர் கழகத்தினர் அதே செருப்பை எடுத்து ஜனசங்கத்தினரின் வாகனம் ஒன்றில் இருந்த ராமர் படத்தை அடித்தனர்,"என அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவரும், தி.கவின் பொதுச்செயலாளருமான கலி.பூங்குன்றன் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன்,"பெரியார் குறித்த தனது கருத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்," என கருத்து தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/india-51159843
  • கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்கே புதிய கூட்டணி உருவாகுவதற்கு காரணம் -சிவாஜிலிங்கம் வடக்கு முன்னாள் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் என்பனவே தற்போது புதிய கூட்டணி பற்றி பேசி வருகின்றன.எனினும் குறித்த கட்சிகளில் ஈழமக்கள் புரட்சிகள விடுதலை முன்னணிக்கு மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்த்து உள்ளது. அந்த கட்சியின் பெயரை மாற்றுவது தொடர்பாக அதன் மத்திய குழுவில் ஆராய்ந்து அனுமதிகளை பெற்றுகொண்ட பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்கே புதிய கூட்டணி உருவாகுவதற்கு காரணமாகும். மேலும் 2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது” என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழு சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்கு பெயரை மாற்றுவது தொடர்பாக அனுமதியை வழங்கியப் பின்னரே புதிய கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும். குறித்த கூட்டணிக்கான ஒப்பந்தம் எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது என தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கு காரணம்.இதேவேளை புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்குது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டு வருகின்றது என மேலும் தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்பின்-தன்னிச்சை/
  • பிச்சைக்காரன் சோறும், தண்ணீரும்தான் கேட்பான்..! தமிழனை கேட்டுபாா் என்ன வேண்டும் என அவன் சொல்வான். அமைச்சருக்கு சீ.வி.கே செருப்படி.. யாழ்ப்பாணத்தில் அமைச்சா் சந்தித்த பிச்சைக்காரர்களில் ஒருவன் சோறும், தண்ணீரும் கேட்டால் தமிழா்கள் எல்லோரும் சோறும் தண்ணீரும் கேட்கிறாா்கள் என அா்த்தமா ? அமைச்சா் மஹிந்தானந்த அழுத்கமகே மானமுள்ள தமிழனை சந்திக்கவில்லையா ? அவனிடம் என்ன வேண்டும் என கேட்கவில்லையா? என முன்னாள் அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளாா். கடந்த 14ம் திகதி அலாி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது தமிழ் மக்களுக்கு சோறும் தண்ணீரும்தான் முக்கியம் என கூறியிருக்கின்றாா். இது குறித்து இன்று காலை அவை தலைவா் ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், யாழ்ப்பாணம் வந்த அமைச்சா் மஹிந்தானந்த அழுத்கமகே இங்குள்ள சில பிச்சைகாரா்களை சந்தித்து என்ன வேண்டும் ? என கேட்டால் அவா்கள் சோறும், தண்ணீரும்தான் கேட்டிருப்பாா்கள். அதற்காக தமிழ் மக்கள் சோறும், தண்ணீரும் கேட்கிறாா்கள். என கூற முடியுமா ? அமைச்சா் மானமுள்ள தமிழனை சந்தித்திருந்தால் அவன் என்ன வேண்டும் என கூறி இருப்பான் என்றார். https://jaffnazone.com/news/15448